Friday, August 3, 2007

டெவில் ஷோ - நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள்! - 1

இடம்: தேவ லோகம் - இந்திரனின் சபை
ரம்பையும் ஊர்வசியும், அண்ணன் கவுண்டமணியை இந்திரனின் சபைக்கு அழைத்து வருகிறார்கள்.
கவுண்டர் ஒரே ஜாலி மூடில், ஒட்டகத்தைக் கட்டிக்கோ-ன்னு பாடிக்கிட்டே வருகிறார். அப்படியே கெட்டியாக ஒட்டிக்கோ-ன்னு பக்கத்துல ரம்பாவோடு ஒட்டிக்கிட்டு வருகிறார்

இந்திரன்: வருக கவுண்டரே! இந்திர சபைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக!
கவுண்டர்: எங்க வரவு நொல் வரவு ஆவறது எல்லாம் இருக்கட்டும்.
ஒரு பெரியகவுண்டர் நான் வரேன்னா... வாட் இஸ் திஸ்?
கெரகம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், ஒயிலாட்டம்...இதெல்லாம் ஒண்ணுமே இல்ல...என்னய்யா வரவேற்பு இது? ஒரு கட் அவுட் கூட இல்ல! நான்சென்ஸ்!

(அண்ணே, இங்க வந்ததும் வராததுமா லொள்ளு பண்ணறீங்களே!
கொஞ்சம் பாத்து பேசுங்கண்ணே! இது இந்திரன் சபைண்ணே...என்று ஒரு குரல் கேட்கிறது....)
கவுண்டர்: எவண்டா அவன் என் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடறது?

(அங்கு ஆஸ்தான மண்டபத்தில், ஒரு ரத்தின ஆசனத்தில், செந்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கார். கவுண்டருக்கு செந்திலைக் கண்டதும் ஒரே ஷாக்!!!)
அடப்பாவி...நீயா? வீங்குன வாயா...நாயே நாயே!
நீ இங்க இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா, நான் நரகத்துக்கே போயி இருப்பேனேடா, பனங்கா மண்டையா! உன்னையெல்லாம் எவன்டா சொர்கத்துக்குள்ளாற வுட்டான்?

செந்தில்: அதோ அவரப் போயி கேளுங்கண்ணே. புண்ணியவான் அவரு தான் என்னைய உள்ளார விட்டாரு.
கவுண்டர்: (இந்திரனை நோக்கித் திரும்பி) அடச்சே...இவன் புண்ணியவானா? நாலு கொள்ளை ரெண்டு கற்பழிப்பு கேசுல இவனத் தான் பூலோகத்துல பல பேர் தேடுறாங்க! ...

சரி, எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்!
(செந்திலைப் பார்த்து...)
கொசப்பேட்டை,கொத்தவால் சாவடியில இருக்குற குப்பன் வீட்டுல கூட "நாய்கள் ஜாக்கிரதை"-ன்னு ஒரு போர்டு தொங்கும்! ஆனா இங்க இவ்ளோ பெரிய காட்டு நாய் - உன்னைய உள்ள வுட்டுட்டு, ஒரு போர்டு கூட வைக்காம இருக்காங்க...
ச்சே...என்ன சொர்க்க லோகமோ சொரக்கா லோகமோ...போங்க!

செந்தில்: அண்ணே ஓவராப் பேசாதீங்க சொல்லிட்டேன். உங்க ஜம்பம் எல்லாம் பூலோகத்தோடு முடிஞ்சி போச்சி! இங்க நான் தான் சீனியர்!
கிவ் ரெஷ்பக்ட் அன் டேக் ரெஷ்பக்ட்!
கவுண்டர்: ஆமாம்...கண்டதை துன்னுட்டு, ஃப்ரீயா கெடைக்குதே-ன்னு பினாயிலையும் குடிச்சிட்ட.
அதான் டிக்கெட் வாங்கிக்குனு சீக்கிரம் வந்துட்ட...அதுனால நீ எல்லாம் சீனியராடா?




(அந்த சமயம் பார்த்து, செந்தில் கையில் உள்ள கோப்பையில் சோம பானத்தை ஊற்றுகிறாள் மேனகை! அதையே வெறித்து வெறித்துப் பார்க்கிறார் கவுண்டர்...அவருக்கும் உள்ளுர சபலம்!)

செந்தில்: அண்ணே...அப்படிப் பாக்காதீங்கண்ணே...எனக்கு வயிறு வலிக்கப் போகுது!
கவுண்டர்: ஆமாண்டா..வயிறு வலிக்கும், தயிரு வலிக்கும்!
டேய், அப்படியே வயிறு வலிச்சா, ரெண்டு இட்லி-கெட்டிச் சட்னி வைச்சி அமுக்குவியேடா! ஒடனே உன் வயித்து வலி போயிடுமே!
வெக்கமில்லாம அவளும் ஃபினாயிலு ஊத்துறா. இவனும் குடிக்கிறான் பாரு!
த்தூ.....இந்திரலோகத்தையே இன்ஸ்டன்ட் பார் ஆக்கிட்டானுங்கடா சாமீ!

(மேனகையைச் சொன்னதும் இந்திரனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது!...)
இந்திரன்: ட்ட்ட்ட்டேய்...யாரு வூட்டுக்கு வந்து இன்னா பேசுற நீயி? அவ என்னோட ஃபிகருடா!
அவ ஃபெனாயிலுனா ஊத்துவா, பாமாயிலுனா ஊத்துவா! அத கேக்க நீ யார்றா?

கவுண்டர்: ஐய்யய்யோ, சாரிங்க ஆபிசர்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தூய தமிழ்ல ஜிரா மாதிரி பேசிக்கினு இருந்தீங்களே ஆபிசர்!
இப்படி வெட்டி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே ஆபிசர்! (கவுண்டர் பம்முகிறார்)

இந்திரன்: ஏதோ,
தமிழ்த்திரையில் அவை கூட்டி,
நகைச்சுவையில் சுவை கூட்டி,
கலாய்த்தல் திணை என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் செய்தீர்கள் என்று தான் உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்து வந்தோம்!
அதற்காக உங்களுக்குச் சொர்க்கத்தில் நிரந்தரமாக இடம் கொடுத்து விட்டோம் என்று நினைத்து விடாதீர்கள்.

இங்கு இன்னும் ஓர் ஆண்டு, நீங்கள் எனக்கும் என் நண்பர் செந்திலார்க்கும் விகடகவியாக இருக்கலாம்.
இல்லை...அது வேண்டாம் என்றால், இருக்கவே இருக்கு...
நரகத்தில் செல் ஆபிசராக உங்களை நியமித்து அனுப்பி விடுவோம்!

கவுண்டர்: (மனசுக்குள்ளேயே) நான் அப்பவே நெனைச்சேன்டா...இந்தப் பேரிக்கா மண்டையன் ஏதாச்சும் டகால்டி வேல பண்ணி இருப்பான்னு...இவனுக்கு நாம விகடகவியா? தூ....இதுவும் ஒரு வேலையா?...(உரத்த குரலில்)

ஐ ஆம் வெரி சாரி ஆபிசர்...
இந்தாங்க ஆபிசர், உங்களுக்காக பூலோகத்துல இருந்து காணிக்கை ஒண்ணு கொண்டாந்தேன் ஆபிசர்...
இதை வச்சிக்கிட்டு ஒரு நல்ல தீர்ப்பா சொல்லுங்க ஆபிசர்!
பேப்பர்-லாம் பக்காவா இருக்குங்க ஆபிசர்!
(திருக்குறள் புத்தகத்தில் பல டாலர் நோட்டுகளைச் சொருகி இந்திரன் கையில் தருகிறார்!)

