Tuesday, March 10, 2009

499

உலக பிரச்சினைய தீர்க்கும் நம்ம நம்பூதிரி:

கவுன்சிலேட்டுல என்னய்யா ஒரே ஆம்புலன்ஸ் சத்தம்.

ஒபாமா வீட்டுல பில்லி சூன்யம் வெச்சிதனாலதான் ரிசஸ்சென்னாம், அதை எடுக்க விசா வேணும்னு கேட்டு இருக்காரு?


இந்திய பிரச்சினை வம்பூதிரி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்: நாடு முழுவதும் ஐந்து கட்டங்களாக தேர்தல்.

வெயில் பழமா இருந்தாலும்,
யாருக்கும் சூடு சுரணை இருக்காது.

மழை பெய்யாட்டாலும்
பிரியாணி மழை, காசு மழை, தண்ணி மழை(அடிக்கிற தண்ணிங்க).

வோட்டு இருக்கிறவங்க எல்லாம் பணக்காரங்க.
டிவி இருந்தா டிவிடி பிளேயர் இலவசம்.
ரெண்டும் இருந்தா திருட்டு டிவிடி சப்கிரிப்சன் இலவசம்.

பொய் மட்டுமே இருக்கும், சிலர் பேசுவாங்க, பலர் நம்புவாங்க.

500ரூவாய் எல்லாம் சில்லரையா இருக்கும், 1000 ரூபாய் மினிமம் டாப் அப் ஆவும்.

இனி செய்தி விமர்சனம்:
பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கின-3000 பறக்கும் படைகள்

மாப்ளே, எப்படி நம்ம பசங்க பிட் அடிச்சு தப்பிக்கிறாங்கன்னு தெரியுதுடா?

எப்படி?


நம்ம பசங்க அடியிலதான பிட் வெக்கிறாங்க. பறக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்?

தொகுதிப் பங்கீடு: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சு துவக்கம்

குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி ஆர்ப்பாட்டம்- அதிகாரிகள் திணறல்

மேலே இருக்கிற ரெண்டு செய்திக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லே. இருக்குன்னா சொன்னா ஆட்டோ, லாரி இல்லே வரும்?

சட்டக்கல்லூரி அட்மிசன் துவக்கம்.

குஸ்தி, சண்டை, சிலம்பம், சோடாபாட்டில் விடறது, கெட்ட வார்த்தையில் திட்டுபவர்களுக்கு முன்னுரிமை. இல்லாதவர்களுக்கு ஸ்பெசல் கிளாஸ் 3வது செமஸ்டரில்(கட்டணம் அதிகம், கட்டாய பாடம்)

சுப்ரமணியபுரத்திற்கு மாத்ருபூமி விருது

ரத்த பூமி விருதுன்னு ஒன்னும் இல்லையா?.

லோக்சபா தேர்தலில் 50 - 50 சீட் வேண்டும் : பவார் கட்சி பிடிவாதம்

பிஸ்கோத்து லெவலுக்கு வந்திருச்சு இந்திய அரசியல்

சுப்ரீம் கோர்ட் சொல்லும் பாதையில் சேது திட்டம் நிறைவேற்றப்படும்*மத்திய அமைச்சர் டி.ஆர்., பாலு உறுதி.

ஹிஹி,. எலக்சன் ஏப்ரல் மாசமாமே. சொல்லாம இருப்பிங்களா?


நமீதா 'ஆசைகாட்டி' தொழிலதிபரிடம் கொள்ளை!

நமீதா, நம்ம கிட்டே காட்டி காட்டியே கொள்ளயடிக்கிறாங்க.(மனசதாங்க மச்சான்ஸ்).

எங்கள் கட்சி வெற்றி பெரும்-சரத்
மன்னனில் கவுண்டர்- பருத்தி, புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் தொழிலதிபருங்க சொல்லிக்கிறாங்கடா

No Comments

மேல இருக்கிற சோக்குக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லீங்க. இது சங்கத்தோட 499 பதிவு அவ்வளவுதான்.

