Wednesday, July 1, 2009

இட்ஸ் ஆல் இன் தி கேம், கேட் ஆ(ண்)ன் தி வால்

மக்களாய், வணக்கம்(நிர்மலா பெரியசாமி வாய்சிலோ, தெகிரியமிருப்பவர்கள் தங்கள் சொந்த கொரலிலோ கற்பனை பண்ணி கூவிக்கவும்).


மொதல்ல என்னைய இங்க எழுதச் சொன்னப்போ அசந்துட்டேன், அடப்பாவிகளா இன்னமும் என்னைய இஸ்திரிப்பொட்டின்னு நம்பலையா,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......னு, ஆனா, அப்பாலைக்கு வெளக்குமாத்தால வெளக்குனாப்டி இந்தப் பட்டம், காத்தாடி பத்தில்லாம் சான்றோர் சொன்னப்புறம் பேஜார் விலகி, வழக்கமான பஜாரி மூடுக்கு வந்துட்டேன்.

இந்த ஒரு மாசமும் வழக்கம்போல எதையாச்சும் பெனாத்திட்டு இருப்பேன். இங்க சந்திப் பிழை, அங்க சாந்தியோட ஸ்பெல்லிங் பிழைன்னு சொல்லி என்னைய வெச்சு நீங்க காமடியனாகும் முயற்சியில் ஈடுபட்டுறாதீங்க.

அதுப்போலவே, என்னோட சிற்றறிவுக்கு டபுள் மீனிங் மட்டுமே தெரியுமென்றும், பல்லாயிரம் மீனிங் தெரியாதென்றும், சம்மனில்லாமல் ஆஜராகி,யோக்கியன் வர்றான் ரேஞ்சில் ஒரு வாக்குமூலத்தை பதிஞ்சிக்கிறேன். என்னுடையப் பரிதாப பல்லி மூளைக்குக் காரணம் என் சுற்றமும் நட்பும் என்பதை தெளிவுப்படுத்திடறேன். (பட் வேதாளம் கணக்கா சோர்வில்லாமல் பற்பல மீனிங்குகள் தெரிந்துக்கொள்ள ஆவலிருந்தாலும், முக்காவாசிப் பேர் தெரியாதுன்னு சொல்ல அசிங்கப்பட்டுக்கிட்டு இஷ்டத்துக்கு பேத்திட்டு இருக்காங்கங்கற உண்மை அப்புறம் தெரிஞ்ச காரணத்தால் அப்பீட்டாகிட்டேன்).

முதல்கட்டமாக, அண்ணன் அகிலாண்ட நாயகன் ஜேகேஆரின் இடத்திற்கு ஏக போட்டியாய் களத்தில் குதித்திருக்கும் மற்றொரு சிங்கத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறேன். இக்கூற்றை 'அண்ணன் எப்போ எம்.பியாவான், கேரவேன் எப்போ காலியாகும்' என்ற குறுகிய நோக்கில் எடுத்தியம்பப்படக்கூடாதென்று வழக்கம்போல சோப்ளாங்கியாய் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் யாரென்று அறிந்துகொள்ள ஆவலிருப்பவர்கள் தம்தூண்டு வெயிட் செய்யவும், ஆவலில்லாதவர்கள் எப்படியும் வேலைவெட்டியில்லாமல்தான் இதனையே படித்திருப்பார்கள் என்பதனாலும், நாளைக்கும் வழக்கம்போல வருவார்கள் என்ற காரணத்தாலும், வடை தின்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன்.

22 comments:

  1. //மக்களாய்,//

    மக்களேன்னு கூப்பிடுவாங்க, மாக்களேன்னு திட்டுவாங்க, மக்காளாய்னு புதுசா கூப்புடறீங்களா, வையறீங்களான்னு புரியலையேம்மா
    (இதை சிவாஜி பேசற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க ராப்பு)

    ReplyDelete
  2. /இந்த ஒரு மாசமும் வழக்கம்போல எதையாச்சும் பெனாத்திட்டு இருப்பேன். இங்க சந்திப் பிழை, அங்க சாந்தியோட ஸ்பெல்லிங் பிழைன்னு சொல்லி என்னைய வெச்சு நீங்க காமடியனாகும் முயற்சியில் ஈடுபட்டுறாதீங்க.///

    பட்டா....?


    படுவோம் ....!

    ஈடுபடுவோம்ம்ம்ம்ம்ம்ம்! :))

    ReplyDelete
  3. //சின்ன அம்மிணி said...

