Sunday, July 30, 2006

அட்லாஸ் வாலிபருக்கு அட்லாஸ்ட் நன்றி!

சங்கப் பலகையில் சங்கத்து முகங்களையே பார்த்து அலுத்துப்போன பெருவாரியான வாசக உள்ளங்களுக்கு மாற்றம் தரும் வகையில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களுக்கு(ம்) ஆப்பு வாங்கித்தரும் விதமாக
எங்கள் முதல் அட்லாஸ் வாலிப விருந்தாளியாக ஆப்புகளை அள்ளிக் கொள்ள இலவசக் கொத்தனார் அவர்களை அழைத்திருந்தோம்.

அவரும் அயராத அலுவலகப் பணிகள் மற்றும் எழுத்து, தமிழ் வளர்ப்பு, வெண்பா வடித்தல் போன்ற வலையுலகப் பணிகளுக்கிடையிலும் எங்கள் அழைப்பை ஏற்று அட்லாஸ் வாலிபராக ஆப்புகளைத் தாங்கியதோடு மட்டுமின்றி, பின்னூட்ட எண்ணிக்கையில் அவரது பழைய சாதனைகளையும் முறியடித்து, சங்கத்திலும் சாதனையை ஏற்படுத்தி சங்கத்தை சிறப்பித்திருக்கிறார்.

இதோ இன்றோடு அவரது அட்லாஸ் வாலிப பருவம் முடிவடையும் இவ்வேளையில் சங்கத்தின் தலை கைப்பு மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான போர்வாள் தேவ், வேளாண் தோழர் விவசாயியார், புதரகத் திரும்பி ஆற்றலரசியார் பொன்ஸ், எள் என்றாலே நினைவுக்கு வரும் எண்ணெய் போல் ஜொள் என்றாலே நினனவில் வரும் பாண்டித்தம்பி ஆகியோர் சார்பாகவும், அலைகடலென திரண்டிருக்கும் சங்கத்தின் ஏனைய சிங்கங்களின் சார்பிலும் இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் கோடானு கோடி நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்படுக்கிறேன்.

இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் இமாலய நன்றிகள்
சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரை மனதார மகிழ்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அரை மனதோடு, சென்று வருக, குட் பை, டாட்டா என்றெல்லாம் சொல்லி பிரியா விடை தரும் இத்தருணத்தில் எங்கள் அன்பு அண்ணன், தல கைப்பு அவர்கள் "விருந்தாளிகளை வெறுமனே வழியனுப்புதல் நமது பாரம்பரிய மரபு அல்லவே!" என்று அன்புக் கட்டளை இட்டதால்
சங்கத்தின் சகல வித உறுப்பினர்கள் சார்பாக அன்பு அண்ணன் இலவசக்கொத்தனார் அவர்களுக்கு
"பின்னூட்டப் புயல்"
என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவிக்கிறோம்.
பின்னூட்டப் புயல் கொத்தனார் வாழ்க! வாழ்க!

37 comments:

  1. //சங்கத்தின் சகல வித உறுப்பினர்கள் சார்பாக அன்பு அண்ணன் இலவசக்கொத்தனார் அவர்களுக்கு
    "பின்னூட்டப் புயல்"
    என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவிக்கிறோம்.
    பின்னூட்டப் புயல் கொத்தனார் வாழ்க! வாழ்க!//

    இம்மாதத்தை வ.வா.ச. வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய மாதமாக சிறப்பித்துத் தந்த நண்பர் இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். வெறும் நன்றி போதாதில்ல...அதனால...
    "நன்றி மீண்டும் வருக"

    ReplyDelete
  2. தலைவா கொத்ஸ் பின்னிட்டீங்க...

    இன்னியிருந்து நம்ம ரசிகர் மன்ற போஸ்ட்டர்ல்ல எல்லாம் பின்னூட்டப் புயல்ன்னு பெரிய எழுத்துல்ல பட்டம் போட்டு அடிச்சுருவோம் ஓ.கே வா?

