Monday, January 5, 2009

சுயம் - சங்கத்தான்ஸ் விசிட்

வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப் பட்ட பிரம்மரசம் மற்றும் ரெண்டு போட்டியின் வெற்றியாளர்கள்
சார்பாக அவர்களுடைய பரிசுத்தொகையை இவ்வருடம் சுயம் அமைப்பிற்கு நன்கொடை அளிப்பதாக தீர்மானித்தபடி கடந்த ஞாயிறு (ஜனவரி 4, 2008) அன்று சுயம் அமைப்புன் டிரஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் செய்தோம்.

முதலில் வின்னர்ஸ் லிஸ்ட்

பிரம்ம ரசம்

முதல் பரிசு : வெங்கி
இரண்டாம் பரிசு : அம்பி

ரெண்டு போட்டி

முதல் பரிசு : அருட்பெருங்கோ
இரண்டாம் பரிசு : லக்கி லுக்
பெனாத்தல் சுரேஷ்

ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் தல கைப்பு, தேவ், நாகை சிவா மற்றும் நாமக்கல் சிபி ஆகிய நால்வரும் சென்ட்ரல்-வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் சுயம் அமைப்பின் டிரஸ்ட் அலுவலத்தை அடைந்தோம்!

முதல் நாளே லிவிங்க் ஸ்மைல் வித்யா அவர்களிடம் எங்கள் விசிட் பற்றி கூறி முகவரி தொலை பேசி எண்கள் ஆகியவை வாங்கி வைத்திருந்தோம். லிவிங் ஸ்மைல் வித்யா தனக்கு ஞாயிறன்றும் அலுவலகம் இருக்கிறதென்று அவர் அங்கு இல்லை!

நிர்வாக அலுவலர் திரு முத்துராம் அவர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்று இருக்கைகள் கொடுத்து அமரச் செய்தார்.

முதலில் எங்களைப் பற்றி சிறிய அறிமுகம் கொடுத்தோம்! பதிவுலக நன்பர்கள் என்று ஏற்கனவே வித்யாவும் கூறி வைத்திருப்பதாகக் கூறினார் .

அதன் பின்னர் தங்கள் அமைப்பின் நோக்கம், எப்பொழுது, எப்படி ஆரம்பித்தார்கள், எந்த அளவு சவால்களை/சிரமங்களை எதிர்நோக்கினார்கள் என்று தங்கள் ஒவ்வொரு கட்ட வளர்ச்சி பற்றியும் இப்போதைய சவால்கள் தேவைகள் பற்றியும் விவரித்துக் கூறினார்.

அந்த அமைப்பின் ஆரம்பம், வளர்ச்சி பற்றி பின்னர் பிரிதொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்!

இதன் பின்னர் அவ்வமைப்பில் உள்ள ஊழியர்களின் கைவண்ணத்தால் தயாரிக்கப்பட்ட பைகள், குழந்தைகள் வரைந்த ஓவியங்களுடன் கூடிய லெட்டர் பேக்ஸ், கைப்பைகள், ஃபைல் போல்டர்கள் ஆகியவற்றையும் காண்பித்தனர்.

இப்படியே நேரம் ஆகிக்கொண்டிருந்த படியாலும் அங்கே மேலும் சில விசிட்டர்கள் வர இருப்பதை அறிந்ததாலும் புறப்பட ஆயத்தமானோம்!

தல கைப்பு அவர்கள் மொத்த பரிசுத் தொகையான ரூ10,000 க்கான காசோலையை நிர்வாக டிரஸ்டி திரு முத்துராம் அவர்களிடம் சேர்ப்பித்தார்.

அப்போது நாகையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓரளவே பார்வை உடைய 7 வயதுச் சிறுவன் ஒருவன் எங்களிடையே வந்து தானாகவே அறிமுகப் படுத்திக் கொண்டான். கணிதத்தில் அவன் ஜீனியஸ் என்று நிர்வாக டிரஸ்டி எங்களிடம் அறிமுகப் படுத்தியபோது அவனது முகத்தில் தெரிந்த பிரகாசமும், மகிழ்ச்சியும் எங்களை என்னவோ செய்தது!

வருங்கால கணித நிபுணர் என்று நினைத்து கை குலுக்கி அறிமுகப் படுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்!

