Thursday, June 7, 2007

Operation கில்மா - 1

விவசாயி வார இறுதி விடுமுறைக்காக மதுரை செல்கிறார். அங்கே இயற்கையன்னையை ரசித்தபடி வரப்போரமாக நடந்துவருகிறார். அவர் வரவுக்காக காத்திருந்த ஒரு பட்டாம்பூச்சி அவரை பார்த்த பரவசத்தில் ஓடி வந்தது (பட்டாம்பூச்சினா பட்டாம்பூச்சியே இல்லை. ஒரு பொண்ணு. நீங்களா புரிஞ்சிக்கனும்.).

"அண்ணா... பெங்களூருல இருந்து தானே வாரீக"

"ஆமாம்மா"

"அவுகள பாத்திகளா?"

"அவுகனா யாருமா?"

"என்னணா! பெங்களூருல இருந்து வாரீக. அவுகள தெரியாதா? அங்க இருக்கற எல்லாருக்கும் அவுகள தெரியும்னு சொன்னாரே. இப்படி சொல்லிபுட்டீக"

"இப்படி மொட்டையா அவுக அவுகனு சொன்னா எப்படி அம்மணி தெரியும்? சும்மா பேர சொல்லு தாயி"

"ஐயோ அவுக பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களேதான் கண்டுபிடிக்கனும்"

"சரி ஏதாவது ஒரு க்ளூ கொடு. கண்டுபிடிக்கிறேன்"

"ராவுல ஆராம்பம்... மதியமுல முடிவு"

"ஏன் அம்மணி? இப்படி சொன்னா என்னத்த கண்டுபிடிக்க? வேற ஏதாவது சொல்லுமா"


"திராட்சைக்குள்ள இருந்து ஆரம்பிச்சி மாம்பழத்துல கடைசியா முடியும்"

"அம்மணி என்ன டென்ஷனாக்காத. வீக் எண்ட் ஜாலியா இருக்கலாம்னு தான் பொள்ளாச்சிக்கூட போகாம மதுரை பக்கம் வந்திருக்கேன். நீ என்னனா இப்படி போட்டு கொல்லறீயே. ஒழுங்கா சொல்லும்மா"

"சரி கடைசியா சொல்றேன்...ராகத்துக்கு கால ஒடைச்சா அவுக வருவாக. இப்பவாது கண்டுபிடிங்க"

"பேசாம என் காலை எவனாவது உடைச்சிருந்தாக்கூட நான் நிம்மதியா பெங்களூர்லையே இருந்திருக்கலாம் போல"

"அண்ணா... இப்பவாது கண்டுபிடிங்க ராகுகாலத்துல ஆரம்பிச்சி எமகண்டத்துல முடியும்"

"தாயி... எனக்கு தான் இப்ப செவன் அண்ட் ஆப் ஸ்டார்ட் ஆயிடுச்சினு நினைக்கிறேன்"

"அண்ணா செவன் அப் எல்லாம் இங்க கிடைக்காது...
சரி நீங்க கண்டுபிடிங்க - கைல வில்லுக்கூட வெச்சிருப்பாரே"

"மன்மதனா?"

"அவரு மன்மதன் தான்.. ஆனா அந்த பேர் இல்லை... வில்லு உடைச்சாரே"

"ராமரா?"

"அதேதான். அதுல முதல் ரெண்டு எழுத்து மட்டும்"

"ராமா???"

"ஆமாண்ணா. அவுகளேதான். அவுக பட்டணத்துல எப்படி இருக்காக? என்னையே நினைச்சிட்டு இருக்கறதா எப்பவுமே சொல்லுவாக"

"யாரு. அவரா? எந்நேரமும் கடலை தான் போடறாரு"

"அண்ணா கடலை எல்லாம் இல்லை. நெல்லுதான் இங்க போடுவோம்"

"தாயி நான் அந்த கடலைய சொல்லல. நான் பொண்ணுங்கக்கூட போடற கடலையை சொன்னேன்"

"அப்படினா?"

"இரு தாயி... உனக்கு சொன்னா புரியாது. நேர்லையே காட்டறேன்"

இருவரும் அருகிலிருக்கும் ப்ரௌசிங் செண்டருக்கு செல்கிறார்கள்.

