Thursday, March 19, 2009

வைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்!!!

போன வியாழன் என் ரூம்க்கு வந்த ஒரு பிரண்டு ரொம்ப நொந்து போய் பேசினான். என்னடான்னு கேட்டதுக்கு "ஒன்னும் இல்ல அபிஅப்பா, என் கிட்ட இருக்கும் ஒரு போர்மென் அவன் பொண்டாட்டிய என் முன்னாடியே கன்னா பின்னான்னு திட்டினான் லூசுப்பய"ன்னு சொன்ன உடனே ஆகான்னு எனக்கு பத்திகிச்சு.

"எதுக்கு திட்டினான்"ன்னு கேட்டேன்.

""அது அபிஅப்பா அவனுக்கு வைக்கிங் ஜட்டின்னா ரொம்ப பிடிக்குமாம். அது இங்க கிடைக்கலையாம், அதனால யார் ஊர்ல இருந்து வந்தாலும் அவனுக்கு அவன் பொண்டாட்டி அதை கொடுத்து அனுப்புமாம், ஆனா அது 2 மாசமா அனுப்பலையாம். அதுக்காக ஆம்பூர்ல இருந்து யார் வந்தாலும் அவனுக்கு அது அனுப்பிகிட்டு இருக்கு. அப்படி இருந்தும் ஒரு மாசமா இவனுக்கு வர்லை, அதான் கடுப்பாகி திட்டினான். எனக்கே அசிங்கமா இருந்துச்சு, அவனை எப்படி பழி வாங்கலாம்ன்னு யோசனை பண்ணிய போது தான் உங்க நினைப்பு வந்துச்சு \”

எனக்கு பகீர்ன்னு ஆகிடுச்சு. அவன் வைக்கிங் போடுறதுக்கு நான் என்ன என் வைக்கிங் தர முடியுமா என்ன? அப்படியே அந்த விஷயத்தை விட்டுட்டேன். சரி இருக்கட்டுமேன்னு அவன் நம்பர் கேட்டு வாங்கி வச்சுகிட்டேன்.அந்த நண்பனும் போயாச்சு.

அடுத்த நாள் வெள்ளிகிழமை. என் மெஸ் 4 பேருக்கும் வெள்ளிகிழமை சமைம்பதுன்னா வேப்பங்காய் மாதிரி. “அபிஅப்பா நீங்க இன்னிக்கு பிரியானி போடுங்க”ன்னு சொன்ன போது தான் டக்குன்னு நம்ம ஆம்பூரார் நியாபகம் வந்துச்சு.அதிலே எம்ம விஷயம் என்னன்னா அவன் நல்லா பிரியானி செய்வானாம்.

உடனே போன் பண்ணிட்டேன்.

“அல்லோ ஜாஹாங்கீரா”

“ஆமாம் நீங்க யாரு”

“நான் கொமாரு, உங்க ஊர் தான், நேத்து தான் ஊர்ல இருந்து வந்தேன், உங்க சம்சாரம் உங்களுக்கு ஷட்டி கொடுத்து விட்டுருக்காக”

“அப்படியா தம்பி சந்தோஷம், நான் வந்து வாங்கிகறேன். எங்க இருக்கிய நீங்க”

“அண்ணாச்சி நான் அல்கூஸ், நீங்க ஜேபலலி தான நானே அங்க வந்து தரேன், அண்ணாச்சி நீங்க ந்ல்லா பிரியாணி செய்வீங்கன்னு வீட்டுல சொன்னாங்க, நான் அங்க வந்து ஷட்டிய கொடுத்துட்டு பிரியானி சாப்பிட்டு போறேன்”

“அட இல்லப்பா நான் அங்கயே வரேன், நான் வேணா உன் ரூம்ல இருந்து பிரியானி போடுரேன். எங்க ஊருக்கே பிரியானி பேமஸ் ஆச்சே”

“சரி அண்ணே” வந்துடுங்க இங்க “ அப்படீன்னு சொல்லிட்டு அட்ரஸ் சொல்லிட்டேன்!

