Tuesday, November 4, 2008

எச்சரிக்கை : பதிவர் நந்து

தீவாளி ஸ்பெசல் : சங்கத்துச் சிங்கம் நிருபர் நந்துவை பேட்டி கண்டார். நடந்தவை கீழே.


நிருபர்: வணக்கம் நந்து f/o நிலா அவர்களே
நந்து : வணக்கமுங்க.

நிருபர்: அதென்னாங்க பேரு நந்து f/o நிலா?

நந்து : நம்ம பேரைச் சொன்னாவே உக்காந்துட்டு இருக்கிறவங்க எல்லாம் எந்திருச்சி நின்னுக்கிறாங்க. அவ்ளோ பயம். சும்மா அதிருர பேரு நம்மளது. அதனால கொஞ்சம் லைட்டா இருக்க நிலாப்பேரையும் சேர்த்துகிட்டேன். ஆனாலும் நம்ம பேரை பதிவிலேயோ வேற எங்கேயோ கேட்டாவே மக்கள் அலறாங்க. அவ்ளோ மரியாதை.

நிருபர்: மரியாதையா? பயம்னு சொல்றாங்க?


நந்து : அதெல்லாம் நம்பாதீங்க. சஞ்சய் கட்டி விட்ட கதை அது.

நிருபர்: பதிவுலகம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..

நந்து : ரஜினி ஒரு படத்துல சொல்லுவாரு தெரியுங்களா?

நிருபர்: ஆமாங்க. நான் ரொம்ப நல்லவன். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா..

நந்து: அது வடிவேலுங்க. ரஜினி சொன்னதைத்தான் நானும் சொல்றேன். ஆண்டவா பதிவர்களிடம் இருந்து என்னைக் காப்பாத்து, நண்பர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.

நிருபர்: குறிப்பா யாருன்னு சொல்ல முடியுங்களா?

நந்து: வாலி(வால்பையன்), சஞ்சய்(பொடிப்பையன்), குசும்பன் இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்குங்க.

நிருபர்: உங்க வீட்டுல பூச்சி மருந்து வாங்குற பழக்கம் உண்டுங்களா?

நந்து: வாங்கிட்டு இருந்தோம். என்னிக்கு கேமராவை கையில எடுத்தேன்னோ அன்னைக்கிருந்து வாங்குறதில்லீங்க.

நிருபர்: அட ஆச்சர்யமா இருக்கே. ஏன்??

நந்து: நான் கேமராவை கையில எடுத்துட்டாப்போதுங்க. புழு பூச்சி எல்லாம் பின்னாங்கால் பொடனில அடிக்க ஓடிரும். அய்யாவைப்ப் பார்த்தா அவ்ளோ பயம். ஒரு ஈ, எறும்பு விடாம விதவிதமா படம் எடுக்க ஆரம்பிச்சேன். அந்தத் தொந்தரவு தாங்காமயே எல்லாம் யூனியன் சேர்த்து ஓடிப்போயிருச்சுங்க. அதுமட்டுமில்லீங்க. ஓடிப்போன பூச்சி எல்லாம் ஒன்னா சேர்ந்து இனிமேல யாரும் கஷ்டப்பட வேண்டாம்னு வர புழு பூச்சி எல்லாம் தடுத்துடுதுங்க. இப்போ என் வயத்துல பூச்சி கூட வரதில்லைனா பார்த்துக்குங்களேன்.

நிருபர்: உங்களுக்கு Blue Crossக்கும் பிரச்சினைன்னு சொல்றாங்களே?

