Saturday, May 27, 2006

அரிய வாய்ப்பு!!!!!!

வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்னும் சங்கம் கண்டு,

அதை கல்கி கண்ட சங்கமாக்கி,

இந்தியா, சூடான், துபாய், பெரு, அமெரிக்கா என்னும் 'கண்டங்கள்' கண்ட கண்டமாக்கிய சாரி, சங்கமாக்கிய

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய சிங்கங்களே!!!!!

இப்போது வந்திருக்கிறது ஒரு அரிய வாய்ப்பு.. இதுவரை வலைப்பூக்களில் மக்களின் முகமகிழ்ச்சிக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நம்மையும் ஆராய்ச்சி செய்கிறேன் என்று மதுமிதா கிளம்பியுள்ளார்..

உடலை ஆராய்ச்சிக்குத் தந்து ஏனையோரின் உயிர்காக்கும் மருத்துவப் பணிக்கு உதவும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட இவ்வுலகில், நம்ம மதுமிதா கேட்பது என்ன? என்ன?? என்ன???

அட, என்னங்க மது? என்ன கேட்டீங்க? மறந்து போச்சே!!

ஆங்.. மதுமிதா கேட்பது வெறும் விவரங்களைத் தான்.. பதிவர்களின் விவரங்களை..

என்ன விவரங்கள்?!! எல்லாம் தெரிந்தவை தான்..

அட, உங்களுக்குத் தெரிந்தவை, மற்றவர்களுக்கு அதிகம் தெரியாதவை..

"கேள்வி கேட்கத் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது" என்று சொல்லும் சங்கத்தின் சிங்கங்களே, என்ன செய்ய?!!! , "கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?" என்று நம்ம மது கேட்காமல் விட்டு விட்டார்களே!!

என்னென்ன கேள்விகள் என்பதை இந்தச் சுட்டிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்..

என்னென்ன பதில் சொல்லலாம் என்று ஒரு மாதிரிக்கு, நம் சங்கத்தில் இந்தச் சோதனையை ஏற்கனவே கடந்து வந்த கண்மணிகளின் வீட்டுக்குச் சென்று பார்த்து, (காப்பி அடிக்காதீங்கப்பூ... அப்படியே அடிச்சாலும் பேரு ஊராவது யோசிச்சிப் போடுங்க, அப்படியே வெட்டி ஒட்டாதீங்க தம்பிகளா :)) எழுத கைடு:

1. சித்தூர்காட் சிறுத்தை தல கைப்பு
2. புதரகம் போய் (ஆற்றிக் குடிக்கக் காப்பி கிடைக்காவிட்டாலும்) சங்கப் பணியைத் தவறாது ஆற்றும் பொன்ஸ்
3. நாகை மாவட்ட கொ.ப.செ. சூடான்(ன) சிவா
4. வட அமெரிக்க மேற்குக் கிளைச் செயலாளர் சந்தோஷ்

ஆகவே கண்மணிகளா, எழுதி முடித்த விடைத்தாளை இன்விஜிலேட்டர் கிட்ட கொடுக்காம அப்படியே வந்துருவீங்களே, அது மாதிரி இல்லாமல், இதை எழுதி முடித்தபின், மதுமிதா அக்காகிட்ட பத்திரமாக் கொண்டு போய்ச் சேர்த்துட்டு, அப்புறம் நம்ம சங்கப் பலகைலயும் ஒருவார்த்தை போட்டுடுங்க.. அப்போத்தான் நம்ம சங்க மக்கள் வந்து பார்த்து ஆதரவு கொடுக்க வசதியா இருக்கும்!!!

இத்துடன் சோடா குடிக்கும் வழக்கம் இல்லாததால், நல்லா ஐஸ்போட்டு ஒரு பாதாம் பால் (சிக்கனமா ஒரு 10 டாலரில் போதும், குங்குமப்பூ, பனங்கற்கண்டு எல்லாம் போட்டிருந்தாலும் பரவாயில்லை) கொண்டுவருமாறு சொல்லிக் கொண்டு, என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்..

பின் குறிப்பு (அதாங்க, மைக்கைப் பிடுங்கினதுக்கு அப்புறமும் பேசினது): வ.வா.சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டும் தான் என்பதில்லை,
க.பி.க. கழகத்தினர்,
வா.வ.ச வினர்(அட, கவிதா, நீங்களும் நானும் மட்டும் இருக்கோமே, அந்த சங்கம் தான்) ,
ப.ம.க வினர் மற்றும்
எங்கள் சங்கத்துக்கு அடிக்கடி எட்டிப் பார்த்து
ரசித்து விட்டு மட்டும் போகும் (அட ஒரு நெனப்புத்தாங்க!! ) மற்றவர்களும்
மதுமிதாவுக்குப் பதில் சொல்லலாம்...

(கைப்பு ஸ்டைலில் படிக்கவும்) : அவங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க.. யார் எத்தனை பதில் சொன்னாலும் தாங்குவாங்க!!!

தனிக் குறிப்பு: பெருசு: இது உமக்குத் தான்.. அப்படியே கனாக் கண்டுகிட்டு வெண்பாடிகிட்டு இருக்காதீர்.. சீக்கிரமா, ஜூன் 10க்குள்ள முடிச்சி கொடுங்க!!

14 comments:

  1. ஆஹா, பொன்ஸ், கண்டு கொண்டேன் உங்க சதி வேலையை, மெதுவாகக் கவிதாவை (அவங்க இந்த வம்பே வேண்டாமுனு பேசறதே இல்லை ஒருக்கால் நம்ம புகழைப் பார்த்துப் பயந்திருப்பாங்களோ? இருக்கும் இருக்கும்) என் இடத்திற்குக் கொண்டு வரும் உங்க திட்டம் அம்பலம். இதோ உடனே நானும் போய் மதுமிதாவின் பதிவிற்குத் தேவையான விஷயத்தைக் கொடுத்து ஜோதியில் ஐக்கியம் ஆகிறேன்.

