Wednesday, April 30, 2008

என்னை பாடச் சொல்லாதே...நான் கண்டபடி பாடிபுடுவேன் :)

வணக்கம்ங்க. உங்களுக்குப் பாட்டுக் கேக்க பிடிக்குமா? பிடிக்கும் தானே? எங்களுக்கும் பிடிக்கும். பாட்டு பாட புடிக்குமா? என்னது புடிக்காதா? எங்களுக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நாங்க பாடுனோம்னா சாதாரண பாட்டைக் கூட ஸ்பெசலாத் தான் பாடுவோம். சிங் இன் தி ரெயின், சங்கீமங்கீ...இந்த மாதிரி பாட்டுங்களைப் பாடறதுன்னா எங்களை அடிச்சிக்க ஆளே கெடையாது. "சிங் இன் தி ரெயின்" பாணியிலே நாங்களே எழுதுன சில தமிழ் திரைப்படப் பாடல்கள் கீழே இருக்கு. ஆறாம் பாடல் வரிகளைத் தவிர எல்லா பாடல் வரிகளும் பாட்டில் வருகிற முதல் வரிகள் தான். ஆறாம் பாடல் வரிகள் மட்டும் பாட்டின் இடையில் வருகிற வரிகள். இதெல்லாம் எந்த பாட்டுன்னு கரெக்டா கண்டுபிடிங்க பாப்போம். படம் பேரு சொல்லனும்னு அவசியம் இல்லை. தெரிஞ்சா சொல்லலாம்.

எல்லாத்தையும் நீங்களே சொல்லிடுவீங்கன்னு தெரியும். ஒரு வேளை எங்க இங்கிலிபீசு ரொம்ப ஹை-ஃபையா(!) போய் யாருக்கும் புரியாம போயிடுச்சுன்னா க்ளூ தரோம். பத்து பாடல் வரிகளையும் முதல்ல யாரு சரியா கண்டுபிடிக்கிறாங்கன்னு பாப்போம்.

1. Fig vegetable vegetable vegetable Banyan Vegetable Oh White Moon
2. "Great meditation girl" Golden Peacock like girl spreads her tail feathers
3. Oh fire flintstones fire! Gently you will massage
4. Come earlier! Come my love! Come my flesh! Come my life!
5. You are Aphrodite I think eye mother
6. If money is there in the Indian Tie, song will come when the Hen crows
7. One Love Angel, came to Earth. One Love Epic, she gave along with hand
8. Lotus flower and Water have never fought...pick Uncle and wear half saree sister-in-law is not there
9. Golden girl came, things billion she gave, like flower stage entrance overflowing honey
10. Oh Spring King! Honey loaded Rose...Your body my nation

ரெடி...ஸ்டெடி...கோ:)

இந்த பதிவுக்கு ஐடியாவைக் கொடுத்த வெண்பா வாத்தியார் ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கும், சங்கத்து முதல் அட்லாஸ் வாலிபர் ரீபஸ் அரசன் இலவசக்கொத்தனாருக்கும் இப்பதிவைப் பணிவோடு சமர்ப்பிக்கின்றோம்.

68 comments:

  1. 9. pon magal vanthal porul kodi thanthal ..

    ReplyDelete
  2. thamarai poovukkum thanikum ennaikum sandaie vanthathu illai.. mamanai alli nee thavani pottuko machchini yarum illai...

    eppadi thalai ........ippadi ellam

    ReplyDelete
  3. 7. oru kadhal thevathai boomil vanthal.. oru kadhal koviyam kaiyodu thanthal..

    ReplyDelete
  4. 3. neruppe sikki mukki neruppe ithama othadam kodupe..

    ReplyDelete
  5. 1. athikkai kai kai alangai vennilave..

    ReplyDelete
  6. என்னை பாடச் சொல்லாதீர்...