26 comments:

  1. ஹை நான் தான் ப்ர்ஸ்ட்டு

    ReplyDelete
  2. //இது சங்கத்தோட 499 பதிவு அவ்வளவுதான்.//

    500 அடிக்கப்போறது யாரு......

    :))

    ReplyDelete
  3. அப்ப 500 வது சங்கப் பதிவு பெரியவங்க போடட்டும்ன்னு விட்டாச்சா :)) (பெரியவஙக்ன்னு நான் 1ம் அபி அப்பாவ சொல்லலை அப்படிங்கறதை இங்க சொல்லிக்கிறேன்!)

    :))))))

    ReplyDelete
  4. //தொகுதிப் பங்கீடு: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சு துவக்கம்

    குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி ஆர்ப்பாட்டம்- அதிகாரிகள் திணறல்///

    நாலு வரியில ஏகப்பட்ட உள்குத்து
    ஆட்டோ வரக்கூடும் :))))

    ReplyDelete
  5. சுப்ரமணியபுரத்திற்கு மாத்ருபூமி விருது

    ரத்த பூமி விருதுன்னு ஒன்னும் இல்லையா?.

    :))))))

    ReplyDelete
  6. //500ரூவாய் எல்லாம் சில்லரையா இருக்கும், 1000 ரூபாய் மினிமம் டாப் அப் ஆவும்//

    இளா வாய் முகூர்த்தம்! :)

    இது நடக்கும் போது,
    சங்கத்துல அப்பவே தீர்க்கதரிசி, பச்சரிசியா விவசாயி அருள்வாக்கு கொடுத்துட்டாரு-ன்னு ஆடிருவம்-ல்ல? :)

    ReplyDelete
  7. //499//

    அரசியல் அமைப்புச் சட்டம் 356 மாதிரி 499 கொண்டாந்துட்டாங்களோ-ன்னு நினைச்சேன்! :)

    வாழ்த்துக்கள் சங்கம் & சிங்கம்ஸ்! :)

    ReplyDelete
  8. //மேல இருக்கிற சோக்குக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லீங்க//

    அப்போ கீழே இருக்குற சோக்குக்கு சம்பந்தம் இருக்கு-ன்னு சொல்றீய...:)

    //இது சங்கத்தோட 499 பதிவு அவ்வளவுதான்//

    ReplyDelete
  9. இந்தப் பதிவுக்கு 499 பின்னூட்டங்களுக்கு மேல் மிகாமல்...கும்மி வரைக! :)

    ReplyDelete
  10. வாழ்த்துகள் தல கைப்ஸ் :)

    ReplyDelete
  11. வாழ்த்துகள் விவசாயி...

    ReplyDelete
  12. வாழ்த்துகள் போர்வாள் தேவ்...

    ReplyDelete
  13. வாழ்த்துகள் தள சிபி

    ReplyDelete
  14. வாழ்த்துகள் புலி நாகை சிவா!

    ReplyDelete
  15. வாழ்த்துகள் ஜொள்ளு பாண்டி

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ராயல் ராம்!

    ReplyDelete
  17. வாழ்த்துகள் காஞ்சி தலைவன் கப்பி!

    ReplyDelete
  18. வாழ்த்துகள் ஆன்மிக செம்மல் KRS

    ReplyDelete
  19. கடைசியா வாழ்த்துகள் வெட்டி!!!

    ReplyDelete
  20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் சங்கத்தினை ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. ஆட்டோ ஜாக்கிரதை

    ReplyDelete
  23. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.....

    எங்களை ஆதரிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  24. தானை தலைவன் அஞ்சா நெஞ்சன் சிங்கம் கார்த்திக் அவர்களை பற்றி ஒரு வரி கூட கூறாமல் நுண்ணரசியல் நடத்திய விவசாயி இளாவை வன்மையாக கண்டிக்கிறேன்.

    சரத்குமார் க்கு முன்பே அரசியலில் குதித்தவர் கார்த்திக் என்பதையும் கூற இங்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  25. 499 வாழ்த்துக்கள்.

    500 அடிக்க போகும் சிங்கம் யாரு?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)