Tuesday, June 19, 2007

கவிதையும் கவுண்டமணியும்

கொஞ்ச நாளைக்கு முன்னாலத்தான், கவிமடத்தலைவன் ஆசிப் அண்ணாச்சி கவுஜைக்கு அணிந்துரை எவ்வளவு முக்கியம்னு சொன்னாங்க. சரி. நாமலும் கவுஜை எழுதிருக்கோம். மொதல்ல போய் ஒரு அணிந்துரைய வாங்கிட்டு வந்துடலாம்னு ஒரு பிரபல கவுஜன்கிட்டப் போனேன். அவர் எழுதித் தந்த அணிந்துரைய நீங்களே பாருங்க... நீல கலர்ல இருக்குறதுதாங்க அணிந்துரை.

காதலிக்கோர்க் கடிதம்...

காதலிக்கு கடிதம்னு சொல்லிட்டு ஏன்டா அவளோட தங்கச்சுக்கு ஒரு காப்பி அனுப்பி வச்சிருக்க??

அண்ட அழகிகளெல்லாம்
மண்டியிடும் பேரழகியே...

அடப்பாவி.. அடப்பாவி... ஆரம்பத்துலேயே ஏன்டா அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகுற? அவள லோக்கல் கண்டஸ்ட்டுக்கு அனுப்புனாலே, கேட்லையே அடிச்சுத் தொரத்திடுவானுங்க. இதுல அணடப் பேரழகி மண்டி போடும் அழகியா? டியர் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென். தயவுசெஞ்சு இந்த அபத்தத்த மட்டும் ஐஸ்வர்யா ராய்க்கோ, சுஷ்மிதா ஷென்னுக்கோ சொல்லிறாதீங்க. அப்புறம் அவளுக ரத்த வாந்தி எடுத்தே செத்துப் போயிடுவாளுங்க.

உன் சுவாசம் தாங்கியச்
சந்தனக் காற்று
நாசி துளைத்து இதயம் நுழையும்
அனுதின சுகத்தில்தான்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னமும் இதயம்...

ஏன்டா... காத்து மூக்கு வழியா உள்ள போனவுடனே நுரையீரலுக்குப் போகும்னு அடிப்படை அறிவு கூட இல்ல. நீயெல்லாம் ஏன்டா கவுஜ எழுதுற? மொதல்ல போய் அஞ்சாப்பு அறிவியல படிச்சுட்டு வாடா. ஏன்டா, அவ சுவாசம் தாங்கும் சந்தனக் காற்றா? ஊசிப் போன பிரியானிய மூனு நாளு மூடி வச்சி ஓபன் பண்ணா வரும் நாத்தக்காத்து உனக்கு சந்தனக் காத்தா? உன்னையெல்லாம் அவ மூக்குல இருந்து ஒரு டியுப விட்டு அவ விடுற கார்பன் டையாக்சைட உன் மூக்குல விடணும்டா. அப்பத்தான்டா நீங்கெல்லாம் திருந்துவீங்க.

நீ தொலைந்துபோன‌
நொடிகளிலெல்லாம்
மூர்ச்சையாகிறது
என் கைக் கடிகார முள்...

ஒன்னா ருவாய்க்கு பேட்டரிப் போட வக்கில்லை. இதுல அவ போனதுனாலத்தான் நின்னுப் போச்சுன்னு அலப்பற வேற. ஏன்டா, நீ போட்டிருக்குறது ஒரு வாட்ச்? அத பிச்சக்காரன்கிட்டக் கொடுத்தாக்கூட, அந்த வாட்ச்ச மூனு தடவ தலையச் சுத்தி எச்சித் துப்பி உன் மூஞ்சிலேயே விட்டெறிவான். அந்த வாட்ச்ச வச்சிக்கிட்டு ஊருலயில்லாத பில்ட்-அப் விடுற??

கணப்பொழுதில் கண்பறிக்கும்
மின்னலையும் மிஞ்சும்
உன் ஒற்றைப் பார்வை
ஒளிக் கீற்றில்தான்
விரிகிறது உலகம்
என் விழிகளில்...