    நான் கண்டபடி பாடிபுடுவேன் :-)))

    ReplyDelete
  7. கடைசி நாலு romba easy

    7. ஒரு காதல் தேவதை பூமிக்கு வந்தால். ஒரு காதல் காவியம் கைய்யோடு தந்தாள்
    8. தாமரை பூவிற்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை. மாமண பாத்து நீ தாவணி போட்டுக்கோ மச்சினி யாருமில்ல
    9. பொன்மகள் வந்தால் பொருள் கோடி தந்தாள் பூ மேடை வாசல் வீசும் தேனாக
    10. ஒ வசந்த ராஜா. தேன் விழுந்த ரோஜா. உன் தேகம் என் தேசம்

    மத்தத try பண்ணல

    ReplyDelete
  8. அனானி! கையைக் குடுங்க...முதல்ல பேரைச் சொல்லுங்க. பரிசு இருக்கில்ல?

    1, 3, 7, 8, 9 - அம்புட்டும் சரி. மத்ததையும் டிரை சேஸண்டி.
    :)

    ReplyDelete
  9. நிஜ்ஜம்மாவே ஹைஃபை இங்கிலீசு தாங்க உங்களுது.. ஒரு பாட்டு தான் எனக்கு தெரிந்தது.. பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்.. சரியா?

    ReplyDelete
  10. ஜோவின் 7,8,9,10 - அன்னி கரெக்டண்டி. மத்ததையும் டிரை சேஸி.
    :)

    ReplyDelete
  11. //நான் கண்டபடி பாடிபுடுவேன் :-)))//

    பாடுங்க...அப்படியே பதிலும் சொல்லுங்க
    :)

    ReplyDelete
  12. முத்துலெட்சுமி,
    போங்க...எனக்கு வெக்கவெக்கமா வருது. 9 - பதில் சரீங்கறேன்.

    மத்ததும் ஈஸி தான். சிறு முயற்சி பண்ணுங்க.
    :)

    ReplyDelete
  13. 10. oh vasantha raja then sumantha roja

    ReplyDelete
  14. நக்கீரன்,
    10 - சரியான பதில்

    ReplyDelete
  15. 2. mathavi pen mayilal thogai virithal

    ReplyDelete
  16. நக்கீரன்...சூப்பர்

    2 கண்டுபிடிக்க கஷ்டம்னு நெனச்சேன். கலக்கிட்டீங்க போங்க. இதெல்லாம் ஜுஜுபி தான் போலீருக்க்கு. மத்ததையும் முயற்சி பண்ணுங்க.

    ReplyDelete
  17. 10. ஓ வசந்தராஜா..
    1. அத்திக்காய் காய்
    7.ஒரு காதல் தேதை பூமியில் வந்தாள்

    ReplyDelete
  18. முத்துலெட்சுமி,

    சூப்பர்

    1,7,10 - மூனுமே சஹி ஜவாப்
    :)

    ReplyDelete
  19. 1,3,7,8,9 - எல்லாத்துக்கும் சரியான பதில் சொன்னது ஒரே அனானியா? பதில் சொல்லுங்க சாரே...உங்க பேரு என்ன?

    ReplyDelete
  20. 8.
    தாமரைப்பூவுக்கும் தண்னிகும் சண்டையே வந்ததில்ல..கொஞ்சம் கண்டு பிடிச்சேன் ஆனா சரியாக்கி தந்தது மைபிரண்டு..இது பிட் அடிச்ச பதில் மை ப்ரண்டுக்கு ந்ன்றி..

    ReplyDelete
  21. முத்துலெட்சுமி,

    8 - சரி
    :)

    ReplyDelete
  22. 1,2,3,7,8,9,10 - எல்லாமே நீங்களா நக்கீரன்? கலக்கல்.

    4,5,6 - மிச்சமிருக்கு. முயற்சி பண்ணுங்க.

    ReplyDelete
  23. க்ளூ thanga..
    6. thuillatha manamum thullum patta?

    ReplyDelete
  24. 6 - ஒரு க்ளூ தரேன்.

    இது பாடலுக்கு இடையே வரும் வரிகள். விஜயகாந்த் நடிச்ச படம். 1990ல வந்த படம்னு நெனக்கிறேன். பழைய படம்.