இந்திரன்: ஆகா..எனக்கே லஞ்சமா? என்ன ஆணவம்! என்ன ஆணவம்!....இது இந்திர லோகமடா
இங்கே நோ லஞ்சம்! ஒன்லி மஞ்சம்!! - புரிஞ்சுதா?
யாரங்கே, இவனை நரகத்தில் செல் நம்பர் 420இல் தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள்! அங்குள்ள பாவிகளை எல்லாம் மேய்க்கும் டேமஜராக இவனை அறிவித்து விடுங்கள்!



கண் மூடிக் கண் திறப்பதற்குள்...

கவுண்டர் நரகத்தில் தூக்கி எறியப் படுகிறார்.
யூனிபார்ம் கொடுத்து, நேம் ப்ளேட் ஒட்டி, அவரை செல் நம்பர் 420க்கு அதிகாரியாக நியமிக்கிறார்கள்!
முதல் நாள் ரவுண்ட்சுக்குச் செல்கிறார் கவுண்டர்!
அங்கே...

ஒரே கொதிப்பு, வெக்கை, புழுக்கம்...
அண்டாவில் எண்ணெய் கொதிக்க, பலரை அதில் முக்கி முக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்...
இந்தப் பக்கம் "பெருமாளே பெருமாளே" என்று ஒரு சத்தம்...
அந்தப் பக்கம் "முருகா முருகா" என்று இன்னொரு சத்தம்!
அட இது என்ன கூத்து என்று பார்த்தால்...
அங்கே கொதிக்கும் அண்டாக்களில்...ஆன்மீகப் பதிவர்கள்!

மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவிசங்கர்
பக்தியுடன், கோ. இராகவன்
அடியேன் சிறிய ஞானத்தன், குமரன்
முருக பக்தர் VSK
தத்துவ வித்தகர் ஞானவெட்டியான் ஐயா
முனைவர் நா.கண்ணன் ஐயா
ஆன்மீகப் பயணம், கீதா சாம்பசிவம்
நாச்சியார், வல்லியம்மா
பித்தானந்தா, நாமக்கல் சிபி
வெட்டிப்பயல்
என்று வரிசையா அத்தனை ஆன்மீகப் பதிவரையும் வாட்டி வதக்கிக் கொண்டு இருந்தார்கள்!

கவுண்டர்: அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இங்க! ஒண்ணுமே புரியலையடா சாமீ!
ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா-ல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க!
திருப்புகழ் இன்னா, அந்தாதி இன்னா, சுப்ரபாதம் இன்னா - கடைசிலே சுத்தற பாதமா ஆயிட்டானுங்களேப்பா....

இரு....இன்னா தான் விஷயம்ன்னு போயி பார்ப்போம்...
(தொடரும்...)

93 comments:

  1. //கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தூய தமிழ்ல ஜிரா மாதிரி பேசிக்கினு இருந்தீங்களே ஆபிசர்!
    இப்படி வெட்டி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே ஆபிசர்//
    ஆஹா ரவுண்ட் கட்டி அடிக்கறீங்க. ம்ம் ஸ்டார்ட் மீஸிக்.

    //ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா இல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க//
    சில நேரத்துல உண்மைகள் சடார்னு வருது பார்த்தீங்களா?

    ReplyDelete
  2. WOWOWOW!!!
    Super post!!!!

    உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!!! :-D

    ReplyDelete
  3. //ILA(a)இளா said...
    ஆஹா ரவுண்ட் கட்டி அடிக்கறீங்க. ம்ம் ஸ்டார்ட் மீஸிக்//

    யெஸ் 1, 2, 3....

    ////ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா இல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க//
    சில நேரத்துல உண்மைகள் சடார்னு வருது பார்த்தீங்களா?//

    சில நேரங்களில் சில உண்மைகளைச் சொல்ல முடிவதில்லை, இளா!
    என்ன செய்ய?
    நியாயமாப் பாத்தா, ஒங்களையும் அந்த லிஸ்டில் சேர்த்திருக்கணும்! ஐயோ, நான் பொய் சொல்லிட்டேனே! :-)


    சங்கத்துல, பதிவை ரீ-எடிட் செய்ய விதிகள் உண்டா தல, தளபதி?? :-))

    ReplyDelete
  4. சூப்பர்! ரொம்ப நல்லா வந்திருக்கு. சஸ்பென்ஸை சீக்கர்ம் சொல்லிடுங்க. அது சரி நாமக்கல்லாரை இந்த லிஸ்டில் சேர்த்தது சரியா :-)

    ReplyDelete
  5. ரவி அண்ணாவின் அட்டகாசமான பதிவு.காமெடி,திகில்,மர்மம் என்று ஒரே பதிவில் கலக்குறீங்க அண்ணா.இதுல love scientist காக ஏதாவது இருக்கின்றதா? ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்

    ReplyDelete
  6. ரவி,
    இந்தப் பதிவைப் படிச்சு இன்னும் சிரிப்பு அடங்கேலை.

    பதிவைப் பாதி நடுவிலை படிச்சுக் கொண்டு போகும் போது , இது நம்ம கண்ணபிரான் ரவிசங்கரின் பதிவுதானா என ஒரு ஐயம் கூடத் தோன்றியது. posted by kannabiran, RAVI SHANKAR (KRS) எனும் வாசகத்தைப் பார்த்துத் தான் உறுதி செய்து கொண்டேன்.

    ஏனெனில் நீங்கள் இப்பிடி நகைச்சுவையாக, அதுவும் நாயே பேயே என்றெல்லாம் எழுதி நான் இதுவரை படிக்கவில்லை. :-))

    மிகவும் நகைச்சுவையான பதிவு.

    /*
    அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இங்க! ஒண்ணுமே புரியலையடா சாமீ!
    ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா இல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க!
    திருப்புகழ் இன்னா, அந்தாதி இன்னா, சுப்ரபாதம் இன்னா - கடைசிலே சுத்தற பாதமா ஆயிட்டானுங்களேப்பா....*/

    ஹிஹிஹிஹி... இவர்கள் எல்லாம் எப்படி நரகத்தில் மாட்டுப்பட்டார்கள் என அறிய மிகவும் ஆவலாக உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. //அத்தனை ஆன்மீகப் பதிவரையும் வாட்டி எடுத்துக் கொண்டு இருந்தார்கள்!//

    இதுக்குத்தான் வெறும் உப்புமா போதுமடான்னு அப்பீட் ஆகிக்கிறது.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. பதிவில் மாபெரும் பிழையுள்ளது.

    கண்டுபிடிப்பவர்களுக்கு சொர்கத்தில் ஒரு சீட் ரிசர்வ் செய்யப்படும் ;)

    ReplyDelete
  10. superb !!

    படிச்சுட்டு கொஞ்சம் கண்ணை மூடி யோசிச்சா, கவுண்டமணி கொரலே காதுல கேக்குது,

    கலக்கீட்டீங்க போங்க )))

    ReplyDelete
  11. //கவுண்டர்: (இந்திரனை நோக்கித் திரும்பி) அடச்சே...இவன் புண்ணியவானா? நாலு கொள்ளை ரெண்டு கற்பழிப்பு கேசுல இவனத் தான் பூலோகத்துல பல பேர் தேடுறாங்க! ... சரி, எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்!//

    சூப்பர்.......

    ReplyDelete
  12. //வெட்டிப்பயல் said...
    பதிவில் மாபெரும் பிழையுள்ளது.//

    என்ன பிழை கண்டீர்?
    சொற் சுவையிலா இல்லை பொருட் சுவையிலா?
    நீங்கள் தான் சங்கத்தின் கீரநக்கியோ? :-)

    //கண்டுபிடிப்பவர்களுக்கு சொர்கத்தில் ஒரு சீட் ரிசர்வ் செய்யப்படும் ;)//

    இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்!
    என்ன சீட்டு சொல்றாரு-ன்னு தெரியுதுல்ல?

    ReplyDelete
  13. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //வெட்டிப்பயல் said...
    பதிவில் மாபெரும் பிழையுள்ளது.//

    என்ன பிழை கண்டீர்?
    சொற் சுவையிலா இல்லை பொருட் சுவையிலா?
    நீங்கள் தான் சங்கத்தின் கீரநக்கியோ? :-)//

    ஆன்மீக பதிவர் கூட்டத்தில் என்னையும் சேர்த்து இந்த பதிவை நகைச்சுவை பதிவாக்கிவிட்டீர்...

