Friday, September 12, 2008

பெண்கள் மென்பொருள் துறையில் பட்டையை கிளப்புவது எப்படி?

மத்த எல்லா துறைகளையும் விட மென்பொருள் துறைல பொண்ணுங்க அதிகமா வேலை செய்யறதுக்கு என்ன காரணம்னு ரொம்ப நாளா சிந்திச்சிருக்கேன். பதில் தெரியவே இல்லை. சரி யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது மென்பொருள் துறைல யார் யார் வந்தா எப்படி எப்படி வேலை செய்வாங்கனு அந்த துறையை புரிஞ்சிருக்கறவரும், பொண்ணுங்க மனசை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கறவருமான நம்ம அட்லாஸ் சிங்கம் ச்சின்னப்பையனை கேட்டுடலாம்னு ஒரு ஃபோனை போட்டேன்.

ச்சி.பை : என்னப்பா வெட்டி எப்படி இருக்க?

வெ.ப: நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

ச்சி.பை: நான் என்ன உன்னை மாதிரி தங்கமணியை இந்தியாக்கா அனுப்பிருக்கேன். இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு டென்ஷனாக்காதப்பா.

வெ.ப: சரி சரி. எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.

ச்சி.பை: எனக்கும் ஒரு சந்தேகமிருக்கு. தங்கமணியை இந்தியா அனுப்புவது எப்படினு ஒரு பதிவு போடேன். மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

வெ.ப: அண்ணே. அதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம். இப்ப எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். அதை தீர்த்து வைங்க.

ச்சி.பை: சரிப்பா. சொல்லு.

வெ.ப: மத்த எல்லா துறையும் விட மென்பொருள் துறைல பெண்கள் அதிகமா இருக்கறதுக்கு காரணமென்ன?

ச்சி.பை: இது ஒரு நல்ல கேள்வி.

வெ.ப: பதிலை சொல்லுங்கண்ணே!

ச்சி.பை: இதுக்கு நான் பதில் சொல்றதை விட சில பல கேள்விகள் கேக்கறேன். அதுல இருக்குற சூட்சமத்தை புரிஞ்சிக்கிட்டா உனக்கே தானா புரிஞ்சிடும்.

வெ.ப: சரிண்ணே. கேள்வியை கேளுங்க

ச்சி.பை: சாப்ட்வேர்ல அதிகமா எல்லாரும் என்ன வேலை செய்வாங்க?

வெ.ப: டெவலப்பர்.

ச்சி.பை: டெவலப்பர்ஸ் அதிகமா என்ன செய்வாங்க?

வெ.ப: காப்பி பேஸ்ட்

ச்சி.பை: நதியா தோடு, குஷ்பூ ஜாக்கெட், சித்தி ராதிகா புடவை, கஜோல் சல்வார் இந்த மாதிரி பல ஐட்டம்ஸ் இருக்கு. ஆனா அஜித் சட்டை, விஜய் பேண்ட், சிம்பு பர்முடாஸ்னு ஏதாவது இருக்கா?

வெ.ப: இல்லையேண்ணே.

ச்சி.பை: இது தான் காப்பி பேஸ்ட்டோட துவக்கமே. இதுல யாரு எக்ஸ்பர்ட்னு புரியுதா?

வெ.ப: புரியுதுண்ணே.

ச்சி.பை: அது. அடுத்து என்ன வேலை அதிகமா செய்யறாங்க?

வெ.ப: டெஸ்டிங்

ச்சி.பை: அதுல என்ன பண்ணுவாங்க.

வெ.ப: எதுல என்ன தப்பு இருக்குனு கண்டுபிடிப்பாங்க.

ச்சி.பை: அப்படினா பொண்ணுங்க எல்லாம் பிறப்பாலே டெஸ்டர்ஸ் தான்பா. அவுங்களுக்கு எல்லாம் ட்ரெயினிங்கே கொடுக்க தேவையில்லை.

வெ.ப: எப்படினே சொல்றீங்க?

ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.

வெ.ப: ஓ. அப்ப பொண்ணுங்க டெஸ்டிங்லயும் பட்டையை கிளப்புவாங்கனு சொல்றீங்க?

ச்சி.பை: நான் என்ன சொல்றது. உலகத்துக்கே அது தெரியும். அடுத்து என்ன வேலை அதிகமா பண்றாங்க?

வெ.ப: மெயிண்டனன்ஸ் ப்ராஜக்ட்

ச்சி.பை: அதுல என்ன செய்வாங்க?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச ப்ராஜக்ட்க்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை இருந்தா ஏற்கனவே பண்ணியிருந்ததுல கொஞ்சம் மாறுதல் செய்வாங்க. அதிகமான வேலை இருக்காது.

ச்சி.பை: இட்லி உப்புமானா என்னனு தெரியுமா?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச இட்லி மீந்துச்சுனா வீணாகாம இருக்க அதை கொஞ்சம் மாத்தி எல்லாரும் சாப்பிடற மாதிரி கொடுக்கறது.

ச்சி.பை: அதே அதே. நீ முன்னாடி சொன்னதும் கொஞ்சம் கொஞ்சம் அது மாதிரி தானே ;)

வெ.ப: அண்ணே. எங்கயோ போயிட்டீங்க. அடுத்து டேமஜர்.. சாரி சாரி மேனேஜர்

ச்சி.பை: அதுல எல்லாரையும் வேலை வாங்கனும். அப்படி தானே?

வெ.ப: ஆமாம்னே.

ச்சி.பை: இது நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா? வேலை வாங்கறதுல பொண்ணுங்களை மிஞ்ச ஆள் இருக்கா? காலேஜ் படிக்க ஆரம்பிக்கும் போது பசங்க பொண்ணுங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கறானுங்க. அது கட்டைல போற வரைக்கும் கண்டினியூ ஆகுது. சரி தானே?

வெ.ப: ஆமாங்கண்ணே...

ச்சி.பை: போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?

வெ.ப: பொதும்ணே.. பொதும். என் அறிவு கண்ணை திறந்து வெச்சிட்டீங்க... பொண்ணுங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியராகற திறமை பை பர்த்தே இருக்குனு புரிய வெச்சிட்டீங்க.

ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.

வெ.ப: இதெல்லாம் நீங்க சொல்லனுமா? என்ன மக்களே. ரெடி தானே? கும்மி அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

52 comments:

  1. ////ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.///

    வேண்டாம் சாமி: எஸ்கேப்........!

    ReplyDelete
  2. ரொம்ப தான் லொள்ளு

    ReplyDelete
  3. //ரொம்ப தான் லொள்ளு//

    இதப்போய் லொல்லுங்கறீங்க,

    வெட்டிப்பயலோட உருப்படியான வேலை இதுதான்னு நெனக்கிறேன்

    ReplyDelete
  4. //SP.VR. SUBBIAH said...

    ////ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.///

    வேண்டாம் சாமி: எஸ்கேப்........!//

    நீங்களே இப்படியெல்லாம் நாத்திகம் பேசினா எப்படி? ;)

    ReplyDelete
  5. //விஜய் ஆனந்த் said...

    :-)))...//

    :)

    ReplyDelete
  6. // Ramya Ramani said...

    ரொம்ப தான் லொள்ளு//

    ச்சின்னைப்பையனுக்கு லொள்ளு அதிகம் உலகத்துக்கே தெரியுமே. அதை நீங்க தனியா வேற சொல்லனுமா ;)

    ReplyDelete
  7. //இலவசக்கொத்தனார் said...

    :))//

    கொத்ஸ்,
    ஈயம், பித்தளை எல்லாம் எதுவும் சொல்லலையா? :)

    ReplyDelete
  8. //குடுகுடுப்பை said...

