Thursday, August 2, 2007

சாமியார் சங்கம்!!!

கப்பி பிறந்த நாள் விழாக்கு நமீதா வராங்கனு நம்ம தள கிளப்பிவிட்ட புரளிய நம்பி ஊர்ல இருக்க எல்லா ஹோட்டலையும் சுத்திட்டு ஏமாந்து போய் கோபமா சங்கத்துக்கு வரார் நம்ம தல கைப்பு.

சங்கத்துக்குள்ள கால வெச்சவுடனே ஜெர்க்காகறாரு தல.

சங்கமே ஒரு ஆசிரமம் கணக்கா மாறியிருக்கு. எல்லா சங்கத்து சிங்கங்களும் காவி கட்டிட்டு பவ்யமா உக்கார்ந்திருக்காங்க.

தல அமைதியா வந்து தளபதியை கூப்பிடறார்.

"சிபி! என்னயா பண்ற? நமீதா வராங்கனு நீ கிளப்பிவிட்டதை நம்பி நாள் முழுக்க மெட்ராஸ்ல இருக்க எல்லா ஹோட்டலுக்கும் திரிஞ்சிட்டு வந்தா இங்க இந்த சங்கத்தையே மாத்தி வைச்சிருக்க"

"தலயானந்தா, இனிமே நீங்க என்னை தளபதினோ, சிபினோ கூப்பிடக்கூடாது. நான் இனிமே சிபியானந்தா. அதே மாதிரி இங்க இருக்கற சிங்கங்களுக்கு எல்லாம் திருநாமம் மாற்றப்பட்டுள்ளது. தேவானந்தா, இளவானந்தா, ராயலானந்தா, புலியானந்தா, வெட்டியானந்தா, ஜொள்ளானந்தா, கப்பியானந்தா, தம்பியானந்தா இப்படிதான் கூப்பிடனும். புரியுதா தலயானந்தா?"

"ஏய் தளபதி! நான் குச்சி ஐஸ் வாங்கி தின்ன கடனை அடைக்க சங்கத்தை அடகு வைச்சது உண்மைதான். அதுக்காக கடனை அடைக்க முடியாம சாமீயாராகறதெல்லாம் டூ மச். ஆமா சொல்லிட்டேன்"

"தல! இது சங்க கடனுக்காக போட்ட உடையில்லை. இந்த மாச அட்லாஸ் வாலிபருக்காக நாம ஏற்று கொண்ட வேடம்" ஜொள்ளானந்தா கண்ணிரூடன் சொல்கிறார்

"யாருப்பா அது எனக்கு தெரியாம?" கைப்ஸ் தீவிர சிந்தனையிலாழ்கிறார்.

சங்கத்து வாசலில் கார் வந்து நிற்கிறது.

"இதோ வந்துட்டார்"னு எல்லாரும் கோரசாக சொல்லி கொண்டே வெளியே செல்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட், டீ - சர்ட், ரே பேன் க்ளாஸ், தலையில் கோல்டன் கலர் டையுடன் (அந்நியன் ரேமோ போல்) "ஹே டீயூட்ஸ், வாட்ஸ் திஸ் நான்ஸென்ஸ். ஐ ஹேட் திஸ் காவி, யூ நோ" என்று சொல்லி கொண்டே இருங்குகிறார் நம் "KRS"

52 comments:

  1. வணக்கம் வருத்த படாத சாமீ

    ReplyDelete
  2. அட்றா சக்கை அட்றா சக்கை.

    வெட்டியானந்தா,"ரெமோ ஸ்டைல்" எல்லாம் கொஞ்சம் ஓவராத்தெரியல. KRS நல்லவருன்னு யாரோ தப்பா சொன்னதை சரின்னு நம்பினா, இப்போ நீங்க கெட்டவர்னு நல்லா சொல்றீங்களே

    ReplyDelete
  3. //மின்னுது மின்னல் said...

    வணக்கம் வருத்த படாத சாமீ //

    வா மின்னலு...

    நேத்து கப்பி பிறந்த நாள் விழா பதிவுக்கு நீ வராம தனியா ஆட வேண்டியதா போயிடுச்சி :-(

    ReplyDelete
  4. //ILA(a)இளா said...

    அட்றா சக்கை அட்றா சக்கை.

