Monday, March 2, 2009

"ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"




சின்ன வயசுல பெரிய அண்ணாத்த அக்கா இவிங்களுக்கு எல்லாம் தம்பியா இருக்கும் அவலம் இருக்கே ரொம்ப கொடுமை. அவங்க விளையாட்டுக்கும் சேர்த்துக்க மாட்டாங்க. நம்மையும் தனியா விளையாட விட மாட்டானுங்க. அப்படியே சேர்த்து கிட்டா கூட உப்புக்கு சப்பானியா ஒரு கை குறைஞ்சா பெரிய மனசு பண்ணுவானுங்க. அந்த ஸ்டேஜ் எல்லாம் போய் நானும் ரவுடிதான்ன்னு ஜீப்பிலே ஏறிகிட்டு லந்து விட்டு முடிச்ச பின்ன இப்ப திரும்பவும் அப்படி ஒரு டிப்ரஷன் வந்துடுச்சு.


இந்த 40+ வந்தாலே ஆணோ, பெண்ணோ சரி. இந்த யூத்துங்க தொல்லையும் தாங்கலை. பெரிசுங்க தொல்லையும் தாங்கலை. எவனும் சேர்த்துக்க மாட்டங்கிறாய்ங்க. எதுனா ஒரு பதிவிலே கும்மி அடிக்கலாம்ன்னு பார்த்தா கூட "அபிஅப்பா கொஞ்சம் உக்காந்து நாங்க எப்படி கும்மி அடிக்கிறோம்ன்னு பாருங்க. உங்க அனுபவத்தை நாங்க மைண்டுல வச்சிக்கிறோம்"ன்னு குசும்பன், கோபி, சென்ஷி, பொடியன் & குரூப் சொல்லுது.


சரி இந்த பக்கம் போவும்ன்னு பார்த்தா சீனாசார், தருமி சார் எல்லாம் "போங்க போங்க அபிஅப்பா நாங்க சீரியஸ் பதிவு போடுவோம், நீங்க பரிசல், வேலன் அண்ணாச்சி அப்படியே அந்த பக்கம் ஒதுங்குங்க"ன்னு கழட்டி விட்டுட்டு போறாங்க.


சரி அம்மாக்கள் வலைப்பூ, பேரண்ட்ஸ் கிளப்ன்னு போய் "இந்த குழந்தை வளர்ப்பு இருக்கே அது ஒரு கலை" அப்படீன்னு ஒரு பிட்டை போட்டு நாமலும் யூத்து தான்ன்னு காமிச்சுகிட்டு உள்ளே போனா அங்க "கொலையே விழும், போங்க போங்க நாங்க குழந்தை வளர்ப்பு பத்தி எல்லாம் அபிஅம்மா கிட்ட கேட்டுக்கறோம்"ன்னு விரட்டி கழுத்த பிடிச்சு வெளியே தள்ளி விட்டுராங்க.


அப்படி பேஸ்தடிச்சு உக்காந்தப்ப தான் வீட்டு கதைவை யாரோ தட்டினாங்க.


"ஹல்லோ யாருங்க வீட்டில? அபிஅப்பா வீடுதானே இது! "


காத்து வாங்கும் கடைக்கு கூட யாரோ வர்ராங்களேன்னு எனக்கு ஒரே குஷி .எனக்கு 504 மில்லி அடிச்சு ஆஃப்பாயில் சைட் டிஷ்ஷா வச்ச மாதிரி ஒரு ஜிவ் வந்துடுச்சு. சிட்டு குருவிக்கு என்ன கட்டுப்பாடுன்னு பாடிகிட்டே ஓடி வந்து கதவை திறந்தா அட நம்ம வருத்த படாத வாலிபர் சங்கத்து சிங்கம் எல்லாம் தல கைப்புள்ள தலைமையிலே வந்திருக்காங்க.


முதல்ல இளாதான் ஆரம்பிசாரு!


"அபிஅப்பா சங்கத்துல இருந்து வந்திருக்கோம். உங்க ஒதவி வேணும்"


"அய்யய்யோ 180ல 90 போச்சுன்னா மீதி எத்தன ஆங் 90 தானே இருக்கு" இது நான்!


"டேய் டேய் டேய் வேணா! விட்டுடு, சங்கம் ஆரமிச்சு 3 வருஷம் ஆக போவுது! ரொம்ப கண்ணு பட்டு போச்சு எதுனா திருஷ்டி சுத்தி போடனும்ன்னு பாசக்கார பயலுக கேட்டானுக! உன் போட்டோ குடு சங்க ஆபீஸ்ல மாட்டனும்" இது கைப்புள்ள!


