Tuesday, August 5, 2008

லவ்வு பண்ண பிளானிங்!


1. புரிஞ்சுக்கணும் நாம என்ன பண்ண போறோம்ங்கறதை முதல்ல புரிஞ்சுக்கணும்! யாரு? என்ன? ஏன்? எங்கே அப்படின்னுல்லாம் கொஞ்சமாச்சும் உத்தேசமா தெரிஞ்சு வைச்சுக்கணும்ல!

2.லொக்கேஷனை முதல்ல லொக்கேட் பண்ணனும், வீட்ல தூரமா இருக்கணும், ஆனாலும் டக்குன்னு போகற மாதிரியான ரூட்டா இருக்கணும்! ஒரே டைம்ல 2 அல்லது 3 பார்க்கணுமா அல்லது 1 போதுமான்னும் ஆரம்பத்திலேயே கிளியர் பண்ணிக்கணும்! சாய்ஸ் ரெடி பண்ணிக்கிட்டு டிரைப்பண்றது பெட்டர்ப்பா! - நான் சொல்றது முதல் கட்ட நடவடிக்கையில மட்டும்தான் ஒ.கே!

3. டீமை ரெடி பண்ணனும் இதுதான் "S"க்கு வழிவகுக்கும் (சூப்பராகவும் சரி,எஸ்ஸாகவும் சரி!). டீம்ல நல்ல ப்ரெண்டுகளா இருக்கணும் அடி விழும்ன்னு தெரிஞ்சா எஸ்கேப்பு ஆகுறவனுங்களா இருக்கக்கூடாது,எதிர்த்து நிக்கிற மாதிரியான ஆளுங்களா இருந்தாத்தான் நாமளால ஏரியாவை ரவுண்ட் வரமுடியும்! எக்ஸ்ட்ரா ஸ்ட்ரங்த்துக்கு லோக்கல் பார்ட்டீகளை கரெட் பண்ணிக்கணும்! டீக்கடை, பொட்டிக்கடை, சலூன் இது மாதிரி இடங்கள்ல ப்ரெண்ட்ஷிப் நல்லா டெவல்ப் பண்ணி வைச்சுக்கோணும்!

4.அப்புறம் என்ன ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்! அவுங்கவுங்க பொருளாதாரத்துக்கு ஏத்தமாதிரி சைக்கிள்லேர்ந்து - கார் வரைக்கும் வைச்சுக்கலாம் (பட் கார் வைச்சுக்கிட்ட்டா நிறைய பிரச்சனைகள் இருக்குங்க! முக்கியமா கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்க முடியாதுங்க!?) சைக்கிள்லன்னா பிரச்சனையே இல்ல பிகரை கிராஸ் பண்ணி போனாக்கூடாது திரும்ப யூ டர்ன் போட்டு வரலாம்! அப்புறம் பிகரு வர நேரமாச்சுன்னா சைக்கிளை தெருவில வைச்சுக்கிட்டு பெல் ரிப்பேர் பண்ணலாம் - ஸ்டாண்ட சரி பண்ணலாம்! இப்படி பல மெயிண்டனஸ் வேலைகளை பார்த்துடலாம் அந்த டைமிங்க்ல!

5.சரி இப்படியேவா போய்க்கிட்டிருக்கறது? அப்பப்பா நாம ப்ராக்ரஸ் செக் பண்ணி பார்க்கணும் நாம பிளான் பண்ண மாதிரிதான் போய்க்கிட்டிருக்கா இல்லை, பிளான் ஒரு மாதிரியும் ப்ராக்டிகலா வேற மாதிரியும் போய்க்கிட்டிருக்கான்னு செக் பண்ணனும்! இதுக்கு நம்ம டீம் ஆளுங்க அம்புட்டு பேரையும் கூப்பிட்டு வைச்சுக்கிட்டு, தம் டீயெல்லாம் அடிச்சுக்கிட்டே பேசினா நல்லா இருக்கும்! வேற மாதிரி மீட் எல்லாம் இந்த டைம்ல டிரைப்பண்ணக்கூடாது! டிரைப்பண்ணுனா...? அவ்ளோதான் சந்தி சிரிக்கும்!

