Friday, November 17, 2006

எம் சி ஏ - ஆட்டோகிராப்

[எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி இறுதி ஆண்டில் நண்பர்களுக்கு சும்மா தமாஷாக எழுதிய ஆட்டோகிராப்..டைரியை புரட்டி எடுத்து வந்தது]


என் இனிய கிராமத்து
மாணவர்களே!

ஒரு
ஆர்ப்பாட்டத்தோடு
கல்லூரிக்குள் நுழைந்த
என் இதயம்
இந்த
ஆட்டோகிராப் டைரிக்குள்
அமைதியோடு நுழைகின்றது
(நம்ப முடியலையே)

மீண்டும் எந்தஇடத்தில்
சந்தித்துக் கொள்வோமோ?
தெரியாது,
ஆனால்
இபபொழுது பிரியப்போகிறோம்

நம்பவேமுடியவில்லை
நேற்றுதான்
சேவியர் கல்லூரியில்
தயங்கி தயங்கி
நுழைவுத்தேர்வு எழுத வந்தது போலிருக்கிறது
ஆனால் அதற்குள்
பேர்வெல்(Farewell)....
ஆட்டோகிராப்...
ச்சே ரொம்ப வலிக்குதுப்பா
(என்ன காலில் முள் குத்திடுச்சா)

நாம்
Week-End ல் சந்தித்துக்கொண்டாலும் இது
Strong ஆன நட்பஜதான்
(ஏன் லைட்டான நட்பில்லையா
நீயென்ன டீக்கடையிலையாடா
வேலை பார்க்கிற)


ஒவ்வொரு வாரமும் நமக்கு ரம்சான்
ஒவ்வொரு வாரமும் நமக்கு தீபாவளி
ஒவ்வொரு வாரமும் நமக்கு கிறிஸ்துமஸ்
இப்படி
வருஷப்பண்டிகை அல்ல
வாரப்பண்டிகைதான் நமக்கு

எதை நினைத்துப்பார்ப்பது,
கடைசி பெஞ்சு கலாட்டக்கள்...
விதைக்காமலையே முளைத்த கடலைகள்...
கிண்டலுடனே கடந்த பீரியடு...
சில காதலின் வளர்ச்சிகள்...
பள்ளி வராண்டாவில் தேங்காய் உடைத்தது...

Photobucket - Video and Image Hosting

ஜோசப்புக்கு பெண் பார்த்தது..
ஜன்னலொரம் கடப்பவர்களை கிண்டலடித்தது...
டீக்கடை பெஞ்ச்...
யாருடைய திருமணத்திலும் அழைப்பிதழ் இல்லாமல்
வி எம் எஸ் சாப்பிட்ட சாப்பாடு..
ப்ராக்டிகல் ருமில் செய்த லூட்டி..
ரவுண்டானாவில் அடித்த ரவுண்ட்..
செமினார்கிளாசில் சேட்டைகள் ..
கல்லூரி விழாவில் தோப்புக்கரணம்..
ஜெராக்ஸ் வாங்கிவிட்டு
ஏமாற்றியவர்கள்...
டூர் செல்லும் இரவில் சீட்டுவிளையாட்டு...
பாரீனரோடு எடுத்த Photo..

Photobucket - Video and Image Hosting
பாத்ரூமூக்குள் ஆடிய டான்ஸ்..
கிழிந்தாலு போட்டுவந்த ஜீன்ஸ்..
டூரில் யார் யாரோ ஜோடியோடு
நான் மட்டும் தனியே...(?)
இப்படி
எல்லாமே கனவாகப்போகிறது
(நினைச்சுடாதீங்கப்பா,)

இனிமேல்
குடும்பம- குழந்தை
வேலை-பணம்
என்று
சாதாரண மனிதவாழ்க்கைக்குள்
நுழையப்போகிறோம்
(கவலைப்படாத நைனா)