    //ரொம்ப தான் லொள்ளு//

    இதப்போய் லொல்லுங்கறீங்க,

    வெட்டிப்பயலோட உருப்படியான வேலை இதுதான்னு நெனக்கிறேன்//

    ஆஹா... இதுல என் லொள்ளு என்ன இருக்கு? ;)

    ReplyDelete
  9. :)
    அரைச்ச மாவை அரைபோமா துவைச்ச துணிய துவைப்போமா பொழுது போகரதுனு இது அவங்களக்கு எத்த வேலை, மற்றபடி பிக்கப் அண்ட் ட்ரோப், கான்டீன், கடலை ஏற்றுகொள்ளுதல் etc etc...

    ReplyDelete
  10. வெட்டி, இந்த followersனா என்னா? நானும் இந்தப் பதிவ follow பண்றேன்.

    :)

    ReplyDelete
  11. பாஸூ, நீங்க எங்கேயோ போய்ட்டீங்க...
    பய புள்ள என்னமா யோசிக்கிறாங்க...

    ReplyDelete
  12. // Logan said...

    :)
    அரைச்ச மாவை அரைபோமா துவைச்ச துணிய துவைப்போமா பொழுது போகரதுனு இது அவங்களக்கு எத்த வேலை, மற்றபடி பிக்கப் அண்ட் ட்ரோப், கான்டீன், கடலை ஏற்றுகொள்ளுதல் etc etc...//

    ஒண்ணுமே பிரியல ஒலகத்துல...

    ReplyDelete
  13. // SurveySan said...

    வெட்டி, இந்த followersனா என்னா? நானும் இந்தப் பதிவ follow பண்றேன்.

    :)//

    அந்த Followers கான்செப்ட் எனக்கு பிரியல... யாராவது சொன்னா நல்லா இருக்கும் ;)

    ReplyDelete
  14. // Sen22 said...

    பாஸூ, நீங்க எங்கேயோ போய்ட்டீங்க...
    பய புள்ள என்னமா யோசிக்கிறாங்க...//

    எல்லா புகழும் ச்சின்னப்பையனுக்கே...
    ச்சின்னப்பையன் ஒருவரே துணை நமக்கே :)

    ReplyDelete
  15. பொண்ணுங்கள பத்தி நிறைய தெரிஞ்சி வச்சி இருக்கீங்க

    ReplyDelete
  16. ஆஹா...ஆஹா... கேக்குறப்பவே காதுக்கு குளுமையா இருக்கு. இனிமே லேடி கேண்டிடேட்ஸ்க்கு இன்டர்வியூவே கெடையாதுப்பா.. :))))))

    ReplyDelete
  17. கலக்கல்..
    இதுக்கெல்லாம் உங்க தங்கமணி வந்து பதில் சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...:)))))))))

    ReplyDelete
  18. /////வெட்டிப்பயல் said...
    //SP.VR. SUBBIAH said...
    ////ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.///
    வேண்டாம் சாமி: எஸ்கேப்........!//
    நீங்களே இப்படியெல்லாம் நாத்திகம் பேசினா எப்படி? ;)////
    ---------------
    ஓஹோ, இதுக்குப் பெயர்தான் நாத்திகம் பேசுவதா? இருங்கள் கொத்தனாரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். அவர்தான் உஙகளுக்குச் சரிப்பட்டு வருவார்!

    ReplyDelete
  19. ====
    ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.
    ====

    ஹா ஹா...

    கூட ஒன்னும் சேர்த்துக்கலாம்...

    ஆண்கள் இந்த மாதிரி பதிவு போட்டு வீணாப்போறாங்க, இந்த கேப்ல கூட பொண்கள் பட்டையே கிளப்புறாங்க...

    ReplyDelete
  20. please use generic words / avoid pinnuttam / blogger names. becos your posts are getting forwarded everywhere !!!!

    ReplyDelete
  21. இப்போ அந்தத் துறையில் இருக்கற ஆம்பளைங்க மேலெல்லாம் சந்தேகம் வர்ற மாதிரி பண்ணிட்டீங்களே . . .