ஆங்.. அப்படியே அத ஒரு பல்ப்ல புடிச்சு ஊருக்கு வெளக்கேத்துறது. உன் கண்ணுல கோளாறுன்னா கண் டாக்டர்க்கிட்டப் போ. அத வுட்டுப்புட்டு மின்னல் கீற்று, தென்ன மட்டைனு ஏன்டா ஒளறுற? உன்னையெல்லாம் கேப்டன் மாதிரி தவுஸண்ட் வாட்ஸ் கரெண்ட ஒடம்புலப் பாய்ச்சணும்டா.

உன் இதழ்கள் பதித்த ஓர்
முத்தச்சுவடுப் போதும்
மரித்துப்போன‌
மானுட உணர்வுகளெல்லாம்
உலகாள உயிர்த்தெழும்...

இதுக்குத்தான் இந்த பில்ட்-அப்பாடா? டேய். அவ முத்தச் சுவட வச்சி என்னடா பண்ணுவ? அத கொண்டு போய் லண்டன் மியுசியத்துல வைக்கப் போறியா? மரித்துப் போன... உயிர்த்தெழும்... எந்த மாதா கோயில் வாசல்ல இருந்துடா காப்பி அடிச்ச?

மகா ஜனங்களே... இந்த மாதிரி கவுஜ எழுதுறேன்னு சும்மா இருக்குற நிலாவ விளையாட வான்னு ஒரண்ட இழுக்குறது, பூவக் கொடுத்துத் தலைல வைங்கன்னு சொன்னா, 'நீ பூ மாதிரி இருக்க.. புலி மாதிரி பாய்ற'னு குப்புறப் படுத்தவன் பாதி ராத்திரில எழுந்திருச்சு உளற்ற மாதிரி உளறுறது, 'ஐயோ பாவம்'னு ஆண்டவன் நதி, அருவி, புல்வெளி, மழைத்துளி, மேகம்னு நமக்காகப் படச்சத, இவனுக வெரட்டி வெரட்டி, வளச்சி வளச்சி வம்பிழுக்குறது, இதே பொழப்பாப் போச்சு இந்த கவுஜன்களுக்கு. இதே மாதிரி இனி கண்டினியூவாச்சி...


--------------------------***********----------------------------

கவுஜனா கவுஜ எழுதி, கவுண்ட மணியா வாசிச்சுப் பாத்த எஃபெக்ட் இப்படியாகிப் போச்சு. மொதல்ல வேற யாராவது எழுதுனதுக்குத்தான் அணிந்துரை எழுதலாம்னு பாத்தேன். வீணா எதுக்குச் சண்டைனுதான், என்னோடதுலேயே ஆரம்பிச்சுட்டேன். யாருக்காவது அணிந்துரை எழுதணும்னா மறக்காம பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் வந்து செவ்வனே என்னுடையப் பணிய செய்றேன். :))

33 comments:

  1. ராமு கவுஜக்கு அணிதுரை எழுத அன்புடன் அழைக்கிறோம்...:)

    ReplyDelete
  2. ji nalla kavithai, nalla aninthurai, 1st& second, nalla sirippu vanthathu - nalla sirithen
    sila nodikal sirikka vaithamaikku nanti..

    ReplyDelete
  3. raam kavujaikku aninthurai vEnumpaa pls

    ReplyDelete
  4. //ராமு கவுஜக்கு அணிதுரை எழுத அன்புடன் அழைக்கிறோம்...:)///

    மின்னலு ஏனிந்த கொலைவெறியோட அலையிற மக்கா??

