Wednesday, February 25, 2009

எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்குவோருக்கு அக்காக்கள் சொல்லும் ஆலோசனைகள்

தொப்பை, தொந்தி, டயர், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங், லக்கேஜ், எக்ஸ்ட்ரா லக்கேஜ் இப்படின்னு இடைபாகத்துல இருக்கற சில நரம்பு புடைப்புகளையும் சதை புடைப்புகளையும் பல பேரும் ஒரு வித நக்கலோட விளிக்கிறாங்க. இது இப்படி இருக்க, இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல...இது இடுப்பு பகுதியில் முறைப்படி டெவலப் செய்யப்படும் பைசெப்ஸ்(Biceps) தான் என்று பெருமை பட்டுக் கொள்ளும் ஒரு சாராரும் இருக்காங்க. தொப்பை, தொந்தி இதெல்லாம் ஆண்களுக்கே உரித்தான பிரச்சனை மாதிரி ஒரு கருத்து நிலவுது. அதனால அதை குறைக்க நுகர்வோர்கள் அதாவது பெண்கள் கிட்டவே ஆலோசனை கேக்கலாம்னு சங்கத்துல முடிவு பண்ணோம். இங்கே நுகர்வோர்னா என்னன்னு வெளக்கிடறோம். ஆண்கள் சுமக்கும் இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜைப் பாத்து அதிகமா கவலை படறதும், அதை உடனடியா குறைச்சிக்கனும்னு கருத்து சொல்றதும் பெண்கள் தான். ஏன் இப்படி சொல்றோம்னா இந்தப் பக்கம் ஆண்கள் கிட்டயும் பேசிப் பாத்தோம். அவங்க என்ன சொல்றாங்கன்னா "தொப்பையும் தொந்தியும் ஆண்களுக்கே உரித்தான சொத்து மாதிரி பரவலா ஒரு கருத்து நிலவுது. ஆனா அது உண்மையில்லை. இந்த விஷயத்துல பெண்களும் ஆண்களுக்கு சளைச்சவங்க இல்லை. ஆனா எக்ஸ்ட்ரா லக்கேஜை கரைக்கிறது சுலபம், அதை சேக்கறது கஷ்டம். அதனால கஷ்டப் பட்டு சேத்ததை நாங்க கரைக்க மாட்டோம், அதே மாதிரி கரைக்க சொல்லவும் மாட்டோம்" அப்படின்னு சொல்லிட்டாங்க.

அதனால அவங்களோட பெருந்தன்மையைப் பாராட்டிட்டு, தன்னுடைய கணவனோ, பாய் ஃப்ரெண்டோ, அப்பாவோ, தம்பியோ, அண்ணனோ, மகனோ இந்த மாதிரி எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கறவங்களா இருந்தாக்கா அதை பாத்துட்டு முதல்ல குறைச்சிக்க சொல்லி ஆலோசனை சொல்ற நுகர்வோர்களான பிரபல பெண் பதிவர்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்றோம். எங்களோட இந்த வேண்டுதலுக்கு வரலாறு காணாத ஆதரவு இருந்தது. சங்கத்து தபால் பெட்டி ரொம்பி வழிஞ்சது. அதை முதன்முதல்ல ஓப்பன் பண்ணி பிரிச்சி படிச்சது நம்ம கப்பிப்பய தான். படிச்சிட்டு "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"னு கூக்குரலிட்டு அவ்வத் தொடங்கிட்டான். என்னாச்சோ ஏதாச்சோன்னு நாங்க எல்லாம் பதறிப் போய் ஓடியாந்து நாங்களும் பிரிச்சிப் படிச்சிட்டு கும்பலா அவ்வத் தொடங்கிட்டோம். எங்களை அவ்வ வச்ச அந்த அக்காக்களின் ஆலோசனைகள்ல சில உங்கள் பார்வைக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

1. எக்ஸ்ட்ரா லக்கேஜ் அப்படின்னா என்னன்னு கேக்கற அளவுக்கு மெயிண்டேன் பண்ணிக்கிட்டு இருக்கற 'பாய்ஸ்' சித்தார்த்தின் அதிதீவிர விசிறியான மலேசிய மாரியாத்தா மை ஃப்ரெண்ட் சித்தார்த்தி சங்கத்துக்கு அனுப்பிருக்கற ஆலோசனை கடிதத்தைப் பாப்போம்.

தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட தொப்பை இருப்பவர்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ' என்ன தொப்பையை குறைக்க ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதை எல்லாத்தையும் மீறி நான் சொல்லிக்கொள்ள விரும்பும் ஆலோசனைகள் கீழே.

டிப்ஸ் 1 : உருளை கிழங்கு சிப்ஸ்க்கு பதிலாகமரவள்ளி கிழங்கு சிப்ஸ் சாபபிடவும்.

டிப்ஸ் 2 : தண்ணி அடிக்கும் போது சிப்ஸ்க்கு பதிலாக ஊறுகாயைப் பயன்படுத்தவும்.

டிப்ஸ் 3 : உங்களை விட பெரிய தொப்பை இருப்பவர்களுடன் வெளியே செல்லவும். அப்பொழுது உங்கள் தொப்பை குறைந்துவிட்டது போல் தெரியும்.

டிப்ஸ் 4 : பதிவு எழுத யோசிக்கும் போது மல்லாக்க படுத்து யோசிப்பதற்கு பதில் குப்புற படுத்து யோசிக்கவும். அதனால் தொப்பை அழுந்தி தானாக குறைய வாய்ப்புள்ளது.

டிப்ஸ் 5 : நிக்கற பஸ்ஸில் ஏறுவதையோ இறங்குவதையோ தவிர்க்கவும். ரன்னிங்கில் இருக்கும் போதே ஏறவும், இறங்கவும் முயற்சிக்கவும். கைனெட்டிக் எனர்ஜி உடம்பில் வேலை செய்யும் போது லக்கேஜ் கரைய வாய்ப்புண்டு.



2. அடுத்ததா வலையுலக மேரி க்யூரி, மின்னல் சுமதி அவங்க சொல்லிருக்கற ஆலோசனைகள். ஏன் இவங்களை க்யூரி அம்மையாரோட ஒப்பிடறோம்னு நீங்க தெரிஞ்சிக்கனும். இயற்பியல், வேதியியல் இந்த ரெண்டு பிரிவுலயும் ஆஸ்கார் அவார்டு...சாரி...நோபல் பரிசு வாங்குன முதல் விஞ்ஞானி மேடம் மேரி க்யூரி. அதே மாதிரி ஆண்கள் தொந்தியைக் குறைப்பதற்காக இயற்பியல் ரீதியாகவும் வேதியியல் ரீதியாகவும் வெகு விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு நடத்தி ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்பான ஆலோசனையை இவர் வழங்கியிருப்பதால் இவருக்கு "வலையுலக மேரி க்யூரி" பட்டத்தை அளிப்பதில் சங்கம் பெருமகிழ்ச்சி அடைகிறது. இப்போ அவங்க சொன்ன ஆலோசனையப் பாப்போம்.

"...இதுக்குத் தான் நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காகவே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா? அப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை."

மேல இருக்கற அவங்களோட இந்த ஆலோசனையைப் படிச்சிட்டு, "நாங்கெல்லாம் ரெகுலரா பேருந்துல பயணம் செய்யறவங்க தான்...ஆனாலும் ரிசல்ட் எதுவும் இல்லை. உங்க ஆலோசனையை இன்னும் கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க" அப்படின்னு நம்ம தளபதி சிபி பதில் கடிதம் போட அதுக்கு அவங்க கிட்டேருந்து வந்த இன்னொரு பதில் கடிதத்தைப் படிச்சிட்டு நாங்க அவ்வ ஆரம்பிச்சது இன்னும் அடங்குன பாடில்லை. அது என்னன்னா...

