Saturday, February 3, 2007

என் காதலே...!!!






கவலைப்படாதே.....
உன் கரம் பற்ற
இடி விழுந்தால் கூட
தாங்கிக் கொள்வேன்
என்கிறாய்...
அன்பே!
என் கவலையெல்லாம்
ஏற்கனவே
இடி விழுந்தவன்
போலிருக்கும் நீ
மேலும் இடி விழுந்தால்
என்ன ஆவாய் என்பதுதான்......








இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்
ஹ்ம்ம்ம்ம்......
நேரடியாகவே கேட்டிருக்கலாம்.......








Tom&Jerry பார்க்கும்
போதெல்லாம்
சிரிப்பாய்தான் வருகிறது
ஹி... ஹி.... ஹி.....
பிற்காலத்தில்
Tom-ஆக நீயும்
Jerry-ஆக நானும்......








என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை
உன்னை பார்க்கும் வரை......



















33 comments:

  1. இ.அரசி, நல்லா இருக்குங்க...

    வவாச மக்களே, எங்க கம்பெனியோட லாபம் இந்த காலாண்டில் குறைந்தால் நீங்கதான் பொறுப்பேத்துக்கணும். (1க்கு 4 பேரு எழுதறாங்க, சந்தோசமா இருக்கு)

    ReplyDelete
  2. //நான் நம்பவே இல்லை
    உன்னை பார்க்கும் வரை......//

    நல்லா எழுதியிருக்கீங்க. சூப்பர்

    ReplyDelete
  3. இம்சை அரசி கலக்குறீங்க போங்க..பாவம் அந்த பையன் ..இப்படியா ஓட்டுறது அவனை

    ReplyDelete
  4. காதல்.. காதல்.. காதல்... மகா இம்சையான காதல் போலிருக்கே.. ம்ம்ம் அடுத்தாப்புல்ல என்னங்க ஆச்சு அடுத்தப் பாகத்துல்ல சொல்லுவீங்களா?

    ReplyDelete
  5. அருமையான காதலா இருக்கும் போல...

    நிஜமாலுமே அவரை நினைச்சா இப்பவே பாவமா இருக்கு :-)

    ReplyDelete
  6. இ.அ,

    சூப்பரா கலக்கியிருக்கீங்க.... ஒங்க ஹீரோவே பார்க்கனுமே??? :))))

    //நிஜமாலுமே அவரை நினைச்சா இப்பவே பாவமா இருக்கு :-) //

    ரிப்பிட்டே

    ReplyDelete
  7. // நாமக்கல் சிபி said...
    சூப்பர்!

    கலக்குங்க!
    //

    thank u... thank u...

    ReplyDelete
  8. // Udhayakumar said...
    இ.அரசி, நல்லா இருக்குங்க...

    வவாச மக்களே, எங்க கம்பெனியோட லாபம் இந்த காலாண்டில் குறைந்தால் நீங்கதான் பொறுப்பேத்துக்கணும். (1க்கு 4 பேரு எழுதறாங்க, சந்தோசமா இருக்கு)
    //

    நன்றி உதயகுமார் :)))

    ReplyDelete
  9. இம்சையக்கா...

    ஆரம்பமே பட்டாசா....

    காதலர்களுக்காக கவிதை எழுதியிருக்கீங்க...

    எங்கள மாதிரி பேச்சிலர்ஸ்க்கு....
    ஒன்னு எழுதிப் போடுங்க... ;))

    ReplyDelete
  10. // அனுசுயா said...
    //நான் நம்பவே இல்லை
    உன்னை பார்க்கும் வரை......//

    நல்லா எழுதியிருக்கீங்க. சூப்பர்
    //

    நன்றி அனுசுயா...

    ReplyDelete
  11. // கார்த்திக் பிரபு said...
    இம்சை அரசி கலக்குறீங்க போங்க..பாவம் அந்த பையன் ..இப்படியா ஓட்டுறது அவனை
    //

    சும்மா விளையாட்டுக்குதான கார்த்திக்...

    உங்க ஆளு உங்கள எப்படியெல்லாம் ஓட்டினாங்களோ.... ஹ்ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  12. // தேவ் | Dev said...
    காதல்.. காதல்.. காதல்... மகா இம்சையான காதல் போலிருக்கே.. ம்ம்ம் அடுத்தாப்புல்ல என்னங்க ஆச்சு அடுத்தப் பாகத்துல்ல சொல்லுவீங்களா?
    //

    அய்யோ இது எதுவும் உண்மை இல்லீங்க தேவ் அண்ணா.