"இங்க பாரும்மா. இது தான் மெசஞ்சர். இப்ப நான் என் பேர்ல உள்ள போறேன்" சொல்லிவிட்டு விவா லாகின் செய்ய உள்ளே ராயல் ஆன்லைனில் இருக்கிறார்...

விவா ராயலுக்கு பிங் செய்கிறார்

விவா: ராயல்.. எப்படிப்பா இருக்க?

ராயல்: நான் ரொம்ப பிஸி... இண்டர்நெட் வேற பிரச்சனை பண்ணுது. ரிலையன்ஸ்காரவங்கள் சரியான ஃபிராடு. நான் அப்பறம் பேசறேனு உங்ககிட்ட

விவா: சரிப்பா... எனக்கும் நேரமாச்சி. நான் கிளம்பறேன். சும்மா மெயில் செக் பண்ணதான் வந்தேன்

ராயல்: பை... have a good day

விவா... லாக் அவுட் செய்கிறார்

அவர் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்ட இல்லை. இப்ப பாரும்மா. சொல்லிவிட்டு இந்த ஐடியில் நுழைகிறார்... muniyamma.paravai@yahoo.com

"என்னண்ணா இது பேரு..."

"paravai.muniyamma ஏற்கனவே எவனோ எடுத்துக்கிட்டான். அதான் இந்த பேரு. நீ கண்டுக்காத" சொல்லிவிட்டு விவா லாகின் செய்து yahoo chat windowவில் நுழைகிறார்...


அங்கே ராம் ஆன்லைனில் இருக்கிறார்... விவா உள்ளே நுழைந்ததும்

நான்கு ஐந்து நபர்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் வருகிறது.. அதில் நம் ராயலும் ஒருவர்

ராயல் : ASL please...

(தொடரும்...)

52 comments:

  1. Raam, total damage..

    Paravai muniyammava kooda vuttu veikkaliya??? :-)))

    ReplyDelete
  2. Adada.. idhukku appuram dhaanae katcheri kalai kattum.. ippo poi thodarum pottuteengalae..

    Seri... vivasaayi kitta imbuttu neram pesinadhu ranjiniya illa mahavannu sollavae illayae neenga :-))

    ReplyDelete
  3. //இயற்கையண்ணையை//

    பார்த்த உடனே இதுதாங்க கண்ணுல பட்டது. அன்னையை அண்ணை ஆக்குதல் சரியோ?

    ReplyDelete
  4. விலா எலும்பு நோக சிரிச்சேன்... ராயலோ ராயல்.....

    ReplyDelete
  5. //vivasaayi kitta imbuttu neram pesinadhu ranjiniya illa mahavannu sollavae illayae neenga :-))//

    ராம் அப்படின்னு பேரு வெச்சுக்கிட்டு ராவணனா இருக்காரே!!

    ReplyDelete
  6. //G3 said...

    Raam, total damage..

    Paravai muniyammava kooda vuttu veikkaliya??? :-))) //

    அந்த ஐடி நாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க வெச்சிருந்தோம்...

    அது எல்லாம் ஒரு பொற்காலம். அதை பத்தி சீக்கிரமே ஒரு பதிவு போடறேன் ;)

    ReplyDelete
  7. ஆஹா எல்லாம் ஒரு குப்பாத்தான் அலையிராங்க போல.
    நாமதான் பாத்து சூசனமா இருக்கனும் போல.

    ராம்: ராயல் சிங்கத்த சாய்ச்சுபுட்டாங்களே...

    ReplyDelete
  8. //G3 said...

    Adada.. idhukku appuram dhaanae katcheri kalai kattum.. ippo poi thodarum pottuteengalae..//

    அப்பதானே நாளைக்கு ஆவலோட வருவீங்க ;)

    //
    Seri... vivasaayi kitta imbuttu neram pesinadhu ranjiniya illa mahavannu sollavae illayae neenga :-))
    //
    என்னங்க இதுக்கூட தெரியாம... எல்லாம் நம்ம மகா தான் ;)

    ReplyDelete
  9. //ராம் அப்படின்னு பேரு வெச்சுக்கிட்டு ராவணனா இருக்காரே!! //
    அது பழைய ஸ்டைல். ராமன் பேர் வெச்சுகிட்டு மன்மதனா இருக்கிறது புது ஸ்டைல்

    ReplyDelete
  10. Ennaku Maduraila poi kanchidu vanthu pathivu pota mathiri theriyut...

    pickup agara nerathala poi thodarum, wait pannrane...