    ReplyDelete
  3. சங்கத்தின் தங்கத் தளபதி நாமக்கல் சிபியாரின் வார்த்தைகளை நானும் வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

    " பின்னூட்டப் புயல் கொத்தனார் வாழ்க! வாழ்க! "

    ReplyDelete
  4. பின்னூட்ட புயல் இலவச கொத்தனாருக்கு வாழ்த்துக்கள். அவ்வன்னமே,
    பின்னூட்ட சுனாமி என்ற பட்டத்தை நாகை சிவாவிற்கு வழங்கினால் மிக பொருத்தமாக இருக்கும்

    ReplyDelete
  5. கோவியாரே சொல்லிவிட்டீர்கள்.. அதற்கு ஒரு விழா ஏற்பாடு பண்ணிருவோம்... கமிட்டி போட்டு இன்னிக்கே வசூல் ஏற்பாடு பண்ணிருவோம்... ஓ.கேவா

    ReplyDelete
  6. சங்கத்தின் புத்தம் புது மாப்பிள்ளையாம்.. அன்பின் செல்லப் பிள்ளையாம் துபாய் ராஜாவே வா....
    உன்னை மீண்டும் வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

    ReplyDelete
  7. "பின்னூட்ட புயல்"
    அடடா என்னே அற்புதமான பட்டம்.
    இனி கொத்ஸ் அவர்கள் "பின்னூட்ட புயல்" என்றே விளிக்கப்படுவார்.

    ReplyDelete
  8. வரவேற்பிற்கு நன்றி தேவு.
    இனி சங்க ஜோதியில ம்றுபடியும் குதிச்சு கொழுந்துவிட்டு எரியவேண்டியது தான்.

    ReplyDelete
  9. இந்த மாதத்தின் அட்லாஸ் வாலிபருக்கு நன்றிகள் பல கோடி.

    அவருக்கு நன்றி நல்கிய தளபதியாருக்கும் நன்றிகள் பல கோடி.

    கொத்துஸ்க்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல கோடி.

    ReplyDelete
  10. //இனி கொத்ஸ் அவர்கள் "பின்னூட்ட புயல்" என்றே விளிக்கப்படுவார். //
    அதை நான் வழி மொழிகின்றேன்.

    ReplyDelete
  11. திரு கொத்துஸ்,
    அவர்களுக்கு இங்கு ஒரு சின்ன விளக்கம்.
    உங்களுக்கு பின்னூட்ட சுனாமி,
    பின்னூட்ட சூறாவளி,
    பின்னூட்ட ஹரிக்கேன்
    போன்ற பல பெயர்கள் பரிந்துரைக்கு வந்தது. இந்த சுனாமி, சூறாவளி போன்றவைகள் எப்பொழுதாவது ஒரு முறை வருவது. புயல் தான் அடிக்கடி வரும் என்பதால் உங்களுக்கு பின்னூட்ட புயல். இந்த புயல் தொடர்ந்து சங்கத்தில் வீச வேண்டும் என்பது தான் எங்க ஆவல்.

    ReplyDelete
  12. //பின்னூட்ட சுனாமி என்ற பட்டத்தை நாகை சிவாவிற்கு வழங்கினால் மிக பொருத்தமாக இருக்கும்//

    புலி! இந்தப் பின்னூட்டம் போட வைக்க ஒனக்கு எம்புட்டு செலவாச்சு?
    :)

    ReplyDelete
  13. கொத்ஸுக்கு பின்னூட்டப் புயல்ன்னு பட்டமா? பொருத்தமான பட்டம் தான்? மகிழ்ச்சியுடனும் ஒளவியத்துடனும் வழிமொழிகிறேன்.

