Saturday, June 6, 2009

ரெடிமேட் பின்னூட்டம் வாங்கலீயோ பின்னூட்டம்!!!

அண்ணன் பைத்தியகாரன் அவர்களால் அனைவரும் கதை எழுத ஆரம்பிச்சாச்சு, சரக்கு உள்ளவங்க கதை எழுதுறாங்க நாம என்னா செய்வது?அட்லீஸ் ஊக்கம் கொடுக்கலாம்சிறு கதை எழுதுவர்களுக்கு. எப்படி ஊக்கம கொடுக்கலாம் என்றுதான் இந்த பதிவு.

பார்த்தீங்கன்னா பல பேர் கதையை எல்லாம் படிக்க நேரம் இல்லை அப்புறம் எப்படி பின்னூட்டம் போடுவது என்று போடுவதே இல்லை, அப்படி செய்தால் கதை எழுதும் ஆசிரியர் மனம் என்ன பாடு படும். இதோ சில ரெடிமேட் டெம்ளேட்ஸ்

சிறு கதைக்கு என்றால்

1) எதிர் பாராத முடிவு:) அருமை

2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.

3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

4) //--------------------------------// இந்த வரி மிக அருமை ( ------குள் எதை வேண்டும் என்றாலும் காப்பி பேஸ்ட் செஞ்சுக்குங்க, ஆனால் முடிந்தது or முற்றும் என்ற வரியை காப்பி பேஸ்ட் செஞ்சி அருமை என்று சொல்லிடாதீங்க அடி விழும்).

5) சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

6) ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!


7) யூத் விகடனில் ஒரு பக்கம் உண்டு!

போட்டிக்கான் கதையாக இருந்தால் வேலை மிக சுலபம்.

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை! வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

6):))) அருமை



7) இதுதான் கதை! இதுமட்டுமே கதை!



8) எனக்கு இல்ல சொக்கா எனக்கு இல்ல!




தொடர் கதைக்கு என்றால்

1) ரொம்ப அருமை! மிக இயல்பாக இருக்கிறது!

2) அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங் !!! ( எத்தனை பாகம் எழுதினாலும் இவர் படிக்க போவது இல்லை என்பது வேறு விசயம்)

3) வாரம் ஒரு முறைதானா? :(((( [ வாரம் ஒரு முறைதானே!!! என்று போட்டுவிட கூடாது கவனம் தேவை]

4) ஹீரோ டயலாக சூப்பர் , ஹீரோயின் டயலாக் சூப்பர்

5) நல்ல எழுத்து நடை!

6) கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!

7) சீக்கிரம் தொடருங்கள்!!! [ நிஜ கருத்து சீக்கிரம் முடியுங்கள் ]

8)//-------------------------------// நான் ரசித்த வரிகள்

9) கதை போல் இல்லை சொந்த அனுபவமோ!!!

10) தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர் கதை போல இருக்கு.

11) அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதவும்!!! [ ரொம்ப பெருசா எழுதி இருக்க சின்னதா எழுதுய்யான்னு அர்த்தம்]

12) தொடரும் என்ற வரிக்கு முதல் வரியை காப்பி செய்து, என்ன இப்படி முடித்து விட்டிர்கள் சீக்கிரம் தொடருங்கள்.

13) முடிவை அறிய ஆவலாக உள்ளேன் தனிமடலிலாவது சொல்லவும்!!!

14) முந்தைய பாகங்களை தேடி தேடி படித்தேன் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது உங்கள் தொடர். [ முதல் பாகத்துக்கு இந்த பின்னூட்டம் சரி வராது]

15) மிகவும் விறு விறுப்பாக இருக்கிறது.

16) யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)

46 comments:

  1. மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய்! :))))

    ReplyDelete
  2. //அட்லீஸ் ஊக்கம் கொடுக்கலாம்சிறு கதை எழுதுவர்களுக்கு. எப்படி ஊக்கம கொடுக்கலாம் என்றுதான் இந்த பதிவு.///

    குட்!

    இந்த எண்ணத்துக்கு ஒரு ஊக்கம் கொடுத்திருக்கேன் :)))

    ReplyDelete
  3. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கீங்க...
    தற்போதைய அட்லாஸ் சிங்கம் குசும்பன் - கலக்கலாய் கலாய்!!

    ReplyDelete
  4. //நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.///


    பாஸ் இது என்னமோ ஃபிகரை பார்த்துட்டு போய் முட்டுசந்துல மோதின மாதிரி ஃபீலிங்கல கிடைக்குது :))

    ReplyDelete
  5. /ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!//


    அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அதையே அவுங்க திரும்ப இன்னுமொரு பதிவா போட்டு ஆனந்த விகடன்ல வந்திருச்சேன்னு டெரரர் பண்ணப்போறாங்க :)))))

    பை தி வே ஏன் அவுங்க யூத்துங்க கிடையாதா ஏன் ஆனந்த விகடனுக்கு அனுப்ப சொல்றீங்க ??

    ReplyDelete
  6. //யூத் விகடனில் ஒரு பக்கம் உண்டு!///


    யூத் விகடனில் எந்த பக்கம் ?