    ReplyDelete
  14. ஹைய்யோ............

    நான் தப்பிச்சேன்:-))))))

    ReplyDelete
  15. பட்டைய கிளப்புனது kannabiran, RAVI SHANKAR (KRS)

    உண்மைலயே பட்டைய கிளப்பிட்டீங்க. . . . . .
    அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க. . . . . .

    ReplyDelete
  16. ஆகஸ்ட் 5ம் தேதிதான் சனி பெயர்ச்சியாம். வ.வா.சங்கத்துக்கும் மட்டும் கொஞ்சம் அட்வான்ஸா காவி கட்டி வந்திருக்கே

    ReplyDelete
  17. பல ரேஞ்சிலே பதிவு போடறீங்க!

    ஸ்ரீராமானுஜர் பிரபத்தி பண்ணறார். பெருமாள் அவர் முறைப்பாடைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார். "நான் நேற்று செயத தவறுகளைப் பொறுப்பாயாக, நாளை செய்யப்போகும் தவறுகளை பொறுப்பாயாக, இன்று செய்யும் தவறுகளை..."

    "இராமநுஜா! கொஞ்சம் பொறு! நீ என் சந்நிதியில் இப்போது இருக்கிறார். இப்போது என்ன தவறு செய்துவிடமுடியும்?" பெருமாள் குழம்பிப்போய் கேட்கிறார்.

    "நான் உண்மையாக சரணாகதி செய்வதாய் நீர் நம்புகிறீரே! உம்மைச் சொல்ல வேண்டும்" என்றாராம் ராமாநுஜர்.

    இது உண்மைக் கதை!

    "ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா இல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க!"

    என்பது சரியே!

    தொண்டரடியின் "திருமாலை"யிலும் இப்படியானதொரு அருமையான பாசுரம் வரும். நம்மையெல்லாம் ஆஸ்திகர் என்று பெருமாள் நம்புகிறாரே என்று விலா வெடிக்க சிரித்துக் கொண்டு வருவதாக!

    நரகம் அப்படியொன்றும் கஷ்டமானதில்லை! "நாராயணா" என்று சொல்லிவிட்டால் எல்லாம் மாறிவிடும். இந்த பிட்டையும் கடைசியில் சேர்த்துடுங்கோ!

    ReplyDelete
  18. வெங்கட். இனிமே KRS பட்டை, லவங்கம், கசமுசா, சீ சீ, கச கசா எல்லாம் கெளப்புவாரு பாருங்க

    ReplyDelete
  19. //நரகம் அப்படியொன்றும் கஷ்டமானதில்லை! "நாராயணா" என்று சொல்லிவிட்டால் எல்லாம் மாறிவிடும்//
    "நாராயணா"
    "நாராயணா"
    "நாராயணா"
    "நாராயணா"

    சொல்லியாச்சே. இந்த மாசம் முழுசும் இவர்தான் அட்லாஸாம் இல்லே. :(

    ReplyDelete
  20. கலக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, கண்ணபிரான்!

    ஆண்டவனைத் திட்டினாக்கூட பொறுத்துப்பான்.

    அடியவரைக் கலாய்ச்சா, அந்த அடியாரே வேண்டினாக்கூட விட மாட்டானாம்!

    சொல்லுறத நான் சொல்லிப்புட்டேங்க
    செய்யுறத செஞ்சுப்புடுங்க!

    :)))))))))))

    வாழ்த்துகள்!

    கலக்குங்க!

    :))

    ReplyDelete
  21. //ILA(a)இளா said...
    வெங்கட். இனிமே KRS பட்டை, லவங்கம், கசமுசா, சீ சீ, கச கசா எல்லாம் கெளப்புவாரு பாருங்க//

    பட்டை, லவங்கம் எல்லாம் போட, சங்கத்துல என்ன அன்னதானமா... ச்சே பிரியாணி தானமா நடக்குது?
    பிரியாணியா ரெடி பண்ணுறாங்க இன்னிக்கி லஞ்சுக்கு?

    ராயல் ராமா? இன்னாப்பா லஞ்ச் மெனு? சங்கத்துச் சிங்கங்களுக்குப் பசி வந்துருச்சு போல கீதே! சீக்கிரம் ஏதாச்சும் கொட்டி கிளறி பசி ஆத்துப்பா!

    ReplyDelete
  22. சபாஷ் கே ஆர் எஸ்......

    பாலாஜி சொன்ன மாதிரி, ஆன்மீக பதிவர்கள் லிஸ்ட்ல அவரையும் சேர்த்து எல்லோரையும் நகைச்சுவையாளரர்களாக்கிட்டீங்க...
    :-)


    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  23. //சங்கத்துச் சிங்கங்களுக்குப் பசி வந்துருச்சு போல கீதே!//
    எங்களுக்கு பசி வந்தா அடுத்தவங்களை காலாய்ச்சு பசியாத்திக்குவோம். இன்னிக்கு நீங்கதான் சாப்பாடு.மக்களே ஃபுல் மீல்ஸ் ரெடி வாங்க..

    ReplyDelete
  24. //ILA(a)இளா said...
    ஆகஸ்ட் 5ம் தேதிதான் சனி பெயர்ச்சியாம். வ.வா.சங்கத்துக்கும் மட்டும் கொஞ்சம் அட்வான்ஸா காவி கட்டி வந்திருக்கே//

    யாருப்பா அது, காவி ட்ரெஸ் போட்டுக்குனு இருக்கறது?
    நல்ல வேளை நான் ரெமோ ரேஞ்சுல வந்துட்டேன்...இல்லீன்னா சனிப் பெயர்ச்சி-னு நம்மள இல்ல இந்த விவசாயி பெயர்ச்சி மேஞ்சிடுவாரு! :-)

    ReplyDelete
  25. //இலவசக்கொத்தனார் said...
    //அத்தனை ஆன்மீகப் பதிவரையும் வாட்டி எடுத்துக் கொண்டு இருந்தார்கள்!//
    இதுக்குத்தான் வெறும் உப்புமா போதுமடான்னு அப்பீட் ஆகிக்கிறது//

    நீங்க உப்புமா கேக்கறீரு!
    இளா பிரியாணி கேக்கறாரு!
    பாவம், ராயலு எதைத் தான்பா போடுவாரு?

    உப்புமா - ப்ளீஸ் வெயிட் ஃபார் யுவர் டர்ன் இன் நரகலோகம்! :-)

    ReplyDelete
  26. //ராயல் ராமா? இன்னாப்பா லஞ்ச் மெனு? சங்கத்துச் சிங்கங்களுக்குப் பசி வந்துருச்சு //

    அவருதான் பிரியாணி மாஸ்ட்டரா?....எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஒரு பார்சசசசசல்.

    ReplyDelete
  27. //கோவி.கண்ணன் said...
    //கவுண்டர்: (இந்திரனை நோக்கித் திரும்பி) அடச்சே...இவன் புண்ணியவானா? நாலு கொள்ளை ரெண்டு கற்பழிப்பு கேசுல இவனத் தான் பூலோகத்துல பல பேர் தேடுறாங்க! ... சரி, எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்!//

    சூப்பர்.......//

    அது எப்படிங்க கோவியார் கண்ணுக்கு இந்த வரிகள் மட்டும் 70mmஇல் தெரிகிறது? :-)
    SK, உங்களுக்கு ஏதாச்சும் புரியுதா? :-))

    ReplyDelete
  28. // CVR said...
    WOWOWOW!!!
    Super post!!!!
    உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!!! :-D//

    நன்றி VCR!