    ReplyDelete
  25. போட்டி சூப்பரா இருக்கே? நானும் ஆட்டத்துல கலந்துக்கவா? ;-)

    ReplyDelete
  26. 8- தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல.. மாமனை அள்ளி நீ தாவணில போட்டுக்கோ மச்சினி யாரும் இல்ல..

    சூப்பர் பாட்டு.. சுஜாதா பாட்டு.. :-))))

    ReplyDelete
  27. மைஃபி,
    இதென்ன கேள்வி? தொபுக்கடீர்னு உள்ள குதியுங்க
    :))

    ReplyDelete
  28. மைஃபிரெண்ட்,
    8 - மிகச் சரி

    மத்ததையும் முயற்சி பண்ணுங்க
    :)

    ReplyDelete
  29. 4,5க்கும் க்ளூ தரேன்.

    4 - கடந்த மூன்றாண்டுகளுக்குள் வெளிவந்த புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமான் பாடல்

    5- 80களில் வெளிவந்த ஒரு எம்.எஸ்.வி பாடல்

    ReplyDelete
  30. நின்னையே ரதி யென்று நினைக்கிறேனடி கண்ணம்மாவா அந்த ஐந்தாவது பாட்டு??

    ReplyDelete
  31. 1) அத்திக்காய் காய் காய் ஆலங்க்காய் வெண்ணிலவே..

    2)மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்..

    3)நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. மெதுவா ஒத்தடம் கொடுப்பே..

    4)முன்பே வா.. என் அன்பே வா.. ஊனே வா.. உயிரே வா..

    5)நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா..

    6)கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும்..(ஏத்தமய்யா ஏத்தம்..)

    7)ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.. ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..

    8)தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல.. மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க.. மச்சினி யாருமில்ல..

    9) பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்.. பூமேடை வாசல் பொங்கும் தேனாக..

    10)ஓ.. வசந்த ராஜா.. தேன் சுமந்த ரோஜா.. உன் தேகம் என் தேசம்..

    ReplyDelete
  32. மக்களே! தவறுதலா கமெண்ட்ஸ் எல்லாம் பப்ளிஷ் ஆயிடுச்சு...ஆட்டம் இன்னும் முடியலை....கமான்
    :(

    ReplyDelete
  33. 10 விடைகளும் சரின்னு நினைக்கிறேன். எங்க? என்னோட பதில் மட்டும் காணோமே..

    ReplyDelete
  34. நிலாக்காலம்,
    சூப்பர்

    பத்தும் கரெக்ட்...நீங்க தான் வின்னர்.

    அடுத்த மாசம் சங்கத்துல இதே மாதிரி ஒரு போஸ்ட் போடறீங்களா? அது தான் பரிசு...அதுக்கு குவிஸ் மாஸ்டரும் நீங்க தான்.

    பரிசா? தண்டனையான்னு நீங்க தான் சொல்லனும்.

    ReplyDelete
  35. முத்துலெட்சுமி,
    5 - மிகச் சரி
    :)

    ReplyDelete
  36. முன்பே வா அன்பே வா .. 4 த் சாங்க்

    ReplyDelete
  37. 5. nee oru kadalthevathai nan ninaikum kannamma

    ReplyDelete
  38. ஓ.. அடுத்த மாசம் தானே.. இதே மாதிரி செஞ்சிருவோம்.. :D

    ReplyDelete
  39. நக்கீரன்,

    5 - தப்புங்க
    :(

    ReplyDelete
  40. முத்துலெட்சுமி,
    4- சரி

    ReplyDelete
  41. நான் கேள்வி பத்து முடிக்கிரதுக்குள்ள விடையை வெளியாக்கிட்டீங்களே தல...


