Tuesday, February 12, 2008

சால்சா மோனிகா பால் - 1

வாங்க வாங்க வாங்க.... இது காதல் மாசம். இந்தக் காதல் மாசத்துல ஒங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப் போறேன். இதத்தான் சினிமாவா எடுக்கப் போறோம். வார்னர் பிரதர்ஸ் மொதமொதல்ல தமிழ்ல எடுக்கப் போற படம். கதாநாயகரா சூர்யாவா அஜீத்தான்னு யோசிச்சோம். அவங்க ரொம்பவும் பிசியா இருந்தா டாம் குரூஸ் கிட்ட பேசிக் கால்ஷீட்டோ..கைஷீட்டோ....அட...பெட்ஷீட்டாவது வாங்கிப் படத்த எடுக்கனும்னு ஒரே முடிவோட இருந்தோம். ஆனா பெரிய பட்ஜட் படங்குறதால சங்கத்துச் சிங்கம் வால்டர் வெட்டியார் கதாநாயகரா நடிச்சா மட்டுந்தான் நல்லாயிருக்க முடியும்னு எல்லாரும் கூடிப் பேசி முடிவு செஞ்சோம்.

பட்ஜெட்டு எவ்வளவா? 500கோடிதான். ஆயிரம் கோடி கொடுக்குறதாச் சொன்னாங்க. ஐநூறு போதும். தேவைப்பட்டா நூறோ எறநூறோ கூட வாங்கிக்கிறேன்னு சொல்லீருக்கேன்.

சரி கதை என்னன்னு கேக்குறீங்களா? காதல் கதைதான். அதுலயும் ரொம்பப் புதுமையான காதல் கதையைச் சொல்றோம். இதுவரைக்கும் யாருமே சொல்லாத காதல் கதை. அவ்வளோ புதுமை.

கதையில சாக்சஃபோன் வாசிக்கிறவருதான் ஹீரோ. அதாவது வால்டர் வெட்டியார். அவருக்குப் பேரே சாக்ஸ் சண்முகசுந்தரம். அவரு சாக்ஸ் வாசிச்சா ஒலகமே ஒரு நிமிசம் நின்னு கேக்கும். அவ்வளவு தெறமை. அவரை ஒரு நாள் லண்டன்ல இருக்குற சர்ச்சுல வாசிக்கக் கூப்புடுறாங்க. தமிழ்நாட்டுக்காரருக்கு லண்டன்ல இருக்குற எந்த சர்ச்சுல வாசிக்க வாய்ப்புக் கெடைச்சாலும் பெருமைதானே. லண்டன் மகாராணிக்கே வாசிச்ச மாதிரி பீத்திக்கலாம்ல. (ஆனாப்பட்ட ராயல் பில்ஹார்மொனிக் ஆர்க்கெஸ்ட்ராக்காரங்க ஹங்கேரீல புத்தாபெஸ்த் ரயில்வே ஸ்டேஷன்ல போஸ்டர் ஒட்டிக் கச்சேரி நடத்துறாங்கள்ள)... ஆனாலும் நம்ம கதாநாயகருக்குக் கெடைச்சது ஊருக்கு நடுவுல இருக்குற பெரிய சர்ச்சுல.

அந்தப் பெருமையோட அவர் வாசிக்கிறப்போ யாரோ வேட்டு போட்டுர்ராங்க. அதுனால அவருக்கு எரிச்சல். இந்த மாதிரி வேட்டுச் சத்தத்துல எப்படி வாசிக்கிறதுன்னு அவரு கோவிச்சுக்கிறாரு. அப்ப அதே சர்ச்சு ஏற்பாடு செஞ்சிருந்த சால்சா டான்சுக்கு வந்த இங்கிலாந்துப் பொண்ணு... அவங்க பேரு மோனிகா பால்...இங்கதான் நீங்க எல்லாரும் கவனிக்கனும். மொதமொதல்ல ஒரு இங்கிலாந்துப் பொண்ணக் கதாநாயகியாக்குறோம். அதுவும் முழுநீளக் கதாநாயகியா. இதுக்காக ஹாரி பார்ட்டர்ல ஹெர்மயானியா நடிக்கிற எம்மா வாட்சனை ஒப்பந்தம் பண்ணீருக்கோம்.

