Monday, October 29, 2007

சங்கம் ஸ்பெஷல் தீபாவளி ரீலிஸ் வெடிகள்!

சிவாஜி வெடி!

இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் வெடி இது தான்...

சிவாஜி வெடியில ஒரு வெடியை உங்க வீட்டு வாசலில் கொளுத்தினால் உங்க தெரு, உங்க ஊர் மட்டும் அல்ல அகிலகமே அதிரும்படி வெடிக்கும் வெடி இது. மெய்யாலுமே அதிருது இந்த வெடி.

G3 வெடி!

இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.

தழுக்கு முழுக்கு தம்பி வெடி!

நல்ல உயரமாக, அழகாக வடியமைப்புடன் வெளியீடப்பட்டு இருக்கும் இந்த வெடியின் சிறப்பு அம்சம், பத்த வைத்தால் மட்டும் போதாது பாவானா பாவானா என ரொமாண்டிக்கு குரல் எழுப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் வெடிக்கும்.

பிரதம வெடி!

இது நம்ம அனுகுண்டு தாங்க, இந்த வருசத்துக்குகாக பெயர மாத்தி வச்சு இருக்காங்க. ஆனா வழக்கம் போல சத்ததுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

ஜொள்ளு பாண்டி வெடி!

இது பெண்கள் கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும், ஆண்கள் இந்த வெடியை கொளுத்தி மகிழ வேண்டும் என்றால் பெண்கள் அதிகம் இருக்கும் இடத்திலோ, பெண்கள் கல்லூரி முன்போ, பெண்கள் பள்ளிகள் முன்போ கொளுத்தினால் வெடிக்கும். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் வெடித்த பிறகு ஜொள்ளாக வடியும் படி இதை வடிவமைத்து இருப்பது இந்த வெடியின் தனி சிறப்பாகும்.

கமல் வெடி!

இந்த ஒரு வெடி வாங்கி கொளுத்தினால் உயர போய் பத்து வெடியாக பிரிஞ்சு ஒவ்வொரு வெடியும் ஒவ்வொரு மாதிரியாக வெடிக்கும். திரியை வாயிலில் கிள்ளி வைத்தால் நல்லா பிரம்மாண்டமாக வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

நாமக்கல் ஸ்பெஷல் பீர்வெடி!

கண்டதோ Full-லு கொண்டதோ குவாட்டர்ன்னு இருக்குற இந்த ஸ்பெஷல் தீபாவளி வெடி டாஸ்மார்க் முன்னாடி கொளுத்தினாத்தான் சும்மா குத்தாட்டம் போட்டு எகிறி குதிச்சு வெடிக்கும். இல்லாட்டி புஸ்ஸுதான் !!! நயன், நமீதா, நவ்யா போன்ற 'ந' வரிசை திரைப்பட நடிகளைகளின் பேவரைட் வெடி இந்த வெடி தான்.

சூடான் சுளுக்கு வெடி!

இந்த வெடி வெடிக்கணும்னா கெடாவெட்டி பொங்க வச்சு fullu full ல்லா படையல் வச்சாத்தான் கொஞ்சமாச்சும் வெடிக்கும். ஆரம்பத்திலே கேஸ் இல்லாத பீர் மாதிரி லேசாதான் பொங்கும். ஆனா லேசா முதோ கியர்ல ஸ்டார்ட் பண்ணி அப்படியே 5 த் கியர்ல நைட்டு புல்லா வெடிச்சு எகிறதது தான் இதோட ஸ்பெசாலிடி ..

சிம்புவின் சொம்பு வெடி!

இந்த வெடியை வெடிக்கும் போது கைவசம் குடை இருக்க வேண்டியது அவசியம். வெடியை கொளுத்தின வுடன் புஸ்ஸு புஸ்ஸுனு சத்தம் ஒவரா கொடுத்துட்டு மேலே போயி நீர் நிரம்பி இருக்கும் சொம்பை கவிழ்த்தது போல் நீரா கொட்டும், அதில் நனையாமல் இருக்க தான் குடை. இந்த வெடியை வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிப்பது சாலச்சிறந்தது.

இன்னும் வரவிருப்பது...

கைப்புவின் பொட்டு வெடி...
விவசாயின் கொத்துக்கடலைவெடி...
தேவ்வின் குட்டிசுவர் வெடி...
வெட்டியின் கொல்டி வெடி...
கப்பியின் கயமை வெடி...
அபிஅப்பாவின் அபிநய வெடி...

32 comments:

  1. /G3 வெடி!

    இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.

    தழுக்கு முழுக்கு தம்பி வெடி!