    சும்மா. உண்மையா இருந்தா நான் இப்படி எழுதுனதுக்கு இந்நேரம் நான் reply பண்ணிட்டு இருக்க முடியுமா???

    ReplyDelete
  13. // வெட்டிப்பயல் said...
    அருமையான காதலா இருக்கும் போல...

    நிஜமாலுமே அவரை நினைச்சா இப்பவே பாவமா இருக்கு :-)
    //

    இருந்தாலும் உங்க கொல்டி experience-ஐ நினைச்சா எனக்கு இன்னமும் கஷ்டமா இருக்குங்க வெட்டி.

    இருந்தாலும் இவ்ளோ சோகம் உங்களுக்கு நடந்திருக்க கூடாது...

    ReplyDelete
  14. // இராம் said...
    இ.அ,

    சூப்பரா கலக்கியிருக்கீங்க.... ஒங்க ஹீரோவே பார்க்கனுமே??? :))))

    //நிஜமாலுமே அவரை நினைச்சா இப்பவே பாவமா இருக்கு :-) //

    ரிப்பிட்டே
    //

    ரொம்ப feel பண்ணாதீங்க ராம்.

    அப்படி யாருமே இல்ல. அப்படியே இனி வந்தா உங்களுக்கு கண்டிப்பா intro பண்றேன் :)

    ReplyDelete
  15. இம்சை அரசி said...
    // கார்த்திக் பிரபு said...
    இம்சை அரசி கலக்குறீங்க போங்க..பாவம் அந்த பையன் ..இப்படியா ஓட்டுறது அவனை
    //

    சும்மா விளையாட்டுக்குதான கார்த்திக்...

    உங்க ஆளு உங்கள எப்படியெல்லாம் ஓட்டினாங்களோ.... ஹ்ம்ம்ம்ம்.....
    //

    adhellam varalaaru adhai nan veliyil solla matane ..he he

    ReplyDelete
  16. அட்ரா சக்கை!அட்ரா சக்கை!! :)

    ReplyDelete
  17. //இருந்தாலும் உங்க கொல்டி experience-ஐ நினைச்சா எனக்கு இன்னமும் கஷ்டமா இருக்குங்க வெட்டி.

    இருந்தாலும் இவ்ளோ சோகம் உங்களுக்கு நடந்திருக்க கூடாது... //

    நானும் ஒரு தலைவர் ஸ்டைல்ல ரிப்பீட்டே போட்டுக்கிறேன் :))

    ReplyDelete
  18. //ஜி said...

    //இருந்தாலும் உங்க கொல்டி experience-ஐ நினைச்சா எனக்கு இன்னமும் கஷ்டமா இருக்குங்க வெட்டி.

    இருந்தாலும் இவ்ளோ சோகம் உங்களுக்கு நடந்திருக்க கூடாது... //

    நானும் ஒரு தலைவர் ஸ்டைல்ல ரிப்பீட்டே போட்டுக்கிறேன் :)) //

    நீ அடங்கவே மாட்டியா???

    அது ஏன்யா லவ் ஃபெயிலியர் ஆன கதை மட்டும் என் சொந்த கதையா இருக்கனும்னு ஒரு கொல வெறி உங்களுக்கு???

    பிரிவு, நெல்லிக்காய், தீயினால் சுட்ட புண் எல்லாம் உங்க கதையா???

    ReplyDelete
  19. //இம்சை அரசி said...

    // வெட்டிப்பயல் said...
    அருமையான காதலா இருக்கும் போல...

    நிஜமாலுமே அவரை நினைச்சா இப்பவே பாவமா இருக்கு :-)
    //

    இருந்தாலும் உங்க கொல்டி experience-ஐ நினைச்சா எனக்கு இன்னமும் கஷ்டமா இருக்குங்க வெட்டி.

    இருந்தாலும் இவ்ளோ சோகம் உங்களுக்கு நடந்திருக்க கூடாது... //

    ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க கண்ணடிகா, மல்லுனு எழுதி சரி பண்ணிக்கலாம் ;)

    ReplyDelete
  20. //ரொம்ப feel பண்ணாதீங்க ராம்.

    அப்படி யாருமே இல்ல. அப்படியே இனி வந்தா உங்களுக்கு கண்டிப்பா intro பண்றேன் :)//

    அந்த அப்பாவியை நான் கட்டாயம் பார்க்கணும் :)

    ReplyDelete
  21. //அது ஏன்யா லவ் ஃபெயிலியர் ஆன கதை மட்டும் என் சொந்த கதையா இருக்கனும்னு ஒரு கொல வெறி உங்களுக்கு???//

    அன்புதம்புடு வெட்டிக்கு,

    எனக்கு சில ரகசியங்கள் தெரியும்.. அதை வெளியிடக்கூடாதுன்னு நீ கெஞ்சி கேட்டக்கிட்ட காரணத்தினால் இன்றுவரை யாரிடமும் சொல்லவில்லை.....