நந்து : நான் யாரு? எவ்வளவு படங்கள் எடுத்திருப்பேன்? பிராணிகளை படம் எடுக்கிறதுல ஒரு விருப்பம் அதிகம்ங்க. அதனால தெருவுல போற நாய், பூனை, மாடு இதுங்க எல்லாத்தையும் படம் எடுக்க ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க, நாம சொல்ற படி அதுங்க போஸ் தராது. ஒரு மாட்ட ஓட்டியாந்து 4 காலயும் தூக்கிட்டு இருக்கிற மாதிரி படம் எடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா மாடு ஒத்துக்கலை,. அதுக்காக நாலு போடு போட்டேன். அவ்ளோதான் இதுக்கு போயி ப்ளூ கிராஸு வந்துட்டாங்க. பொறாமை புடிச்சவங்க. எங்கே நானு பெரிய போட்டோகிராபர் ஆகிருவேன்னு நினைச்சு வெளிநாட்டுக்காறங்க பண்ற சதிதான் இது?

நிருபர்: குசும்பன், அபி அப்பா,.. இவுங்க எல்லாருங்களா?

நந்து : இல்லீங்க. ஹ்ஹஹஹ டமாஸ் பண்றீங்க. அவுங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்கிற உள்ளூர்க்காரங்க. இவுங்க உள்ளூருல இருக்கிற வெளிநாட்டுக்காரங்க...

நிருபர்: (வெளங்கிரும்..) உங்களுக்கு பொழுதுபோக்கு என்னன்னு சொல்லுங்களேன்?

நந்து : நமக்கு பொழப்பே பொழுதுபோக்குதானுங்க.

நிருபர்: அப்படின்னா?

நந்து : நான் ரொம்ப நல்லவங்க. ரெஸ்ட் எடுத்தே டயர்டாகிடுவேங்க. அதனால பொழைப்பே பொழுதுபோக்குதானுங்க..

நிருபர்: உங்க எழுத்துக்களைப்பத்தி(கொடுமை, இதைஎல்லாம் கேட்க வேண்டி இருக்கே)

நந்து : நான் ஒரு சீரியஸ் எழுத்தாளருங்க. ஆனா இந்த மக்களுக்கு மட்டும் அவ்வளவா பக்குவப்படலீங்க. அதனால அவுங்களுக்கு தகுந்த மாதிரி கருத்துக்களைச் சொல்லிட்டு வரேங்க.

Flash News: நிருபர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி.

30 comments:

  1. கலக்கல் இளா.. அதுலயும்,

    //
    நிருபர்: ஆமாங்க. நான் ரொம்ப நல்லவன். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறா..

    நந்து: அது வடிவேலுங்க. ரஜினி சொன்னதைத்தான் நானும் சொல்றேன்.
    //
    இது ஜூப்பரு...

    ReplyDelete
  2. //ஆண்டவா பதிவர்களிடம் இருந்து என்னைக் காப்பாத்து, நண்பர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்.//

    நான் பதிவரா
    ந்ண்பரா

    என்னை யாராவது கேமராகாரர்கிட்ட இருந்து காப்பாத்துங்க

    ReplyDelete
  3. //நந்து: வாலி(வால்பையன்), சஞ்சய்(பொடிப்பையன்), குசும்பன் இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்குங்க.//

    அகில உலக இலக்கிய சிங்கத்தின்
    ஈரோடு கிளை
    கோவை கிளை
    அமிரக கிளை
    உறுப்பினர்களை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களா

    ReplyDelete
  4. //நந்து: வாங்கிட்டு இருந்தோம். என்னிக்கு கேமராவை கையில எடுத்தேன்னோ அன்னைக்கிருந்து வாங்குறதில்லீங்க.//

    அண்ணா, எங்க வீட்லயும் பூச்சி தொல்ல தாங்க முடியலண்ணா
    வந்து கொஞ்சம் பொட்டொ எடுத்து துரத்திட்டு போங்கண்ணா

    ReplyDelete
  5. //எங்கே நானு பெரிய போட்டோகிராபர் ஆகிருவேன்னு நினைச்சு வெளிநாட்டுக்காறங்க பண்ற சதிதான் இது?//

    இனிமே தான் ஆகணுமா!

