Saturday, April 26, 2008

பதிவர்கள் நடிக்கும் ரீமேக் படங்கள்


இப்பவெல்லாம், ரீமிக்ஸ், ரீமேக் யுகம். ஆளாளுக்கு மொக்கைப் படம் எடுப்பதை விட்டு விட்டு பழைய படத்தையே மைக்ரே வேவ் இல் சூடாக்கிக் கொடுக்கிறார்கள். அந்தவகையில் நம் அன்புக்குரிய பதிவர்கள் சிலர் படம் எடுத்தால் எப்படிப் பழைய படத்தலைப்புக்களைச் சுட்டு வைப்பார்கள் என்று சின்னக் கற்பனை. படத்தலைப்பு மட்டும் தான் மேட்டரே, அந்தப் படத்தை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதோ சில பதிவர்களும், அவர்களுக்குப் பொருத்தமான பழைய படத் தலைப்புக்களும்:

சிவிஆர் - எத்தனை கோணம் எத்தனை பார்வை (காமிராக் கோணங்களை அடிக்கடி மாற்றுவதால்)

வெட்டிப்பயல் - அம்மா நானா ஓ தமிழ அம்மாயி - Amma Naana O Tamila Ammai (தொடர்ந்து தெலுங்குப்பட மேட்டர் கொடுப்பதால்)

இளா - சங்கமம் அல்லது விவசாயி (இதற்கு விளக்கம் தேவையா)

இராம் - மதுரைக்காரத் தம்பி or மதுர (வைகைப்பதிவுக்காரர்) or பாய்ஸ் (வா வா சங்கத்துத் தூண்களில் ஒன்று)

ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி ( சராசரியாக ஒவ்வொரு நாளும் பதிவுத் தீனி கொடுப்பதால்)

ஜி.ராகவன் - ஜகன் மோகினி ( தங்க மரம் என்ற வெற்றிகரமான மர்மம் பிளஸ் மாயாஜாலத் தொடர் கொடுப்பதால்)

கொழுவி - நான் அவன் இல்லை ( ;-) விளக்கம் கிடையாது)

தல கோபி - எல்லாமே என் ராசா தான் ( ஆனந்த விகடனில் இருந்து பழைய பேப்பர் வரை இளையராஜா மேட்டர் தேடிப் படிப்பதால்)

கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு (விளக்கம் தேவையா?)

சயந்தன் - இது ஒரு தொடர்கதை ( நிறையத் தொடர்களைத் தன் வலைப்பதிவில் ஆரம்பித்து முதல் பாகத்தோடு அல்லது அறிமுகத்தோடு நிறுத்திக்கொண்டதால், கிட்டத்தட்ட ஐம்பது தொடர்கள் தேறும்)

சோமிதரன் என்கிற சோமி - வெள்ளித்திரை ( இயக்குனர் ஆகும் கனவுடன் கடந்த 20 வருஷமாக கோடம்பாக்கத்தை வளைய வருவதால்)

டிபிசிடி - புரியாத புதிர் ( புரியல தயவு செய்து விளக்கவும்)

வந்தியத்தேவன் - யாரடி நீ மோகினி ( கொழும்பில் ஊரடங்கு போட்டாலும் சலனமின்றி கொன்கோர்ட் சென்று நயன்தாராவின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதால்)

கண்ணபிரான் ரவிசங்கர் - கிருஷ்ண லீலை ( கிருஷ்ணபகவானின் ஜாதகத்தையே கையில் வைத்திருப்பவர்)

துர்கா - துர்கா ( இந்தப்படத்தில் அப்பாவிச் சிறுமியுடன் கூடவே நட்போடு நாய், குரங்கு எல்லாம் நடித்திருக்கும்)

.:: மை ஃபிரண்ட் ::. - Aata மற்றும் Chukkallo Chandrudu ( சித்து நடித்த இந்த இரண்டு தெலுங்குப்படங்களையும் ஜெயம் ரவி இன்னும் வாங்கல)

அமீரகப் பதிவர்கள் கூட்டு - பாலைவன ரோஜாக்கள்

44 comments:

  1. //நான் அவன் இல்லை ( ;-) விளக்கம் கிடையாது)//
    இது சூப்பரு..

