Friday, March 7, 2008

வயசு ரெண்டாச்சு - பிரம்ம ரசங்களை ஓட விடும் போட்டி - அறிவிப்பு

வணக்கம் மக்கா. வர்ற ஏப்ரல் மாசத்தோட நம்ம சங்கத்துக்கு வயசு ரெண்டாகுது. நாலு கால்ல தவழ்ந்துக்கிட்டு இருந்த குழந்தை இப்போ பல்லு முளைச்சு எந்திரிச்சு நிக்குது. சுத்தி நிக்கிறவங்களைப் பாத்து அழகாச் சிரிக்குது, ரொம்ப சந்தோஷமாயிடுச்சுன்னா ஒரு குதியாட்டமும் போடுது. ரெண்டு வருஷமா ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தையோட வளர்ச்சிக்குக் காரணமா இருக்கறது சங்கத்துக்கு ஆதரவு கொடுத்துட்டு இருக்கற நீங்க எல்லாரும் தான். சங்கத்தோட ரெண்டாவது பிறந்தநாளை உங்க எல்லாரோடயும் கொண்டாடலாம்னு ஏற்பாடு. எப்படி? ஒரு இருபது-இருபத்தஞ்சு வயசு பையனா இருந்தா ரோட்டுல பீரை நீரா ஓட விட்டு குளிச்சு, தெளிச்சு, நனைச்சு கொண்டாடலாம். ஆனா நம்ம சங்கம் ரெண்டு வயசு குழந்தை இல்லையா? அதனால தமிழ் வலைப்பூவுலகத்துல சங்கத்தோட இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரம்ம ரசங்களை ஓட விட வைக்கலாம்னு ஒரு ஐடியா.



சரி...அது என்ன பிரம்ம ரசம்? வெளக்கறேன்...ஆனா வெளக்கனதுக்கு அப்புறம் வெளக்கமாத்தால அடிக்க வரப்பிடாது...சரியா? பிரம்மா - யாரு?...படைப்புக் கடவுள் இல்லையா? படைப்புன்னா creation - creativityன்னு சொல்லலாமா? ரசம்ன்னா ஜூஸ்...அதாவது உங்க கிரியேட்டிவ் ஜூஸ்களை ஓட வைக்க ஒரு போட்டி. ஜூஸ்களை ஓட விடற போட்டின்னாலும் ரூல்ஸ் இல்லாமலா? இந்தா கீழே இருக்குப் பாருங்க...

ரூல்ஸ்...
1. ஒரு படத்தை(ஃபோட்டோ, இமேஜ்) எடுத்துக்கனும். இந்தப் படம் உங்க சொந்தப் படமா இருந்தா ரொம்ப நல்லது.
2. நீங்கப் போட்டியில உபயோகிக்கிற படம் வேற எங்கேருந்தாவது எடுத்தீங்கன்னா, அனுமதி வாங்கிக்கிட்டு பயன்படுத்துங்க.
3. அதுக்கப்புறம் உங்க பிரம்ம ரசங்களைக் கரை புரள ஓட விட்டு, அந்தப் படத்துக்குப் பொருத்தமா சின்னதா ஒரு துணுக்கோ, இல்லை அந்தப் படத்துல இருக்கறவங்க பேசிக்கிற மாதிரி ஒரு வசனமோ எழுதனும்.
4. நீங்க எழுதற துணுக்கு, வசனம் எப்படி இருக்கனும்னு தெரியுமில்லே? சங்கத்துல எப்படி இருக்கனும்னு எதிர்பார்ப்போம்? காமெடி தூக்கலா இருக்கனும்...அம்புட்டுத் தான்.
5. படத்துக்குப் பொருத்தமா நீங்க எழுதியிருக்கற துணுக்கு/ஜோக்/வசனம் இதை நீங்க தேர்ந்தெடுத்த படத்தோட சேர்த்து உங்க வலைப்பூவுல ஒரு பதிவாப் போட்டுக்கங்க.
6. அப்புறம் இந்தப் பதிவுல பின்னூட்டப் பகுதியில உங்கப் பதிவோடச் சுட்டியைக் கொடுத்துடுங்க. சுட்டியைப் பின்னூட்டமா கொடுத்தா மட்டும் தான் உங்கப் படத்தை ஆட்டையில சேத்துப்போம். சரியா?

