Saturday, July 29, 2006

நாங்களும்தான் படம் போடுவோம்

படம் போடுற காலமாகிப்போச்சுய்யா, இளவஞ்சி, கைப்பு, பொன்ஸ், "calgary" சிவா, பாலபாரதி அப்படின்னு எல்லாருமே இப்போ இப்படித்தான் படம் பத்தி பேச ஆரம்பிச்சு இருக்காங்க. அதுக்காக், நாமும் படம் போட்டா நல்லாவா இருக்கும். ஈ அடிச்சான் காப்பின்னு சொல்லிரமாட்டாங்க?. நமக்கு கலாய்த்தல் தான் தெரியும், படம் புடிக்க தெரியுமா? அவுங்க போட்ட படத்துக்கு ஏத்தமாதிரி நாமும் ஒரு போட்டி படம் போட்டா எப்படி இருக்கும். அவுங்க போட்ட பதிவுல இருந்து எடுத்து துப்பறிஞ்சு சில வரிகளை சுட்டு, அதுக்கு தகுந்தா மாதிரி படம் போட்டு இருக்கோம். திட்டறதுன்னாலும், அடிக்கிறதுன்னாலும் அந்தந்த பதிவுல போயே செய்ங்க, இதெக்கெல்லாம் நாங்க பருப்பில்லை சே பொறுப்பில்ல, ஆமா சொல்லிபுட்டோம்.

பொண்ணு போட்டிருந்த டி-சர்ட்ல இருந்த கேப்ஷன படிக்க நம்ம பாண்டி போட்ட பல்டி(சொடுக்கினா பதிவு வரும்)




கிறுக்கு புடிச்ச கைப்பு(சொடுக்கினா பதிவு வரும்)






அப்புறம் கோவத்துல கடிச்சி வெச்சிடுவேன் சொல்லிப்பிட்டேன்- சிபி(சொடுக்கினா பதிவு வரும்)






டெல்லி பிரதமர் வீட்டுல நடந்த காவல் அத்துமீறல தொ.கா. வில கண்டு களிச்ச தேவ் (சொடுக்கினா பதிவு வரும்)






தேன்கூடு போட்டியில கெலிச்சது தெரிஞ்சவுடன் கேரளாவுல ஆற்றலரசி பொன்ஸ்க்கு நடந்த பாராட்டு விழா(சொடுக்கினா பதிவு வரும்)





கொசுக்களை கொல்வது எப்படின்னு படம் போட்டு கதை சொன்ன நாகை சிவாவைப்பத்தி பேசினாலே கொச்சுக்களுக்கு சிக்குன் குனியா வந்துருதாம்(சொடுக்கினா பதிவு வரும்)


28 comments:

  1. வெவசாயின்னு ஒருத்தரு தேன்கூடு போட்டியில கெலிச்சதுக்குக் கிடா வெட்டி பிரியாணி சமைச்சு ஊருக்கு விருந்து வெச்சதும் பிராந்தியால ஊரைக் கழுவிவுட்ட படமும் எங்கேய்யா?

    ReplyDelete
  2. // பிராந்தியால ஊரைக் கழுவிவுட்ட படமும் எங்கேய்யா?
    //

    THAZHAI!
    BRANDHIYALAYA (HAIK) VANTHIYALAYA? (HAIK)

    ReplyDelete
  3. //THAZHAI!
    BRANDHIYALAYA (HAIK) VANTHIYALAYA? (HAIK)//

    டர்ட்டி பாய்!

    சீ...சீ...தூ...தூ...போ...போ...
    :)

    ReplyDelete
  4. //BRANDHIYALAYA (HAIK) VANTHIYALAYA? (HAIK) //
    வாந்தியால் ஏற்பட்ட அசுத்தங்களை பிராந்தியை வைத்து கழுவி விட்டார்.
    வாந்திக்கு காரணம் என்னவென்று எனக்கு தெரியல. விருந்தில் "கலந்தவர்கள்" சொல்லாம்.

