Wednesday, April 9, 2008

சங்கம்னா ரெண்டு

எவ்வளவோ போட்டில கலந்துக்கிட்டோம்... நம்ம சங்கத்து போட்டில கலந்துக்க முடியலனு நிறைய பேர் வருத்தப்பட்டிருந்தாங்க. கேமிராவை எல்லாம் பாரதிராஜா படத்துல தான் பார்த்திருக்கோம், நம்மல போய் ஃபோட்டோ எடுக்க சொன்னா என்ன செய்யறதுனு ஆயிரக்கணக்குல பிராது வந்துடுச்சு. சரி எல்லாருக்கும் ரெண்டாவது வருஷ விழால பங்கெடுத்துக்கனும்னு ரெண்டாவதா ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு.

சரி இரண்டாவது வருடத்துக்கான இரண்டாவது போட்டிக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு சங்கத்துல கூடி யோசிச்சப்ப, நம்ம தல பேசாம "இரண்டு"னே தலைப்பு வெச்சிடலாம்னு பிரச்சனையை சுலபமா முடிச்சிட்டாரு.

"இரண்டு" என்ற கருவில் கதை/கட்டுரை/நகைச்சுவை/அனுபவம்/ கவிதை எது வேண்டுமென்றாலும் சமர்ப்பிக்கலாம். நீங்க எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதலாம் ஆனால் ஒருவர் "இரண்டு" ஆக்கங்களை மட்டுமே போட்டிக்கு சமர்பிக்கலாம்.

என்ன எல்லாம் எழுதறதுனு யோசிக்கறவங்களுக்கு சில டிப்ஸ் :
1. இரண்டாவது மதிப்பெண்.
2. Split Personality
3. சித்தி (இரண்டாவது தாய்)
4. இரண்டாம் வகுப்பு டீச்சர்
5. இரண்டாவது காதல்
6. இரண்டாவது நட்பு
7. பெரிய அளவிளான போட்டியில் இரண்டாம் இடம்... (தோல்வியை இப்படி கூட சொல்லலாம் இல்லை)
இப்படி நிறைய.... எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனு நீங்க ஃபீல் பண்ணக்கூடாது இல்லை. அதான் ;)

தலைப்பில் இரண்டு இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. கருதான் முக்கியம்.

முதல் இருபது போட்டியாளர்களுக்கு நீங்களே ஆச்சரியப்படும் வகையில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்படும்.

* அதிக ஆக்கங்களை எழுதபவருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு.

* கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, ஆன்மீகம், சினிமா, இலக்கியம், அனுபவம், மொக்கை இப்படி அதிக பிரிவுகள் எழுதுபவருக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு

முதல் பரிசு - மூன்றாயிரம் ரூபாய்

வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் முறை :

1. மக்கள் தீர்ப்பு (ஓட்டெடுப்பு) - 34%

2. பங்கெடுப்பவர்கள் தீர்ப்பு -
மக்கள் ஓட்டெடுப்பிலிருந்து முதல் 20 ஆக்கங்களை எடுத்து, அதில் உள்ள 20 நபர்கள் தங்களை தவீர மீதமுள்ள 19 பேர்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள் - 33%

3. சங்கத்து சிங்கங்கள் - 33%

சமர்பிக்கும் முறை

உங்கள் ஆக்கங்களுக்கு கீழே இந்த இணைப்பை கொடுக்கவும்.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

மேலும் இந்த பதிவில் நீங்கள் போட்டிக்கு சமர்பிக்கும் இரண்டு ஆக்கங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நீங்க நிறைய எழுதினா எல்லா சுட்டிகளையும் கொடுக்கலாம். அதில் போட்டிக்கான இரண்டு இடுகைகளின் சுட்டியை குறிப்பிட்டு தெளிவாக கொடுக்கவும்...

போட்டியில் பங்கேற்க இறுதி நாள் ஏப்ரல் 26. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு... அடிச்சி ஆடுங்க மக்கா;)

இதுவரை வந்த ஆக்கங்கள்:-

1) செல்விஷங்கர்
அ) இரண்டடியில் இன்பம்
ஆ) இரண்டு மனம்

2) பாஸ்டன் பாலா

அ) ரெண்டுக்கு வந்த கோலாகலம்

3) அம்பி

அ) ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
ஆ) ரெட்டை ஜடை வயசு - II
இ)தமிழ் Vs உதித் நாராயண்

4) சென்ஷி

அ) என் இரண்டாம் காதலி
ஆ)உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

5) ச்சின்னப் பையன்

அ)எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
ஆ) கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்
இ) சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

6) தமிழரசன்

அ) ஜோடிப் புறா!
ஆ) இராமு எழுதிய காதல் கவிதை...
இ) பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்
ஈ) பிளாஸ்டிக் பூக்கள்

7) கோவி.கண்ணன்

அ) சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

8) PPattian : புபட்டியன்

அ) ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக
ஆ) இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா

9) ramachandranusha(உஷா)

அ) தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

10) king

அ) வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

11) பாச மலர்

அ) நதியொன்று விதி தேடி..