போட்டி தொடங்கும் நாள் - இன்னைக்கே...இப்பவே
போட்டி முடியற நாள் - மார்ச் 31, 2008(அதுக்குள்ளாற ஒங்கப் படங்களைப் பதிவாப் போட்டு பின்னூட்டமா இங்கன தெரிவிச்சிடுங்க)
முடிவுகள் வெளியிடப்படும் நாள் - ஏப்ரல் 10, 2008

நடுவர்கள் : 'வலையுலகக் குத்தூசி' லக்கிலுக் மற்றும் 'சிரிப்பானந்தா' டுபுக்கு

பரிசுகள் : மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 10,000. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயரில் அவர்கள் பரிசு பெறும் தொகையினை ஒரு தொண்டு நிறுவனத்துக்குச் செலுத்திடுவோம். உங்கப் பெயரில் செலுத்தப்பட்டத் தொகைக்குண்டான ரசீதை உங்க முகவரிக்கு அனுப்பி வச்சிருவோம்.

அப்புறம் என்ன மக்கா? எல்லாம் ஓகே தானே? பட்டித் தொட்டியெல்லாம் உங்கள் பிரம்ம ரசங்கள் காட்டாறு வெள்ளம் போல கரை புரண்டு ஓடட்டும்...

போட்டியில் உள்ள பதிவுகள்
1. பேபி பவன்
2. கிரிக்கெட் ரசிகன்
3. வீரசுந்தர்
4. சத்யா
5. ஆயில்யன்
6. அம்பி
7. ஆயில்யன்
8. ச்சின்னப் பையன்

28 comments:

  1. சூப்பரு!

    போட்டிக்கான படங்களை பார்க்க ஆவலுடன் வெயிட்டிங்!!! B-)

    சங்கத்தின் இரண்டாவது பிறந்த நாள் விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :-D

    ReplyDelete
  2. வ. வா. சங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    போட்டிக்கு தயார் ஆக வேண்டியது தான் அடுத்த வேலை.

    ReplyDelete
  3. 2 வயது பிறந்தநால் வாழ்துக்கள்..
    .. ஜமாய்ங்க

    ReplyDelete
  4. Happy Birthday Celebrations Sangam Boys and Girls!
    Superuuu potti thala!

    //நீங்கப் போட்டியில உபயோகிக்கிற படம் வேற எங்கேருந்தாவது எடுத்தீங்கன்னா, அனுமதி வாங்கிக்கிட்டு பயன்படுத்துங்க//

    கைப்புள்ள கங்கைக் கரைல எடுத்த ஃபோட்டோவைப் பயன்படுத்தனும்! அனுமதி கொடுங்க தல! :-))
    ஹிஹி! எப்பமே மொத தேங்கா கைப்"புள்ளையாருக்கு" தான்!
    சரி தானே மக்களே?

    ReplyDelete
  5. போட்டிக்கு நான் தான் 1ஸ்டேய்ய்ய்ய்ய்...

    http://kuttiescorner.blogspot.com/2008/03/blog-post_07.html

    ReplyDelete
  6. கேஆர்எஸ்

    அந்தப் படம்தான் எனக்கும் வேணும்!! பேசாம அந்த படத்தையே எல்லாரும் பயன்படுத்த வேண்டும் அப்படின்னு ஒரு ரூல் போடலாமா? :))

    ReplyDelete
  7. மறந்துட்டேனே!! வாழ்த்துகள் சிங்கங்களா!!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
  9. சங்கத்தின் இரண்டாவது பிறந்த நாள் விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  10. //கைப்புள்ள கங்கைக் கரைல எடுத்த ஃபோட்டோவைப் பயன்படுத்தனும்! அனுமதி கொடுங்க தல! :-))//

    நோ...நோ...நோ...இட் இஸ் ரிஜிட்டட். ஏற்கனவே ஏகப்பட்ட சேதாரம் ஆகிப் போச்சு
    :)

    ReplyDelete
  11. //அந்தப் படம்தான் எனக்கும் வேணும்!! பேசாம அந்த படத்தையே எல்லாரும் பயன்படுத்த வேண்டும் அப்படின்னு ஒரு ரூல் போடலாமா? :))//

    யோவ்...கொத்ஸ்...அந்த படம் என்னமோ ஓப்பன் சோர்ஸ் கோடு மாதிரி பேசறீங்க? நீங்க பண்ணறது தனிமனிதத் தாக்குதல்யா...தாக்குதல்.
    :)

    ReplyDelete
  12. சங்கத்தின் இரண்டாவது பிறந்த நாள் விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    வாழ்த்துகள் சிங்கங்களா!!

