Monday, September 25, 2006

வலைப்பதிவிலிருந்து கைப்பு விலகல்


இது நடந்து ஒரு வாரம் இருக்கும். சங்கத்து சிங்கமெல்லாம் போன வாரம் அன்னந்த்தண்ணியில்லாம் பொண்ணுங்க குளிக்கிற ஆத்தங்கரை,குட்டிசுவரையும் எல்லாம் தேடிப்பார்த்தோம். எங்கியுமே காணாம்.
அப்புறமா சித்தூர்கட்ல இருக்கிற சித்தாளை கேட்டப்பத்தான் அந்த அதிர்ச்சிகரமான விஷயமே எங்களுக்கு தெரிய வந்துச்சு.

ஊர்ல ஒருத்தி விடாம ரவுசு பண்ணிக்கிட்டு, அரசியல்வாதியாகப் போறேன்னு பீலா விட்டுக்கிட்டு டாலடிக்கிற கலருல சட்டை, வேட்டி கட்டிகிட்டு சோறு போடுற இடத்தில எல்லாம் வருசக்கணக்கா தங்கி இம்சை கூட்டிகிட்டு இருந்த கைப்புவை "ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிச்சுரு கைப்பு. அப்புறம் உன்னிய எந்த பய புள்ளையும் சீண்டாது" அப்படின்னு எந்த கிறுக்குப்பயலோ சொல்லி கைப்பு மனசை கலைச்சு புட்டாங்க.
அதைக்கேட்ட தலயும் ஒரு கட்டு பீடியும், ஒரு 90யும் நம்ம கஜாவுக்கு குடுத்து அமெரிக்கா போயிட்டு வந்த பின்னாடி ஆரம்பிச்சதுதான் "சங்கம் டெக்னாலஜீஸ்".
ஆரம்பிச்சுட்டா ஆள் வேண்டாமா,
நேத்தும் முந்தாநேத்தும் நந்தம்பாக்கம் சென்னை ட்ரேட் சென்டர்ல்ல நடந்த் ஜாப் பேர்ல்ல தலக் கைப்பு ஸ்டால் போட்டுட்டு உக்காந்து இருந்தார். அந்த போஸ் தான் மேலே....
தல வேலைக்கு ஆள் எடுக்கறது தெரிஞ்சு சுமார் 318765 ரெஸ்யூம் வந்து குவிஞ்சு இருக்கு... அம்புட்டு ரெஸ்யூமையும் வாங்கி கோட்டு பாக்கெட்டுக்குள்ளே திணிச்சுக்கிட்டு நம்ம தல திருவ திருவ முழிச்ச ஸ்டில் அடுத்த வாரம் THE HINDU, OPPORTUNITIES பக்கத்துல்ல வரும் DONT MISS IT.
தலக்கு ரெஸ்யூம் எல்லாம் படிக்க நேரம் இருந்தும் எழுதப் படிக்கத் தெரியாத ஒரேக் காரணத்தால் எதையும் படிக்கல்ல. இருந்தாலும் ரெஸ்யூம் கொடுத்தவங்க யாரும் ஏமாறக் கூடாதுன்னு அம்புட்டு ரெஸ்யூமையும் குலுக்கு குலுக்குன்னு குலுக்கி ஒரு ரெஸ்யூம் எடுத்து அந்த ரெஸ்யூம் சொந்தக் காரருக்கு சங்கம் டெக்னாலஜிஸ் 'ஆப்'பர் லெட்டர் கொடுத்துட்டார்.
சங்கம் டெக்னாலஜிஸ்ல்ல முதல் வேற யாரும் இல்ல
விகடன் கைக்கொடுத்துப் பாராட்டி சிற்ப்பித்த டெக் சிங்கம் நம்ம வெட்டிபய தான்..
VETTI BOY YOU ARE APPOINTED!!!!!!!!!!!!! CONGRAJULATIONS!!!!!!!!!!!!!!!!!
பிகு: சங்கத்து மற்ற மக்களை எல்லாம் சாப்ட்வேர் கோர்ஸ் சேர்ந்துப் படிக்குமாறு தலக் கைப்பு அவசர ஆணை இட்டுள்ளார். மக்கா யார் யார் என்ன கோர்ஸ் படிக்கலாம்ன்னு ஒரு ஐடியா கொடுங்க ப்ளீஸ்....