12) ஆயில்யன்

அ) இது ”ரெண்டுக்கு” மேட்டர்
ஆ) ”இரண்டு”ங்கெட்டான்
இ) பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!
ஈ) 2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !

13) திகழ்மிளிர்

அ) இதயம் இரண்டாகிறது

14) கண்மணி

அ) ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

15) இரா. வசந்த குமார்

அ) ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?
ஆ) பாப்பா போட்ட தாப்பா...
இ) ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?
ஈ) நன்று என்று ஆன பின்!
உ) இது நாடகம்?

16) அபி அப்பா

அ) வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!
ஆ) தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

17) சுல்தான்

அ) இரண்டுமே அவள்தான்

18) பினாத்தல் சுரேஷ்

அ) இதென்ன கலாட்டா?

19) இளைய கவி

அ) வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

20) நிஜமா நல்லவன்

அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!

95 comments:

  1. போட்டி அறிவிச்சி ஒன்பது மணி நேரம் ஆச்சு, இன்னுமா ஒரு பங்களிப்பு கூட இல்லை...

    மக்களே!!! உங்கள் சிந்தனைகளை சிதறடியுங்கள்...

    கமான்...

    முதல் இருபதுக்குள்ள வாங்க...

    ReplyDelete
  2. அய்யோ அய்யோ இது சங்கமம் இல்லை "சங்க' ம விட்டு போயாச்சு! இனி எல்லாம் சுகமே!வாங்க வாங்க வந்து கலக்குங்க!

    ReplyDelete
  3. ஸ்டார்ட்ட்ட் தி மீஜீக்க்க்க் :))

    ReplyDelete
  4. //அபி அப்பா said...

    அய்யோ அய்யோ இது சங்கமம் இல்லை "சங்க' ம விட்டு போயாச்சு! இனி எல்லாம் சுகமே!வாங்க வாங்க வந்து கலக்குங்க!//

    அண்ணே,
    வாங்க... வந்து உங்க ராசியான கையால போட்டியை ஆரம்பிச்சி வைங்க.

    இப்ப நட்ராஜை பார்க்கறதை பத்தி (ரெண்டாவது குழந்தையை) ஒரு பதிவு போட்டு போட்டியை ஆரம்பிச்சி வைங்க...

    ReplyDelete
  5. /பின்னூட்ட கயமை - 1 ;)//

    இதை நான் வழக்கம்போல் ஹிஹி..

    வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  6. இதோ இதோ போட்டிக்கான பதிவு

    http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_09.html

    ReplyDelete
  7. போட்டிக்கான இரண்டாவது ஆக்கம்

    http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_1042.html

    ReplyDelete
  8. ஆஹா! மறுபடியுமா? சரி முயற்சி பண்றேன். :)

    ReplyDelete
  9. //செல்விஷங்கர் said...

    இதோ இதோ போட்டிக்கான பதிவு

    http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_09.html//

    வாங்க வாங்க...

    முதல் பதிவே வள்ளுவனை வாழ்த்தி வந்துருக்கு... போட்டி பட்டையை கிளப்ப போகுதுனு நம்பிக்கை வந்துடுச்சு...

    ReplyDelete
  10. வெட்டிப்பயல்

    போட்டிக்கான இர்ணட்டாவது ஆக்கமும் உடனே கொடுத்து விட்டேனே !!

    இரு பதிவுகள் கொடுத்தாயிற்று - பார்க்கவும்.

    http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_09.html


    http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_1042.html

    நன்றி

    ReplyDelete
  11. இதோ போட்டிக்கு என்னோட முதல் படைப்பு:
    http://ammanchi.blogspot.com/2008/04/twins.html

    என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கோங்க சிங்கங்களே! :)

    ReplyDelete
  12. // செல்விஷங்கர் said...

    வெட்டிப்பயல்

    போட்டிக்கான இர்ணட்டாவது ஆக்கமும் உடனே கொடுத்து விட்டேனே !!

    இரு பதிவுகள் கொடுத்தாயிற்று - பார்க்கவும்.

    http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_09.html


    http://ennassiraku.blogspot.com/2008/04/blog-post_1042.html//

    ஆமாங்க செல்விஷங்கர்...