    ReplyDelete
  13. பிரம்ம ரசம் ஓடவிடும் முயற்சி.
    http://thamizcricket.blogspot.com/2008/03/blog-post_12.html

    ReplyDelete
  14. வாங்க கிரிக்கெட் ரசிகரே...உங்க முயற்சி ரொம்ப நல்லாருக்குங்க.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. //பட்டித் தொட்டியெல்லாம் உங்கள் பிரம்ம ரசங்கள் காட்டாறு வெள்ளம் போல கரை புரண்டு ஓடட்டும்...
    //

    டேங்கர் லாரில புடிச்சுட்டு வந்தாவது ஓட விட்ருவோம் ;)))

    ReplyDelete
  16. வ.வா.சங்கத்துக்கு வாழ்த்துக்களுடன்,

    ஆட்டத்துக்கு என்னுடைய படம்:

    http://photoclix.in/2008/03/21/funny-chat-gold-rings/

    ReplyDelete
  17. //முதல்ல போட்ட கமெண்ட் போச்சுதா இல்லையான்னு தெரியல. வந்திருந்ததுனா, இந்த கமெண்ட்ட நீக்கிடுங்க//

    வ.வா.சங்கத்துக்கு வாழ்த்துக்களுடன்,

    ஆட்டத்துக்கு என்னுடைய படம்:

    http://photoclix.in/2008/03/21/funny-chat-gold-rings/>

    ReplyDelete
  18. எதேர்ச்சியா இந்த பதிவை பார்த்தேன். சங்க உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!போட்டிக்கு என்னுடைய படங்கள்:
    http://vadakkupatturamasamy.blogspot.com/2008/03/blog-post_22.html

    ReplyDelete
  19. தம்பிகளா, உங்க போட்டிக்கு (சரியா என்ற சந்தேகத்துடன்) ஒரு போஸ்ட்- http://nunippul.blogspot.com/2008/03/blog-post_22.htmlஉலக இணைய வரலாற்றில் முதன் முதலாய்.. என்ற பதிவைப் போட்டு
    இருக்கிறேன். ஓ.கேவான்னு பாருங்க

    ReplyDelete
  20. நானும் உண்டு..!

    நானும் உண்டு..!!

    http://kadagam.blogspot.com/2008/03/blog-post_3936.html

    ReplyDelete
  21. மக்களே,

    இன்னும் ஒரு நாள் தான் பாக்கி..... உங்களுடைய கற்பனை குதிரையை தட்டி விட்டு சீக்கிரம் பதிவிடுங்க.... :)

    ReplyDelete
  22. நானும் கலந்துக்கறேன், ஆட்டத்துக்கு சேருங்க பா! :))

    http://ammanchi.blogspot.com/2008/03/blog-post_31.html

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் கைப்புள்ள!
    2 வருஷம்தான் ஆகுதா?
    பார்த்தா 20 வயசு லூட்டியாவுள்ள தெரியுது!

    ReplyDelete
  24. நான் இன்னொருவாட்டியும் எண்ட்ரீ போட்டுக்கிறேன்ப்பா

    இந்த தடவை பிரம்ம ரஸம் ஊத்தியிருக்கேன் இதையும் கணக்குல சேர்த்துக்கோங்க!

    http://kadagam.blogspot.com/2008/03/blog-post_31.html

    ReplyDelete
  25. சங்கத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    சீக்கிரம், ரசங்கள ஊத்துங்கப்பூ..

    ReplyDelete
  26. சங்கத்திலே உறுப்பினரா இல்லேன்னா கூட சேத்துக்குவீங்கதானே?
    நான், ச்சின்னப்பையன், ஏதாவது பாத்து போட்டுக்குடுங்க....

    http://boochandi.blogspot.com/2008/03/blog-post_1754.html

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)