    ReplyDelete
  5. இளா, நல்லாவே படம் காட்டி இருக்கிங்க.
    அது சரி, அது சரி சின்குன் குனியா மனுசனுக்கு தானே வரும் என்று நினைத்து இருந்தேன். அது கொசுக்கு வருதா. தல, அடுத்த ஆராய்ச்சி கட்டுரைக்கு மேட்டரு ரெடி.
    நீயா இல்ல நானா ?

    ReplyDelete
  6. நல்லாத்தான் படங்காட்டறீங்க போங்க.

    :-D

    ReplyDelete
  7. இளா,
    நல்லாத்தான் படம் காட்டி இருக்கிங்க.

    நம்ம பதிவையும் பரிந்துரை செய்து இருக்கிங்க நன்றி மக்களே(கொஞ்சம் ஒழுங்கா எழுதணும் இல்லாட்டி பெரிய படையே வந்து டின் கட்டுவாங்க போல இருக்கே)..

    ReplyDelete
  8. //No Comments!
    I'm the Escape! //

    அப்புறம், ஏன்னேன் இப்படி எல்லாருமே எஸ்கேப் அகிட்டா யாருதான் பின்னூட்டம் போட வருவாங்க.

    ReplyDelete
  9. //வெவசாயின்னு ஒருத்தரு தேன்கூடு போட்டியில கெலிச்சதுக்குக் கிடா வெட்டி பிரியாணி சமைச்சு ஊருக்கு விருந்து வெச்சதும் பிராந்தியால ஊரைக் கழுவிவுட்ட படமும் எங்கேய்யா? //
    எங்க ஊர்ல பிராந்தி குடிக்கிற அளவுக்கு வசதி வரலை சாமி, ஒன்லி நாட்டு கட்டை(விவசாயியிடம் மனசாட்சி: பாண்டி பதிவு அதிகமா படிக்காதேன்னு சொன்னா கேட்டாதானே) அட சே ஒன்லி நாட்டு சரக்குதான்.

    ReplyDelete
  10. //கழுவிவுட்ட படமும் எங்கேய்யா//
    அவுட் ஆப் போகஸ்ஸா இருக்குமோ?

    ReplyDelete
  11. //நம்ம பதிவையும் பரிந்துரை செய்து இருக்கிங்க நன்றி மக்களே//
    சிரிப்பா எழுதினா இங்கே பரிந்துரை செய்யப்படும்னு மிரட்டி ஒரு பலகை வெச்சுரலாமா?

    ReplyDelete
  12. //கட்டுரைக்கு மேட்டரு ரெடி//
    கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா.

    ReplyDelete
  13. //டர்ட்டி பாய்!//
    கைப்பு இது என்ன இங்கிலீஸ் நிறைய வருது? ஒரு டவுட்தான், தேவு, என்னான்னு கேளு

    ReplyDelete
  14. //டர்ட்டி பாய்!//
    தமிழ்ல இதுக்கு ஆய் பயன்னு சொல்லுவாங்ய.

    ReplyDelete
  15. //கிடா வெட்டி பிரியாணி சமைச்சு//
    //BRANDHIYALAYA (HAIK) VANTHIYALAYA? (HAIK)//

    ஆவ்வ்வ்வ்வ்வ் போயி உவ்வே வந்துருச்சு

    ReplyDelete
  16. //நல்லாத்தான் படங்காட்டறீங்க போங்க//
    எல்லாரும் புகைப்பட பொட்டி வாங்கி, காடு, மேடு,மலை எல்லாம் அலைஞ்சு படம் புடிச்சு பதிவு போட்டாங்க. நாம் இங்கனயே உக்காந்துகிட்டு, அவுங்க படத்துக்கு போட்டியா கூகுள் படத்துல நல்ல நக்கல் படமா புடிச்சு போட்டு கலாய்ச்சது....

    ReplyDelete
  17. மறந்து போன பதிவுக்கு ஒரு உயிரூட்டல்.

    ReplyDelete
  18. //சீ...சீ...தூ...தூ...போ...போ...///
    இது என்ன பாஷை? சிதூர்கட் பாஷையா?