32 comments:

  1. தலைப்புக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லையே? கைப்புள்ள விலகிட்டார்னா எல்லாரும் படிப்பாங்கங்கற எண்ணமா? சதி! சதி! சதி! நடக்காது, நடக்கவே விடமாட்டோம். பின்னே எப்படிப் போறதுங்கிறீங்களா? தவழ்ந்து போங்க!

    ReplyDelete
  2. OOPs படிக்கலாம்!

    "ஆப்பு"ஜெக்ட் ஓரியண்ணடட் புரோகிராமிங்க்!

    ReplyDelete
  3. நீங்களா ஆட்டையில சேத்துக்குவீங்க அதுக்கு தலய போட்டுதள்ளிடீங்க

    தலக்காக உயிர விட விவசாயி இருக்கும் வரை விலகல் நடக்காது.

    சொல்லிபிட்டேன் ஆமா..:)

    ReplyDelete
  4. //தலக்காக உயிர விட விவசாயி இருக்கும் வரை விலகல் நடக்காது//

    உயிரை விட யார் இருந்தாலும், அவர்களை அழைத்துக் கொள்ள நான் இருக்கிறேன்!

    ReplyDelete
  5. தல இல்லேமா சங்கமா... என்னாங்கய்யா சர்க்கரை இல்லமே சர்க்கரைப் பொங்கலை யாரு சாப்பிடுவா...... :-)))

    ReplyDelete
  6. //OOPs படிக்கலாம்!

    "ஆப்பு"ஜெக்ட் ஓரியண்ணடட் புரோகிராமிங்க்! //

    ஆவி அசந்திட்டே போ.... உண்மைலே சூப்பர்ம்மா.

    ReplyDelete
  7. வாங்க தலைவி கீதா அக்கா பயணம் எல்லாம் நல்லபடியா நடந்துச்சா? ஆங்காங்கே உங்களுக்கு நம்ம சங்கம் சார்பாக அளிக்கப் பட்ட வரவேற்பு திருப்தியளித்ததா? சொல்லுங்க அக்கா

    ReplyDelete
  8. அக்கா தலைப்புக்கும் மேட்டருக்கும் சம்பந்தம் இருக்கு. அவர் இனி வலைப் பதிவு எல்லாம் வேணாம் சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு ஒர்ரே அடம்... நீங்களாவது வந்துச் சொல்லுங்க.. எங்களை எல்லாம் வேற சாப்ட்வேர் படிங்கன்னு கோடு போட்ட அன்டர் டிராயர் தெரிய வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு சவுண்ட் விடுறார்.. காப்பாத்துங்க.

    ReplyDelete
  9. கோர்ஸ் படிக்க ஆசைப்படுற கண்மணிங்கள்ளாம் எங்க பள்ளிக்கூடத்துக்கு வாஙக!

    என்ன கோர்ஸ் வேணும்னாலும் சொல்லித்தருவோம்!

    கட்டணம்லாம் கிடையாது!

    பில் கேட்ஸ் எங்க பள்ளிக்கூடத்திலதான் படிச்சாரு. அவரு இப்ப மான்யமா நெறையக் கொடுக்கிறதுனால மூனு வேளையும் பிட்ஸா, ஸமோஸான்னு எல்லா ஸாவும் உண்டு.

    - வாத்தி (யார்)

    ReplyDelete
  10. @ varuthap padaatha vaalibargale...

    ennappa ithu puthusa software company... patha kuraikkum course vera padikanuma??

    Arattai Script coding language - ASCL
    Ravusuware tool development - RTD
    Landhu mapping - LM
    Lollu blocker designing - LBD

    ippadi niraiya irukku... adichaadunga...

    ReplyDelete
  11. //OOPs படிக்கலாம்!

    "ஆப்பு"ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங்க்! //

    இதைத்தான் கட்டாய விருப்பப் பாடமாக எடுக்கணும் சொல்லிட்டேன்.