6.எதாச்சும் சாதகமான புராகிரஸ் இருக்கான்னு செக் பண்ணியதுக்கப்புறம் சரி ஒ.கே கரெக்ட் ரூட்லதான் போய்க்கிட்டிருக்கோம்ன்னு கன்பார்ம் பண்ணிக்கணும் அதுக்கு அடுத்த ஸ்டெப்பு....!


அட...! அடுத்த ஸ்டெப்புன்னாலே முன்னேற்றம் தானே இன்னிக்கு இத்தோட நிப்பாட்டிக்குவோம்! கம்பெனி மூடற டைம் ஆகிடுச்சுல்ல!


(சப்ஜெக்டை வைச்சு இதுவரைக்கும் ஒரு பதிவு கூட போடலையேடா ஆயில்யா அப்படின்னு பட்ட குறையெல்லாம் இன்னியோட தீந்துச்சுப்பா!)

29 comments:

  1. இந்த ஐடியா எல்லாம் வச்சிக்கிட்டு அந்த ஊருல இருந்து என்ன பண்ண ?? :)

    ReplyDelete
  2. daily ithumathri sonna paravaillai
    nanringa anna.vera idea irunthalum
    pathivula podunga

    ReplyDelete
  3. என்னங்க நடக்குது இங்க ? எதப்பத்திச் சொல்றீங்க ?

    ReplyDelete
  4. இந்த ஐடியா எல்லாம் வச்சிக்கிட்டு அந்த ஊருல இருந்து என்ன பண்ண ?? :)

    athane?!!! :)

    ReplyDelete
  5. என்ன நடக்குது இவ்வட?


    ம்ம்ம்ம்

    கதகளி...மல மல மலே மலே

    ReplyDelete
  6. நல்ல பிளானிங் தான், ஆனா எத்தனையாவது முறை?

    பி.கு. இந்த போஸ்ட்டுக்கு இந்த சொத்தை பிகரா கிடைச்சுது, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாது?

    ReplyDelete
  7. //விஜய் ஆனந்த் said...
    :-)))).....
    //

    எனக்கென்னமோ சிரிப்பா சிரிக்கப்போறடா ராசன்னு சொல்லுற மாதிரி இருக்கு அப்படியெல்லாம் இல்லதானே????

    :)))))))

    ReplyDelete
  8. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இந்த ஐடியா எல்லாம் வச்சிக்கிட்டு அந்த ஊருல இருந்து என்ன பண்ண ?? :)
    //

    ஆமாம் அக்கா பிரயோசனமில்லதான்
    :(

    ReplyDelete
  9. //நிஜமா நல்லவன் said...
    ஹா..ஹா..ஹா...ஹா..ஹா..
    //

    :)

    ReplyDelete
  10. //mumu said...
    daily ithumathri sonna paravaillai
    nanringa anna.vera idea irunthalum
    pathivula podunga
    ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!

    ReplyDelete
  11. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    என்னங்க நடக்குது இங்க ? எதப்பத்திச் சொல்றீங்க ?
    //

    அண்ணே நீங்க இதையெல்லாம் கடந்து நொம்ப தூரம் போயீட்டீங்க! ஸோ உங்களுக்கு தேவைப்படாது! :)))))))

    ReplyDelete
  12. //புதுகைத் தென்றல் said...
    இந்த ஐடியா எல்லாம் வச்சிக்கிட்டு அந்த ஊருல இருந்து என்ன பண்ண ?? :)

    athane?!!! :)
    ///

    எம்மேல எவ்ளோ பாசம் அக்காக்களுக்கு!
    பாவம் தம்பி பிரயோசனமே இல்லாம இப்படி யோசிக்கிறானேன்னு எப்படி பீல் பண்றாங்க பாருங்க :))

    ReplyDelete
  13. //குசும்பன் said...
    என்ன நடக்குது இவ்வட?


    ம்ம்ம்ம்

    கதகளி...மல மல மலே மலே
    //

    நண்பா! இன்னுமுமா நீ இந்த மாதிரி டைட்டில் வைச்ச பதிவுகளுக்குள்ள எல்லாம் நுழைச்சு வர்றீக!

    ReplyDelete
  14. //கானா பிரபா said...
    நல்ல பிளானிங் தான், ஆனா எத்தனையாவது முறை?

    பி.கு. இந்த போஸ்ட்டுக்கு இந்த சொத்தை பிகரா கிடைச்சுது, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாது?

    //

    யாருக்கு???