அவங்க விரும்பிக் கேட்டா ஹாரி பாட்டரா நடிக்கிறவரையே ஹீரோவாப் போட்டுறலாம்னு அவங்களையே கேட்டோம். லேசாக் கரியப் பூசீட்டா தமிழ்நாட்டுக்காரர் மாதிரியே இருக்க மாட்டாருன்னும் சொன்னோம். அந்த நடிகரும் கூட மீசை வெச்சிருவோம்னு சொன்னாரு. ஆனா எம்மா வாட்சன் ஒரே முடிவா...வெட்டியார் கதாநாயகனா நடிச்சா மட்டுந்தான் படத்துல நடிக்கிறதாச் சொல்லீட்டாங்க.

சரி. நம்ம கதைக்கு வருவோம். இவரு சாக்ஸ் வாசிக்கிற அழகப் பாத்து கதாநாயகி வியக்குறாங்க. ஆனா ஏன் சாக்ஸ் வாசிக்கிறத நிப்பாட்டீட்டாருன்னு புரியலை. ஏன்னு வாயத் தொறந்து கேக்குறாங்க. அவரும் காரணத்தைச் சொல்றாங்க. அப்ப பேச்சு வார்த்தை முத்தி சண்டை வந்துருது.

அப்பந்தான் சாக்ஸ் பெருசா சால்சா டான்ஸ் பெருசான்னு பிரச்சனை வருது. வரப்போற கிருஸ்மசுக்கு வாட்டிகன்ல இருக்குற செயிண்ட் மேரீஸ் பசிலிக்காவுல போப்பாண்டவர் முன்னாடி இவரு வாசிக்கிற சாக்சுக்கு அந்தம்மா ஆடனும்னு போட்டி முடிவாயிருது. அவரு செயிச்சிட்டா அந்தம்மா சால்சாவே ஆடக்கூடாது. அந்தம்மா செயிச்சிட்டா அவரு சாக்ஸ் தொடவே கூடாது. தொடுற ஒரே சாக்ஸ் ஷூக்குப் போடுறதா மட்டுந்தான் இருக்கனும்.

இதுவரைக்கும் கதையப் பாத்தீங்கன்னாளே...எவ்வளோ ரிச்சா வந்துருக்குன்னு தெரிஞ்சிருக்கும். தமிழ்நாட்டுல தொடங்கி....லண்டன் போயி...அங்க இருந்து இத்தாலி..இத்தாலிக்குள்ள இருக்குற வாட்டிகன். வாட்டிகன் சர்ச்சு. போப்பாண்டவர் வேற நடிக்கனும். வாரியார் நடிச்ச படத்தப் போப்புக்கு ஏற்கனவே போட்டுக் காமிச்சி...அவரு மாதிரி இவரும் பாப்புலர் ஆயிரலாம்னு பேசி அவரையும் சரிக்கட்டியாச்சு. சிவாஜி நடிச்சிப் பாடுன "தேவன் கோயிலிலே யாவரும் தீபங்களே"ங்குற வெள்ளைரோஜா பாட்டை ரீமிக்ஸ் பண்ணி போப்பாண்டவரை வெச்சி ஒரு பாட்டு.

எவ்வளவு புதுமைகள் பாத்தீங்களா? இந்தப் புதுமைகளைப் பாத்துப் புல்லரிச்சுதான் வார்னர் பிரதர்ஸ் எனக்குப் படம் எடுக்குற வாய்ப்புக் குடுத்திருக்காங்க. இன்னும் பலப்பல புதுமைகள் கதைல இருக்கு. ஒவ்வொன்னா எடுத்துச் சொல்றேன்.

போட்டிக்கு முன்னாடி நம்ம வெட்டியார்...அதாவது சாக்ஸ் சண்முகசுந்தரம் சாக்சபோன் நல்லா வாசிக்கிறதுக்காக ஹங்கேரி போறாரு. அங்க போய் ராயல்பில்ஹார்மொனி ஆர்க்கெஸ்ட்ராவுல இருக்குற பெரிய வித்வான் கிட்ட கத்துக்கப் போறாரு. அங்க வெக்கிறோம் ஒரு பாட்டு. ஹங்கேரியில புத்தாபெஸ்த் நகரத்தோட அழகைப் பார்த்து ஒரு பாட்டு பாடுற மாதிரி.

