Sunday, August 31, 2008

கடைசி பரீட்சை நாள்!

கடைசி பரீட்சை நாள்!

எழுத வேண்டியதெல்லாம் எழுதி விட்டு பராக்கு பார்த்து கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த கடைசி ஒரு மணி நேரமும் அப்படியே மனசுல உற்சாகம் பீறிட்டுக்கொண்டிருக்கும்!

நாளையிலேர்ந்து லீவு ஜாலி எங்க போகலாம்?

ஊரைசுத்தலாமா?

ஊரை விட்டு ஓடிப்போகலாமா? - தனியாத்தான்:-(

இப்படியாக பல நினைப்புக்கள் ஒரு பத்து நிமிஷத்திற்குள் வந்து ஆளை புரட்டி சந்தோஷக்கடலில் ஆழ்த்தி விட்டுச்செல்லும் சமயத்தில் தான் அது தோணும்!

சரி இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கே சும்மா ஒரு அடிஷனல் பேப்பர் வாங்கி எழுதுனா என்ன? என்று நினைத்து பேப்பர் வாங்கிய பிறகுதான் ஆமாம் என்ன எழுதுறது என்று நினைக்கதோணும்!

எழுதுவோமே! அப்படின்னு மெயின் பேப்பர்ல இருக்கற விஷயங்களை ஆங்காங்கே பொறுக்கி எடுத்து சாய்ஸ் கொஸ்டீன் எழுதி (சிவுப்பு இங்க்ல அண்டர்லைன் பண்ணனும்!) அதுக்கு பொறுக்கிய விசயங்களை எடுத்துகொண்டு வந்து போட்டா போதும்! ஒ.கே ஆயிடும்! ( இப்படி பரீட்சை எழுதி பெத்த படிப்பு முடிச்சாச்சு!)

அப்படி ஒரு மீள் பதிவு நன்றி போட்டுக்கிறேன்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நன்றி சொல்லும் நேரம்!

நானாக நானிருந்த காலம் போய்,

வீணாகி போகாத காலமாக இந்த நாட்கள்;

வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்

ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்???

நகர்ந்து விட்டது நாட்கள்!

தகர்ந்து விட்டது ஆசை!

நகரும் நாட்களுக்கு நன்றி சொல்ல நினைக்காத மனம் தான்

எல்லோருக்கும் உண்டு.!

நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!

நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!

நகர்வு இருக்க வேண்டும்

நன்மை செய்யும் நகர்வாகவே..!

என் நகர்வு வரும் பயணிக்கு,

நலமாக அமையவேண்டும்!

நாளும் நல்லது சொல்வோம்

நாளும் நல்லது செய்வோம்

நாளும் நலமுடன் வாழ்வோம்!

நாளும் நல்லவராக வாழ்வோம்!

நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சரி ஒரு மாசம் இங்க குந்திக்கினு எழுதுன பரீட்சைக்கெல்லாம் ரிசல்ட் வந்தாத்தான் தெரியும் பாசா பெயிலான்னு!

சரி இங்க் அடிச்சுக்கிற நேரம் வந்துடுச்சு!

இது வரைக்கும் இந்த பக்கமே வராத சிங்கங்களெல்லாம் கொஞ்சம் வந்து நில்லுங்கப்பா!

நான் இங்க் அடிச்சுட்டு எஸ்கேப்பு ஆகுறேன்!


பதிவு போட்டே டென்ஷன் ஆகிட்டேன்!

முழுசா மூணு நாள் ரெஸ்ட் எடுத்தாத்தான் இனி உசுரு வாழமுடியும்!

42 comments:

  1. வ வா சங்கத்தினை கட்டுக்கோப்போடு வச்சிருந்தமைக்கு நன்றி ஆயில்ஸ் ;)

    ReplyDelete
  2. சூப்பரா இருந்துச்சு ஒரு மாசம்.... அடுத்தது யாருப்பா?

    ReplyDelete
  3. Vanthuttom anna.... EXcuse me for long absent oils...

    By the wayz it was a kalakkal awesome atlas maatham...

    ReplyDelete
  4. //நான் இங்க் அடிச்சுட்டு எஸ்கேப்பு ஆகுறேன்!//

    என்ன இது சின்னபுள்ளதனமா நம்ம ஊரு பேரை காப்பாத்தவேண்டாம்...விளையாட்டுக்கு என்றாலும் ஆசிட் அடிப்போம்.

    முதல் சிங்கம்: நாமக்கல் சிபி மேல்.

    ReplyDelete
  5. வளரே நன்னி..

    இந்த மாசம் புல்'லா கலக்கி எடுத்துட்டிங்க.... :))

    ReplyDelete
  6. படிக்காமல் விட்ட பதிவுகளே அதிகம் ஆயில்யன். மீண்டும் படித்தி விட்டுப் பின்னூட்டமிட்டுகிறேன்.