    சொன்னாங்க நீங்க ஒரு மினி டேட்டா பேஸ்ன்னு நாந்தான் அலட்சியம் பண்ணிட்டேன் இனி கண்டிப்பா எதுனா ஃபிகரு போட்டோ வேணும்னா உங்களுக்குத்தான் பர்ஸ்ட் ரிக்வெஸ்ட்டு! :)))))))))))))))))))

    ReplyDelete
  15. ///முத்துலெட்சுமி-கயல்விழி said...

    இந்த ஐடியா எல்லாம் வச்சிக்கிட்டு அந்த ஊருல இருந்து என்ன பண்ண ?? :)///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  16. ///கானா பிரபா said...

    நல்ல பிளானிங் தான், ஆனா எத்தனையாவது முறை?

    பி.கு. இந்த போஸ்ட்டுக்கு இந்த சொத்தை பிகரா கிடைச்சுது, ///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  17. அண்ணா...உங்கள் சேவை நாட்டுக்கு தேவை :))

    ReplyDelete
  18. பையனோட ப்ரொஃபைல் போட்டோஸ் பாத்துட்டு இங்க வந்தா


    ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாம இருக்கே ?

    ReplyDelete
  19. /
    அப்புறம் என்ன ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்! அவுங்கவுங்க பொருளாதாரத்துக்கு ஏத்தமாதிரி சைக்கிள்லேர்ந்து - கார் வரைக்கும் வைச்சுக்கலாம் (பட் கார் வைச்சுக்கிட்ட்டா நிறைய பிரச்சனைகள் இருக்குங்க! முக்கியமா கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்க முடியாதுங்க!?) சைக்கிள்லன்னா பிரச்சனையே இல்ல பிகரை கிராஸ் பண்ணி போனாக்கூடாது திரும்ப யூ டர்ன் போட்டு வரலாம்! அப்புறம் பிகரு வர நேரமாச்சுன்னா சைக்கிளை தெருவில வைச்சுக்கிட்டு பெல் ரிப்பேர் பண்ணலாம் - ஸ்டாண்ட சரி பண்ணலாம்! இப்படி பல மெயிண்டனஸ் வேலைகளை பார்த்துடலாம் அந்த டைமிங்க்ல!
    /

    பதிவர் தமிழன் சார்பாக கடும் கண்டனங்கள்

    ReplyDelete
  20. /
    கானா பிரபா said...

    இந்த போஸ்ட்டுக்கு இந்த சொத்தை பிகரா கிடைச்சுது,
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  21. மங்களூர் சிவா said...
    /
    அப்புறம் என்ன ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான்! அவுங்கவுங்க பொருளாதாரத்துக்கு ஏத்தமாதிரி சைக்கிள்லேர்ந்து - கார் வரைக்கும் வைச்சுக்கலாம் (பட் கார் வைச்சுக்கிட்ட்டா நிறைய பிரச்சனைகள் இருக்குங்க! முக்கியமா கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்க முடியாதுங்க!?) சைக்கிள்லன்னா பிரச்சனையே இல்ல பிகரை கிராஸ் பண்ணி போனாக்கூடாது திரும்ப யூ டர்ன் போட்டு வரலாம்! அப்புறம் பிகரு வர நேரமாச்சுன்னா சைக்கிளை தெருவில வைச்சுக்கிட்டு பெல் ரிப்பேர் பண்ணலாம் - ஸ்டாண்ட சரி பண்ணலாம்! இப்படி பல மெயிண்டனஸ் வேலைகளை பார்த்துடலாம் அந்த டைமிங்க்ல!
    /

    பதிவர் தமிழன் சார்பாக கடும் கண்டனங்கள்
    \\\

    தல ஒரு முடிவாத்தான் இருக்காப்புல...:)

    ReplyDelete
  22. யாருப்பா அது இந்தப்பொண்ணு நல்ல கலர்தானே அப்பறம் ஏன் சொத்தைங்கிறாங்க...;)

    ReplyDelete
  23. hi, i like that youre story..
    very external exprience...for you
    keep-it-up machi...but you story
    i'm don't agree...pls
    but this gril i thing better than you take over machi..that's all.
    with love...
    cella_venkatesh
    singapore

    ReplyDelete
  24. அப்படியே அடி வாங்கினா எப்ப்டி தப்பிக்கிறதுன்னு ஒன்னு போடுங்கப்பு

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)