    வெட்டியானந்தா,"ரெமோ ஸ்டைல்" எல்லாம் கொஞ்சம் ஓவராத்தெரியல. KRS நல்லவருன்னு யாரோ தப்பா சொன்னதை சரின்னு நம்பினா, இப்போ நீங்க கெட்டவர்னு நல்லா சொல்றீங்களே //

    இளவானந்தா,
    ரேமோ மாதிரி வந்தா கெட்டவர்னு அர்த்தமா?

    ReplyDelete
  5. அட்லாஸ் வாலிபி மாதவின்னு சொன்னாங்களேன்னு ஓடி வந்தேன். நம்ம மாதவிப்பந்தல் ஆளா!! சரிதான்.

    அவரை சாதாரணமா எடை போடாதீங்க பசங்களா. இந்த மாதம் இது வரை வந்தவைகளிலேயே [முதல் மாதத்தைத் தவிர்த்துன்னு சொல்லிக்கட்டுமா? :))] சிறந்த மாதமா அமையப் போகுது பாருங்க!!!

    ReplyDelete
  6. //மின்னுது மின்னல் said...
    வணக்கம் வருத்த படாத சாமீ//

    மின்னலு...சர்வ மங்களம் உண்டாகட்டும்! இந்தாரும் பேக்பைப்பர் பிரசாதம் :-)


    //ILA(a)இளா said...
    KRS நல்லவருன்னு யாரோ தப்பா சொன்னதை சரின்னு நம்பினா, இப்போ நீங்க கெட்டவர்னு நல்லா சொல்றீங்களே//

    பக்தா இளா
    குருத் துவேஷம் கூடவே கூடாது!
    குருட்டு வேஷம் போடவே கூடாது!

    என்ன புரியலையா?...சரி,
    இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரத்தின் நட்சத்திரத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணா உடனே புரிஞ்சிடும்!
    தட்டுல ஒரு $501 தட்சிணை போடு! சகலம் புரியும்; சொர்க்கம் தெரியும்! :-)

    ReplyDelete
  7. நேத்து கப்பி பிறந்த நாள் விழா பதிவுக்கு நீ வராம தனியா ஆட வேண்டியதா போயிடுச்சி :-(
    //


    நமிதா படம் இருந்த இடத்தில் குந்த வேண்டியதா போயிட்டு :)

    ReplyDelete
  8. //நாமக்கல் சிபி said...
    Superb Into vetti!
    KRS Kalakkunga!//

    சிபியானந்தரே...சங்கத்தின் வரவு செலவை யாரு பாத்துக்கறா? அவங்களை நான் பாத்துக்கணமே! :-)

    ReplyDelete
  9. [முதல் மாதத்தைத் தவிர்த்துன்னு சொல்லிக்கட்டுமா? :))]
    //

    இருந்தாலும் இவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தண்ணடக்கம் இருக்க கூடாது

    :)

    ReplyDelete
  10. //சாதாரணமா எடை போடாதீங்க பசங்களா//
    சரிங்க, தனியா ஒரு எடை மிஷின் தயாரிக்க சொல்லிருவோம்

    ReplyDelete
  11. //இலவசக்கொத்தனார் said...
    அட்லாஸ் வாலிபி மாதவின்னு சொன்னாங்களேன்னு ஓடி வந்தேன்.//

    பக்தா, கொத்தானந்தா...
    கவலை வேண்டாம். உன் ஏக்கம் தீரும்! மாதவியும் என் பக்தை தான். அவள் சீடையாக உங்களுடன் உலா வருவாள்!
    (சீடனுக்குப் பெண்பால் சீடை - சரிதானே?) :-)

    //அவரை சாதாரணமா எடை போடாதீங்க பசங்களா.//

    நீயே சிஷ்யன்! மாதவிப் பந்தலுக்கு அடுத்த குருவாக யாரை நியமிக்கலாம் என்ற என் வாரிசு குழப்பம் தீர்ந்தது! :-)

    ReplyDelete
  12. ஆஹா...

    இப்பவே அடிச்சி ஆட ஆரம்பிச்சிட்டாரே :-)

    ReplyDelete
  13. //சங்கத்தின் வரவு செலவை யாரு பாத்துக்கறா?//
    உங்கள் கேள்வியில் சிறு பிழை இருக்கிறது குருவே, சங்கத்துக்கு ஒரே கணக்குதான். அது செலவு கணக்கு, வரவு கணக்குன்னா அது ஆப்புகள் மட்டுமே இருக்கு. அதை எந்த வங்கியிலும் வாங்கிக்க மாட்டேனுட்டாங்க.

