Tuesday, June 12, 2007

ராயல்ஜி - The Boss




சிவாஜி - The Boss டிரெயிலரை எல்லாரும் பார்த்திருப்பீங்க. எங்க பாஸோட டிரெயிலரை பார்த்தீங்களா? சங்கத்தோட கடனை அடைக்க சின்ன தலயை வச்சு பூஜை போட்ட படம் தான் "ராயல்ஜி - The Boss". பலவிதமான கெட்டப்புக்காக ஜெமினி சர்க்கஸ்ல சிங்கத்துக்கு பிடறிமுடி சீவிவிடும் மேக்கப் மேனை ஸ்பெஷலா கூட்டிட்டு வந்து மேக்கப் போட்டு ராயலோட கேமராவுலயே ஸ்டில்ஸ் எடுத்து டிரெயிலர் ரீலிஸ் பண்ணோம். டிரெயிலரைப் பார்த்தே அரண்டு போன ஷங்கர், ஏவிஎம் சரவணன் பயந்துபோய் எங்க படத்தை டிராப் பண்ண சொன்னப்போ கூட கேட்கல. அப்புறம் சூப்பர் ஸ்டாரே வந்து கேட்டதால படத்தை டிராப் பண்ணிட்டோம். அந்த படத்தோட எக்ஸ்க்ளூசிவ் டிரெயிலர் கீழே!



"தடதட ஓடுவது உன் ஸ்டைல்
அவ்வ் அவ்வ் அவ்வ் அழுவது உன் ஸ்டைல்
கடகட சிரிப்பது உன் ஸ்டைல்
அடிக்கடி அடிபடுவது உன் ஸ்டைல்
எல்லாமே ஸ்டைல்
"

"எனக்கு தேவை சங்க கலாசாரத்தோட ஒரு ஆப்பு"

"ஆப்பு போனா வரும் உயிர் போனா வருமாங்க. இனிமே என்ன தேடி வராதீங்க"

"ஆப்பு இல்லாத நாள் தெரிஞ்சுபோச்சுன்னா வாழற நாள் நரகமாயிடும். ஆப்பு தாங்க முக்கியம்"



"நான் என்ன பிசினஸ் பண்றதுக்காய்யா பர்மிஷன் கேட்டேன்? சங்கத்துல ஆப்பு வாங்கறதுக்கய்யா"

"என்ன ஏன்மா இராயலா பெத்த?"
"இல்லன்னா மத்தவங்க ஆப்பு அடிக்க முடியாதுன்னு தாம்பா இராயலா பெத்தேன்"


"நம்ம நாட்டுல ஆப்படிக்கறது இன்னும் குறையல. ஆப்படிக்கறவன் அடிச்சுட்டே இருக்கான். வாங்கறவன் வாங்கிட்டே இருக்கான்"

"இதான் என் சங்கம். இதுக்கு நல்லது செய்யாம விடமாட்டேன்"




"எங்க தல இதுவரைக்கும் பத்தாயிரம் பேருக்கு மேல ஆப்பு வாங்கியிருக்காருங்க"

"நான் சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா இப்படி இருக்க உங்க சங்கம்


இப்படி ஆயிடும்"



"இராயல் எவ்வளவு பெரிய ஆப்புகள் வாங்கிட்டிருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?"

"யாரு?"

"கோன் ஹை?"

"BOSS. Bachelor of Sangam Service"



"பேரைக் கேட்டவுடனே சும்மா ஆப்படிக்கனும்னு தோணுதுல்ல"

36 comments:

  1. :)

    சூப்பர் டிரெயிலர் கப்பி!

    இராயல்ஜி!

    பேரைக் கேட்டாலே சும்மா அதிருதே!

    ReplyDelete
  2. "சோதனை மேல் சோதனை.. இன்னும் வேண்டுமடா ஆப்பு.." - இப்டின்னு பெங்களூர் க்ரைஸ்டு காலேஜ் வாசல் முன்னால நின்னுக்கிட்டு ராயலு பாடிக்கிட்டு இருக்குறதா பரவலா செய்தி வந்துக்கிட்டு இருக்குது...

    ReplyDelete
  3. COOL !!!!!!!!!!!!!!!!!

    அது கூட நம்ம ஆள் சொன்ன டயலாக் தானே.. சூப்பர் ஸ்டார் ஆசைப் அப்ட்டுக் கேட்டதாலே விட்டுக் கொடுத்தாச்சு...

    ReplyDelete
  4. ரெண்டாவது ஸ்டில்லிலே கலக்குறாரு நம்ம தலை!

    இத்தனை நாளா வெளியிடப்படாத ஸ்டில் ஆச்சே!