    //மக்களாய்,//

    மக்களேன்னு கூப்பிடுவாங்க, மாக்களேன்னு திட்டுவாங்க, மக்காளாய்னு புதுசா கூப்புடறீங்களா, வையறீங்களான்னு புரியலையேம்மா
    (இதை சிவாஜி பேசற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க ராப்பு)///


    ரிப்பிட்டேய்ய்ய்ய்!

    ளாய் மாதிரி கூட எனக்கு தோணல டாய்ய்ய்ன்னு த்தான் எனக்கு தெரியுது :))))))))))))))

    ReplyDelete
  4. //முதல்கட்டமாக, அண்ணன் அகிலாண்ட நாயகன் ஜேகேஆரின் இடத்திற்கு ஏக போட்டியாய் களத்தில் குதித்திருக்கும் மற்றொரு சிங்கத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறேன்//

    இந்த நேரத்தில் 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்ன பழமொழியை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஜேகேஆருக்கு யாரும் போட்டியாக வர முடியாது.

    ReplyDelete
  5. //அவர் யாரென்று அறிந்துகொள்ள ஆவலிருப்பவர்கள் தம்தூண்டு வெயிட் செய்யவும்,///


    பாஸ் நீங்க அன்புமணி கட்சிக்கு எதிர் கட்சியா தம் தூண்டுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    :))

    ReplyDelete
  6. //சின்ன அம்மிணி said...

    //முதல்கட்டமாக, அண்ணன் அகிலாண்ட நாயகன் ஜேகேஆரின் இடத்திற்கு ஏக போட்டியாய் களத்தில் குதித்திருக்கும் மற்றொரு சிங்கத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறேன்//

    இந்த நேரத்தில் 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்ன பழமொழியை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஜேகேஆருக்கு யாரும் போட்டியாக வர முடியாது.///


    எஸ் வரமுடியாது!

    வரவும் விடக்கூடாது!

    என்ன ஒரு நாய்கன் :)))

    ReplyDelete
  7. அவ்வ்வ்வ் இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் இந்த மாசம் நடக்க போகுதோ....

    கடவுள் தான் எங்களை காப்பாத்தனும்!!

    ReplyDelete
  8. //'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" //

    கை எல்லாம் வச்சு மறைக்க வேண்டாம்...அந்தாளு வெளிச்சத்தில இருந்தாலே யாருக்கும் தெரியாது

    ReplyDelete
  9. ////'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" //

    கை எல்லாம் வச்சு மறைக்க வேண்டாம்...அந்தாளு வெளிச்சத்தில இருந்தாலே யாருக்கும் தெரியாது////

    ஆதவன் , எங்க தலை சிங்கம், சிங்கத்துக்கிட்ட மோதாதீங்க ஆமாம் எச்சரிக்கை :)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஆப்பீசர்!!!

    அப்படியே இதே மாதிரி சின்னச்சின்ன போஸ்ட்டா போட்டு மெயின்டெய்ன் பண்ணுங்க!!!

    :-)))...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஆபீசர்!!! Keep rocking. :))

    ReplyDelete
  12. வாங்க’க்கா வாங்க.... :))

    ReplyDelete
  13. //அவர் யாரென்று அறிந்துகொள்ள ஆவலிருப்பவர்கள் தம்தூண்டு வெயிட் செய்யவும், ஆவலில்லாதவர்கள் எப்படியும் வேலைவெட்டியில்லாமல்தான் இதனையே படித்திருப்பார்கள் என்பதனாலும், நாளைக்கும் வழக்கம்போல வருவார்கள் என்ற காரணத்தாலும், வடை தின்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன்.//


    ஆரம்பமே அசத்தல். அடிச்சி ஆடுங்க.
    :)

    மீ தி ஃபிஃப்டீந்த்.
    :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் யக்கோவ் ;)

    ReplyDelete
  15. அவ்வ்வ்வ்வ்

    ஆரம்பமே இப்படி இருக்கே, ஒரு மாசத்துல வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் என்னாகுமோ!!!

    கந்தா காப்பாத்து!!!

    :))))))))

    ReplyDelete
  16. //முதல்கட்டமாக, அண்ணன் அகிலாண்ட நாயகன் ஜேகேஆரின் இடத்திற்கு ஏக போட்டியாய் களத்தில் குதித்திருக்கும் மற்றொரு சிங்கத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறேன்//


    எனக்குத் தெரியுமே! அது எங்க தானைத் தலைவர் விஜய் தான.. விஜய் கொலைவெறி சங்கத்துல எனக்கொரு துண்டு போடுங்கோவ்வ்..

    ReplyDelete
  17. போட்டு தாக்குங்க அக்கா.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)