Saturday, February 3, 2007

அத்தை பெண்கள் என்னும் அழகிகள்

அத்தை பெண்கள் என்னும் அழகிகள்

'அத்தை பெண்கள் என்னும் அழகிகள்' என்னும் தொடர் கவிதைகளை என் பதிவுகளில் படித்திருப்பீர்கள்.இங்கே இப்போது சங்கத்துக்காக காதல் மாதத்தின் சிறப்பு கவிதைகள் எழுதியிருக்கிறேன்.

இந்த கவிதைகளை என் பதிவுகளில் எழுதிய போது வந்த பின்னூட்டங்களில் பலர் 'அவர்களின் அத்தை பெண்களின் பற்றிய நினைவுகளை 'கிளறி விட்டதற்க்காக திட்டியும்(இதெல்லாம் ஓவரு பில்டப்பு),பலர் அத்தை பெண்கள் இல்லையென்றும் வருத்தபட்டீர்கள்(ஐயோ பாவம்).ஒருவர்(அத்தை பெண்ணால் ஏமாற்ற பட்டவர்) ஒரு படி மேலாக போய் என்னை தொலைபேசியில் அழைத்து
உன்னை என்ன செய்யுறேன் பாரு என்றார்(பெரிய சுஜாதான்னு நினைப்பு!!).

சரி அதை விடுங்க உண்மையிலேயே அத்தை பெண்கள் இல்லாதவங்க ஒரு நல்ல நண்பியை மிஸ் பண்ணுவதற்கு சமம்.அவர்கள் நம் காதலியின் முன்னோடிகள். நம்முடைய முதல் காதலிகள்.அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.அத்தை பெண்ணுடன் சிறிய வயதிலிருந்தே பழகும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது.ஒரு வயதிற்கு மேல் அவர்களுடன் நம்மை பேச விட மாட்டார்கள்,இல்லையென்றால் நம் வெட்கம்,தன்மானம் அதை தடுத்து விடும்.

எனக்கு மூன்று அத்தை பெண்கள்..அந்த மூவருடன் பழகிய அனுபவங்களில் விழைந்தது தான் இந்த கவிதைகள்.அவர்கள் மூவருடனும் சிறு வயதில் பழகியதோடு சரி ,பின்னர் அவர்கள் எல்லாரையும் வயதுக்கு வந்து பிறகு தான் சந்தித்தேன்..'இங்கே வயதுக்கு வந்த பிறகு' என்ற வார்த்தையை உபயோகித்தற்க்கு காரணம் ,அவர்(ள்)கள் பெரியவளாகிய பின்னர் தான் அவ(ள்)ர்களுடனான அந்த இடைவெளி அதிகமாகிறது.அது கடவுளின் டிசைன் போல.

சிறு வயது நியாபங்களை, அவர்களுடன் சேர்ந்து நாம் செய்த அட்டாகாசங்களை அவர்களுடனே பகிர்ந்து கொள்ளுதல் ஒரு வித சுகம்..அதை நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது சுகமோ சுகம்(ஹி ஹி வயிறு எரியுதா???)..அதை தான் நான் இங்கே செய்கிறேன்..


நிற்க ..

இனி கவிதைகளை படிக்க ஆரம்பியுங்கள்.



1.கடன் அன்பை முறிக்குமாம்
எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
நான் கொடுத்த முத்தத்தை

2.நெடு நாளுக்கு பின்னர் என்னை
பார்த்த போது உன்னகேற் பட்ட வெட்கம்

இளம் வயதில் உன் அம்மா
என்னையும் உன்னையும்
ஆடைகளின்றி ஒன்றாய் குளிப்பாட்டிய போது
நீ வெட்கப் பட்டதை நினைவூட்டியதை
நான் எப்படி சொல்வேன் உன்னிடம்..!!