மேலும் இவ்வமைப்பைப் பற்றிய விவரங்களுக்கு:

சுயம்

Suyam Charitable Trust- Projects

சிறகு

உங்களால முடிஞ்ச உதவிகளை பொருட்களாகவோ, நிதியாகவோ நீங்களும் இந்த அமைப்புக்கு கொடுக்கலாம்!

17 comments:

  1. வாழ்த்துக்கள்... இதே மாதிரி நிறைய சங்கம் தோன்றட்டும்...

    ReplyDelete
  2. சங்கத்து தலைவர் இப்போது முதல் கமண்ட் இட்டவருக்கு 200$ பரிசளிப்பார்...

    ReplyDelete
  3. சார்... சங்கத்து தலைவர் யாரு சார்...

    ReplyDelete
  4. //சார்... சங்கத்து தலைவர் யாரு சார்...//

    !? வருத்தப் படாத சங்கத்துத் தல யாரா?

    யோவ்! எங்க கைப்புள்ளை கெளம்புனாருன்னா என்ன நடக்கும் தெரியுமா?

    ReplyDelete
  5. //ஓரளவே பார்வை //

    //அவனது முகத்தில் தெரிந்த பிரகாசமும்//
    aaNdava :(

    ReplyDelete
  6. உருப்படியான காரியம். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  7. /உருப்படியான காரியம். தகவலுக்கு நன்றி!//

    மிக்க நன்றி கபீஷ்!

    ReplyDelete
  8. //வாழ்த்துக்கள்... //

    மிக்க நன்றி நட்டி அங்கிள்!

    ReplyDelete
  9. கொஞ்ச கால தாமதமாக நடந்த இந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கோருகிறோம்..

    இன்னும் வரும் வருடங்களிலிலும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய காத்திருக்கிறோம்... :)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்!
    பணி மேலும் சிறக்க

    ReplyDelete
  11. தாமதமாகவே நடந்திருந்தாலும் கூட, மனதுக்கினிய நிகழ்வாகவே அமைந்திருப்பதில் மகிழ்வடைக்கிறேன்! :)

    ReplyDelete
  12. /இன்னும் வரும் வருடங்களிலிலும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய காத்திருக்கிறோம்... :)///


    கை கோர்க்கவும் கரம் நீட்டி நிற்கிறோம் :)))

    (என்னையும் அழைச்சுக்கோ தம்பி!)

    :)

    ReplyDelete
  13. //யோவ்! எங்க கைப்புள்ளை கெளம்புனாருன்னா என்ன நடக்கும் தெரியுமா?//

    கெளம்புனா சரி

    கெளம்பாட்டி என்ன நடக்கும் அதை சொல்லுங்க பாஸ் :))))

    ReplyDelete
  14. //Natty said...

    சார்... சங்கத்து தலைவர் யாரு சார்...//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  15. வாழ்க! வாழ்க!

    சிங்கங்கள் புறாக்களைச் சந்தித்ததில் மிக மிக மிக மகிழ்ச்சி!!!!!!

    //கணிதத்தில் அவன் ஜீனியஸ் என்று நிர்வாக டிரஸ்டி எங்களிடம் அறிமுகப் படுத்தியபோது அவனது முகத்தில் தெரிந்த பிரகாசமும்//

    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

    ReplyDelete
  16. //இராம்/Raam said...
    கொஞ்ச கால தாமதமாக நடந்த இந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கோருகிறோம்..//

    மூன்றாம் ஆண்டு விழாவை ஜூப்பரா நடாத்தி, பரிசை சீக்கிரமாவே கொடுத்துருவோம்-ல!
    இந்தத் தாமதம் நம்மை இன்னும் விரைவுபடுத்தட்டும்! :))

    ReplyDelete
  17. //கெளம்பாட்டி என்ன நடக்கும் அதை சொல்லுங்க பாஸ் :))))//

    ஆயில்ஸ் பர்த்டே அண்ணாச்சி!

    எங்க தலை கெளம்பினாலும் கெளம்பாத மாதிரி தான்!
    கெளம்பல்லீன்னாலும் கெளம்புனா மாதிரி தான்!

    அதை ஞாபகம் வச்சிக்கிட்டு பேசுங்க! :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)