Wednesday, November 28, 2007

கலைஞரே- நிப்பாட்டும்



அரசியல் பதிவுன்னு நெனச்சு வந்துருப்பீங்க. இந்தப் பதிவு அரசியல் மட்டும் இல்லே "டீக்கடையில நின்னு, தின்னு பாரு பன்னு"ங்கிற மாதிரி எல்லா வகையிலும் வரும். மேல உள்ள கவிதை(?!)க்கு அர்த்தம் தெரியலைன்னா காண்டாக்ட் மிஸ்டர். ராம். இந்த தலைப்பை பார்த்துட்டு இவுங்க எல்லாம் இப்படித்தான் விமர்சனம் பண்ணி இருப்பாங்களா?


டாக்டர் விஜய்: அண்ணா, இது அநியாயங்கண்ணா. அவுங்களை வெச்சு தான் நான் பொழப்ப ஓட்டுறேன். அவுங்க இல்லைன்னா என்னோட ஹீரோ ரோல் இல்லை, எல்லா ஹீரோயினும் ரவுடியத்தானே லவ் பண்ணுவாங்க? சே சே கலைஞர் ஆனாலும் இப்படி எங்க பொழப்புல மண்ண போடக்கூடாதுங்கண்ணா.
-------------------------------------------------------------------------
அம்மா : இது எல்லாம் கண்துடைப்பு. எங்க கட்சிய சேர்ந்தவங்களைத்தான் அரெஸ்ட் ஆக்கியிருக்காங்க. இன்னும் அவுங்க கட்சி, அவுங்க கூட்டணி கட்சி ரவுடிகள் நிறைய இருக்காங்க. இதனால எனக்கு Z பிரிவு பாதுகாப்பு வேணும். இல்லைன்னா இந்த கூட்டணி ஆட்சிய உடனே கலைச்சிரனும்.
-------------------------------------------------------------------------

கலைஞர்: என்னய்யா இது? எதுக்குய்யா எல்லா MLAயும் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க?


போலீஸ்: ரவுடிங்கன்னு மொத்தமா சொன்னதால இப்படி ஆகிப் போயிருச்சுங்க

-------------------------------------------------------------------------

நிருபர் ஒருத்தர் இதையே நமீதா கிட்டே படிச்சு காட்ட "சுற்றி வளைப்புன்னு ஆரம்பிக்கிறார் உடனே...


நமீதா: இது பொய். திருமலைநாயக்கர் மஹால் தூணைக் கூட சுத்தி வளைச்சு கட்டிப் புடிச்சுரலாம், என்னை மட்டும் யாருமே சுத்தி வளைக்க முடியாது.
-------------------------------------------------------------------------
தள்ளுவண்டி காய்கடைக்காரர்: ரவுடிங்க இருந்ததாலதான் நாங்க நிம்மதியா இருந்தோம். இனிமே போலீஸ்காரங்க தொல்லை தாங்க முடியாது.
-------------------------------------------------------------------------
போலீஸ்: நம்ம "மாமூல்" வாழ்க்கைக்கு வெச்சுட்டாங்களே ஆப்பு..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
-------------------------------------------------------------------------
ஜெயில்ல இருக்கிற ரவுடிங்க கிட்ட கேட்டா..
இந்தா மாமே, அட்த்த வாரம் வந்துருவோம். வந்துட்டு சோக்கா குடுக்கிறேம்பா பேட்டிய. இப்ப டீல்ல வுடு. இன்னா?

23 comments:

  1. ஹா ஹா ஹா கலக்கல் போங்க...

    ஆமா...நீங்க எப்படி வெளிய இருக்கீங்க? ஒருவேளை சிறைக்குள்ளயும் இண்டர்நெட் யுனிகோடு எல்லாமிருக்கா?

    ReplyDelete
  2. //கலைஞர்: என்னய்யா இது? எதுக்குய்யா எல்லா MLAயும் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க?




    போலீஸ்: ரவுடிங்கன்னு மொத்தமா சொன்னதால இப்படி ஆகிப் போயிருச்சுங்க//

    இ(த்)து......:-)))))))))))))

    ReplyDelete
  3. போலீசாரிடம் கெஞ்சி கூத்தாடி ஜீப்பில் "தானே ஏறிய தானைத் தலைவர்" கைப்புவும் 1813 பேரில் ஒருவர் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளேன்

    எம்.ஜி.ஆர் ஆயிரத்தில் ஒருவன்னா..எங்க தல ஆயிரத்தி என்னூத்தி பதிமூனுல ஒருத்தர்!!

    ReplyDelete
  4. //ஆமா...நீங்க எப்படி வெளிய இருக்கீங்க? ஒருவேளை சிறைக்குள்ளயும் இண்டர்நெட் யுனிகோடு எல்லாமிருக்கா?//

    விவ்ஸ்...ஜி.ராக்கு நீங்க போலீசோட அப்ஸ்காண்ட் லிஸ்ட்ல இருக்க மேட்டர் தெரியாதா??

    ReplyDelete
  5. :-)))))

    ----------

    இராகவனுக்கு அங்கே நீங்க விட்ட கொலை மிரட்டலுக்கு எதிரொலி இங்கே கேக்குது போல இருக்கே? :-)

    ReplyDelete
  6. //ஆமா...நீங்க எப்படி வெளிய இருக்கீங்க? ஒருவேளை சிறைக்குள்ளயும் இண்டர்நெட் யுனிகோடு எல்லாமிருக்கா?//
    நமக்கு வசதி யெல்லாம் கம்மிதாங்க ஜி.ரா. தமிழ் மணம் அங்கேயும் வருது போல இருக்கே. உங்க ஊர் போலீஸ் =ஒன்னும் தமிழ்மணம் பார்த்தா ஒன்னும் சொல்றது இல்லிங்களா?

