Thursday, November 23, 2006

உங்க மனசுல யாருங்கோ



விஜய் தொலைக்காட்சியில் நான் ரசித்து பார்க்கின்ற நிகழ்ச்சிகளில் கிராண்ட் மாஸ்டரும் ( யார் மனசுல யாரு) ஒன்று.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுகின்றது..

யார் மனசுல யாரு ..? உங்க மனசுல யாரு. இப்போ பார்ப்போமா ?கிராண்ட் மாஸ்டர் ஆரம்பிக்கின்றார்.


அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா..?

ஆமாம் ஆனால் நிகழ்ச்சி முடியும் பொழுது உறுதியா சொல்லமுடியாது


இப்ப எங்க இருக்காங்க?

என் மனசுல

அரசியல், கலை, இலக்கியம் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?

இது சம்பந்தமான அறிவு இல்லை


இயற்பியல், கணிதம், கணிப்பொறி, இவற்றில் ஏதாவது?

ஆமாம் எல்லாப்பாடமும் உண்டு


அவங்க படிக்கிற கல்லூரி காயிதே மில்லத், ஸ்டெல்லா மேரீஸ்..?

ஆமாம்..


காயிதே மில்லத்..?

ஆமாம்


அவங்க விரும்பி அணியுற உடை சுடிதார்?

ஆம்


அவங்களுக்கு பிடிச்ச கலர் பச்சை கருநீலம் கறுப்பு?

ஆம்


கருநீலம்?

ஆம்

உங்களுக்கு பிடிச்ச கலர் அவங்கதானே?

ஆம்


தினமும் காலேஜ்க்கு அவங்க கொண்டுபோற மதிய உணவு தயிர்சாதம் - தோசை - முட்டை சோறு இவற்றில் ஒன்றா?

ஆமாம்


தயிர்சாதம்?


ஆம்

அவங்களுக்கு பிடிச்ச பூ ரோஜா - மல்லிகை - பிச்சுப்பூ?

ஆம்


ரோஜா..?

ஆம்


ரோஜாப்பூவை வித்தியாசமா இடப்பக்கம் வச்சிட்டு வருவாங்களா..?

ஆம்

உங்கள அடிச்சதனால அவங்க செருப்பு சமீபத்துல அறுந்து போச்சா?

ஆம்

இப்ப புதுசா கறுப்பு கலர் பாட்டா செருப்பு வாங்கியிருக்காங்களா?

ஆம்

தினமும் வெள்ளை நிற கைனடிக் வண்டியில வருவாங்களா..?

ஆம்

அவங்க வண்டி நம்பர் டி என் 72 பி 1717 தானே..?

ஆம்..

"அடப்பாவி நம்மகிட்டேயே கள்ளம் பறைஞ்சிட்டியேடா மவனே..அது என் பொண்ணுடா.."
அலறுகிறார் கிராண்ட் மாஸ்டர்..

நீங்களும் இந்த நிகழ்ச்சியில பங்கு பெறனும்னா ஏதாவது பெண்கள் கல்லூரி முன்னால நின்னுக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிங்க..உங்க லவ் உண்மையா இருந்துச்சுன்னா..நீங்க தான் அடுத்த போட்டியாளர்..யார்..மனசுல யாரு..? பை..

- ரசிகவ் ஞானியார்

17 comments:

  1. சூப்பரர இருக்கு.. வீட்ல தெரியுமா? ;)

    ReplyDelete
  2. நல்ல கற்பனை பாராட்டுகள்!

    ReplyDelete
  3. கலக்கல்ஸ் மாமே :)

    ReplyDelete
  4. //பொன்ஸ் said...
    சூப்பரர இருக்கு.. வீட்ல தெரியுமா? ;) //


    யார் வீட்ல..?

    //இவன் said...
    நல்ல கற்பனை பாராட்டுகள்! //

    நன்றி இவன்..இவர் யாரோ..?

    //நாமக்கல் சிபி @15516963 said...
    :))

    Superb! //

    நன்றி சிபி...


    //தேவ் | Dev said...
    கலக்கல்ஸ் மாமே :) //

    நன்றி தலைவா..இந்த நிகழ்ச்சியில கலந்துக்க போறீங்களா.? :)

    ReplyDelete
  5. ஞானியாரே!
    கலக்கிட்டீங்க.
    :))

    ReplyDelete
  6. Ahaaaaaaaaaa...... Naan epdi indha blog'a miss paninen??? [:O]
    SUper postu....
    Hilarious.. :D HEHEHE..Nalavey irundhuchu...
    btw, andha picture'la irukradhu yaaru...Me not asking abt the "Pudavai katta theriyadhu GIRL.." :D Inoruthar....Avar Grand master illayeeee

    ReplyDelete
  7. //கைப்புள்ள said...
    ஞானியாரே!
    கலக்கிட்டீங்க.

    Udhayakumar said...
    சபாசு சபாசு...

    :)) //

    நன்றி நன்றி


    //Marutham said...
    Ahaaaaaaaaaa...... Naan epdi indha blog'a miss paninen??? [:O]
    SUper postu....
    Hilarious.. :D HEHEHE..Nalavey irundhuchu...
    btw, andha picture'la irukradhu yaaru...Me not asking abt the "Pudavai katta theriyadhu GIRL.." :D Inoruthar....Avar Grand master illayeeee //

    நான்தான் Grand master..:) அந்த புடவை கட்டுன பொண்ணு ஒரு நடிகை பா..அதான் புடவை கட்டத் தெரியல


    //சேதுக்கரசி said...
    ஹாஹா... :D //

    என்ன சேது அதிகமா இந்தப்பக்கம் வர்ற மாதிரி இருக்குது..

    ReplyDelete
  8. //அதிகமா இந்தப்பக்கம் வர்ற மாதிரி இருக்குது//

    எல்லாம் கைப்புள்ளையால் வந்த வினை. தாங்க்ஸ் to கைப்ஸ்.

    ReplyDelete
  9. ஹாஹா.. grandmaster மட்டும் இதை பார்த்தாரு.. அவர் கேட்கும் ஒரே கேள்வி " என்னை வச்சு காமெடிகிமிடி பண்ணலையே!"

    ஹாஹா.. ரசித்து படித்தேன். வாழ்க வருத்தப்படாத வாலிப சங்கம்!

    ReplyDelete
  10. //சேதுக்கரசி said...
    //அதிகமா இந்தப்பக்கம் வர்ற மாதிரி இருக்குது//

    எல்லாம் கைப்புள்ளையால் வந்த வினை. தாங்க்ஸ் to கைப்ஸ். //


    கைப்புள்ளையையும் நம்ம அன்புடன்ல சேர்த்துறுங்க சேது..

    //Arunkumar said...
    sooooooooober //


    naaaanri


    //tamilmagani said...
    ஹாஹா.. grandmaster மட்டும் இதை பார்த்தாரு.. அவர் கேட்கும் ஒரே கேள்வி " என்னை வச்சு காமெடிகிமிடி பண்ணலையே!"//

    அதே கேள்வியைத்தான் நான் இப்ப கேட்குறேன் :)

    ReplyDelete
  11. //கைப்புள்ளையையும் நம்ம அன்புடன்ல சேர்த்துறுங்க சேது..//

    கொஞ்ச நாள் முன்னாடித்தான் அவர் கிட்ட லிங்க் குடுத்து, படிங்க! னு சொல்லியிருக்கேன்..

    ReplyDelete
  12. nalla karpanai ungalukku pa....supppeerrrrr......

    ReplyDelete
  13. அடடாh அடடாhh நிறையவே கசக்கிறநீங்க மூழையை...

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)