    நீ கூட ஒரு கவுஜ எழுதுனே இல்லை? அப்புறமென்னா?? ;-)

    ReplyDelete
  5. எல்லாம் வாலிப சிங்கங்களா இருக்கே வயசான நமக்கென்ன வேலைன்னு படித்தாலும் பின்னூட்டம் போட்றதில்ல.ஆனா விடாது கருப்பு இப்படி பின்னி பெடலெடுக்கிறீங்க.
    உங்களுக்குள் மூக்குச்சளியையும் மீறி[உங்க பதிவுல அடிக்கடி வரும் வார்த்தைப் பிரயோகம்] இவ்வளவு நகைச்சுவை உணர்வா ..ம்ம்ம்ம் எல்லாம் நீங்க வந்திருக்கும் இடம் அப்படி.
    கீப் இட் அப் [நகைச்சுவை யைச் சொன்னேன்]

    ReplyDelete
  6. ஜி.. உன் கவிதைக்கு கவுண்டர் அணிந்துரை எழுத கேட்டு இருந்தா இப்படி தான் எழுதி கொடுத்து இருப்பார்..

    உங்க அக்கப்போர் எங்க போனாலும் தாங்க முடியலடா சாமினு ஒரு டயலாக்கும் சேர்த்து சொல்லி இருப்பார்.

    ReplyDelete
  7. இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா...

    ஒரு வரில இருக்கு நாலு வார்த்தைய மடிச்சு போட்டு எழுதுறவன் எல்லாம் கவிஞன் சொல்லுறான்ங்க...

    ReplyDelete
  8. ஜி,அப்படியே செந்தில் கிட்டயும் அணிந்துரை வாங்கிடுங்க.

    ReplyDelete
  9. இப்படி ஒரு நல்ல பதிவ யாருமே கண்டுக்காம விட்டுட்டாங்களே ஜியா!

    கவுஞ்சர்களுக்கு புத்திமதி சொல்றதுனால அவங்களுக்கு புடிக்கலயோ என்னவோ. ஆனா ஒண்ணு இந்தாளுக்கு பிடிக்கிற மாதிரி கவித எழுதணும்னா வாய்ப்பே இல்ல.

    ReplyDelete
  10. அவருக்கு புடிச்ச ஒரே கவுஜ இதுதாங்க

    ஒன்று இங்கிருக்கிறது
    மற்றது எங்கென்றேன்
    சற்றும் தாமதியாமல் உரைத்தான்
    அதுதான் இது
    அடங் கொக்கா
    ஆஹா மக்கா

    ReplyDelete
  11. பேராண்டி ஜி,
    திருக்குறளுக்கு உரை எழுதிய ஒரு பரிமேல் அழகர் போல்,உனக்கு நிகர் நீதான் அப்பா!!! நீதான் அப்பா!!!

    ReplyDelete
  12. கவுஜைக்கே டெவில் ஷோவா? சூப்பர்

    ReplyDelete
  13. //மின்னுது மின்னல் said...
    ராமு கவுஜக்கு அணிதுரை எழுத அன்புடன் அழைக்கிறோம்...:) //

    நேத்தே அதப் பத்தி யோசிச்சேன்.. நம்மக்கிட்ட இருந்து தப்பிக்கணும்னே நமக்கு புரியாத மாதிரி எழுதிப்புட்டார்.. அதான் விட்டுட்டேன் :((

    ReplyDelete
  14. //Anonymous said...
    ji nalla kavithai, nalla aninthurai, 1st& second, nalla sirippu vanthathu - nalla sirithen
    sila nodikal sirikka vaithamaikku nanti.. //

    வாங்க அனானி நண்பரே... நன்றி ஃபார் யுவர் நன்றி... நம்ம கவுஜையப் பாத்து நண்பர்கள் பண்ணின கலாய்த்தல்ல வந்த எஃபெக்ட்தான் ;))

    ReplyDelete
  15. //raayal raam said...
    raam kavujaikku aninthurai vEnumpaa pls //

    ஆஹா.. ராயலே கேட்டுப்புட்டாரா.. ஜூப்பரு.. அப்ப எழுதிட வேண்டியதுதான் ;))

    ReplyDelete
  16. // இராம் said...
    மின்னலு ஏனிந்த கொலைவெறியோட அலையிற மக்கா??//

