Thursday, October 23, 2008

செல்போன் அழகி !!!

செல்போன் அழகி :



உலகில்யாருக்கும் இந்நிலை வந்திருக்கக்கூடாது , அப்படியொரு நிலை ராகவனுக்கு , பாவம் அந்த பிள்ளை அவனும் வயசுக்கு வந்த நாள் முதல் பல பிகருகளுக்கு ரூட் விட்டும் ஏனோ ஒரு பிகரும் இவனை திரும்பி கூட பார்ப்பதில்லை . அவனும் போகாத காலேஜ் இல்லை பண்ணாத சேட்டையில்லை . இருந்தாலும் இப்படி ஒரு நிலை .


இந்த உலகம் இருக்கிறதே விசித்திரமானது , ஒருத்தன் பணக்காரன் ஆகிட்டானா அவன் அப்படியே பிக்அப் பண்ணி பணக்காரன் ஆகி போய்க்கொண்டே இருப்பான் . ஆனா ஏழை, அவன் நிலைமை மேலும் மேலும் ஏழையாகிட்டே இருப்பான் . ( ஏன்டா சொறனை கெட்ட சொறி மண்டையா உனக்கு எத்தன தடவ சொல்றது கதை எழுதும் போது கருத்து சொல்லாதேனு )

ராகவனுக்கு இதுவரைக்கும் ஒரு ஃபிகர்கூட செட் ஆகாதது ஏனோ மனசுக்குள் ஒரு நெறிஞ்சிமுள்ளாக துளைத்துக்கொண்டிருந்தது . அவனது நண்பன் கணேஷோ வகைவகையாய் விதவிதமாய் ரகம்ரகமாய் நூற்றுக்கணக்கில் சரவணஸ்டோர் போல இருந்தான் . ஆமாங்க அவனுக்கு மட்டும்எப்படித்தான் பிகர் செட்டாகுதோ தெரியவில்லை . எந்த பெண்ணை பார்த்தாலும் உடனே உஷார்தான் . அப்படியே பிக்அப் பண்ணி டேக்ஆஃப் பண்ணி பறந்துவிடுவான். ராகவனுக்கு அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும் . ஒரு நாள் இப்படித்தான் ராகவன் தன் ஆற்றாமை தாங்கமல் வாயை விட்டு கேட்டே விட்டான்



''மாப்பி................. மாப்பி , கணேஷ் மாப்பி '' கொஞ்சினான் ராகவன்.


''என்னடா''



''நான் ஒன்னு கேப்பேன் தப்பா நினைக்கக் கூடாது''


''என்ன எழவுடா சொல்லு ''


''நீ நிறைய பொண்ணுங்ககிட்ட போன்ல கடலை போடற , உன்ன பாத்தா பொறாமையா இருக்குடா எனக்கும் ஒரு நம்பர் குடுத்தா நானும் பேசுவேன்ல''


''டே ராகவா... பொண்ணுங்க கிட்ட பேசறது ஒரு கலைடா அதுலாம் உனக்கு வராது , அதும் உனக்கு வயசு பத்தாதுடா ''


''டே டே டே பிளீஸ்டா .. நானும் கத்துக்கறேன்டா''


''சரி ரொம்ப கெஞ்சுற , உன்ன பாத்தாலும் பாவமா இருக்கு , இனிதானு ஒரு பொண்ணு இருக்கு , பாத்து பேசணும் , நம்பர் தரேன் யார் தந்தானு கேட்டா என் பேர சொல்லக்கூடாது ''


ராகவன் நம்பரை வாங்கியதும் வானுக்கும் பூமிக்குமாய் குதித்தான் , ஆஹா ''நமக்கும் கேர்ள்பிரண்ட் கிடைத்துவிட்டதடா என் செல்வமே'' என்று . மனதுக்குள் பட்டாம்பூச்சி டைனோசரஸ் ஸைசில் பறந்தது .


