Thursday, May 8, 2008

:-) பல்டி லெவல் மார்கெட்டிங்க் (-:

எதோ ஒரு விதத்தில் முன்பே அறிமுகமான இந்திய மலேசியர் இருவரின் உரையாடல்கள்,

"சார் உங்களை சந்திக்கனும்னு நினச்சிக்கிட்டே இருப்பேன்...எதாவது வேலை வந்து தள்ளிப் போய்டுது"

"நானும் தான் சார், உங்க தொலைபேசி எண்ணை தொலைத்துவிட்டேன் அதனால தொடர்பு கொள்ள முடியல..."

"எப்படி இருக்கிங்க....அழஞ்சி திரிஞ்சு எதாவது செய்தால் தான் பொழைக்க முடியும் போல இருக்கு"

"சரிதான், முன்னமாதிரி மாச சம்பளத்தில காலம் ஓட்ட முடியல"

"சார், நீங்க தனியார் நிறுவனத்தில் தானே வேலை செய்றிங்க, சம்பளம் கட்டுப்படி யாகுதா ?

"அட...நானே கூட அதை உங்களிடம் கேட்க நினைத்தேன்"

"ஆமாம், பாருங்க சார், ஏறுகிற விலை வாசியில் எங்கே கட்டுப்படி ஆகுது, இருந்தாலும் ஒருவாறு சாமாளிக்கிறேன்"

"உங்களிடம் ஒண்ணு ..."

அவரை பேசவிடாமல்,

"உங்களுக்கு பார்டைம் வேலைப் பார்க்க இஷ்டம் இருக்கா ?"

"உங்களிடம் ஒண்ணு"

"சார், ஸெங்கோ (மங்குஸ்தான் பழசாறு) பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா ?, இதோ பாருங்க "

"...."

"பாருங்க சார்...இது சர்வரோக நிவாரணி சார், ப்ளட் ப்ரசர், சர்கரை எல்லாத்தையும் கட்டுபடுத்துது"

"......!!!! ? " வியப்பு பொங்க அவரைப் பார்க்க,

"ரொம்ப ஆர்வமாக இருக்கிங்க, சொல்றேன், இது பாட்டிலில் அடைத்த ஒரு திரவ உணவு...மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி ஜென்மத்துக்கும் திரும்பாது"

"...."

"ஒரு பாட்டில் விலை 100 ரிங்கிட்.... ஆனால் இது வெளி மார்க்கெட்டில் 120 ரிங்கிட் வரை போகுது"

"...."

"பாருங்க சார்...இதை என் பார்டைம் கம்பெனி 80 ரிங்கிட்டுக்கு உறுப்பினர்களுக்கு கொடுக்கிறார்கள்"

அவரே தொடர்ந்து...

"அத நாம 100 ரிங்கிட்க்கு பொதுமக்களுக்கு விற்கலாம், கூடவே எங்க கம்பெனியில் விற்பனை செய்ய உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் மாச மாசம் நிரந்தரமாக கமிசன் வரும்..."

"........!!!"

"என்ன சார் அப்படி பார்க்கீறிங்க ? புரியுது நானே சொல்லிடுறேன் .... இதை எல்லோரும் மல்டி லெவல் மாட்கெட்டிங்கான்னு கேட்கிறாங்க... ஆனா இது அது இல்லை...இது வேற..."

"நான் சொல்ல வந்தது..."

"பாருங்க சார்...நீங்க யோசிக்கிறிங்க, தயங்குறிங்க, புரியுது... இப்ப பாருங்க என் மாத வருமானமாக அலுவலக சம்பளம் தவிர கூடுதலாக 5000 ரிங்கிட் வரை கிடைக்குது, என்கிட்ட கார் இருக்கு....பேங்கில சேவிங் இருக்கு"

"நான் சொல்ல வந்தது..."

"நம்புங்க சார், 3 மாதத்தில் உங்க தேவையெல்லாம் பூர்த்தியாகிடும்...."

"நான் சொல்ல வந்தது...."

"இன்னும் எதோ கேட்க நினைக்கிறீர்கள் ....சரி உங்க சந்தேகத்தைக் கேளுங்க...."