மீண்டும் சந்திப்போம் என்று
நம்பிக்கையோடு கூறினாலும்
சூழ்நிலைகள் எப்படியிருக்குமோ,


என்றாவது ஒருநாள்
இந்த டைரியை
படிக்கும்பொழுது
என் ஞாபகம் இருக்குமா,
(கண்டிப்பா இருக்காது)

என் பெயர் சொல்லி
யாராவது அழைத்தால்
என் ஞாபகம் இருக்குமா,
(ரொம்ப அலட்டாதடா)

பத்திரிக்கையில் வரும்; என்
கவிதையைக் கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,

குரங்குசேட்டை செய்யும்
யாரையாவது கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,
(குரங்குன்னு ஒத்துகிட்டா சரி)

ஆனால்
நான் உங்களையெல்லாம்
ஞாபகப்படுத்தியே
பார்க்கமாட்டேன்
ஏனெனில் என்னையே
நான் எப்படி ஞாபகப்படுத்துவது,
(ஹைய்யா ஐஸ் ஐஸ் ))

அயர்ன் செய்த சட்டை
கூட்ட நெரிசலில் கசங்கிப்போவதைப்போல

இந்த
கடைசிநேரப்பிரிவில் இதயம்
கசங்கிவிட்டது
(யப்பா என்ன சென்டிமென்ட்)

கூட்டம்கூட்டமாய் பழகிவிட்டு
தனித்தனியே பிரியப்போகிறோம்
(சிலபேர் ஜோடியா பிரியறாங்க)

எங்கையோ பிறந்து
பள்ளிவாழ்க்கை எங்கையோ படித்து
கல்லூரி வாழ்க்கையில்
நம்மை நண்பர்களாக்கிய
இறைவனுக்கு நன்றி
(இறைவா மாட்டிவிட்டுட்டியே)

இஙகே நாம்
சந்தித்துக்கொள்ளவேண்டுமென
இறைவன் கட்டளை
சந்தித்துவிட்டோம்
(அரியர்ஸ் வச்சதும்
அவனோட கட்டளையா,)

இப்பொழுது இந்தநேரம்
பிரியவேண்டுமென
இறைவன் கட்டளை
பிரியப்போகிறோம்
(யப்பா சனியன் ஒழிஞ்சது)


உன்னுடைய திருமணத்திற்கு
எல்லோருக்கும்
அழைப்பிதழ் அனுப்பு
மீண்டும்
அனைவரும் சந்தித்துக்கொள்வோம்
(யப்பா வந்துடாதீங்கடா)

இனிமெல்
எந்த வீதிகளில்
எந்த இரயில்வேஸ்டேஷனில்
எந்த பிளாட்பாரத்தில்
எந்த பஸ்டாண்டில்
எந்த ஊரில்
எந்த நாட்டில்
எந்த சாப்ட்வேர் கம்பெனியில்
எந்த சூழ்நிலையில்
மீண்டும் சந்திப்போமோ?

அந்தச் சூழ்நிலையில்
நீ பணக்காரனாகவோ..
நீ தொழிpலதிபராகவோ..
நீ அதிகாரியாகவோ..
எப்படியிருந்தாலும்
பதவிகளை எறிந்துவிட்டு முதலில்
பழைய நண்பனாய் வா!
(வரமாட்டேன் போடா)

நாளைக்கும் நிலவு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(ஆமா பெரிய தத்துவம்)

நாளைக்கும் சனி ஞாயிறு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(சரியான லுசுப்பா)

இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்
சந்திப்போம் என்று
சங்கடத்தோடு பிரிகிறேன்
(யப்பா முடிஞ்சுது)



- ரசிகவ் ஞானியார்

19 comments:

  1. //இனியொரு ஜென்மமிருந்தால்
    இதே கல்லூரியில்
    இதே நண்பர்களாய்
    சந்திப்போம் என்று
    சங்கடத்தோடு பிரிகிறேன்//

