Saturday, April 7, 2007

வ.வா.சங்கத்தின் 1ம் ஆண்டு ஆர்ப்பாட்டம்

அட, உண்மையா இது? அதுக்குள்ளேவா? நெசமாவா? உண்மைதாங்க, மலைப்பா இருக்கு. வ.வா.சங்கம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. 2006-ஏப்ரல் மாசம் 26ம் தேதி பொன்ஸ்ஸும், தேவும் ஏதேச்சையா ஏதோ பேசிக்க்ட்டு இருக்க அப்போ உதயமானதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.


நகைச்சுவை மட்டுமே எங்களின் மைய கரு என்று அன்று எடுத்த முடிவு இன்றும் தொடர்கிறது. பொன்ஸ்தான் வ.வா.சங்கத்துக்காக ஒரு சோதனை பதிவிட்டாங்க. அடுத்த நாளே யார் யார் சங்கத்துல இருக்கப்போறோம்னு தெரியாமலேயே ஒரு படம் அனுப்பிச்சதும், பொன்ஸ் அதையே ஒரு பதிவா போட்டாங்க. 45 பின்னூட்டம் விழுந்ததும் எங்களுக்கு உற்சாகம் பத்திக்கிச்சு. அப்ப ஆரம்பிச்ச ஆர்ப்பாட்டம்தான் இன்னும் அடங்கவே இல்லீங்க. ஆப்புக்களின் வேகம் அதிகமாக சங்கம் சாராத இன்னொருத்தர புடிச்சு மாசம் அட்லாஸ் வாலிபர்ன்னு பேர் வெச்சொம். அப்படியே தமிழ்ச்சங்கம், கதைச்சங்கம்ன்னு நிறைய கிளைகளும் உருவாகிச்சு.


ஆப்புக்களும், அட்லாஸ்களும் நிரம்பி, ததும்பி வழிஞ்சுகிட்டு இருக்கிற இந்த நேரத்துல முதலாமாண்டு நிறைவு விழாவை சாதாரணமா காமெடி பண்ணாமல் சமூகத்துக்கு (குறைந்தப்பட்சம் பதிவுலகத்துக்கு) ஏதாவது சொல்லனும்னு தோணியது. ஆதலால் எங்களுடைய முதலாமாண்டு நிறைவு விழாவை உலகையே ஆட்டிப்படைக்கும் 'GLOBAL WARMING" awarenessஆக அறிவிக்கிறோம்.

Global Warming awarenesssன்னா என்னான்னு நாங்க சொன்னா நல்லா இருக்குமா? விக்கிப்பசங்க சொன்னாதானே நல்லா இருக்கும். அதான், சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரும், விக்கி பசங்கள்ள ஒருவருமான இலவச கொத்தனார் Global Warming பத்தி ஒரு பதிவு போடப்போறாரு. அதைத் தொடர்ந்து, சங்கத்துக்கு அட்லாஸ்ன்னு ஒரு எண்ணம் வர காரணமான கோவி.கண்ணனின் ஆர்ப்பாட்ட பதிவு ஒன்றும் வரப்போகுது. எந்தவொரு வெற்றிகளும்,சாதனைகளும் உங்களை போன்ற நல்லோர் ஆதரவு இல்லாமல் ஏற்படுவதில்லை. இதுவரைக்கு எங்களுக்கு ஆதரவ(லி)ளித்து வந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி!

இதோ ஆரம்பிக்குது நமது ஆர்ப்பாட்டம்!! நகைச்சுவையை மட்டுமே கருத்தாக கொண்ட ஒரு போட்டியும் நடத்தலாமென்று உத்தேசம் உள்ளது, அதற்கு தாங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இன்று வரையிலும் தாங்கள் அளிந்தவந்த புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை இப்பொழுதும் அளிப்பிர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் நண்பர்கள்.


27 comments:

  1. மொதோ வருஷத்துக்கு வாழ்த்துக்கள்.
    உங்க பதிவ படிச்சு உள்ள வந்தவங்க நிறைய பேரு.. அதுல நானும் ஒருத்தங்கறதால சந்தோஷமா இருக்கு...

    சென்ஷி

    ReplyDelete
  2. வெற்றிகரமாக முதல் வருடத்தை பூர்த்தி செய்த சங்கத்துக்கும் , சங்கத்து சிங்கங்களுக்கும் வாழ்த்துக்கள் . உங்கள் நகைச்சுவை சேவை தொடரட்டும்.

    ReplyDelete
  3. சங்கத்துல என்னையும் ஒரு ஆளா சேர்த்துக்குங்க சாமி.. காமெடி பிச்சுக்கிட்டுப் போகும்..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மக்களே!! :-)

    ReplyDelete
  5. வெள்ளி விழா,பொன் விழா,வைர விழா எனஎல்லா விழாக்களும் காண வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. சங்கத்து சிங்கங்களுக்கு முதல் வருஷ வாழ்த்துக்கள் ;-)))

    ReplyDelete
  7. yappa singangala one year ra thala enathan theduthu na tamil la elutha mudiyame thavekeran. google attamkatuthu.
    youes,
    ulagam sutrum valibi.

