Sunday, March 2, 2008

வயசை மறைப்பது எப்படி?

சங்க்கத்துப் பக்கம் எட்டிப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு! ஆஹா ஆப்பீசுல நம்மளையும் அநியாய ஆபீசரா உயர்த்தி வெச்சிட்டாங்களேன்னு பார்த்தா, கூடவே தினமும் பலகை முழுவதும் எக்கச்சக்கமா ஆணியை அடிச்சி கைல கொடுத்துடுறாங்க! என்ன பண்ணுறது! எத்தினி நாளைக்குத்தான் வேலை பாக்குற மாதிரியே நடிச்சிகிட்டிருக்க முடியும்!

விதியேன்னு ஆணி பிடுங்கிகிட்டிருந்தா வருஷக்கணக்கா சங்கத்துப் பக்கம் தலை காட்டலேன்னு அப்புறமாத்தான் தெரியுது! அதனாலதான் பதிவுலகத்துல கூட என்னய்யா அநியாய ஆப்பீசராகிட்டயான்னு கேக்குறாங்க!

இந்த ஒரு வருஷ காலத்துலே சங்கத்து சிங்கமெல்லாம் எப்படியெப்படியோ கர்ஜனை பண்ணி இருக்காங்க! எத்தனையோ அட்லாஸ் வாலிபர்லாம் வந்து போயிருக்காங்க! எல்லாரும் முதல்ல ஒரு நன்றியைச் சொல்லிக்கிடுறேன் மக்கா!

இப்பக் கூட ஒரு வாலிபர் (அம்பியை ஏன் வாலிபர்னு சொல்றாங்க? அவரு பார்க்க குட்டிக் குழந்தையா ல்ல இருக்காரு) அளப்பரை வுட்டுகிட்டு இருக்காரு! அவருக்கும் என்னோட நன்றி!

உள்நாட்டுப் பலகை கொடுத்ததோடு மட்டுமில்லாம ஆன் சைட் ஆணியும் புடுங்குப்பான்னு மலேஷியாவுக்கு அனுப்பிட்டாங்களேன்னு சந்தோஷமா வந்தேன்! இங்க வந்து பார்த்தா எங்க ஆப்பீஸ் அணியை விட பத்து மடங்கு பலகைல அடிச்சி வெச்சிகிட்டு ரெடியா உக்காந்துகிட்டிருக்கான் எங்க கஸ்டமர்!

மலேஷியா வந்திறங்கி செரம்பான்க்கு கார்லே போயிட்டு, அன்னிக்கே திரும கோலலம்பூர் வந்து போய், வாரம் ரெண்டு நாள் கோலாலம்பூர்லயும், மத்த நாளில் செரம்பான்ல ஒரு ஆஸ்பத்திரிலயும நம்ம ஆணி பிடுங்கற வேலை பயங்கரமா போயிகிட்டிருக்கு!

சங்கத்துப் பக்கம் தலை காட்டாத விஷயம் எப்படியோ மலேஷியா வரைக்கும் தெரிஞ்சி போயிடுச்சு போல!

கோலாலம்பூர்ல ஒரு பொண்ணு(பொம்பளை) ரயில்வே ஸ்டேஷன்லெ

"அங்கிள்! இந்த டிரெயின் செரம்பான் போகுமா"ன்னு கேட்டுது பாருங்க! அப்பத்தான் தூக்கி வாரிப் போட்டது.

அப்புறம் நான் தங்கி இருக்கும் ஹோட்டல்க்கு கீழே "பாவோ" விக்குற கடை போட்டிருக்குற ஒரு சீனப் பொண்ணு(அட! இதுவும் பொம்பளைதாங்க)
பார்க்குறப்போ எல்லாம்

"பாவோ! டிரை பண்ணுங்க அங்கிள்"னு சொல்லுது!

அட! பாக்குறவங்கெல்லாம் இப்படிச் சொல்றாங்களே என் காதை நானே தடவிப் பார்த்துகிட்டேன்! இத்தனைக்கும் "பாவோ" பொண்ணு கேக்குறப்போ சங்கத்து டீஷர்ட்தான் போட்டுகிட்டிருக்கேன்! இருந்ததலும் வருத்தப் படாத "வாலிபர்"னு ஒத்துக்க மாட்டேங்குறாங்க!

அதான் திரும்பவும் சங்கத்துல ஒரு ரவுண்டு எட்டிப் பார்த்துட்டுப் போவோம்! அதுக்குப் பிறகாவது ஒத்துக்குறாங்களான்னு பார்ப்போம்!