    ReplyDelete
  29. //// ramachandranusha said...
    அது சரி நாமக்கல்லாரை இந்த லிஸ்டில் சேர்த்தது சரியா :-)//

    நன்றி உஷா?
    என்னங்க தளபதி சிபியைப் பாத்து இப்படிச் சொல்லிட்டீக! அவரு போடாத முருகன் பாட்டா?
    அவர் பாட்டு என்ன ஆகப் போகுது-ன்னு வெயிட் சேசி சூடண்டி!

    சிபி - இவன் என்னோட தளபதி ஆக்கும்!:-)

    ReplyDelete
  30. //துர்கா|thurgah said...
    இதுல love scientist காக ஏதாவது இருக்கின்றதா? ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்//

    உங்கள் ஆவல் வீண் போகாது அன்புத் தங்கையே! Mr.VCR-kku special aappu உண்டு! ஒரு பதிவு முழுக்க!! :-)

    ReplyDelete
  31. //ஜெயஸ்ரீ said...
    superb !!
    படிச்சுட்டு கொஞ்சம் கண்ணை மூடி யோசிச்சா, கவுண்டமணி கொரலே காதுல கேக்குது,
    கலக்கீட்டீங்க போங்க )))//

    நன்றி ஜெயஸ்ரீ...
    பெருமாள் வைபவத்தை வேகமா எழுத முடிகிறது...ஆனா கவுண்டர் வைபவம் எழுதறத்துக்குள்ள அரை நாள் போயிடுச்சி! :-)

    ReplyDelete
  32. //துளசி கோபால் said...
    ஹைய்யோ............

    நான் தப்பிச்சேன்:-))))))//

    டீச்சர்...
    பகல் கனவு காண வேண்டாம் என்று உங்களை பாசமுடன் எச்சரிக்கை செய்கிறேன்! :-)

    அன்னிக்கி நீங்க என்னை க்ளாஸ் ரூமில் பென்சிலால் அடிச்சதை நான் இன்னும் மறக்கல! :-)

    ReplyDelete
  33. சூப்பர். மிகவும் ரசித்தேன்.

    இந்திரனக் கிண்டலடிக்கிறதாகட்டும்...செந்திலை நோண்டுறதாகட்டும்...கவுண்டர் கவுண்டர்தான்.

    அந்த கடவுளுக்கே அசிஸ்டெண்ட்டு டயலாக்கு சூப்பரோ சூப்பரு.

    // CVR said...
    WOWOWOW!!!
    Super post!!!!

    உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!!! :-D //

    என்னது? ஆன்மீகப் பதிவாளர்கள் எல்லாம் டுபாக்கூர்கள்னா? ;)

    அது சரி...இந்த உண்மை வெறும் புகழ்ச்சியில்லையை எங்க பிடிச்ச? கடைசியா எந்த வலைப்பூ படிச்ச?

    ReplyDelete
  34. // இலவசக்கொத்தனார் said...
    //அத்தனை ஆன்மீகப் பதிவரையும் வாட்டி எடுத்துக் கொண்டு இருந்தார்கள்!//

    இதுக்குத்தான் வெறும் உப்புமா போதுமடான்னு அப்பீட் ஆகிக்கிறது. //

    நடுவுல ஒரு வாட்டி பிரியாணி போட்டீங்களே.....நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது ஆன்மீக டிப்பார்ட்டுமெண்டு. நாலு டிப்பார்ட்மெண்ட்டு தள்ளி இருக்குறது உப்புமா டிப்பார்ட்மெண்டு....அடிக்கடி உப்புமா கிண்டவுங்களுக்குன்னே வெச்சிருக்குற டிப்பார்ட்மெண்ட்டாம். ரொம்பவும் டேஞ்சரான டிப்பார்ட்மெண்ட். எச்சரிக்கை.

    // மதுரையம்பதி said...
    //ராயல் ராமா? இன்னாப்பா லஞ்ச் மெனு? சங்கத்துச் சிங்கங்களுக்குப் பசி வந்துருச்சு //

    அவருதான் பிரியாணி மாஸ்ட்டரா?....எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஒரு பார்சசசசசல். //

    அப்படியே ஆம்ஸ்டர்டாமுக்கும் ஒரு சீரகச்சம்பா கறி பிரியாணி...பொடிப்பொடியா நறுக்குன வெங்காயம் போட்ட கெட்டித் தயிர்பச்சடியோட பார்சல்.

    ReplyDelete
  35. hello ravi, aaha all rounder aaha irupeenkapolirukke - language eppadi mudinthathu - last one padithu vaaivittu sirithen - paaraatukkal
    அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இங்க! ஒண்ணுமே புரியலையடா சாமீ!
    ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா இல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க!
    திருப்புகழ் இன்னா, அந்தாதி இன்னா, சுப்ரபாதம் இன்னா - கடைசிலே சுத்தற பாதமா ஆயிட்டானுங்களேப்பா....

    இரு....இன்னா தான் விஷயம்ன்னு போயி பார்ப்போம்...
    (தொடரும்...)
    muthaaippaaga irunthathu - ontai kandippaga paaraattalam naragathin list il unkal name muthalil pottu suya parisothanai seithu kondeerkal-
    matavarkalai kurai koorum mun, nammai paarkum gunam thaan siranthathu - good - baskar

    ReplyDelete
  36. thiru naa kannan comments nantaga irunthathu - Ramanujarai gnapagapaduthiyathaga..baskar

    ReplyDelete
  37. //வெற்றி said...
    இது நம்ம கண்ணபிரான் ரவிசங்கரின் பதிவுதானா என ஒரு ஐயம் கூடத் தோன்றியது. posted by kannabiran, RAVI SHANKAR (KRS) எனும் வாசகத்தைப் பார்த்துத் தான் உறுதி செய்து கொண்டேன்//

    எல்லாம் சங்கத்தின் மகிமை!
    சத் சங்கம்-னு சொல்ல வந்தேன்-யா :-)

    //ஏனெனில் நீங்கள் இப்பிடி நகைச்சுவையாக, அதுவும் நாயே பேயே என்றெல்லாம் எழுதி நான் இதுவரை படிக்கவில்லை. :-))//

    நானே இதுவரை படித்ததில்லை.
    அப்புறம் தானே நீங்க படிக்கறது எல்லாம்! :-)

    //இவர்கள் எல்லாம் எப்படி நரகத்தில் மாட்டுப்பட்டார்கள் என அறிய மிகவும் ஆவலாக உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்//

    வரும் பாருங்க அவங்க அவங்களுக்கு...ஆப்பு! :-)

    ReplyDelete
  38. ஹாஸ்ய யோகம் ஆரம்பமா? இருக்கட்டும் இருக்கட்டும்.

    ReplyDelete
  39. அ.வா,

    ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சிருக்கீங்க... :)

    சூப்பரப்பு...

    ReplyDelete
  40. / மதுரையம்பதி said...

    //ராயல் ராமா? இன்னாப்பா லஞ்ச் மெனு? சங்கத்துச் சிங்கங்களுக்குப் பசி வந்துருச்சு //

    அவருதான் பிரியாணி மாஸ்ட்டரா?....எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஒரு பார்சசசசசல். //


    மெளலி,

    இந்த ஜீலேபி தேசத்திலே நம்மூரு சோத்துக்கு நாமே எப்பிடி கஷ்டப்படுவோமின்னு ஒங்களுக்கு நல்லவே தெரியும்..... அதிலே இந்த ஊரிலே கிடைக்கிற பிரியாணியே பத்தி சொல்லவே வேணாம்.... :(

    என்னதா இருந்தாலும் டவுண்ஹால் தாஜ் ஹோட்டல் பிரியாணி மாதிரி வருமா??? :)

    ReplyDelete
  41. Kannabiran!!
    supera kalakiteenga... total ROTFL post.. seekiran second part podunga .. waitings of india for that

    ReplyDelete
  42. நான் வேற தனியா என்னத்தைச் சொல்றது? அதான் ஏற்கனவே எல்லாரும் சொல்லியிருக்காங்களே. நல்லவேளை பின்னூட்டங்களை முதல்ல படிச்சுட்டு அப்புறம் இடுகையைப் படிச்சேன். அதனால இடுகையோட எஃபெக்ட் குறைஞ்சுப் போச்சு. :-):-):-):-):-):-)

    பாத்து அப்பு. அளப்பரை விட்டுக்கிட்டு திரியறவங்க நடுவுல கடவுளோட நெஜ அசிஸ்டென்டுகளையும் போட்டிருக்கீங்க. பாகவத அபசாரம் பொல்லாதது.