    நல்ல உயரமாக, அழகாக வடியமைப்புடன் வெளியீடப்பட்டு இருக்கும் இந்த வெடியின் சிறப்பு அம்சம், பத்த வைத்தால் மட்டும் போதாது பாவானா பாவானா என ரொமாண்டிக்கு குரல் எழுப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் வெடிக்கும்.//

    ஹி ஹி.... :))

    ReplyDelete
  2. வெடி மட்டும் தான் கிடைக்குமா..புஸ்வாணம். ... தரச்சக்கரம் எல்லாம் எப்ப ரிலீஸ்...?
    வெடி எல்லாம் ஸ்பெஷலா இருக்கு.

    ReplyDelete
  3. ஆணாதிக்க பதிவை கண்டிக்கிறேன்.

    நமிதா வெடி, பாவனா வெடி, ரீமா சென் வெடியெல்லாம் இல்லையா ?

    ReplyDelete
  4. adada.. vedi ellam balama iruke.. innum niraya vedi, busvanam, mathappu adu pathi ellamum podunga

    ReplyDelete
  5. @ கண்ணன்

    ஏண்ணனே இப்படி....

    இட ஒதுக்கீடு கொடுத்திடுவோம்... சீக்கிரமே...

    ReplyDelete
  6. //இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.//

    பைவ் ஸ்டாரா?
    த்ரீ ஸ்டாரா?

    ReplyDelete
  7. தம்பி said...

    //இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.//

    பைவ் ஸ்டாரா?
    த்ரீ ஸ்டாரா?//

    கையேந்தி பவன்'லே கூட வெடிக்கும்... :)

    ReplyDelete
  8. \\G3 வெடி! \\

    \\தழுக்கு முழுக்கு தம்பி வெடி! \\

    சூப்பர் ;)

    ReplyDelete
  9. //வெடி மட்டும் தான் கிடைக்குமா..புஸ்வாணம். ... தரச்சக்கரம் எல்லாம் எப்ப ரிலீஸ்...?
    வெடி எல்லாம் ஸ்பெஷலா இருக்கு.//

    நீங்க கேட்டு மறுப்போமா... படம் காட்டிட்டா போச்சு....

    ஸ்பெஷல் பர்சனாலிட்டில எல்லாம் அதான் வெடியும் ஸ்பெஷலா இருக்கு... என்ன உங்க பெயர் தான் இதுல வுட்டு போச்சு.... ஏதும் உள்நாட்டு சதியா இருக்கும் என்று நினைக்குறேன்.

    ReplyDelete
  10. /பைவ் ஸ்டாரா?
    த்ரீ ஸ்டாரா?//

    சாப்பிடு, இடத்தில் என்னய்யா இருக்கு... தரமும் ருசியும் தானே முக்கியம். தரமும், ருசியும் அருமையா இருந்தா வெடி அருமையா வெடிக்கும். கம்மியா இருந்தா வெத்து வெட்டா போயிடும். :)

    ReplyDelete
  11. கன்னி வெடி இல்லாமல் வெறும் நாட்டு வெடியா ? ம்ஹூம் யாருக்கு வேண்டும் !

    மீண்டும் புறக்கணிப்பு !

    ReplyDelete
  12. /கன்னி வெடி இல்லாமல் வெறும் நாட்டு வெடியா ? ம்ஹூம் யாருக்கு வேண்டும் !

    மீண்டும் புறக்கணிப்பு !//

    கன்னிகள் வெடி வேடிப்பது போலவே அடுத்தப்பா பிடிச்சு போட்டுட்டா போச்சு... :)

    புறக்கணிப்ப தள்ளி வச்சுட்டு சபை குள்ள வாங்க....

    ReplyDelete
  13. @ராம் அண்ணனே!

    உங்க கொல வெறி உங்க சிரிப்பில் இருந்தே நல்லா தெரியுது. :)

    ReplyDelete
  14. //அபிஅப்பாவின் அபிநய வெடி...//

    அபி அப்பாவுக்கு வருசம் முழுக்க தீபா'வழி' ந்னு அபிநயம் பிடிச்சுட்டுத் தானே இருக்கார்.:)))

    ReplyDelete
  15. /அபி அப்பாவுக்கு வருசம் முழுக்க தீபா'வழி' ந்னு அபிநயம் பிடிச்சுட்டுத் தானே இருக்கார்.:)))//

    அவரு "தீபா"வளிக்கு ஊருக்கு போகும் நேரத்தில் பத்த வச்சுட்டியே பரட்டை...

    ReplyDelete
  16. //G3 வெடி!

    இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.
    //
    G3 சொல்லவே இல்லை.