    ReplyDelete
  2. அட இந்த மேட்டர் சூப்பரா இருக்கே.. :-))))

    ReplyDelete
  3. சி.வி.ஆர் - டிக் டிக் டிக் படத்தில் கூட நடிக்கலாம். :-)))) A fasion Photographer. :-)))

    ReplyDelete
  4. //வெட்டிப்பயல் - அம்மா நானா ஓ தமிழ அம்மாயி //

    வெட்டிண்ணே தெலுங்குலேயே நடிங்க.. சூப்பரா வரும்.. அப்புறம் அதை ரவி தமிழ்ல ரீமேக் பண்ணிடுவார். :-))))

    ReplyDelete
  5. //இளா - சங்கமம் அல்லது விவசாயி (இதற்கு விளக்கம் தேவையா)//

    இதுக்கு மறுப்பே இல்ல. :-)

    ReplyDelete
  6. //இராம் - மதுரைக்காரத் தம்பி//

    மதுர படத்துல கூட ஒரு கருப்பு கண்ணாடியை மாட்டிக்கிட்டு மார்கேட்ல வியாபாரம் பண்ணலாம்.. :-))

    ReplyDelete
  7. //ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி //

    இது நாட்டாமையோட படமாச்சே. :-)

    ReplyDelete
  8. //ஜி.ராகவன் - ஜகன் மோகினி //

    சிபியண்ணனைத்தான் கூப்பிடுறீங்களோன்னு நெனச்சேன். :-))

    ReplyDelete
  9. //தல கோபி - எல்லாமே என் ராசா தான் //

    ஆமாண்ணே.. போன வாரம் கூட சுஜாதாவை பற்றீய ஒரு பழைய ஆர்டிக்கல் தேடிக்கொடுத்தாரு.. டாங்க்ஸ். :-)

    ReplyDelete
  10. //கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு//

    இப்போ நாங்கெல்லாம் வேடந்தாங்கலாக்கும். :-)

    ReplyDelete
  11. //டிபிசிடி - புரியாத புதிர் //

    :-)))))))

    ReplyDelete
  12. ////சிவிஆர் - எத்தனை கோணம் எத்தனை பார்வை (காமிராக் கோணங்களை அடிக்கடி மாற்றுவதால்)//

    இப்ப
    புரொபைல்ல போட்டோவும் மாத்தா ஆரம்பிச்சிட்டாராம்ல :))

    ReplyDelete
  13. //இளா - சங்கமம் அல்லது விவசாயி (இதற்கு விளக்கம் தேவையா)
    //

    தேவையே இல்ல :)

    ReplyDelete
  14. //ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி ( சராசரியாக ஒவ்வொரு நாளும் பதிவுத் தீனி கொடுப்பதால்)///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

    ReplyDelete
  15. //தல கோபி - எல்லாமே என் ராசா தான் ( ஆனந்த விகடனில் இருந்து பழைய பேப்பர் வரை இளையராஜா மேட்டர் தேடிப் படிப்பதால்)/

    ரொம்ப நல்ல மனுசங்க:))))

    ReplyDelete
  16. //துர்கா - துர்கா ( இந்தப்படத்தில் அப்பாவிச் சிறுமியுடன் கூடவே நட்போடு நாய், குரங்கு எல்லாம் நடித்திருக்கும்)//

    கூடவே நடிக்கும் குரூப்பும் அப்பாவிகள்தானே...???

    ReplyDelete
  17. //.:: மை ஃபிரண்ட் ::. - Aata மற்றும் Chukkallo Chandrudu ( சித்து நடித்த இந்த இரண்டு தெலுங்குப்படங்களையும் ஜெயம் ரவி இன்னும் வாங்கல)//

    :))

    ReplyDelete
  18. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    //கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு//

    இப்போ நாங்கெல்லாம் வேடந்தாங்கலாக்கும். :-)
    //

    வாழ்க .:: மை ஃபிரண்ட் ::.