    ReplyDelete
  7. கலைஞர்: என்னய்யா இது? எதுக்குய்யா எல்லா சாமியார்களையும் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க?

    போலீஸ்: ரவுடிங்கன்னு மொத்தமா சொன்னதால இப்படி ஆகிப் போயிருச்சுங்க

    --------------
    இது எப்படியிருக்கு? :-)))))))

    துளசி மேடம் இதுக்கும் இ(த்)து......:-))))))))))))) போடுவீங்களா?

    ReplyDelete
  8. //துளசி மேடம் இதுக்கும் இ(த்)து......:-))))))))))))) போடுவீங்களா?//

    aamaam kuzhali. idhukkum pOttuttaa
    sarithaan.

    enakku saamiyaarkalaip pidikkaadhu.

    sorry ...no Tamil font

    ReplyDelete
  9. இளா... வெல்கம் பேக் :)))

    ReplyDelete
  10. அருமை..

    விசயகாந்த் : இது தேவையற்ற வேலை.. கலைஞர் வீட்டில் அமர்ந்துக்கொண்டு காவல் துறையை ஏவிவிடுவது சரியல்ல.. 2011 நான் முதல்வர் ஆனவுடன்... நானே தெரு தெருவா போய், ரவுடிகளை கண்டுப்பிடிச்சு , வலது கால செவுத்துல வெச்சு இடது காலுல ரவுடிய எட்டி ஒதைச்சு.. கட்டி இழுத்து வருவேன்..
    மக்களே எனக்கு ஓட்டு போடுங்க. .போடுங்க..

    ReplyDelete
  11. நமீதா, கலைஞர் - சும்மா நச்சுனு இருக்கு இளா...

    அசத்தல்...

    ReplyDelete
  12. நானும் ரவுடி தான் என்றுக் கூறி தானே ஏறிய தானை தலைவனை கயவன் கப்பியை தொடர்ந்து நானும் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  13. கயவன் கப்பி எப்படியா தப்பிச்சான்?

    இந்த மேட்டரு தெரிஞ்சு தான் அவன் புதரகம் ஒடிட்டானா?

    ReplyDelete
  14. kuzhalikku vera velai vetti illaiya? eppO paarthalum ramadoskku jalra adikkiradhu dhaan avar velaiya?

    sorry, no tamil font

    ReplyDelete
  15. வை.கோவை விட்ற முடியுமா?

    இது ரவுடி இனத்துக்கு நடந்த் மாபெரும் அராஜகம்...தோழர்களே! தயாராகுங்கள்..கால்நடைப்பயணம் தொடங்கட்டும்...கோபாலபுரம் தொடங்கிக் கொசப்பேட்டை வரை

    கலக்கல் பதிவு

    ReplyDelete
  16. Form is temporary, but class is permanent.

    //இளா... வெல்கம் பேக் :)))//
    ரிப்பீட்டேய்.

    ReplyDelete
  17. / "டீக்கடையில நின்னு, தின்னு பாரு பன்னு"ங்கிற மாதிரி எல்லா வகையிலும் வரும். மேல உள்ள கவிதை(?!)க்கு அர்த்தம் தெரியலைன்னா காண்டாக்ட் மிஸ்டர். ராம். ///


    விவாஜி,

    ஏனிந்த கொலைவெறி... அந்த கருமத்தை பார்த்து நொந்து போயி இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மீண்டுக்கிட்டு இருக்கேன்.. :(

    ReplyDelete
  18. //போலீசாரிடம் கெஞ்சி கூத்தாடி ஜீப்பில் "தானே ஏறிய தானைத் தலைவர்" கைப்புவும் 1813 பேரில் ஒருவர் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுள்ளேன்//

    இது!!!

    ReplyDelete
  19. //Form is temporary, but class is permanent.//
    நான் ஒண்ணாங்கிளாஸை பெயிலாகி பெயிலாகி படிச்சதை சபையில சொல்லியாச்சா?

    ReplyDelete
  20. // ILA(a)இளா said...
    //ஆமா...நீங்க எப்படி வெளிய இருக்கீங்க? ஒருவேளை சிறைக்குள்ளயும் இண்டர்நெட் யுனிகோடு எல்லாமிருக்கா?//
    நமக்கு வசதி யெல்லாம் கம்மிதாங்க ஜி.ரா. தமிழ் மணம் அங்கேயும் வருது போல இருக்கே. உங்க ஊர் போலீஸ் =ஒன்னும் தமிழ்மணம் பார்த்தா ஒன்னும் சொல்றது இல்லிங்களா? //

    தமிழ்மணம் உலகம் பூரா வருதே. எங்கெங்க இண்டர்நெட்டு இருக்கோ..அங்கங்க வருது. எங்க வீட்டுலயும் நெட் கனெக்ஷன் இருக்கு. அதுனால வருது. போலீஸ் மட்டுமில்ல..பக்கத்து வீட்டுக்காரங்க கூட தமிழ்மணம் பாத்தா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

    ReplyDelete
  21. //மேல உள்ள கவிதை(?!)க்கு அர்த்தம் தெரியலைன்னா காண்டாக்ட் மிஸ்டர். ராம்.//

    You mean Tamil MA Director ?

    Hilarious post, anyway.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)