    ReplyDelete
  6. //நான் ரொம்ப நல்லவங்க. ரெஸ்ட் எடுத்தே டயர்டாகிடுவேங்க.//

    இப்படியா கம்பெனி சீக்ரெட்ட வெளியே சொல்றது

    ReplyDelete
  7. இது எங்க போஇ முடியும்னு தெரியலையே

    ReplyDelete
  8. இதப்படிச்சிட்டு என் பொண்ட்டாட்டி 10 நிமிசமா சிரிக்கறா. பக்கத்து வீட்டுகாரன்லாம் எட்டிபாக்கறான்.

    சிரிச்சு முடிச்சுட்டு என்ன நக்கலா கேவலமா ஒரு லுக் விட்டுட்டு போயிட்டா.

    அந்த லுக்குக்கு அர்த்தம் என்ன தெரியுமா? எனக்கு மட்டும்தான் உன்ன பத்தி தெரியும்ன்னு நெனச்சேன். அகில உலகத்துக்கும் தெரிஞ்சிருக்கான்றதுதான்.

    இப்ப சந்தோஷமாய்யா?

    ReplyDelete
  9. எங்கம்மா அப்பவே சொல்லுச்சு. அக்கரக்காரன்கிட்டல்லாம் பழக்கவழக்கம் வெச்சுக்காதன்னு. நாந்தான் கேக்கல. :(

    ReplyDelete
  10. பூச்சிய போட்டோ எடுக்கறது எப்படி தெரியுமா?

    மச்சான் நீ கேளேன்...

    மச்சான் நீ கேளேன்...

    மச்சான் நீ கேளேன்...

    ReplyDelete
  11. வேற் வழியே இல்ல. எடுத்து வெச்சிருக்க பூச்சி படத்தையெல்லாம் போட்டுட வேண்டியதான்.

    பழிவாங்க வேற வழி தெரியல.

    ReplyDelete
  12. போட்டுட மீன்ஸ் பதிவா போட்டுட

    ReplyDelete
  13. // ஒரு மாட்ட ஓட்டியாந்து 4 காலயும் தூக்கிட்டு இருக்கிற மாதிரி படம் எடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா மாடு ஒத்துக்கலை,. //

    கலக்கல்

    ReplyDelete
  14. ஹாஹாஹா..

    சூப்பர்
    சூப்பர்
    சூப்பரோ சூப்பர்,

    ஒரு டெவில் ஷோ பார்த்த மாதிரி இருக்கு. ;-)

    ReplyDelete
  15. ///நிருபர்: உங்க வீட்டுல பூச்சி மருந்து வாங்குற பழக்கம் உண்டுங்களா?//

    அவர் வீட்ல இருக்கிற ஒரு பூச்சி தான் இவருக்கு ஒடம்பு சரி இல்லைனா மருந்து வாங்கி வரும்.. :)

    ReplyDelete
  16. //நந்து : இல்லீங்க. ஹ்ஹஹஹ டமாஸ் பண்றீங்க. அவுங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்கிற உள்ளூர்க்காரங்க. இவுங்க உள்ளூருல இருக்கிற வெளிநாட்டுக்காரங்க...

    நிருபர்: (வெளங்கிரும்..) உங்களுக்கு பொழுதுபோக்கு என்னன்னு சொல்லுங்களேன்?
    //

    அது வெளங்கிரும் இல்ல.. ”இள”ங்கிரும் :))

    ReplyDelete
  17. //நந்து : நான் ஒரு சீரியஸ் எழுத்தாளருங்க. ஆனா இந்த மக்களுக்கு மட்டும் அவ்வளவா பக்குவப்படலீங்க. //

    பின்னவீனத்துவ பேரரசு :)

    ReplyDelete
  18. // நந்து f/o நிலா said...

