Wednesday, January 16, 2008

கலைஞர் டிவிக்குக் கண்டனம்

நேற்று பொங்கலை ஒட்டி தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிய வண்ணம் இருந்தன..இதில் ராகதேவன் இசைஞானி இளையராஜாவின் துபாய் இசைக் கச்சேரி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது நாம் அனைவரும் அறிந்ததே..

இந்த நிகழ்ச்சிக்கு நம் பதிவுலகைச் சேர்ந்த சிங்கங்கள் சென்று சிறப்பித்து வந்த விவரம் பதிவுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டதை உலகமே அறியும்...

பொங்கி வழிந்த அவர்களின் இசை ரசனை பதிவுகளில் கண்டு நாம் பழரசம்...சாரி பரவசம் அடைந்த விவரத்தை இப்போது உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

அப்பட பட்ட உயர்வான இசை ரசனை கொண்ட நம் பதிவுலகச் சிங்கங்கள் ராஜாவின் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டு அகில பதிவுலகமும் கொந்தளித்து கொப்புளித்துப் போய் உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்றும் நம் சிங்கங்களின் வருகையை கலைஞர் தொலைக்காட்சி பதிவு செய்ய தவறியுள்ளது ஒரு திட்டமிட்ட சதிச் செயலாகவே பரவலாகக் கருதப்படுகிறது..

தமிழே புரியாத ஷேக்குகளின் வரவைக் கூட மீண்டும் மீண்டும் க்ளோஸ் அப் வைத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள் கலைஞர் டிவியினர்.. அதிலும் பாதி ஷேக்குகள் ஓசி டிக்கெட் எடுத்து வந்திருந்தார்களாம்..அவர்களுக்கு அளித்த முக்கியத்துவம் கூட நம்ம நற்றமிழ் இசை ரசிகர்களுக்கு அளிக்கப்படாத்து பதிவுலகின் பல மட்டங்களிலும் பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரவ விட்டுள்ளது.

இது குறித்து நேற்று மாலை கிடேசன் பார்க்கில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது..

அதில் நம் துபாய் பதிவுலகப் பெருந்தகைகள் பினாத்தலார், ஆசிப் அண்ணாச்சி, குசும்பன், கோபி, சென்ஷி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.. இந்த ஆலோசனைக் கூட்டத்தககுச் செல்ல புறப்பட்ட அபி அப்பா, அய்யனார் மற்றும் நம்ம சங்கத்து சிங்கம் தம்பி கதிர் ஆகியோர் தடுக்கப்பட்ட நிலையில் கிடேசன் பார்க் சுவர் ஏறி குதித்து அவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பதிவுலகம் எங்கும் நேற்று மதியம் முதல் பரவத் தொடங்கிய இந்த தகவல் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கபடுகிறது..

இது குறித்து கருத்து தெரிவிக்கவும் இயலாத நிலையில் பெனத்தலார்,அண்ணாச்சி ஆகியோர் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.

தொலைபேசியில் வ.வா.சங்கத்து நிர்வாகிகளோடு தொடர்பு கொண்ட நண்பர் குசும்பன் இது குறித்து கூறியதாவது..." நிகழ்ச்சி டிக்கெட் வாங்கிச் சென்ற எங்களது வருகையை கலைஞர் டிவி வேண்டுமென்றே இருட்டடிப்பு செயதுள்ளது..நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்காமல் வந்த இளையராஜாவையும் அவர் மொத்தக் குழுவினரையும் காட்டியதைக் கூட பரவாயில்லை என்று ஏற்று கொள்ள முடியும்... குஷ்பு, ஜெயராம் போன்றவர்களும் டிக்கெட் வாங்காமல் மேடை வரை அனுமதிக்கப்பட்டதும் கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டதும் எங்களை வருத்தப்பட வைத்துள்ளது... அத்தோடு மொழி புரியாத ஷேக்குகளையும் அவர்களோடு வந்து இருந்த கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது... இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் " எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்து வ.வா.சங்கம் நடந்து முடிந்துள்ள இந்த அநியாயத்தைக் கிடேசன் பார்க் மக்களோடு சேர்ந்து கண்டப்படி கண்டனம் செய்கிறது...கண்டனத்துடன் பெரும் போராட்டமும் அறிவிக்கிறோம்.. போராட்டத்தின் கோரிக்கையாக

அடுத்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக சங்கத்தினரையும் கிடேசன் பூங்காவினரையும் அழைத்து நடந்த நிகழ்ச்சிக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..

22 comments:

  1. எங்கள் உள்ளக்குறையை உள்ளது உள்ளபடி உரைத்த வவாசவிற்கு நன்றி.

    மானாட மயிலாடவில் நீதிபதியாக எங்களை நியமிக்க வேண்டாம். நமீதாவுக்கு அருகில் யார் அமர்வது என்ற எங்கள் குடுமிபிடி சண்டை நேரடி ஒளிபரப்பாவதை நாங்கள் விரும்பவில்லை.

    ReplyDelete
  2. ////கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது... ///

    உங்க பதிவில் கும்மி அடிச்சதுக்கு பழி வாங்கியாச்சா?