    இதெல்லாம் சரிப்பட்டு வராத்ஹு.. புதுசா இன்னொரு கேம் ஸ்டார்ட் பண்ணுங்கோ. :-)

    ReplyDelete
  42. 2 வது பாட்டு .. அதெப்படி மா ன்னா க்ரேட்டு தவி ன்னா தியானமா.. அடடடா.. என்ன ஒரு அறிவு.. மாதவி ன்னு வரலையா அதான் குழம்பிட்டிருந்தேன்

    ReplyDelete
  43. நிலாக்காலம்,
    நன்றி. உங்க ஈமெயில் ஐடி கொடுங்க. அடுத்த மாசம் ஆபீஸ்ல டேமேஜர் எப்போ இல்லாம ஓபி அடிச்சிட்டிருப்பீங்கன்னு சொல்லுங்க. அன்னிக்கு சங்கத்துல உங்க குவிஸ் தான். கவனமா பதில் வருதான்னு பாத்துக்கிட்டே இருக்கனும்...இது ஒரு ஃபுல்டைம் ஓபி ஜாப். சரிய்யா?
    :))

    ReplyDelete
  44. //இதெல்லாம் சரிப்பட்டு வராத்ஹு.. புதுசா இன்னொரு கேம் ஸ்டார்ட் பண்ணுங்கோ. :-)//

    சித்தார்த்தி,
    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த மாசம் நிலாக்காலம் வந்து போடுவாரு. அப்போ வந்து சாமியாடுங்கங்கோ.
    :))

    ReplyDelete
  45. சரி, என்னைக்கு க்விஸ்-ன்னு அடுத்த மாசம் சொல்றேன்..

    ReplyDelete
  46. //சரி, என்னைக்கு க்விஸ்-ன்னு அடுத்த மாசம் சொல்றேன்..//

    ஓகேங்க. கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுங்க. நன்றி.
    :)

    ReplyDelete
  47. ரெடியா... !

    1. அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே... (பலே பாண்டியா)
    2. மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்... (இரு மலர்கள்)
    3. நெருப்பே... சிக்கி முக்கி நெருப்பே... (வேட்டையாடு விளையாடு)
    4. முன்பே வா... அன்பே வா... (சில்லுனு ஒரு காதல்)
    5. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா... (கண்ணே கனியமுதே)
    6. ஏத்தமய்யா ஏத்தம்... (நினைவே ஒரு சங்கீதம்)
    7. ஒரு காதல் தேவதை... பூமியில் வந்தாள்... (இதயத்தாமரை)
    8. தாமரைப் பூவுக்கும், தண்ணிக்கும் என்னிக்கும்... (பசும்பொன்)
    9. பொன்மகள் வந்தாள்... (சொர்க்கம், அழகிய தமிழ்மகன், பிதாமகன்)
    10. ஓ... வசந்த ராஜா... (நீங்கள் கேட்டவை)

    எத்தினி வருஷமா கூழ் ஊத்தினு இருக்கீங்க... !

    + நேசத்துடன்... இரா. அரங்கன்...

    ReplyDelete
  48. நிச்சயமா சொல்றேன். சரி, அடுத்த மாசம் வரை காத்திருக்கணுமா? எனக்கு முன்னாடி வேற யாராவது நடத்தலாமே..

    ReplyDelete
  49. //அடுத்த மாசம் வரை காத்திருக்கணுமா? எனக்கு முன்னாடி வேற யாராவது நடத்தலாமே..//

    அடுத்த மாசம் ஆரம்பிக்கிறது நாளைக்கு தாங்க. நீங்க தான் வின்னர்...அதுனால நீங்க தான் முதல் போணி பண்ணனும்
    :)

    ReplyDelete
  50. ரங்கநாதன்,

    சூப்பர். பத்தும் சரி. கூடுதலா படம் பேரு வேற தந்திருக்கீங்க. அசத்தல். ஆனா ஆட்டம் ஆரம்பிச்சு எல்லா பதிலையும் சரியா ஏற்கனவே நிலாக்காலம் சொல்லிட்டாரு.

    இப்பத் தான் ஒரு ரெண்டு வருஷமா ஆபீஸூல டேமேஜர் இல்லாதப்போல்லாம் கூழ் ஊத்திக்கின்னு இருக்கேன்.
    :))

    ReplyDelete
  51. ஹும்.. சரி, நான் கேள்விகள் தயாரிச்சிட்டு சொல்றேன்.