ஹங்கேரி ஹங்கேரி
என் மனசைக் கவர்ந்த சிங்காரி

இந்தப் பாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்கச் சொல்லி உதித் நாராயணனைப் பாட வைக்கச் சொல்லப் போறோம். ஏன்னா..பாட்டு தமிழ்ப்பாட்டுன்னு நெனச்சு யாரும் கேக்காமப் போயிறக் கூடாதுல்ல. அதுக்குத்தான் உதித் நாராயண். தமிழை உதுத்த நாராயண். பாட்டு கண்டிப்பா ஹிட். ஹங்கேரில இருக்குற டாப் மாடல்ஸ்ல நூறு பேர புத்தா(பெஸ்த்) மலைக்கு மேல ஏத்தி விட்டு டான்ஸ். செயின் பிரிட்ஜ் மேல நிக்க வெச்சி டான்ஸ். இப்பிடி சுத்திச் சுத்தி எடுக்குறோம்.

கதாநாயகரு இவ்வளவு செய்யுறப்போ நாயகி சும்மாயிருப்பாங்களா? பிரியாணி சால்னால ஊறுற மாதிரி இவங்க சால்சாயே ஊறுறாங்க. லண்டன்ல அவங்க அம்மா மார்க்ரெட் இந்தப் போட்டி நடக்கவே கூடாதுன்னு அடம் பிடிக்கிறாங்க. அப்பத்தான் நம்ம கதைல உள்ள வர்ராரு சவடால் சாண்டியாகோ. இது ஒரு மாதிரி காமெடி வில்லன் பாத்திரம். யார நடிக்க வைக்கலாம்னு இன்னும் யோசனை பண்றோம். எடி மர்பிய நடிக்க வைக்கலாம்னு யோசனை இருக்கு. ஆனா அவரே கதாநாயகனாவும், நாயகியாவும், நாயகியோட அம்மாவாவும், போப்பாண்டவராவும் நடிப்பேன்னு அடம் பிடிப்பாரோன்னுதான் பயமா இருக்கு. ரொம்பவும் அடம் பிடிச்சா அவரத் தூக்கீட்டு ஜிம் கேரியை நடிக்க வைக்கனும்னும் நெனச்சோம். ஆனா சவடால் சாண்டியாகோ பாத்திரத்துக்கு சங்கப் போர்வாள் தேவ் மட்டுமே பொருத்தமா இருக்க முடியும்னு வார்னர் பிரதர்சே சொல்லீட்டாங்க. அதுனால தங்கத்தேர் தேவும் பெரிய மனசு வெச்சு போனாப் போகுதுன்னு நடிக்க ஒத்துக்கிட்டாரு. அவரு படத்துல ரொம்பவே கலக்கப் போறதா உலகத்துல இப்பவே பேசிக்கிறாங்க.

சரி போட்டி நடந்துச்சா? அத அடுத்த அத்தியாயத்துல பாப்போம். ஆனா அதுக்கு முன்னாடி....ரசிகர்கள் கருத்துங்குற பேர்ல இந்தக் கதையில எந்த மாதிரி திருப்பங்கள் வந்தா நல்லாயிருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களோ.....அதத் தாராளமா கூச்சநாச்சப்படாம சொல்லலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

19 comments:

  1. ஆஹா ஆஹா!!
    தில்லானா மோகனாம்பால் ரீமிக்ஸா????

    நம்ம தங்கத்தலைவி எம்மா வாட்சன் வேற நடிக்கறாய்ங்களா???
    சூப்பரு!!!

    கதையில இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டு வருதுன்னு பாக்கலாம்!! :P

    அண்ணாச்சி காமெடி கலக்குது!! :-)))))

    ReplyDelete
  2. //பாட்டு தமிழ்ப்பாட்டுன்னு நெனச்சு ...அதுக்குத்தான் உதித் நாராயண். தமிழை உதுத்த நாராயண்.//

    இப்படியெல்லாம் சொன்னாலும் நம்ம ரஹ்மானுக்கு உறைக்கவா போகுது ..

    கத .. கத .. நல்லாதான் போகுது. இன்னும் போட்டோ செஷன் ஒண்ணு வச்சி நிறைய போட்டோ போடுங்க.

    ReplyDelete
  3. // CVR said...
    ஆஹா ஆஹா!!
    தில்லானா மோகனாம்பால் ரீமிக்ஸா???? //

    என்னது ரீமிக்சா? ரொம்பவும் சிந்திச்சு ஒரு அருமையான கதை எழுதீருக்கேன். நீ இப்பிடிச் சொல்லீட்டியேப்பா!!!!!