    எனக்கு ஒரே பேஜ் தான் தெரியுது :(

    ReplyDelete
  7. /வாழ்த்துக்கள்///


    இது ஜெனரல் டெம்பளட் பாஸ் இன்னும் கொஞ்சம் டெரரா யோசிக்கணுமே?!

    ReplyDelete
  8. போட்டியில் அட்வான்ஸ் பெற வாழ்த்துக்கள்ன்னு போட்டா என்னவாகும்....??? :))))

    ReplyDelete
  9. குசும்பா,

    முடியலை :-) உம்ம அட்டகாசத்துக்கு அளவே இல்லையா? அலுவலகத்துல நாங்க வேலை செய்யவா வேண்டாமா? மானிட்டரை பார்த்து சிரிச்சா தப்பா நினைக்கறாங்கப்பா... ஆபிஸ்ல யாருக்கும் நான் பைத்தியக்காரன்னு தெரியாதே :-)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  10. //எனக்கு இல்ல சொக்கா எனக்கு இல்ல!
    //

    ஆமாம் பாஸ் நீங்க இப்பத்தான் தைக்க அளவு கொடுக்கவே வந்திருக்கீங்க!

    ReplyDelete
  11. // பைத்தியக்காரன் said...

    ஆபிஸ்ல யாருக்கும் நான் பைத்தியக்காரன்னு தெரியாதே :-)
    //

    (தமிழ்பதிவு)உலகத்துக்கே தெரிஞ்சுருக்கு ஆனா ஆபிஸ்ல தெரியலையே என்ன கொடுமை சார்?

    :)))))))

    ReplyDelete
  12. //கடைசி வரியில் அடுத்த பாகத்துக்கான் எதிர்பார்பை தூண்டி விட்டு விடுகிறீர்கள்!//


    ஒவ்வொரு முறையும் கடைசி வரியை மட்டுமே படிக்கிறீங்களேன்னு பதில் அட்டாக் வந்துச்சுன்னா எப்படி பாஸ் எஸ்ஸாகுறது????

    ReplyDelete
  13. //யாராவது அருமை என்று பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் காப்பி பேஸ்ட் செஞ்சு ரிப்பீட்டேய் போடலாம்:)//


    அலுவலகத்தில் தூங்குறவங்களுக்கு இதுதான் பாஸ் ரொம்ப்ப்ப பெஸ்ட் ஐடியா :))))

    ReplyDelete
  14. எல்ல்லாத்தையும் சொல்லிப்புட்டு

    வாவ்

    சூப்பர்

    இதை மறந்துட்டீங்களே மிஸ்டர் குசும்பன்!

    இந்த பதிவு வாவ் ரியலி சூப்பர் :)))

    ReplyDelete
  15. // ரமேஷ் வைத்யா said...

    Hilarious!///


    அட! இதையும் கூட சேர்த்துக்கலாமே!

    ReplyDelete
  16. தொடர்கதைக்கான பின்னூட்டங்கள்
    டபுள் சூப்பர்

    ReplyDelete
  17. //சரக்கு உள்ளவங்க கதை எழுதுறாங்க நாம என்னா செய்வது?//

    துபாய்ல அலோவ்டு கிடையாதா பாஸ்
    ????

    ReplyDelete
  18. //சிறு கதை எழுதுவர்களுக்கு. எப்படி ஊக்கம கொடுக்கலாம்///


    ஊக்கம.....????

    ஊக்கமருந்தா???

    ReplyDelete
  19. குசும்பன்,

    ரசித்தேன்.இன்னும் ஒரு பின்னூட்டம்
    பாக்கியிருக்கிறது.இது ”சிறு கதைக்கு என்றால்”க்கு வரும் பின்னூட்டம்.

    “எப்படி...பாஸ்.. உங்களால
    (புல்லரிக்கிறார்) ..சே..இப்படி எழுதுறீங்க..நீங்க ஒரு “கார்பரேட் கதை விடுபவர்”

    ReplyDelete
  20. //எனக்கு இல்ல சொக்கா எனக்கு இல்ல!
    //

    என்ன பாஸ் இது...நான் உங்க கதைக்கு போட்ட பின்னூட்டததை இப்பிடி பப்ளிக்கா போட்டு மானத்த வாங்கிடீங்களே....

    ReplyDelete
  21. பாஸ் போட்டோல அட்லாஸ் சிங்கம் அட்டகாசமா உக்காந்துருக்கு....

    ReplyDelete
  22. இதெல்லாம் பரவாயில்லை - எனக்கு ஒரு சிறுகதைக்கு பின்னூட்டம் வந்தது - ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா அடுத்து பினாத்தல் - அப்படின்னு! இதைப்படிச்சவுடனே வந்த ஜுரம் 20 நாளைக்கு அடங்கலை!

    ReplyDelete
  23. "சமீபத்தில் படிச்சதில் இந்தப் பதிவு மிக சிறப்பாக இருக்கிறது."

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  24. என்ன மாதிரி சும்மா ஒரு :) போட்டு வைக்குறவங்களைப் பத்தி ஒன்னையும் காணோம்????