    ReplyDelete
  7. //கானா பிரபா said...
    வ வா சங்கத்தினை கட்டுக்கோப்போடு வச்சிருந்தமைக்கு நன்றி ஆயில்ஸ் ;)
    //

    நன்றி தல எல்லாம் உங்கள் ஊக்கமும் கூட ஒருவிதத்துல காரணம்தான் (ஆனா கடைசி வரைக்கும் நான் நினைச்சது நீங்க சொன்னது நடக்கல!)

    ReplyDelete
  8. //ச்சின்னப் பையன் said...
    சூப்பரா இருந்துச்சு ஒரு மாசம்.... அடுத்தது யாருப்பா?
    //


    நீங்க தான் தல நீங்கதான்!

    அசத்துங்க!

    ReplyDelete
  9. //தேவ் | Dev said...
    Vanthuttom anna.... EXcuse me for long absent oils...

    By the wayz it was a kalakkal awesome atlas maatham...
    //

    தேவ் அண்ணா நன்றி!

    நீங்க ரொம்ப லீவு எடுத்திட்டீங்க அதனால உடனே அடுத்தடுத்து ரெண்டு படம் சங்கம் புரொடெக்ஷன்ல வெளியீடு செஞ்சே ஆகணும்!

    ReplyDelete
  10. //குசும்பன் said...
    //நான் இங்க் அடிச்சுட்டு எஸ்கேப்பு ஆகுறேன்!//

    என்ன இது சின்னபுள்ளதனமா நம்ம ஊரு பேரை காப்பாத்தவேண்டாம்...விளையாட்டுக்கு என்றாலும் ஆசிட் அடிப்போம்.

    முதல் சிங்கம்: நாமக்கல் சிபி மேல்.
    ///

    நண்பா என் நண்பா தல மேல இம்புட்டு கோவம் உனக்கு!

    ReplyDelete
  11. //இராம்/Raam said...
    வளரே நன்னி..

    இந்த மாசம் புல்'லா கலக்கி எடுத்துட்டிங்க.... :))
    //

    நொம்ப நன்னி ராயலு!

    ReplyDelete
  12. /வல்லிசிம்ஹன் said...
    படிக்காமல் விட்ட பதிவுகளே அதிகம் ஆயில்யன். மீண்டும் படித்தி விட்டுப் பின்னூட்டமிட்டுகிறேன்.
    //


    மிக்க மகிழ்ச்சிம்மா! :)))

    ReplyDelete
  13. hfduifhnsdlfhosdiudfnsd,fhsaouhqnsaklsqhkwfuo3rmnsafouwqpujwqdsflkr7210874u2347397hdfhdfw

    ReplyDelete
  14. ஒரு மாசம் கலங்கிடுச்சு...

    ReplyDelete
  15. கிளைமாக்ஸ் சூப்பர் தல...

    ReplyDelete
  16. \
    முழுசா மூணு நாள் ரெஸ்ட் எடுத்தாத்தான் இனி உசுரு வாழமுடியும்!
    \

    அது சரி ரமழான் தானே இனி ஒரு மாசத்துக்கு தூங்கலாம்...:)

    ReplyDelete
  17. எலேய்.. நீ எடுக்கற பார்டர் மார்க்குக்கு 30 பக்கம் கூட எழுதலாம் :)

    ReplyDelete
  18. //ஊரை விட்டு ஓடிப்போகலாமா? - தனியாத்தான்:-(
    //

    ஸ்மைலிய உங்களைப்பார்த்து போட்டுக்கிட்டீங்களா :)

    ReplyDelete
  19. //எழுத வேண்டியதெல்லாம் எழுதி விட்டு பராக்கு பார்த்து கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த கடைசி ஒரு மணி நேரமும் அப்படியே மனசுல உற்சாகம் பீறிட்டுக்கொண்டிருக்கும்!
    //

    ஏன் முன்னாடி உக்கார்ந்திருந்த பையன் நல்லா படிக்கறவனோ :)

    ReplyDelete
  20. //நாளையிலேர்ந்து லீவு ஜாலி எங்க போகலாம்?
    //

    வாயேன் சார்ஜாவுக்கு... பொழுது போகும் :)

    ReplyDelete
  21. //இப்படியாக பல நினைப்புக்கள் ஒரு பத்து நிமிஷத்திற்குள் வந்து ஆளை புரட்டி சந்தோஷக்கடலில் ஆழ்த்தி விட்டுச்செல்லும் சமயத்தில் தான் அது தோணும்!//

    ஏன் இந்த கஞ்சத்தனம்.. எக்ஸ்ட்ராவா ஒரு 20 நிமிசம் யோசிச்சா என்ன :)

