Friday, August 18, 2006

ஆப்பரேஷன் போலி வரு.வா.சஙகம்.

ஹல்லோ கைப்புள்ள காலிங்.....

குரல் கேட்டதும் வரப்பில் இடறி விழுகிறார் விவசாயி. பிதற்றலானந்தா ஆசிரமத் திண்ணையில் கலாய்ததலின் நடுவே கதறி எழுகிறார் தளபதி சிபி. பேட்டையில் லொள்ளு அன்ட் ஜொள்ளு எல்லாத்தையும் நிறுத்திட்டு எள்ளென ஆஜரானார் பாண்டி. எதோ சொல்கிறேன்... என்னத்தா நான் சொல்ல எனப் பேச்சைக் குறைத்து புலிக்குட்டி சிவா தலக் குரலுக்கு பணிவாய் பம்மி நிற்கிறார். கச்சேரி மைக் செட்டிலும் தலக் கொரலு காந்தமா ஒலிக்க நானும் வெலவெலத்து நின்னேன்.

" என்னப் பண்றீங்க...அவன் அவன் ஆட்டோ வச்சு அவன் அவன் தலைவனுக்கு ஆப்பை ஆப் ரேட்ல்ல வாங்கி அனுப்பிகிட்டு இருக்கான் இங்கே என்னன்னா அம்புட்டு பயலும் அமுக்கிட்டு ஆளுக்கொரு பக்கம் சிங்கம்லேன்னு சீட்டியடிச்சுகிட்டுத் திரியறீங்களா.. என் சினத்தைச் சுண்டி இழுக்குறீங்க.. இனி சிக்கி சிதற போறீங்க ஆமா"

"ஆமா தல கைப்பொண்ணு கிளம்புனப் போது கூட இப்படி ஆவேசமா ஆகல்லியே.. இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி அவர் வேட்டி அவுந்து விழுறதுக் கூடத் தெரியாமா அவிஞ்சுப் போய் அலறிகிட்டு இருக்கார்"
தளபதி சிபி தலைமையில் மற்ற ஐவரும் ஒரே மாதிரி யோசித்தாலும் யாரும் வாய் திறக்கவில்லை

"நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலையைப் பார்த்துகிட்டு இருந்தேன்.. என்னியக் கூட்டிட்டு வந்து சங்கம் தங்கம்.. கவுரவம் கிராதகம்ன்னு சொல்லி மொத்தச் சோலியையும் முடிக்கத் தான் அம்புட்டுப் பயலும் திட்டம் போட்டுருக்கீங்காது எனக்குத் தெரிஞ்சுப் போச்சுறா.. தெரிஞ்சுப்போச்சு.. முழிக்கற முழியப் பாரு.. அப்ரசெட்டுக்களா"

"தல.. அது அப்ரசட்டு இல்ல.. அப்பரண்டிஸ்.. A..PP.." என்று விவசாயி மகா சிரத்தையோட திருத்த முயல...

"என்ன கிண்டலா.. நான் என்னப் பரீட்சைக்காப் போயிகிட்டு இருக்கேன் பாடம் நடத்திகிட்டு இருக்க..என்னியக் கேக்காம கொள்ளமா தமிழ் சங்கம் ஆரம்பிச்சவன் தானே நீயு"

"தல என்ன கோவம்.. எதுக்கு டென்சன்.." நான் தலயைக் கூல் பண்ண முயற்சிக்க

"கொந்தளிச்சுப் போயிருக்கேன்.. கோபத்தைக் கொப்பளிக்கறதுக்கு முன்னாடி உன் கச்சேரிய நிறுத்தி வை... ஆமா பின்னூட்டம் போட மாட்டீயா நீ... தனிக் கச்சேரி பண்றியா நீ...கண்ணு முழியெல்லாம் குதறிடுவேன் ராஸ்கல்... ஒழுங்காப் போய் சங்கத்துப் பக்கத்துக்கெல்லாம் பின்னூட்டம் போட்டுத் தேவையில்லாம தலக்கு வர்ர ஆப்பு அம்புட்டையும் தடுத்து நிறுத்துப் போ"