என் மெஸ் மெட் எல்லாருக்கும் சந்தேகம். பின்ன விளக்கமா என்ன நடக்க் போவுதுன்னு சொல்லிட்டேன்.

சரியா ஒரு மணி நேரம் பின்ன வந்தாரு நம்ம ஹீரோ.

டொக் டொக் டொக்

“வாங்க நீங்க யாரு?’

‘என் பேரு ஜகான்கீரு இங்க கொமாரு யாரு?’

“அட அவரு ஜெபல்லலி போயிருக்காரே, யாருக்கோ பார்சல் வந்துச்சாம், அதை கொடுக்க போயிருக்காரு” இது நான்.

‘அட அவன் ஒரு வெளங்காத பயங்க, எனக்கு சின்னதுல இருந்தே தெரியும் அதை, அந்த லூசு இப்பவும் அப்படித்தான் இருக்குதா, நான் தெளிவா சொன்னேன் நான் இங்க வந்து வாங்கிகரேன் என் பார்சலைன்னு, கேட்டுச்சா பாருங்க, இருங்க அந்த லூசுக்கு போன் பன்ணுறேன்”

நான் தான் வெவரமா போனை சைலண்ட்ல வச்சிட்டனா. ஜகாங்கீர் கிட்ட இருந்து போன் வந்ததும் வெளியே போயிட்டேன்.

“அல்லோ கொமாரு, நான் தான் அண்ணன் ஜகாங்கீரு பேசுறேன்”

‘அட சொல்லுங்க அண்ணே, நான் ஜேபலலியிலே இருக்கேன், உங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்ன்னு, என் மெஸ் பார்ட்னர் எல்லாம் பிரியானி செய்யனும்ன்னு சொன்னாங்க வந்து செஞ்சுடலாம்ன்னு இங்க வந்துட்டேன்”

‘சரி சரி நான் உன் ரூம்க்கு வந்துட்டேன். நானே பிரியானி செஞ்சுடுறேன். நீ இங்க வந்துடு”

“சரி அண்ணே, அங்க சிவா, கார்த்தின்னு இருப்பாங்க நான் ஏற்கனவே கறி 3 கிலோ வாங்கி வச்சுட்டேன், நீங்க ஆரம்பிங்க நான் வந்துடறேன்”

“சரி நீ இங்க வந்துடு”

நானும் வெளியே போய் போன் சென்சுட்டு அழகா உள்ளே வந்தேன்.

“யாருங்க சிவா, கார்த்தி கொமாரு கறி வாங்கி வச்சிருக்கானாம். எங்க அது எடுங்க, எனக்கு நான் கேக்குறதை எல்லாம் கொடுங்க”

உள்ளே வந்த நான் “சார் நீங்க மொதல்ல கைலி கட்டுங்க”ன்னு சொன்னதுல பூரிச்சு போயிட்டாரன்.

ஆச்சு சர சரன்னு பிரியானி தான் ஒருத்தனே செஞ்சான். நாங்க யாரும் எந்த ஹெல்ப்பும் பண்ணலை. அதிலே அவருக்கு ரொம்ப பெருமை. தான் ஒத்த ஆளா செய்வதை நினைத்து.

90 நிமிஷத்தில் பிரியாணி ரெடி. நடுவே நடுவே எனக்கு வேற போன். நான் வெளியே போய் போய் பேசிட்டு வந்தேன்.

பின்னவும் எனக்கு போன் பண்ணினான்.

“அண்ணே எனக்கு செம டிராபிக் ஜாம், நீங்க அங்க சாப்பிட்டு கிளம்புங்க, நான் உங்க ரூம்ல வாசல்ல இருக்கும் பயர் ஹோஸ் ரீல் டப்பா திறந்து அந்த பார்சலை வச்சுட்டேன். நீங்க வந்து எடுத்து கோங்க”ம்மு சொன்னேன்.