    ரெண்டாவது கவிதையை மிஸ் பண்ணிட்டேன்...

    அப்படியே ஒரு கதையோ, அனுபவமோ முயற்சிக்கிறது...

    ReplyDelete
  13. இதோ இதோ போட்டிக்கான பதிவு

    http://senshe-kathalan.blogspot.com/2008/04/blog-post.html

    ReplyDelete
  14. என்னுடைய இரண்டாம் ஆக்கம் இதோ...

    http://senshe-kathalan.blogspot.com/2008/04/blog-post_12.html

    ReplyDelete
  15. வர்றேன் வர்றேன்... அடுத்த வாரம் என்னோட 'ரெண்டாவது' வாரம்..

    ReplyDelete
  16. //ச்சின்னப் பையன் said...

    வர்றேன் வர்றேன்... அடுத்த வாரம் என்னோட 'ரெண்டாவது' வாரம்..//

    சீக்கிரம் வாங்க...

    வீ தி வெயிட்டிங் :-)

    ReplyDelete
  17. வந்தாச்சு!! என்னோட முதல் பங்களிப்பு இதோ!!!

    http://boochandi.blogspot.com/2008/04/saturday-sunday.html

    ReplyDelete
  18. இது நான் பின்னூட்டக்கயமையை பதிவாக போடும் இரண்டாம் பதிவு என்பதால் நான் வவாச ரெண்டு போட்டிக்கு இணைக்கிறேன் :))

    http://senshe-kathalan.blogspot.com/2008/04/blog-post_13.html

    ReplyDelete
  19. போட்டிக்கான என்னுடைய கொசுறு பதிவு இதோ:

    http://boochandi.blogspot.com/2008/04/2030.html

    ReplyDelete
  20. போட்டிக்கான என்னுடைய பதிவு இதோ,

    http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post.html

    ReplyDelete
  21. பின்னூட்டக்கயமைத்தனம் 2

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. மன்னிக்கனும் அதுல ஓவரா மொக்கை வந்ததால அத நீக்கிட்டேன்,

    இதோ பதிவு
    http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_16.html

    ReplyDelete
  24. போட்டாச்சு ! போட்டாச்சு !

    தலைப்பு : சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)
    http://govikannan.blogspot.com/2008/04/blog-post_17.html

    ReplyDelete
  25. இது என்னோட மூன்றாவது பதிவு:

    http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_3742.html

    ReplyDelete
  26. மறுபடி வந்தாச்சு!!! போட்டிக்கான என்னோட ரெண்டாவது இடுகை இது...

    http://boochandi.blogspot.com/2008/04/blog-post_17.html

    ReplyDelete
  27. என்னோட முதல் ரெண்டு இதோ..

    ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக

    ரெண்டாவது ரெண்டுக்கும் முயற்சி செய்யறேன்...

    ReplyDelete
  28. போட்டிக்கான பதிவு
    http://nunippul.blogspot.com/2008/04/blog-post_17.html

    ReplyDelete
  29. முதலில் என்னைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் என்னுடைய இந்த பெயர்தான உங்களுக்கு புதிதாக தெரியும் ஆனால் நான் உங்களோடு ஏற்கனவே பழகி இருக்கிறேன்... சங்கத்தின் போட்டிக்காக என்று சொல்வதைக்காட்டிலும் இந்த விடயம் கட்டாயம் பலர் கண்களுக்கு வர வேண்டும் என்பதனால் போட்டிக்காக இணைத்திருக்கிறேன்

    http://kingofmars.blogspot.com/2008/04/blog-post_17.html

    ReplyDelete
  30. இதோ என்னோட ரெண்டாவது ரெண்டு:

    http://ammanchi.blogspot.com/2008/04/youth-festival-ii.html

    ReplyDelete
  31. போட்டிக்கான பதிவு..

    http://pettagam.blogspot.com/2008/04/blog-post_18.html

    ReplyDelete
  32. என்னுடைய அடுத்த பதிவு போட்டிக்காக...

    http://mokkai-sangam.blogspot.com/2008/04/blog-post_17.html

    ReplyDelete
  33. போட்டிக்கான பதிவு

    http://anpudan-thikalmillr.blogspot.com/2008/04/blog-post_20.html

    ReplyDelete
  34. என்னோட ரெண்டு மேட்டர்
    http://kouthami.blogspot.com/2008/04/blog-post_21.html

    ReplyDelete
  35. இது என்னோட மூணாவது ரெண்டு:

    http://ammanchi.blogspot.com/2008/04/utith-narayan.html

    ReplyDelete
  36. ஒரே ஒரு படைப்பு கொடுத்தாலும் பொதுமல்லவா..இரண்டாவது பதிவு கொடுக்க வேண்டுமென்பது பதிவர் விருப்பமா அல்லது போட்டியின் விதியா..