    எப்பா ஷேக்குங்களா என் அட்ரசையும் அவரே கொடுப்பார் வந்து சீக்கிரம் சேருங்க...ரெடி ஸ்டார்ட் மீயுஜிக்

    ReplyDelete
  3. அதானே....

    என்னோட கண்டனத்தையும் பதிகிறேன்

    ReplyDelete
  4. என்னுடைய கண்மூடித்தனமாக கண்டங்களையும் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  5. //முக்கிய விருந்தினர்களாக//

    அது சரி, இது வேண்டுகோள் இல்லே "கட்டளை" "கட்டளை" "கட்டளை"

    ReplyDelete
  6. கலைஞரை எதித்தாப் பெருசா வெளம்பரம் கிடைக்கும்ன்னு பாத்தா ஒரு பம்பரம் கூட கிடைக்காது போல இருக்கு....என்னக் கொடுமை சார் இது....

    அப்புறம் கண்டபடி ஆதரவு கொடுத்த பெனத்தாலார், கோவியார்,குசும்பார் மற்றும் சங்கத்து அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

    இப்படி யாருமே ஆதரவு தராமப் போனாலும் நாம் அசரப் போவதில்லை.. அடுத்தப் போராட்டம் தொடரும்... நம் மக்கள் பணி ஒய்வின்றி நடக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. This Post is featured in Thinamani Kathir today.

    Thanks to Thinamani Kathir

    ReplyDelete
  8. போர்வாள்!

    போனவாரம் நியூயார்க் டைம்ஸ் டெப்லாய்ட்ல நம்ம சங்கத்த சிலாகிச்சி ஒரு மேட்டர் போட்டுருந்தாங்களே நீங்க பாக்கவேல்லியா?
    தினம் தினம் நம்மள பத்தி நியூஸ் போடறதையே வேலையா போச்சு இவங்களுக்கு.

    ReplyDelete
  9. அமெரிக்க டைம் பத்திரிக்கையிலும் இவ் விஷயம் பற்றி இது போலவே ஒரு செய்தி வந்திருப்பதாக அறிந்தேன். உங்களுடைய பதிவு காப்பியா அல்லது சொந்த எண்ணத்தில் உதித்ததா?
    இருந்தாலும் அந்த அளவுக்கு உங்களால் மட்டும்தான் யோசிக்க முடிகிறது.

    ReplyDelete
  10. நான் திணமணிக் கதிர்லே பாத்துட்டேன். இங்க வந்து சொல்லணும்னு தோணலே !!

    ReplyDelete
  11. //கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது...//

    இது எப்படி 'வருத்தத்தை' கூட்டி இருக்க முடியும்? கூட இருக்கற ஷேக்குகளை பாத்தாதான் எரிச்சலா வந்திசு...

    //கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது...//

    டிக்கட் வாங்கலயா? ஏரோப்ளேன்ல கூடவா? அட இது தெரியுமா நான் நாலஞ்சி தடவ வாங்கிட்டனப்பா...

    //மானாட மயிலாட நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக சங்கத்தினரையும் கிடேசன் பூங்காவினரையும்//

    விருந்தினர்களாகவா? அட சூப்பர் மொக்கை டான்ஸ் போட்டி நடத்த சொல்லுங்கப்பா... அப்படி அவங்க நடத்தலன்னா குசும்பன் அவர் பதிவுல படங்கள் போட்டு போட்டி நடத்திடுவார்னு எச்சரிக்கை விடறதுதானே?

    //This Post is featured in Thinamani Kathir today.
    //

    வாழ்த்துக்கள். ஆமாம், எவ்வளவோ செலவு ஆச்சு? அட ஒரு பொது அறிவுக்குதாங்க.

    //கலைஞரை எதித்தாப் பெருசா வெளம்பரம் கிடைக்கும்ன்னு பாத்தா ஒரு பம்பரம் கூட கிடைக்காது போல இருக்கு//

    என்னமோ வைகோ பத்தி சொல்றீங்கன்னு புரியுது. என்னான்னுதான் புரியல. ஹெல்ப் ப்ளீஸ்!

    ReplyDelete
  12. //நிலைமையின் தீவிரம் உணர்ந்து வ.வா.சங்கம் நடந்து முடிந்துள்ள இந்த அநியாயத்தைக் கிடேசன் பார்க் மக்களோடு சேர்ந்து கண்டப்படி கண்டனம் செய்கிறது...//

    சங்கத்தின் சார்பாக நான் காணாதபடியும் கண்டனம் செய்கிறேன் !!!