    சஞ்சய் இதுவும் ஒரு அக்கரை பார்ட்டிதான். தெரியாதா? அதான் இந்த கொலைவெறி//


    // நந்து f/o நிலா said...
    எங்கம்மா அப்பவே சொல்லுச்சு. அக்கரக்காரன்கிட்டல்லாம் பழக்கவழக்கம் வெச்சுக்காதன்னு. நாந்தான் கேக்கல. //

    நீதி : எல்லா அக்கரக்காரங்களையும் வசியம் பண்ணி அப்பிராணியாக்க முடியாது. :))))

    ReplyDelete
  19. //ஒரு ஈ, எறும்பு விடாம விதவிதமா படம் எடுக்க ஆரம்பிச்சேன். அந்தத் தொந்தரவு தாங்காமயே எல்லாம் யூனியன் சேர்த்து ஓடிப்போயிருச்சுங்க//

    அடுத்த யாரையோ அடிக்க
    அடி போடுறாப் போல இருக்கே மிஸ்டர் இளா? :)

    பை தி வே, சங்கத்தின் நவம்பர் மாத அட்லாஸ் சிங்கமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! :))

    ReplyDelete
  20. //அவுங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்கிற உள்ளூர்க்காரங்க//

    குசம்பன் சரி!
    அபி அப்பா கூடவா? :)

    //இவுங்க உள்ளூருல இருக்கிற வெளிநாட்டுக்காரங்க...//

    யாருன்னு கடேசி வரை சொல்லவே இல்ல?
    உள்ளூருல இருக்கிற வெளிநாட்டுக்காரப் பதிவர்கள் யாருப்பா?

    யூ மீன் ஜீவ்ஸ் அண்ணாச்சி? :)

    ReplyDelete
  21. ஏங்க என்ன தலைப்பு வைச்சாலும் ரஜினியை வம்புக்கு இழுக்காம விடமாட்டிங்களா :-)

    ReplyDelete
  22. //பூச்சிய போட்டோ எடுக்கறது எப்படி தெரியுமா?

    மச்சான் நீ கேளேன்...

    மச்சான் நீ கேளேன்...

    மச்சான் நீ கேளேன்...//

    ROFTL....

    ReplyDelete
  23. நிருபர்: (வெளங்கிரும்..) உங்களுக்கு பொழுதுபோக்கு என்னன்னு சொல்லுங்களேன்?

    நந்து : நமக்கு பொழப்பே பொழுதுபோக்குதானுங்க.

    நிருபர்: அப்படின்னா?

    நந்து : நான் ரொம்ப நல்லவங்க. ரெஸ்ட் எடுத்தே டயர்டாகிடுவேங்க. அதனால பொழைப்பே பொழுதுபோக்குதானுங்க..

    நிருபர்: உங்க எழுத்துக்களைப்பத்தி(கொடுமை, இதைஎல்லாம் கேட்க வேண்டி இருக்கே)

    நந்து : நான் ஒரு சீரியஸ் எழுத்தாளருங்க. ஆனா இந்த மக்களுக்கு மட்டும் அவ்வளவா பக்குவப்படலீங்க. அதனால அவுங்களுக்கு தகுந்த மாதிரி கருத்துக்களைச் சொல்லிட்டு வரேங்க.

    Flash News: நிருபர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி.

    கலக்கல் காமெடி ... சூப்பர்

    ReplyDelete
  24. //நான் கேமராவை கையில எடுத்துட்டாப்போதுங்க. புழு பூச்சி எல்லாம் பின்னாங்கால் பொடனில அடிக்க ஓடிரும். அய்யாவைப்ப் பார்த்தா அவ்ளோ பயம்.//

    அய்யோ அய்யோ செம கலக்கல்!!!

    ReplyDelete
  25. //அந்த லுக்குக்கு அர்த்தம் என்ன தெரியுமா? எனக்கு மட்டும்தான் உன்ன பத்தி தெரியும்ன்னு நெனச்சேன். அகில உலகத்துக்கும் தெரிஞ்சிருக்கான்றதுதான்.//

    இன்னுமும் அக்காவை புரிஞ்சிக்கிலீயே தங்க மச்சான்!

    இத எல்லாம் படிச்சும் இன்னுமா நீங்க உசுரோட இருக்கீங்கன்னு அர்த்தம்!!!

    ReplyDelete
  26. //நான் ரொம்ப நல்லவங்க. ரெஸ்ட் எடுத்தே டயர்டாகிடுவேங்க.//

    பாவங்க அவரு.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)