Monday, May 5, 2008

குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

இளைய தளபதி விஜயின் குருவி படத்தை சிறப்புக் காட்சியாக கலைஞருக்கு போட்டுக் காண்பித்து, விமர்சனம் எழுதித்தரச் சொல்லி தலையை சொறிகிறார், அந்த படத்தின் இயக்குனர் தரணி. பேரன் உதயநிதியின் படம் என்பதால் அரைமனதாக ஒப்புக் கொள்கிறார் கலைஞர், இனி கலைஞரின் விமர்சனம் இங்கே,

********
குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !

உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வருவது தான் குருவி.

இந்த படத்தை சிறப்புக் காட்சியாக எனக்குப் போட்டுக் காட்டினார்கள், தம்பி தரணியின் மற்றொரு தங்கமான படைப்புதான் குருவி. அன்பு தம்பி இளைய தளபதி என்னும் இளைய சூராவளி விஜயின் மற்றொரு வெற்றிப் படம் தான் குருவி.

தமிழகத்தில் இந்த படத்தை எடுத்து இருந்தால் பொதுமக்களே எதிர்த்திருப்பார்கள். காரணம் அமைதிச் சோலையான தமிழகத்தில் கொத்தடிமை முறை என்பது திமுக முதல் முறை அரியணை ஏறிய போதே ஒழிக்கப்பட்டுவிட்டது. தம்பி தரணி அண்டை மாநிலம் கடப்பாவில் நடக்கும் கொத்தடிமையை களைவதற்கு கடப்பாடு கொண்டு தன்னாலான முயற்சியை நன்றாக செய்து இருக்கிறார்.

கண்குளிர மலேசிய காட்சிகள், சீறிப்பாயும் காளையென விஜயின் அதிரடி சண்டைக்காட்சிகள். மின் தூக்கியில் அடைக்கப்பட்டு மீண்டுவரும் இளைய தளபதி விஜய், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகராவை நினைவு படுத்துகிறார். அழகு பதுமையாக வனிதை திரிசா காதல் பாடல்களில் இளைஞர்களின் மனைதை கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில் பம்பரமாக சுழன்றாடும் விஜய் பரவசப்படுத்துகிறார். அன்று தாயைக் காத்த தனயனாக மனோகரா இன்று தந்தையை காட்கும் தனயனாக வெற்றிவேலுவாக விஜய் என் நினைவுகளையெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னால் இட்டுச் செல்கிறார். முதல் பத்து நிமிடங்கள் (மட்டும்) வந்தாலும் சின்னக் கலைவாணர் விவேக்கின் நகைச்சுவை நம் நாடி நரம்புகளையெல்லாம் சிரிக்க வைக்கிறது.

படத்தின் சிறப்பென ஆசிஸ்வித்யார்த்தியின் அருமையான நடிப்பு, தம்பி சுமனின் வில்லத்தனம், தம்பி வித்யாசாகரின் தரமான இசை, கழக உடன்பிறப்பு மணிவண்ணனின் குணச்சித்திர நடிப்பு இப்படி எதைவிடுவது எதைச் சொல்வதென்றே இந்த படத்தைப் பார்த்த நான் திக்குமுக்காகிவிடுகிறேன்.

கனவு பாடல்களுக்காக வனிதை திரிசாவா, திரிசாவுக்காக கனவுப் பாடல்களா ? உங்களோடு சேர்ந்து எனக்கும் ஐயம் ஏற்படுகிறது. முதல் (தர) காட்சிகளில் வந்து இளமையை கிள்ளிச் செல்கிறார் படர்ந்த பருவக் கொடி மாளவிகா.

குருவி - இது வணிகம் சார்ந்த திரைப்படம் அல்ல. ஏழை எளியவர்களின் கொத்தடிமை துயர் துடைக்கும் பாடம். கழக உறுப்பினர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து, பயன்பெற்று தம்பி விஜயையும், இயக்குனர் தரணியையும் தாராளமாகப் போற்றலாம்.

குருவி மூன்றெழுத்து
விஜய் மூன்றெழுத்து
தரணி மூன்றெழுத்து
திரிசா மூன்றெழுத்து
சுமன் மூன்றெழுத்து
விவேக் மூன்றெழுத்து

மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !

பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில் அரசியல் எதுவும் இல்லை.

35 comments:

  1. நமிதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் என்று புது ஆத்திச்சுடி சொல்லுதாமே..

    அதன் படி, இல்லாத நமீதாவை குருவியில் கண்ட அண்ணன் கோவிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. மனித குலத்தின் மாமேதை மார்க்ஸ் வாழ்க.

    ReplyDelete
  3. //பாடல் காட்சிகளில் பம்பரமாக சுழன்றாடும் விஜய் பரவசப்படுத்துகிறார். //

    ஹஹா! வாய் விட்டு சிரித்தேன். தங்களின் நுண்ணரசியல் வியக்க வைக்கிறது.

    மொக்கை கூட மூன்றேழுத்து தான்! :p

    ReplyDelete
  4. சோக்கா கீது...