    நாங்க மாறிட்டோம் :))

    ReplyDelete
  19. தல

    எல்லோருக்கும் ஆப்பு அடிச்சிட்டு நீங்க மட்டும் எஸ்கேப்பா!!! ;))


    விரைவில் உங்க லீலைகளை எல்லாம் கலைஞர் டிவியில தொடர்கதையாக வரும் ;))

    ReplyDelete
  20. ஆஹா...பிரபா மாம்ஸ். கலக்கல் தான் போங்க:))))))))

    // கோபிநாத் said...

    தல

    எல்லோருக்கும் ஆப்பு அடிச்சிட்டு நீங்க மட்டும் எஸ்கேப்பா!!! ;))


    விரைவில் உங்க லீலைகளை எல்லாம் கலைஞர் டிவியில தொடர்கதையாக வரும் ;))//

    :))))))))

    ReplyDelete
  21. "சமீபத்தில் 1950-ல்" படம் எடுத்த என் பக்தனை விட்டு விட்டீர்களே.

    அன்புடன்,
    மகரநெடுங்குழைகாதன்,
    தென்திருப்பேரை,
    ஆழ்வார் திருநகரி போஸ்ட்.

    ReplyDelete
  22. ஏன் மை பிரன்ட் 10 பின்னூட்டங்களையும் தனித்தனியா எழுதுறா என அறிய ஆவல் :)

    ஏன் ஆயிலியன் 7 பின்னூட்டங்களையும் தனித்தனிய எழுதுறார் என அறிய ஆவல் :)

    ReplyDelete
  23. ஹா ஹா ஹா...
    வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறீக..
    நம்ம சிவிஆர் அண்ணாச்சி ஓகே..
    ஜிரா தான் உதைக்குது...அந்தப் பால் வடியுற முகத்துக்கு ஜகன் மோகினிங்குற பேய்ப்படமா...? பாவம்பா.. :P

    ReplyDelete
  24. சங்கத்து(சீறாத) சிங்கம் தம்பி: நாய்களும் பூனைகளும் இன்ன பிற புண்ணாக்குகளும்! (ஏன்னா இப்பல்லாம் அவர் எலக்கிய வியாதியாகிட்டருங்கோ)

    நாகை புலி: வருவேன் மீண்டும் வருவேன்!

    நாமக்கல் சிபி: அவள் ஒரு தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கதை!

    முத்துலெஷ்மி: தசாவதாரம் நானே!

    நிஜமா நல்லவன்: நிஜமா நல்லவன்


    இப்படி சொல்லிகிட்டே போகலாம் பிரபா! ஆனா கோபிக்கு சூப்பர்:-)))

    ReplyDelete
  25. //நாமக்கல் சிபி: அவள் ஒரு தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கதை!
    \\ சிபி அண்ணா அடிக்கடி காணாமல் போயிடுவார் அதனாலா மாயாவி

    அபி அப்பா உங்கள விட்டுட்டா இப்படி
    "அன்புள்ள அப்பா" இல்ல நீங்க

    ReplyDelete
  26. // சிவிஆர் - எத்தனை கோணம் எத்தனை பார்வை (காமிராக் கோணங்களை அடிக்கடி மாற்றுவதால்) //

    ஆகா..... காமிரா கவிஞருக்கு ஏத்த பேருதான்...

    // வெட்டிப்பயல் - அம்மா நானா ஓ தமிழ அம்மாயி - Amma Naana O Tamila Ammai (தொடர்ந்து தெலுங்குப்பட மேட்டர் கொடுப்பதால்) //

    ஆட்டாடிஸ்தா-ன்னு இப்ப ஒரு படம் வந்துருக்கு. அதுவும் பொருத்தமாவே இருக்கும்.