"அடேய் அப்ரசட்டுகளா.. அம்புட்டு பேரும் எங்கேடாப் போறீங்க?"
" தேவையில்லாத ஆப்பை எல்லாம் தடுத்து நிறுத்த"
"அதெல்லாம் வேண்டாம் இங்கே வாங்க"
என்னையும் கூப்பிடுறாருன்னு பாசத்தோட நானும் திரும்பி வர...
" ஏய்.. கச்சேரி. அபரச்ட்டு நீ எங்கே திரும்பி வர்ற?"
" அதான் ஆப்பை எல்லாம் தடுக்க வேணாம்ன்னு நீங்கத் தானே சொன்னீங்க"
" அது அவங்களைச் சொன்னேன்.. நீ போய் தேவை இல்லாத அம்புட்டு ஆப்பையும் தடுத்து நிறுத்து.. போ"
'எனக்கு ஒரு சின்ன டவுட் தல... தேவையான ஆப்பு எது தேவை இல்லாத ஆப்பு எதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?"
"அடேய் அப்ரசட்டு நீ தடுக்குர ஆப்பு அம்புட்டும் தேவை இல்லாத ஆப்பு தான் போதுமா... போய் கொடுத்த வேலையை ஒழுங்காச் செய்.. நல்லா இழுத்து வச்சு லந்து அடிக்கிறாங்க ராஸ்கல்ஸ்"
பாண்டி பதறி பம்முகிறார்.

"ஓங்களுக்கெல்லாம் நல்லாச் சொல்லுறேன் கேட்டுக்கங்க..சங்கத்து மேலக் கடன் சொல்லித் தான் நான் கேமரா வாங்கி படம் புடிச்சுட்டுத் திரியற உண்மையை அந்த கிசுகிசு குரூப் கண்டுபிடிச்சுச் சொல்லுரதுக்குள்ளே சங்கத்து நிதி நிலைமைச் சரியாகணும்... என்னப் பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது.. பின்னூட்ட எண்ணிக்கை அதிரடியா ஏறணும் ஆமா"

"ஆமாத் த்ல சங்கத்து மேல இருக்க கடனுக்கும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும் என்ன சம்பந்தம்.."
"கேள்வி எல்லாம் வேறக் கேக்குறீங்களா... அதெல்லாம் ஒரு கணக்கு உங்களூக்குப் புரியாது..."
"அப்படி என்ன கணக்கு?"
"மெதுவாப் பேசுங்கய்யா.. அடி வயிறு கலங்குது... சங்கத்துல்ல கணக்குக் கேட்டாயங்களாம் கிசுகிசுப் போட்டுறப் போறாயங்க"

"சரி... மெதுவாகக் கேக்குறோம் சொல்லுத் தல"

"ம்ம்ம் ஐ.நா. சபையிலே வருததப்படாம வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் திட்டம்ன்னு ஒண்ணு இருக்காம்.. மேலே தம்பி புலிக்குட்டி சொல்லும் கேளூ"

"அதாவது நம்ம கைப்பு மாதிரி மாமாபெரும் தலயின் தலைமையில் முடிச்சவிக்கி வேலையெல்லாம் செய்து மொள்ளமாரி ..."

"போதும் நிப்பாட்டு.. நான் புலிக்கேசி இல்ல.. கைப்பு...உஷார் நாங்க.. நாங்களே சொல்லுவோம்"
புலிக்குட்டி பதுங்கி நிற்க.. கைப்பு தொடர்கிறார்.