“சரி தம்பி நான் வந்து எடுத்துக்கறேன். சின்ன பிள்ளையிலே உன்னை பார்த்தது. அதான் பார்க்க ஆர்வமா இருந்தேன். சரி விடு அடுத்த தபா பார்த்துக்கலாம். சரி நான் சாப்பிட்டு கிளம்பறேன். உன் மெஸ் ஆளுங்க எல்லாம் நல்ல ஆளுங்க, கார்த்தி, சிவா, சேகர், தினேஷ், பின்ன தொல்ஸ்ன்னு ஒருத்தரு எல்லாம் நல்ல ஆளுங்க, நான் சாப்பிட்டு கிளம்பறேன்”

‘சரின்ண்ணே, நீங்க கிளம்புங்க”

இப்படி சொல்லிட்டு நான் ரூம் உள்ளே வந்துட்டேன்.

பின்ன எல்லாரும் சாப்பிட்டோம். அருமையான பிரியானி.

அவன் ஜேபல்லலி போய் பார்சல் இல்லாம போன் பண்ணினா நான் என்ன செய்யட்டும்????

44 comments:

  1. ஹைய்ய்ய் மீ த பர்ஸ்ட் ! :))

    படிச்சுட்டு வரேன் :)

    ReplyDelete
  2. hehe!

    சூப்பர்! பிரியாணி சாப்பிட இப்படி ஒரு பழிவாங்கலா?

    ReplyDelete
  3. //அட அவன் ஒரு வெளங்காத பயங்க, எனக்கு சின்னதுல இருந்தே தெரியும் அதை, அந்த லூசு இப்பவும் அப்படித்தான் இருக்குதா, நான் தெளிவா சொன்னேன் நான் இங்க வந்து வாங்கிகரேன் என் பார்சலைன்னு, கேட்டுச்சா பாருங்க, இருங்க அந்த லூசுக்கு போன் பன்ணுறேன்//

    அப்ப போன வாரம் வெள்ளிகிழமை விருந்தாடி வந்துட்டு போயிருக்கு :)))

    ReplyDelete
  4. //ஆளுங்க எல்லாம் நல்ல ஆளுங்க, கார்த்தி, சிவா, சேகர், தினேஷ், பின்ன தொல்ஸ்ன்னு //


    தம்பி தினேஷா.......

    ரைட்டு !

    ReplyDelete
  5. :))) நமக்கு யாரும் இது மாதிரி சிக்க மாட்டராய்ங்களே.. ;-)

    ReplyDelete
  6. ஒரு வைக்கிங் வாங்கி பார்சன் அனுப்புமய்யா.

    வேறெ என்னத்தெ செய்ய?

    ReplyDelete
  7. \\ நாமக்கல் சிபி said...
    hehe!

    சூப்பர்! பிரியாணி சாப்பிட இப்படி ஒரு பழிவாங்கலா?\\

    மகளிரை அவன் திட்டினா அதான் நாங்க இப்படி பழி வாங்கிட்டோம்:-))

    ReplyDelete
  8. இப்படித்தான் நம்ம நண்பர் ஒருத்தது துபாயிலிருந்து லீவுக்கு பெரிய பெட்டியோட வந்திருந்தாரு.

    பம்பாய்க்கு வந்து அங்கிருந்து ஊருக்கு ரயிலில் போகும் ஐடியா.

    அட இவ்ளோ பெரிய பெட்டியில் என்னென்னமோ இருக்கும்னு நினெச்சிகிட்டே ஆவலோடு காத்துகிட்டிருந்தோம். அவரும் திறக்கற வழியெ காணோம்.

    ஆனாலும் ராத்திரி ஒரு எட்டு மணிக்கு எதையோ எடுக்கணும்னு தொறந்தார்.

    பொல பொலவென ஒரே பிராவா விழுந்தது. மொத்தம் முப்பத்தியாறு பிராக்கள். பல டிசைன்களில்.....