    அட என்னைச் சொல்லலைங்க. கண்ணன் ஐயா, ஞானம் ஐயா, வல்லியம்மா இவங்களையெல்லாம் போட்டிருக்கீங்களே அதைச் சொன்னேன். மத்தவிங்க அளப்பரை தான் உலகமே - பதிவுலகமே - அறிஞ்சதாச்சே

    கீதாம்மா. உங்க பேரைச் சொல்லலீயேன்னு கோவிச்சுக்காதீங்க - அளப்பரை விடறதுன்னா எப்படின்னு நீங்க தான் எங்க எல்லாருக்கும் சொல்லிக்குடுத்தீங்கன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. :-)

    ReplyDelete
  43. ஜிலேபி தேசமா? இன்னா ராம் தம்பி சொல்றீங்க? அந்த ஊருல தான் மால்குடியில இருந்து மன்னார்குடி வரைக்கும் எல்லா ஊர்ச்சாப்பாடும் கிடைக்குதே?! ஆனாலும் நம்மவூரு டவுன் ஹால் தாஜ் ஹோட்டல் பிரியாணி மாதிரி வராது தான்.

    ReplyDelete
  44. //கீதாம்மா. உங்க பேரைச் சொல்லலீயேன்னு கோவிச்சுக்காதீங்க//

    ஆமாமுங்க குமரன்...நானும் கேள்விப்பட்டேன்.....என்ன பண்ணுரது...உண்மை கசக்கத்தானே செய்யும்...

    ReplyDelete
  45. அன்பின் கண்ணபிரான்,

    ஆன்மிகத்தோடு, நகைச்சுவையும் தங்களுக்கு இயல்பாக வருகிறது. பன்முகப் புலவர் (ஆல்ரவுண்டர்) ஆகக்கூடிய தகுதி தங்களுக்கு உள்ளது. பாராட்டுக்கள் !

    தேசிகனை நீங்கள் ஆன்மிகப்பதிவர் பட்டியலில் சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது, சுவாமி :)

    எ.அ.பாலா

    ReplyDelete
  46. //இந்த ஜீலேபி தேசத்திலே நம்மூரு சோத்துக்கு நாமே எப்பிடி கஷ்டப்படுவோமின்னு ஒங்களுக்கு நல்லவே தெரியும்//

    எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் ராயலாரே....(எத்தனை நாட்கள்ன்னு மனசுக்குள்ள எண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு தெரியும்)

    ReplyDelete
  47. அட,அட,அட, ஒரு ரெண்டு நாள் உடம்பு சரியில்லைன்னு வர முடியலைன்னா பதிவும் போட்டு, என்னோட பேரும் போட்டு, எனக்கு லேட்டா மெசேஜும் கொடுத்து, புதிய பட்டமும் கொடுத்து, "அளப்பரை"ன்னு தான் வேறே என்ன? அதை நான் உண்மைத் தொண்டருனு நம்ம்பிட்ட்ட்டு இருக்கிற மெளலி ஆதரவும் தெரிவிச்சு, என்னத்தைச் சொல்றது? கண்ணன், ஒரே பதிவிலே எல்லாரையும் இழுத்துட்டீங்க, போங்க, முடியட்டும், பார்க்கலாம், எப்படிக் கொண்டு போறீங்கன்னு!

    @மெளலி, என்னடா நம்ம பதிவுக்கு வரதே இல்லையேன்னு நினைச்சேன். இதான் காரணமா? நான் என்னமோ உடம்பு சரியில்லை, பாவம்னு இல்லைனு நினைச்சேன். ம்ம்ம்ம்ம்., பதிவு ஒண்ணும் போடாமல் ப்ளாக்கை வச்சிட்டு இருக்கீங்க! இல்லாட்டி ரெண்டு கை இல்லை பார்த்து இருப்பேன்! :P :P :P :P

    @குமரன், ஒரே ஊருக்காரங்களை இப்படிக் காலை வாருவது நியாயமா? தர்மமா? நல்லா இருக்கா? நறநறநறநறநற

    ReplyDelete
  48. /ஜிலேபி தேசமா? இன்னா ராம் தம்பி சொல்றீங்க? //

    ததா,

    இங்கனே எல்லாத்திலேயும் வெல்லம் போட்டுத்தானே சாப்பிடுவாய்ங்கே... அதுதான் அப்பிடி சொன்னது, அதுவுமில்லாமே எழுத்துகள் அப்பிடிதானே இருக்கும்...

    அதுதான் ஜிலேபி தேசம்...

    /அந்த ஊருல தான் மால்குடியில இருந்து மன்னார்குடி வரைக்கும் எல்லா ஊர்ச்சாப்பாடும் கிடைக்குதே?!//

    ஹிம் எல்லாமே கிடைக்கும்.... ஆனா எல்லாத்துக்கும் ஊறுகாயும், அப்பளமும் வைச்சி தின்பானுக... :(

    (மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணிக்கு கூட)

    ReplyDelete
  49. //எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் ராயலாரே....(எத்தனை நாட்கள்ன்னு மனசுக்குள்ள எண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு தெரியும்)///

    ஹிம்... அதுசரி...... நீங்க படுறப்பாட்டை நானும் படனுமின்னு வாழ்த்துறீங்க....

    சந்தோஷமா வாங்கிக்கிறேன்... :)

    ReplyDelete
  50. //ஜெயஸ்ரீ said...
    superb !!
    படிச்சுட்டு கொஞ்சம் கண்ணை மூடி யோசிச்சா, கவுண்டமணி கொரலே காதுல கேக்குது,
    கலக்கீட்டீங்க போங்க )))//

    நன்றி ஜெயஸ்ரீ
    பதிவைப் படிச்சிட்டு என்னை எங்க அடிக்கப் போறீங்களோ-ன்னு பயந்துகிட்டு இருந்தேன்!

    ஆமா...ஆன்மீகப் பதிவுக்கு எல்லாம் பின்னூட்டம் போடும் ஒங்க பேரை லிஸ்டில் சேர்க்க எப்படி மறந்து போனேன்னு தெரியலையே! :-)))

    ReplyDelete
  51. //வெங்கட்ராமன் said...
    உண்மைலயே பட்டைய கிளப்பிட்டீங்க. . . . . .
    அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க. . . . . .//

    நன்றி வெங்கட். அடுத்த பதிவு போட்டா பிறகு, என்னைய பேண்டேஜ் போட்டுக் காப்பாத்துங்க! :-)

    ReplyDelete
  52. //நா.கண்ணன் said...
    பல ரேஞ்சிலே பதிவு போடறீங்க!//

    Kannan Sir
    Thanks for taking in light and right spirit!

    //"நான் உண்மையாக சரணாகதி செய்வதாய் நீர் நம்புகிறீரே! உம்மைச் சொல்ல வேண்டும்" என்றாராம் ராமாநுஜர்.//

    ஆகா...சூப்பர்! ராமானுஜருக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வா? மகிழ்ச்சியாக உள்ளது!

    சங்கத்துச் சிங்கங்களே, ராமானுஜரே வவாச பதிவுக்கு தனது திருவடி வைத்து, வருகை தந்து விட்டார்...பாத்தீங்களா! சேவிச்சுகுங்க!