"அது பெருசா ஒண்ணும் இல்ல.. ஒரு பின்னூட்டத்துக்கு 100 டாலர் விதம் கடன் கொடுத்துட்டு இருந்தாயங்க... நானும் பணம் வருதுன்னு கையிலே கேம்ரா எடுத்துட்டு லேடிஸ் ஓணான்.. லேடிஸ் பல்லி, லேடீஸ் ஒட்டகம்ன்னு ஜாலியாச் சங்கத்துப் பக்கமே வராமப் படம் பட்மாஎடுத்துகிட்டுத் திரிஞ்சேன்... தீடிரென்னு நேத்து சனிவால்ல இருந்து போன்... "

"தல அது ஜெனீவா"

"எங்களுக்கும் தெரியும்.. நீங்கப் பொ... "
"தலலலல...."
"போதும் நிறுத்துன்னு சொல்ல வந்தேன்.. அதுக்குள்ளே ஏன்ய்யா அலறி உயிரை வாங்குற ஸ்ப்பப்பா"
தலக்கு மூச்சு வாங்குகிறது.

"இப்போ உன் சங்கம் போற போக்குக்கு உனக்கு டாலர் எல்லாம் தர முடியாது.. வேணும்ன்னா வடபழனி கோயில் வாசல்ல விக்குற டாலர் தான் கிடைக்கும்ன்னு ஏகப் பேச்சு பேசிட்டான்..."

இப்போ எங்களுக்கு எல்லாம் விளங்கியது,

"ஆகாப் பின்னூட்டக் கயமைத்தனம் இது தானா.. நான் கூட வேற என்னமோன்னு இல்ல நினைச்சேன்" தளபதி சிபி

"ம்ம்.. நீ ரொம்ப நல்லவன்னு நம்பி இல்ல இருந்தேன்" பாண்டி

"ஆகா... தல கிளம்பிட்டய்யா.. எங்களைச் சிக்கி வச்சிட்டு கிளம்பிட்ட" இது புலிக்குட்டி சிவா

"ஆக மொத்ததுல்ல எங்களை வச்சுக் காமெடி கீமெடி எல்லாம் பண்ணி இருக்க நீயு" இது விவ்சாயி.

நான் கடனேன்னு கொல்லைப் பக்கம் நின்னு வர்ற ஆப்பை எல்லாம் தடுத்துகிட்டு நிக்குறேன்.

கால் கட் ஆகிறது...

தலயின் ஆவேச மிரட்டலால் மிரண்டுப் போன சங்கத்து மக்கள்.. வளைகுடா முதல் வால்பாறை வரையிலான அனைத்துக் கிளைகளுக்கும் தகவல் கொடுத்தப் படி இருந்தனர்.

என்னப் பண்ணா தலயின் புகழை மேலும் பெருக்கலாம்.. பின்னூட்டக் கயமைத்தனம் மீது விசாரணைக் கமிஷன்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அந்த விபரீதத் திட்டத்தை தளபதி சிபி தன் விழிகள் விரிய சொன்னார்..

அஞ்சுப் பேரும் அல்லு தெறிக்க அம்புட்டும் நடுங்க சிபியைப் பார்த்தோம்...
வேற வழியே இல்ல.. தல புகழை வளர்க்கவும்... முக்கியமாச் சங்கத்துல்ல நம்ம பதவிகளைக் காப்பாத்தவும் இதைப் பண்ணியே தீரணும்...

பாண்டியின் பிஞ்சுக் கண்களில் மழையென கண்ணீர் பீடியில் பொங்கி கிளம்ப...

என் இனமடா நீ என அவனை நான் இறுக கட்டிப் பிடிக்க, என்னையும் தாண்டி மெகா சவுண்டில் அதே டயலாக்கைச் சொல்லிப் பாண்டியைக் கட்டிப் பிடித்தார்.

தள்பபதி... வாக்கு.. சே .. நாக்கு எல்லாம் தள்ளுது.. இது நமக்கு வேணுமா? வேற எதாவது யோசிப்போமே " புலிக்குட்டி வாலை சுருட்டி வாய்க்குள் விட்டுக் கொண்டு வேண்டுகோள் வைக்க...

தளபதி சிபி மேலும் உறுதியான குரலில் சொன்னார்...
இதை நாம் செய்து தான் தீரணும்.. நம்ம வீரத்திருமகன் தலக் கைப்புக்கு நாம் காட்டுற விசுவாசம் உண்மைன்னா இதை நாமே செய்தே தீரணூம்...