    ReplyDelete
  5. வர வர நீங்க உடற வெட்டி பந்தாவுக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. அடக்கி வாசிங்கப்பு

    ReplyDelete
  6. // டிரெயிலரைப் பார்த்தே அரண்டு போன ஷங்கர், ஏவிஎம் சரவணன் பயந்துபோய் எங்க படத்தை டிராப் பண்ண சொன்னப்போ
    //

    அந்த படம் வந்தா தமிழ்நாட்டு மக்கள் தூக்குல தொங்கிடுவாங்கன்னுதான பயந்துட்டாங்கதான??? ;)

    ReplyDelete
  7. // அப்புறம் சூப்பர் ஸ்டாரே வந்து கேட்டதால படத்தை டிராப் பண்ணிட்டோம்
    //

    அவருக்குதான் தமிழ் மக்கள் மேல எவ்வளவு பாசம்... காப்பாத்திட்ட பரட்டை ;)

    ReplyDelete
  8. // என்ன ஏன்மா இராயலா பெத்த?//

    யோவ்... அது நீயா வச்சுக்கிட்ட பேரு... அதை எதுக்கு போயி அம்மாகிட்ட கேக்குற???

    ReplyDelete
  9. // நான் சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா இப்படி இருக்க உங்க சங்கம்
    //

    ஓட்டு கட்டடத்துல இருக்கற சங்கம் கூரைக்கு வந்துடும் ;)

    ReplyDelete
  10. அடபாவிகளா,

    இதுக்குதான் என்கிட்டே அன்னிக்கு போட்டோ கேட்டிங்களா??? கொடுத்துருந்தேனா நான் சுத்தமா காலி போலே... :((((


    நல்லாயிருங்க சாமிகளா.... :((((

    ReplyDelete
  11. கலக்கல் கப்பி...

    ராயல்ஜி "The Boss"னா சும்மாவா?

    படம் மட்டும் எடுத்திருந்தா 1000 நாள் ஓடி சாதனை தான் :-)

    ReplyDelete
  12. கலக்கிட்டீங்களே கப்பி. ஆஹா கவித!

    ReplyDelete
  13. சிவாஜி பட டிக்கெட்டுகள் தருவதை போல் எங்களை போன்ற ராயல் ரசிகர்களுக்கு இந்த படத்தின் திருட்டு வி.சி.டி வழங்க ஆவணை செய்யப்படுமா என சங்கத்து சிங்கங்களின் சார்பாக என் கோரிக்கையை முன் வைக்கிறேன்!! :-P

    ReplyDelete
  14. //போன்ற ராயல் ரசிகர்களுக்கு இந்த படத்தின் திருட்டு வி.சி.டி வழங்க ஆவணை செய்யப்படுமா என சங்கத்து சிங்கங்களின் சார்பாக என் கோரிக்கையை முன் வைக்கிறேன்!! :-P
    //

    திருட்டு விசிடிக்கள் என்ன? அதிகாரபூர்வ சிடிக்களே சங்கப் பலகை வாசகர்கள் அனைவருக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப் படும். அதற்கான செலவுத் தொகையை தல 'ராயல்' அவர்களே ஏற்றுக் கொள்வதாக தாயுள்ளத்தோடு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

    ReplyDelete
  15. //படம் மட்டும் எடுத்திருந்தா 1000 நாள் ஓடி சாதனை தான் :-) //

    வெறும் 1000 நாட்கள் மட்டும் என்று சொல்லி எங்கள் தலைவரை இழிவு செய்த வெட்டிப் பயலாரை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

    (நல்லாப் பார்த்துக்குங்க! ஸ்மைலிய்ல்லாம் போடலை, கண்ணடிக்கிறோம்னு எழுதலை. இதை யாரும் வழிமொழியவும் மாட்டாங்க!)

    ReplyDelete
  16. எங்கள் அண்ணன் இராயல் இராம் அவர்களின் டிரெயிலர் வெளியீட்டுக்கு முன்பே கட் அவுட் வைக்காத சங்கத்தினரைக் கண்டித்து விடிய விடிய சைட் அடிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!

    இராயல் இராம் தற்கொலைப் படை,
    மகளிரணிப் பிரிவு,
    பிரிகேடியர் ரோடு,
    பெங்களூர்.

    ReplyDelete
  17. ராயல்ஜியை இப்படி செய்வதை கண்டித்து கருடா மால் அருகே பெட்ரோல் ஊற்றி தீப்பெட்டியின் துணையுடன் அவர் தீக்குளிப்பு போராட்டத்தை நாங்கள் தொடங்க இருக்கிறோம். :))


    மக்கா பாவம்ய மனுஷன் விட்டுடுங்கப்ப.. எம்புட்டு அடிச்சாலும் தாங்கறான்.. அதுக்காக இப்படியா

    எலேய் ராமு.. அழுவாதலே... நான் இருக்கேம்லே..

    ReplyDelete
  18. வரிக்கு வரி கலக்கல் கப்பி. ராயல் பேரை கேட்டாலே அதிருதுப்பா..

    //எங்கள் அண்ணன் இராயல் இராம் அவர்களின் டிரெயிலர் வெளியீட்டுக்கு முன்பே கட் அவுட் வைக்காத சங்கத்தினரைக் கண்டித்து விடிய விடிய சைட் அடிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
    //
    சின்ன தலை உங்களை மாதிரியே இருக்காங்க உங்க தொண்டர்களும்.