    பின்ன.. புரியுற மாதிரி எழுத வேண்டியதுதானே :))

    //நீ கூட ஒரு கவுஜ எழுதுனே இல்லை? அப்புறமென்னா?? ;-) //

    அப்படியா?? சொல்லவே இல்ல...அப்ப மின்னலுக்குத்தான் ஃபர்ஸ்ட் போனி ;))

    ReplyDelete
  17. //கண்மணி said...
    எல்லாம் வாலிப சிங்கங்களா இருக்கே வயசான நமக்கென்ன வேலைன்னு படித்தாலும் பின்னூட்டம் போட்றதில்ல.ஆனா விடாது கருப்பு இப்படி பின்னி பெடலெடுக்கிறீங்க. //

    யக்கோவ்.. என்ன இது? கருப்பும் ஒரு ஸைட் கோல் போட்டுக்கிட்டுதான் இருக்காரு.. அவரு வந்துப் பாப்பாருன்னு நெனக்கிறேன்.. :))

    //ஜி,அப்படியே செந்தில் கிட்டயும் அணிந்துரை வாங்கிடுங்க.//

    இந்த கவுஜைய எழுதுனதே செந்தில்தானே.. :))

    ReplyDelete
  18. // நாகை சிவா said...
    ஜி.. உன் கவிதைக்கு கவுண்டர் அணிந்துரை எழுத கேட்டு இருந்தா இப்படி தான் எழுதி கொடுத்து இருப்பார்..//

    ஆஹா... கவுஜையால பயங்கரமா கிலியடைஞ்சிருப்பீங்க போல :))

    //இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா...

    ஒரு வரில இருக்கு நாலு வார்த்தைய மடிச்சு போட்டு எழுதுறவன் எல்லாம் கவிஞன் சொல்லுறான்ங்க... //

    என்ன புலி.. இதுக்கே கோவப் படுறீங்க?? அதுக்குத்தானே கவிஞன், கவுஜன்னு ரெண்டா பிரிச்சிருக்கோம்ல ;))

    ReplyDelete
  19. //தம்பி said...
    இப்படி ஒரு நல்ல பதிவ யாருமே கண்டுக்காம விட்டுட்டாங்களே ஜியா!//

    ஆமாம் தம்பி.. எவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதிவ எழுதிருக்கேன் :))

    //கவுஞ்சர்களுக்கு புத்திமதி சொல்றதுனால அவங்களுக்கு புடிக்கலயோ என்னவோ. ஆனா ஒண்ணு இந்தாளுக்கு பிடிக்கிற மாதிரி கவித எழுதணும்னா வாய்ப்பே இல்ல. //

    அதுவும் கரெக்ட்தான்... அந்தாளுக்கு புடிக்கிற மாதிரி எழுதணும்னா, ஒரு கவுஜன் பொறந்துதான் வரணும் :))

    ReplyDelete
  20. // PPattian said...
    அவருக்கு புடிச்ச ஒரே கவுஜ இதுதாங்க

    ஒன்று இங்கிருக்கிறது
    மற்றது எங்கென்றேன்
    சற்றும் தாமதியாமல் உரைத்தான்
    அதுதான் இது
    அடங் கொக்கா
    ஆஹா மக்கா //

    வாங்க ஹரி.. கலக்கிட்டீங்க.. கவுண்டருக்கும் புடிக்குற மாதிரி இல்ல.. கவுண்டரே எழுதுன மாதிரி இருக்குது :)))

    ReplyDelete
  21. //ulagam sutrum valibi said...
    பேராண்டி ஜி,
    திருக்குறளுக்கு உரை எழுதிய ஒரு பரிமேல் அழகர் போல்,உனக்கு நிகர் நீதான் அப்பா!!! நீதான் அப்பா!!! //

    வாங்க பாட்டிமா... ஏதோ பரிமேல் அழகர்னு சொன்னீங்களே.. அவரு எந்தப் படத்துல நடிச்சிருக்காரு... பேரே வித்தியாசமா இருக்குதே.. ஒருவேள ஹிந்தி ஆக்டரோ??