"எப்படிங்க ரிசல்ட் இருக்கும்...இல்லை எப்படி ரிசல்ட் இருக்கும்னு கேக்கறேன். பஸ்சுல ஏறுனதும் முதவேலையா சீட்டைப் பாத்து உக்காந்துக்குவீங்க...அப்படி இடம் கெடைக்கலன்னா லேடீஸ் சீட்ல உக்காந்துக்குவீங்க...கொஞ்சம் ஏமாந்தா கண்டக்டர் சீட்ல உக்காந்துக்குவீங்க. இப்படி எல்லாம் இருந்தா எப்படி ரிசல்ட் இருக்கும். லக்கேஜை காணாப் போக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும். முதல்ல இந்த தானியங்கி கதவுகள் இருக்கற பேருந்துகள்ல ஏறக் கூடாது. பஸ் காலியா இருந்தாக் கூட படிக்கட்டுல தொங்கிட்டுத் தான் வரணும். கண்டக்டர் "ஏறி வாய்யா"ன்னு கத்துனா பதிலுக்கு நீங்க "நீ தான்யா தவளை வாயன், பன்னி வாயன்" அப்படின்னு பதிலுக்குக் கத்திட்டு படிக்கட்டுல தொங்கிட்டே பயணம் செய்யனும். நீங்க இந்த கமல் நடிச்ச சத்யா படம் பாத்திருக்கீங்களா? அதுல கமல் வளையோசை கலகல பாட்டுல பஸ்சுல ஃபுட்போர்ட் அடிச்சிட்டு போவாரு பாத்துருக்கீங்க இல்லை. அந்த மாதிரி டெய்லி பஸ்சுல கடைசி படிக்கட்டுல ஒத்த கால் சுண்டுவிரல்ல தொங்கிட்டு போவனும்ங்க.

அந்த மாதிரி தொங்கிட்டு போகும் போது லக்கேஜ் மேல காத்து வந்து மோதும். காத்து வந்து மோதுச்சுன்னா லக்கேஜ் சும்மா விட்டுருமா...அதுவும் காத்தை தன் மேல மோத விடாம பலமா பதிலுக்குத் தள்ளும். காத்து லக்கேஜை தள்ள, லக்கேஜ் காத்தை திரும்ப தள்ள இப்படியே தொடர்ச்சியா நியூட்டனின் மூன்றாம் விதி படி வினையும் எதிர்வினையும் நடந்து நடந்து லக்கேஜ் காலப்போக்குல மெல்ல கரைஞ்சிடும். இது ஒரு இயற்பியல் மாற்றம்(physical reaction)

பஸ்சுல ஃபுட்போர்ட்ல தொங்கிட்டு போகும் போது physical reaction மட்டும் இல்லாம ஒரு chemical reaction கூட நடக்கும். அது என்னன்னா பஸ் படிக்கட்டுல நீங்க தொங்கிட்டுப் போகும் போது வெளியில அடிக்கிற காத்தும் வெயிலும், அதாவது air and heat ஒன்னா சேந்து லக்கேஜ் மேல ஒரு வேதியியல் மாற்றத்தை நடத்தி அப்படியே அதை எரிச்சிடும். இதை oxidationனு சொல்லுவாங்க.

ஆனா இவ்வளவு ஐடியா குடுத்தாலும் ஃபாலோ பண்ண மாட்டீங்க. ஏன்னா உங்களை மாதிரி ஆளுங்க கூட அமலா மாதிரி ஃபிகர் இருந்தா தான் நான் ஃபுட்போர்ட் அடிப்பேன்னு சொல்லுவீங்க. அப்புறம் எங்கேருந்து ரிசல்ட் கெடைக்கும்?"

3. கண்ணனைக் கான துவாரகை செல்வதற்கு முன்னாடி சங்கத்தின் நிரந்தர தலைவி நம்ம கீதா மேடம் அனுப்பிச்ச ஆலோசனை கடிதம் இப்போ உங்க பார்வைக்கு. அவங்க கொஞ்ச வித்தியாசமா ஆண்களின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கரைய பெண்கள் பின்பற்ற வழிமுறைகளைப் பற்றி சொல்லிருக்காங்க.

"எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கற ஆண்களை, அந்த லக்கேஜைக் கரைக்க முயற்சி எடுக்க வைக்கனும்னா அதுக்கு அவங்க அடிமடியிலேயே கை வச்சாத் தான் திருந்துவாங்க. சாயந்திரம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சு இரவு பத்து மணி வரை ஓடற ஆனந்தம், திருமதி செல்வம், கலசம், கோலங்கள், அரசி இந்த மாதிரியான பாடாவதி மெகா சீரியல்களுக்குப் பெண்களுக்குச் சரிசமமா ஆண்களும் அடிமையாகிப் போய் இருக்காங்க. அதை எல்லாம் பாக்க அனுமதி வேணும்னா தெனமும் மாலை ஒரு மணி நேரம் ஜாகிங் போகனும்னு கட்டுப்பாடு விதிக்கனும். எண்ணெயில் பொரிச்ச சமாச்சாரங்கள் எதையும் கண்ணுலேயே காட்டப்படாது. அப்படியும் எப்பவாச்சும் ஆசை பட்டு பஜ்ஜி, போண்டா வேணும்னு ரொம்ப கெஞ்சி மன்றாடி கேட்டுக்கிட்டாங்கன்னா வீட்டுலேருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற ஒரு கடையைச் சொல்லி அங்கேருந்து எண்ணெய் வாங்கிட்டு வரச் சொல்லலாம். ஏன்னு காரணம் கேட்டாங்கன்னா உங்க சைடுல (உங்க வீட்டுக்காரரு சைடு கெடையாது) ரொம்ப ஒல்லியா லக்கேஜ் இல்லாத யாரையாச்சும் உதாரணம் காட்டி அவரு அந்த கடையில தான் எண்ணெய் வாங்கறாராம்...அதான் அப்படி இருக்குறாராம் அப்படின்னு சொல்லலாம். இப்படி சொன்னா ஒன்னு எனக்கு பஜ்ஜியே வேணாம்னு சொல்லிடுவாங்க இல்லைன்னா பத்து பத்து இருபது கிலோ மீட்டர் போயிட்டு வந்ததுல நல்லா பெண்டு நிமிந்து இருக்கும். அதுக்கப்புறம் பஜ்ஜி சாப்பிடற ஆசையே போயிருக்கும்"

37 comments:

  1. //மின்னல் சுமதி // அவர்கள் சொல்லியிருந்த ஆலோசனைகள் டிரை பண்ணி பார்த்தவைதான் என்றாலும் சரிப்பட்டு வரவில்லை!

    ஃபுட் போர்டுலே அமலா - நல்ல ஐடியா!
    டிரை பண்ணி பார்த்துடுவோம்!

    ReplyDelete
  2. !யப்பாடி, இங்கே வரதுக்குள்ளே என்ன கஷ்டம், இந்தக் கஷ்டம் பட்டாலே, தொப்பையாவது, தொந்தியாவது?? எல்லாம் கரைஞ்சிடுமே??

    அது சரி, இந்த வயசிலேயேவா உங்க எல்லாருக்கும் தொப்பையும், தொந்தியும்??

    கிருஷ்ண, கிருஷ்ணா! எப்படிங்க தங்கமணிங்க எல்லாம் பேசாம இருக்காங்க?

    ReplyDelete
  3. நல்லா கடிக்கிற நாயைப் பாத்து திரும்பக் குரைக்கனும். மிச்சத்தை அது பாத்துக்கும். அது தொரத்த நீங்க ஓட, நீங்க ஓட அது துரத்த.. இப்படியா மாத்தி மாத்தி ரெண்டுபேரும் விளையாடிட்டு இருந்தா.. தொப்ப போயே போச்சு
    இட்ஸ் கான்,போயிந்தி

    எங்கூடு அம்மினி சொன்ன பரிகாரம் இது

    ( நல்லா கவனிங்க மக்களே .. பலகாரம் இல்லை.. பரிகாரம் )

    ReplyDelete
  4. //( நல்லா கவனிங்க மக்களே .. பலகாரம் இல்லை.. பரிகாரம் )//

    :))

    அன்பவம் உண்மையாத்தான் இருக்கும்!

    ReplyDelete
  5. தொந்தியைக் குறைக்க முதல்ல தண்ணி அடிக்கிறதை விடணும்!

    அதனை விடுவதற்கு சிறந்த டிப்ஸ்!

    கல்யாணத்துக்கு முன்னால எப்பவெல்லாம் சொக்கமா இருக்கீங்களோ அப்பவெல்லாம் தண்ணி அடிங்க!

    கல்யாணத்துக்குப் பிறகு எப்பவெல்லாம் சந்தோஷமா இருக்கீங்களோ அப்பவெல்லாம் தண்ணி அடிங்க!

    கொஞ்ச நாள் இதை டிரை பண்ணுங்க! நீங்க தண்ணி அடிக்கிறதை விட்டிருப்பீங்க!

    ReplyDelete
  6. //அது தொரத்த நீங்க ஓட, நீங்க ஓட அது துரத்த.. இப்படியா மாத்தி மாத்தி ரெண்டுபேரும் விளையாடிட்டு இருந்தா.. தொப்ப போயே போச்சு
    இட்ஸ் கான்,போயிந்தி//

    அப்ப்டையே நாய்கிட்டே மாட்டினாலும் கணிசமான அளவு சதை குறைய வாய்ப்பு இருக்கு!