    ஆனால் அவர் அந்தப் பட்டத்தை இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்துவிடுவார் போலிருக்கிறதே. செல்வன் பதிவைப் பார்த்தீர்களா? இவரும் அவரும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் (1) இவரே அவராக இருக்க வேண்டும் (அ) (2) இவருடைய 'பின்னூட்டப் புயல்' பட்டத்தை அவருக்கு விட்டுக் கொடுக்க இவர் தயாராகிவிட்டாராக இருக்க வேண்டும்.

    வாழ்க பின்னூட்டப் புயல் இலவசக் கொத்தனார். வாழ்க சங்கத்து இளவல்கள்.

    ReplyDelete
  14. //புலி! இந்தப் பின்னூட்டம் போட வைக்க ஒனக்கு எம்புட்டு செலவாச்சு?
    :) //
    அட நீ வேற தல, அவரு ஏதோ ஒரே ஊருக்காரன் என்ற பாசத்தில கூவி இருக்காரு.
    நாம எல்லாம் இது போல செய்வோமா?

    ReplyDelete
  15. :: DONT COMMENT ON THIS::
    Template Testing
    Template Testing
    Template Testing
    Template Testing
    :: DONT COMMENT ON THIS::

    ReplyDelete
  16. :: DONT COMMENT ON THIS::

    வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  17. "பின்னூட்டப் புயல்"
    கொத்த்ஸுக்கு அருமையான பெயர் :)) கொதஸ் புடிச்சிருக்கா? சொல்லுங்கப்பு !

    ReplyDelete
  18. நன்றி கூரும், கூறும் தமிழர் பண்பாட்டைத் தவறாது கடைபிடித்த, நாமக்கல்லாருக்கு, "நன்றித்திலகம்" எனும் பட்டத்தை சிபாரிசு செய்கிறேன்!

    இனிமே மாசாமாசம் வேற நன்றி சொல்லணுமே!
    அதுக்குத்தான்!

    நல்ல பொருத்தமான பட்டம்,முதல் அட்லாஸ் வாலிபருக்கு!!

    ReplyDelete
  19. பின்னூட்டப் புயல், கொள்கை வேந்தன் கொத்ஸ் வால்க, வால்க, வால்க..

    //:: DONT COMMENT ON THIS:: //

    பின்னூட்டத்துக்கெல்லாம் டிஸ்கியா...நேரக் கொடுமை..

    ReplyDelete
  20. எல்லாரும் பேசி முடிச்சுட்டீங்களா? இப்போ நான்..

    முதற்கண் நன்றிக்கு நன்றி.
    அதன்பின் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சங்கத்தினருக்கு நன்றி.
    பதிவைப் படிச்சவங்களுக்கு நன்றி.
    பின்னூட்டம் போட்டு பின்னிய நண்பர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
    பதிவுகள் போட இன்ஸ்பிரேஷனாய் இருந்த சிபி, தெகா, எஸ்.கே மற்றும் போலீஸ்கார் - உங்களுக்கு ஒரு தனி நன்றி.
    பதிவு போட உதவிய இளா, தேவ், பொன்ஸ், எஸ்.கே., சிபி - உங்களுக்கு இன்னும் ஒரு நன்றி.
    ஆக மொத்தம் எல்லாருக்கும் நம்ம பின்னூட்டம் அளவு நன்றிப்பா.

    ReplyDelete
  21. சரி விஷயத்துக்கு வருவோம். பட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இருக்கட்டும்.

    ஒரு வேண்டுகோள். இந்தப் பட்டத்தை போடும் போது முழுசா போடுங்க. அப்புறம் முகமுடி பதிவுல ஒருத்தர் கேன புண்ணாக்குன்னு சொல்ல வந்து அடி வாங்குன கதையைப் படிச்சிருப்பீங்க.

    அதனால இந்த பட்டத்தின் சுருக்கம் எல்லாம் வேண்டாம். என்ன நான் சொல்லறது?

    ReplyDelete
  22. இப்போ நாம இந்த பதிவில் இருக்கற உகு லிஸ்ட பாக்கலாம்.