    இப்படியும் மக்கள் இருக்காங்க.....

    ReplyDelete
  9. பாவன் ஜஹாங்கீரண்ணன்..

    இனிமேல் ஜட்டியே போடமாட்டேன் நு முடிவெடுத்துட்டாராம்..

    இந்த மாதிரியா பழிவாங்கறது. அவரு பொண்டாட்டிய அவரு திட்டிட்டிப் போறாரு.. அதுல நீங்க என்ன நடுப்பற பூந்து பிரியாணி திங்கிறது?

    ஆனாலும அனுபவிச்சுப் படிச்சேன்..

    நல்ல பதிவு..


    சீமாச்சு

    ReplyDelete
  10. அடுத்தவன அசிங்கமா அவனுடைய உடலுழைப்பை உறிஞ்சி ஏமாத்தினதுக்கு இவ்வளவு பெருமையா பதிவா?

    ReplyDelete
  11. ஒரு ப்ரியாணிக்காக குடும்பத்தை பிரிக்க பார்க்கிறீங்களே

    ReplyDelete
  12. \\ Anonymous said...
    அடுத்தவன அசிங்கமா அவனுடைய உடலுழைப்பை உறிஞ்சி ஏமாத்தினதுக்கு இவ்வளவு பெருமையா பதிவா?\\

    அனானி அய்யா! முதல் பத்தி படிங்க, அவன் அவனோட பொண்டாட்டிய ஒரு மனுஷியா கூட மதிக்காம எல்லார் முன்னிலையிலும் கேவலமா கீழ்தடமா பேசினான். அது தாங்க மாட்டாம என் பிரண்ட் வது ஆதங்க பட்டான். அதனாலேயே இந்த மாதிரி!

    முதல்ல பொண்டாட்டிய மதிக்க கத்துகோங்கன்னு சொல்லவே இந்த பதிவு!

    ReplyDelete
  13. அபி அப்பா அய்யா,

    //அவனோட பொண்டாட்டிய ஒரு மனுஷியா கூட மதிக்காம எல்லார் முன்னிலையிலும் கேவலமா கீழ்தடமா பேசினான்//

    ஆதங்கப்படுவது வேறு. பழி வாங்குவது வேறு. ஒரு சமயம் உங்கள் நண்பர் கூட்டிச்சொல்லியிருந்தாலோ அல்லது ஜஹாங்கீருக்கு ஒரு சரியான காரணம் இருந்திருந்தாலோ, நீங்கள் செய்த செயலை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார் அவரை பழி வாங்குவதற்கு?

    -அதே அனானி

    ReplyDelete
  14. அபி அப்பா அய்யா,

    //அவனோட பொண்டாட்டிய ஒரு மனுஷியா கூட மதிக்காம எல்லார் முன்னிலையிலும் கேவலமா கீழ்தடமா பேசினான்// அவர் அவருடைய மனைவியை மதிக்கிறாரோ இல்லையோ அது அவருடைய பிரச்சினை. ஆனால் நீங்கள் அவருக்கு இதை செய்தது சரிதானா?

    -அதே அனானி.

    ReplyDelete
  15. தமிழ் பிரியன் said...
    \\
    :))) நமக்கு யாரும் இது மாதிரி சிக்க மாட்டராய்ங்களே.. ;-)
    \\

    அதானே தல...!

    ReplyDelete
  16. //ஆளுங்க எல்லாம் நல்ல ஆளுங்க, கார்த்தி, சிவா, சேகர், தினேஷ், பின்ன தொல்ஸ்ன்னு //

    அட! நம்ம தம்பி தினேஷா!
    ரைட்டு! அவரையும் உங்களோட ஐக்கியமாக்கி விட்டுட்டீங்கன்னு சொல்லுங்க! :))

    ReplyDelete
  17. //அட அவன் ஒரு வெளங்காத பயங்க, எனக்கு சின்னதுல இருந்தே தெரியும் அதை, அந்த லூசு இப்பவும் அப்படித்தான் இருக்குதா//

    உங்களை உண்மையிலேயே நல்லாத் தெரிஞ்சவரா இருக்கும்போலிருக்கு:)

    ReplyDelete
  18. அதான் பிரியாணி துன்னையில, அதுக்கும் ஜட்டிக்கும் சரியா போச்சுன்னு சொல்லிடுங்க!