"அடங்கொய்யால, அதுக்குதான் தல உங்க போட்டோவையே மாட்டிகலாமே" இது நான்.


"யோவ் என்னுது வேற மூஞ்சி, உன்னுது நாற மூஞ்சி" - கைப்ஸ்


"அதுல ஒரு சிக்கல் ஆகி போச்சு அபிஅப்பா, இஸ்கூல் போற நாதாறி பய புள்ள எல்லாம் "குறி" பார்த்து அடிப்பது எப்படின்னு பழகுறானுங்க அந்த போட்டோவை வச்சு அதான்" இப்படி கச்சேரி வச்சது தேவ்!


"டேய் இத இவரு கேட்டாரா பக்புக்பக்புக்ப்க்" - கைப்ஸ்


"சரி ராயல் ராம் வச்சு பசங்களை சமாளிக்க வேண்டியது தானே?" - அபிஅப்பா


"அய்யோ அய்யோ சரியான மக்குனி பாண்டியனா இருக்கீர் அபிஅப்பா, எனக்கு அந்த ஆப்பு வக்கிறதே ராயலு தான் அபிஅப்பூ ...ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே, முடியல," கைப்புள்ள பின் அடி முதுகை பிடிச்சுகிட்டு உக்காந்த பின்னே அடுத்து நானும் பரிதாபப்பட்டு என் போட்டோவை சங்கத்து திருஷ்டிய கழிக்க வேண்டிய காரணத்தால் கொடுத்துட்டேன், ஒரு நிபந்தனை போட்டு.


"தல எனக்கு என் போட்டோவை நீங்க சங்கத்து வாசல்ல மாட்டினாலும் சரி இல்ல ஆண்கள் கக்கூஸ்ல மாட்டினாலும் சரி ஆனா அந்த ஒரு மாசமும் நான் சங்கத்துல எழுதியே "தீர்ப்பேன்"


கைப்புள்ளக்கி கோவம் வந்து பக்கத்துல நின்ன கப்பிக்கு ரெண்டு பளார்ன்னு விட்டு "ராஸ்கல் சங்கத்து திருஷ்டிய போக்க வலைஉலக ஆன்மீக ஆழ்வாரு கேயாரெஸ் கிட்ட குறி கேட்டு வந்து திருஷ்டி கழிக்க சரியான மூஞ்சி என் மூஞ்சிக்கு அடுத்து அபிநொப்பா மூஞ்சி தான்ன்னு சொல்லி என்னய கூட்டிட்டு வந்தீங்களே, இப்ப பாரு நானும் எழுதுவேன்னு அடம், இதுக்கு பேசாம நீ தகர கவித எழுதி சங்கத்து பேரை காப்பாதுலாம், இல்லாட்டி சங்கத்தை வித்துபுட்டு பேரீச்சம் பழம் வாங்கி திங்கலாம், யோவ் அபிஅப்பா அப்படி சங்கத்துல இல்லாதவங்க எழுதினா அது அட்லாஸ் வாலிபரு அய்யா வாலிபர்"


"வாலிபர்ரோ வைரமுத்துபர்ரோ நான் எழுதுவேன் வேணும்ன்னா முதல் போஸ்ட் தலைப்பை "ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"ன்னு தலைப்பு வச்சிக்கறேன்"


"சரி வச்சு தொலைங்க, ஆனா நீங்க யூத்து மாதிரி எழுதனும் என்னைய மாதிரி எழுதனும்"


"சரி சரி, "பீடிங் பாட்டிலை கழுவுவது எப்படி?", "டயப்பர் மாட்டுவது எப்படி?", "ரிங்கா ரிங்கா ரோஸ் ரோஸ் பாட்டு குழந்தை கண்ணன் பாட்டு தான் - ஒரு கல்வெட்டு ஆராய்சி", "ஆபீஸ் போகும் போது எடுத்து செல்லும் பொருட்கள் - ஒரு செக் லிஸ்ட்", "டயனோரா டிவியும் டயானா மாமியும்!!" அப்படீன்னு ஒரே யூத் தலைப்பா போட்டு தாக்கிடுறேன் தல, மறக்காம நம்ம போட்டோவை மாட்டுங்க"


"சரி நான் போட்டோவை மாட்டுறேன். சரியா எழுதலைன்னா நம்ம போர்வாள் அதுக்கு கீழ ஊதிவத்தி ஏத்தி வைக்கிற மாதிரி இருக்கும் பர்வால்லயா. டேய் வாங்கடா போவும், ஒரு மாசம் கழிச்சு சங்கம் இருந்தா வருவும்"


எல்லாம் சங்கத்து சாவிய என் கைக்கு கொடுத்துட்டு போயாச்சு. வாங்க மக்கா இனி நம்ம கொண்டாட்டம் தான்!