    ReplyDelete
  37. //பாச மலர் said...

    ஒரே ஒரு படைப்பு கொடுத்தாலும் பொதுமல்லவா..இரண்டாவது பதிவு கொடுக்க வேண்டுமென்பது பதிவர் விருப்பமா அல்லது போட்டியின் விதியா..//

    ஒரு படைப்பு கொடுத்தாலும் போதும்...

    இருந்தாலும் அருமையான ஒரு படைப்பு கொடுத்த உங்ககிட்ட இருந்து ரெண்டாவது படைப்பையும் என்னை மாதிரி வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் :)

    ReplyDelete
  38. சங்கத்து சிங்கங்களா "ரெண்டு" போட்டிக்கு என் முதல் பதிவு வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!! , என் "ரெண்டாவது" பதிவு தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!! பரிசு வாங்கிக்க எப்ப வரட்டும் நானு:-))

    ReplyDelete
  39. இரண்டு பதிவு கண்டிப்பா இருக்கணுமா?
    இதோ
    போட்டிக்கு என்னுடைய இரண்டும் அவள்தான்

    ReplyDelete
  40. நானும் இறங்கிட்டேன் கோதாவுல!

    இங்க பாருங்க என் ரெண்டை

    ReplyDelete
  41. ஏற்கனவே லிங்கிட்டேனா இல்லையா? அல்லது மாடரேஷன்ல மாட்டிக்கிச்சான்னு தெரியல அதான் இன்னொருவாட்டி கும்மியிலேர்ந்து பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!

    ReplyDelete
  42. //ஆனால் ஒருவர் "இரண்டு" ஆக்கங்களை மட்டுமே போட்டிக்கு சமர்பிக்கலாம்.
    //அதிக ஆக்கங்களை எழுதபவருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு.//


    வ.வா.சங்கத்து நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லாத வரைக்கும்.............

    எனது 3வது போஸ்ட்
    2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !

    ReplyDelete
  43. நான் இரண்டு நாட்களாக யோசித்து பல போர்களில் வென்று ( நொந்து ) பல சில விழுப்புண்களிடையே எழுதிய பதிவு. எவ்வளவு குறை இருக்கிறதோ அதற்கேற்றார் போல் பரிசில் தொகையை தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன் இளையகவி.

    என‌து ப‌திவிற்கான‌ சுட்டி

    http://dailycoffe.blogspot.com/2008/04/blog-post_23.html

    ReplyDelete
  44. இதுவரைக்கும் உருப்படியா ஒரு பதிவு கூட போட்டது இல்ல. ஆனாலும் ஆசை யார விட்டுச்சு. அதான் போட்டிக்குன்னு ஒரு மொக்க பதிவ போட்டுட்டேன். முடிஞ்ச சகிச்சி படிச்சுக்கோங்க.

    இது முதல் பதிவு. கொலவெறில தப்பி பிழைச்சேன்னா அடுத்த பதிவு போடுறேன்.

    http://nejamanallavan.blogspot.com/2008/04/blog-post_23.html

    ReplyDelete
  45. என்னுடைய 'இரண்டு' லிங் சரியாக இல்லையாம். ஆதலால் இரண்டாவது முறையாக
    இரண்டுமே அவள்தான்

    அப்படியும் லிங் கிடைக்கவில்லையா வெட்டி ஒட்ட http://sultangulam.blogspot.com/2008/04/blog-post_22.html

    ReplyDelete
  46. இதுவரை போட்டிக்கு ஆக்கங்களை அனுப்பியவர்களின் உரல் இப்பதிவில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    அனைவரும் தங்களின் முகவரி சரி பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.....

    ReplyDelete
  47. போட்டில சும்மா இதுவும் இருந்துட்டு போட்டும் கழுத
    http://mangalore-siva.blogspot.com/2008/04/blog-post_23.html

    ReplyDelete
  48. //மொக்கை இப்படி அதிக பிரிவுகள் எழுதுபவருக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு//

    நம்ம டிப்பார்ட்மெண்ட்டு மதிப்புணர்ந்து பரிசு அறிவிச்ச சங்கத்து சிங்கங்களுக்கு நன்றிகள்:)))

    கலந்துக்க நேரம் கிடைக்கலைன்னாலும் வெற்றி பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள் மாம்ஸ்:)

    ReplyDelete
  49. அப்படியே இந்த கழுதையையும் சேர்த்திக்கோங்க


    http://ramsmcaodc.blogspot.com/2008/04/blog-post_23.html

    ReplyDelete
  50. போட்டியில் நானும் கலந்துக்கிறேன்....