    ReplyDelete
  5. அசத்தல் தலைவரே. கலக்கிட்டீங்க! :-)

    ReplyDelete
  6. //குருவி மூன்றெழுத்து
    விஜய் மூன்றெழுத்து
    தரணி மூன்றெழுத்து
    திரிசா மூன்றெழுத்து
    சுமன் மூன்றெழுத்து
    விவேக் மூன்றெழுத்து

    மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !//

    விமர்சனத்தை மாதிரியே க்ளைமாக்ஸும் சூப்பர் கோவி சார். ரசிச்சேன்.

    ReplyDelete
  7. //குருவி மூன்றெழுத்து
    விஜய் மூன்றெழுத்து
    தரணி மூன்றெழுத்து
    திரிசா மூன்றெழுத்து
    சுமன் மூன்றெழுத்து
    விவேக் மூன்றெழுத்து

    மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !//

    ஹி ஹி.... :))

    ReplyDelete
  8. சூப்பர் விமர்சனம்!

    "மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து ..."

    நல்லவேளை இப்படி முடித்தீர்கள்

    நன்றி
    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  9. இது அந்தக் காலத்து நீதிக்குத் தலை வணங்கு கதை போல் தெரிகிறது. யாராவது எம்ஜியார் ரசிகர்கள் இருக்கிறார்களா? அதிலும் கொத்தடிமை, பைக் ரேஸ் எல்லாம் இருந்ததாக நினவு.

    ReplyDelete
  10. கொடுமை மூன்றெழுத்து
    தோல்வி மூன்றெழுத்து
    வேணாம் மூன்றெழுத்து
    ஓடிரு மூன்றெழுத்து

    ReplyDelete
  11. //பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில் அரசியல் எதுவும் இல்லை//

    பின்(நவீனத்துவக்)குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம்,
    இதில் அரசியல் எதுவும் இல்லை. (நுண்ணரசியல் மட்டுமே உண்டு!)

    இத இத இதத் தானே சொல்ல வந்தீங்க கோவி அண்ணா? :-)))

    ReplyDelete
  12. //கொடுமை மூன்றெழுத்து
    தோல்வி மூன்றெழுத்து
    வேணாம் மூன்றெழுத்து
    ஓடிரு மூன்றெழுத்து//

    ஹா ஹா ஹா!

    ReplyDelete
  13. //குருவி மூன்றெழுத்து
    விஜய் மூன்றெழுத்து
    தரணி மூன்றெழுத்து
    திரிசா மூன்றெழுத்து
    சுமன் மூன்றெழுத்து
    விவேக் மூன்றெழுத்து
    //

    கோவி அண்ணா, இன்னொன்னு கவனிச்சீங்களா?
    லக்கி-யும் மூன்றெழுத்து தான்! :-)))
    இருங்க வந்து உங்க கலைஞர் விமர்சனத்துக்கு ஒங்க மண்டையில் குட்டப் போறாரு!

    ReplyDelete
  14. //TBCD said...
    நமிதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் என்று புது ஆத்திச்சுடி சொல்லுதாமே..

    அதன் படி, இல்லாத நமீதாவை குருவியில் கண்ட அண்ணன் கோவிக்கு வாழ்த்துக்கள்..
    //

    TBCD,

    உனக்கு மட்டும் ஒரு ரகசியம்.

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய், காமலை கண்ணுக்கு கண்டதெல்லாம் நமிதா !
    :)

    ReplyDelete
  15. //ஒரிஜினல் "மனிதன்" said...
    மனித குலத்தின் மாமேதை மார்க்ஸ் வாழ்க.
    //

    மார்க்ஸ் குருவி பார்த்தாரா ? ஐயையோ ஐயையோ !

    ReplyDelete
  16. //ambi said...
    ஹஹா! வாய் விட்டு சிரித்தேன். தங்களின் நுண்ணரசியல் வியக்க வைக்கிறது.

    மொக்கை கூட மூன்றேழுத்து தான்! :p

    Mon May 05, 10:05:00 AM IST//

    அம்பி,

    பம்பரத்தை எழுதிட்டு, திரும்ப படித்துப் பார்த்த போதுதான் 'தவறாக' பட்டது, அடித்து வைத்தேன். :) வைகோ வரப்படாது இல்லையா ?

    ReplyDelete
  17. //kadugu said...
    சோக்கா கீது...
    //

    நன்றி !

    ReplyDelete
  18. //லக்கிலுக் said...
    அசத்தல் தலைவரே. கலக்கிட்டீங்க! :-)

    Mon May 05, 10:10:00 AM IST
    //

    லக்கிலுக்,

    நீங்களே ரசித்த பிறகு, இந்த இடுகைக்கு எதிர்ப்பு (ஆட்சேபம்) ஏது ?
    :)

    ReplyDelete
  19. //ஜெகதீசன் said...
    :)
    //

    புன்னகை மன்னா, நீவீர் வாழ்க !

    ReplyDelete
  20. //கைப்புள்ள said...
    விமர்சனத்தை மாதிரியே க்ளைமாக்ஸும் சூப்பர் கோவி சார். ரசிச்சேன்.