    ReplyDelete
  12. தல,
    நம்ம சங்கத்து கொள்கை(;)) படி உங்களுக்கு பல ஆப்புகளை வாங்கி தருவேன் என்று சொல்லி கொள்கிறேன்...

    ReplyDelete
  13. //ராம் said...
    தல இல்லேமா சங்கமா... என்னாங்கய்யா சர்க்கரை இல்லமே சர்க்கரைப் பொங்கலை யாரு சாப்பிடுவா...... :-)))
    //
    அதெல்லாம் சும்மா பில்ட் அப் :)
    தல சீக்கிரமே வெய்ட்டா வருவாரு...

    (அப்பறம் சர்க்கரை பொங்கல்ல சர்க்கரை போட மாட்டாங்க வெல்லம்தான் போடுவாங்க ;))

    ReplyDelete
  14. //அமானுஷ்ய ஆவி said...
    OOPs படிக்கலாம்!

    "ஆப்பு"ஜெக்ட் ஓரியண்ணடட் புரோகிராமிங்க்!
    //
    ஆவி... கலக்கிட்ட போ!!!

    ReplyDelete
  15. //SP.VR.SUBBIAH said...
    கோர்ஸ் படிக்க ஆசைப்படுற கண்மணிங்கள்ளாம் எங்க பள்ளிக்கூடத்துக்கு வாஙக!

    என்ன கோர்ஸ் வேணும்னாலும் சொல்லித்தருவோம்!

    கட்டணம்லாம் கிடையாது!

    பில் கேட்ஸ் எங்க பள்ளிக்கூடத்திலதான் படிச்சாரு. அவரு இப்ப மான்யமா நெறையக் கொடுக்கிறதுனால மூனு வேளையும் பிட்ஸா, ஸமோஸான்னு எல்லா ஸாவும் உண்டு.

    - வாத்தி (யார்)
    //
    வாத்தியாரே,
    கோர்ஸ் பத்தி எங்களுக்கு கவல இல்ல...

    பரிட்சை எழுதாம பாஸ் போடுவீங்களா?
    அப்படினா எந்த கோர்ஸ் வேணா படிக்க நாங்க ரெடி ;)

    ReplyDelete
  16. //(அப்பறம் சர்க்கரை பொங்கல்ல சர்க்கரை போட மாட்டாங்க வெல்லம்தான் போடுவாங்க ;)) //

    தாங்ஸ் யூவர் இன்பர்மேஷன்.....

    ReplyDelete
  17. //kanya said...
    @ varuthap padaatha vaalibargale...

    ennappa ithu puthusa software company... patha kuraikkum course vera padikanuma??

    Arattai Script coding language - ASCL
    Ravusuware tool development - RTD
    Landhu mapping - LM
    Lollu blocker designing - LBD

    ippadi niraiya irukku... adichaadunga...
    //
    Kanya,
    danks for the information...

    இவ்வளவு படிக்கனுமா??? இப்பவே கண்ண கட்டுதே!!!

    ReplyDelete
  18. //அமானுஷ்ய ஆவி said...
    //OOPs படிக்கலாம்!

    "ஆப்பு"ஜெக்ட் ஓரியண்டட் புரோகிராமிங்க்! //

    இதைத்தான் கட்டாய விருப்பப் பாடமாக எடுக்கணும் சொல்லிட்டேன்.
    //
    ஆவி,
    அப்ப அப்ப புத்திசாலித்தனமா பேசற!!! அப்பப்ப "தல" மாதிரி ரொம்ப புத்திசாலி தனமா பேசற..

    கட்டாய பாடம்னு சொல்லு இல்ல விருப்பப் பாடம்னு சொல்லு :))

    ReplyDelete
  19. //பரிட்சை எழுதாம பாஸ் போடுவீங்களா?
    அப்படினா எந்த கோர்ஸ் வேணா படிக்க நாங்க ரெடி ;)//

    வெட்டி, நீ இருக்கும்போது எங்கள பெயிலாக விட்டுருவியா என்ன?! சங்கத்து ஆளுங்கள H.O.D ரூம் முன்னாடி கூட்டி வந்து கூட்டி வந்து கலக்கிற மாட்டே!