    http://sen22.blogspot.com/2008/04/9.html


    Senthil,
    Bangalore

    ReplyDelete
  51. சங்கத்து சிங்கங்களே எப்படிப்பா உன் பதிவை லிங்க் பண்றது? சொல்லி கொடுப்பா?
    இதோ என்னுடைய பதிவு
    அன்புடன்
    கே ஆர் பி
    http://visitmiletus.blogspot.com/

    ReplyDelete
  52. என்னோட ரெண்டு இங்க

    http://radhasriram.blogspot.com/2008/04/blog-post_23.html

    ReplyDelete
  53. போட்டிக்கான என்னோட முதல் இரண்டு:
    http://vadakkupatturamasamy.blogspot.com/2008/04/blog-post_23.html

    ReplyDelete
  54. சங்கத்துக்காரங்களே... போட்டிக்கு முதல் பதிவையும், கடைசிப் பதிவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்....

    ReplyDelete
  55. //இரா. வசந்த குமார். said...

    சங்கத்துக்காரங்களே... போட்டிக்கு முதல் பதிவையும், கடைசிப் பதிவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்....//

    வசந்த குமார்,
    இன்னும் போட்டிக்கு ரெண்டு நாள் இருக்கு.. அதுக்குள்ள கடைசி பதிவுனு சொல்லிட்டா எப்படி???

    இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க :-)

    ReplyDelete
  56. என்னோட ரெண்டு இங்க

    ANBUDAN
    KRP
    http://visitmiletus.blogspot.com/

    ReplyDelete
  57. போட்டிக்கான என்னுடைய இரண்டாவது மற்றும் கடைசி இரண்டு...
    http://vadakkupatturamasamy.blogspot.com/2008/04/blog-post_24.html

    ReplyDelete
  58. //இரா. வசந்த குமார். said...

    சங்கத்துக்காரங்களே... போட்டிக்கு முதல் பதிவையும், கடைசிப் பதிவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்....//

    வசந்த குமார்,
    இன்னும் போட்டிக்கு ரெண்டு நாள் இருக்கு.. அதுக்குள்ள கடைசி பதிவுனு சொல்லிட்டா எப்படி???

    இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க :-)

    வெட்டிப்பயல் ஐயா... இதில் என்ன உள்குத்து இருக்கோ தெரியல.

    இருந்தாலும் ஒரு முயற்சி பண்றேன்.

    ***

    ஒரு சின்ன குறுநாவல் ட்ரை பண்றேன். ப்ளீஸ் இதையும் அக்கவுண்ட்ல சேர்த்துக்குங்க சங்கத்து தலைங்களே.. நாளைக்குள்ள முடிக்க முயற்சி பண்றேன். ;-)

    எனவே, நான், வேண்டாம்.

    ReplyDelete
  59. போட்டிக்கான என்னுடைய இரண்டாவது பதிவு..

    http://pettagam.blogspot.com/2008/04/blog-post_25.html

    ReplyDelete
  60. இது என்னோட ரெண்டாவது பதிவு.


    http://nejamanallavan.blogspot.com/2008/04/blog-post_25.html

    ReplyDelete
  61. ///முதல் இருபது போட்டியாளர்களுக்கு நீங்களே ஆச்சரியப்படும் வகையில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்படும்.///



    ///20) நிஜமா நல்லவன்
    அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!///


    என்ன கொடும இது? நான் கூட 20 ம் இடத்துல வந்திருக்கேனே?

    ReplyDelete
  62. வருத்தப்படாத வாலிபர்கள் சங்க உருப்பினர்களே நாமலும் கலத்துல குதிக்கரோம்... கொஞ்சம் பாருங்கோகோகோ..............

    நம்ப url www.yadhum.blogspot.com

    ReplyDelete
  63. என் ரெண்டாவது ரெண்டு, வ வா ச ஆணைப்படி:

    இரண்டும் ஒன்றும்

    ReplyDelete
  64. முதலாவது ரெண்டு:
    திருக்குறள்.

    ரெண்டாவது ரெண்டு:
    தண்டவாளத்தில் ஓடுது
    மின்சார வண்டி.

    -------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

    ReplyDelete
  65. இது என்னோட நாலாவது ரெண்டு:

    http://ammanchi.blogspot.com/2008/04/politics.html

    ReplyDelete
  66. ஒரு சின்ன சந்தேகம்:

    போட்டிக்கான கடைசி நாளுக்குள்ள எந்த இரண்டு படைப்புகள் போட்டிக்குனு சொல்லிடனுமா இல்லாட்டி எல்லா இடுகைகளையுமே போட்டிக்கு எடுத்துப்பீங்களா?