    // இளா - சங்கமம் அல்லது விவசாயி (இதற்கு விளக்கம் தேவையா) //

    ரெண்டுமே பொருத்தம்....

    // இராம் - மதுரைக்காரத் தம்பி or மதுர (வைகைப்பதிவுக்காரர்) or பாய்ஸ் (வா வா சங்கத்துத் தூண்களில் ஒன்று) //

    மதுரை வீரன் கூடப் பொருத்தமா இருக்குமே ;)

    // ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி ( சராசரியாக ஒவ்வொரு நாளும் பதிவுத் தீனி கொடுப்பதால்) //

    பெர்பெக்ட்டோ

    // ஜி.ராகவன் - ஜகன் மோகினி ( தங்க மரம் என்ற வெற்றிகரமான மர்மம் பிளஸ் மாயாஜாலத் தொடர் கொடுப்பதால்) //

    வெற்றிகரமானங்குறது எல்லாம் டூ மச்சு. :)

    // கொழுவி - நான் அவன் இல்லை ( ;-) விளக்கம் கிடையாது) //

    விளக்க முடியாதுங்குறீங்களா? :)

    // தல கோபி - எல்லாமே என் ராசா தான் ( ஆனந்த விகடனில் இருந்து பழைய பேப்பர் வரை இளையராஜா மேட்டர் தேடிப் படிப்பதால்) //

    ராசாவின் மனசிலே
    ராசா ராசாதான்
    இந்தப் படங்களும் ஆகுமான்னு பாருங்க

    // கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு (விளக்கம் தேவையா?) //

    இதுக்கே கும்மிகள் நெறையுமே :)


    // கண்ணபிரான் ரவிசங்கர் - கிருஷ்ண லீலை ( கிருஷ்ணபகவானின் ஜாதகத்தையே கையில் வைத்திருப்பவர்) //

    திருமால் பெருமை - மாலுக்கே மால் வெட்டும் திறமையுள்ளவர்
    திருமலைத் தெய்வம் - திருப்பதியில் முக்கால் மணிநேரம் சாமி கும்பிட்ட பெருமைக்குரிய ஒரே ஆள்
    சுப்ரபாதம் - இதுக்கு ஒரு வலைப்பூவே ஆரம்பிச்சாரே...நாங்கூட அங்க போய் சண்டையெல்லாம் போட்டிருக்கேன்
    வா கண்ணா வா - இவரு கூப்டா கண்ணனே வருவாருல்ல...

    // துர்கா - துர்கா ( இந்தப்படத்தில் அப்பாவிச் சிறுமியுடன் கூடவே நட்போடு நாய், குரங்கு எல்லாம் நடித்திருக்கும்) //

    அப்ப நாய் யாரு? குரங்கு யாரு? தெளிவா புரியுறாப்புல சொல்லுங்க..

    //.:: மை ஃபிரண்ட் ::. - Aata மற்றும் Chukkallo Chandrudu ( சித்து நடித்த இந்த இரண்டு தெலுங்குப்படங்களையும் ஜெயம் ரவி இன்னும் வாங்கல) //

    ஹி ஹி ரொம்பச் சரியாச் சொன்னீங்க...

    // அமீரகப் பதிவர்கள் கூட்டு - பாலைவன ரோஜாக்கள் //

    பாலைவனப் பறவைகளும் பொருத்தமாவெ இருக்கும்.

    ReplyDelete
  27. ஏம்ப்பா நான் படம் எடுக்கக்கூடாதா?
    என்னை மறந்ததேன்?:-))))

    'யானை வளர்த்த வானம்பாடி'
    'கஜேந்திரா'

    ReplyDelete
  28. ///ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி ( சராசரியாக ஒவ்வொரு நாளும் பதிவுத் தீனி கொடுப்பதால்)///


    ஹா..ஹா..
    ஆயில் அண்ணே நீங்க தினமும் பதிவு போடுறத கண்டுக்கிறாங்க ஆனா அங்க வந்து பின்னூட்டம் மட்டும் போட மாட்டேங்கிறாங்க! என்ன கொடும கானா அண்ணா?