தம்பி ஜொள்ளுப் பாண்டிக்கு:
நம்ம ஜொள்ளுப் பேட்டைலயும் கடும் வறட்சியா இருக்காம்! எதிர்பார்த்து வர ரசிகைகள் எல்லாம் காலி குடத்தை எடுத்துட்டு வேற இடம் பார்க்க கெளம்பீட்டாங்களாம்! தம்பி பாண்டி "ஜொள்ளுப் பாண்டி" இப்போ "வெறும்" பாண்டி யா ஆகிட்டாருன்னு பேச்சு வரதுக்குள்ளேஎ சூதனமா உஷாராயிடு!

25 comments:

  1. இன்னும் கொயந்தைன்னு நெனப்பா அங்கிள். பொறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல வேளை போன வருசம் நீங்க தாத்தா ஆன மேட்டர் அந்தப் பொம்பளை புள்ளைங்களுக்கு தெரியாமப் போச்சேன்னு சந்தோசப் படுங்க

    ReplyDelete
  3. என்னது தாத்தாவா? :O சிபிமாமா சொல்லவே இல்ல. இனி சிபிதாத்தா தானா?

    ReplyDelete
  4. வயசானாலும் லொள்ளும் நக்கலும் உங்கள விட்டு போகவேயில்ல

    ReplyDelete
  5. //பீலாம்பரி said...
    வயசானாலும் லொள்ளும் நக்கலும் உங்கள விட்டு போகவேயில்ல
    //

    Thank You Thank You Thank You!

    ReplyDelete
  6. //வெளங்கிரும் :)))//

    Appada! Ungalukkavathu En kashtam ennannu velanguthe!

    avvvvvvvvvv!

    ReplyDelete
  7. /என்னது தாத்தாவா? :O சிபிமாமா சொல்லவே இல்ல. இனி சிபிதாத்தா தானா?//

    Nila Kutti,

    Nee Kolu thathannu sonna kooda oke than!

    ReplyDelete
  8. //நல்ல வேளை போன வருசம் நீங்க தாத்தா ஆன மேட்டர் அந்தப் பொம்பளை புள்ளைங்களுக்கு தெரியாமப் போச்சேன்னு சந்தோசப் படுங்க//

    Dev! Im your best friend!

    ReplyDelete
  9. //பொறந்த நாள் வாழ்த்துக்கள்//

    Umma usumbukku alave illaiyya?

    ReplyDelete
  10. //"அங்கிள்! இந்த டிரெயின் செரம்பான் போகுமா"ன்னு கேட்டுது பாருங்க! அப்பத்தான் தூக்கி வாரிப் போட்டது.//

    really a pathetic situation !!!!

    :)))))

    ReplyDelete
  11. //தம்பி ஜொள்ளுப் பாண்டிக்கு:
    நம்ம ஜொள்ளுப் பேட்டைலயும் கடும் வறட்சியா இருக்காம்! எதிர்பார்த்து வர ரசிகைகள் எல்லாம் காலி குடத்தை எடுத்துட்டு வேற இடம் பார்க்க கெளம்பீட்டாங்களாம்! தம்பி பாண்டி "ஜொள்ளுப் பாண்டி" இப்போ "வெறும்" பாண்டி யா ஆகிட்டாருன்னு பேச்சு வரதுக்குள்ளேஎ சூதனமா உஷாராயிடு!//

    ஆஹா எச்சரிக்கை மணி அடிச்சதுக்கு நெம்ப தேங்கஸ் சிபி.... நாம என்னிக்கும் வெறும் பாண்டி தான் அப்போ அப்போ தானே ஜொள்ளு ..?? ;))))

    அங்கிள்ன்னு சொல்லறாங்களேன்னு எல்லாம் கவலைப் படாதீங்க... நடிகன் சத்தியராஜ் மாதிரி வேஷத்தை போடுங்கப்பு... ;)))))))

    ReplyDelete
  12. //"அங்கிள்! இந்த டிரெயின் செரம்பான் போகுமா"ன்னு கேட்டுது பாருங்க! அப்பத்தான் தூக்கி வாரிப் போட்டது//

    மலேசியால லட்சக்கணக்கான மலேசிய காரங்க இருக்க அங்கிள்னு சொல்லிக்கிட்டாச்சும் உங்க கிட்ட பேசுதுங்களே அந்த பொம்பளைங்க...அதுக்கு என்ன அர்த்தம்?