    //நரகம் அப்படியொன்றும் கஷ்டமானதில்லை! "நாராயணா" என்று சொல்லிவிட்டால் எல்லாம் மாறிவிடும். இந்த பிட்டையும் கடைசியில் சேர்த்துடுங்கோ!//

    நீங்க சொன்ன அடுத்த நிமிஷம் இளா, ஒரு முறைக்கு நாலு முறை சொல்லிட்டாரு பாருங்க!
    வவாச-வில் நாம சங்கீர்த்தனம் தொடங்கி விட்டது!

    ReplyDelete
  53. //VSK said...
    கலக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, கண்ணபிரான்!//

    நான் முடிவு பண்ணலீங்க SK.
    எல்லாம் அவன் செயல்! :-)

    //ஆண்டவனைத் திட்டினாக்கூட பொறுத்துப்பான்.
    அடியவரைக் கலாய்ச்சா, அந்த அடியாரே வேண்டினாக்கூட விட மாட்டானாம்!//

    ஆகா...கவுண்டர் கிட்ட தான இதச் சொல்லறீங்க? நானும் அவருக்கு மண்டையில ஏறறாப் போல நல்லா சொல்லிடறேன்!

    யோவ் கவுண்டரே...பாத்துய்யா...பாரு...
    பெரியவங்க எல்லாரும் வந்து வையறாங்க! :-(

    ReplyDelete
  54. //மதுரையம்பதி said...
    சபாஷ் கே ஆர் எஸ்......
    பாலாஜி சொன்ன மாதிரி, ஆன்மீக பதிவர்கள் லிஸ்ட்ல அவரையும் சேர்த்து எல்லோரையும் நகைச்சுவையாளரர்களாக்கிட்டீங்க...
    :-)//

    யார் சொன்னது பாலாஜி ஆன்மீகப் பதிவர் இல்லைன்னு!
    என் ஞானகுருவே அவரு தான்!
    கண்ணன் பாட்டுல பாட்டுக்குப் பாட்டு, கண்ணனா-கர்ணனா எல்லாத்தையும் போய் ஒரு எட்டு படிச்சிட்டு வாங்க மெளலி சார்!

    நல்லாப் பாருங்க! பாலஜிய சுத்தி ஒரு ஒளி வட்டம் தெரியுதா ? :-)

    ReplyDelete
  55. // நண்பன் said...
    Nice!!!
    Good Show. Continue please.
    Nanban//

    நன்றி நண்பரே (ஷாஜி?)

    ReplyDelete
  56. //G.Ragavan said...
    சூப்பர். மிகவும் ரசித்தேன்.
    இந்திரனக் கிண்டலடிக்கிறதாகட்டும்...செந்திலை நோண்டுறதாகட்டும்...கவுண்டர் கவுண்டர்தான்//

    நன்றி ஜிரா
    மொத முறையா இப்பிடி எல்லாம் எழுதறேன்...அன்னிக்கு சாட்டுல சொன்னீங்களே...ஒரு சேஞ்ச் கொடுக்கச் சொல்லி!...:-)

    //அந்த கடவுளுக்கே அசிஸ்டெண்ட்டு டயலாக்கு சூப்பரோ சூப்பரு//

    நீங்க அந்தச் சேப்புத் துண்டால என்னைய துண்டாடப் போறீங்க-ன்னு பயந்துகிட்டு இருந்தேன்! ஆனாப் பாராட்டி பாச மழையில நனைய வச்சிட்டீங்களே ஜிரா!

    // CVR said...
    உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!!! :-D //

    என்னது? ஆன்மீகப் பதிவாளர்கள் எல்லாம் டுபாக்கூர்கள்னா? ;)
    அது சரி...இந்த உண்மை வெறும் புகழ்ச்சியில்லையை எங்க பிடிச்ச? கடைசியா எந்த வலைப்பூ படிச்ச?//

    ஓகோ!
    யோவ் சீவீ ஆரு....எங்க அண்ணாத்த கேக்கறாரு இல்ல! என்ன பார்வை? பதில சொல்லு! :-)

    ReplyDelete
  57. //G.Ragavan said...
    நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது ஆன்மீக டிப்பார்ட்டுமெண்டு. நாலு டிப்பார்ட்மெண்ட்டு தள்ளி இருக்குறது உப்புமா டிப்பார்ட்மெண்டு....அடிக்கடி உப்புமா கிண்டவுங்களுக்குன்னே வெச்சிருக்குற டிப்பார்ட்மெண்ட்டாம். ரொம்பவும் டேஞ்சரான டிப்பார்ட்மெண்ட். எச்சரிக்கை//

    கொத்தனாரே! கேட்டுக்கிட்டீரா? எச்சரிக்கை! எச்சரிக்கை! :-)

    //அப்படியே ஆம்ஸ்டர்டாமுக்கும் ஒரு சீரகச்சம்பா கறி பிரியாணி...பொடிப்பொடியா நறுக்குன வெங்காயம் போட்ட கெட்டித் தயிர்பச்சடியோட பார்சல்//

    கறின்னா மரக் கறி தானே சொல்றீங்க ஜிரா? ச்சே...உங்களப் போயி இந்தக் கேள்வி கேட்கறேன் பாருங்க!
    நீங்க தான் "சைவத்தில் ஊறியவராச்சே!

    ReplyDelete
  58. //Anonymous said...
    hello ravi, aaha all rounder aaha irupeenkapolirukke - language eppadi mudinthathu - last one padithu vaaivittu sirithen - paaraatukkal//

    நன்றி பாஸ்கர்
    பெருமாள் பதிவு எல்லாம் அரைமணியில் ரெடி...
    இது போன்ற பதிவுகள், பெண்டு எடுத்து விட்டது போங்க! வவாச-ல மக்கள் எல்லாம் எப்படித் தான் கலக்கறாங்களோ??

    //list il unkal name muthalil pottu suya parisothanai seithu kondeerkal-//

    ஹிஹி
    நம்மள பத்தி நமக்குத் தெரியாதா? :-)

    ReplyDelete
  59. //சிவமுருகன் said...
    ஹாஸ்ய யோகம் ஆரம்பமா? இருக்கட்டும் இருக்கட்டும்//

    ஹிஹி...வாங்க சிவா.
    அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-)

    ReplyDelete
  60. //இராம் said...
    அ.வா,//

    ராயலு இது என்ன அ.வா?
    எஸ்.ஜே.சூர்யா தான் அ.ஆ ம்பாரு...நீங்க?

    ReplyDelete
  61. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //இராம் said...
    அ.வா,//

    ராயலு இது என்ன அ.வா?
    எஸ்.ஜே.சூர்யா தான் அ.ஆ ம்பாரு...நீங்க? //

    அட்லாஸ் வாலிபார்தான் அ.வா...

    இதை இ.வானு எடுத்துக்கிட்டா என் தப்பில்லை :-)

    ReplyDelete
  62. வெட்டிபயல் எப்போதுலேந்து ஆன்மீகப் பதிவர் ஆனார். புரியலையே..

    ReplyDelete
  63. //dubukudisciple said...
    Kannabiran!!
    supera kalakiteenga... total ROTFL post.. seekiran second part podunga .. waitings of india for that//

    தாங்க்ஸ் சுதாக்கா...waitings of america for your comments on the 2nd post...போஸ்ட் போட்ட பின்பு!