    ReplyDelete
  52. நிலாக்காலம்,
    டபுள் ஓகே
    :)

    ReplyDelete
  53. //2 வது பாட்டு .. அதெப்படி மா ன்னா க்ரேட்டு தவி ன்னா தியானமா.. அடடடா.. என்ன ஒரு அறிவு.. மாதவி ன்னு வரலையா அதான் குழம்பிட்டிருந்தேன்//

    ஹி...ஹி...உண்மையிலே மக்கள் மாதவி இல்லன்னாலும் அதுக்கடுத்த சொற்களை வச்சி கண்டுபிடிச்சிருவாங்கன்னு எதிர்பார்த்து தான் கொடுத்தேன்.

    அதனால தான் "Great(மா) Meditation(தவம்) Girl" - அடைப்பு குறிக்குள்ள கொடுத்தேன்.

    இங்கே Girl என்பதை "இ"க்கான விகுதியாகக் கொள்ள வேண்டும். படிச்சிட்டு அடிக்க வந்துடாதீங்க
    :)

    ReplyDelete
  54. 4. முன்பே வா என் அன்பே வா(சில்லுன்னு ஒரு காதல்) மத்த விடையெல்லாம் வெளியாயிடுச்சு போல இருக்கு

    ReplyDelete
  55. //போட்டி சூப்பரா இருக்கே? நானும் ஆட்டத்துல கலந்துக்கவா? ;-)//

    My friend, ennaathu ithu ellorum answer sonnathukku apuuram naanum aatathula kalandhukalaamanaanu chinna pulla thanama kelvi ellaam ketukittu... :-)

    ReplyDelete
  56. 5. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா

    ReplyDelete
  57. சின்ன அம்மிணி,
    4 - விடை சரி. இப்போ எல்லா கேள்விக்கும் விடை சொல்லியாச்சு.

    விடைகளைச் சரி பாத்துகனும்னா ரங்கநாதன் இல்ல நிலாக்காலம் பின்னூட்டத்தைப் பாருங்க. ஒரே கமெண்ட்ல எல்லா பதிலும் இருக்கு.
    நன்றி.
    :)

    ReplyDelete
  58. சின்ன அம்மிணி
    5 - சரி

    ReplyDelete
  59. ஸ்யாம்,
    உண்மையில மிஸ்டேக் என்னது தான். பின்னூட்டங்கள்லாம் வெளியிடாம வச்சிருந்தேன். ஒரு சின்ன டெக்னிகல் ப்ராப்ளம்னால 80% பதில் ஆட்டம் முடியறதுக்கு முன்னாடி வெளியாயிடுச்சு.

    இந்தியால மணி மத்தியானம் 1:30...அப்ப்போ வாஷிங்டன் டிசில? இன்னீக்கு நைட் அவுட்டா?
    :)

    ReplyDelete
  60. மக்களே!
    இத்தோட ஆட்டம் முடிஞ்சுடுச்சு. நிலாக்காலமும், ரங்கநாதனும் எல்லா பதிலுக்கும் சரியான விடை சொல்லிருக்காங்க. முதல்ல சரியான விடைகள் எல்லாத்தையும் சொன்ன நிலாக்காலத்தை வின்னரா அறிவிச்சாச்சு. அவரு அடுத்த மாசத்துல ஒரு நாள் இதே மாதிரி சங்கத்துல குவிஸ் பதிவு ஒன்னு போடுவாரு.

    ஆர்வமா கலந்துக்கிட்ட நக்கீரன், ஜோவின், சித்தார்த்தி 'மை ஃபிரெண்டு',கயல்விழி முத்துலெட்சுமி, ரங்கநாதன், ஆயில்யன், ஸ்யாம் எல்லாருக்கும் நன்னி சொல்லிக்கிறேன்.

    இன்னிக்கு ஃபர்ஸ்ட் ஹாஃப் முழுசா ஓபி அடிச்சாச்சு. மத்தியானமாச்சும் ஆணி புடுங்கற மாதிரி நடிக்கனும். வர்ட்டா
    :)))

    ReplyDelete
  61. ஆட்டத்தை முடிச்சிட்டு பாத்தா பெனாத்தலாரோட பதில்கள் மெயிலில் வந்திருக்கு. அவர் பதில்களை மெயிலில் இருந்து எடுத்து பிரசுரிக்கிறேன். நன்றி சார்.