    ReplyDelete
  14. //மின்னுது மின்னல் said...

    நேத்து கப்பி பிறந்த நாள் விழா பதிவுக்கு நீ வராம தனியா ஆட வேண்டியதா போயிடுச்சி :-(
    //


    நமிதா படம் இருந்த இடத்தில் குந்த வேண்டியதா போயிட்டு :) //

    படத்தை பார்த்தவுடனே பின்னூட்டம் போடாம படத்தையே பார்த்துட்டு இருந்த போல...

    ReplyDelete
  15. //ILA(a)இளா said...

    //சங்கத்தின் வரவு செலவை யாரு பாத்துக்கறா?//
    உங்கள் கேள்வியில் சிறு பிழை இருக்கிறது குருவே, சங்கத்துக்கு ஒரே கணக்குதான். அது செலவு கணக்கு, வரவு கணக்குன்னா அது ஆப்புகள் மட்டுமே இருக்கு. அதை எந்த வங்கியிலும் வாங்கிக்க மாட்டேனுட்டாங்க. //

    அந்த வரவு கணக்கு எங்க தலைக்கும், சின்ன தலைக்கும் தான் தெரியும். ஏன்னா அவுங்க தான் பொதுவா வாங்குவாங்க.

    இந்த மாசம் எல்லா வரவையும் உங்க பேருக்கு வைக்க சொல்லிடுவோம் ;)

    ReplyDelete
  16. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //இலவசக்கொத்தனார் said...
    அட்லாஸ் வாலிபி மாதவின்னு சொன்னாங்களேன்னு ஓடி வந்தேன்.//

    பக்தா, கொத்தானந்தா...
    கவலை வேண்டாம். உன் ஏக்கம் தீரும்! மாதவியும் என் பக்தை தான். அவள் சீடையாக உங்களுடன் உலா வருவாள்!
    (சீடனுக்குப் பெண்பால் சீடை - சரிதானே?) :-)//

    சீடனுக்கு பெண்பால் சீடி இல்லையா?

    ReplyDelete
  17. வாரிசு அரசியலை நாங்கள் (மின்னல்,கப்பி,வெட்டி,) எதிர்க்கிறோம்.

    ராமுக்கே தரவேண்டும்

    (அப்பதான் ராமுக்கு கல்யாணமே ஆகாமல் நிரந்தர தல யா இருக்க வைக்கலாம்)

    ReplyDelete
  18. படத்தை பார்த்தவுடனே பின்னூட்டம் போடாம படத்தையே பார்த்துட்டு இருந்த போல...
    //

    ஹி ஹி இதையெல்லாம் இங்க சொல்லிகிட்டு எனக்கு வெக்க வெக்கமா இருக்கு..:)

    ReplyDelete
  19. //வெட்டிப்பயல் said...
    (சீடனுக்குப் பெண்பால் சீடை - சரிதானே?) :-)//
    சீடனுக்கு பெண்பால் சீடி இல்லையா?//

    சீடி-ன்னு சொன்னா ரசிக்கத் தான் முடியும்!
    சீடை-ன்னு சொன்னா ருசிக்கவும் முடியும்! :-)

    இதுக்கு மேல அடியேன் என்னத்த சொல்வேன் வெட்டி ஆனந்தரே!
    சரி...நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான் போல!
    சீடை பிராப்தரஸ்து! :-)

    ஓ...ஐ ஆம் சாரி..தமிழ்ல சொல்லணும்ல!
    சீடை வரம் கிடைக்கட்டும்! :-)

    ReplyDelete
  20. En Photovai parkka En Thambi Minnal en vetkka padanum?

    ReplyDelete
  21. Nameedha said...
    En Photovai parkka En Thambi Minnal en vetkka padanum?
    //

    என்ன கொடுமை வெட்டி இது..?

    ReplyDelete
  22. //மின்னுது மின்னல் said...
    //படத்தை பார்த்தவுடனே பின்னூட்டம் போடாம படத்தையே பார்த்துட்டு இருந்த போல...
    //

    ஹி ஹி இதையெல்லாம் இங்க சொல்லிகிட்டு எனக்கு வெக்க வெக்கமா இருக்கு..:)//

    மின்னல் இவ்வளவு கூச்ச சுபாவியா?
    இவர் மடத்துக்குச் சரிப்பட்டு வருவாரா?
    ராயல் ராமச்சந்திரா...உன் கருத்து என்ன மகனே?