சரி நம்பர் வாங்கியாச்சு அடுத்த என்ன பண்ண , அவனுக்கு ஒன்றும் தெரியாது , உக்காந்து யோசிச்சான் , நின்னுகிட்டே யோசிச்சான் , படுத்துகிட்டு யோசிச்சான் , வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்து யோசிச்சான் , கக்கூஸ் போகும் போது யோசிச்சான் , டக்குனு ஒரு ஐடியா . எஸ்எம்எஸ் அனுப்பலாம்னு முடிவு பண்ணி அனுப்ப ஆரம்பிச்சான் , அதுதான் கீழ இருக்கு .


hi initha how r u

who is this

im ragav from chennai

ok i dont know u

me too

then why are u msgng

i want to frnedshp u

y

i like u

y

i dont know

ok tel me abt u

..................................................... இப்படியே அவங்க பிரெண்ட் ஷிப் ஈஸியாபிக்அப் ஆகிடுச்சு ( கதையை படிக்கும் வாசகர்கள் இப்படி முயற்சிகளில் இறங்க வேண்டாம் , messaging is injurious to your health and ofcourse your wealth )


மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சு மலர்ந்த நட்பு , போன்ல பேச ஆரம்பிச்சுது , ( அதிலிருந்து சில துளிகள் உங்கள் குஷிக்காக )


ராக : டேய் செல்லம் உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு

இனி ; விட்டா என் தொண்டைய கடுச்சு தின்னுடுவ போலருக்கே

ராக ; போடி

இனி ; நீ ஏன்டா என்ன லவ் பண்ண

ராக ; உன்னோட நல்ல குணம்டா !! நீ ஏன் என்ன லவ் பண்ண

இனி ; நான் நிறைய பசங்ககிட்ட பேசிருக்கேன் , ஆனா நீ ஒருத்தன்தான் அதுல நல்லவன் , ஆமா உன்ன யாராவது லவ் பண்ணிருக்காங்களா

ராக ; ஓஓஓஓ நிறைய ஆனா நான் உன்ன மாதிரி ஒருத்திக்காகத்தான்டா இத்தினி நாளா வெயிட் பண்ணிட்டிருந்தேன்

இனி; ஆனா உன் பிரெண்ட் வினோத் வேற மாதிரி சொன்னானே

ராக ; அவன்கிட்டலாம் நீ ஏன் பேசற , அவனுக்கு நான் உங்கூட பேசறத பாத்து பொறாமை அதான்.

இனி ; அவன உன்கிட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரியும்டா , டேய் நீ எப்படி இருப்ப

ராக ; நான் சுமாராதான் இருப்பேன்டா , மீடியம் அய்ட், மாநிறம் , ஷார்ட்டா முடி , நீ எப்படிடா இருப்ப

இனி ; நான் நமீதா மாதிரி இருக்கேனு என் பிரெண்ட்ஸ்லாம் சொல்லுவாங்கடா


ராகவன் இந்த வார்த்தையை கேட்டதிலிருந்து குதூகலமாகியிருந்தான் , நமீதா மாதிரி ஒரு பிகரா நமக்கு , இருந்தாலும் இவனோட லெவலுக்கு நமீதா மாதிரி பிகர் ஜாஸ்திதான் என்று எண்ணிக்கொள்வான் .


செல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது .


இப்போதெல்லாம் கணேஷ்கிட்ட கூட பேசறத்தில்லை . அந்த பொண்ணுகிட்ட இவன் எல்லா உண்மையும் சொல்லி பாவ மன்னிப்பு வாங்கிட்டான் ஏன்னா பாருங்க இவன் ரொம்ப நல்லவன் அதான். இனிதாதான் சொல்லிருக்கா அவனோட சேராத அவன் ரொம்ப மோசம் என்று , அவன்ஏன் என்று கேட்டதற்கு அவனும் நானும் முட்டுக்காடு போனப்ப அவன் என்னோட தப்பா நடக்க முயற்சிபண்ணான் நான் அங்கேயே அவனோட நட்புக்கு முழுக்கு போட்டுட்டேனு சொன்னாள் . கணேஷ் இவனிடம் ஏன்டா என்கிட்ட பேசறதில்லனு கேட்ட போது அவன் இதையெல்லாம் சொன்னான் , அவனோ மச்சி அவள நீ இன்னும் நேர்ல பாத்ததில்ல , அவள மீட் பண்ணி பேசின இப்படிலாம் எங்கிட்ட பேச மாட்டே பிகருக்காக பிரண்ட்ஷிப்ப கட் பண்ற அளவுக்கு போயிடுச்சா தூ போடா என்று துப்பிவிட்டு போனான் . ராகவனுக்கு சுறுக் என்று இருந்தது .


( இதுக்கு மத்தியில் நான் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன் , கதையின் இந்த சீன்வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே இல்லை என்பதையும் அவர்களது காதலுக்கு இதுவரை வயது பதிமூன்று நாட்கள்தான் என்று நினைவில் கொள்க .)


ஒரு நாள் போனில் பேசுகையில் ஆவலோடு இனிதா செல்லம் நான் உன்னை நேர்ல பாக்கணும்டி என்று கேட்டான் , அவளும் சரிடா புருஷா எனக்கும் உன்னை பாக்கணும் போல இருக்குடா , சரி ஞாயித்துகிழமை எனக்கு மெட்ராஸ் யுனிவர்சிட்டில கிளாஸ் அங்க மீட் பண்ணலாம் வரப்போ வெள்ளை டிஷர்ட் கருப்பு பேண்ட் ஓகேவா நான் மஞ்சள் சுடிதார் என்றாள் .


சன்டேக்கு இன்னும் 5 நாள் இருந்தது , அதற்குள் தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என்று சரவணா ஸ்டோர்ஸில் அலைந்த பனியன் டிஷர்ட் ஜட்டி சட்டை என பலதும் வாங்கினான் , AXE CHOCLATE அப்படினு ஒரு புது சென்ட்டு அதையும் வாங்கி கொண்டான் , அதை அடித்துக்கொண்டால் பெண்கள் நம் மேல் விழுந்து பிச்சு பிராண்டுவார்களாமே !!! எனக்கும் தெரியாது அவனுக்கும் தெரியாது . பியூட்டி பார்லருக்கு போய் முகத்தை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவிக்கொண்டான்.


அந்த பொன்னாளும் வந்தது , காலையிலே சீக்கிரம் எழுந்து வீதி முக்கு பிள்ளையார் கோவிலுக்கு போய் இனிதா பேரில் அர்ச்சனையெல்லாம் செய்தான் . தன் காதலியை பார்க்கும் ஆவலில் விபூதி என்று நினைத்து குங்குமத்தை வாயில் கொட்டியதெல்லாம் பிள்ளையாருக்கு மட்டும்தான் தெரியும் .


மதியம் 2 மணிக்கு சந்திப்பதாய் முடிவுசெய்து இருந்தனர் . இவனோ காலை 11 மணிக்கே போய் இளவு காத்த கிளி போல பீச்சில் காத்திருந்தான் . அங்கே பல காதலர்கள் தானும் அது போல இன்னும் 3 மணிநேரத்தில் தன் காதலியுடன் குஜாலாக இருக்க போகிறோம் என்கிற ஆவல் அவனுக்குள் அதிகரித்தது .


அந்த கன்னியை(?) சந்திக்கப்போகும் தருணத்தை நினைத்தாலே அவனுக்குள் ஏதோ செய்தது , ஏதோ என்றால் ஏதோ அல்ல இது வேறு ஒரு ஏதோ அதாவது மனசுக்குள் மத்தாப்பு , கண்ணுக்குள் நிலவு போல .( நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல )


மணி 2.00 , சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம் , எப்படியும் ஒரு நாப்பது பெண்கள் இருந்தனர் . அவர்களில் அவளை எப்படி கண்டு கொள்வது , கூட்டத்தில் பாதி பெண்கள் ஒரளவுக்கு சுமாராக இருந்தாலும் அதில் பாதி பெண்கள் மகா மட்டமாக இருந்தனர் . மனசுக்கு ஏதோ தவறு நடப்பதாக தோன்றியது .