    ReplyDelete
  11. நன்றாக இருந்தது பாலாஜி. தொடர்ச்சி இருக்கிறதல்லவா...?

    ReplyDelete
  12. :)

    தொடர்ச்சிக்காக ஆவலாய்க் காத்திருக்கிறேன்!

    அதான் அண்ணன் எப்பவுமே பிஸியா இருக்காரா?

    ReplyDelete
  13. ranjini anni,maha anni nu neeraiya peru irunthum ivaru ippadi ellam pannurare... :-((((
    vetti bro neegalachum solla kudatha?

    ReplyDelete
  14. //vetti bro neegalachum solla kudatha? //

    vetti bro சொல்லித்தான் இப்படியெல்லாம் செய்யுறாராம். அப்படின்னு ஒரு வதந்தி கெளம்பி இருக்கு!

    ReplyDelete
  15. ஆப்பு வாங்க ரெடியா நம்ம கைய்பூ

    ReplyDelete
  16. ஆமா நான் கூட ராமுகிட்ட டெய்லி கடலை போடுவேன்

    ReplyDelete
  17. பேருக்குதான் நான் விவசாயி. மானாவாரியா கடலை சாகுபடி பண்றது ராம்

    ReplyDelete
  18. ILA(a)இளா said...
    பேருக்குதான் நான் விவசாயி. மானாவாரியா கடலை சாகுபடி பண்றது ராம்
    ///


    பாத்தா அப்படி தெரியல
    முப்போகம் விளைவிக்குறமாதிரிதான் தெரியுது,

    ராம் 5,6 போகம் இருக்குமா?..:)

    ReplyDelete
  19. ULTIMATE!!!
    நடத்துங்க தல!!!!

    ReplyDelete
  20. //vetti bro சொல்லித்தான் இப்படியெல்லாம் செய்யுறாராம். அப்படின்னு ஒரு வதந்தி கெளம்பி இருக்கு!
    //

    kilambi irruka illa kilapi vithangala sibi bro!?
    vetti romba nallavarrrrrrrr!

    ReplyDelete
  21. //அபுதாபி அழகி said...
    அய்த்தான் வெளிய போறீங்க ஆனா சுருக்குன்னு வந்துடுங்க, நாட்டு கோழி ந்ல்லெண்ணையில வருத்து கொழம்பு வச்சிருக்கேன்!//

    அவ இப்டி சொல்லி என் தம்பிமச்சனை மடக்க பாத்தா, அதான் கோவத்துல இப்புடி சொல்லிபுட்டேன், நீங்க கோவிச்சுக்காதீங்க கொழுந்தனாரே!!

    ReplyDelete
  22. //அபுதாபி அழகி said...
    கவிதா வேண்டாம் மச்சானை விட்டுடு, நீ வேண்ணா வெட்டி பாலாஜிய புடிச்சுக்கோ!//

    வெட்டி மச்சான்! அவ லெச்சனம் இப்ப தெரியுதா?

    ReplyDelete
  23. // தம்பி said...
    ஆமா... ஆமா.... //

    என்ன நோமா நோமா! சக்களத்திகளை கட்டி போட கூடாதா, இந்த பச்சமண்ண கெடுத்துடுவாளுங்க போல இருக்கே!

    ReplyDelete
  24. //இலவசக்கொத்தனார் said...

    //இயற்கையண்ணையை//

    பார்த்த உடனே இதுதாங்க கண்ணுல பட்டது. அன்னையை அண்ணை ஆக்குதல் சரியோ? //

    கொத்ஸ்,
    மிக்க நன்றி... மாற்றிவிட்டேன் ;)

    ReplyDelete
  25. //Udhayakumar said...

    விலா எலும்பு நோக சிரிச்சேன்... ராயலோ ராயல்..... //

    இதுக்கெல்லாம் சங்கம் பொறுப்பேற்காது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் ;)

    ReplyDelete
  26. // நாடோடி said...