    ReplyDelete
  22. வெட்டி -> நாம தனியா பேசிண்டதை இப்படி பதிவா போடுவீங்கன்னு நினைவுலேயும் நினைச்சி பாக்கலே......:-(((

    ReplyDelete
  23. //ச்சின்னைப்பையனுக்கு லொள்ளு அதிகம் உலகத்துக்கே தெரியுமே. அதை நீங்க தனியா வேற சொல்லனுமா ;)//

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ரணகளமாயிக்கிடக்கு.....

    ReplyDelete
  24. //ஆஹா...ஆஹா... கேக்குறப்பவே காதுக்கு குளுமையா இருக்கு. இனிமே லேடி கேண்டிடேட்ஸ்க்கு இன்டர்வியூவே கெடையாதுப்பா.. :))))))//

    நேரா வேலைக்கே எடுத்துக்கலாம்னு சொல்றீங்களா?????

    ReplyDelete
  25. பட்டையெ கிளப்புறாங்க பட்டையெ கிளப்புறாங்கன்றீங்களே - அப்போ லவங்கம், கிராம்பு இதையெல்லாம் யார் கிளப்புவாங்க?

    ReplyDelete
  26. //பாபு said...

    பொண்ணுங்கள பத்தி நிறைய தெரிஞ்சி வச்சி இருக்கீங்க//

    ச்சின்னப்பையன் அண்ணா... இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க ;)

    ReplyDelete
  27. //வெண்பூ said...

    ஆஹா...ஆஹா... கேக்குறப்பவே காதுக்கு குளுமையா இருக்கு. இனிமே லேடி கேண்டிடேட்ஸ்க்கு இன்டர்வியூவே கெடையாதுப்பா.. :))))))//

    இண்டர்வியூ வெச்சா மட்டும் என்ன பதில் சொல்லவா போறாங்கனு ச்சின்னப்பையன் கேக்கறாரு :)

    ReplyDelete
  28. //அறிவன்#11802717200764379909 said...

    கலக்கல்..
    இதுக்கெல்லாம் உங்க தங்கமணி வந்து பதில் சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...:)))))))))//

    வாங்க நட்சத்திரம்...

    அண்ணன் தங்கமணி மென்பொருள் நிபுணரானால்... அப்படினே பதிவு போட்டார். இதெல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடற மாதிரி :)

    ReplyDelete
  29. //SP.VR. SUBBIAH said...

    /////வெட்டிப்பயல் said...
    //SP.VR. SUBBIAH said...
    ////ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.///
    வேண்டாம் சாமி: எஸ்கேப்........!//
    நீங்களே இப்படியெல்லாம் நாத்திகம் பேசினா எப்படி? ;)////
    ---------------
    ஓஹோ, இதுக்குப் பெயர்தான் நாத்திகம் பேசுவதா? இருங்கள் கொத்தனாரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். அவர்தான் உஙகளுக்குச் சரிப்பட்டு வருவார்!//

    "வேண்டாம் சாமி" னு சொன்னா அது நாத்திகமில்லையா? :)

    ReplyDelete
  30. //முரளிகண்ணன் said...

    சூப்பர்//

    டாங்கிஸ் முரளிகண்ணன் :)

    ReplyDelete
  31. // குரங்கு said...

    ====
    ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.
    ====

    ஹா ஹா...

    கூட ஒன்னும் சேர்த்துக்கலாம்...

    ஆண்கள் இந்த மாதிரி பதிவு போட்டு வீணாப்போறாங்க, இந்த கேப்ல கூட பொண்கள் பட்டையே கிளப்புறாங்க...//

    ஹி ஹி ஹி :)

    ReplyDelete
  32. //செந்தழல் ரவி said...

    please use generic words / avoid pinnuttam / blogger names. becos your posts are getting forwarded everywhere !!!!//

    அண்ணே,
    ஃபார்வேர்ட் ஆகும் போது யாருடா இது ச்சின்னப்பையன், அது என்ன பின்னூட்டம்னு யாராவது கூகுள்ல தேடி வந்தா நமக்கு நல்லது தானே :)

    ReplyDelete
  33. // Kamal said...

    kalakkkal :)))//

    மிக்க நன்றி :)

    ReplyDelete
  34. // RATHNESH said...