    ReplyDelete
  7. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    ReplyDelete
  8. நான் யாருன்னு உங்களுக்கு ( பெரும்பாலோர்க்கு ) தெரியும் ( கண்டுபிடிங்க ).
    க்ளு : நான் கதை, கவிதை, கட்டுரைன்னு எதுவேணும்னாலும் எழுதுவேன்.
    **

    என்னோட ஐடியா:

    தினமும் வேலை முடிஞ்சு வீடு திரும்பும் போது பாக்கெட்டில உதிர்ந்த மல்லிப்பூவோ இல்லை கனகாம்பரமோ இருக்கனும் கூடவே லிப்ஸ்டிக் கறை சட்டைல ஒட்டிட்டு இருந்தா நல்லது.

    மேலே சொன்ன முறையில் 5 ல் இருந்து 10 கிலோ குறையும் வாய்ப்பு (45 நாள் )

    லிப்ஸ்டிக் முகத்துல இருந்தா 10 -15 கிலோ குறையும் ( 15-30 நாள் )

    இன்னும் அதிக சீக்கிறமா லக்கேஜ் குறைக்கனும்னா.. உங்க ஷர்ட் பட்டன்ல ரெண்டு மூனு நீட்டமா இருக்கிற முடிய சுத்திட்டு போங்க..


    மறந்து போயும் மஞ்சளை எங்கயும் தடவிடாதீங்க. கண்டு பிடிச்சுடுவாங்க.. இந்த காலத்துல யாரும் மஞ்சள் பூசமாட்டோமில்ல...

    வர்ரேன்.. டாட்டா.. பை பை..

    ReplyDelete
  9. //க்ளு : நான் கதை, கவிதை, கட்டுரைன்னு எதுவேணும்னாலும் எழுதுவேன்//

    ஐ வாண்ட் டூ யூஸ் 50/50 ஆப்ஷன்!

    ReplyDelete
  10. // குரோர்பதி கேண்டிடேட் said...

    //க்ளு : நான் கதை, கவிதை, கட்டுரைன்னு எதுவேணும்னாலும் எழுதுவேன்//

    ஐ வாண்ட் டூ யூஸ் 50/50 ஆப்ஷன்!//

    போட்டிக்கு வரதே ரெகமண்டேசன்லே!
    இதுல லொள்ளைப் பாரு! குசும்பைப் பாரு! எகத்தாளத்தைப் பாரு!

    ReplyDelete
  11. // Namakkal Shibi said...

    //அது தொரத்த நீங்க ஓட, நீங்க ஓட அது துரத்த.. இப்படியா மாத்தி மாத்தி ரெண்டுபேரும் விளையாடிட்டு இருந்தா.. தொப்ப போயே போச்சு
    இட்ஸ் கான்,போயிந்தி//

    அப்ப்டையே நாய்கிட்டே மாட்டினாலும் கணிசமான அளவு சதை குறைய வாய்ப்பு இருக்கு!//


    எப்படியோ குறையுது இல்லையா அந்த மட்டும் சந்தோசப்படுங்கப்பு :))

    ReplyDelete
  12. எங்கள் அடிப்படை உரிமைகளுக்கெதிராக கருத்து சொல்பவர்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்!

    ReplyDelete
  13. மூனு அக்காங்க வீட்டுக்கும் ஆட்டோ வருது...

    யப்பா... என்ன ஒரு வில்லத்தனம்?

    ReplyDelete
  14. என்னையும் அணிலையும் கேட்காமல் விட்டதற்கு கைப்புள்ள'க்கு இன்னும் தொப்பை பெரியதாகக்கடவது.!!

    ReplyDelete
  15. காளை வயசு கட்டான சயசு
    களங்கமில்லா மனசு!

    எங்க தலக்கு

    காளை வயசு கட்டான சயசு
    களங்கமில்லா மனசு!