"சார் நானும் அதே மங்குஸ்தான் பழச்சாறு தான் விற்கிறேன்"

அதிர்ச்சி அடைந்தவர்,

"கெட்டுது போங்க...வீட்டுக்கு போக நேரமாச்சு...நாம அப்பறம் பேசுவோம்"

இருவரும் அசடு வழிந்து பிரிகிறார்கள்.

24 comments:

  1. மலேசியாவில் என்னை இது வரை யாரும் அனுகியதில்லை... :P

    ஒரு வேளை இவன் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்களோ.. :)

    மலேசிய இந்தியர்கள் மட்டும் தானா இப்படி, எனக்குத் தெரிந்து பொதுவாகவே, இந்தியர்கள் வெளி நாடு சென்றாலும், இதுப் போல மெ.எல்.எம் பின்னால் சுற்றுவார்கள்.

    அமெரிக்கவாசிகள் நன்றாக விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.. :)))))

    ReplyDelete
  2. கலக்கீட்டீங்க போங்க..... :))

    //
    இந்திய மலேசியர்கள்...
    //
    இது புதுசா இருக்கே.... மலேசிய இந்தியர்கள் கேள்விப்பட்டுருக்கேன்.... இது யாரு இந்திய மலேசியர்கள்..... :P

    ReplyDelete
  3. கரீட்டு தல. எங்க போனாலும் வுடமாட்றானுக.
    எப்பிடி தெரியும்? நானும் ஜூசுதான்விக்கறேன்.வேணுமின்னா சொல்லுபா.

    ReplyDelete
  4. இப்ப கொஞ்ச நாளா எங்க ஊர்ல இவிங்க தொல்ல கொறஞ்சிருக்கு. ஒரு தபா ஒர்த்தன் வந்து இது மாதிரி கொஞ்சம் எக்ஷ்ட்ரா பைசா பண்ண விருப்பமான்னு கேட்டான். இல்லைன்னு சொன்னேன்.
    இப்ப சம்பாதிக்கறதயே எப்படி செலவு பண்றதுன்னு முழிச்சிக்கிட்டு இருக்கேன்னு ஒரு போடு போட்டேன். வுட்டான் சவாரி!

    நீங்களும் முன்ன பின்ன தெரியாத சோமாறிகள் வந்து தொந்தரவு செஞ்சா இப்படி சொல்லுங்க. அவனுங்க ட்ரெயினிங்ல இதுக்கு பதில் இன்னும் சொல்லித் தரலை :-)

    ReplyDelete
  5. அங்க ஜூஸா? இங்க ஆம்வே தான் ஹாட்.
    சும்மா சுத்தி சுத்தி வராங்க. :))

    ReplyDelete
  6. தலைப்புதான் சூப்பர் ராசா!
    பல்டி லெவல் பாக்கெட்டிங்'ன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்

    ReplyDelete
  7. ////Blogger TBCD said...
    மலேசியாவில் என்னை இது வரை யாரும் அனுகியதில்லை... :P
    ஒரு வேளை இவன் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்களோ.. :)////

    உங்களுடைய சூப்பர் சுப்பராயன் மிக்ஸ்டு வித் சரத்குமார் தோற்றப் பொலிவைப் பார்த்தவுடன், எவனுக்குத்தான் பக்கத்தில் வர்த் துணிவு இருக்கும்?
    அதுவும் பல்டி லெவல் ஆசாமிகளுக்கா? நோ சான்ஸ்!

    ReplyDelete
  8. ////Blogger TBCD said...

  9. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்கின் லேட்டஸ்ட் ப்ராடக்ட் லைஃப் இன்சூரன்ஸ் இந்த லிங்க்ல பாருங்க.