    ReplyDelete
  19. //Blogger வால்பையன் said...

    அதான் பிரியாணி துன்னையில, அதுக்கும் ஜட்டிக்கும் சரியா போச்சுன்னு சொல்லிடுங்க!// :)))))))))))))

    ReplyDelete
  20. அவருக்கு பிளாக் படிக்கும் பழ்க்கம் இருந்தால் நீங்கள் உடனே ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்துக்கறது நல்லது..

    ReplyDelete
  21. நல்லவேளை நான் துபாய்க்கு வரல.

    ReplyDelete
  22. //அவன் ஜேபல்லலி போய் பார்சல் இல்லாம போன் பண்ணினா நான் என்ன செய்யட்டும்????
    //

    பிரியாணி ய வாந்தி எடுத்துடுங்க. .சிம்பிள்..!! :)

    ReplyDelete
  23. வியாழன் மாலை வந்தாலே எதாச்சும் ஒரு ப்ளான் போடுறீங்க.. உங்களுக்கு யாராச்சும் ப்ளான் போடாமா பாத்துக்கோங்க தொல்ஸ் ;)

    ReplyDelete
  24. கவிதா சொன்னதையே வழிமொழிகிறேன்

    ReplyDelete
  25. ஹா ஹா ஆயில்ஸ் படிக்கலையா தம்பி:-))

    ReplyDelete
  26. \\ நாமக்கல் சிபி said...
    hehe!

    சூப்பர்! பிரியாணி சாப்பிட இப்படி ஒரு பழிவாங்கலா?
    \\

    சிபி பழிவாங்குவது இதிலே என்ன இருக்கு, ஜகாங்கீரும் சாப்பிட்டு பார்சலும் கொடுத்து அனுப்பினோம். தவிர நாங்க இப்ப நல்ல நண்பர்கள். இது நடந்தது எல்லாம் 3 மாசாம் முன்ன! இப்ப 15 நாள் முன்ன கூட ஜகாங்கீர் வந்தான்( 27 வயசு பையன் தான்) திரும்பவும் பிரியானி சாப்பிட்டோம். அவன் இப்ப வைக்கிங் ஜட்டி போடுவதில்லை. பொண்டாட்டியையும் பொது இடத்திலே திட்டுவதும் இல்லை. குரொக்கடைல் ஜட்டிக்கு மாறிட்டான்.

    ReplyDelete
  27. அண்ணோ..
    அப்பால நம்ம வூட்ல சாட்டர்டே பார்ட்டி, மறக்காம ஜகாங்கீராண்டயும் சொல்லிடுங்ணோ..

    பிரியாணி..

    ஆமா ஆமா பிரியாணி செய்யனுமுங்ணா..

    ReplyDelete
  28. ரொம்பத்தான் தைரியம் ...

    ReplyDelete
  29. /
    கவிதா | Kavitha said...

    //அவன் ஜேபல்லலி போய் பார்சல் இல்லாம போன் பண்ணினா நான் என்ன செய்யட்டும்????
    //

    பிரியாணி ய வாந்தி எடுத்துடுங்க. .சிம்பிள்..!! :)

    /

    :))))))))))))))

    ReplyDelete
  30. நல்லா வருவீங்க தம்பி. மைன்டல் வச்சுக்கிறேன். அப்படியே போகும் போது.... கலக்கல்