    ReplyDelete
  16. //என்னையும் அணிலையும் கேட்காமல் விட்டதற்கு கைப்புள்ள'க்கு இன்னும் தொப்பை பெரியதாகக்கடவது.!!//

    எங்க கிட்ட ஏற்கனவே பதிவுல சொன்ன அருமையான ஆலோசனைகள் இருக்கே...அதை வச்சி கரைச்சிடுவோமே :)

    ReplyDelete
  17. //அது சரி, இந்த வயசிலேயேவா உங்க எல்லாருக்கும் தொப்பையும், தொந்தியும்??
    //

    கொளுத்திப் போட்டுட்டீங்களா? இப்ப சந்தோஷமா
    :)

    ReplyDelete
  18. //காளை வயசு கட்டான சயசு
    களங்கமில்லா மனசு!

    எங்க தலக்கு

    காளை வயசு கட்டான சயசு
    களங்கமில்லா மனசு!//

    தள...எப்படி இப்படியெல்லாம்?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. கல்யாணம் ஆகாத அண்ணன்களுக்கு

    1. தினமும் ஆபிஸ் க்கு பைக் ஓட்டற ஏதாச்சும் ஒரு பொண்ணு பின்னாடியே ஓடவும்.. வரும் போதும் அப்படியே ஓடி வரவும்.. எந்த காரணம் கொண்டும் கடைசி வரை அந்த பொண்ணோட ஹெல்மெட் ஐ கழட்டமா நீங்க பாத்துக்கனும்.. ஏன்னா.. அதுல கவிதா மாதிரி யாராச்சும் இருந்துட்டா.. ??!!

    தொப்பைய குறைக்க போயி உயிர விட வேண்டி இருக்கும்..

    2. அடுத்து.. வீட்டுல இருக்கற துணி எல்லாத்தையும் தன்ணியில முக்கி.. திருப்பி மேல் மாடிக்கு போயி காயப்போடவும் இது மாதிரி தினமும் 2 முறை செய்யவும்.

    3. வீட்டுல எப்பவும் கவுண்டமணி ரேஞ்சுக்கு கால் தரையில நிக்காம ஆடிக்கிட்டே.. இருக்கனும்..

    4. மூச்சே வெளியில விட முடியாத அளவு தொப்பையை பெரிய கயிறு போட்டு நல்லா இருக்கி கட்டிடனும்..

    5. வீட்டை இருக்கிற அத்தனை பேரையும் கடவுளா நினைச்சு சுத்தி சுத்தி வரனும்... இது ஒரு நாளைக்கு 10 தரம்..


    இது போதும்...யாரும் இதுக்கு மேல இருந்தா சொல்லி அனுப்புங்க..

    ReplyDelete
  20. //வீட்டை இருக்கிற அத்தனை பேரையும் கடவுளா நினைச்சு சுத்தி சுத்தி வரனும்... இது ஒரு நாளைக்கு 10 தரம்..//

    அப்படியே அவங்களுக்குப் படைக்கிறா மாதிரி படைச்சிட்டு பச்டணங்களையே நாமே சாப்பிட்டிடணுமா அணிலு?

    (பின் குறிப்பு: நான் ரங்கா அல்ல)

    ReplyDelete
  21. //இன்னும் அதிக சீக்கிறமா லக்கேஜ் குறைக்கனும்னா.. உங்க ஷர்ட் பட்டன்ல ரெண்டு மூனு நீட்டமா இருக்கிற முடிய சுத்திட்டு போங்க.. //

    லக்கேஜைக் குறைக்க வழி கேட்டா சோலியை முடிச்சுக்கறதுக்கு வழி சொல்றீங்க?
    :((

    ReplyDelete
  22. //அப்ப்டையே நாய்கிட்டே மாட்டினாலும் கணிசமான அளவு சதை குறைய வாய்ப்பு இருக்கு!//


    எப்படியோ குறையுது இல்லையா அந்த மட்டும் சந்தோசப்படுங்கப்பு :))//

    அண்ணாச்சி இந்த ஐடியா வர்க்கவுட் ஆகாது. ஏன்னு கேளுங்க. நாய் நம்ம கிட்டேருந்து கறியை எடுத்து தின்னுட்டு அது குண்டாயிடுமில்ல. அப்புறம் பாவம் அது தன்னோட பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்குமில்ல??? அந்த பாவம் நமக்கு எதுக்கு? உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர்பாக்குறேன்.
    :)