சஙக்த்துக்குப் பலகையில் பெரிய எழுத்துக்களில் அழுத்தமாய் எழுதினார்

ஆப்பரேஷன் போலி வரு.வா.சஙகம்.

நாங்கள் ஐவர் மட்டுமன்றி இந்த தகவலை விடியோ கான்பிரஸ்ல்ல பார்த்துக் கொண்டிருந்த மொததச் சங்கக் கிளை நிர்வாகிகளும் கதி கலங்கி வாய் அடைத்துப் போயினர்...

தொடரும்

25 comments:

  1. அடப்பாவிங்களா! டோட்டலா எனக்கு சமாதி கட்டவே முடிவு பண்ணிட்டீங்களா? சலவை கல்லாவது எதாச்சும் நல்ல கலராப் பாத்து போடுங்கப்பு.
    :((

    ReplyDelete
  2. //அவன் அவன் தலைவனுக்கு ஆப்பை ஆப் ரேட்ல்ல வாங்கி அனுப்பிகிட்டு இருக்கான் இங்கே என்னன்னா அம்புட்டு பயலும் அமுக்கிட்டு ஆளுக்கொரு பக்கம் சிங்கம்லேன்னு சீட்டியடிச்சுகிட்டுத் திரியறீங்களா..//

    தல லலலலல !!!!! எங்களை இப்படி நெனச்சுட்டீயளே :((

    எங்க தலயக் கொடுத்தாசும் 'தல'யோட கோபத்தை போக்கீடமாட்டோம் ??!!!

    ReplyDelete
  3. //தளபதி சிபி மேலும் உறுதியான குரலில் சொன்னார்...
    இதை நாம் செய்து தான் தீரணும்.. நம்ம வீரத்திருமகன் தலக் கைப்புக்கு நாம் காட்டுற விசுவாசம் உண்மைன்னா இதை நாமே செய்தே தீரணூம்...//

    வெற்றி வேல் வீர வேல் !! தளபதி சிபிவர்மா!! கண்களில் கண்ணீர் கார்பரேசன் லாரியை நிறைக்க போதுமான அளவு வந்தாலும் போகாதே போகாதே வில்லுப்பாண்டி என கன்னியர்(??!!) பாடினாலும் எம் தலைவனுக்காக தலை கொய்ய களமிரங்கிவிட்டான் இந்தப் பாண்டி !!
    எடுங்கள் என் original வில்லை!! தூர எரியுங்கள் இந்தக்கரும்பு வில்லை .....

    ReplyDelete
  4. //மொததச் சங்கக் கிளை நிர்வாகிகளும் கதி கலங்கி வாய் அடைத்துப் போயினர்...//


    ஆஆஆஆஆ..........வாயக்கொஞ்சம் மூடிக்கிறவா..?இல்லை இதுக்கும் தல எதுனாச்சும் கண்டனம் தெரிவிக்குமா?


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  5. //எடுங்கள் என் original வில்லை!!//
    போலி மேட்டரு பேசும் போது என்னய்யா ஒரிஜினல்..

    தமிழ்ச்சங்கம்-விவ்-->வில்லை என்றால் நடப்பில் இருக்கும் மாத்திரை என்று கூட அர்த்தம் வருகிறதே. என்ன சொல்ல வருகிறாய்?

    ReplyDelete
  6. தேவ்!!!

    ரொம்ப நாள் கழிச்சு...
    :)))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  7. qué happends al vavasangam? ¿le pienso toda la gente que hace cualquier mala cosa?

    ReplyDelete
  8. necesidad del kaippullai demasiado más comentarios y sostenido sus individuos especiales del appu!!

    ReplyDelete
  9. யோவ் நான் போட்ட கமெண்ட் எங்கய்யா? கானோம் ஓகோ ஒங்களுக்கு அவ்வளவு ஆச்சா ஆகட்டும் போயி எதாவது போலிபின்னூட்ட சங்கத்துல சொல்ரேன்

    ReplyDelete
  10. மகி!
    கோபப்படாத, நீ கூப்பிட்டியனு முதல உன் பதிவுக்கு வந்தேன், அப்புறம் கண்ணனை குழப்பி விட்டுட்ட. அதை சரி பண்ணிட்டு வர காட்டியும் நீ இங்கன வந்து அலம்பு பண்ணி இருக்க. என்னா பண்ணுறது போ... சரி இரு உன் கேள்வி இதோ பதில் சொல்லுறேன்.