    1அ) பதிவு போட்டது ஜூலை 30. ஆனா ஜூலை இருப்பது 31 நாட்கள். ஏனிந்த அவசரம்?

    1ஆ) நான் கடைசிப் பதிவு போடுமுன் நன்றி கூறியதற்கு என்ன காரணம்?

    2) "அட்லாஸ் வாலிபருக்கு அட்லாஸ்ட் நன்றி!" - இது தலைப்பு. என்னமோ நன்றி சொல்ல காத்துக்கிட்டு இருந்தா மாதிரி இல்ல. சில பேச்சாளர்கள் மேடைக்கு வரும் போதே கை தட்டி உட்கார வைப்பாங்களே, அந்த மாதிரி?

    3) //பின்னூட்ட எண்ணிக்கையில் அவரது பழைய சாதனைகளையும் முறியடித்து, சங்கத்திலும் சாதனையை ஏற்படுத்தி சங்கத்தை சிறப்பித்திருக்கிறார்.//

    என்னமோ இவங்க சங்கத்துல நாம பதிவு போட்டதுனாலதான் இப்படின்னு பீத்திக்கற மாதிரி இல்லை?

    4) //சங்கத்தின் தலை கைப்பு மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான போர்வாள் தேவ், வேளாண் தோழர் விவசாயியார், புதரகத் திரும்பி ஆற்றலரசியார் பொன்ஸ், எள் என்றாலே நினைவுக்கு வரும் எண்ணெய் போல் ஜொள் என்றாலே நினனவில் வரும் பாண்டித்தம்பி ஆகியோர் சார்பாகவும், //

    சங்கப் பலகையில் இருக்கும் நாகை சிவா மற்றும் ராசாவின் பெயர்கள் ஏன் காணவில்லை? சங்கத்தில் பிளவு என்ற என் சந்தேகம் சரிதானா? நாகையார் எனக்கு அதிக அளவில் பின்னூட்டமிட்டதால் கட்டம் கட்டப்பட்டாரா? அதே கட்டத்தில் தேவும் இளாவும் ஏன் கட்டப்படவில்லை?

    தொடரும்.....

    (மூச்சு முட்டுதப்பா)

    ReplyDelete
  23. 5) /அலைகடலென திரண்டிருக்கும் சங்கத்தின் ஏனைய சிங்கங்களின் சார்பிலும் இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் கோடானு கோடி நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்படுக்கிறேன்.//

    கோடி நன்றி சொல்பவர்களால் ஏன் 600 பின்னூட்டம் கூட போடமுடியவில்லை? அப்படி பின்னூட்டம் வரும் பதிவில், இது போதும், இது போதுமென கலகம் மூட்டியது ஏன்?

    7) //சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரை மனதார மகிழ்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அரை மனதோடு, சென்று வருக, குட் பை, டாட்டா என்றெல்லாம் சொல்லி பிரியா விடை தரும் இத்தருணத்தில் //

    நான் கிளம்பறேனாம், இவருக்கு மனதார மகிழ்ச்சியாம், ஆனந்தக் கண்ணீராம், அவசர அவசரமா சென்று வருக, குட் பை, டாட்டா என்றெல்லாம் சொல்லி பிரியா விடை தராராம். என்ன அக்குறும்பு பாத்தீங்களா?

    8) //சங்கத்தின் சகல வித உறுப்பினர்கள் சார்பாக //

    இந்த ஆப்பு எனக்கு இல்லை. கண்மணிகள் உங்களுக்கு. சங்கத்தின் சகல உறுப்பினர்கள்ன்னு சொன்னா என்ன? அது என்ன சகலவித உறுப்பினர்?

    9) ஒரு சின்ன பதிவுல இவ்வளவு உகு இருந்துன்னா இத்தனை பின்னூட்டத்துல எத்தனை இருக்கோ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  24. மத்தபடி வாழ்க வளர்க எல்லாம் சொன்னவங்களுக்கு பதில் வாழ்க! வளர்க!

