Monday, July 2, 2007

மனசை விட்டு வாழ்த்தலாம் வாங்க!


அன்பு மக்களே,

இதுநாள் வரை சங்கத்துக்கு நீங்கள் குடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி. வ.வா.சங்கத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நாங்கள் உருவாக்கியுள்ள அடுத்த தளம் வாழ்த்துக்கள் சங்கம்!. நம் வாழ்வின் எத்தனையோ மகிழ்வுறும் தருணங்கள் வருகின்றன. அப்பொழுதெல்லாம் உறவுகளுக்கிடையேயும், நட்புகளுக்கிடையேயும் பகிர்ந்து கொள்ள, அவர்கள் மனதார வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையேது! வாழ்த்து பெற்பவர்களின் மகிழ்ச்சிக்கு மதிப்பேது!

நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தில் மகிழ்ச்சியின் ஊற்றெடுக்க வைப்பது உறவுகளின் வாழ்த்துக்களும், உற்சாகப் படுத்தும் வார்த்தைகளும்தானே! அவ்வகையில் நம் பதிவுலக நண்பர்களின் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை நம்முடனே பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதே இவ்வலைப்பூவின் நோக்கம்!

பிறந்தநாள், திருமணநாள், ஜனனம், புது வாகனம், இடமாற்றம், பதவி உயர்வு இப்படி எதுக்கு வேண்டுமென்றாலும் வாழ்த்தலாம். உங்கள் ஆதரவு இதற்கு கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும். இதுவும் சங்கத்தின் ஒரு அங்கமே!

வாருங்கள்! வாழ்த்துவோம்! இனிதே வாழ்ந்திடுவோம்!

வாழ்த்தும் எண்ணங்கள் - நம்மை வலுவாக்கும்! வளமாக்கும்!

6 comments:

  1. எதிர்பார்க்காத நேரத்தில் வரும் ஒருவரின் வாழ்த்து அளிக்கும் சந்தோஷமே தனி தான். உங்கள் முயற்சியால் பலர் மகிழ்ச்சியுற வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  2. வித்தியாசமான ஐடியா!!
    நல்ல முயற்சி!!


    வாழ்த்துக்கள் சங்கத்துக்கு வாழ்த்துக்கள்!! ;-)

    உங்க கிட்ட சொன்னா எங்க வாழ்த்தை இந்த பதிவுல போடுவீங்களா??

    How does this work?? ;)

    ReplyDelete
  3. மன்னிக்கவும்!!
    இந்த இடுகையை பார்க்காமல் கேள்வி எழுப்பிவிட்டேன்!! :-))

    ReplyDelete
  4. //How does this work?? ;) //
    ரிப்பீட்டே

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)