Wednesday, June 20, 2007

இளைய முதியவர்!

பேருந்து கிளம்பி விட்டது. கடைசி நேரத்தில் பேருந்தை துரத்தி வந்து ஏறினார் ஒரு முதியவர். படியில் நின்ற நான் அவர் கையைப் பிடித்து இழுத்து தாங்கினேன். அவரைப் பார்க்க எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. இந்த வயதிலும் இப்படி ஒரு இளமைத் துள்ளலுடன் இருக்கிறாரே! அவர் முகத்தில் எந்த கவலை ரேகையும் இல்லை. மகிழ்ச்சியுடனே காணப்பட்டார். அடடா புரிந்து விட்டது எனக்கு. ஆமாம் அவர் இளமையின் ரகசியம் கவலைகளை மறந்த மகிழ்ச்சியே! அவரிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்து பேச்சுக் கொடுத்தேன்.

"தங்களுடைய இளமையின் ரகசியம் என்னங்கய்யா?"



"ஓ அதுவா... தினமும் நாலு பாக்கெட் சிகரெட் அடிக்கிறேன். படுக்கப்போகுமுன் கஞ்சா இழுக்கிறேன். அது தவிர வாரத்தில் குறைந்தது நான்கு நாளாவது முழு பட்டில் சாராயம் அடிக்கிறேன். சாப்பாட்டைப் பொருத்தவரை எனக்கு பிடிக்காதது என்று எதுவும் கிடையாது. ஊர்வன. பறப்பன. நடப்பன.குதிப்பன, தாண்டுவன எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவேன். சொல்ல மறந்து விட்டேன். தேகபயிற்சி என்று எதையும் நான் மறந்து போயும் செய்றது கிடையாது!"

"அப்படியா?!" ஆச்சர்யத்தில் வாய்பிளந்தேன்... "சார் நிஜமாவே இப்போ உங்க வயசு என்ன? ஒரு 75 இருக்குமா?"

"என்ன விளையாடுறீங்களா? ஆடி வந்தா... 24தான்!"

7 comments:

  1. ஆடாம வந்தா?

    ReplyDelete
  2. விடாத கருப்பு, முன்பே படித்தது என்றாலும், தங்கள் எழுத்து நடை, முதல் முறை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது

    வீ எம்

    ReplyDelete
  3. //பேருந்து கிளம்பி விட்டது. கடைசி நேரத்தில் பேருந்தை துரத்தி வந்து ஏறினார் ஒரு முதியவர். படியில் நின்ற நான் அவர் கையைப் பிடித்து இழுத்து தாங்கினேன்.//


    "இவர் என்ன இருபது வயது இளைஞரா இல்லை அறுவது வயது முதியவரா"


    நான் கூட டாபர் செவன்பிராஸ்க்குத்தான் விளம்பரம் போடுறீங்கன்னு நினைச்சேன்!

    ReplyDelete
  4. நான் ஏதொ இன்னும் ஒரு சிவாஜி விமர்சனம் என்று நினைத்துவிட்டேன், பரவாயில்லை இது இளைய முதியவர் அது முதிய இளையவர் சாரி...

    ReplyDelete
  5. எங்க கருஞ்சிறுத்தய கூட்டிவந்து இந்த வ.வா.ச காரங்க காமெடி பண்றாங்களே

    போதும்பா எங்க கருப்ப விட்டுடுங்க

    ReplyDelete
  6. அட்லஸ் மாதம் அருமையாப் போகுதுங்க!
    //ஆடி வந்தா... 24தான்!//

    தள் ஆடி வந்தா? 18 தானோ? :-)

    //நான் கூட டாபர் செவன்பிராஸ்க்குத்தான் விளம்பரம் போடுறீங்கன்னு நினைச்சேன்!//

    ரிப்பீட்டே! :-))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)