    ReplyDelete
  31. //சிபி பழிவாங்குவது இதிலே என்ன இருக்கு, ஜகாங்கீரும் சாப்பிட்டு பார்சலும் கொடுத்து அனுப்பினோம். தவிர நாங்க இப்ப நல்ல நண்பர்கள். இது நடந்தது எல்லாம் 3 மாசாம் முன்ன! இப்ப 15 நாள் முன்ன கூட ஜகாங்கீர் வந்தான்( 27 வயசு பையன் தான்) திரும்பவும் பிரியானி சாப்பிட்டோம். அவன் இப்ப வைக்கிங் ஜட்டி போடுவதில்லை. பொண்டாட்டியையும் பொது இடத்திலே திட்டுவதும் இல்லை. குரொக்கடைல் ஜட்டிக்கு மாறிட்டான்//

    //அவன் ஜேபல்லலி போய் பார்சல் இல்லாம போன் பண்ணினா நான் என்ன செய்யட்டும்????
    //

    ரெண்டுக்கும் இடிக்குதே?? இன்னுமா ஜபல் அலி போய் போண் பண்ணலே??

    ReplyDelete
  32. \\இல்யாஸ் said...
    //சிபி பழிவாங்குவது இதிலே என்ன இருக்கு, ஜகாங்கீரும் சாப்பிட்டு பார்சலும் கொடுத்து அனுப்பினோம். தவிர நாங்க இப்ப நல்ல நண்பர்கள். இது நடந்தது எல்லாம் 3 மாசாம் முன்ன! இப்ப 15 நாள் முன்ன கூட ஜகாங்கீர் வந்தான்( 27 வயசு பையன் தான்) திரும்பவும் பிரியானி சாப்பிட்டோம். அவன் இப்ப வைக்கிங் ஜட்டி போடுவதில்லை. பொண்டாட்டியையும் பொது இடத்திலே திட்டுவதும் இல்லை. குரொக்கடைல் ஜட்டிக்கு மாறிட்டான்//

    //அவன் ஜேபல்லலி போய் பார்சல் இல்லாம போன் பண்ணினா நான் என்ன செய்யட்டும்????
    //

    ரெண்டுக்கும் இடிக்குதே?? இன்னுமா ஜபல் அலி போய் போண் பண்ணலே??

    \\
    வாங்க இலியாஸ்! ஒரு காமடி பதிவை பதிவா பார்க்கனும், புனைவா பார்க்கனும் அனுபவிக்கனும் ஆராய்ச்சி பண்ண கூடாதுன்னு நம்ம வெட்டியானந்தாவே சொல்லியிருக்காரு.

    தவிர சம்பவம் நடந்தது 3 மாசம் முன்ன அப்படியெல்லாம் விளக்கம் கொடுத்தது அந்த வாந்தி எடுத்த அனானிக்காகத்தான். இப்பவும் சொல்றேன் ஜகாங்கீர் எங்க ரூம் நண்பணா ஆகியாச்சு, அவன் இப்ப பொண்டாட்டிய பொது இடத்தில் திட்டுவதில்லை, குரொக்கடைல் ஜட்டி போடுரான் போதுமா?? போதுமா போதுமா??

    ReplyDelete
  33. அட அநியாய ஆபிசரே ஒரு ஜட்டியிலே இவ்வளவு ஊழலா..... ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  34. வரலாற்றில் மாயவரம் ஜட்டி ஊழல் என்று இந்தக் கதை பொன் நூலில் பொறிக்கப்படுவதாகுக! :)

    ReplyDelete
  35. அண்ணே ஷட்டி பாவம் சும்மா வுடாது ஒங்களை!
    ஜட்டி சுட்டதடா! பிரியாணி வெட்டுதடா!-ன்னு பெரியவங்க பாடி இருக்காங்க! தெரிஞ்சிக்கோங்க! :)

    ReplyDelete
  36. Abhi appa

    Excellent write up. I thorughly enjoyed it.

    Raju,dubai

    ReplyDelete
  37. Abhi appa

    Excellent write up. I thorughly enjoyed it.

    Raju,dubai

    ReplyDelete
  38. J K Rithesh- Lok Sabha Election- Contest..

    Unga karthu plz

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)