    ஆஹா எல்லாம் ஒரு குப்பாத்தான் அலையிராங்க போல.
    நாமதான் பாத்து சூசனமா இருக்கனும் போல.
    //
    இது ரத்த பூமி.. இங்க ஜாக்கிரதையா இருக்கனும். இல்லைனா சீன் தான் ;)

    // ராம்: ராயல் சிங்கத்த சாய்ச்சுபுட்டாங்களே... //
    சிங்கம் இதுக்கெல்லாம் அசராது.. இது பனங்காட்டு சிங்கம் சல சலப்புக்கு அஞ்சாது ;) (எப்பவும் பனங்காட்டு நரி தான் இருக்கனுமா?)

    ReplyDelete
  27. //தம்பி said...

    ஆமா... ஆமா.... //

    என்ன நோமா நோமா...

    பதிவ படிச்சியாலே.. இது உண்மையா உன் கதை தான். படிச்சி பாத்து ஆமா நோமா எல்லாம் சொல்லு.

    ReplyDelete
  28. //ILA(a)இளா said...

    //ராம் அப்படின்னு பேரு வெச்சுக்கிட்டு ராவணனா இருக்காரே!! //
    அது பழைய ஸ்டைல். ராமன் பேர் வெச்சுகிட்டு மன்மதனா இருக்கிறது புது ஸ்டைல் //

    நச்சினு சொன்னீங்க விவா...

    இனிமே அவர் மன்மதன்... டிக்கு டிக்கு டக்கு (பேக் க்ரவுண்ட் மீசிக்)

    ReplyDelete
  29. // ராஜா said...

    Ennaku Maduraila poi kanchidu vanthu pathivu pota mathiri theriyut...

    pickup agara nerathala poi thodarum, wait pannrane... //

    இன்னைக்கு அடுத்த பாகம் போட்டுடுவோம் ;)

    ReplyDelete
  30. //விடாதுகருப்பு said...

    நன்றாக இருந்தது பாலாஜி. தொடர்ச்சி இருக்கிறதல்லவா...? //

    சதீஷ்,
    மிக்க நன்றி...
    இன்னைக்கு அடுத்த பார்ட் இருக்கு ;)

    ReplyDelete
  31. //நாமக்கல் சிபி said...

    :)

    தொடர்ச்சிக்காக ஆவலாய்க் காத்திருக்கிறேன்!
    //
    சீக்கிரம் வருது ;)

    // அதான் அண்ணன் எப்பவுமே பிஸியா இருக்காரா? //

    தள,
    உங்களுக்கு தெரியாமலா??? ;)
    உங்கள்

    ReplyDelete
  32. //துர்கா|†hµrgåh said...

    ranjini anni,maha anni nu neeraiya peru irunthum ivaru ippadi ellam pannurare... :-((((
    vetti bro neegalachum solla kudatha? //

    என்னம்மா தங்கச்சி பண்றது...
    நாம சொல்லி யார் கேக்கறாங்க...

    ReplyDelete
  33. //நாமக்கல் சிபி said...

    //vetti bro neegalachum solla kudatha? //

    vetti bro சொல்லித்தான் இப்படியெல்லாம் செய்யுறாராம். அப்படின்னு ஒரு வதந்தி கெளம்பி இருக்கு! //

    கிளம்பி இருக்கா??? இப்ப நீங்க தானே கிளப்பறீங்க ;)

    ReplyDelete
  34. // மின்னல் said...

    ஆப்பு வாங்க ரெடியா நம்ம கைய்பூ //

    அவர் எப்பவுமே ரெடி தான் ;)

    ReplyDelete
  35. // பிபாசா-பிபாசினி said...

    ஆமா நான் கூட ராமுகிட்ட டெய்லி கடலை போடுவேன் //

    ஆஹா...உண்மையெல்லாம் இப்ப தான் வெளிய வருது ;)

    ReplyDelete
  36. //ILA(a)இளா said...

    பேருக்குதான் நான் விவசாயி. மானாவாரியா கடலை சாகுபடி பண்றது ராம் //

    புலம்பல்ஸ்???

    ReplyDelete
  37. // மின்னல் said...

    ILA(a)இளா said...
    பேருக்குதான் நான் விவசாயி. மானாவாரியா கடலை சாகுபடி பண்றது ராம்
    ///


    பாத்தா அப்படி தெரியல
    முப்போகம் விளைவிக்குறமாதிரிதான் தெரியுது,

    ராம் 5,6 போகம் இருக்குமா?..:) //

    மின்னல்,
    எப்பவும் தெளிவா இருக்க...