    ReplyDelete
  20. //தம்பி said...
    //பரிட்சை எழுதாம பாஸ் போடுவீங்களா?
    அப்படினா எந்த கோர்ஸ் வேணா படிக்க நாங்க ரெடி ;)//

    வெட்டி, நீ இருக்கும்போது எங்கள பெயிலாக விட்டுருவியா என்ன?! சங்கத்து ஆளுங்கள H.O.D ரூம் முன்னாடி கூட்டி வந்து கூட்டி வந்து கலக்கிற மாட்டே!
    //
    தம்பி,
    அதெல்லாம் சங்கத்துக்காக எங்க தல கைப்பு பண்ண தியாகங்கள்பா!!!
    நாம வெறும் ரயில் வண்டி ஏறதோட சரி!!!

    அவர் செய்த சாதனைகள் இன்னும் தொடரும்...

    ReplyDelete
  21. வெட்டிப்பசங்க கூட்டத்துல நிஜமாலுமே ஒரு வெட்டிபய.. அடடா கவிதை கவிதை என்னாமா இருக்கு இல்லா. அடிச்சி கிடிச்சி புடாதிங்கப்பா சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன்.

    ReplyDelete
  22. //சந்தோஷ் said...
    வெட்டிப்பசங்க கூட்டத்துல நிஜமாலுமே ஒரு வெட்டிபய.. அடடா கவிதை கவிதை என்னாமா இருக்கு இல்லா.
    //
    கவித அட்டகாசம்... ;)

    // அடிச்சி கிடிச்சி புடாதிங்கப்பா சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன்.
    //
    எங்க தலய பத்தி தெரிஞ்சும் இப்படி பேசறீங்களே!!!

    தல உன்ன இந்த ஊரு இன்னும் நம்பீட்டுத்தான் இருக்கு :))

    ReplyDelete
  23. வெட்டி பெரிய "ஆப்பு"ட்வேர் ச்சே சாப்ட்வேர் கம்பேனில வேலை கிடைச்சு இருக்கு...தலைக்கு நல்ல ஆப்பு வாங்கி குடுத்திட்டு எங்களுக்கு * ஹோட்டல்ல சாப்பிட ஏதாவது வாங்கி குடுங்க :-)

    ReplyDelete
  24. ////தல,
    நம்ம சங்கத்து கொள்கை(;)) படி உங்களுக்கு பல ஆப்புகளை வாங்கி தருவேன் என்று சொல்லி கொள்கிறேன்..////

    ஆமா ஆமா கடமைல கண்ணா இருக்கனும் :-)

    ReplyDelete
  25. //Syam said...
    வெட்டி பெரிய "ஆப்பு"ட்வேர் ச்சே சாப்ட்வேர் கம்பேனில வேலை கிடைச்சு இருக்கு...தலைக்கு நல்ல ஆப்பு வாங்கி குடுத்திட்டு எங்களுக்கு * ஹோட்டல்ல சாப்பிட ஏதாவது வாங்கி குடுங்க :-)
    //
    கொஞ்ச நாளா ஆளையே காணோம்னு பாத்துட்டு இருந்தேன்... வந்துட்டீங்க :-)

    தலைக்கு தொண்டாற்றத்தானே வந்துருக்கோம் ;)

    ReplyDelete
  26. //Syam said...
    ////தல,
    நம்ம சங்கத்து கொள்கை(;)) படி உங்களுக்கு பல ஆப்புகளை வாங்கி தருவேன் என்று சொல்லி கொள்கிறேன்..////

    ஆமா ஆமா கடமைல கண்ணா இருக்கனும் :-)
    //
    கண்டிப்பா ;)

    ReplyDelete
  27. // Mr.Vettipayal Said: பரிட்சை எழுதாம பாஸ் போடுவீங்களா?
    அப்படினா எந்த கோர்ஸ் வேணா படிக்க நாங்க ரெடி ;) //

    அதெல்லாம் கவலையே படாதீங்க கண்ணுங்களா!