    ReplyDelete
  64. //குமரன் (Kumaran) said...
    நல்லவேளை பின்னூட்டங்களை முதல்ல படிச்சுட்டு அப்புறம் இடுகையைப் படிச்சேன். அதனால இடுகையோட எஃபெக்ட் குறைஞ்சுப் போச்சு. :-):-):-):-):-):-)//

    அப்பாடா...நல்ல காலம்....குமரனும் என்னைய அடிக்கற கட்சியில சேந்துடுவாரோ-ன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு! நல்ல வேளை இடுகையோட எஃபெக்ட் குறைஞ்சுப் போச்சு. :-)

    //பாத்து அப்பு. அளப்பரை விட்டுக்கிட்டு திரியறவங்க நடுவுல கடவுளோட நெஜ அசிஸ்டென்டுகளையும் போட்டிருக்கீங்க. பாகவத அபசாரம் பொல்லாதது.//

    கவுண்டர தான சொல்றீங்க குமரன்? ஆனா அவரு இத பாகவத உபசாரம்-னுல சொல்லறாரு!
    பாகவதர்கள் தான் அவர்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு இப்படி விளையாடி, பெருமாளைச் சிரிக்க வைக்கறாங்களாம்! :-)))))

    //கீதாம்மா. உங்க பேரைச் சொல்லலீயேன்னு கோவிச்சுக்காதீங்க -அளப்பரை விடறதுன்னா எப்படின்னு நீங்க தான் எங்க எல்லாருக்கும் சொல்லிக்குடுத்தீங்கன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. :-)//

    "எல்லாரும் பேசிக்கறாங்க" - கீதாம்மா/அம்பி ரெண்டு பேருமே நோட் திஸ் பாயிண்ட்! :-)

    ReplyDelete
  65. //enRenRum-anbudan.BALA said...
    அன்பின் கண்ணபிரான்,
    ஆன்மிகத்தோடு, நகைச்சுவையும் தங்களுக்கு இயல்பாக வருகிறது. பன்முகப் புலவர் (ஆல்ரவுண்டர்) ஆகக்கூடிய தகுதி தங்களுக்கு உள்ளது. பாராட்டுக்கள் !//

    நன்றி பாலா! ஆல்ரவுண்டரா? நம்மள ரவுண்டு கட்டாம இருந்தாலே போதாதா? :-)

    //தேசிகனை நீங்கள் ஆன்மிகப்பதிவர் பட்டியலில் சேர்க்காதது ஆச்சரியமாக உள்ளது, சுவாமி :)//

    உங்களை இதில் சேர்க்கவில்லை என்பதைத் தானே இப்பிடி மறைமுகமா கேக்கறீங்க? :-)

    தேசிகன் கையால-யும் நான் ஒதை படணும்-னு உங்களுக்கு என்ன அப்பிடி ஆசை? :-)

    ReplyDelete
  66. //Sathia said...

    வெட்டிபயல் எப்போதுலேந்து ஆன்மீகப் பதிவர் ஆனார். புரியலையே.. //

    அது தான் காமெடியே... இதுக்கு தான் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்களாம் :-)

    ReplyDelete
  67. //CVR said...

    WOWOWOW!!!//

    இது எங்க பக்கத்து வீட்டு டாமி குலைக்கற மாதிரியே இருக்கு ;)

    ReplyDelete
  68. //கீதா சாம்பசிவம் said...
    கண்ணன், ஒரே பதிவிலே எல்லாரையும் இழுத்துட்டீங்க, போங்க, முடியட்டும், பார்க்கலாம், எப்படிக் கொண்டு போறீங்கன்னு!//

    ஐய்யோடா, என்ன கொடுமை சரவணன்? எல்லாரும் என தலைய உருட்டறாங்களே!
    கவுண்டர் தானே இப்பிடி எல்லாம் பண்றாரு! அவர கேளுங்கப்பா!
    நான் ஒரு பால் மணம் மாறாப் பச்சைக் குழந்தை!


    //@குமரன், ஒரே ஊருக்காரங்களை இப்படிக் காலை வாருவது நியாயமா? தர்மமா? நல்லா இருக்கா? நறநறநறநறநற//

    குமரன், இந்த நறநறக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்! :-)

    ReplyDelete
  69. பதிவில் மேலும் ஒரு பிழை

    //இந்தப் பக்கம் "பெருமாளே பெருமாளே" என்று ஒரு சத்தம்...
    அந்தப் பக்கம் "முருகா முருகா" என்று இன்னொரு சத்தம்!//

    இந்த மாதிரி இறைவனின் திருநாமம் வரும் இடம் எப்படி நரகமாகும்? அந்த வார்த்தைகள் ஒலிக்காத இடம் தானே நரகம்...

    பி.கு: தலைவா நீங்க சொன்ன மாதிரியே போட்டு ஆன்மீக பதிவர் கூட்டத்துல சீட்டு போட்டாச்சு. என்னுமோ போங்க :-)

    ReplyDelete
  70. //வெட்டிப்பயல் said...
    பதிவில் மேலும் ஒரு பிழை

    இந்த மாதிரி இறைவனின் திருநாமம் வரும் இடம் எப்படி நரகமாகும்? அந்த வார்த்தைகள் ஒலிக்காத இடம் தானே நரகம்...
    //

    அது பிழை இல்லை வெட்டி ஆனந்தா...
    அது தான் பதிவின் க்ளூ!


    பாருங்க என்ன தான் இருந்தாலும் சிஷ்யன் சிஷ்யன் தான்!
    சத்குரு சத்குரு தான் :-)
    அதுக்கெல்லாம் ஞானக் கண் வேண்டும்! :-)

    ஆனாப் பாருங்க, மக்களே!
    இறைவன் திருநாமம் மேல் அவ்வளவு பற்றுள்ள வெட்டியைப் பாத்து ஆன்மிகப் பதிவர் இல்லை-ன்னு எப்படி சொல்லலாம்?
    நெஞ்சு பொறுக்குதில்லையே! :-(((

    ReplyDelete
  71. //Sathia said...
    வெட்டிபயல் எப்போதுலேந்து ஆன்மீகப் பதிவர் ஆனார். புரியலையே..//

    அவரு எல் கே ஜி யில் இருந்தே பகவான் ஜி தான்!
    கண்ணன் பாட்டு-ன்னு புதுசா ஒரு வலைப்பூ தொடங்கனாரு பாருங்க! அப்போ தான் ஆல்-இன்-ஆல் ஆண்மீக ராஜா ஆனாரு! :-)

    ReplyDelete
  72. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //வெட்டிப்பயல் said...
    பதிவில் மேலும் ஒரு பிழை

    இந்த மாதிரி இறைவனின் திருநாமம் வரும் இடம் எப்படி நரகமாகும்? அந்த வார்த்தைகள் ஒலிக்காத இடம் தானே நரகம்...
    //

    அது பிழை இல்லை வெட்டி ஆனந்தா...
    அது தான் பதிவின் க்ளூ!

    பாருங்க என்ன தான் இருந்தாலும் சிஷ்யன் சிஷ்யன் தான்!
    சத்குரு சத்குரு தான் :-)
    அதுக்கெல்லாம் ஞானக் கண் வேண்டும்! :-)

    ஆனாப் பாருங்க, மக்களே!
    இறைவன் திருநாமம் மேல் அவ்வளவு பற்றுள்ள வெட்டியைப் பாத்து ஆன்மிகப் பதிவர் இல்லை-ன்னு எப்படி சொல்லலாம்?
    நெஞ்சு பொறுக்குதில்லையே! :-((( //

    நல்லா சமாளிங்க...

    சரி எப்படி கொண்டு போறீங்கனு பார்க்கத்தானே போறோம்...

    தர்ம சங்கடம்னா என்னனு எனக்கு விளக்கம் சொன்னீங்களே.. நியாபகம் இருக்கா?

    இப்ப தர்ம அடினா என்னனு நான் உங்களுக்கு காட்டறேன்...

    ReplyDelete
  73. //அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-)
    //

    இரவி, இது தெரியாதா? கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், தியானயோகம், இராஜயோகம், ஹாஸ்யயோகம்.

    கீதையில வருமே அங்க அங்க கஸ்மாலம் அப்படி இப்படின்னு. படிச்சிருப்பீங்களே?!

    ReplyDelete
  74. //தர்ம சங்கடம்னா என்னனு எனக்கு விளக்கம் சொன்னீங்களே.. நியாபகம் இருக்கா?