    ReplyDelete
  38. //CVR said...

    ULTIMATE!!!
    நடத்துங்க தல!!!! //

    எல்லாம் உங்க ஆசி ;)

    ReplyDelete
  39. //கிளம்பி இருக்கா??? இப்ப நீங்க தானே கிளப்பறீங்க ;)//


    அதைத்தான்யா சொன்னேன்!

    ஏன்! நான் கெளப்புனா கெளம்பாதா என்ன?

    ReplyDelete
  40. // thurgah said...

    //vetti bro சொல்லித்தான் இப்படியெல்லாம் செய்யுறாராம். அப்படின்னு ஒரு வதந்தி கெளம்பி இருக்கு!
    //

    kilambi irruka illa kilapi vithangala sibi bro!?
    vetti romba nallavarrrrrrrr! //

    ரொம்ப டாங்கிஸ் தங்கச்சி :-)

    ReplyDelete
  41. கவிதா,
    உன் பிரச்சனை என்ன???

    தம்பிதான் உன் கூட வந்துட்டாருனு பேசிக்கிட்டாங்களே...

    மஞ்சுளாவையும், அபுதாபி அழகியையும் மறக்கலையா அவர்???

    ReplyDelete
  42. //நாமக்கல் சிபி said...

    //கிளம்பி இருக்கா??? இப்ப நீங்க தானே கிளப்பறீங்க ;)//


    அதைத்தான்யா சொன்னேன்!

    ஏன்! நான் கெளப்புனா கெளம்பாதா என்ன? //

    கிளம்பும்... புரளி யார் கிளப்பனாலும் கிளம்பும் ;)

    ReplyDelete
  43. வெட்டி, சூப்பருங்கோ..

    இன்னும் ராயல காணோம்.. கடலை சாகுபடி இன்னும் முடியல போலிருக்கு... :D :D

    ReplyDelete
  44. கில்மா பூ மேரா கில்மா பூ :))

    ReplyDelete
  45. /Operation கில்மா - 1//

    'ஆப்பு'ரேஷன் 'கில்'மா எத்தனை பகுதி போடறது? சின்ன தலயின் திருவிளையாடல்கள் என்றும் தொடரும் பட்டு பாரம்பரியமாச்சே :)))

    ReplyDelete
  46. //'ஆப்பு'ரேஷன் 'கில்'மா எத்தனை பகுதி போடறது? சின்ன தலயின் திருவிளையாடல்கள் என்றும் தொடரும் பட்டு பாரம்பரியமாச்சே //

    ஆமாம்! இதை நாங்களும் வழிமொழிகிறோம்!

    வ.வா.ச கொலைவெறிப் பாசறை
    சென்னை மேற்கு.

    ReplyDelete
  47. அடேங்கப்பா! அட்டகாசம்ப்பா! அட்டகாசம். மதுரைக்குப் போயும் கோனாரு கறித்தோசை சாப்பிடாம வந்திருக்கான் ராமு. அவனச் சும்மா விடாத. :-)))))))))))))))))

    ReplyDelete
  48. அடப்பாவி ராயலு எப்ப கேட்டாலும் அம்மா திட்டுறாங்க, server படுத்துகிச்சி அப்படி இப்படின்னு சின் போட்டுட்டு பறவை முனியம்மா கூட டூயட் பாடிகிட்டு இருக்கியா.. ரஞ்சனின்னு துரோகம் செய்ய நினைச்ச ரணகளமாயிடும் சொல்லிட்டேன்.

    ReplyDelete
  49. அடபாவி வெட்டி,

    ஊருக்குள்ளே என்னை தலைநிமிர்ந்து நடக்க விடாமே பண்ணிட்டியே???

    :(((((((((

    ReplyDelete
  50. // இராம் said...
    அடபாவி வெட்டி,

    ஊருக்குள்ளே என்னை தலைநிமிர்ந்து நடக்க விடாமே பண்ணிட்டியே???
    //

    இதுக்கு முன்னால மட்டும் நிமிர்ந்து நடந்த மாதிரி சவுண்ட் விட்டாதீங்க அண்ணா.அதுதான் அடிக்கடி damage ஆகி போச்சே...இனி என்ன இருக்கு...take it easy.next kummiyila nalini anni pathi solluren ok va.tata

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)