Friday, March 2, 2007

ஹோலியா???

நம்ம ஊர்ல சோறு- அவிங்க ஊர்ல ரொட்டி

நம்ம ஊர்ல சாம்பாரு- அவிங்க ஊர்ல பன்னீரு

நம்ம ஊர்ல அரைக்கீரை- அவிங்க ஊர்ல பாலக்

நம்ம ஊர்ல வேட்டி- அவிங்க ஊர்ல பைஜாமா

நம்ம ஊர்ல காஞ்சிபுரம் பட்டு- அவிங்க ஊர்ல சுடிதாரு

நம்ம ஊர்ல அச்சம், வெட்கம், நாணம், பயிர்ப்பு - அவிங்க ஊர்ல அச்சம் மட்டும்தாங்க

நம்ம ஊர்ல முத்தம்- அவிங்க ஊர்ல சும்மா

நம்ம ஊர்ல சர்தார்ஜி- அவிங்க ஊர்ல மதராஸி

ஏன் இவ்வளவு வித்தியாசம்.. ஏன் இவ்வளவு இடைவெளி

நம்ம ஊர்ல மஞ்ச நீராட்டு- அவிங்க ஊர்ல ஹோலி

இவ்வளவுதான் நாங்க சொல்ல வந்தது.

அதனால் எல்லாரும் தண்ணீ அடிச்சு, தப்பா நினைக்கப்படாது, கலர் கலரா தண்ணி அடிச்சு
பாங்கு குடிச்சு, சட்டைய எல்லாம் நாசமாக்கி




"சந்தோசமா ஹோலி கொண்டாடுங்க" மக்கா



கிழே இருக்கிறத copy பண்ணி Browser Address bar'லே போடுங்க.... :)

javascript: i=0; c=["red","green","blue","yellow","magenta","orange","black","cyan"]; a=document.links;setInterval('i++;a[i % document.links.length ].style.color=c[i % c.length]',10);void(0); alert("'Dear friend, wish you a Very HAPPY HOLY’,\ ..******..");

14 comments:

  1. இந்த ஹோலி அன்னைக்கு ஒரு நாலு சூப்பர் பிகரு உங்க மேல மஞ்ச தண்ணி ச்சே கலரு தண்ணி ஊத்த வாழ்த்துக்கள் ராயலு :-)

    ReplyDelete
  2. புதுசாபுதுசா பண்றீங்களே ராமு. ரெம்ப புத்திசாலியா இருக்கப்படாது. அப்புறமா ஜாவா புரவலருக்கு கோவம் வந்துரும் ஆமா..

    ReplyDelete
  3. உங்கள் javascript சுப்பர்,
    அதைவிட உங்கள் இடுகையின் கருத்து சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  4. //இந்த ஹோலி அன்னைக்கு ஒரு நாலு சூப்பர் பிகரு உங்க மேல மஞ்ச தண்ணி ச்சே கலரு தண்ணி ஊத்த வாழ்த்துக்கள் ராயலு :-) //

    12B,

    அந்தமாதிரியெல்லாம் நடக்கனுமின்னு மனசுக்குள்ளே ஆசை நிறைய இருக்கு... :)

    //நாலு சூப்பர் பிகரு//

    நாலுல்லாம் வேணாம்... ஒன்னேஒன்னு போதும்.. ஹி ஹி

    ReplyDelete
  5. //புதுசாபுதுசா பண்றீங்களே ராமு. //

    விவ்,

    என்ன உங்களின் பெருந்தன்மை.....! அதை நினைச்சு நினைச்சு புல்லரிச்சு போயி ஒடம்பு பூராவும் சாம்பலை தேய்ச்சு குளிச்சிட்டுதான் வந்தேன் :)))

    //ரெம்ப புத்திசாலியா
    இருக்கப்படாது. //

    ஹிஹி நீங்களாவாது நான் புத்திசாலின்னு சொன்னீங்களே.... :)

    //அப்புறமா ஜாவா புரவலருக்கு கோவம் வந்துரும் ஆமா.. //

    கப்பிநிலவருக்கு இருக்கிறமாதிரியெல்லாம் நமக்கு வருமா என்ன?? :))

    ReplyDelete
  6. //உங்கள் javascript சுப்பர்,//


    ரொம்ப நன்றிங்கோ.... :)

    //அதைவிட உங்கள் இடுகையின் கருத்து சூப்பரோ சூப்பர். //

    ஹி ஹி அதை ஒருத்தரு எழுதி நமக்கு அனுப்பி வைச்சாரு, அதை நோகமே பேஸ்ட் பண்ணி போட்டுட்டேன் :))))

    ReplyDelete
  7. எல்லாமே கலர் கலரா தெரியுது ராம்.இதுதான் ஹோலியா?

    ReplyDelete
  8. //எல்லாமே கலர் கலரா தெரியுது ராம்.இதுதான் ஹோலியா? //

    ஆமாம் துர்கா, வண்ணக் கலவைகளின் பண்டிகை பேரு தான் ஹோலி'ன்னு நினைக்கிறேன்...

    இன்னும் வேணுமின்னா இதிலே பாருங்க...

    அதிலே என்னமோ நமக்கு புரியாத மொழியான இங்கிலிபிசிலே போட்டுருக்காங்க... படிச்சி தெரிஞ்சுங்கோங்க.... :)

    ReplyDelete
  9. //கப்பிநிலவருக்கு இருக்கிறமாதிரியெல்லாம் நமக்கு வருமா என்ன?? :)) //


    நீ ஏத சொல்லுற, இந்தியாவில் அவருக்கு இருக்கும் நாலு பிகரு சொல்லுறீயா, இல்ல உருகவேவில் இருக்கும் பிகர் சொல்லுறியா?

    ReplyDelete
  10. //அதிலே என்னமோ நமக்கு புரியாத மொழியான இங்கிலிபிசிலே போட்டுருக்காங்க... படிச்சி தெரிஞ்சுங்கோங்க.... :) //

    புரியாத மொழினு சொல்லுற, ஆனா அது சரியா இங்கிலிபிசு சொல்லுற, பிரஞ்சு எழுத்துக்கள் கூட அப்படி தான் இருக்குமாம். நான் பாத்தப்ப அது எனக்கு பிரஞ்சு எழுத்து மாதிரி தெரிஞ்சது...... எது சரினு அறிவாளி யாச்சும் வந்து பாத்து சொல்லுங்கப்பா

    ReplyDelete
  11. //எது சரினு அறிவாளி யாச்சும் வந்து பாத்து சொல்லுங்கப்பா //

    என்ன பங்கு என்ன நினைச்சிட்டு இருக்க...அறிவாளிங்கலுக்கு சங்கத்து பக்கம் என்ன வேலை :-)

    ReplyDelete
  12. //ஹி ஹி அதை ஒருத்தரு எழுதி நமக்கு அனுப்பி வைச்சாரு, அதை நோகமே பேஸ்ட் பண்ணி போட்டுட்டேன் :))))//
    நோகாம நோம்பி கொண்டாடுறது எப்படின்னு உங்ககிட்டதான் டியூசன் எடுத்துக்கனும்,

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)