    சங்கடமா இது? வேணாம் விட்டுருங்க ரசிகவ், அழுதுட போறோம். ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. என்னங்கடா ஒரே ஆட்டோவா ஓடுது சங்கத்துல்ல... அங்கே வெட்டிபய வ,வா.ச ஆட்டோ ஓட்டுறார்.. நிலவு எம்.சி.ஏ ஆட்டோ ஓட்டுறாரு... ஆட்டோ கிராப் போட்டோகிராப்ன்னு அலையமா உங்க புள்ளகளை ஸ்டெபி கிராப் மாதிரி சாதனைச் செய்ய வைங்க போங்கப்பா...

    நிலவு நல்லாத் தான்ய்யா பீல் பண்ணுறீரு... கன்டினியூ பண்ணு..

    ReplyDelete
  3. யப்பா, என்ன சேட்டை, இம்புட்டு நீளமாகவா எழுதுவது. :-)

    ReplyDelete
  4. //கூட்டம்கூட்டமாய் பழகிவிட்டு
    தனித்தனியே பிரியப்போகிறோம்
    (சிலபேர் ஜோடியா பிரியறாங்க)//

    ஆமாங்க, நமக்கு தான் அந்த குடுப்பினை இல்ல.... :-(

    ReplyDelete
  5. //ஒவ்வொரு வாரமும் நமக்கு ரம்சான்
    ஒவ்வொரு வாரமும் நமக்கு தீபாவளி
    ஒவ்வொரு வாரமும் நமக்கு கிறிஸ்துமஸ்
    இப்படி
    வருஷப்பண்டிகை அல்ல
    வாரப்பண்டிகைதான் நமக்கு//

    உண்மைதான்...
    ஆனாலும் இப்படியா நனைக்கிறது.
    பாருங்க...ups மேலெல்லாம் தண்ணி

    சென்ஷி

    ReplyDelete
  6. ரசிகவ்! நீங்க எப்ப வ.வா.சங்கத்துல சேர்ந்தீங்க? அதுவும் கல்யாணமானதும் ஆகாததுமா? ஹூம்ம்ம்... வருத்தப்படாத வாலிபரா? அதுவும் இந்த மாசத்து அட்லாஸ் வாலிபராக்கும்! இருக்கட்டும் இருக்கட்டும்.. வூட்டம்மா கிட்டப் போட்டுக் குடுக்குறேன்! :-D

    ReplyDelete
  7. ரசிகவ்! நீங்க எப்ப வ.வா.சங்கத்துல சேர்ந்தீங்க? அதுவும் கல்யாணமானதும் ஆகாததுமா? ஹூம்ம்ம்... வருத்தப்படாத வாலிபரா? அதுவும் இந்த மாசத்து அட்லாஸ் வாலிபராக்கும்! இருக்கட்டும் இருக்கட்டும்.. வூட்டம்மா கிட்டப் போட்டுக் குடுக்குறேன்! :-D

    ReplyDelete
  8. உங்க கிட்ட ஆட்டோககிராஃப கேட்டா, ஒரு புக்கு முழுதும் எழுதி தள்ளிடுவீங்க போலிருக்கு?

    ReplyDelete
  9. அப்படியே ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க!!!

    என்ன இருந்தாலும் காலேஜ் வாழ்க்கை மாதிரி வருமா???

    ReplyDelete
  10. //ILA(a)இளா said...
    சங்கடமா இது? வேணாம் விட்டுருங்க ரசிகவ், அழுதுட போறோம். ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

    அடஇப்படியா அழுறது..கையில தண்ணி தெறிக்குது பாருங்க..

    //Punch பாலா said...
    என்னங்கடா ஒரே ஆட்டோவா ஓடுது சங்கத்துல்ல... அங்கே வெட்டிபய வ,வா.ச ஆட்டோ ஓட்டுறார்.. நிலவு எம்.சி.ஏ ஆட்டோ ஓட்டுறாரு... ஆட்டோ கிராப் போட்டோகிராப்ன்னு அலையமா உங்க புள்ளகளை ஸ்டெபி கிராப் மாதிரி சாதனைச் செய்ய வைங்க போங்கப்பா...//

    என்னப்பா பஞ்ச் பாலா ஓவரா டோஸ் விடுறாரு..பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க...