    ReplyDelete
  67. என்னோட ஐந்தாவது ரெண்டு:

    http://ammanchi.blogspot.com/2008/04/kitchen.html

    ReplyDelete
  68. கெடு தேதி முடிஞ்சிடுச்சோ முடியலயோ தெரியல.

    முடிஞ்சுட்டாலும் சும்மானாச்சுக்காவது இருக்கட்டும்

    சரி சங்கத்துக்கும் ரெண்டு எனக்கும் ரெண்டு. புடிச்சுகோங்க

    http://angelnila.blogspot.com/2008/05/blog-post.html

    ReplyDelete
  69. இரண்டு என்றதும் எனக்கு இரண்டு மனம் வேண்டும் பாடல் நினைவுக்கு வந்தது. அதைப் பாடிய டி.எம்.எஸ் பகிர்ந்து கொண்ட ஒரு அனுபவத்தை போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன். அதோடு ஒரு கவிதை. முடிவிற்காக காத்திருக்கிறேன் ஒரு வாசகனாய்! நன்றி. – கல்யாண்குமார், அலைபேசி: 9382151621


    இரண்டு மனம் வேண்டும் – டி.எம்.எஸ்ஸின் திகில் அனுபவம்

    ஒரு பத்திரிக்கையாளனாக பலபேரை பேட்டி எடுத்திருக்கிறேன். ஆனால் என் அபிமான பாடகர் டி.எம்.எஸைப் பார்த்து பேட்டியெடுக்க வேண்டும் என்கிற கனவு நீண்ட நாள் தள்ளிக் கொண்டே போனது. மதுரையிலிருந்து என் மைத்துனர் முருகபூபதி வந்திருந்தார். அவர் என்னிடம்
    ‘’ சென்னையில் என்னை எங்கும் கூட்டிப் போக வேண்டாம்; எதுவும் வாங்கித்தர வேண்டாம். டி. எம். எஸ் அவர்களை சந்திக்க வேண்டும்’’ என்பதுதான் அவரது மனப்பூர்வமான வேண்டுகோளாக இருந்தது. காரணம் அவரும் ஒரு மேடைப்பாடகர். மதுரையில் ஒரு இசைக்குழு நடத்தி வருகிறவர். அதில் டி.எம்.எஸ் குரலில் பாடுகிறவரும் அவரே!

    அவருக்காக இல்லையென்றாலும் நானும் அந்த தேன்மதுரக்குரலுக்குச் சொந்தக்காரரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் அவருடன் தொலைபேசியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். அப்போது நான் ஒரு பிரபல பத்திரிக்கையில் உதவி ஆசிரியன்.

    பேட்டிக்காக நாள் குறிக்கப்பட்டது. நாங்கள் அவர் வீட்டுக்குப் போனது ஒரு ஞாயிறு காலை. பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். போனில் பேசிய விபரத்தைக் கூறியதும் வரவேற்றார். பத்திரிக்கையாளர் என்பதையெல்லாம் தாண்டி நானும் எனது மைத்துனரும் அவரது ‘தீவிரமான ரசிகர்கள்’ என்று சுய அறிமுகம் முடிந்தது. ( அவர் எத்தனை லட்சம் ரசிகர்களைப் பார்த்திருப்பார்?)

    பத்து மணிக்கு பேச்சு சுகமாக ஆரம்பித்தது. அவரது பாடல்களை அசைபோட ஆரம்பித்தார். பலவிதமான ஃப்ளாஷ்பேக்குகள். மதிய உணவை மறந்தோம். அவரது மனைவி அவரை அடிக்கடி சாப்பிட அழைத்தார். இதோ வருகிறேன் என்பதே அவரது பதிலாக இருந்தது. அவரும் சாப்பிடவில்லை; நாங்களும் சாப்பிடவில்லை. நாங்கள் அவரிடமிருந்து விடைபெறும்போது மாலை நான்கு மணி! அந்த அளவுக்கு அவரது பாடல்களைப் பற்றிய எங்களது பேச்சு மிகவும் இனிமையாக நீண்டு கொண்டே போனது.

    இசையோடு அவருகேற்ப்பட்ட சுகானுபவம்; அவர் திரைக்கு அறிமுகமானது; அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்; ஆரம்பத்தில் எதிர்கொண்ட அவமானங்கள்; வெற்றிகளின் பின்னணி; பாடல் பதிவில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள்; எதிர்பார்த்துக் கிடைக்காத அங்கீகாரங்கள் என்று மனம்விட்டு குரல்விட்டு அனைத்தையும் பேசித்தீர்த்தார் அந்த மகா கலைஞன்.