    ReplyDelete
  23. //வாரிசு அரசியலை நாங்கள் (மின்னல்,கப்பி,வெட்டி,) எதிர்க்கிறோம்.

    ராமுக்கே தரவேண்டும்

    (அப்பதான் ராமுக்கு கல்யாணமே ஆகாமல் நிரந்தர தல யா இருக்க வைக்கலாம்) //


    ஏன்யா இம்புட்டு கொலைவெறி உங்களுக்கு?

    :(

    ReplyDelete
  24. //மின்னுது மின்னல் said...

    Nameedha said...
    En Photovai parkka En Thambi Minnal en vetkka padanum?
    //

    என்ன கொடுமை வெட்டி இது..? //

    மின்னல்,
    அத போட்டது நானில்லை...

    ReplyDelete
  25. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //வெட்டிப்பயல் said...
    (சீடனுக்குப் பெண்பால் சீடை - சரிதானே?) :-)//
    சீடனுக்கு பெண்பால் சீடி இல்லையா?//

    சீடி-ன்னு சொன்னா ரசிக்கத் தான் முடியும்!
    சீடை-ன்னு சொன்னா ருசிக்கவும் முடியும்! :-)

    இதுக்கு மேல அடியேன் என்னத்த சொல்வேன் வெட்டி ஆனந்தரே!
    சரி...நீங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான் போல!
    சீடை பிராப்தரஸ்து! :-)

    ஓ...ஐ ஆம் சாரி..தமிழ்ல சொல்லணும்ல!
    சீடை வரம் கிடைக்கட்டும்! :-) //

    ஆஹா,
    உங்களை பாராட்ட வார்த்தையே வரலை.. கண்ணுல ஆனந்த கண்ணீர்தான் வருது...

    ReplyDelete
  26. மின்னல் இவ்வளவு கூச்ச சுபாவியா?
    இவர் மடத்துக்குச் சரிப்பட்டு வருவாரா?
    ராயல் ராமச்சந்திரா...உன் கருத்து என்ன மகனே?
    //

    நல்லவன் மாதிரியாவது நடிக்கனும் இல்லைனா சீடனா சேர்க்க மாட்டாங்கனு சொன்னாங்க தப்போ...?

    ReplyDelete
  27. //அப்பதான் ராமுக்கு கல்யாணமே ஆகாமல் நிரந்தர தல யா இருக்க வைக்கலாம்//
    சிபியின் சார்பாக நான் வழிமொழிகிறேன்

    ReplyDelete
  28. //மின்னல்,
    அத போட்டது நானில்லை... //

    வெட்டி,

    நீங்க சொல்றதைப் பார்த்த அந்த பின்னூட்டத்தை ஏதோ நானே போட்டுகிட்ட மாதிரில்ல இருக்கு! பிச்சிப் பிடுவேன் பிச்சி!

    நான் மின்னல் அல்ல

    ReplyDelete
  29. //மின்னல்,
    அத போட்டது நானில்லை...//

    நானும் இல்லே. அப்போ ?????????????
    மணடையில இப்பவே மின்னலு சே சே ஃபளாஷ் அடிக்குதே

    ReplyDelete
  30. //பின்னூட்டத்தை ஏதோ நானே போட்டுகிட்ட மாதிரில்ல இருக்கு! பிச்சிப் பிடுவேன் பிச்சி!//
    நான் அவன் இல்லை படத்துல கூட நமீதாவை பார்த்து இப்படிதான் சொல்லுவாராம்

    ReplyDelete
  31. நீங்க சொல்றதைப் பார்த்த அந்த பின்னூட்டத்தை ஏதோ நானே போட்டுகிட்ட மாதிரில்ல இருக்கு! பிச்சிப் பிடுவேன் பிச்சி!
    //

    தள எனக்கு தெரிஞ்சிடுச்சி

    ReplyDelete
  32. தள நான் எங்கையாவது நயந்தாராவை வம்புக்கு இழுத்துட்டேனா..

    அதான் கோபமா..?