    ReplyDelete
  22. //குசும்பன் said...
    //நான் இங்க் அடிச்சுட்டு எஸ்கேப்பு ஆகுறேன்!//

    என்ன இது சின்னபுள்ளதனமா நம்ம ஊரு பேரை காப்பாத்தவேண்டாம்...விளையாட்டுக்கு என்றாலும் ஆசிட் அடிப்போம்.
    //

    எங்க ஊர்ல எல்லோரும் சேர்ந்து தண்ணி அடிப்போம் :)

    ReplyDelete
  23. //சரி இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கே சும்மா ஒரு அடிஷனல் பேப்பர் வாங்கி எழுதுனா என்ன? என்று நினைத்து பேப்பர் வாங்கிய பிறகுதான் ஆமாம் என்ன எழுதுறது என்று நினைக்கதோணும்!//


    நாங்கல்லாம் கொஸ்டின் பேப்பர்லயே கவுஜ எழுதற பார்ட்டி :)

    அடிசனல் பேப்பர்ல கதையே எழுதி வூட்டுக்கு மடிச்சு எடுத்துட்டு வந்துடுவோம் :))

    ReplyDelete
  24. //அப்படின்னு மெயின் பேப்பர்ல இருக்கற விஷயங்களை ஆங்காங்கே பொறுக்கி எடுத்து சாய்ஸ் கொஸ்டீன் எழுதி (சிவுப்பு இங்க்ல அண்டர்லைன் பண்ணனும்!) அதுக்கு பொறுக்கிய விசயங்களை எடுத்துகொண்டு வந்து போட்டா போதும்! //

    நான் கூட மொதோ ரெண்டு பக்கத்துக்கு என்ன எழுதறதுன்னு தெரியாம நெறைய்ய நேரம் கொஸ்டின் பேப்பரையே எழுதி வைச்சிடுவேன் :)

    ReplyDelete
  25. //வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்

    ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்???//

    இனி மாவீரன் மெக் டவல், திறனாளன் நெப்போலியன் வரிசையில் ஓல்டு மாங்கு ரம்முக்கு உன் பெயரை ரெக்கமண்டு செய்கிறேன். வரலாறுல இடம் புடிக்கறது சாதாரணமில்ல... நொம்ப கஷ்டப்படணுமாக்கும் :)

    ReplyDelete
  26. //நகர்ந்து விட்டது நாட்கள்!

    தகர்ந்து விட்டது ஆசை!//

    ஆஹா கவுஜ...கவுஜா :))

    ReplyDelete
  27. //கானா பிரபா said...
    வ வா சங்கத்தினை கட்டுக்கோப்போடு வச்சிருந்தமைக்கு நன்றி ஆயில்ஸ் ;)
    //

    என்னது கட்டுக்கோப்பா..! பேண்ட் போட்டு பெல்ட் மாட்டுறத சொல்றீங்களாண்ணே :)

    ReplyDelete
  28. //நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!

    நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!//

    கடிகாரத்துல‌ பேட்டரி தீர்ந்தது தெரியாம யோசிச்சுட்டு உக்கார்ந்திருந்தா இப்படித்தான் எழுத தோணும்.

    ReplyDelete
  29. //இராம்/Raam said...
    வளரே நன்னி..

    இந்த மாசம் புல்'லா கலக்கி எடுத்துட்டிங்க.... :))
    //

    ஹி..ஹி.. நான் கூட அதையேத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன் ராமு..! என்னா மிக்சிங்க் இல்லாம ராவாவே அடிச்சுருக்கலாமோன்னு இப்ப தோணுது :)

    ReplyDelete
  30. //நகர்வு இருக்க வேண்டும்

    நன்மை செய்யும் நகர்வாகவே..!//

    பஸ் இருக்குது.. கார் இருக்குது.. இல்லைன்னா பைக், சைக்கிள் கூட இருக்குது.. நீ மொதல்ல நடந்து வந்து எடுத்துக்குங்க அண்ணா :)

    ReplyDelete
  31. //சரி ஒரு மாசம் இங்க குந்திக்கினு எழுதுன பரீட்சைக்கெல்லாம் ரிசல்ட் வந்தாத்தான் தெரியும் பாசா பெயிலான்னு! //

    ஓ.. இங்க இதையெல்லாம் சொல்வாங்களா :)

    ReplyDelete
  32. //நான் இங்க் அடிச்சுட்டு எஸ்கேப்பு ஆகுறேன்!//

    சிங்கமெல்லாம் சட்டையே போடாம வந்திருக்குது போல :) இங்குக்கு பயந்து

    ReplyDelete
  33. /சென்ஷி said...
    //நாளையிலேர்ந்து லீவு ஜாலி எங்க போகலாம்?
    //

    வாயேன் சார்ஜாவுக்கு... பொழுது போகும் :)
    /

    கண்டிப்பா வரும் நாள் வரும்!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)