63 comments:

  1. ஓ சாவியே கையில வந்துடுச்ச்சா...

    விடாதிங்க.. ....விடாதீங்க...

    ReplyDelete
  2. //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//

    இதான் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு... என்ன செய்யறது.. ப்ளாகர்ல ஒருத்தரா ஆயிட்டீங்க.. பொறுத்துக்கறோம். !! :)

    ReplyDelete
  3. //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//


    எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)

    ReplyDelete
  4. எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)//

    why blood!!

    same blood !! :(

    ReplyDelete
  5. //கானா பிரபா said...

    //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//


    எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)
    //

    ரிப்பீட்டு!

    ReplyDelete
  6. சாவி வந்தாச்சு! இனி கலக்கல் தான் கவிதா! அணில் குட்டியோட தினமும் வாங்க போஸ்ட் பக்கம்!

    ReplyDelete
  7. //"பீடிங் பாட்டிலை கழுவுவது எப்படி?", "டயப்பர் மாட்டுவது எப்படி?", //

    குத்துங்க எஜமான் குத்துங்க. :))

    அடிச்சு ஆடுங்க அபி அப்பா, இல்லாட்டி உங்கள கூலி படை வெச்சு தூக்கிடுவாங்க இந்த சங்கத்து பசங்க. :))

    ReplyDelete
  8. வாங்க கானாபிரபா!

    அதான எத்தனையோ தாங்கியாச்சு ஒரு மாசம் கஷ்டம் தானே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))

    ReplyDelete
  9. // சந்தனமுல்லை said...
    //கானா பிரபா said...

    //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//


    எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)
    //

    ரிப்பீட்டு!//

    வாங்க முல்லை! ரிப்பீட்டா, அப்ப சரி நான் அப்பீட்டு!

    ReplyDelete
  10. // ambi said...
    //"பீடிங் பாட்டிலை கழுவுவது எப்படி?", "டயப்பர் மாட்டுவது எப்படி?", //

    குத்துங்க எஜமான் குத்துங்க. :))

    அடிச்சு ஆடுங்க அபி அப்பா, இல்லாட்டி உங்கள கூலி படை வெச்சு தூக்கிடுவாங்க இந்த சங்கத்து பசங்க. :))
    //

    வாங்க அம்பி! அடிச்சாவே ஆடத்தானே செய்யுது!:-))

    ReplyDelete
  11. //பேஸ்தடிச்சு// எத்தனாம் பேஸ்த்து?
    தோஸ்து?

    ReplyDelete
  12. //வாங்க முல்லை! ரிப்பீட்டா, அப்ப சரி நான் அப்பீட்டு!//

    ஸ்ஸ் ஒரு வேலைய ஈசியா முடிச்சாச்சி... :)

    ReplyDelete
  13. // நானானி said...
    //பேஸ்தடிச்சு// எத்தனாம் பேஸ்த்து?
    தோஸ்து?//

    நானானியக்கா அதல்லாம் வழக்கொழிந்த தொல்காப்பியர் கால சொற்கள்:-))))

    ReplyDelete
  14. // கவிதா | Kavitha said...
    //வாங்க முல்லை! ரிப்பீட்டா, அப்ப சரி நான் அப்பீட்டு!//

    ஸ்ஸ் ஒரு வேலைய ஈசியா முடிச்சாச்சி... :)//

    நாங்க்க பூரான் மாதிரி நசுக்க நசுக்க வருவோம்ல கிச்சான் வாங்கிகிட்டாவது:-)

    ReplyDelete
  15. //எல்லாம் சங்கத்து சாவிய என் கைக்கு கொடுத்துட்டு போயாச்சு. வாங்க மக்கா இனி நம்ம கொண்டாட்டம் தான்!
    //

    நாங்களும் அப்பப்போ வரலாமில்ல? இல்லை சாவி வாங்கியாச்சுன்னு தொரத்தி விட்டுருவீங்களா?

    ReplyDelete
  16. சரி சரி வுடுங்க. நாமெல்லாம் (என்னையும் சேத்துக்குங்க ப்ளீஸ்) எப்பவுமே யூத்துதான்....