    வந்து தாலிய அறுக்கறானுங்க :((

    ReplyDelete
  10. முன்ன கமெண்ட்ல லிங்க் தப்பா வந்திடுச்சு

    சரியான லிங்க்
    http://www.tlcnet.co.in/plan.asp

    ReplyDelete
  11. உங்க அலுவலக நண்பரிடம் 100 வெள்ளி இழந்தது ஞாபகம் வரவில்லை???
    :-))

    ReplyDelete
  12. Hi,
    MLM is a unique business model where you need not to invest office, factory, employees.
    MLM is a place where with a small amount of capital,you can start your own business.
    MLM is a people’s business.MLM develops a person to become a better person,better leader.MLM makes you grow as you grow your business.
    MLM is a business in which there are 14 million distributors involved(approx) worldwide and generating around 80 billion dollars(approx) now.
    In U.S,lot of indians are involved in MLM,with quickstar(formerly amway).Randy Gage of AGEL(www.agel.com) earns 1.5 million as commission per year.
    If you are in MLM,you will learn to do the following skills:

    1.How to write professional emails
    2.How to write your own Adv copy
    3.How to get rid of shyness and come out of your shell
    4.How to talk to a stranger
    5.How to write your own ebook
    6.How to write articles in your niche area
    7.How to do presentation
    8.How to tackle rejection
    9.How to do prospecting and close sales
    10.How to run a business

    People like Robert Kiyosaki and Donald Trump are recommending Network marketing.
    Grab your copy of their article “why we recommend network marketing” here at this link:
    http://www1.freewebs.com/legitimatemlm/TrumpKiyosakiArticle.pdf

    Please go through the books like “Rich dad and poor dad”
    and “The Business School for People Who Like Helping People” by robert kiyosaki.
    withinternet,it bocmes easier to attract likeminded people and earn residual income.
    Hope it helps to clear the misunderstanding about MLM.

    Best wishes,
    Kannan Viswagandhi
    http://www.kannanviswagandhi.com
    http://www.truemlmrockstar.com
    http://www.growing-self.blogspot.com

    ReplyDelete
  13. //இந்தியர்கள் வெளி நாடு சென்றாலும், இதுப் போல மெ.எல்.எம் பின்னால் சுற்றுவார்கள்.//

    உண்மை !!!!

    அன்புடன்
    கே ஆர் பி
    http://visitmiletus.blogspot.com/

    ReplyDelete
  14. //TBCD said...
    மலேசியாவில் என்னை இது வரை யாரும் அனுகியதில்லை... :P

    ஒரு வேளை இவன் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்களோ.. :)
    //

    TBCD, அது காரணமில்லை, கீழே வாத்தியார் எழுதி இருக்கார் பாருங்க.
    :)

    ReplyDelete
  15. //ஜெகதீசன் said...
    கலக்கீட்டீங்க போங்க..... :))

    //
    இந்திய மலேசியர்கள்...
    //
    இது புதுசா இருக்கே.... மலேசிய இந்தியர்கள் கேள்விப்பட்டுருக்கேன்.... இது யாரு இந்திய மலேசியர்கள்..... :P//

    ஜெகதீசன்,

    இந்தியர்கள் மலேசியாவில் இருந்தால் இந்திய மலேசியர்கள் தானே
    :)

    ReplyDelete
  16. //டோமரு. said...
    கரீட்டு தல. எங்க போனாலும் வுடமாட்றானுக.
    எப்பிடி தெரியும்? நானும் ஜூசுதான்விக்கறேன்.வேணுமின்னா சொல்லுபா.

    Thu May 08, 08:44:00 AM IST
    //

    எம் எல் எம் பேரெல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிட்டு நானும் அதில் தான் இருக்கிறேன் என்றால் காணாமல் போய்டுவாங்க, வரமாட்டாங்க.

    ReplyDelete
  17. //நாகு (Nagu) said...
    இப்ப கொஞ்ச நாளா எங்க ஊர்ல இவிங்க தொல்ல கொறஞ்சிருக்கு. ஒரு தபா ஒர்த்தன் வந்து இது மாதிரி கொஞ்சம் எக்ஷ்ட்ரா பைசா பண்ண விருப்பமான்னு கேட்டான். இல்லைன்னு சொன்னேன்.
    இப்ப சம்பாதிக்கறதயே எப்படி செலவு பண்றதுன்னு முழிச்சிக்கிட்டு இருக்கேன்னு ஒரு போடு போட்டேன். வுட்டான் சவாரி!