    ReplyDelete
  22. // ILA(a)இளா said...
    கவுஜைக்கே டெவில் ஷோவா? சூப்பர் //

    ஹி..ஹி... பின்ன.. விட்டுடுவோமா??

    ReplyDelete
  23. //வாங்க ஹரி.. கலக்கிட்டீங்க.. கவுண்டருக்கும் புடிக்குற மாதிரி இல்ல.. கவுண்டரே எழுதுன மாதிரி இருக்குது :)))//

    டாங்க்யூ...டாங்க்யூ...

    எல்லாம் வ.வா.ச தந்த இன்ஸ்பிரேஷன் தான்...

    ReplyDelete
  24. அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

    ReplyDelete
  25. அடடடடாஆஆஆ! அட்டடடடாஆஆஆஆஆஆஆ! பிரமாதமப்பா! :)

    இன்னொன்னு..சைடுல இருந்துச்சே வீடியோ...நெத்திக்கண்ணு மாதிரி மேல வந்துச்சே..ஞானப்பழப் பிரச்சனை...சூப்பர். சூப்பர். சூப்பர்.

    ReplyDelete
  26. //அணிந்துரை எழுதணும்னா மறக்காம பின்னூட்டத்துல சொல்லுங்க.
    நான் வந்து செவ்வனே என்னுடையப் பணிய செய்றேன். :))//

    அது என்ன "செவ்வனே" செய்யறீங்க?
    செவக்க செவக்க செவ்வனேன்னு ரத்தம் குப்புன்னு கிளம்புமோ? :-)))

    ReplyDelete
  27. //
    ஒன்னா ருவாய்க்கு பேட்டரிப் போட வக்கில்லை. இதுல அவ போனதுனாலத்தான் நின்னுப் போச்சுன்னு அலப்பற வேற
    //
    ROTFL :)
    kalakkunga Ji !!

    ReplyDelete
  28. // வேதா said...
    கவிதை சூப்பர் ஜி :) கவுண்டர் கமெண்டும் சூப்பர் :)//

    வருகைக்கு நன்றி வேதா.. என்னுடைய எல்லா கவுஜைலையும் தவறுகள சுட்டிக் காட்டுவீங்க. இதுல காட்டல.. அதுனால, இதுல எந்தத் தப்பும் இல்லைனு எடுத்துக்கட்டுமா?? ;))

    ReplyDelete
  29. // PPattian said...
    டாங்க்யூ...டாங்க்யூ...

    எல்லாம் வ.வா.ச தந்த இன்ஸ்பிரேஷன் தான்... //

    அட.. ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  30. //கப்பி பய said...
    அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!//

    நீங்கதான் போலி கவுண்டமணின்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே.. உண்மையா??

    ReplyDelete
  31. //G.Ragavan said...
    அடடடடாஆஆஆ! அட்டடடடாஆஆஆஆஆஆஆ! பிரமாதமப்பா! :)//

    வாங்க ஜிரா... ஆம்ஸ்ட்ரடாம்லாம் எப்படி இருக்குது??

    //இன்னொன்னு..சைடுல இருந்துச்சே வீடியோ...நெத்திக்கண்ணு மாதிரி மேல வந்துச்சே..ஞானப்பழப் பிரச்சனை...சூப்பர். சூப்பர். சூப்பர். //

    எனக்கு விடீயோலாம் பாக்க முடியாது :((

    ReplyDelete
  32. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    அது என்ன "செவ்வனே" செய்யறீங்க?
    செவக்க செவக்க செவ்வனேன்னு ரத்தம் குப்புன்னு கிளம்புமோ? :-))) //

    வாங்க KRS. அது எப்படி உள்குத்த கரெக்டா கண்டுபுடிக்கிறீங்க??

    ReplyDelete
  33. //Arunkumar said...
    ROTFL :)
    kalakkunga Ji !! //

    வாங்க அருண்.. ரொம்ப டாங்கிஸ்.. ;))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)