    உங்க கிட்ட சுண்டி இழுக்கற ஏதோ ஒரு ஃபவர் இருக்கு
    :)

    ReplyDelete
  13. மலேசிய ஆட்களுக்கு மரியாதையாக் கூப்புடறதுன்னா அங்கிள்தாங்க.

    இங்கே ஒரு மலேசியாத் தமிழ்ப் பாட்டி ( உண்மையிலேயே பாட்டிதான். ஒரு எம்பது எம்பத்தி அஞ்சு இருக்கும்) அக்கா, மாமா இன்னும் எங்களையெல்லாம்கூட ஆண்ட்டி, அங்கிள்னு கூப்புடும்.

    அதெல்லாம் கண்டுக்காதீங்க:-)))))

    ReplyDelete
  14. //
    மலேசியால லட்சக்கணக்கான மலேசிய காரங்க இருக்க அங்கிள்னு சொல்லிக்கிட்டாச்சும் உங்க கிட்ட பேசுதுங்களே அந்த பொம்பளைங்க...அதுக்கு என்ன அர்த்தம்?

    உங்க கிட்ட சுண்டி இழுக்கற ஏதோ ஒரு ஃபவர் இருக்கு
    //
    கைப்புள்ள, நீங்க சிபியை வெச்சு காமடி கீமடி எதும் பண்ணலயே??

    ReplyDelete
  15. சிபி அண்ணாச்சி!
    //அதான் திரும்பவும் சங்கத்துல ஒரு ரவுண்டு...அதுக்குப் பிறகாவது ஒத்துக்குறாங்களான்னு பார்ப்போம்!//

    ஓ இந்தப் பதிவின் ரகசியம் இது தானா? நீங்க சொல்லி நான் கேக்கலைன்னா எனக்கு அடுத்த வேளை பிட்சா கூட கெடைக்காது!

    இந்த ஒரு பதிவுக்கு மட்டும்
    இனி பின்னூட்டம் போடுறவுங்க
    வெறும் சிபி-ன்னு எழுதாது
    வாலிபர் சிபி-ன்னே எழுதுமாறு
    ஆன்மீக டிப்பார்ட்மென்டுல இருந்து ஒரு ஃபத்வா போடுறேன்! :-)

    வாலிபர் சிபி அங்கிள் வாழ்க வாழ்க!!

    ReplyDelete
  16. வந்துடார்யா வந்துடார்யா!!!! கலக்கு தல!

    ReplyDelete
  17. வயசை குறைச்சு காட்டுறேன்னு சில டெக்னிக்கெல்லாம் எடுத்தீங்கல்ல.. அதெல்லாம் சொல்லலையா? :-)))

    ReplyDelete
  18. பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    வாலிபர் சிபி

    நன்றி :: கேஆரெஸ்

    ReplyDelete
  19. அடடே! தெரியாம போச்சே!

    எங்க தலைவர் கே.ஆர்.எஸ் ஏதோ பத்வா போட்டிருக்காருன்னு கேள்விப்பட்டு வந்தேன்.

    வாலிபர் சிபி வாழ்க வாழ்க.....

    ReplyDelete
  20. வயதை எப்படி குறைப்பது?ன்னு போடாமல், மறைப்பதுன்னு உண்மைய ஒத்துக்கிட்டதுலருந்தே ,நீங்க எவ்ளோ நல்லவரு:))))))))
    சூப்பரு..

    ReplyDelete
  21. ஆமாங்க மாம்ஸ் .. வாலிபர் சங்கத்துல எழுதனா வயச மறைக்கலாம்ன்னா.. குட்டிஸ் கார்னர்ல எழுதுனா முழுசா வயச மறைக்க முடியும்ல்ல..
    நல்ல வழி காட்டினிங்க :P

    ReplyDelete
  22. // நிலா said...

    என்னது தாத்தாவா? :O சிபிமாமா சொல்லவே இல்ல. இனி சிபிதாத்தா தானா?//

    ReplyDelete
  23. //:: மை ஃபிரண்ட் ::. said...

    வயசை குறைச்சு காட்டுறேன்னு சில டெக்னிக்கெல்லாம் எடுத்தீங்கல்ல.. அதெல்லாம் சொல்லலையா? :-)))//
    athenna techinue?.. sonnaa naangalum therinjikkuvmllaiyaa?
    :P

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)