Tuesday, June 26, 2007

கைப்புள்ளயின் சுற்றுலா அனுபவம்!

கைப்புள்ள சுற்றுலா போக ஆசைப் பட்டார். அது ஒரு அழகிய சிறிய தீவு. அந்த தீவுக்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். அந்த படகை விட்டு விட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகிவிடும்.

படகுத்துறையில் காத்திருந்தார் நம்ம கைப்புள்ள. அப்போ துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் ஒரு படகினை பார்த்தார். அடடா! இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவிக் குதித்தார் படகில்!


குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடா. ஒரு வழியா படகை பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.


படகில் இருந்த ஒருவர் சொன்னார், "அட வெளங்காப் பயலே.. இன்னும் ஒரு நிமிசம் காத்திருந்தீன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீ பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?"

28 comments:

  1. எல்லாரும் ஒன்னா வந்து பின்னூட்டம் போட்டாதான் நான் இருப்பேன்

    ReplyDelete
  2. எனக்கு சளிவந்தா பிரச்சினையே இல்லே, காளி சிலை வெச்சு 10 கை இருக்குளே

    ReplyDelete
  3. பாரத்மாதகீ ஜே !

    ReplyDelete
  4. காஜா பீடி என்ன விலை ?

    ReplyDelete
  5. ரஜினி ரசிகர்களுக்கு இலவசம்.

    ReplyDelete
  6. ஏம்ப்பா இப்படி எலக்ஸன் நேரத்துல தொல்லை குடுக்குறீங்க

    ReplyDelete
  7. தொழிலை விட்டுவிட்டேன், திருந்தி வாழ ஒரு வழி சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  8. தோணியிலேயே துபாய் போலாம் வரீங்களா? ஒரு கட்டிங் குடுத்தா போதும்

    ReplyDelete
  9. இதெல்லாம் ஜோக்கா, நாங்கள்லெம் போடாத ஆட்டமா ?

    ReplyDelete
  10. அட எல்லாறும் இங்கனதான் இருக்கீங்களா?

    ReplyDelete
  11. ஹ்ஹ் ஹி ஹ்ஹி, இருட்டுக்குள்ள இருக்கும் போது உடுப்பு எதுக்கு ?

    ReplyDelete
  12. //தொழிலை விட்டுவிட்டேன், திருந்தி வாழ ஒரு வழி சொல்ல முடியுமா ? //

    ஏன் இந்த கொலவெறி அப்றம் நாங்க எப்படி வாழுறது?

    ReplyDelete
  13. ஆமா ஆமா எல்லாரும் இங்கேதான் இருக்கோம், தாத்தா கூட வருவாரு

    ReplyDelete
  14. சினேகமுடன் பழகி, பட்டாடைகளை வாங்குங்கள்

    ReplyDelete
  15. நம்பிக்கை நாணயம் கைராசி பார்த்து வாங்குங்கள் டிட்டி மார்க் ஜட்டிகள்

    ReplyDelete
  16. மாட்டை கட்டிட்டு வரதுக்குள்ளே என்ன விளையாட்டு?

    ReplyDelete
  17. உயர்தர உள்ளாடைகளுக்கு டேண்டெக்ஸ் - அணிந்து மகிழ டேண்டெக்ஸ் - இது தமிழ்நாடு அரசின் தரமிகு தயாரிப்பு.

    உள்ளாடைகளின் உலகம் டாண்டெக்ஸ்

    ReplyDelete
  18. அணில் மார்க் சேமீயா டொங் டொன்க்

    சூடர்மணி ஜட்டிகள்,டொம்க்க் டொடங்க் டொய்ங்க்

    ReplyDelete
  19. //சுருளிராஜன் said...
    ஹ்ஹ் ஹி ஹ்ஹி, இருட்டுக்குள்ள இருக்கும் போது உடுப்பு எதுக்கு ? //

    யாருய்யா நீயி உன்னய மாமரத்து கிளியேவுல பாத்தது நல்லாருக்கியாப்பா

    ReplyDelete
  20. எதுக்குடா இந்த வீண் விளம்பரம். அந்த நடிகனுங்கதா போஸ்டர் அடிக்கிறாங்கன்னா, நீங்க போஸ்ட் போட்டே கொல்லுறீங்களே

    ReplyDelete
  21. விடியோ படம் காட்சியுடன் பயணம் செய்ய நாடுங்கள்

    சோழன் போக்குவரத்து கழகம்

    மறந்துவிடாதிகள்...கரம் சிரம் புரம் நீட்டாதீர்கள்

    ReplyDelete
  22. என்ன நடக்குது இங்கே?

    ReplyDelete
  23. என்ன ஜப்பானுல கூப்பிட்டாங்க, அமேரிக்காவுல கூப்பிடாங்க....அங்கெல்லாம் போவாம உங்க பதிவுலகத்துல வந்து மாட்டிகிட்டேன்

    ReplyDelete
  24. ஆ..ஆக் ஆங்..என்னற நடக்குது ?

    ReplyDelete
  25. பையன் பதிவு போடுறான், சேட்டு பஞ்சு மிட்டாய் விக்கிறான்

    ReplyDelete
  26. //சதுர்வேதி said...
    என்ன நடக்குது இங்கே? //
    ஆட்டம் கரகாட்டம்.

    ReplyDelete
  27. இதுக்கு பேருதான் கரகாட்டமா!!!!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)