    இப்போதும் சொல்லவில்லை... :)

    //பிரிவு, நெல்லிக்காய், தீயினால் சுட்ட புண் எல்லாம் உங்க கதையா???//

    அது ஒன்னோட கதையின்னா இது எங்க கதைதான்:)

    ReplyDelete
  22. //அன்புதம்புடு வெட்டிக்கு,

    எனக்கு சில ரகசியங்கள் தெரியும்.. அதை வெளியிடக்கூடாதுன்னு நீ கெஞ்சி கேட்டக்கிட்ட காரணத்தினால் இன்றுவரை யாரிடமும் சொல்லவில்லை.....

    இப்போதும் சொல்லவில்லை... :)//

    நான் எப்ப சொன்னேன்...
    எதை வேணா சொல்லுங்க. மக்கள் என் பக்கம் :-) (ஐ மீன் நியாயத்தின் பக்கம்)

    நான் தான் எந்த கதைல இருந்து கொல்ட்டிய காப்பி அடிச்சேனு ஒரு பதிவுல சொன்னேன்... நம்ம பதிவெல்லாம் படிச்சாத்தானே :-(((

    //
    //பிரிவு, நெல்லிக்காய், தீயினால் சுட்ட புண் எல்லாம் உங்க கதையா???//

    அது ஒன்னோட கதையின்னா இது எங்க கதைதான்:)//

    என்ன சொன்னேனு புரிஞ்சிக்காம சொல்ல வேண்டியது அப்பறம் நம்ம நமக்குள்ள ஆப்பு அடிக்கக்கூடாதுனு கடைசியா எனக்கு அட்வைஸ் வேற!!! ஏன்? இல்லை ஏன்னு கேக்கறேன்...

    ReplyDelete
  23. //Tom-ஆக நீயும்
    Jerry-ஆக நானும்......//

    அது பிற்காலத்துல...இப்போ Tom ஆக உன் அண்ணனும்... :-)

    ReplyDelete
  24. இம்சையக்கா ஆனாலும் உங்களுக்கு நெக்கல்லு ஜிங்குஜாங்குன்னு தாண்டவம் ஆடுதுங்கோவ் !! ஆமா யாருங்க அந்த அப்பாவி ??? ;))))

    ReplyDelete
  25. இப்படிக் காதலையே நீங்கள் கலாய்ப்பதை நான் வன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்! ;-)

    ReplyDelete
  26. // ஜி said...
    இம்சையக்கா...

    ஆரம்பமே பட்டாசா....

    காதலர்களுக்காக கவிதை எழுதியிருக்கீங்க...

    எங்கள மாதிரி பேச்சிலர்ஸ்க்கு....
    ஒன்னு எழுதிப் போடுங்க... ;))
    //

    கண்டிப்பா ஜி...

    உங்களுக்கு இல்லாமலா???

    ReplyDelete
  27. // கப்பி பய said...
    அட்ரா சக்கை!அட்ரா சக்கை!! :)

    //

    எதை அடிக்கறது???

    ReplyDelete
  28. // Syam said...
    //Tom-ஆக நீயும்
    Jerry-ஆக நானும்......//

    அது பிற்காலத்துல...இப்போ Tom ஆக உன் அண்ணனும்... :-)
    //

    அய்யய்யோ எனக்கு அண்ணனே இல்லயே...

    தம்பிதான இருக்கிறான்...

    ReplyDelete
  29. // ஜொள்ளுப்பாண்டி said...
    இம்சையக்கா ஆனாலும் உங்களுக்கு நெக்கல்லு ஜிங்குஜாங்குன்னு தாண்டவம் ஆடுதுங்கோவ் !!
    //

    என்ன ஜொள்ளு தம்பி உங்களை விடவா எனக்கு அதிகமா தாண்டவம் ஆடுது???


    //ஆமா யாருங்க அந்த அப்பாவி ??? ;))))
    //

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......

    சிதம்பர ரகசியம்........ வெளில சொல்லக் கூடாது......

    ReplyDelete
  30. // அருட்பெருங்கோ said...
    இப்படிக் காதலையே நீங்கள் கலாய்ப்பதை நான் வன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்! ;-)

    //

    வாங்க Mr.காதல் முரசு....

    எதோ எங்களால முடிஞ்சது இதுதான்...

    கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)