    Mon May 05, 01:36:00 PM IST
    //

    கைப்புள்ள,

    மிக்க நன்றி,

    வவாச டிரேட் மார்க் பதிவு கைப்புள்ள பதிவு ஒன்னு போட்டுடுவோம்.

    ReplyDelete
  21. //இராம்/Raam said...

    ஹி ஹி.... :))
    //

    நன்றி !

    ReplyDelete
  22. //மயிலாடுதுறை சிவா said...
    சூப்பர் விமர்சனம்!

    "மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து ..."

    நல்லவேளை இப்படி முடித்தீர்கள்

    நன்றி
    மயிலாடுதுறை சிவா...

    Mon May 05, 11:28:00 PM IST
    //

    மயிலாடுதுறை சிவா,

    தவறான படத்துக்கு சிறப்பான விமர்சனம் எழுதினால் அதைப்பார்த்து வருத்தப்படும் முதல் மனிதனும் நான் தான். ( திருவிளையாடல் வசனம்)

    ReplyDelete
  23. //Anonymous said...
    இது அந்தக் காலத்து நீதிக்குத் தலை வணங்கு கதை போல் தெரிகிறது. யாராவது எம்ஜியார் ரசிகர்கள் இருக்கிறார்களா? அதிலும் கொத்தடிமை, பைக் ரேஸ் எல்லாம் இருந்ததாக நினவு.

    Tue May 06, 12:23:00 AM IST
    //

    அனானி ஐயா,

    நீங்கள் சொல்வது போல் இருந்தால்,
    மறுதயாரிப்பு ( ரீமேக்) என்று சொல்லி இருந்தாலும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்னமோ இருக்கிறது என்று சென்று பார்ப்பார்கள்.

    விஜய் படம் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கியாரண்டியாமே. :)

    ReplyDelete
  24. //ILA said...
    கொடுமை மூன்றெழுத்து
    தோல்வி மூன்றெழுத்து
    வேணாம் மூன்றெழுத்து
    ஓடிரு மூன்றெழுத்து

    Tue May 06, 01:07:00 AM IST
    //

    இளா,

    நாமெல்லாம் எச்சரிக்கைக் கொடுத்து தான் கொடுமை நடப்பதில் இருந்து குறைந்த அளவாக பதிவர்களையாவது காப்பாற்ற முடியுது.
    :)

    ReplyDelete
  25. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...


    கோவி அண்ணா, இன்னொன்னு கவனிச்சீங்களா?
    லக்கி-யும் மூன்றெழுத்து தான்! :-)))
    இருங்க வந்து உங்க கலைஞர் விமர்சனத்துக்கு ஒங்க மண்டையில் குட்டப் போறாரு!

    Tue May 06, 03:52:00 AM IST//

    KRS,

    மேலே லக்கி ரசித்துவிட்டு சென்றதை கவனிக்க வில்லையா ?

    ReplyDelete
  26. விஜய் நடித்த படம் குருவி
    கலைஞரின் தமிழை உருவி
    கொட்டுது கோவியாரின் காமெடி அருவி

    சூப்பர்

    ReplyDelete
  27. //தேவ் | Dev said...
    விஜய் நடித்த படம் குருவி
    கலைஞரின் தமிழை உருவி
    கொட்டுது கோவியாரின் காமெடி அருவி

    சூப்பர்
    //

    தேவ்,

    பாராட்டுக்கு நன்றி !

    ReplyDelete
  28. //மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !//

    வி.வி.சி :-)))

    ReplyDelete
  29. //வனிதை திரிசாவா//

    ஹா ஹா ஹா "திரிசா"

    //இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில் அரசியல் எதுவும் இல்லை//

    முன்னேற்பாடா சொல்லிட்டீங்களா :))

    என்ன விட்டுடுங்கன்னு விஜய் அழறது கேட்குது :))))

    ReplyDelete
  30. //Syam said...
    //மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !//

    வி.வி.சி :-)))
    //

    Syam,


    விழுந்து விழுந்து சிரித்ததால்
    எங்கும் அடிபட்டு இருந்தால் வவாசங்கம் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்ளும்,
    :)

    ReplyDelete
  31. //கிரி said...

    என்ன விட்டுடுங்கன்னு விஜய் அழறது கேட்குது :))))

    Fri May 09, 05:47:00 PM IST
    //

    சிங்கை பதிவரே,

    வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  32. மொக்கை என்பது மூன்றெழுத்து. குருவியை விட மொக்கை வேறு இருக்க முடியாது

    ReplyDelete
  33. //மருதநாயகம் said...
    மொக்கை என்பது மூன்றெழுத்து. குருவியை விட மொக்கை வேறு இருக்க முடியாது

    Mon May 12, 05:07:00 PM IST
    //

    மநா,
    உங்களுக்கு கமல் படம் தவிர மற்றெதெல்லாம் மொக்கையாக தெரிவது வியப்பு இல்லை.
    ஆளவந்தான் கொடுமையெல்லாம் பொருத்துக் கொண்டீர்கள் இதைப் பொருத்துக் கொள்ள மாட்டிங்களா ?
    :)

    ReplyDelete
  34. கலைஞரின் இறுதி வரிகள் முத்தாய்ப்பு!

    என்னமோ போங்க!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)