சரி விட்ரா விட்ரா என்று அவளுக்கு போனில் அழைத்தான் , அவள் போனை எடுத்து இருடா ஒரு பத்து நிமிஷம் ரெக்கார்ட் நோட்ல ஸைன் வாங்கிட்டு வந்திடறேன் என்று பதில் வந்தது . ஐயோ இன்னும் பத்து நிமிடமா மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது .


பத்து நிமிடம் மேலும் கற்பனை தொடர்ந்தது .


பத்து நிமிடம் கழிந்தது அவள் வந்தாள் . இவனை போனில் அழைத்தாள் , இவனும் பஸ்ஸடாண்டில் இருந்த அந்த மஞ்சள் சுரிதார் பெண்ணிடம் பேசினான் . அவள் அவன் எதிர்பார்த்ததை விட அழகாக இருந்தாள் , ( தேவயானி போல குடும்பப்பாங்காக )

இருவரும் கடற்கரைக்கு சென்றனர் . காதலித்தனர் . இப்படியே சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர் . கணேஷுக்கு வயிறு எரிந்தது . அதன் பிறகு THEY LIVE HAPPILY EVER AFTER தான் .



.

.

.

.

.

.

.



இன்னும் என்னங்க கதை அவ்ளோதான் ...... ஹலோ சார் கதை முடிஞ்சிது கிளம்புங்க ..... என்னது அந்த பொண்ணு அசிங்கமா இருக்கும்னு நினைச்சீங்களா... யோவ் ஒருத்தன் நல்லாருந்தா உங்களுக்கு புடிக்காதே .... என்னா வில்லத்தனம்......அவனே பாவம் பல வருஷத்துக்கப்புறம் ஒரு பிகர உஷார் பண்ணிருக்கான் அதுவும் அசிங்கமா இருக்கணும் நினைக்கிறீங்களே உங்களையெல்லாம் கொண்டு போய் உகாண்டா கருங்குரங்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு டார்ச்சர் பண்ணனும் .

சரி வந்தது வந்துட்டீங்க அப்படியே என்னை திட்டணும்ன ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்கோ ..... ( மக்கள்ஸ் என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போடலைண்ணா அடுத்த பதிவுல டார்ச்சர் அதிகமா இருக்கும் beware )

___________________________________________________________________

32 comments:

  1. பின்னூட்ட பிக்காரித்தனம்

    ReplyDelete
  2. //messaging is injurious to your health and ofcourse your wealth//

    WOW!

    ReplyDelete
  3. செம காமெடி அதிஷா.. கலக்கலா எழுதுறீங்க.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. அடாடா.. நல்லா எழுதறீங்க அப்பு.. கதைய..

    ReplyDelete
  5. :-)))...

    சூப்பரு...

    // செல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது //

    இங்க வர்ற கஸ்மாலத்துக்கு என்ன அர்த்தங்கோ??

    காதல் நமீதா மாதிரி இருக்கற பொண்ணுங்கள தேவயானி மாதிரி குடும்பப்பாங்கா மாத்திடிச்சே!!! காதலோட மகிமையே மகிமை!!!