    ReplyDelete
  19. ஐயா படை தலைவர்களே,

    ஒங்க காமெடிக்கு அளவே இல்லயா??? ;)

    ReplyDelete
  20. amazing :)

    chance-ae illa.. kalakkala irundhadhu :)

    ReplyDelete
  21. //சூப்பர் டிரெயிலர் கப்பி!

    இராயல்ஜி!

    பேரைக் கேட்டாலே சும்மா அதிருதே!
    //

    நன்றி தள
    இராயல்னா சும்மாவா :))

    //"சோதனை மேல் சோதனை.. இன்னும் வேண்டுமடா ஆப்பு.." - இப்டின்னு பெங்களூர் க்ரைஸ்டு காலேஜ் வாசல் முன்னால நின்னுக்கிட்டு ராயலு பாடிக்கிட்டு இருக்குறதா பரவலா செய்தி வந்துக்கிட்டு இருக்குது...
    //

    ஜி

    இதெல்லாம் எங்க சின்ன தலக்கு சாதா'ரணம்' :))

    தேவ்

    //சூப்பர் ஸ்டார் ஆசைப் அப்ட்டுக் கேட்டதாலே விட்டுக் கொடுத்தாச்சு...
    //

    அவ்ளோ பெரிய மனசு :))

    //இத்தனை நாளா வெளியிடப்படாத ஸ்டில் ஆச்சே! //

    இது அவரோட அனுமதி இல்லாம வெளியிடப்பட்டது :))

    ReplyDelete
  22. இம்சை அரசி

    சின்ன தல மேல கொலவெறில இருக்கீங்க போல..இதான் எங்களுக்கு வேணும் :))

    //இதுக்குதான் என்கிட்டே அன்னிக்கு போட்டோ கேட்டிங்களா??? கொடுத்துருந்தேனா நான் சுத்தமா காலி போலே... :((((
    //

    இராம்,

    கூல் டவுன் :)

    ReplyDelete
  23. வெட்டி

    //படம் மட்டும் எடுத்திருந்தா 1000 நாள் ஓடி சாதனை தான் :-) //

    அதிலென்ன சந்தேகம் :))

    வருத்தப்படாத வாலிபன்

    //கலக்கிட்டீங்களே கப்பி. ஆஹா கவித!
    //

    அப்படி பார்த்தா உங்க பேரு கூட கவித தான் :)))

    நன்றி வ.வா :)

    cvr

    தள அறிக்கையை பார்த்தீங்கல்ல? இப்ப சந்தோசம் தானே :))

    ReplyDelete
  24. hola kappi

    இன்னைக்கு இங்கனதான்லே டேரா

    ReplyDelete
  25. l'ha ha ha ha fatto Shanker e Rajini deve vedere il vostro alberino di Blog circa il sivaji che otterranno uccidersi

    ReplyDelete
  26. 高的kappi 它是太多并且您不应该是做一个喜剧关于sivaji 因为您是rajini 风扇? 不是您?

    ReplyDelete
  27. ¿Te quiero Kappi usted está así que caliente puedo casarle?

    ReplyDelete
  28. el kappi i era allways que esperaban su subsistencia del poste él para arriba y poste regular y le agradece por su poste sobre mí hace un rato largo

    ReplyDelete
  29. யாருப்பா அது என் பின்னூட்டத்த எல்லாம் டெலீட் பன்றது?

    ReplyDelete
  30. // கப்பி பய 덧글 내용...
    இம்சை அரசி

    சின்ன தல மேல கொலவெறில இருக்கீங்க போல..இதான் எங்களுக்கு வேணும் :))
    //

    கொல வெறியும் இல்ல... ஒண்ணும் இல்ல...

    ஹி ஹி... எங்கண்ணன நான் ஓட்டாம வேற யாரு ஓட்டறது??? :)))

    ReplyDelete
  31. இராயல் பேரை சொன்னதுக்கே ஷகிரா, ஜெனிபரெல்லாம் என்னை வாழ்த்திட்டு போறாங்க ;))

    ReplyDelete
  32. இந்த பதிவ எப்பலே போட்டிங்க என் கண்ணுல மாட்டவேயில்ல...:(

    ReplyDelete
  33. கலக்குரது ராயலு ஸ்டெயிலு...:)

    ராயல்ஜி!
    பேரைக் கேட்டாலே சும்மா சும்மா அதிருதே!

    ReplyDelete
  34. ?""BOSS. Bachelor of Sangam Service"
    ///

    அவரு இப்பதான் சோசியல் சர்வீஸ்னு பதிவு போட்டாரு

    இதுதானா மேட்டரு
    :)

    ReplyDelete
  35. கப்பி, இன்னைக்குதான் இந்த போஸ்ட் பார்த்ட்தேன்.. ஜூப்பர்!! ராயல்-The Boss- Bachelor od Sangam service! Super! ;-)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)