    இப்ப தர்ம அடினா என்னனு நான் உங்களுக்கு காட்டறேன்...//

    தர்மத்துக்குச் சங்கடம் வரலாம் பாலாஜி! தர்மம் மறுபடி வெல்லும்!
    ஆனா தர்மத்தை அடிக்கலாமா? அதுவும் தர்மவானான நீங்க!
    தர்ம அடி எல்லாம் தவறு பாலாஜி!:-)

    ReplyDelete
  75. என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-)

    ReplyDelete
  76. //குமரன் (Kumaran) said...
    //அது என்னங்க ஹாஸ்ய யோகம்?
    இரவி, இது தெரியாதா? கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம், தியானயோகம், இராஜயோகம், ஹாஸ்யயோகம்//

    அட, ஆமாம்!
    நன்றி குமரன்! டெவில் ஷோ என்னை டெவிலாய் படுத்துகிறது! :-)

    //கீதையில வருமே அங்க அங்க கஸ்மாலம் அப்படி இப்படின்னு. படிச்சிருப்பீங்களே?!//

    ஓ யா! :-)
    குதஸ்த்வா கஸ்மலம் இதம்?
    ...அகீர்த்தி கரம் அர்ஜூனா!

    இந்த மோசமான குழப்பம் எங்கிருந்து வந்தது அர்ஜுனா உனக்கு?

    அடியேன் சொல்லும் "கஸ்மாலம்" கரீட்டு தானே குமரன்?

    ReplyDelete
  77. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-) //

    வசதியா போச்சு :-)

    ReplyDelete
  78. //வெட்டிப்பயல் said...
    என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-) //

    வசதியா போச்சு :-)//

    கண்ணபிரானுக்கு வசதியாப் போச்சு என்று சொல்லுங்கள்!
    VCRஇன் வீரத்துக்கு அஞ்சி தள்ளியே நில்லுங்கள்! :-)

    ReplyDelete
  79. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //வெட்டிப்பயல் said...
    என் பரம சிஷ்யன் VCR, கராத்தேயில் மெரூன் பெல்ட் என்பதை இங்கே ஞாபகப்படுத்த அடியேன் கடமைப்பட்டுள்ளேன்! :-) //

    வசதியா போச்சு :-)//

    கண்ணபிரானுக்கு வசதியாப் போச்சு என்று சொல்லுங்கள்!//
    ஏன் கராத்தே தெரிஞ்சவங்ககிட்டதான் அடி வாங்குவீங்களா?

    //
    VCRஇன் வீரத்துக்கு அஞ்சி தள்ளியே நில்லுங்கள்! :-) //

    நீங்க அடிவாங்கும் போது தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கிறோம் ;)

    ReplyDelete
  80. Padma Arvind sent in an email...

    Ravi
    Thanks for the link. I would have missed your post at va vaa sa. I read the post this morning, and felt really good. You did cheer me up with that comedy as I was very dull early this morning as my mom fell sick and that took a toll on me. I will read the other posts later.

    Padma Arvind

    ReplyDelete
  81. //கவுண்டர்: அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இங்க! ஒண்ணுமே புரியலையடா சாமீ!
    ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா-ல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க!
    திருப்புகழ் இன்னா, அந்தாதி இன்னா, சுப்ரபாதம் இன்னா - கடைசிலே சுத்தற பாதமா ஆயிட்டானுங்களேப்பா.... //


    புல் form-la இருக்குறாபுல தெரியுது.
    இதுதான் மேட்ச்சோட டர்னிங் பாய்ண்ட் . First இன்னிங்சில் நல்லா அடிச்சு விளையாடி இருக்கீங்க.


    //
    இரு....இன்னா தான் விஷயம்ன்னு போயி பார்ப்போம்... //

    அடுத்த இன்னிங்ச் விளையாட்டை பாக்க காத்துகிட்டு இருக்கோம்

    ReplyDelete
  82. //ஹிஹி...வாங்க சிவா.
    அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-) //

    எங்ககிட்டேயே வா. இந்த லொள்ளு தானே வேணாங்கறது.

    ReplyDelete
  83. சங்கத்து சிங்கங்களே! சூரத் மகாராணி ஆக்கியதுக்கும் (யாராவது கேஸ் போட போறாங்க) லிங்க் கொடுத்ததற்கும் நன்னி.
    அப்படியே சின்ன கோரிக்கை, அப்படியே நம்ம ஆன்மீக குமரனையும் இங்க இஸ்து விடுங்க என்று பணிவன்புடன்
    கேட்டுக் கொள்கிறேன் :-)

    ReplyDelete
  84. superpa ravi. enjoying the oil drum.
    sorry tocomment in english. at present no tamil fonts. will be in for the fun. thank you.:)))))))

    ReplyDelete
  85. //அப்படியே சின்ன கோரிக்கை, அப்படியே நம்ம ஆன்மீக குமரனையும் இங்க இஸ்து விடுங்க என்று பணிவன்புடன்
    கேட்டுக் கொள்கிறேன் :-)
    //

    உஷா,

    Be Careful for what you are wishing for. :-)

    சங்கத்து சிங்கங்களே. இந்தப் பதிவை கூகுள் ரீடரில் போட்டு இதில் வரும் இடுகைகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டும் இரசித்துக் கொண்டும் வருகிறேன். மற்றபடி மற்றவரை மனம் கோணாமல் பகிடி செய்வது எனக்குச் சுட்டு போட்டாலும் வராது. மற்றவர் செய்யும் பகிடியை சிரித்துக் கொண்டே எடுத்துக் கொள்வதும் சில நேரம் கடினமாக இருந்திருக்கிறது. அதனால் உஷா சொல்வது போல் என்னை இங்கே இழுத்துவிட எண்ணவும் வேண்டாம். :-) நீங்கள் செய்வதை எல்லாம் ஒரு நல்ல வாசகனாகவும் இரசிகனாகவும் இருந்து இரசித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  86. அடுத்த பகுதி எங்கே?

    ReplyDelete
  87. //Anandha Loganathan said...
    புல் form-la இருக்குறாபுல தெரியுது.
    இதுதான் மேட்ச்சோட டர்னிங் பாய்ண்ட் . First இன்னிங்சில் நல்லா அடிச்சு விளையாடி இருக்கீங்க.//

    நன்றி Anandha Loganathan

    //அடுத்த இன்னிங்ச் விளையாட்டை பாக்க காத்துகிட்டு இருக்கோம்//

    இந்த வாரம்....

    ReplyDelete
  88. //சிவமுருகன் said...
    //ஹிஹி...வாங்க சிவா.
    அது என்னங்க ஹாஸ்ய யோகம்? :-) //

    எங்ககிட்டேயே வா. இந்த லொள்ளு தானே வேணாங்கறது.//

    ஹிஹி...
    நண்பர் ஒங்க கிட்ட தான வெள்ளாட முடியும் சிவா! :-)

    ReplyDelete
  89. //வல்லிசிம்ஹன் said...
    superpa ravi. enjoying the oil drum.
    sorry tocomment in english. at present no tamil fonts. will be in for the fun. thank you.:)))))))//

    நன்றி வல்லியம்மா
    Thanks for taking in light and right spirit!

    ReplyDelete
  90. //குமரன் (Kumaran) said...
    அடுத்த பகுதி எங்கே?//

    குமரன்
    mostly tonite...
    max...by tomorrow...
    என் பகுதி/ஜிரா பகுதி ஓவர்!
    உங்க பகுதி தான் ரெடி ஆகிகிட்டுய் இருக்கு! :-)

    ReplyDelete
  91. அன்பின் கேயாரெஸ் - யார் எழுதியது இது ? மண்டபத்துல எவனாச்சும் எழுதிக் கொடுத்தானா ? நான் இவ்ளோ நாளாப் படிக்கறேன் - இந்த ஸ்டைலு பாத்ததே இல்லையே - ம்ம்ம் - கேயாரெஸ் இப்படியும் எழுதுவாருன்னு நெனெச்சுக் கூட பாக்கலியே ! ம்ம்ம்ம்ம்ம் - நகைச்சுவை கை வந்த கலை - ஆனா கவுண்ட மணீ ரேஞ்சுக்கு ........ தெரியலப்பா - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் = நட்புடன் சீனா

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)