    //கண்டனத்துடன் பெரும் போராட்டமும் அறிவிக்கிறோம்..//

    போராட்டம் எத்திராஜ் காலேஜ் வாசலில் ஆரம்பித்து WCC மற்றும் வைஷ்ணவா வழியாக ஸ்டெல்லா மேரிஸ் வாசலில் முடியும் என அறிவிக்கிறேன் ... ;))))))

    ReplyDelete
  13. //அடுத்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக சங்கத்தினரையும் கிடேசன் பூங்காவினரையும் அழைத்து நடந்த நிகழ்ச்சிக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் ..//

    என் தானையத்தலைவி நமீதா அந்த நிகழ்ச்சிக்கு ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட costume இல் வர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் ( யாருங்க அது நமீதா costume ன்னு ஏதாச்சும் போட்டுட்டு வர்றாரா என்னா...?ன்னு கேட்குரது..?? )

    ReplyDelete
  14. //அத்தோடு மொழி புரியாத ஷேக்குகளையும் அவர்களோடு வந்து இருந்த கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது... //

    ஆஹா நான் கொழுக் மொழுக் மிஸ் பண்ணீட்டேனே.... அதைப் பார்க்காதது என்னோட வருத்தத்தை பல்லாயிரம் மடங்கு அதிகரித்துள்ளது... :(((((

    ReplyDelete
  15. //தம்பி said...

    போர்வாள்!

    போனவாரம் நியூயார்க் டைம்ஸ் டெப்லாய்ட்ல நம்ம சங்கத்த சிலாகிச்சி ஒரு மேட்டர் போட்டுருந்தாங்களே நீங்க பாக்கவேல்லியா?
    தினம் தினம் நம்மள பத்தி நியூஸ் போடறதையே வேலையா போச்சு இவங்களுக்கு.//

    அக்க்க்கண்ணே.... :))

    ReplyDelete
  16. டிக்கெட் வாங்காத அந்த "ஸ்வீட்" ராஸ்கல்ஸ் 200 ரூபாய் டிக்கெட்டில் உட்கார்ந்ததை முன்னிட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து "தர்மபுரி கேஸ்" மாதிரி இன்னும் 80 வருஷத்துக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு "கணம், கணம்" கோர்ட்டாரை கேட்டு "கொல்"கிறென்!!

    ReplyDelete
  17. //டிக்கெட் வாங்காத அந்த "ஸ்வீட்" ராஸ்கல்ஸ் 200 ரூபாய் டிக்கெட்டில் உட்கார்ந்ததை முன்னிட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து "தர்மபுரி கேஸ்" மாதிரி இன்னும் 80 வருஷத்துக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு "கணம், கணம்" கோர்ட்டாரை கேட்டு "கொல்"கிறென்!!//

    ஹை!! அபி அப்பா ஸ்பெல்லிங் மிஷ்டேக் இல்லாம எழுதி இருக்காரு!! :))

    ReplyDelete
  18. //This Post is featured in Thinamani Kathir today.

    Thanks to Thinamani Kathir//

    பிரபலமானவர்கள் எழுத்துக்கள் இப்படி கட் பேஸ்ட் ஆவது வழக்கம்தான் தேவ். ரென்சனாவாதீங்க!!!

    ReplyDelete
  19. //என்னுடைய கண்மூடித்தனமாக கண்டங்களையும் பதிவு செய்கிறேன்.//

    நான் ரிப்பீட்டே சொல்லிக்கிறேன். :))

    ReplyDelete
  20. //பினாத்தல் சுரேஷ் said...

    எங்கள் உள்ளக்குறையை உள்ளது உள்ளபடி உரைத்த வவாசவிற்கு நன்றி.

    மானாட மயிலாடவில் நீதிபதியாக எங்களை நியமிக்க வேண்டாம். நமீதாவுக்கு அருகில் யார் அமர்வது என்ற எங்கள் குடுமிபிடி சண்டை நேரடி ஒளிபரப்பாவதை நாங்கள் விரும்பவில்லை.//

    ஓலகத் தமிழ் பதிவர்களை வருத்தப்பட வைக்கும் எந்த செயலையும் கண்டு வ.வா.சங்கம் சும்மா இருக்காது என்பதற்கு இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு ஒரு எடுத்துகாட்டு.

    மானாட மயிலாட நிகழ்ச்சி குறித்தான நமது கோரிக்கையின் தீவிரம் உலகத் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு இன்டு இடுக்குக்கு எல்லாம் பரவிய வண்ணம் உள்ளது ஆதரவு நாளும் பெருகி வருகிறது.. பொங்கி வருகிறது..பெனத்தாலரே...

    ReplyDelete
  21. //குசும்பன் said...

    ////கொழுக் மொழுக் செட் அப்புகளையும் தொடர்ந்து காட்டியது எங்கள் வருத்தத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது... ///

    உங்க பதிவில் கும்மி அடிச்சதுக்கு பழி வாங்கியாச்சா?

    எப்பா ஷேக்குங்களா என் அட்ரசையும் அவரே கொடுப்பார் வந்து சீக்கிரம் சேருங்க...ரெடி ஸ்டார்ட் மீயுஜிக்//

    எந்த ஷேக் வந்தாலும் நம்மை ஷேக் பண்ணவே முடியாது குசும்பா.. சும்மா துணிஞ்சு நிக்கணும்... சங்கத்து சிங்கம்ல்ல நீ

    ReplyDelete
  22. //கோவி.கண்ணன் said...

    அதானே....

    என்னோட கண்டனத்தையும் பதிகிறேன்//

    சிங்கையில் இருந்து சவுண்ட்டான ஆதரவு கொடுத்த கோவியாருக்கு நன்றி.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)