    ReplyDelete
  23. காலைல பிள்ளை(நீங்க இல்ல உங்க பிள்ளை) எழுந்திருக்கும் போது எழுந்து வாச்சல் தெளித்துக் கோலம் போட்டு, பால் பாக்கெட் வாங்கி வந்து, டிகஷன் போட்ட கையோடு பையனுக்குப் பால் காய்ச்சி கொடுத்து,
    காப்பி குடிக்காம சாமி கும்பிட்டு, பலகாரம் சமைச்சு, தங்கமணியை எழுப்பி அவங்களுக்கு துணிமணி மடித்ட்துக் கொடுத்து விட்டு பலகாரம் ஊட்டிவிட்டு, துணிமணிகள மாடியேறிக் க்ளிப் மறக்காம போட்டு உலர்த்திட்டு........
    இது போல ஒரு ஆறு மாசம் செய்தாப் போதும்ப்பா:)

    ReplyDelete
  24. ஹாய் ராஜ்,

    சிபி அண்ணே,
    //ஆலோசனைகள் டிரை பண்ணி பார்த்தவைதான் என்றாலும் சரிப்பட்டு வரவில்லை!// நீங்க பல்லவன் ல காலைல ஒரு 9 மணி வாக்குல கிளம்பி போயி பின்ன சாயங்காலம் 7மணி வாக்குல போயிருந்தீங்கன்னா உங்கலுக்கு கண்டிப்பா வேதியியல் மற்றும் எல்லா இயல் மாற்றமும் கிடைத்திருக்கும், கிடைத்திருக்கனும்.
    அப்ப ஏதோ எங்கயோ கோளாறு னு அர்த்தம் உடனடியா ஒரு அவசர சிகிச்சை தேவையோ னு தோனுது.(சும்மா தான் தப்பாக எண்ண வேண்டாம்)

    ReplyDelete
  25. ஹாய் சிபி,

    நாங்களும் இந்த ஐடியால எவ்வளவோ லக்கேஜ குறைச்சிருக்கோம்.

    ReplyDelete
  26. //காலைல பிள்ளை(நீங்க இல்ல உங்க பிள்ளை) எழுந்திருக்கும் போது எழுந்து வாச்சல் தெளித்துக் கோலம் போட்டு, பால் பாக்கெட் வாங்கி வந்து, டிகஷன் போட்ட கையோடு பையனுக்குப் பால் காய்ச்சி கொடுத்து,
    காப்பி குடிக்காம சாமி கும்பிட்டு, பலகாரம் சமைச்சு, தங்கமணியை எழுப்பி அவங்களுக்கு துணிமணி மடித்ட்துக் கொடுத்து விட்டு பலகாரம் ஊட்டிவிட்டு, துணிமணிகள மாடியேறிக் க்ளிப் மறக்காம போட்டு உலர்த்திட்டு........
    இது போல ஒரு ஆறு மாசம் செய்தாப் போதும்ப்பா:)
    //

    வாங்க வல்லி மேடம்,
    அட தொப்பையைக் கரைக்கறது இவ்வளவு சுலபமா? இதெல்லாம் பண்ணா மட்டும் போதுமா...இல்லை இன்னும் வேற எதாவது இருக்கா?

    ReplyDelete
  27. //சிபி அண்ணே,
    //ஆலோசனைகள் டிரை பண்ணி பார்த்தவைதான் என்றாலும் சரிப்பட்டு வரவில்லை!// நீங்க பல்லவன் ல காலைல ஒரு 9 மணி வாக்குல கிளம்பி போயி பின்ன சாயங்காலம் 7மணி வாக்குல போயிருந்தீங்கன்னா உங்கலுக்கு கண்டிப்பா வேதியியல் மற்றும் எல்லா இயல் மாற்றமும் கிடைத்திருக்கும், கிடைத்திருக்கனும்.
    அப்ப ஏதோ எங்கயோ கோளாறு னு அர்த்தம் உடனடியா ஒரு அவசர சிகிச்சை தேவையோ னு தோனுது.(சும்மா தான் தப்பாக எண்ண வேண்டாம்)
    //

    சரியாச் சொன்னீங்க...இவ்வளவு செய்தப்புறமும் எந்த ஒரு மாற்றமும் இல்லைன்னா அந்த பேருந்தை ஓட்டற டிரைவர் கிட்டத் தான் எதோ தப்பு இருக்கு. அவருக்கு என்ன சிகிச்சை செய்யனும்னு நீங்களே சொல்லிடுங்க...அறுவை சிகிச்சையா இல்லை அறுக்காத சிகிச்சையா?

