Thursday, September 28, 2006

சிவாஜி-ஒரு திரை முன்னோட்டம்

ஜனங்களே,

இணைய ரசிகர்களுக்கென்றே நான் உருவாக்கிய திரை முன்னோட்டம், இதோ உங்கள் பார்வைக்காக.

சிவாஜி திரைப்படம், பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பெரும் தலைகள் சேரும்போது, அவர்களின் பழைய படங்கள் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுவதும், வரும் படம் .. அ) பழைய படங்கள் போலவே இருப்பதால் ஏமாற்றுவதும் அல்லது ஆ) புதுமையாக இருந்து ஏமாற்றுவதும் சகஜம்:-)

சிவாஜியில் நான் என்ன எதிர்பார்க்கிறேன்? ஒன்றுமே இல்லை! ரஜினியின் பழைய படங்களின், சங்கரின் பிரம்மாண்டத்தின் உல்டா எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை இங்கே..

பாகம் 1:



பாகம் 2:




பி கு:

1. கோப்பின் அளவு பெரியதானதால் இரு கோப்புகள், மன்னிக்க.

2. என் ஒலிப்பதிவுக்கருவியைச் சரி செய்ய இன்னும் நேரம் வாய்க்கவில்லை, ஒலிக்குறைபாட்டுக்கு மன்னிக்க. வசனத்தை இங்கே காணலாம்.

3. மீள்பதிவுக்குக் காரணங்கள்:

அ. வரலாறு காணாத வேலைத் தொல்லை:-(

ஆ. இதுவும் எனக்குப்பிடித்த என் நல்ல நகைச்சுவை முயற்சிகளில் ஒன்று, புதியவர்கள் பார்க்கலாமே.

இ. பழைய image hoster மூன்று மாதங்களுக்குப் பின் ஸ்வாஹா செய்துவிட்டது. இது இன்னும் கொஞ்ச நாள் தாங்கும்.

4. முன்பெல்லாம் SWF வலையேற்ற நூற்றுக்கணக்கில் தளங்கள் இருந்தன. இப்போது என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இப்போது போட்டிருப்பது, நம்பமாட்டீர்கள் - 20 ஆவது முறை முயற்சித்து அப்லோட் செய்தது:-((

11 comments:

  1. SUPER STAR SUPER appu Repeatu.....

    ReplyDelete
  2. அ.வா.

    சூப்பருங்க, ஆனா அந்த எரிகல்லை திருப்பி எத்திவிடுவது விஜயகாந்த் ஸ்டைல்,

    மொத்ததிலே அம்பூட்டும் சிம்பிளி சூப்பரப்போய்....

    ReplyDelete
  3. புது முயற்சி வாழ்த்துக்கள்! ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான்.

    ReplyDelete
  4. பயந்துகிட்டேதான் போட்டேன்..

    இங்கே கொஞ்சம் ரஜினி ரசிகர்கள் உண்டில்லையா?

    நன்றி தேவ்

    ராம், விஜயகாந்துக்கும் ரஜினிகாந்துக்கும் வேற வேற ஸ்டைலா? ஆச்சரியமா இருக்கே..

    இளா, நன்றி. எங்கே ஓவர்?

    ReplyDelete
  5. கலக்கீட்டீங்க அ.வா...
    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  6. பினாத்தலாரே

    //விஜயகாந்துக்கும் ரஜினிகாந்துக்கும் வேற வேற ஸ்டைலா? ஆச்சரியமா இருக்கே..//


    இது டூடூடூடூ மச்ங்க....

    ReplyDelete
  7. நன்றி வெட்டிப்பயல்!

    தேவ்,

    குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் இருக்குமா:-)

    ReplyDelete
  8. இந்த மாசம் முழுக்க சிரிக்க வெச்ச எங்கள் பெனாத்தலாருக்கு அப்படியே ஒரு நன்றி உரை:

    முதுகலை இல்லறத்தியல் - M.Sc Wifeology
    ஒரு கலக்கல் ஒரு கவிதைத்தொகுப்பு

    சர்தார் இது நிஜம் அய்யா- சாமி நெசமாலுமே வயிறு வலிச்சுருச்சு சாமி.

    அட்லாஸ் - வாலிபன்? -கைப்பு ரேஞ்சிலே ஏறி அடித்த ஒரு சிக்ஸர் இது.

    திரை முன்னோட்டம் - சிவாஜி-ஸ்பேனரைக் கையில் ஏந்திய புது தொழில்யுக்தி.

    ReplyDelete
  9. 6 பந்து ஆச்சுன்னாவே அது ஓவர் தான், இது அதுக்கும் மேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல போவுதே.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)