Monday, May 5, 2008

வருத்தப்படாமல் ஒரு இன்ப சுமை !

சர்க்கரை இனிப்பாக இருக்கும் ! சர்கரை மூட்டையோடு தூக்கச் சொன்னால் இனிக்குமா ? முயற்சி செய்கிறேன். நம்(ம) வவா சங்கம் நண்பர்களின் வவாச பதிவில் ஒரு மாதகாலத்திற்கு அட்லஸ் வாலிபராக இருக்கச் சொல்லி உறுப்பினராக இணையும் அழைப்பும் வந்தது. அதன் பிறகு வவாச பதிவின் முகப்பில் எனது இடுகையின் பற்றிய (புரொபைல்) படம் வந்திருந்தது. இடையில் வெளியூர் சென்றிருந்ததால் உடனடியாக இடுகை எதையும் இட முடியவில்லை.

வவாச-வில் ஏற்கனவே மண்டபதில் இருந்து எழுதிய போல் (வெளியில் இருந்து) இரு இடுகைகள் எழுதி இருக்கிறேன்.

வவாசவில் எழுத ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. தனிப்பட்ட எவரையும், எந்த சமூகத்தையும் புண்படுத்தக் கூடாது, படிக்கிறவர்கள் சிரிக்காவிட்டாலும் முகம் சுழிக்காமல் இருக்கும் படி எழுதப்பட்டவை இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து எல்லோரும் அது போலவே நன்றாக எழுதி இருக்கிறார்கள். சமூகம் அரசியல் இதைப்பற்றியே எனது பதிவுகளில் மிகுந்தவையாக எழுதி வருகிறேன். அவ்வப்போது நகைச்சுவை எழுதுவதுண்டு. இங்கு நகைச்சுவை எழுத வேண்டும். என்ன விதமான நகைச்சுவை எழுதுவேன் என்று தெரியவில்லை. பார்ப்போம். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கால்களை வைப்பதால், தலையை கொடுப்பதால், முன்பே எதையும் எழுதி வைக்கவில்லை. இனி எழுதப்போவதைத் தான் இடவேண்டும்.

நான் வாலிபரா ? நடுத்தரவயது வாலிப வயது இல்லையா ? :)



மேலே வண்ண நிழல் படத்தில் ? நான் தானுங்க, நம்ம டிபிசிடி ஐயாவின் கைவண்ணம். என்னமோ வளைச்சு வளச்சு எடுத்தாரு... அப்பறம் இந்த கொடுமை நடந்து போச்சு. :)

எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் !!!

உங்க(ள்) யாருக்கும் இளமை திரும்பி வாலிபராக வேண்டுமென்றால் டிபிசிடிக்கு முன்னால் நில்லுங்க(ள்), நிழல்படத்தில் நீங்கள் வாலிபராகிவிடுவீர்கள், அப்பறம் அதைப்பார்த்து வேறு யாராவது வருத்தப்படனும். :)

20 comments:

  1. வாங்க கோவி சார்! தூள் கிளப்புங்க!

    ReplyDelete
  2. இந்தப் படத்தின் மூலப் படத்தை வலையேற்ற வேண்டுமா, கோவி ஐயா..?

    சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வருமாமே..

    வருத்தப்படாத வாலிபர் ஆனதற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. /மேலே வண்ண நிழல் படத்தில் ? நான் தானுங்க, நம்ம டிபிசிடி ஐயாவின் கைவண்ணம். என்னமோ வளைச்சு வளச்சு எடுத்தாரு... அப்பறம் இந்த கொடுமை நடந்து போச்சு. :)

    எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் !!!//

    நல்லாதானே இருக்கு.... அதிரடி வெடிகுண்டு இயக்குனர் பேரரசு படத்திலே நடிக்கப்போற ஹீரோ மாதிரி இருக்கீங்க... :)

    ReplyDelete
  4. //ஜெகதீசன் said...
    :)
    //

    புன்னகை மன்னா, நன்றி !

    ReplyDelete
  5. //தமிழ் பிரியன் said...
    வாங்க கோவி சார்! தூள் கிளப்புங்க!
    //

    தமிழ் பிரியன்,

    வரவேற்புக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  6. //TBCD said...
    இந்தப் படத்தின் மூலப் படத்தை வலையேற்ற வேண்டுமா, கோவி ஐயா..?

    சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வருமாமே..
    //

    டிபிசிடி ஐயர்,
    என்மீது ஏன் காண்டு ?
    :)

    //வருத்தப்படாத வாலிபர் ஆனதற்கு வாழ்த்துக்கள்..
    //

    நன்றிப்பா.

    ReplyDelete
  7. //ILA said...
    வாங்க வாங்க!
    //

    இளா,
    வாங்க வாங்குங்க என்று சொல்லி இருக்கலாம். ஆப்புதேங் !

    ReplyDelete
  8. //கப்பி பய said...
    வாங்க தலைவா!!
    //

    கப்பி,

    நன்றி !

    ReplyDelete
  9. //இராம்/Raam said... நல்லாதானே இருக்கு.... அதிரடி வெடிகுண்டு இயக்குனர் பேரரசு படத்திலே நடிக்கப்போற ஹீரோ மாதிரி இருக்கீங்க... :)//

    பழனி படம் பார்த்தும், பேரரசு படத்தில் ஹீரோ வாக நடிக்க எனக்கு ரெகமெண்டேசனா ?

    என்ன கொடுமை இராம் !

    ReplyDelete
  10. இளமை திரும்பவே இந்த அட்லாஸ் பட்டம். திரும்பிருங்க.. இல்லாட்டி திரும்ப வைப்போம்

    ReplyDelete
  11. மொதல்ல அட்லாஸ் "சிங்க" வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. /ஒரு மாதகாலத்திற்கு அட்லஸ் "வாலிபராக" இருக்கச் சொல்லி//

    அது எல்லாம் அடியேன் பொடியேனோட போச்சி! :-)

    நீங்க அட்லாஸ் சிங்கம்! அட்லாஸ் வாலிபர் அல்ல என்பதை வருத்தப்படாமல் நினைவூட்டிக் கொள்ள விரும்புகிறேன்! :-)))

    ReplyDelete
  13. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அது எல்லாம் அடியேன் பொடியேனோட போச்சி! :-)

    நீங்க அட்லாஸ் சிங்கம்! அட்லாஸ் வாலிபர் அல்ல என்பதை வருத்தப்படாமல் நினைவூட்டிக் கொள்ள விரும்புகிறேன்! :-)))

    Tue May 06, 03:56:00 AM IST
    //

    KRS,

    எப்படியோ கும்மனும்னு முடிவு செஞ்சுட்டிங்க, குனிய வச்சு கும்மினால் என்ன படுக்க வச்சு கும்மினால் என்ன ? எல்லாம் ஒன்னு தேங்.
    :-)

    ReplyDelete
  14. //ILA said...
    இளமை திரும்பவே இந்த அட்லாஸ் பட்டம். திரும்பிருங்க.. இல்லாட்டி திரும்ப வைப்போம்
    //

    இளா,
    சரி சரி, அப்படியே டை ( கருப்பு மை) செலவையும் ஏத்துக் கொள்ளுங்க.

    ReplyDelete
  15. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    மொதல்ல அட்லாஸ் "சிங்க" வாழ்த்துக்கள்!

    Tue May 06, 03:54:00 AM IST
    //

    சரி, இரண்டாவது என்ன ?

    ReplyDelete
  16. நண்பர் கோவி கண்ணன்

    அட்லாஸ் சிங்க வாழ்த்துகள்

    ReplyDelete
  17. வந்துட்டார்ல்லா கோவியாரு... அந்த மண்டபத்து மேட்டர் எல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே.. சொல்லப் போனா சங்கத்து மக்கள் தவிர வெளியே இருந்து முதன் முதலா போட்ட பதிவு உங்களுது தான்.... அப்போதைய சங்கத்து விதிகள் படி வெளி மக்கள் எழுத்துக்களை அவங்க ஐடியிலே வெளியிடாமல்.. தலைப்பில் பெயரிட்டு வெளியிட்டோம்...கோவியாரின் நல்லதொரு நாடகம் அது... இரண்டு பாகம் வந்தது... மீண்டும் சங்கத்துக்கு அட்லாஸ் சிங்கமா வந்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள் கோவியாரே

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)