    ReplyDelete
  2. Ha, Ha,Ha, thalaiviyin 50 vathu pathivu veRRikaramaaga velivanthu vittathu. paarkkavum:sivamgss.blogsopt.com.

    ReplyDelete
  3. சொதப்பிட்டீங்களேக்கா.. சரியான சுட்டி கொடுங்க!!
    :))

    http://sivamgss.blogspot.com/2006/05/50.html

    ReplyDelete
  4. அது என்னங்க சூடான சிவா! நான் ரொம்ப கூலுங்க(குடிக்கிற கூல் இல்ல, ஜில் ஜில்)
    இருந்தாலும் சங்கத்தின் பொருப்பில் இருந்து கொண்டு சக சங்கத்தின் உறுப்பினரை(சரி, நாகை மற்றும் சூடானின் கொ.ப.செ) இப்படி கலாய்ப்பது சரியில்லை. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் சங்கத்தில் தனி தனி கோஷ்டிகள் உருவாக வழி வகுத்து விடும் என்பதை தங்களுக்கு பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.(காங்கிரஸ் மாதிரி யா கேட்காதீங்க - அவ்வளவு மோசமாக எல்லாம் நம்ம சங்கத்து சிங்கள் போக மாட்டார்கள்)

    இருந்தாலும் நம்ம பதிவ ஒரு எடுத்துகாட்டா போட்டு, கண் கலங்க வைத்து விட்டீர்க்களே மகளிர் அணி தலைவியே. உன் சங்க பணியே நினைக்கும் போது புல் அரிக்குது.(புதுரு எல்லாம் இங்க கிடையாது, வெரும் மண்ணு தான்.) உன் சேவை தொடர்க.

    ReplyDelete
  5. நாகையைச் சேர்ந்தா சூடான் சிவாவாக இருந்தாலும், சூடானில் இருக்கும் நாகை சிவாவாக இருந்தாலும் இங்க ரூல்ஸ் ஒண்ணு தான்.. சங்கத்தின் சிங்கங்கள் தங்களைத்தாங்களும், கைப்புவைத் தாங்களும், தங்களைக் கைப்புவும்.. மத்தபடி தயிர் சாதத்துக்கு ஊறுகாய்ப் போல மத்த சங்க/கழக எலிகளையும் கலாய்ப்பது தான் மெயின் கொள்கை.. !!!

    சூடான் சிவா, உங்க ரகசியத்தை நான் கண்டு பிடிச்சிட்டேன்.. இன்னிக்குத் தான் பார்த்தேன்.. அதென்னங்க?!! பொண்ணுங்க ஒழுங்கா வண்டி ஓட்ட மாட்டாங்கன்னு சங்கத்துக்கு வெளியில் போய் பொய்ப் பிரசாரம் செய்யறீங்க?!!! இதுக்கே தல கிட்ட சொல்லி உங்க மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்னு இருக்கேன்.. ஜாக்கிரதையா இருங்க!!! சொல்லிபுட்டேன்..

    ReplyDelete
  6. சரி உங்க விரும்பம் போல கலாய்த்து கொள்ளவும்.
    ரகசியம் - நான் கூட என்னமோ ஏதோனு ஒடியாந்து பாத்தா, என்ன இது சின்னபிள்ள தனமா இருக்கு? ஒழுங்கு நடவடிக்கை அது இதுனு பேசிகிட்டு. பீச்சு...
    என்னிக்கு தான் இந்த மகளிரணி உண்மைய ஒத்துகிட்டு இருக்கின்றிங்க???

    ReplyDelete
  7. இது நம்மளோடது

    http://pithatralgal.blogspot.com/2006/05/97.html

    ReplyDelete
  8. http://vivasaayi.blogspot.com/2006/05/blog-post_28.html

    ReplyDelete
  9. //வா.வ.ச வினர்(அட, கவிதா, நீங்களும் நானும் மட்டும் இருக்கோமே, அந்த சங்கம் தான்)//
    அடிக்கடி இப்படி சொல்லி ஞாபகபடுத்துங்க..ஆற்றரசியே இல்லைனா.. நானே என்ன சங்கம் இதுன்னு கேட்டுட போறேன்..?!!

    ReplyDelete
  10. அக்கா ஆர்டர் அம்புட்டுப் பேரும் கரிக்கெட்டா செய்யணும் ஆமா.. லேட்டாப் போடறவங்களும் லேட்டஸ்ட்டாப் போடணும் சொல்லிபுட்டேன்..

    சிறந்தச் சங்கப் பதிவுக்கு அக்கா ஆயிரம் டாலர் ... அம்புட்டும் புதரகப் பணம் தானுங்கத் தருவாய்ங்களாம்.

    ReplyDelete
  11. பொன்ஸ்
    மனமார்ந்த நன்றிங்க
    இவ்வளவு சின்சியரா வேலை செய்யற உங்க சங்கம் வாழ்க பொன்ஸ்

    அதுசரி வ வா சங்கம் சரி
    இப்ப தெரிஞ்சாச்சு:-)

    அது என்ன க பி கா சங்கம்
    தெரியலியே:-(

    ReplyDelete
  12. http://chennaicutchery.blogspot.com/2006/06/blog-post.html

    ReplyDelete
  13. dear friends i read ur blog,i want join ur blog,its possible let me know

    ReplyDelete
  14. dear friends i read your blog very intresting,i want 2 join also,how can i join,let me inform any body

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)