    :-))))

    ReplyDelete
  17. //நாங்களும் அப்பப்போ வரலாமில்ல? இல்லை சாவி வாங்கியாச்சுன்னு தொரத்தி விட்டுருவீங்களா?
    //

    அட தல ஓரளவுக்கு மேல அடி தாங்க முடியலைன்னா உங்களைத்தானே கூப்பிடுவோம்( அடி வங்கத்தான்):-))

    ReplyDelete
  18. // ச்சின்னப் பையன் said...
    சரி சரி வுடுங்க. நாமெல்லாம் (என்னையும் சேத்துக்குங்க ப்ளீஸ்) எப்பவுமே யூத்துதான்....

    :-))))
    //

    ஆமா ச்சின்ன பையனாச்சே! அதனால எப்பவும் யூத்து தான், கவலையே படாதீங்க:-)

    ReplyDelete
  19. //அபிஅப்பா சங்கத்துல இருந்து வந்திருக்கோம்.//

    சொல்லவேயில்ல. இது மாதிரி சங்கம் ஆரம்பிச்சி எத்தன நாளாச்சி? இதுல மெம்பர் ஆகுறதுக்கு என்ன ரூல்ஸ். இது அபியப்பாவை கும்மியடிப்போர் சங்கமா? அல்லது அபியப்பாவுடன் கும்மியடிப்போர் சங்கமா?

    ReplyDelete
  20. போட்டோல கம்புட்டர், போன்லாம் தெரியுது ஆனா அபியப்பா மட்டும் தெரியமாட்டேங்கறாரே...

    ReplyDelete
  21. //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//

    வந்ததும் வராததுமா பொய்யாண்ணே?
    சைடுல ஃபோட்டோல பார்த்தா யூத் மாதிரியா இருக்கு?
    வெட்கப்பட்டுச் சிரிக்கும் "குழந்தை" மாதிரில்ல இருக்கு? :)))

    இந்த மாசத்துக்கு ஒரு சிறப்போ சிறப்பு இருக்குண்ணே!
    அந்த நல்வேளையில் நீங்க அட்லாஸா ஆனது இன்னும் சிறப்பு! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)

    இன்னும் நாலு பதிவு போட்டுட்டு, அதற்கு அடுத்த பதிவும் போடும் முன் சொல்ப வெயிட் மாடி!.....பட்டாசு போடணும்! :)

    ReplyDelete
  22. ஒரு மாசமா..... ம்ம்ம் பார்த்துடலாம். படிக்கலாம். வாலிபர்களா நீங்க எல்லோரும்;)))

    ReplyDelete
  23. வாங்கண்ணே... வாங்க.... :))


    ஒங்களுக்கு எப்பவும் போடும் டெம்பிளேட் பின்னூட்ட வழக்கப்படி இப்பவும் ஒன்னு....

    கலக்கல் போஸ்ட்'ண்ணே... :))

    ReplyDelete
  24. // இளைய பல்லவன் said...
    //அபிஅப்பா சங்கத்துல இருந்து வந்திருக்கோம்.//

    சொல்லவேயில்ல. இது மாதிரி சங்கம் ஆரம்பிச்சி எத்தன நாளாச்சி? இதுல மெம்பர் ஆகுறதுக்கு என்ன ரூல்ஸ். இது அபியப்பாவை கும்மியடிப்போர் சங்கமா? அல்லது அபியப்பாவுடன் கும்மியடிப்போர் சங்கமா?
    //

    ஆஹா சங்கத்தை அவமானப்படுத்திய இளைய பல்லவனை தலைகீழா கட்டிவைத்து நாக்கிலே மூக்கு பொடியையும், மூக்கிலே இட்லி பொடியையும் போடுங்கள்! கக்கக்கபோ:-))

    ReplyDelete
  25. // இளைய பல்லவன் said...
    //அபிஅப்பா சங்கத்துல இருந்து வந்திருக்கோம்.//

    சொல்லவேயில்ல. இது மாதிரி சங்கம் ஆரம்பிச்சி எத்தன நாளாச்சி? இதுல மெம்பர் ஆகுறதுக்கு என்ன ரூல்ஸ். இது அபியப்பாவை கும்மியடிப்போர் சங்கமா? அல்லது அபியப்பாவுடன் கும்மியடிப்போர் சங்கமா?
    //