    :-))

    ReplyDelete
  17. வெடியெல்லாம் சூப்பர்.. அதுலயும் g3 வெடி, அல்டிமேட் :D :D

    ReplyDelete
  18. எனக்கு வெடின்னா பயம், தீபாவளி ரீலிஸ் மத்தாப்பு எல்லாம் இல்லையா...

    ReplyDelete
  19. ராயல் வெடி இல்லையா..:)

    ReplyDelete
  20. பத்த வைத்தால் மட்டும் போதாது பாவானா பாவானா என ரொமாண்டிக்கு குரல் எழுப்பினா மட்டும் போதுமா இல்லை கிட்ட போயி கிஸ் அடிக்கலாமானு தம்பி கேட்குறாரு

    :)

    ReplyDelete
  21. ஹூம் வெளிநடப்பு

    ReplyDelete
  22. //இராம்/Raam said...
    தம்பி said...

    //இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.//

    பைவ் ஸ்டாரா?
    த்ரீ ஸ்டாரா?//

    கையேந்தி பவன்'லே கூட வெடிக்கும்... :)
    //

    அண்ணே.. உண்மைய எல்லாம் இப்படி உரக்க சொல்லகூடாதுன்னே.. உங்க உயிருக்கு ஆபத்தாயிடப்போகுதுண்ணே..

    உங்களுக்கு எதாவது ஒன்னு ஆயிடுச்சுன்னா அப்புறம் நாங்க யாரை கலாய்ப்போம் :(

    ReplyDelete
  23. ////G3 வெடி!

    இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.
    //
    G3 சொல்லவே இல்லை.

    :-))//

    எனக்கே இப்ப தானே தெரியுது.. சரி. சரி.. இந்த வெடிக்கு ராயல்டிய கரெக்டா அனுப்பிட சொல்லுங்க :)

    ReplyDelete
  24. //ராயல் வெடி இல்லையா..:)//

    சேம் கொஸ்டின்.. ராயல் வெடி இல்லையா????

    ReplyDelete
  25. //தம்பி said...
    //இந்த வெடியின் சிறப்பு அம்சம், இதை ஏதாவது ஒட்டல்களுக்கு முன்பு கொளுத்தினால் மட்டுமே வெடிக்கும்.//

    பைவ் ஸ்டாரா?
    த்ரீ ஸ்டாரா?//

    சாப்பாடு இருந்தா கையேந்தி பவன் முன்னாடி கூட வெடிக்கும்.

    ReplyDelete
  26. குசும்பு வெடி எதுவும் இல்லையா?

    இதை வன்மையாக கண்ணடிக்கிறோம் ச்சீ கண்டிக்கிறோம்.

    ReplyDelete
  27. :))))

    அடுத்த செட்டை சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடு மக்கா ;)))

    ReplyDelete
  28. நல்லா வெடிக்கறீங்கப்பா!!

    ReplyDelete
  29. //கண்டதோ Full-லு கொண்டதோ குவாட்டர்ன்னு இருக்குற இந்த ஸ்பெஷல் தீபாவளி வெடி//

    கண்டதுக்கும் கொண்டதுக்கும் நடுவுல என்ன ஆச்சு தல? :-)
    ஃபுல்லைக்
    குவார்ட்ட்ர் ஆக்கி
    மேட்டர் தெரியாமல்
    மீட்டர் போட்ட - அந்த
    போர்ட்டர் யார்? யார்? யார்?

    ReplyDelete
  30. வெட்டிக்கு எதுக்குப்பா வேஸ்ட்டா வெடி?
    அதான் பேர்-லயே வச்சிருக்காரு-ல்ல?
    வெட்டி-யில் ட்-ஐக் கட் பன்ணுங்க! தானா வெடிக்கும்! :-)

    ராயல் வெடி, குசும்பு வெடி எல்லாம் இல்லாம என்ன வெடி? அதையும் சேத்துக்கங்கப்பு!

    ReplyDelete
  31. ஆஹா சூப்பர் வெடியா இருக்கே எல்லாத்தையும் வாங்கிட வேண்டியதுதான் ஆனா இங்க துபாயில் வெடிக்க கூடாதே, அதனால் என்ன வெடிய வெச்சு அதுமேல அபிஅப்பாவை உட்கார வெச்சு வெடிச்சா கண்டு பிடிக்கமுடியாதுல்ல... செஞ்சுடுவோம்...

    ReplyDelete
  32. குசும்பன் கொலைவெறி படை said... ///

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ராயல் வெடி, குசும்பு வெடி எல்லாம் இல்லாம என்ன வெடி? அதையும் சேத்துக்கங்கப்பு!////

    கண்ணபிரான், JK நீங்க எல்லாம் நல்லவரா கெட்டவரா?:(((((((((

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)