    நாராயணா..நாராயணா.. :)

    ReplyDelete
  11. //நாகை சிவா said...
    யப்பா, என்ன சேட்டை, இம்புட்டு நீளமாகவா எழுதுவது. :-)

    ஆமாங்க, நமக்கு தான் அந்த குடுப்பினை இல்ல.... :-(
    //

    அந்தக்கொடுப்பினை இப்பவாவது கிடைச்சுதா சிவா...

    ReplyDelete
  12. //சென்ஷி said...
    உண்மைதான்...
    ஆனாலும் இப்படியா நனைக்கிறது.
    பாருங்க...ups மேலெல்லாம் தண்ணி

    சென்ஷி //

    அப்படியோ கல்லூரியில நீங்க நனைஞ்சதையும் கொஞ்சம் எடுத்து விடுறது...

    சென்ஷி- கலீல் ஜிப்ரான் மாதிரி வித்தியாசமான பெயரா தெரியுது ..எதற்கும் குறித்து வைத்துக்கொள்கின்றேன்..

    ReplyDelete
  13. //சேதுக்கரசி said...
    ரசிகவ்! நீங்க எப்ப வ.வா.சங்கத்துல சேர்ந்தீங்க? அதுவும் கல்யாணமானதும் ஆகாததுமா? ஹூம்ம்ம்... வருத்தப்படாத வாலிபரா? அதுவும் இந்த மாசத்து அட்லாஸ் வாலிபராக்கும்! இருக்கட்டும் இருக்கட்டும்.. வூட்டம்மா கிட்டப் போட்டுக் குடுக்குறேன்! :-D//

    அட இது வாங்குன பட்டம் இல்லை சேது..அவங்களா தந்த பட்டம் நம்புங்க..


    ஏன் கல்யாணத்திற்குப் பிறகு வ.வா சங்கத்துல இணையக்கூடாதா..?

    ReplyDelete
  14. //Divya said...
    உங்க கிட்ட ஆட்டோககிராஃப கேட்டா, ஒரு புக்கு முழுதும் எழுதி தள்ளிடுவீங்க போலிருக்கு? //

    சப்ஜெக்டைத்தான் ஒழுங்கா எழுதல..இதையாவது எழுதுவுவோமேங்கிற நல்ல எண்ணம்தான்

    ReplyDelete
  15. //வெட்டிப்பயல் said...
    அப்படியே ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க!!!

    என்ன இருந்தாலும் காலேஜ் வாழ்க்கை மாதிரி வருமா??? //

    கண்டிப்பா அந்தக் காலத்தை திரும்ப பெற முடியாது நண:பா..

    என்ன அருமையான நிலாக்காலங்கள்...?

    ReplyDelete
  16. //உங்க கிட்ட ஆட்டோககிராஃப கேட்டா, ஒரு புக்கு முழுதும் எழுதி தள்ளிடுவீங்க போலிருக்கு?//

    ஒரு படமே எடுக்க சொல்லலாங்க, ஆனா சங்கத்துலதான் அவ்வளவு பணம் இல்லை.

    ReplyDelete
  17. Nila kalangaLai ninaivukku konduvandhu vaRuththaththai, andha sugamaana varuththathtai varavazhiththuviteeraiya.
    Vazhga vaLamudan

    ReplyDelete
  18. //Anonymous said...
    Nila kalangaLai ninaivukku konduvandhu vaRuththaththai, andha sugamaana varuththathtai varavazhiththuviteeraiya.
    Vazhga vaLamudan //

    நன்றி நண்பா..யாரோ நீ யாரோ..?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)