3.
எல்லாருடம் சேர்ந்து ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நானும் நீயும் மட்டும் எப்போதும்
ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
அந்த நெற்குதிரின் மறைவில்
இன்று என் அக்கா குழந்தைகள் ஒளிந்து
விளையாடும் போது நின்று ரசிக்காமல்
போக முடிய வில்லை என்னால்

4.நீ வயதுக்கு வந்த போது
உன்னை எல்லாரும் மாய்ந்து மாய்ந்து
கவனித்ததை கண்டு எரிச்சலுற்ற என்னிடம்

'எல்லாம் உனக்காக' தாண்டா என
உன் அம்மா சொல்லியதற்க்கு
அர்த்தம் புரிந்திருக்க வில்லை
எனக்கு அப்போது....

5.சிறு வயதில் நீ என் வீட்டிற்க்கு
விடுமுறைகளில் வந்து தங்கி விட்டு
கிளம்பும் போது வருத்தம் கொண்டு
உன்னை வழியனுப்ப வராமல்
அறைக்குள்ளே நான் முடங்கி கிடந்ததை
சொல்லி பளிப்பு காட்டுகிறாய்

பேருந்தில் ஊருக்கு போகும் வழியெல்லாம்
என்னை நினைத்து நீ தேம்பியழுது தூங்கி
போவது தெரிந்திருந்தும் பேசாமலிருக்கிறேன் நான்.

26 comments:

  1. டேய்.. அத்தை பெண்கள் என்னும் அரக்கிகள்னுதானட முதல்ல சொன்னீங்க.. திடீர்னு இப்ப அழகிகள்ங்கிறீங்க... மாப்ள சரியில்லடா.. என்னடா பண்ணாளுவ.. மச்சக்கார பயபுள்ளயடா நீங்க.. நல்லாருங்கடோய்...

    ReplyDelete
  2. ஏன்யா வயித்தெரிச்சல கெளப்புறீங்க... என்னோட அத்தைப் பொண்ணுங்கக்கூடா நான் சின்ன வயசுலகூட பேசுனதில்லையே....

    எக்கச்சக்க மேட்டர்ஸ மிஸ் பண்ணிட்டேன்னு நெனக்கிறேன்.. :((

    ReplyDelete
  3. அப்புறம், கவிதைகள் படு சோக்கா கீது...

    ReplyDelete
  4. நல்லா எழுதுறீங்க மாஸ்டர்..!
    தூள் கிளப்புறீங்கள்!!

    ReplyDelete
  5. ஏன்? இல்லை ஏன்னு கேக்கறேன்???
    மனசனை டென்ஷன் பண்றதுலயே இருப்பா!!!

    ReplyDelete
  6. //எனக்கு மூன்று அத்தை பெண்கள்..அந்த மூவருடன் பழகிய அனுபவங்களில் விழைந்தது தான் இந்த கவிதைகள்.//

    ஆஹா...
    சரி இது உங்க வீட்டம்மாக்கு தெரியுமா???

    ReplyDelete
  7. உன்னுடைய உறக்கம் தொலைத்த இரவுகளை விட இது இன்னும் நல்லா இருக்குனு எல்லாம் சொல்றாங்கனு உங்க வீட்ல சொல்லிடுங்க...

    நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாமா???

    ReplyDelete
  8. //கடன் அன்பை முறிக்குமாம்
    எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
    நான் கொடுத்த முத்தத்தை//

    //நானும் நீயும் மட்டும் எப்போதும்
    ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
    அந்த நெற்குதிரின் மறைவில்//

    :)))

    கார்த்திக் அழகான கவிதைகள் அருமையான நினைவுகள் மிகவும் ரசித்தேன் :))

    ReplyDelete
  9. கார்த்தி கலக்கல் பதிவும்மா.. இன்னும் தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தேவ் | Dev said...
    கார்த்தி கலக்கல் பதிவும்மா.. இன்னும் தொடருங்கள் வாழ்த்துக்கள்
    //

    அதெல்லாம் சரி தலைவரே தமிழ்மணத்துல இந்த போஸ்டை அருட்பெருங்கோ எழுதினதா வருதே கவனீச்சீரா?

    ReplyDelete
  11. ஜி said...
    ஏன்யா வயித்தெரிச்சல கெளப்புறீங்க... என்னோட அத்தைப் பொண்ணுங்கக்கூடா நான் சின்ன வயசுலகூட பேசுனதில்லையே....

