புறப்படு தம்பி!!
வெள்ளைக்காரன் முகம் பார்க்கவா
அகம் விட்டு கிளம்பினாய்?!
ஐயகோ! ஒரு மர்லின் மன்றோ க்ளோனிங்கா
ஜெனிபர் லோபஸின் ஸ்கேனிங்கா - என
நீ துள்ளி வருவாய்
வீக்கெண்ட் பார்ட்டியில் அள்ளி விரைவாய்
என்று உன் அண்ணன் இங்கு படமெடுத்துக் கொண்டிருக்க
அங்கு நடப்பதோ கொடுமை!
காலத்தின் சத்திய சோதனை!!
தாவணியைக் கவனி!
சுடிதாரைக் கண்டு சிரி!
ஜீன்ஸ் போட்ட எந்த பெண்ணுக்கு நீ ஃபேன்ஸ்!
டைட்டா...அது நம்ம சைட்டு!
இப்படி வருத்தமில்லா வாலிபனாய் வசந்தமான ஒரு வாழ்வு வாழ்ந்த தமிழ் தம்பியே!!
இன்று அங்கு உன்னை சூழ்ந்து நிற்பது
குளித்தும் குளிக்காமலும்
சிரைத்தும் சிரைக்காமலும் திரியும் வெள்ளைக்காரன்!!
உன் பகல் கனவுகளுக்கு வேட்டு வைக்கும் கொள்ளைக்காரன்!!
சேதி கேட்டு உன் அண்ணன் நெஞ்சும் விம்முது...கம்முது...தும்முது...
கன்னியரைக் கண்டு கிடப்பதே கடமையெனக் கிடந்த அன்புத் தம்பியே!!
விமானம் ஏறியதும்கூட விமானபணிப்பெண்களைக் கண்டுகளிக்கவே என கொள்கை முழக்கம் செய்த தம்பி!!
இன்று அயல்நாட்டில் அட்டு ஃபிகர்களும் இல்லாத அவல அலுவலகத்தில் அடைந்து கிடப்பதா!! மனம் கொதிக்குதடா!!
பொறுத்தது போதும்!
ஃபிகரைத் தேடு!
கடலை போடு!
மாலையில் கூடு!
விடியும் வரை ஆடு!!
இளமை கொண்டாடு!!
அண்ணனின் அன்புமொழி கேளு!
அயல்நாட்டில் மொழி தெரியாத மங்கையர்குலம் கண்டு மனம் கலங்காதே!
அயல்நாட்டு வாலிபா எழுக!!
வாலிபத்தின் நிரந்தர தல'யாம் கைப்புள்ளயைத் தொழுக!!!
;)))))
ReplyDeleteஅண்ணே!! இந்த பாசத்துக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன் :)))
ReplyDeleteதிரைகடலோடியும் ஃபிகரினை தேடு- இது புது மொழி
ReplyDeletesouriyama varutha padatha valipar sangam entu vaithathae ungkal convenience kku thano..
ReplyDeleteno serious... full of joy...
keept it up..
அண்ணே, உன் பாசமே பாசம்!
ReplyDeleteஉருக வச்சிட்டீங்கண்ணே! ச்ச்சும்மா உருக வச்சீட்டீங்களே! :-)
//இன்று அயல்நாட்டில் அட்டு ஃபிகர்களும் இல்லாத அவல அலுவலகத்தில் அடைந்து கிடப்பதா!!//
இது மட்டும் (என்னளவில்) உண்மை இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
முடிந்தால் பாசக்கார அண்ணனும் இதே அலுவலகத்துக்கு வருமாறு பரிந்துரைக்கிறேன்! :-)
//வாலிபத்தின் நிரந்தர தல'யாம் கைப்புள்ளயைத் தொழுக!!!//
தொழுதுட்டோம்! தொழுதுட்டோம்!
இதுல 'தம்பி' 'தம்பி'ன்னு நீங்க சொல்றது தம்பி உமா கதிரையா???
ReplyDeleteஅவர் ஆப்புபீஸ்ல அட்டு பிகர் கூட இல்லியா????
என்ன கொடுமை தேவ் இது :(((
//இன்று அயல்நாட்டில் அட்டு ஃபிகர்களும் இல்லாத அவல அலுவலகத்தில் அடைந்து கிடப்பதா!!//
ReplyDeleteஅட்டு ஃபிகர்கள் இருந்தா கூட பரவாயில்ல. வயசு 60 க்கு மேலே இருந்தா?
எனக்கு தினமும் ஏர் இந்தியாவுல பயணம் செய்யுற மாதிரி ஒரு ஃபீலிங் :)
ஹ்ம்ம்... விரைவில் அந்த அடிமைத் தளை உடைத்தெரியப் படும் :)
உங்கள் அறைகூவலை இந்த அண்ணனும் ஏற்கிறான். எதிரி(?) இனி தோற்கிறான் ...
(ச்சும்மா... ஒரு ஃப்ளோ!)