1996 - ஜனவரி 1:
"அப்பா. இங்கே வந்து பாருங்கப்பா. நான் இந்த வருஷ போனஸ்லே இந்த புது BSA SLR சைக்கிள் வாங்கியிருக்கேன்".
"ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்கம்மாவை பின்னாடி உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா".
2003 - ஜனவரி 1
"அம்மா, இங்கே வந்து பாரும்மா. நம்ம குடும்பத்திலே முதல்முதல்லே நான் கார் வாங்கியிருக்கேன்."
"ரொம்பவே நல்லாயிருக்குப்பா. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உன் பொண்டாட்டியை பக்கத்துலே உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வா."
2009 - ஜனவரி 1
(மனைவியிடம்) "ஏம்மா, இங்கே வந்து பாரு. ஆறு மாசமா சேமிச்ச பணத்திலேர்ந்து ஒரு புது சைக்கிள் வாங்கியிருக்கேன்".
"ரொம்பவே சூப்பரா இருக்குங்க. கோயிலுக்கு கொண்டு போய் பூசை போட்டுட்டு, மொதல்லே உங்க பொண்ணை உக்கார வெச்சி ஒரு சுத்து சுத்திட்டு வாங்க".
செய்தி:
அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலாவதைத் தொடர்ந்து, இந்தியாவில் மென்பொருள் நிறுவனங்களுக்கு ப்ராஜக்ட்ஸ் வருவது குறையும் என்று நம்பப்படுகிறது.
பல நிறுவனங்களில் ஏற்கனவே ஆட்குறைப்பு, கணிசமான சம்பளம் குறைப்பு ஆகியவை துவங்கிவிட்டன.
ஆனால், நான் வேலை செய்யும் நிறுவனம் போலவே எல்லா நிறுவனங்களும் இத்தகைய நடவடிக்கைகளை மறுத்து வருகின்றன.... :-(
ஆனாலும், எதற்கும் மனம் தளராத விக்கி போல் ( நம்ம விக்கி இல்லீங்க...), எதற்கும் வருத்தப்படாமல், பதிவுகளா, பின்னூட்டங்களா போட்டுத் தள்ளுங்கன்னு சங்கத்தின் சார்பாக வருத்தப்படாமல் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...
முகத்தில் அறையும் உண்மைதான் ச்சின்னப்பையன். நம் கழுத்தின் மேல் எப்போதும் ஒரு கத்தி தொங்குவதும், இப்போது லீமென் ப்ரதர்ஸ், ஏ.ஐ.ஜி. பிரச்சினைகளில் அது தொங்கிக் கொண்டிருக்கும் கயிறு வீக் ஆகி இருப்பதையும் நினைக்கவே பயமாக இருக்கிறது :(
ReplyDeleteசத்யா,
ReplyDeleteநகைச்சுவைக்காக எழுதினாலும், இந்த நிச்சயமற்றதன்மை நிலவுகிறது என்பதை மறுக்க முடியாது.
prepare for the worst என்பது எப்பொழுதும் பொருந்தும்.
:-((...
ReplyDeletebayama irukkuthu..(PM vera bayamuruthuraaru..)
Even though Mokkai, I dont think this would happen!
ReplyDeleteNew biz may do to China.
Also the software guys have to live with limited salaries, and live within means.
Weekend vacation in Singapore is aniyayam!
திருப்பூரில் வேலைக்கு ஆட்கள் தேவை.
ReplyDeleteயப்பா. ச்சும்மா டமாஷா அவரு எழுதினதால, நானும் டமாஷா பின்னூட்டினேன். தப்பா நெனைச்சுக்காதீங்க சாமிகளா...
ReplyDeleteவாங்க வெண்பூ -> அது சரி. அங்கே இருக்கறவங்களே இப்படி சொல்றீங்க. நான் இங்கேயிருந்து கிளம்பி வர்றதுக்கு முன்னாலே 100 தடவை யோசிக்க வேண்டியிருக்கு....:-(((
ReplyDeleteவாங்க வேலன் ஐயா -> ஆமா. சரியா சொன்னீங்க.. நன்றி...
வாங்க விஜய் -> ஏன், கதவு பின்னாடி மறைஞ்சிருந்து திடீர்னு 'பே'ன்னு பயமுறுத்துறாரா?????
வாங்க ராம் -> சரியா சொன்னீங்க... வீக்-எண்டுக்கு சிங்கப்பூரா? ரொம்பவே அ நியாயம். கேட்டா, என்கிட்டே காசு இருக்கு. உனக்கு என்னன்னுவாங்க.... :-)))
ReplyDeleteவாங்க பரிசல் -> அவ்வ்வ்... தப்பா நினைக்கமாட்டாங்க... மொக்கையாத்தான் சொல்லியிருக்கேங்க... எதுக்கும் எனக்கு ஒரு இடம் போட்டு வைங்க......:-)))
இந்த அவல நிலைக்கு காரணம் மென்பொருள் துறையின் அபார வளர்ச்சியே,
ReplyDeleteஎந்த வீட்டில் பார்த்தாலும் ஒரு கம்பியூட்டர் இன்ஜினியர்,
வேலை செய்ய ஆளிருக்கு வேலை தர யாரிருக்கா?
என் மகளுக்கு நான் வேறு ஏதாவது துறையை தான் பரிந்துரைப்பேன்
:)
ReplyDeleteits all expected. the real estate brokers only be affected
ReplyDelete