    எக்கச்சக்க மேட்டர்ஸ மிஸ் பண்ணிட்டேன்னு நெனக்கிறேன்.. :((
    //

    சரி இனிமேலாவது போய் பேசுங்க ..ஏஅதாவ்து செட்டாகுதான்னு பார்ப்போம்

    ReplyDelete
  12. அத்தை பெண்ணே இல்லாத பாவி said...
    டேய்.. அத்தை பெண்கள் என்னும் அரக்கிகள்னுதானட முதல்ல சொன்னீங்க.. திடீர்னு இப்ப அழகிகள்ங்கிறீங்க... மாப்ள சரியில்லடா.. என்னடா பண்ணாளுவ.. மச்சக்கார பயபுள்ளயடா நீங்க.. நல்லாருங்கடோய்...
    //

    உங்களை நினைச்சி சிரிக்கிறதா அழுவறதான்னு தெரியலை

    ReplyDelete
  13. ஜி said...
    அப்புறம், கவிதைகள் படு சோக்கா கீது... ////

    மறந்துட்டீங்களா இதுக்குன்னு தனி கமென்ட் போட்ருக்கீங்க

    6/2/07 12:42 AM


    படியாதவன் said...
    நல்லா எழுதுறீங்க மாஸ்டர்..!
    தூள் கிளப்புறீங்கள்!!
    //

    உங்க பக்க்த்தில் கமெண்ட்ஸ் பார்த்தீங்களா என் தனி ம்டல் கொடுத்திருந்தேனே

    ReplyDelete
  14. வெட்டிப்பயல் said...
    ஏன்? இல்லை ஏன்னு கேக்கறேன்???
    மனசனை டென்ஷன் பண்றதுலயே இருப்பா!!!

    //டென்சன் ஆகாதீங்க..இதெல்லாம் சகஜம் தான்
    6/2/07 4:04 AM


    வெட்டிப்பயல் said...
    //எனக்கு மூன்று அத்தை பெண்கள்..அந்த மூவருடன் பழகிய அனுபவங்களில் விழைந்தது தான் இந்த கவிதைகள்.//

    ஆஹா...
    சரி இது உங்க வீட்டம்மாக்கு தெரியுமா???
    //

    வீட்டம்மா முன்னாடி அத்தை பொண்ணுக கூட ஒட்டி உரசி அவங்களை கடுப்பேத்துறது இருக்கே அப்பப்பா என்னா சுகம் தெரியுமா அது?

    ReplyDelete
  15. வெட்டிப்பயல் said...
    உன்னுடைய உறக்கம் தொலைத்த இரவுகளை விட இது இன்னும் நல்லா இருக்குனு எல்லாம் சொல்றாங்கனு உங்க வீட்ல சொல்லிடுங்க...

    நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாமா??? //

    உறக்கம் தொலைத்த இரவுகள் கவிதைகளை நீங்க இன்னும் மறக்காம இருக்கிறது சந்தோசமா இருக்கு..அப்படியே நம்ம புகழை பரப்புங்க..ஹி ஹி

    6/2/07 4:06 AM


    Naveen Prakash said...
    //கடன் அன்பை முறிக்குமாம்
    எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
    நான் கொடுத்த முத்தத்தை//

    //நானும் நீயும் மட்டும் எப்போதும்
    ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
    அந்த நெற்குதிரின் மறைவில்//

    :)))

    கார்த்திக் அழகான கவிதைகள் அருமையான நினைவுகள் மிகவும் ரசித்தேன் :))
    //

    நீங்களா தேடி வந்து கமென்ட் போட்ருக்கீங்க ரொம்ப தாங்ஸ் ..உண்மையிலே கவிதைகள் நல்லாயிருக்கா..ஒருத்தர் இதெல்லாம் கவிதைகளே இல்லைன்னு மெயின் அனுப்பி திட்டுறாரு அதான் கேட்டேன்

    ReplyDelete
  16. //
    கார்த்திக் பிரபு said...
    உண்மையிலே கவிதைகள் நல்லாயிருக்கா..ஒருத்தர் இதெல்லாம் கவிதைகளே இல்லைன்னு மெயின் அனுப்பி திட்டுறாரு அதான் கேட்டேன் //

    கார்த்திக் உணர்வினை அழகாக வெளிப்படுத்தினால் கவிதைதான். உங்கள் கவிதைகள் உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றன !!கவிதைகள் மிக நன்று!! :)))))

    ReplyDelete
  17. கா.பி,

    அனுபவக் கவிதைகளா?