    எல்லாமே சரியானது.

    1. Fig vegetable vegetable vegetable Banyan Vegetable Oh White Moon
    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

    2. "Great meditation girl" Golden Peacock like girl spreads her tail feathers
    மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்

    3. Oh fire flintstones fire! Gently you will massage
    நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே

    4. Come earlier! Come my love! Come my flesh! Come my life!
    முன்பேவா என் அன்பேவா

    5. You are Aphrodite I think eye mother
    நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா

    6. If money is there in the Indian Tie, song will come when the Hen crows
    ஏத்தமய்யா ஏத்தம் - உமக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்

    7. One Love Angel, came to Earth. One Love Epic, she gave along with hand
    ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

    8. Lotus flower and Water have never fought...pick Uncle and wear half saree sister-in-law is not there
    தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல

    9. Golden girl came, things billion she gave, like flower stage entrance overflowing honey
    பொன்மகள் வந்தாள் பொருள்கோடி தந்தாள்

    10. Oh Spring King! Honey loaded Rose...Your body my nation
    ஓ வசந்தராஜா, தேன் சுமந்த ரோஜா

    ReplyDelete
  62. கைப்ஸ் அண்ணாச்சி!
    செம வெளையாட்டு! செட்டிலாவ டயம் இல்லாததால ஒடனே விடை சுட முடியலை! அடுத்த தபா ஆட்டத்துக்கு ஒஸ்தேனு!

    தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் பாட்டு தான் கண்டு புடிக்க முடியலை! மத்தது எல்லாம் வடை சுட்டுட்டேன்! :-)

    Aphrodite = ரதியா??
    அப்போ மன்மதன் யாரு? Eros-aa? இல்லியே! :-)

    things billion she gave! யோவ் அண்ணாச்சி பில்லியன்னா கோடியா? நீரு அதுல வீக்கா? (கணக்குல சொன்னேன்) :-)))))

    ReplyDelete
  63. //கைப்ஸ் அண்ணாச்சி!
    செம வெளையாட்டு! செட்டிலாவ டயம் இல்லாததால ஒடனே விடை சுட முடியலை! அடுத்த தபா ஆட்டத்துக்கு ஒஸ்தேனு!//

    அலாகே :)

    //தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் பாட்டு தான் கண்டு புடிக்க முடியலை! மத்தது எல்லாம் வடை சுட்டுட்டேன்! :-)//
    ரைட்டு

    //Aphrodite = ரதியா??
    அப்போ மன்மதன் யாரு? Eros-aa? இல்லியே! :-)//
    காதல் பெண் கடவுள்கள் - ரெண்டு பேரு. கிரேக்க கதைகள்ல வர்ற Aphrodite, ரோமின் கதைகளில் வரும் Venus(வீனஸ்). Aphroditeன்னா ரதின்னு புரிஞ்சிடுச்சில்ல. அத்தோட விட்டுடனும். அவுங்க வூட்டுக்காரரு யாருன்னு எல்லாம் கேக்கப்பிடாது :)))

    //things billion she gave! யோவ் அண்ணாச்சி பில்லியன்னா கோடியா? நீரு அதுல வீக்கா? (கணக்குல சொன்னேன்) :-)))))//

    Croreன்னு போட்டா சுளுவா கண்டுபிடிச்சிருவீய இல்ல? அதான். மத்தபடி பில்லியன்னா ஒன்னே கால் லட்சம்னு எனக்கும் தெரியும் சாமி:))

    ReplyDelete
  64. //kaipu back to the form?//

    உங்கள் பாராட்டுகள் எல்லாம் ஒரு வாரம் ஆப்பீசுக்கு லீவு போட்ட எங்க டேமஜரையே சேரும்.
    :)

    ReplyDelete
  65. ஹா..ஹா.. கலக்கல்:))

    ReplyDelete
  66. There is obviously a lot to know about this. I think you made some good points in Features also.

    rH3uYcBX

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)