    பேட்டியில் எதைச் சேர்ப்பது, எதை விடுவது எனக்குக் குழப்பம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் அந்த ஆறுமணி நேர உரையாடலில் நான் அப்போது சொல்லிய விஷயங்கள் கொஞ்சமே. விடுபட்டு என்னிடம் தங்கிப் போன விஷயங்கள் ஏராளம். அதில் ஒரே ஒரு விஷயத்தை இங்கே தருகிறேன்.

    அவரிடமிருந்து விடைபெறும்போது ஒரு கேள்வி கேட்டேன்.

    ‘’உங்களது ரசிகர்களில் வித்தியாசமான ரசிகர் என்று யாராது உங்கள் மனதில் இருக்கிறாரா?’’

    கொஞ்ச நேரம் யோசித்தவர் ஒரு சுவையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    ‘’ நீங்கள் இருவரும் உள்ளே வந்ததும் ‘தீவிர ரசிகர்கள்’ என்று அறிமுகபடுத்திக் கொண்டீர்களே, உங்களைவிட உண்மையிலேயே தீவிர ரசிகர்களைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும்’’ என்று ஆரம்பித்தார்.

    சில வருடங்களுக்கு முன்பு ஒரு கச்சேரிக்காக அவரை அழைத்திருக்கிறார்கள். தூத்துக்குடி அருகே ஒரு சிறிய ஊர். ரயில் வசதி, தங்குமிடம், உணவு, அங்கிருந்து திரும்ப ரயில் டிக்கெட் என்று பலவிதத்திலும் அவர்களின் திட்டமிடல் இவருக்குப் பிடித்துப் போகவே அந்தக் கச்சேரிக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார். அதே போல சகல மரியாதைகளுடனும் அவரை அழைத்துப் போயிருக்கிறார்கள். ரசிகர்களாகிய அவர்களின் அணுகுமுறை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. சந்தோஷமாக இவரும் போய் நிகழ்ச்சி நடந்த இடத்தில் தனது குரலால அந்த ஊர் மக்களையே கட்டிப் போட்டிருக்கிறார்.

    கச்சேரி முடிந்து தூத்துக்குடி போய் ரயிலேற வேண்டும். இன்னும் ஒன்றரை மணி நேரம்தான் இருக்கிறது. நேரத்தை நினைவு படுத்தியதும் மேடையிலிருந்து பிரியாவிடை பெறுகிறார் டி.எம்.எஸ்.

    காரில் ஏறுகிறார். பயணம் தூத்துக்குடியை நோக்கி. திடீரென கார் மெயின் ரோட்டிலிருந்து ஒரு வேறு ஒரு பாதைக்கு மாறுகிறது.
    இவருக்கு சந்தேகம் வந்து ‘’எங்கே போகிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார்.

    ஆனால் வந்த பதில் இவரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    ‘’ ஒரு பத்து நிமிஷம்தான். சின்னதா ஒரு பார்ட்டி. எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க.’’

    ‘’பார்ட்டியா? என்னப்பா சொல்றீங்க?’’

    ‘’ஆமா சார். எல்லாரும் உங்க ரசிகர்கள்தான். பார்ட்டி முடிஞ்சு உங்களை கரெக்டா ரயிலேந்திடுவோம்’’

    கார் ஒரு இருட்டுப் பாதையில் பயணிக்கிறது.

    ‘ஆகா, தப்பான ஆட்களிடம் மாட்டிக் கொண்டோம்’ என்று டி.எம்.எஸ்ஸின் மனதில் கவலைக் குரல் ஒலிக்கிறது.

    பத்து நிமிஷத்தில் ஒரு காட்டு பங்களாவின் முன் கார் நிற்கிறது.

    ஆனால் அந்த பங்களா சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றுமே புரியாமல் காரிலிருந்து இறக்கிவிடபடுகிறார் டி.எம்.எஸ்.

    கிட்டத்தட்ட ஒரு கடத்தல் போல அந்த பங்களாவுக்குள் கொண்டு செல்லப்படுகிறார்.

    உள்ளே ஒரு பெரிய ஹால். ஒரு வட்ட மேசை. சுமார் இருபது பேர் அதனைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கு முன்பாலும் மதுக் கோப்பைகள் தயாராக இருக்கின்றன. எதோ நடக்கப் போகிறது என்கிற அச்சம் டி.எம்.எஸை ஆட்டிப் படைக்கிறது. கையில் கழுத்தில் கிடக்கும் நகைகள் போனால் போகட்டும். உயிருக்கு உத்திரவாதம் யார் தருவார் என்கிற கேள்வி அவர் முன் இப்போது.