    ReplyDelete
  29. ///அபி அப்பா said...
    நிஜமா நல்லவன்: நிஜமா நல்லவன்//



    இதுக்கு நான் நன்றி சொல்ல வரலைன்னு சொல்லல.


    ///இப்படி சொல்லிகிட்டே போகலாம் பிரபா! ஆனா கோபிக்கு சூப்பர்:-)))//


    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  30. ///துர்கா - துர்கா ( இந்தப்படத்தில் அப்பாவிச் சிறுமியுடன் கூடவே நட்போடு நாய், குரங்கு எல்லாம் நடித்திருக்கும்)///


    எல்லாமே நடிப்பு தானா?

    ReplyDelete
  31. ///.:: மை ஃபிரண்ட் ::. said...
    //கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு//

    இப்போ நாங்கெல்லாம் வேடந்தாங்கலாக்கும். :-)///


    ஆமா ஆமா மாறிட்டோம். ஆனா வருஷத்துக்கு ஒரு தடவ தான் அங்க போவோம்:)

    ReplyDelete
  32. ////கோபிநாத் said...
    தல

    எல்லோருக்கும் ஆப்பு அடிச்சிட்டு நீங்க மட்டும் எஸ்கேப்பா!!! ;))


    விரைவில் உங்க லீலைகளை எல்லாம் கலைஞர் டிவியில தொடர்கதையாக வரும் ;))///


    டைரக்க்ஷன் அபி அப்பான்னு நான் வெளியில யார் கிட்டயும் சொல்லல ராசா!!!!

    ReplyDelete
  33. இளா, மைபிரண்ட்,ஆயில்யன் வாங்க

    சிவிஆருக்கு டிக் டிக் டிக், ராஜபார்வையும் பொருத்தமே

    //கூடவே நடிக்கும் குரூப்பும் அப்பாவிகள்தானே...???//

    அதை அப்பாவிச் சிறுமி தான் தீர்மானிக்கணும்

    //கோபிநாத் said...
    தல

    எல்லோருக்கும் ஆப்பு அடிச்சிட்டு நீங்க மட்டும் எஸ்கேப்பா!!! ;))//

    மன்னிச்சுக்குங்க தல, என் கடமையத் தானே செஞ்சேன் ;-)

    //ரசிகன் said...
    ஆஹா...பிரபா மாம்ஸ். கலக்கல் தான் போங்க:))))))))//

    ரசிகன்

    நீங்க கூட ரசிகன் டைட்டிலில் நடிக்கலாம் ;-)

    ReplyDelete
  34. சற்று வித்தியசமான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. அதிலே குமரி முத்து வேசம் கட்டச் சொல்லாம, ரகுவரன் வேசம் என்றால் நமக்கு ஓக்கேங்கண்ணா... :P

    //
    டிபிசிடி - புரியாத புதிர் ( புரியல தயவு

    செய்து விளக்கவும்)

    //

    ReplyDelete
  36. //ரசிகன்

    நீங்க கூட ரசிகன் டைட்டிலில் நடிக்கலாம் ;-)

    //

    ஹிஹி.. ஜோடியா நடிக்க இலியானாவும்,பாவனாவும் வந்தா நமக்கு ஆட்சேபனை ஏதும் இல்லைங்கோ மாம்ஸ்:P

    ReplyDelete
  37. ////ரசிகன் said...
    //ரசிகன்

    நீங்க கூட ரசிகன் டைட்டிலில் நடிக்கலாம் ;-)

    //

    ஹிஹி.. ஜோடியா நடிக்க இலியானாவும்,பாவனாவும் வந்தா நமக்கு ஆட்சேபனை ஏதும் இல்லைங்கோ மாம்ஸ்:P/////


    மாம்ஸ் அங்க ரெண்டு இங்க ரெண்டா? என்ன கொடும மாமோய்?