    நடத்து நடத்து... ;-)

    ReplyDelete
  18. அருட்பெருங்கோ said...
    கா.பி,

    அனுபவக் கவிதைகளா?

    நடத்து நடத்து... ;-)
    //

    உங்களை மாதிரி வருமா தலிவா??


    கார்த்திக் உணர்வினை அழகாக வெளிப்படுத்தினால் கவிதைதான். உங்கள் கவிதைகள் உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றன !!கவிதைகள் மிக நன்று!! :))))) //


    அப்ப்டின்னா ஓகே பா

    ReplyDelete
  19. அருட்பெருங்கோ said...
    கா.பி,

    அனுபவக் கவிதைகளா?

    நடத்து நடத்து... ;-)
    //

    உங்களை மாதிரி வருமா தலிவா??


    கார்த்திக் உணர்வினை அழகாக வெளிப்படுத்தினால் கவிதைதான். உங்கள் கவிதைகள் உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றன !!கவிதைகள் மிக நன்று!! :))))) //


    அப்ப்டின்னா ஓகே பா

    ReplyDelete
  20. //அதெல்லாம் சரி தலைவரே தமிழ்மணத்துல இந்த போஸ்டை அருட்பெருங்கோ எழுதினதா வருதே கவனீச்சீரா? //


    கார்த்திக் தம்பி.. இப்போ அதேப் பதிவு டி.பி.ஆர் பேர்ல்ல வருதே கவனிச்சீயா?

    எல்லாம் பிளாகர் பிரச்சனைப்பா... அவங்களாச் சரி பண்ணனும்ய்யா.. நீ கன்டினியூ பண்ணு..

    ReplyDelete
  21. தேவ் | Dev said...
    //அதெல்லாம் சரி தலைவரே தமிழ்மணத்துல இந்த போஸ்டை அருட்பெருங்கோ எழுதினதா வருதே கவனீச்சீரா? //


    கார்த்திக் தம்பி.. இப்போ அதேப் பதிவு டி.பி.ஆர் பேர்ல்ல வருதே கவனிச்சீயா?

    எல்லாம் பிளாகர் பிரச்சனைப்பா... அவங்களாச் சரி பண்ணனும்ய்யா.. நீ கன்டினியூ பண்ணு..

    6/2/07 2:11 PM
    //


    இது என்னய்யா கொடுமை!!

    ReplyDelete
  22. கார்த்திக்,

    அழகான கவிதைகள்.... வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  23. இராம் சொன்னது...
    கார்த்திக்,

    அழகான கவிதைகள்.... வாழ்த்துக்கள் :)
    //
    அழகான வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  24. தூள்....

    கலக்குங்க.... ஹ்ம்ம்ம்ம்..... :)))

    ReplyDelete
  25. mamu
    Ayiram cityla Jeans party erunthalum.. urla thavani potta aathai ponnu kikkuthan...

    atha vida kikku.. motta madiila.. yarukkum theriyama muttham kudukirathu...

    romba feel panni kavithai eluthirukkum thalaiku// oru OOOOOOOOOOOOO

    ReplyDelete
  26. இம்சை அரசி சொன்னது...
    தூள்....

    கலக்குங்க.... ஹ்ம்ம்ம்ம்..... :)))


    நன்றி ஹீம்ம்ம்ம்

    6/2/07 6:42 PM
    ambai சொன்னது...
    mamu
    Ayiram cityla Jeans party erunthalum.. urla thavani potta aathai ponnu kikkuthan...

    atha vida kikku.. motta madiila.. yarukkum theriyama muttham kudukirathu...

    romba feel panni kavithai eluthirukkum thalaiku// oru OOOOOOOOOOOOO

    7/2/07 5:04 AM //


    உங்க ஓ க்கு நன்றி யாரு நீங்க புதுசா இருக்கீங்க?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)