Wednesday, July 5, 2006

ஒண்ணியுமே புரியலப்பு


ஹ்ம்ம், நேத்து சாயங்காலம் வய காட்டிலிருந்து வீட்டுக்கு வந்த விவசாயி முதல்ல ஒரு கேள்வி குறி படத்த போட்டுட்டு போய்டாரு,(சோத்தாங்கை பக்கம் பாருங்க, சிட்டுகுருவி கணக்கா குதிச்சு விளையாடுது) அப்புறமா சங்கத்து பக்கம் வந்த பாண்டி "ஜூலை 7ம் தேதி இந்த இடத்தில் ...... ஆங் சொல்ல மாட்டோம்ல, சொல்ல மாட்டோம்ல காத்திருங்கப்பு"அப்படின்னு காத்திருக்க சொல்லிட்டு அவரும் போய்ட்டாரு.

என்னாத்த பண்ண போறாங்களோன்னு, நைட்டு ஃபுல்லா யோசிச்சதுல ஒண்ணியுமே புரியலப்பு. ஒரு வழியா இம்சை படம் வரப்போகுது, இந்த நேரத்துல என்னய்யா புதுசா? ஏற்கனவே வாங்கின ஆப்பு போதாதுன்னு புதுசா என்னப்பு? தாங்குமா ஒடம்பு? இப்படி வாயில விரல கடிச்சுகிட்டு இங்கன கிடக்கேன் சங்கத்து மக்கள் சொல்லவே மாட்டேன்னு அடம் புடிக்கிறாய்ங்க.


ஏம்பு படிக்கிற உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சீக்கிரமா சொல்லுங்க ஒரு நாள்தேன் இருக்கு...

9 comments:

  1. வெள்ளிக் கிழமை காண்க!!! ;)

    ReplyDelete
  2. ஆழ்ந்த சிந்தனையில் அதி மேதாவி.
    அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே
    7 இன்னா 17 வரை காத்திருக்கலாமே

    ReplyDelete
  3. வெள்ளித்திரையில் காண்க !

    ReplyDelete
  4. //தாங்குமா ஒடம்பு? //
    உனக்கு தான் எதையும் தாங்கும் உடம்பு ஆச்சே.....
    எல்லாம் தாங்கும். ரொம்ப அலட்டிக்காத.....

    ReplyDelete
  5. //வெள்ளிக் கிழமை காண்க!!! ;) //

    //ஆழ்ந்த சிந்தனையில் அதி மேதாவி.
    அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே
    7 இன்னா 17 வரை காத்திருக்கலாமே//

    //வெள்ளித்திரையில் காண்க ! //

    //உனக்கு தான் எதையும் தாங்கும் உடம்பு ஆச்சே.....
    எல்லாம் தாங்கும். ரொம்ப அலட்டிக்காத..... //

    என்னப்பா நடக்குது இங்கே? ஆளாளுக்கும் ஒன்னொன்னு சொல்றீய? ஒண்ணியுமே புரியலப்பு...

    ReplyDelete
  6. அதான் ஏற்கனவே சொல்லியாச்சே, அப்புறம் என்னா இங்கேயும் வந்து புலம்ப வேண்டி கெடக்கு

    ReplyDelete
  7. $$
    "ஜூலை 7ம் தேதி இந்த இடத்தில் ...... ஆங் சொல்ல மாட்டோம்ல, சொல்ல மாட்டோம்ல காத்திருங்கப்பு"
    $$

    எந்த வருஷமுனு சொல்லாம போயிட்டியேப்பு ஹும்

    ReplyDelete
  8. ஏழா ஏழரையா தெளிவா சொல்லுங்கப்பு!!!

    ReplyDelete
  9. //ஜூலை 7ம் தேதி இந்த இடத்தில்//

    புரிஞ்சு போச்சு...உலகத்திலயே பெரிய ஆப்புக்கு ஆப்பிரிக்கால ஆர்ட்ர் குடுத்து இருக்கு..அது அன்னைக்குதான் டெலிவரி...தல எதாவது ஆடு,கோழி தின்னு கொஞ்சம் உடம்ப தேத்தி வை...

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)