    ஆஹா சங்கத்தை அவமானப்படுத்திய இளைய பல்லவனை தலைகீழா கட்டிவைத்து நாக்கிலே மூக்கு பொடியையும், மூக்கிலே இட்லி பொடியையும் போடுங்கள்! கக்கக்கபோ:-))

    ReplyDelete
  26. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//

    வந்ததும் வராததுமா பொய்யாண்ணே?
    சைடுல ஃபோட்டோல பார்த்தா யூத் மாதிரியா இருக்கு?
    வெட்கப்பட்டுச் சிரிக்கும் "குழந்தை" மாதிரில்ல இருக்கு? :)))

    இந்த மாசத்துக்கு ஒரு சிறப்போ சிறப்பு இருக்குண்ணே!
    அந்த நல்வேளையில் நீங்க அட்லாஸா ஆனது இன்னும் சிறப்பு! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! :)

    இன்னும் நாலு பதிவு போட்டுட்டு, அதற்கு அடுத்த பதிவும் போடும் முன் சொல்ப வெயிட் மாடி!.....பட்டாசு போடணும்! :)//



    வாங்கா கேயாரெஸ்! கண்டிப்பா வெடி போட்டுடுவோம். நானும் அதுக்குத்தான் வெயிட்டீஸ்!

    ReplyDelete
  27. // வல்லிசிம்ஹன் said...
    ஒரு மாசமா..... ம்ம்ம் பார்த்துடலாம். படிக்கலாம். வாலிபர்களா நீங்க எல்லோரும்;)))//

    வாங்க வ்ல்லிம்மா! நகைச்சுவைன்னா எல்லாருமே யூத் தான். அதும் சங்கத்து நகைச்சுவைக்கு ஈடாகுமா? நமக்கு வாசிக்க மேடை கொடுத்ததே பெரிய விஷயமாச்சே? தெரிஞ்ச வித்தை எல்லாம் காமிப்போம்!மீதி ஆண்டவன் விட்ட வழி!

    ReplyDelete
  28. ம் சங்கத்து நிலமை இப்பிடி ஆகீடுச்சா?

    ReplyDelete
  29. சரி சரி

    எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)

    ReplyDelete
  30. // இராம்/Raam said...
    வாங்கண்ணே... வாங்க.... :))


    ஒங்களுக்கு எப்பவும் போடும் டெம்பிளேட் பின்னூட்ட வழக்கப்படி இப்பவும் ஒன்னு....

    கலக்கல் போஸ்ட்'ண்ணே... :))//

    குறி பார்த்து அடிக்க பசங்களுக்கு ட்ரெய்னிங்க் கொடுத்து தலைக்கு ஆப்பு வச்சுட்டு இங்கவந்து கலக்கலா? நல்லாருங்கப்பூ:-))

    ReplyDelete
  31. //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//

    ஆத்தா நான் தாத்தா ஆகீட்டேன்னுதானே சொல்ல வந்தீங்க!?!?!?

    :)))))

    ReplyDelete
  32. // மங்களூர் சிவா said...
    ம் சங்கத்து நிலமை இப்பிடி ஆகீடுச்சா?

    Mon Mar 02, 05:55:00 PM IST


    மங்களூர் சிவா said...
    சரி சரி

    எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)//

    சங்கத்தை காக்க வந்த சிங்கமேன்னு போஸ்ட்டர் ஒட்ட காசு வாங்கிட்டு இங்க வந்து இப்படி ஒரு பிட்டை போட்டா என்னா அர்த்தம் சிவா? என்னா அர்த்தம்!

    ReplyDelete
  33. அடடா காசு இங்கயும்தான் வாங்கினேன்ல

    ReplyDelete
  34. கொஞ்சம் ஸ்லிப் ஆகிருச்சு

    ReplyDelete
  35. இப்ப கூவுறேன் பாருங்க!

    ReplyDelete
  36. குடுத்த காசுக்கு மேல

    ReplyDelete
  37. சங்கத்தை காக்க வந்த சிங்கம் அபி அப்பா வாழ்க!

    ReplyDelete
  38. ஆபத்பாந்தவன் அபி அப்பா வாழ்க! வாழ்க!!

    ReplyDelete
  39. இது இது இது நல்ல பிள்ளைக்கு அழகு!