    ;)

    ReplyDelete
  25. // பினாத்தல் சுரேஷ் said...

    இதெல்லாம் பரவாயில்லை - எனக்கு ஒரு சிறுகதைக்கு பின்னூட்டம் வந்தது - ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா அடுத்து பினாத்தல் - அப்படின்னு! இதைப்படிச்சவுடனே வந்த ஜுரம் 20 நாளைக்கு அடங்கலை!//

    ROTFL.. :)

    ReplyDelete
  26. //பினாத்தல் சுரேஷ் said...

    இதெல்லாம் பரவாயில்லை - எனக்கு ஒரு சிறுகதைக்கு பின்னூட்டம் வந்தது - ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா அடுத்து பினாத்தல் - அப்படின்னு! இதைப்படிச்சவுடனே வந்த ஜுரம் 20 நாளைக்கு அடங்கலை!//

    :))))))))))))

    ReplyDelete
  27. //
    எப்படி ஊக்கம கொடுக்கலாம் என்றுதான் இந்த பதிவு.
    //

    இந்த வரி மிக அருமை :)))

    ReplyDelete
  28. அட கொக்கமக்கா... உங்க பின்னூட்டத்தில இன்னகி
    எழுதினத, காப்பி பேஸ்ட் பண்ணிட்டீங்ளே!
    நல்லா இருங்கடே! இத விட்டுட்டீங்க..?

    ReplyDelete
  29. இம்புட்டு நாளா அப்போ இதத்தான் பண்றேளா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  30. நல்ல பதிவு! அருமை!

    ReplyDelete
  31. நல்லா எழுதி இருக்கீங்க.. எதிர்பார்க்கவே இல்லை!

    ReplyDelete
  32. சிம்பிளா எழுதினாலும் நல்லா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  33. சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  34. :))) அருமை !!!!
    உண்மையாகத்தான்.

    ReplyDelete
  35. ஆயில்யன்,

    இன்னைக்கு பூரா நான் போற இடத்துகெல்லாம் முன்னாடியே வந்து ச்ராமாரியா ஒரு 10 - 15 பின்னூட்டம் போடுறியே...

    நானும் கடையை திறந்து வச்சு காத்து வாங்கிட்டு இருக்கம்லா...அங்க வந்து ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் போடாம இங்க வந்து என்ன சின்ன புள்ளதனமா கும்மி.....

    ReplyDelete
  36. யூத் விகடனில் ஒரு பக்கம் உண்டு :-)

    ReplyDelete
  37. //Kanna said... ஆயில்யன், இன்னைக்கு பூரா நான் போற இடத்துகெல்லாம் முன்னாடியே வந்து ச்ராமாரியா ஒரு 10 - 15 பின்னூட்டம் போடுறியே... நானும் கடையை திறந்து வச//

    ஓ அண்ணோவ்வ்வ்வ்வ்வ்வ் அங்க மீட் போட்டு போட்டோ போட்டு வைச்சிருக்கீங்க அங்க வந்து நான் கும்முனா அப்புறம் என்னைய கும்மிடுவாங்க ஸோ சேஃபா இங்கால இருந்துக்கிறேன்! :))))

    கதவு திறந்தே இருக்கட்டும் காற்றும் வரும் பின் கமெண்ட்டும் வரும் :)))

    ReplyDelete
  38. //பினாத்தல் சுரேஷ் said...
    இதெல்லாம் பரவாயில்லை - எனக்கு ஒரு சிறுகதைக்கு பின்னூட்டம் வந்தது - ஜெஃப்ரி ஆர்ச்சர், சுஜாதா அடுத்து பினாத்தல் - அப்படின்னு! இதைப்படிச்சவுடனே வந்த ஜுரம் 20 நாளைக்கு அடங்கலை!//

    இதற்கு இன்னமும் அமவுண்ட் வந்து சேரவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் :)

    ReplyDelete
  39. நல்ல கருத்துகள்...பேசாம இதயும் சிறுகதை போட்டி ரூல்ஸ்ல போட்டுருங்க

    ReplyDelete
  40. அட பாவி மனுஷா! இப்படித் தான் கமெண்டு போட்டுக்கிட்டுத் திரியறீங்களா?
    :)

    ReplyDelete
  41. அனைவருக்கு நன்றிங்கோ!

    ReplyDelete
  42. கே.ரவிஷங்கர் said...
    குசும்பன்,

    ரசித்தேன்.இன்னும் ஒரு பின்னூட்டம்
    பாக்கியிருக்கிறது.இது ”சிறு கதைக்கு என்றால்”க்கு வரும் பின்னூட்டம்.

    “எப்படி...பாஸ்.. உங்களால
    (புல்லரிக்கிறார்) ..சே..இப்படி எழுதுறீங்க..நீங்க ஒரு “கார்பரேட் கதை விடுபவர்”
    //

    wow...!!!!!!!

    ReplyDelete
  43. இப்பதான் பாத்தேன் குசும்பா. அட்டகாசம். நெசமாலுமே very useful.

    அனுஜன்யா

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)