    ReplyDelete
  11. //qué happends al vavasangam? ¿le pienso toda la gente que hace cualquier mala cosa? //
    எதுவும் ஆக வில்லை. வழக்கம் போல் தான் உள்ளோம். இந்த பதிவும் தலயை கலாய்க்கும் பதிவு தான். எங்க சங்க கொள்கைய அது தானப்பா. அத விட முடியுமா?

    //necesidad del kaippullai demasiado más comentarios y sostenido sus individuos especiales del appu!! //
    நீ சொன்னது போலவே செய்து விடுவோம்.

    ReplyDelete
  12. அதான் புலி சொல்லியாச்சில்ல ம்ம் ஆரம்பிகப்பா

    ReplyDelete
  13. கப்பி என்னா இது, இப்படி மொட்டையா சிரிச்சுட்டு போனா என்ன அர்த்தம் ?

    ReplyDelete
  14. //சலவை கல்லாவது எதாச்சும் நல்ல கலராப் பாத்து போடுங்கப்பு.
    //

    சலவைக் கல்லா! ராஜஸ்தான்லேர்ந்து சூப்பரா மார்பிளுக்கே ஏற்பாடு பண்ணுறமே!

    ReplyDelete
  15. //வெற்றி வேல் வீர வேல் !! தளபதி சிபிவர்மா!! கண்களில் கண்ணீர் கார்பரேசன் லாரியை நிறைக்க போதுமான அளவு வந்தாலும் போகாதே போகாதே வில்லுப்பாண்டி என கன்னியர்(??!!) பாடினாலும் எம் தலைவனுக்காக தலை கொய்ய களமிரங்கிவிட்டான் இந்தப் பாண்டி !!
    //

    பாண்டித்தம்பி நீ என் இனமடா!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

    ReplyDelete
  16. யப்பா என்னா கூட்டம் என்னா கூட்டம் எல்லாருக்கும் பதில் சொல்லி வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது பா அந்த பேன கொஞ்சம் போடுங்களேன்

    ReplyDelete
  17. //கப்பி என்னா இது, இப்படி மொட்டையா சிரிச்சுட்டு போனா என்ன அர்த்தம் ?//

    தலைல முடியோட தாம்பா சிரிச்சுட்டு போனேன்.. :P

    ReplyDelete
  18. இருக்கிற ஓணான் போதாதுன்னு இதுவும் வேறையா? ஏம்பு இப்படி பண்றீங்க? எனக்கு சங்கத்துல இருந்து VRS ஏற்பாடு பண்ணிக்கிறேன். எங்கே சொல்லுங்க, " வெற்றிவேல்"

    ReplyDelete
  19. ஒருவேளை சங்கத்தில ஊழல் நெசமாவே நடந்திருக்குமோ? நேத்து போட்ட பதிவுக்கு இப்பவரைக்கும் 20 பின்னூட்டம்தானா " ஆவட்டும் ஒரு விசாரணை கமிஷன் ஆரம்பிக்கலாம்"

    ReplyDelete
  20. என்னமோ நடக்கப்போகுதுன்னு தெரியுது.அது என்னான்னு தெரிஞ்சுக்க உள்ளுக்குள்ள ஒரு ஆர்வம் எரியுது.
    நமது புதுத்திட்டம் மிகப்பெரியது. எல்லோரும் இணைந்து எப்படியும் முடிப்போம் என்பது மட்டும் புரியுது.

    ReplyDelete
  21. கலக்கல் தேவ்..

    ReplyDelete
  22. //kanna katuthey //

    இதுக்கே இப்படியா!

    எங்க தலைக்கு எத்தினி தடவை கண்ணைக் கட்டி இருக்கும்!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)