    ReplyDelete
  38. //வந்தியத்தேவன் - யாரடி நீ மோகினி ( கொழும்பில் ஊரடங்கு போட்டாலும் சலனமின்றி கொன்கோர்ட் சென்று நயன்தாராவின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதால்)//

    எனக்கு ஜோடி யார் நயந்தாராவா அசினா? நானும் யாரடி நீ மோகினி தனுஷ் போல் ஐடியில் ஆணி பிடுங்குபவன் தான்.

    ReplyDelete
  39. //ஏன் மை பிரன்ட் 10 பின்னூட்டங்களையும் தனித்தனியா எழுதுறா என அறிய ஆவல் :)

    ஏன் ஆயிலியன் 7 பின்னூட்டங்களையும் தனித்தனிய எழுதுறார் என அறிய ஆவல் :)//

    இன்னிக்கு நேத்தா நடக்குது...பிளாக் வாழ்க்கைல இது எல்லாம் சாதாரணம் பாஸ்... :-)

    ReplyDelete
  40. //கொழுவி said...

    ஏன் மை பிரன்ட் 10 பின்னூட்டங்களையும் தனித்தனியா எழுதுறா என அறிய ஆவல் :)

    ஏன் ஆயிலியன் 7 பின்னூட்டங்களையும் தனித்தனிய எழுதுறார் என அறிய ஆவல் :)//

    விரைவாக 40 பின்னூட்டத்தைப் போட்டு வெற்றிகரமாக பின் பக்கத்து அடித்துவிரட்டும் உபாயம்தான். இதுபுரியேல்லையா..? :)

    ReplyDelete
  41. அடப் பாவிங்களா...விடுமுறை போய் வரத்துக்குள்ளாற இப்படி எல்லாம் ரீமேக் மில்க்ஷேக் ன்னு கொடுக்கறீங்களா அண்ணாச்சி?

    ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி தான் சூப்பரு! அதுக்கு ஹீரோயினி யாரு? ஆயில்யன் கவனிக்கனும்-ல :-)

    //ஜிரா தான் உதைக்குது...அந்தப் பால் வடியுற முகத்துக்கு ஜகன் மோகினிங்குற பேய்ப்படமா...? பாவம்பா.. :P
    //

    ஏம்பா ரிஷானு! எங்க ஜிரா அண்ணாச்சி மேல ஏம்ப்பா உனக்குக் கோபம்?
    ஜிரா அதுல வர ஜெயமாலினி டான்ஸுக்கே படத்துக்கு டபுள் ஓக்கே சொல்வாரு! அத வந்து கெடுக்குறியே? நியாயமா? :-))

    ReplyDelete
  42. //விரைவில் உங்க லீலைகளை எல்லாம் கலைஞர் டிவியில தொடர்கதையாக வரும் ;))//

    மாப்பி கோபி...
    இப்படி எல்லாம் மொட்டையாச் சொன்னா எப்படி? சீரியல் பேரைச் சொல்லுங்க!
    காபி வித் கானா
    கானாஸ்பதி...
    கானாவின் மனசுலே
    இப்பிடி ஏதாச்சும் சொல்லுங்க மாப்பி!

    ReplyDelete
  43. //கண்ணபிரான் ரவிசங்கர் - கிருஷ்ண லீலை (கிருஷ்ண பகவானின் ஜாதகத்தையே கையில் வைத்திருப்பவர்) //

    ஆகா...மீ ஹாவிங் ஒன்லி கோபிகாஸ் ஜாதகம்! அதுவும் ஆல் கம்ப்யூட்டரைஸ்டு ஜாதகம்!

    //மாலுக்கே மால் வெட்டும் திறமையுள்ளவர//

    ஹிஹி! எங்க ஜிரா அண்ணாச்சி தான் என்னைய சரியா புரிஞ்சி வச்சிருக்காரு! :-)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)