    ReplyDelete
  28. //டிப்ஸ் 2 : தண்ணி அடிக்கும் போது சிப்ஸ்க்கு பதிலாக ஊறுகாயைப் பயன்படுத்தவும்.//

    velangidum! :)

    ReplyDelete
  29. தொப்பை இல்லாதவர்கள் இங்கே கமெண்ட் போட அனுமதி உண்டா?

    ReplyDelete
  30. //ஃபுட் போர்டுலே அமலா - நல்ல ஐடியா!
    டிரை பண்ணி பார்த்துடுவோம்!//

    அந்தமாதிரி எல்லாம் ஆசையிருக்கா சிபி!

    ReplyDelete
  31. // கீதா சாம்பசிவம் said...

    அது சரி, இந்த வயசிலேயேவா உங்க எல்லாருக்கும் தொப்பையும், தொந்தியும்??

    கிருஷ்ண, கிருஷ்ணா! எப்படிங்க தங்கமணிங்க எல்லாம் பேசாம இருக்காங்க?//

    கீதாம்மா இதுக்கு ஏன் என்னை வம்புக்கு இழுக்கறீங்க? எனக்கு வயிறே இல்லை, டைரக்டா முதுகுதான்:-))

    ReplyDelete
  32. //எங்கூடு அம்மினி சொன்ன பரிகாரம் இது

    ( நல்லா கவனிங்க மக்களே .. பலகாரம் இல்லை.. பரிகாரம் )//

    ஜீவ்ஸ் அது பரிகாரமும் இல்லை பலகாரமும் இல்லை! அது பலாத்காரம்:-))

    ReplyDelete
  33. // வல்லிசிம்ஹன் said...
    காலைல பிள்ளை(நீங்க இல்ல உங்க பிள்ளை) எழுந்திருக்கும் போது எழுந்து வாச்சல் தெளித்துக் கோலம் போட்டு, பால் பாக்கெட் வாங்கி வந்து, டிகஷன் போட்ட கையோடு பையனுக்குப் பால் காய்ச்சி கொடுத்து,
    காப்பி குடிக்காம சாமி கும்பிட்டு, பலகாரம் சமைச்சு, தங்கமணியை எழுப்பி அவங்களுக்கு துணிமணி மடித்ட்துக் கொடுத்து விட்டு பலகாரம் ஊட்டிவிட்டு, துணிமணிகள மாடியேறிக் க்ளிப் மறக்காம போட்டு உலர்த்திட்டு........
    இது போல ஒரு ஆறு மாசம் செய்தாப் போதும்ப்பா:)//

    ஆறு மாசம் இப்படியே செஞ்சா என்ன ஆகும்? தொப்பை போகாது வல்லிம்மா உயிர் தான் போவும்:-))

    ReplyDelete
  34. நல்லா தம் கட்டி வாரம் ரெண்டு தரம் கல்லுரலுல மாவு ஆட்டுங்க தல. அல்வா தின்னு சேர்ந்த தொப்பை அப்படியே கரைஞ்சிடும்.

    மாவுக்கு மாவும் ஆச்சு, தொப்பையும் கரைச்ச மாதிரி ஆச்சு. :))

    ReplyDelete
  35. //காத்து லக்கேஜை தள்ள, லக்கேஜ் காத்தை திரும்ப தள்ள //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  36. One fat guy -

    One fat guy - goes to a popular GYM in Bangalore sees an ad for a new gym guaranteeing to reduce anyone's weight by 5, 10 or 20 kilograms on the first day. So he goes and tells them he wants to lose 5 kg. They lead him into a huge gym with all kinds of ropes and parallel bars and ladders and tell him to wait a minute. He's standing there when on the far side of the gym a door opens and out steps a beautiful girl, with a sign saying

    " If you catch me, I'm yours."

    He starts running, and just as he gets close, she starts picking up speed. Before he knows it, he's running all over the gym, up the ladders, down the ladders, across the parallel bars, here and there. And just as he's about to catch the blonde, pop, she disappears through a door. In comes the management who lead him to the showers, and then weigh him. Sure enough, he lost exactly 5 kg. He's back on the street and starts to think. "God, I was so close to catching her. If I had a little more time..." So he races back to the gym and says, "I want to lose 20 more kg." "No problem," says the manager. Again he is led to the large gym. Thzs time he's standing by the door when it opens. Out comes a Gorilla with a sign.

    "If I catch you, you're mine."

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)