    நீங்களும் முன்ன பின்ன தெரியாத சோமாறிகள் வந்து தொந்தரவு செஞ்சா இப்படி சொல்லுங்க. அவனுங்க ட்ரெயினிங்ல இதுக்கு பதில் இன்னும் சொல்லித் தரலை :-)
    //

    நாகு,
    இது அட்டகாச ஐடியா !
    :)

    ReplyDelete
  18. //ambi said...
    அங்க ஜூஸா? இங்க ஆம்வே தான் ஹாட்.
    சும்மா சுத்தி சுத்தி வராங்க. :))
    //
    ambi,

    ஆம்வே நண்பர்களால் 100 - 150 சிங்கை வெள்ளி வரைக்கும் இழந்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. //SP.VR. SUBBIAH said...
    ////Blogger TBCD said...
    மலேசியாவில் என்னை இது வரை யாரும் அனுகியதில்லை... :P
    ஒரு வேளை இவன் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்களோ.. :)////

    உங்களுடைய சூப்பர் சுப்பராயன் மிக்ஸ்டு வித் சரத்குமார் தோற்றப் பொலிவைப் பார்த்தவுடன், எவனுக்குத்தான் பக்கத்தில் வர்த் துணிவு இருக்கும்?
    அதுவும் பல்டி லெவல் ஆசாமிகளுக்கா? நோ சான்ஸ்!
    //

    குருவே,
    சரணம்!!! நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டிங்க.
    :)

    ReplyDelete
  20. //மங்களூர் சிவா said...

    உங்களுடைய சூப்பர் சுப்பராயன் மிக்ஸ்டு வித் சரத்குமார் தோற்றப் பொலிவைப் பார்த்தவுடன், எவனுக்குத்தான் பக்கத்தில் வர்த் துணிவு இருக்கும்?
    அதுவும் பல்டி லெவல் ஆசாமிகளுக்கா? நோ சான்ஸ்!
    //

    சிவா,

    சுற்றி சுற்றி அடிக்க முயற்சிக்கிறிங்க, அவரை சுற்றி வருவது சுலபமில்லை.

    ReplyDelete
  21. //மங்களூர் சிவா said...
    முன்ன கமெண்ட்ல லிங்க் தப்பா வந்திடுச்சு

    சரியான லிங்க்
    http://www.tlcnet.co.in/plan.asp
    //

    சிவா,

    நன்றி ! பார்க்கிறேன்.

    ReplyDelete
  22. //வடுவூர் குமார் said...
    உங்க அலுவலக நண்பரிடம் 100 வெள்ளி இழந்தது ஞாபகம் வரவில்லை???
    :-))
    //

    குமார்,

    அது 120 வெள்ளி.
    :)

    ReplyDelete
  23. வாத்தியாரைய்யா,

    என் மேலே உங்களுக்கு ஏன் இந்த அளவு கடந்த பாசம்.

    வாசகர்களே,

    என்னைப் பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.

    ///
    SP.VR. SUBBIAH said...
    உங்களுடைய சூப்பர் சுப்பராயன் மிக்ஸ்டு வித் சரத்குமார் தோற்றப் பொலிவைப் பார்த்தவுடன், எவனுக்குத்தான் பக்கத்தில் வர்த் துணிவு இருக்கும்?
    அதுவும் பல்டி லெவல் ஆசாமிகளுக்கா? நோ சான்ஸ்!
    ///

    ReplyDelete
  24. இது ஏதோ மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை வாங்கிப் போட்டாபலே இருக்கு.

    ////
    கோவி.கண்ணன் said...
    //SP.VR. SUBBIAH said...
    ////Blogger TBCD said...
    மலேசியாவில் என்னை இது வரை யாரும் அனுகியதில்லை... :P
    ஒரு வேளை இவன் வாங்கவும் மாட்டான், விற்கவும் மாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்களோ.. :)////

    உங்களுடைய சூப்பர் சுப்பராயன் மிக்ஸ்டு வித் சரத்குமார் தோற்றப் பொலிவைப் பார்த்தவுடன், எவனுக்குத்தான் பக்கத்தில் வர்த் துணிவு இருக்கும்?
    அதுவும் பல்டி லெவல் ஆசாமிகளுக்கா? நோ சான்ஸ்!
    //

    குருவே,
    சரணம்!!! நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டிங்க.
    :)
    ////

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)