    ReplyDelete
  40. குடுத்த காசுக்கு கூவியாச்சு இனிமே கூவுறது எஸ்ட்ரா

    ReplyDelete
  41. 2011ன் வருங்கால துபாய் அதிபர் அபி அப்பா வாழ்க

    ReplyDelete
  42. 2012ல் அல்குவைதா அதிபர் அபி அப்பா ச்ச ஸ்லிப் ஆகிடுச்சு அபுதாபி அதிபர் அபி அப்பா வாழ்க வாழ்க

    ReplyDelete
  43. //ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"//

    கிகிகி.. தலைப்பு மட்டும் தான? தாராளமா வச்சிக்கோங்க.. :))

    இனி இதே போல சரவெடி தானா? வந்துடறோம்.. :)

    ReplyDelete
  44. \\
    ""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""
    \\

    என்னடா...இது !!
    சங்கத்தக்கு வந்த சோதனை...?!
    ;)

    ReplyDelete
  45. கானா பிரபா said...
    //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//


    எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)
    \\

    ரிப்பீட்டு!!!! :)

    ReplyDelete
  46. நீங்க எப்பவுமே யூத்துதான் அங்கிள்...

    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  47. //
    ""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""
    //

    சிபி சார்பா நான் சங்கத்துக்கு கண்டனம் தெரிவிச்சுக்கறேன்..!

    ReplyDelete
  48. நயன்தாரா said...
    //
    ""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""
    //

    சிபி சார்பா நான் சங்கத்துக்கு கண்டனம் தெரிவிச்சுக்கறேன்..!
    \\

    நயன்,
    வயசான காலத்துல பாவம் அவரை ஏன் கஷ்டப்படுத்தறிங்க cool...
    இருந்துட்டு போகட்டுமே!

    ReplyDelete
  49. நயன்தாரா மற்றும் தீபா வெங்கட் என்ற பெயர்களில் நான் பின்னூட்டம் போடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்...!!

    ReplyDelete
  50. கலக்குங்க வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  51. //
    அபி அப்பா said...

    ஆஹா சங்கத்தை அவமானப்படுத்திய இளைய பல்லவனை தலைகீழா கட்டிவைத்து நாக்கிலே மூக்கு பொடியையும், மூக்கிலே இட்லி பொடியையும் போடுங்கள்! கக்கக்கபோ:-))
    //

    எந்த சங்கத்தை அவமானப் படுத்தினேன். வவாச-ஐயா, அஅச-ஐயா,

    சரி, இட்லி பொடிக்கு எண்ணை கொடுப்பீங்களா?

    ReplyDelete
  52. வாங்க யூத் வாங்க ....அது என்னமோ சங்கத்து சாவின்னு ஒரு மேட்டர் சொன்னீங்களே அது என்னங்க ஆபிசர்.... இருந்த ஒரே பூட்டையும் ஆட்டயப் போட்டு தான் சிபி நயந்தாரா போஸ்டருக்கு கோந்து வாங்கி சங்கத்து விட்டதுல்ல ஒட்டி வச்சுட்டு அப்போ அப்போ சிந்திக்கிற விட்டத்தை வெறிப்பார்..... அந்த சாவி மட்டும் எப்படியோ அவருக்கு சிக்கல்ல... சரி வாங்க.. இப்படி சங்கத்து உள் மேட்டர் நிறைய பேசுவோம் ஒரு மாசமிருக்குல்ல......ஸ்டார்ட் மீசிக்

    ReplyDelete
  53. //கானா பிரபா said...

    //""ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!""//


    எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா ;)
    //

    ரிப்பீட்டு!

    ReplyDelete
  54. ம்ம்ம்...நடத்துங்க...நடத்துங்க ;))

    ReplyDelete
  55. போட்டு தாக்குங்க ஆபிசர் :))

    ReplyDelete
  56. அண்ணே,
    நமக்கு நாப்பது வயசானாலும் நாம யூத்து தான் !
    நீங்க கலக்குங்க ! வர்றதை பாத்துக்கலாம் !

    ReplyDelete
  57. நிஜமா ஆணி புடுங்குற மாதிரியே தத்ரூபமான ஃபோடோ!

    கலக்குங்க அபி அப்பா!

    ReplyDelete
  58. //நாமக்கல் சிபி said...

    நிஜமா ஆணி புடுங்குற மாதிரியே தத்ரூபமான ஃபோடோ!

    கலக்குங்க அபி அப்பா!//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))

    ReplyDelete
  59. //ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"ன்னு தலைப்பு வச்சிக்கறேன்"//


    அட!

    அண்ணே யூத்தாம்ல :)))

    ReplyDelete
  60. globe lgspthe thereby herbaceous wasting save wcer amiodarone mysliwiecka cautioned undaf
    lolikneri havaqatsu

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)