    ReplyDelete
  8. இந்த மாசத்துல பிறந்த நாள் கண்ட சங்கம்....இன்னும் பல நூறு வருசம் மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் :-)

    ReplyDelete
  9. //முதலாமாண்டு நிறைவு விழாவை சாதாரணமா காமெடி பண்ணாமல் சமூகத்துக்கு (குறைந்தப்பட்சம் பதிவுலகத்துக்கு) ஏதாவது சொல்லனும்னு தோணியது. //

    இம்புட்டு நல்லவங்களா நம்ம எல்லாம் :-)

    ReplyDelete
  10. //ஆதலால் எங்களுடைய முதலாமாண்டு நிறைவு விழாவை உலகையே ஆட்டிப்படைக்கும் 'GLOBAL WARMING" awarenessஆக அறிவிக்கிறோம்//

    அருமை அருமை...நல்லதொரு காரியம்...வெய்டிங் பார் இ.கொ & கோவி.கண்ணன் பதிவுகள் :-)

    ReplyDelete
  11. ஆவின்னா ஆவிதான். வாழ்த்துக்கள். (ஆவி = ஆண்டுவிழா :-))

    ReplyDelete
  12. // ஆப்புக்களின் வேகம் அதிகமாக சங்கம் சாராத இன்னொருத்தர புடிச்சு மாசம் அட்லாஸ் வாலிபர்ன்னு பேர் வெச்சொம்//

    juper!

    ReplyDelete
  13. //நகைச்சுவையை மட்டுமே கருத்தாக கொண்ட ஒரு போட்டியும் நடத்தலாமென்று உத்தேசம் உள்ளது, அதற்கு தாங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். //

    nadakattum! seekiram podunga!

    ReplyDelete
  14. congrats....Add me to your readers list.

    ReplyDelete
  15. சங்கத்து சிங்கங்களுக்கு முதல் வருஷ வாழ்த்துக்கள் ;-)))

    karthik,
    singapore

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்..


    சிங்கம், புலி, கரடி, மான், நரி, குரரங்கு மற்றும் எல்லா சங்கத்து மெம்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..
    ;-)

    :-P

    ReplyDelete
  17. வாழ்த்துக்குறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றிகள் பல கோடி....

    உங்கள் அன்பும், ஆதரவும் என்றும் வேண்டுகிறோம்.

    ReplyDelete
  18. //மொதோ வருஷத்துக்கு வாழ்த்துக்கள்.
    உங்க பதிவ படிச்சு உள்ள வந்தவங்க நிறைய பேரு.. அதுல நானும் ஒருத்தங்கறதால சந்தோஷமா இருக்கு...//

    இதை கேட்பதில் எங்களுக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சு சென்ஷி....

    ReplyDelete
  19. //yappa singangala one year ra thala enathan theduthu na tamil la elutha mudiyame thavekeran. google attamkatuthu.
    youes,
    ulagam sutrum valibi. //

    வ.வா.ச முகப்பில் உங்களுக்கு விடை உள்ளது. மேலும் உதவி தேவைப்பட்டால் சங்கத்தை அனுகவும். உதவ காத்து இருக்கிறோம்.

    ReplyDelete
  20. //சிங்கம், புலி, கரடி, மான், நரி, குரரங்கு மற்றும் எல்லா சங்கத்து மெம்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..//

    வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க...

    சிங்கம் டபுள் ஒகே....

    புலி ஒகே....

    இந்த கரடி, மான், நரி, குரங்கு எல்லாம் என்னங்க...

    அப்ப ஆக மொத்தம் எங்களை நீங்க மனுசனாவே மதிப்பது இல்லை.... :-(((

    ReplyDelete
  21. கடந்த ஒரு வருட காலமாக எங்களை எல்லாம் சிரிப்பு கடலில் ஆழ்த்தியதுக்கு ரொம்ப நன்றி மக்களே. :)) கலக்கிட்டீங்க, கலக்கறீங்க கலக்குவீங்க.

    ReplyDelete
  22. சிriப்புடன் சிந்திப்பு எனச் சிறப்பாக முதலாம் ஆண்டு நிறைவு விழாவை புவி வெட்ப நிலை அதிகரிப்பு விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடும் சங்கத்தினருக்கு என் வாழ்த்துக்கள்.

    இதன் தொடர்பாக விக்கி பசங்க பதிவில் ஒரு இடுகை இட்டுள்ளேன். உங்கள் கொண்டாட்டத்தில் எனக்கும் பங்களித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  23. //சிriப்புடன் சிந்திப்பு எனச் சிறப்பாக முதலாம் ஆண்டு நிறைவு விழாவை புவி வெட்ப நிலை அதிகரிப்பு விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடும் சங்கத்தினருக்கு என் வாழ்த்துக்கள். //
    வாழ்த்துக்களுக்கும், உங்க பங்களிப்புக்கும் நன்றிங்க கொத்ஸ். என்ன இருந்தாலும் முதல் அட்லாஸ் பெருமை உங்களுக்கு இருக்கத்தானே செய்யுது.

    ReplyDelete
  24. அடப்பாவிகளா, ஏப்ரல் 16ஆம் தேதி போட்ட பின்னூட்டத்துக்கு அக்டோபர் 13ஆம் தேதி பதிலா?

    ஓஹோ!!! சங்கம் ரீ ஓப்பன் பண்ணியாச்சா!!! மீண்டும் எங்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்த இருக்கும் சங்கத்தினரை 'வா வா ச'ங்கமே என வாழ்த்தி வரவேற்கிறேன்.

    புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டிருக்கும் சங்கத்தினருக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. வாழ்த்துகள். ஓராண்டு என்பது நூறாண்டாகி அதற்கும் மேலாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  26. வ வா ச சிங்கங்களே !! வருக வருக !! இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் சங்கம் நீடூழி வாழ வாழ்த்துகள்

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)