    வட்ட மேசையில் முன்பாக அவர் நிறுத்தப்படுகிறார். ஏற்கனவே அங்கு மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

    அந்த வட்டமேசை ஆசாமிகளில் ஒருவர் எழுகிறார். தன் கையில் இருக்கும் மைக்கில் பேசுகிறார்.

    ‘’ அய்யா நீங்கள் பயப்படுகிற மாதிரி நாங்கள் மோசமான ஆட்கள் இல்லை. எல்லோரும் உங்களின் தீவிரமான ரசிகர்கள். இந்த ஊர் கச்சேரிக்கு உங்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்தது நாங்கள்தான். கச்சேரியை திருப்தியாக முடித்துக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் உங்களின் ரசிகர்களாகிய எங்களுக்காக இந்த பார்ட்டியில் நீங்கள் கலந்து கொண்டு ஒரு சில பாடல்களை மட்டும் பாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’

    இப்படி ஒரு வித்தியாசமான ரசிகர்களா?

    கிட்டத்தட்ட ஒரு கடத்தலுக்குப் பின்னணியில் இப்படி ஒரு இசைப் ப்ரியர்களா?

    டி.எம்.எஸ்ஸுக்கோ ஒருபுறம் ஆச்சர்யம். ஒருபுறம் நிம்மதி. ஆனாலும் அவர் மது அருந்துவதில்லை என்பதால் அவரை கட்டாயப்படுத்தாமல் அவரது குரலை மட்டும் சிலமணித்துணிகள் ரசித்திருக்கிறார்கள் அந்த தீவிர ரசிகர்கள்.

    நேயர் விருப்பத்தினை அறிந்து கொண்ட அவர்களுக்காக ஒரே ஒரு பாடலைப் பாடி அந்த பார்ட்டியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

    மதுவோடு, மனதோடும் சம்பந்தப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டதும் துள்ளி குதித்திருக்கிறார்கள் அந்த ‘தீவிர ரசிகர்கள்’.
    சென்னைக்கு போகிற ரயிலின் நேரம் கருதி அவர் அங்கு பாடிய அந்த ஒரே ஒரு பாடல் என்ன தெரியுமா?

    ‘இரண்டு மனம் வேண்டும்
    இறைவனிடம் கேட்டேன்...
    நினைத்து வாட ஒன்று
    மறந்து வாழ வேண்டும்....’


    பெரும் ஆரவாரத்திற்கிடையே அவருக்கு அந்த தீவிர ரசிகர்கள் விடை கொடுத்திருக்கிறார்கள்.

    ‘’அவர்களிடமிருந்து தப்பித்து ஒருவழியாக தூத்துக்குடி வந்து ரயிலில் உட்கார்ந்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது...’’ என்று அந்த நாட்களை அழகாக பகிர்ந்து கொண்டார்.

    உண்மையிலேயே அவர்கள்தான் ‘தீவிர ரசிகர்கள்’ இல்லையா?
    -------------------------




    இடமாற்றம்

    பேசக் கொடுத்த
    இரண்டு இதழ்களை
    மூடி மூடி மெளனம் காக்கிறாய்!
    பார்க்கக் கொடுத்த
    இரண்டு விழிகளால்
    பேசிப் பேசி என்னைக் கொள்கிறாய்!


    நன்றி. எனது வலைப்பூவின் விலாசம்: kalyanje.blogspot.com
    kalyangii@gmail.com

    ReplyDelete
  70. போட்டிக்கான கட்டுரை (இரண்டு மனம் வேண்டும்)மற்றும் கவிதைக்கான (இடமாற்றம்) இணைப்பு:
    kalyanje.blogspot.com

    ReplyDelete
  71. கொஞ்ச நாளா இந்தப் பக்கம் வரவில்லை. தாமதமாகத்தான் போட்டி அறிவிப்பைப் பார்த்தேன். மே 4 வரை நீட்டித்திருப்பதைப் பார்த்துவிட்டு எல்லா ஆக்கங்களையும் ஒரு அவசரப் பார்வை பார்த்துவிட்டு இதை எழுதி அனுப்புகிறேன். இன்று கடைசி நாள் கெடுவுக்குள் அனுப்பிவிட்டேனா என்று தெரியாது. ஆனாலும் இரண்டாம் ஆண்டு நிறைவு வாழ்த்துக்களுடன் என் கதையை அளிக்கிறேன்.

    சுட்டி: http://oagaisblog.blogspot.com/2008/05/blog-post.html

    ReplyDelete
  72. ennachu potti mudivu? kalyan

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)