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி வெண்பூ

    ReplyDelete
  7. நன்றி பூச்சாண்டியார் அப்படியே என்னோட வலைப்பூவுலயும் ஒரு பின்னூட்டம் போட்டா நல்லாருக்கும்ல

    ReplyDelete
  8. செல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது .
    muthukumar

    ReplyDelete
  9. \\ இங்க வர்ற கஸ்மாலத்துக்கு என்ன அர்த்தங்கோ?? \\

    வாங்க விஜய் ஆனந்த கஸ்மாலம்னா என்னனு விரைவில் என் வலைப்பூவில் தனி பதிவிடுகிறேன்

    வர்கைக்கு நன்னி

    ReplyDelete
  10. செல்போன் கடலை காதலாகி காதல் காமமாகி காமம் கஸ்மாலமாகியிருந்தது .
    romba nalla irukkthunu solla vanthen

    ReplyDelete
  11. செம!!செம!! சூப்பர்னா!!!

    ReplyDelete
  12. உங்கள் பின்குறிப்பு தான் என்னை இடதுகையால்(பீச்சங்கை) அடித்தது

    ReplyDelete
  13. எப்போ சாமி தாங்க முடியலை அப்படி அதாவுது ஒரு நம்பர் இருந்த கொடுங்களேன் :) :) புண்ணியமா போகும் ஆனால் கதையின் முடிவு மாதிரி இருக்கணும் :)

    நன்றாக இருந்தது .

    ReplyDelete
  14. ;-))) உட்கார்ந்து யோசிப்பீங்களோ

    கலக்கலு

    ReplyDelete
  15. கிகிகிகிகிகிகி

    ReplyDelete
  16. Ada Poya !!!!!!!!

    AArvama irundhen ..enakku dhan seme bulb

    ReplyDelete
  17. நல்லா இருக்கு அதிஷா... வாழ்துகள்

    ReplyDelete
  18. அதிஷா கலக்கல் பதிவுப்பா!

    ReplyDelete
  19. சே, டுவிஸ்டு வரும்னு பார்த்தேன் வரலை. இதுக்கு ரெண்ண்டாம் பாகம் நான் எழுதவா? முடிவு பிடிக்கலை :(

    ReplyDelete
  20. பின்னிட்டீங்க போங்க !!

    பிகருக்கு SMS அனுப்பியே சொத்த அழிக்கறவங்க நம்ம ஊர்ல நிறையபேர் இருக்காங்க.


    சின்ன வருத்தம்...நல்லா போய்க்கிட்டிருந்த கதையை பொசுக்குன்னு முடிச்சிடீங்களே.

    ReplyDelete
  21. நீங்க ராகவனா இல்லே கணேஷா?
    ஐ மீன் நல்லவரா இல்லே கெட்டவரா?

    ReplyDelete
  22. நல்லா இருக்கு அதிஷ்காந்த்

    ReplyDelete
  23. சரியான நகைச்சுவையான கதைக் கோர்வை தொடர்ந்து எழுதுங்கள்
    நன்றி

    ReplyDelete
  24. சூப்பர் ங்கனா!! கதை சும்மா தூள்!!

    //( தேவயானி போல குடும்பப்பாங்காக )
    அப்பாட.. நான் கூட எங்க அவனுக்கு நமீதா கடச்சுருமொன்னு பயந்தே போய்டேன்!! இப்போ தன் நிம்மதிய இருக்கு!

    ReplyDelete
  25. சான்ஸே இல்ல அதிஷா... லேட்டஸ்ட் ட்ரென்ட்ல கதை எழுதி கலக்கிட்டீங்க போங்க... கதை நடையிலும் சரி, கதைக்கருவிலும் சரி, புதுமை பளிச்சிடுகிறது:). நல்லாவே சிரிக்க வெச்சுட்டிங்க... முடிவும் மிக‌ அருமை:):):) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  26. vayya tavusar pandi. lollu ekamparam. sari sari epti unnala mattum ipati vitha vithama yosikka mudiyuthu?

    ReplyDelete
  27. nice bro///
    congrad....

    ReplyDelete
  28. பிடியுங்க் பூங்கொத்தை! ... ஆழமான, அழுத்தமான பதிவு. வாழ்க வளமுடன். வாழ்த்துகள் மாப்பு....

    ReplyDelete
  29. unagaluku nadandhadhu madhiri iruku anaal climax change ayiruku....

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)