    :)

    ReplyDelete
  33. ஆனா அந்த பின்னூட்டத்தை நாந்தான் போட்டேன்

    கடவுளின் தொழிலாளி

    ReplyDelete
  34. ILA(a)இளா said...
    //அப்பதான் ராமுக்கு கல்யாணமே ஆகாமல் நிரந்தர தல யா இருக்க வைக்கலாம்//
    சிபியின் சார்பாக நான் வழிமொழிகிறேன்
    //

    தலையின் சார்பாக இதை நான் ஏற்று கொள்கிறேன்
    :)

    ReplyDelete
  35. இந்த மாதிரி விளையாட்டெல்லாம் அந்தத் தொழிலாளி பண்ண மாட்டாருங்க அனானி

    ReplyDelete
  36. ஊரு சனம் தூங்கிடுச்சு, ஊதக்காத்தும் அடிச்சிடுச்சு

    பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே!

    விவசாயி நெனப்பால வாடும் ராதா

    ReplyDelete
  37. ராதா said...
    ஊரு சனம் தூங்கிடுச்சு, ஊதக்காத்தும் அடிச்சிடுச்சு

    பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே!
    //

    தலையாரி வேலை காலியா இருக்குனு உங்களுக்கு யாரு சொன்னா ராதா அவர்களே (மரியாதை)

    ReplyDelete
  38. ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது!

    என் இரு கண்ணிலும் உன் ஞாபகம் நீங்காமல் இருக்கின்றது!


    பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது!

    மின்னல்! பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது!

    ReplyDelete
  39. //நான் மின்னல் அல்ல said...
    நீங்க சொல்றதைப் பார்த்த அந்த பின்னூட்டத்தை ஏதோ நானே போட்டுகிட்ட மாதிரில்ல இருக்கு! பிச்சிப் பிடுவேன் பிச்சி!//

    ஆகா...இது என்ன வன்முறை!
    ஆசிரமத்தில் பிச்சிட எல்லாம் கூடாது! அதற்கு எல்லாம் ஒரு நேரம் வரும்! அப்ப பக்கத்து ஆசிரமத்துல போய் அதெல்லாம் வச்சிக்கலாம்!
    அது வரை பொறுமை பொறுமை, பக்த கோடிகளே!

    ReplyDelete
  40. //ஸ்ரீ தேவி said...
    ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது!
    என் இரு கண்ணிலும் உன் ஞாபகம் நீங்காமல் இருக்கின்றது!//

    ஆகா, வாம்மா ஸ்ரீ தேவி! நல்லா இருக்கியா குழந்தே! உன்னைய வச்சி தான் முதல் பதிவ போட்டேன். அதே பாசத்தோட இப்பவும் வந்துட்டியேம்மா மயிலு!

    வடிவேலன் மனச வைச்சான், மலர வைச்சான்; மயில அனுப்பிச்சான்!
    எல்லாம் இறைவன் செயல்! :-)

    ReplyDelete
  41. LOL!!!
    கே.ஆர்.எஸ் வாலிபரா??????

    அண்ணாத்த!! நீங்க பதிவே எதுவும் போட வேண்டாம்!!!
    உங்கள வாலிபர்-னு சொன்னத பாத்தே மக்கள் 1 மாசமா பாத்து பாத்து சிரிச்சிப்பாய்ங்க!!! :-D

    வா.வா.ச வின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு!!! :-))))

    ReplyDelete
  42. ஆகா, கேஆர்எஸ் ஆ இந்த மாதம்.
    வருக KRS கலக்குங்க

    ReplyDelete
  43. //CVR said...
    உங்கள வாலிபர்-னு சொன்னத பாத்தே மக்கள் 1 மாசமா பாத்து பாத்து சிரிச்சிப்பாய்ங்க!!! :-D//

    ஆமாம் CVR
    கண்ணன் ஒரு கைக்குழந்தை என்பது தான் பாட்டு.
    கண்ணபிரான் ஒரு கைக்குழந்தை! அவனைப் போய் வாலிபர் என்று எப்படிச் சொல்லலாம்-னு நீங்க கேட்கறது ரொம்ப சரி.

    உங்கள மாதிரி இங்க வேறு யாருமே சிந்திக்க மாட்டறாங்களே! ஏன் CVR?
    இருடி...உனக்குத் தான் மொத தேங்காய் ஒடைக்கப் போறோம்! அப்ப சிரிப்பாச் சிரிப்பாய்ங்க பாரு!