    ReplyDelete
  25. பின்னூட்டப் புயலின் ஒவ்வொரு ஆணித்தரமான கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமையும் கட்டுப்பாடும் வ.வா.ச.வுக்கு இருக்கிறது என நாங்கள் கோரிக்கை வைத்திடுகின்ற வேளையிலே,

    இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் வரும், எப்படியெலாம் சப்பைக்கட்டு கட்டப்படும் என்கின்ற கொடுமையான விஷயத்தை நாம் நினைத்துப் பார்ப்போமானால்,

    நமக்குள் மிஞ்சுவது வருத்தமும், வேதனையும், கோபமும், ஆத்திரமும்,
    மட்டுமே என்கின்ற உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதனை

    இந்நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதனை

    உங்களுக்கெல்லாம் மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....!

    எங்கேப்பா... ஒரு சோடா ஒடை!

    :))

    ReplyDelete
  26. எல்லாரும் நல்லா இருங்க.

    வாழ்த்து(க்)கள்

    ReplyDelete
  27. //பதிவு போட்டது ஜூலை 30. ஆனா ஜூலை இருப்பது 31 நாட்கள். ஏனிந்த அவசரம்? //
    சிபி, ஓவர் டு யூ..



    நீங்க பதிவு போட்டா 1000 பின்னூட்ட வரும் அது மட்டுமே ஒரு மாசம் ஓடும், அதுக்கு நாங்க இடைஞ்சலா இருக்க கூடாது பாருங்க அதுக்குதான் ஒரு அட்வான்ஸ் நன்றி சொல்லிட்டோம். நீங்க பின்னூட்ட குதிரைய பொறுமையா(அ) பெருமையா ஓட்டலாம் பாருங்க.

    ReplyDelete
  28. //நான் கடைசிப் பதிவு போடுமுன் நன்றி கூறியதற்கு என்ன காரணம்? //

    நீங்க பதிவு போட்டா 1000 பின்னூட்ட வரும் அது மட்டுமே ஒரு மாசம் ஓடும், அதுக்கு நாங்க இடைஞ்சலா இருக்க கூடாது பாருங்க அதுக்குதான் ஒரு அட்வான்ஸ் நன்றி சொல்லிட்டோம். நீங்க பின்னூட்ட குதிரைய பொறுமையா(அ) பெருமையா ஓட்டலாம் பாருங்க.

    ReplyDelete
  29. //சில பேச்சாளர்கள் மேடைக்கு வரும் போதே கை தட்டி உட்கார வைப்பாங்களே//

    யாரு நீங்க? சொன்னா ஒக்காந்துட்டுதான் மறுவேலை பார்ப்பீங்க இல்லே, டமாசு டமாசு

    ReplyDelete
  30. /இவங்க சங்கத்துல நாம பதிவு போட்டதுனாலதான் இப்படின்னு பீத்திக்கற மாதிரி இல்லை? //
    சே சே.

    ReplyDelete
  31. //சங்கத்தில் பிளவு என்ற என் சந்தேகம் சரிதானா//
    அப்பீட்டேய்

    ReplyDelete
  32. //(மூச்சு முட்டுதப்பா) //
    calgary சொன்ன பானக்களை உபயோகப்படுத்தலாம்

    ReplyDelete
  33. //ஆக மொத்தம் எல்லாருக்கும் நம்ம பின்னூட்டம் அளவு நன்றிப்பா//
    அவ்வளவுதானா?

    ReplyDelete
  34. //எங்கேப்பா... ஒரு சோடா ஒடை! //
    ஒரு சோடா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

    ReplyDelete
  35. //இந்நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் //
    பதில் சொன்ன பின்னாடியுமா?

    ReplyDelete
  36. //நல்ல பொருத்தமான பட்டம்//
    நன்றிங்க SK

    ReplyDelete
  37. [[[[[[[நேரம் கிடைத்தபடியால் உங்கள் கேள்விகளுக்கு இப்போ வருது பதில்]]]]]]]

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)