    // நம்ம தங்கத்தலைவி எம்மா வாட்சன் வேற நடிக்கறாய்ங்களா???
    சூப்பரு!!! //

    ஆமா...நாந்தான் இயக்கனும்..அதாவது படத்தன்னு உறுதியா இருக்காங்க. வெட்டி வேணும்னா கதாநாயகனா நடிச்சிக்கிறட்டும்னும் சொல்லீருக்காங்களே.

    // கதையில இன்னும் என்னென்ன ட்விஸ்ட்டு வருதுன்னு பாக்கலாம்!! :P

    அண்ணாச்சி காமெடி கலக்குது!! :-))))) //

    நன்றி நன்றி

    ReplyDelete
  4. எங்கள் தில்லாலங்கடி தில்லானா வெட்டி நாயகனை,
    தில்லானா வாசிக்க வைத்துப் புரட்சி படைத்த சினிமாச் சிங்கமே! டைரக்டர் டைகரே! வாழ்க நீ பல்லாண்டு!

    //ஆனா எம்மா வாட்சன் ஒரே முடிவா...வெட்டியார் கதாநாயகனா நடிச்சா மட்டுந்தான் படத்துல நடிக்கிறதாச் சொல்லீட்டாங்க.//

    "எம்மா"டியோவ்! :-)

    ReplyDelete
  5. //அந்தம்மா செயிச்சிட்டா அவரு சாக்ஸ் தொடவே கூடாது. தொடுற ஒரே சாக்ஸ் ஷூக்குப் போடுறதா மட்டுந்தான் இருக்கனும்//

    சாக்ஸ் சண்முகசுந்தரத்தை யாருன்னு நினைச்சீங்க?
    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்!
    வெட்டி வீட்டு பூட்ஸ் ஷூவும் "சாக்ஸ்" போடும்! :-))

    //போப்பாண்டவர் வேற நடிக்கனும். வாரியார் நடிச்ச படத்தப் போப்புக்கு ஏற்கனவே போட்டுக் காமிச்சி...அவரு மாதிரி இவரும் பாப்புலர் ஆயிரலாம்னு பேசி அவரையும் சரிக்கட்டியாச்சு//

    :-))))))
    வாட்டிக்கன் வாரியார்-னு சொல்லுங்க!

    //ஆனா சவடால் சாண்டியாகோ பாத்திரத்துக்கு சங்கப் போர்வாள் தேவ் மட்டுமே பொருத்தமா இருக்க முடியும்னு வார்னர் பிரதர்சே சொல்லீட்டாங்க//

    தேவ் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
    சங்கத்தின் சிங்கம் தான் சித்திக்கோ சித்திக்கோ
    இப்படி எல்லாம் பாட்டு போடனும் புரட்சி இயக்குனரே, சொல்லிப்புட்டேன்! ஆமா! :-)

    ReplyDelete
  6. // எந்த மாதிரி திருப்பங்கள் வந்தா நல்லாயிருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களோ.....அதத் தாராளமா கூச்சநாச்சப்படாம சொல்லலாம்//

    அதாச்சும் எங்க சிங்க இயக்குனர் சிரா என்ன சொல்றாருன்னா...
    வெட்டியை யார் யார் எல்லாம் எப்ப எப்பவோ கும்மனும்-னு நினைச்சீங்களோ,
    அவங்க எல்லாம் கூச்ச நாச்சப்படாம தாராளாம கும்மு ஓடியாங்கோ-ன்னு ஒரு களம் அமைச்சிக் கொடுத்து இருக்காருப்பா!


    வாழ்க சிங்க இயக்குனர் சிரா!
    வாழ்க எம்மா நாயகன் வெட்டி!

    ReplyDelete
  7. Ragav spielberg...,

    Unkaloda directionla vara irukkura
    "Saaksona Emmambal" padathodak kathai enakku romba pudichirukku.
    athunaala naan unga padathukku finance pannalaamnu irukken.
    Pada poojaikku erpaadu pannungka,naan vanthu moi ezhuthittu poreen.

    aana ennoda condition ithu thaan :
    ivungka thaan nadikkanum...

    vatican VLADIMIROvadivel role la CVR
    Saaksona Emmambal role la italy rottula pora ethavathu oru figure.