    சீடர்களே, இந்த துஷ்ட CVR பையனைப் பிடித்து அந்த வேப்பமரத்துல கட்டுங்க! :-))

    ReplyDelete
  44. //Sathia said...
    ஆகா, கேஆர்எஸ் ஆ இந்த மாதம்.
    வருக KRS கலக்குங்க
    //

    நன்றி சத்தியா...கலக்கிடுவோம்! :-)

    ReplyDelete
  45. //ஆமாம் CVR
    கண்ணன் ஒரு கைக்குழந்தை என்பது தான் பாட்டு.
    கண்ணபிரான் ஒரு கைக்குழந்தை! அவனைப் போய் வாலிபர் என்று எப்படிச் சொல்லலாம்-னு நீங்க கேட்கறது ரொம்ப சரி.///
    ROFL!!!!
    இன்னும் அந்த மாதிரி எண்ணம் எல்லாம் இருக்கா???
    இந்த மாசம் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகப்போகுது போல!! :-P

    //உங்கள மாதிரி இங்க வேறு யாருமே சிந்திக்க மாட்டறாங்களே! ஏன் CVR?
    இருடி...உனக்குத் தான் மொத தேங்காய் ஒடைக்கப் போறோம்! அப்ப சிரிப்பாச் சிரிப்பாய்ங்க பாரு!///
    எல்லாம் இறைவன் செயல்!!!
    இது போன்ற அடக்குமுறை அராஜகத்திற்கும், மிரட்டல் மந்திரங்களுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்!!! :-P

    //
    சீடர்களே, இந்த துஷ்ட CVR பையனைப் பிடித்து அந்த வேப்பமரத்துல கட்டுங்க! :-))//
    உங்க கிட்ட சிடிக்கள் எல்லாம் இல்லையா?? :-P

    ReplyDelete
  46. //CVR said...
    சீடர்களே, இந்த துஷ்ட CVR பையனைப் பிடித்து அந்த வேப்பமரத்துல கட்டுங்க! :-))//
    உங்க கிட்ட சிடிக்கள் எல்லாம் இல்லையா?? :-P//

    அடே CVR
    சீடை வெட்டியானந்தாவுக்கு மட்டுமே!
    சீடிக்கள் எல்லாம் பக்த கோடிகளுக்கு மட்டும் தான்.
    பக்த கேடிகளைச் சமாளிக்க சீடர்களே போதும்! - புரிந்ததா? :-)

    ReplyDelete
  47. வாங்க தெய்வமே வாங்க :))

    ReplyDelete
  48. //கப்பி பய said...
    வாங்க தெய்வமே வாங்க :))//

    வந்துட்டோம் பக்தனே வந்துட்டோம்!
    என்னடா இன்னும் நம்ம ஃபேவரிட் நிலவனைக் கானோமேன்னு பார்த்தேன்! நமீ கூட பார்ட்டி எப்படி போச்சு சிஷ்யா? எனக்கு ஏதாச்சும் கொடுத்துவிட்டாங்களா நம்ம நமீ? :-)

    ReplyDelete
  49. அண்ணா,
    சிவிஆர்க்கு "தேங்காய்" உடைப்பதை பற்றி சில ஆலோசனைகள் என்னிடம் உள்ளது.அதை நாம் ஒரு நாள் கலந்து பேசுவோம்.கலக்கிடுங்க(சிவிஆர் வயிறு கலங்கனும் :D)
    வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  50. //துர்கா|thurgah said...
    அண்ணா,
    சிவிஆர்க்கு "தேங்காய்" உடைப்பதை பற்றி சில ஆலோசனைகள் என்னிடம் உள்ளது.அதை நாம் ஒரு நாள் கலந்து பேசுவோம்//

    பேசிடுவோம்! பேசிடுவோம்!

    //சிவிஆர் வயிறு கலங்கனும் :D)
    வாழ்த்துக்கள் அண்ணா//

    பாசமலர் தங்கை-ன்னா இப்படி இல்ல இருக்கணும்! அடடா! அடடா!
    நீங்க தவம் செஞ்சிருக்கீங்க CVR! :-)

    ReplyDelete
  51. // ILA(a)இளா said...
    சங்கத்துக்கு ஒரே கணக்குதான். அது செலவு கணக்கு, வரவு கணக்குன்னா அது ஆப்புகள் மட்டுமே இருக்கு. அதை எந்த வங்கியிலும் வாங்கிக்க மாட்டேனுட்டாங்க//

    பாங்க் ஆப் பரோட்டாவில்,
    Direct Deposit கணக்கு இருக்குறதா கைப்ஸானந்தா சொன்னாரே!
    ஏமாத்திப்புட்டாரோ!

    ச்ச்சே இருக்காது! கைப்பு "ரொம்ப நல்லவரு!"

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)