    இப்போ அந்தத் துறையில் இருக்கற ஆம்பளைங்க மேலெல்லாம் சந்தேகம் வர்ற மாதிரி பண்ணிட்டீங்களே . . .//

    இதெல்லாம் நகைச்சுவைனு புரிஞ்சிக்கிற அளவுக்கு ஆண்கள் விவரமாத்தான் இருப்பாங்கனு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க ;)

    ReplyDelete
  35. //ச்சின்னப் பையன் said...

    வெட்டி -> நாம தனியா பேசிண்டதை இப்படி பதிவா போடுவீங்கன்னு நினைவுலேயும் நினைச்சி பாக்கலே......:-(((//

    நான் பதிவெழுதத்தான் கேக்கறனு புரிஞ்சிக்காத அளவுக்கு அப்பாவியா இருக்கீங்களேண்ணே.... ஐ லைக் இட் :)

    ReplyDelete
  36. // Tamil Short Film said...

    Semmai mokkai//

    அதேரா நாக்கு காவால்ஸிந்தி :) (இது ஒரு பாலைய்யா படத்துல வர டயகாக்)

    அது தாங்க எங்களுக்கும் வேணும் :)

    ReplyDelete
  37. ரசித்து சிரித்தேன்

    ReplyDelete
  38. ////பாபு said...

    பொண்ணுங்கள பத்தி நிறைய தெரிஞ்சி வச்சி இருக்கீங்க//

    ச்சின்னப்பையன் அண்ணா... இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க ;)//

    பொது அறிவை வளர்த்துக்க விடமாட்டீங்களே????

    ReplyDelete
  39. //அண்ணன் தங்கமணி மென்பொருள் நிபுணரானால்... அப்படினே பதிவு போட்டார். இதெல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடற மாதிரி :)//

    தங்கமணி அல்வா செய்து கொடுக்கறதே - கொஞ்ச நேரத்துக்கு மனுசன் வாயெ தொறக்காமெ இருக்கணும்றதுக்குதான்... :-)))

    ReplyDelete
  40. கடைசி வரி வரைக்கும் சரியாத் தான் சொல்லியிருக்காருன்னு படிச்சுகிட்டே வந்தேன். கடைசியில் 'மத்த பொசிசன்ஸ்'ன்னு போட்டு இடுகையோட திசையையே மாத்திட்டீங்களே. அதான் வாத்தியார் ஐயா எஸ்ஸாகுறாரு. நானும் எஸ்ஸாகிக்கிறேன். :-)

    ReplyDelete
  41. ஹா ஹா ஹா, சூப்பர்.

    ReplyDelete
  42. ////SP.VR. SUBBIAH said...

    ////ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.///

    வேண்டாம் சாமி: எஸ்கேப்........!//

    நீங்களே இப்படியெல்லாம் நாத்திகம் பேசினா எப்படி? ;)

    //

    :):):)

    ReplyDelete
  43. :))) கலக்கல்! எனக்கும் இது மெயில் மூலமா தான் வந்துச்சு! படிச்சப்புறம், இது உங்க பதிவு மாதிரி இருக்கேன்னு தேடி, கூகிள் மூலமா இங்க வந்தேன்!
    //நதியா தோடு, குஷ்பூ ஜாக்கெட், சித்தி ராதிகா புடவை, கஜோல் சல்வார் இந்த மாதிரி பல ஐட்டம்ஸ் இருக்கு. ஆனா அஜித் சட்டை, விஜய் பேண்ட், சிம்பு பர்முடாஸ்னு ஏதாவது இருக்கா//
    இதையெல்லாம் போட்டுக்கறது தான அவங்க, செய்யறது எல்லாம் நாம தான;)

    ReplyDelete
  44. இப்பதானுங்க அந்த ரகசியமெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்..நன்றிங்ணா :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)