    Camera by P.C.VETTI.

    Invitation ready pannittu anuppungka.

    Nalam thaana....Nalam thaana...
    mokkaiyum kadalaiyum sukam thaana?

    Raj

    ReplyDelete
  8. சால்சா மோனிகா பால்...அடா அடா அடா..டைட்டிலுக்கே அம்பது நாள் கன்பர்ம்டு :))

    ReplyDelete
  9. தங்கத் தலைவி எம்மா வாட்சன் தான் கீரோயினியா? அப்ப நூறாவது நாள் போஸ்டர் இப்பவே ஆர்டர் பண்ணிருவோம்

    ReplyDelete
  10. எங்கள் சிங்கம் இளைய தளபதி வால்டர் வெட்டிகாரு நடித்து இயக்குனர் எவரெஸ்ட் ஜிரா இயக்கத்தில் வெளிவரும் சால்சா மோனிகா பால் வெள்ளிவிழா காண வாழ்த்துகிறோம் :))

    ReplyDelete
  11. சாக்ஸை இஸ்டைலா பிடிப்பது 'டூயட்' பிரபுவா? சால்சா வெட்டிகாரா? சங்க சேனலில் சிறப்பு சிரிப்பு பட்டிமன்றம்!! காணத் தவறாதீர்கள்!!

    ReplyDelete
  12. எம்மா ஆடுது சால்சா!
    வெட்டிகாருக்கு ஜல்சா!
    தேவு வர்றாரு நைசா!
    ஜிரா அடிப்பாரு சிக்சா!!

    ReplyDelete
  13. //ஆனா சவடால் சாண்டியாகோ பாத்திரத்துக்கு சங்கப் போர்வாள் தேவ் மட்டுமே பொருத்தமா இருக்க முடியும்னு வார்னர் பிரதர்சே சொல்லீட்டாங்க. அதுனால தங்கத்தேர் தேவும் பெரிய மனசு வெச்சு போனாப் போகுதுன்னு நடிக்க ஒத்துக்கிட்டாரு. அவரு படத்துல ரொம்பவே கலக்கப் போறதா உலகத்துல இப்பவே பேசிக்கிறாங்க//

    ஆஹா போர்வாள் காமெடி வில்லனா? அதே படத்துல "எனக்கு தூக்கம் வருதே"ன்னு டிரெயின்ல குலுங்கற பாலையா கேரக்டர் ஒன்னு வருமே...அதை நம்ம செவ்வாழை சித்தப்பூ KRSக்குக் கொடுத்தாப் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.
    :)

    ReplyDelete
  14. எப்ப இந்த படம் ரிலிஷ் ஆகும் ?

    ReplyDelete
  15. :))))
    காமெடி கலக்குது :))

    ReplyDelete
  16. //கப்பி பய said...
    சால்சா மோனிகா பால்...அடா அடா அடா..டைட்டிலுக்கே அம்பது நாள் கன்பர்ம்டு :))//

    ஏன்?
    வெட்டி மோனிகா தூள்-ன்னு வச்சா நூறு நாள் கன்பர்ம்டு இல்லீயா?
    தப்பி ஓடிய கப்பியே! இது எந்த நாட்டுச் சதி?

    எங்கள் சாக்ஸ் வெட்டியின் புகழைக் குறைக்கத் படத்தின் பேரில் இருந்து ஹீரோ பேரை எடுக்கச் சதித் திட்டமா?
    தில் இருந்தா "தில்"லானா வாசி, பார்ப்போம்! :-)

    //எனக்கு தூக்கம் வருதே"ன்னு டிரெயின்ல குலுங்கற பாலையா கேரக்டர் ஒன்னு வருமே...அதை நம்ம செவ்வாழை சித்தப்பூ KRSக்குக் கொடுத்தாப் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.
    :)//

    இதுக்குப் பேரு தான் நட்சத்திர சதியா? தல உம்ம நட்சத்திரத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணோனும்! வாரேன் இருங்க!

    ReplyDelete
  17. கலக்கல்.. மாம்ஸ்...

    ReplyDelete
  18. ஹாஹா.... சூப்பரு... நம்ம வெட்டிக்காரு நடிக்கப்போற அந்த படத்தை பார்க்க இப்பவே ஆவலா இருக்கு..... :))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)