    எங்க பள்ளிக்கூடத்தில படிச்சதில ஒழுங்கா பரிட்சை எழுதி பாஸ் பண்ணீட்டுப்போனது
    பில் கேட்ஸ், வாரென் பப்பட், திருபானி அம்பானி, சுபாஷ் சந்திரா, சுனில் மிட்டல் - இந்த மாதிரி ஆளுங்கதான்.

    மததவங்கள்லாம் பேப்பரை சும்மா மடிச்ச்சுக் குடுத்துட்டுப் போனாவங்கதான்

    நாங்களும் பாஸ் போட்டு தூக்கிவிட்டோம்
    இப்ப அவுகள்ளாம் பெரிய பெரிய கம்பெனிகள்ள சி.யி.ஓ வா இருக்காகல்ல

    அதனால பாஸாகிறதும் காரண்டி வேலை கிடைக்கிறதும் காரண்டி!

    வாத்தி (யார்)

    ReplyDelete
  28. //SP.VR.SUBBIAH said...
    // Mr.Vettipayal Said: பரிட்சை எழுதாம பாஸ் போடுவீங்களா?
    அப்படினா எந்த கோர்ஸ் வேணா படிக்க நாங்க ரெடி ;) //

    அதெல்லாம் கவலையே படாதீங்க கண்ணுங்களா!

    எங்க பள்ளிக்கூடத்தில படிச்சதில ஒழுங்கா பரிட்சை எழுதி பாஸ் பண்ணீட்டுப்போனது
    பில் கேட்ஸ், வாரென் பப்பட், திருபானி அம்பானி, சுபாஷ் சந்திரா, சுனில் மிட்டல் - இந்த மாதிரி ஆளுங்கதான்.
    //
    இவுங்க எல்லாம் யாரு??? எங்க தலய விட பெரிய ஆளுங்களா???

    //மததவங்கள்லாம் பேப்பரை சும்மா மடிச்ச்சுக் குடுத்துட்டுப் போனாவங்கதான்
    //
    நாங்கல்லாம் பரிட்சைக்கே வர மாட்டோம்... நாங்கெல்லாம் ரொம்ப பிஸி :-)

    பரிட்சைக்கு வராமா பாஸ் போடுவீங்களா???

    ReplyDelete
  29. சங்கத்தோட கொள்கைதான் வேலைக்கான requirementaa?

    தெளிவா சொன்னிங்கன்னா, எல்லாருக்கும் resume ரெடி பன்ன வசதியா இருக்கும்..

    எங்கிட்டு அப்ளை பன்றது?

    ReplyDelete
  30. எல்லாருக்கும் ஒன்னும் அறியா விவசாயியோட ஒரு கேள்வி.

    கஸ்டம்ஸ்ல ஆப்பை வரி கட்டாம அனுப்பிருவாங்களா? டூட்டி பெய்ட் ஷாப்ல கிடைக்குமா? ஆப்பு வாங்க VAT கட்டனுமா? இதுக்கு ஏதாவது வரிச்சலுகை உண்டா?

    ReplyDelete
  31. //சங்கத்தோட கொள்கைதான் வேலைக்கான requirementaa?

    தெளிவா சொன்னிங்கன்னா, எல்லாருக்கும் resume ரெடி பன்ன வசதியா இருக்கும்..//

    என்னாது இப்படி எல்லாம் கேள்வி கேட்டு தள மனச புன்படுத்தறீங்க...அவரு தான் குலுக்கி போட்டு resume செலெக்ட் பன்றாரு...அதுனால உங்க resume ல திருப்பூல தண்ணி பஞ்சம்னு கூட எழுதி அனுபுங்க :-)

    //எங்கிட்டு அப்ளை பன்றது?//

    சங்கம் டெக்னாலஜீஸ்,
    .007 விவேகானந்தர் குறுக்கு தெரு,
    (பழைய பஸ்ஸ்டாணட்் அருகில்),
    துபாய்

    ReplyDelete
  32. Vanakkam Vaathi (yaar?)
    Naan romba kastappattu 10aavadhu ezhudhitten.
    Ini pareetchai bayam illadha unga couse thaan seriyaana theervu. Aiya enakku oru nalla vazhi kaatiteenga.Ha naanum bilgates thaan!!!
    Nanri, vanakkam
    Kolgai Velan

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)