    ReplyDelete
  19. //டர்ட்டி பாய்!//
    தல, நம்க்கு ஆங்கிலம் ஆவாது. சொன்னா கேளு, இல்லாட்டி தமிழ் பாதுகாப்பு குழுகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்.

    ReplyDelete
  20. //எங்க ஊர்ல பிராந்தி குடிக்கிற அளவுக்கு வசதி வரலை சாமி, //
    எங்க இளா, உங்க ஊரில டாஸ்மாக் இல்லையா. என்னய்யா இது கொடுமையா இருக்கு. டாஸ்மாக் இல்லாத ஊரில் குடி இருக்க வேணாம் சொல்லுறாங்க. இதுக்கு எல்லாம் யாரும் போராட்டம் நடத்த மாட்டாங்களா உங்க ஊர்ல.

    ReplyDelete
  21. //அட சே ஒன்லி நாட்டு சரக்குதான்.//
    நாட்டு சரக்குனா, நீங்க எந்த நாட்டு சரக்க பத்தி சொல்லுறீங்க.
    தென்னையா, பனையா, இல்ல வேற எதாச்சுமா.
    ஏன் கேட்குறேனா, எனக்கு அம்புட்டு அறிவு பத்தாது. அதான்

    ReplyDelete
  22. //பொண்ணு போட்டிருந்த டி-சர்ட்ல இருந்த கேப்ஷன படிக்க நம்ம பாண்டி போட்ட பல்டி//
    பாண்டி என்னமா ஆச்சு, பல்டி எல்லாம் அடிக்க ஆரம்பித்து விட்டாய். நீ தான் எந்த பொண்ணு எந்த டி-சர்ட் போட்டு இருந்தாலும் அதில் இருக்கும் வாசகத்தை ஒரு மைல் தூரத்தில் இருந்தே படிக்கும் வரம் வாங்கியவன் ஆச்சே. அப்புறம் எதுக்கு பல்டி எல்லாம் அடிக்குற.
    எனக்கு புரியலம்மா, கொஞ்சம் விளக்கம் ப்ளிஸ்.

    ReplyDelete
  23. //(சொடுக்கினா பதிவு வரும்)//
    எங்க இளா! சொடுக்கினா பதிவு வரும், சொடுக்கினா பதிவு வரும் சொன்னீங்க. நானும் கை வலிக்க வலிக்க சொடுக்கி பாத்தேன். எந்த பதிவும் வரல, என்னனு கொஞ்சம் பாருங்களேன். கிறுக்குபிட்ச்ச தலயை பார்க்கனும் நான்.....

    ReplyDelete
  24. //சிரிப்பா எழுதினா இங்கே பரிந்துரை செய்யப்படும்னு மிரட்டி ஒரு பலகை வெச்சுரலாமா?//

    அட வைங்கப்பூ

    ReplyDelete
  25. //தேவு, என்னான்னு கேளு//

    தல ஒணாணுக்கு ஓசியிலே இடியாப்பம் வாங்கிக் கொடுத்து விட்டு கழிய விட்டு கப்ன்னு கேம்ராவில்ல படம் எடுக்கும் போதே நான் எதுவும் கேட்கல்ல இப்போ என்னத்தக் கேட்குறது..

    சீ சீ தல ஒரு நாட்டி பாய்:)

    ReplyDelete
  26. :: DONT COMMENT ON THIS::
    Template Testing
    Template Testing
    Template Testing
    Template Testing
    :: DONT COMMENT ON THIS::

    ReplyDelete
  27. //
    தல ஒணாணுக்கு ஓசியிலே இடியாப்பம் வாங்கிக் கொடுத்து விட்டு கழிய விட்டு கப்ன்னு கேம்ராவில்ல படம் எடுக்கும் போதே நான் எதுவும் கேட்கல்ல இப்போ என்னத்தக் கேட்குறது..
    //

    இதேயெல்லாமா சொல்லுவாங்க இங்க ??

    வெட்டுகிளியை படம் பிடிக்க போனப்ப நடந்ததை சொல்லுவியா அத உட்டுட்டு.............

    சின்னபுள்ள தனமாவுல்ல இருக்கு...

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)