Tuesday, August 21, 2007

போலீசுக்கே ஆப்படித்த Blogger VCR!

இது ஒரு நண்பனின் உண்மைக் கதை: கதையல்ல, நிஜம்!
போன் போர்பர் என்ற உலக மகா நகரத்துல நமக்கு ஒரு தோஸ்து இருக்காரு. அவருக்குக் காரை ஓட்டணும்னா சுத்தமாப் பிடிக்காது!....காரைத் துரத்தத் தான் பிடிக்கும்!

ஒரு முறை நியூயார்க் நகரத்துக்கு வண்டியை விரட்டிக்குனு வந்தாரு நம்ம ஹீரோ!
உன் விரட்டு என் விரட்டு இல்ல... காளை மாடு அடக்கும் மஞ்சு விரட்டு!
(அவர் காருக்கு முன்னால மஞ்சு-ன்னு ஒரு ஃபிகர் கார்ல போயிக்கிட்டு இருந்தாங்க.
அதான் "மஞ்சு விரட்டு" விரட்டினார் என்று பின்னர் வந்த காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுச் செய்தி சொல்லியது - இதற்கு துப்பு கொடுத்தவர் சிங்க வாகனத்தில் வரும் ஒரு பெண் பதிவர்-ன்னு பரவலாப் பேசிக்கறாங்க!)

நான் இப்ப மேட்டருக்கு ஓஸ்தானு!
தன் கடமையில் சற்றும் மனம் தளராத ஒரு போலீஸ் மாமா, நண்பருக்கு பின்னாடியே வந்து லைட்டைப் போட்டாரு! ஒரங்கட்டேய்! .....

அப்பறம் நடந்த காமெடியைப் பற்றி நண்பர் ஒரு பதிவ போட்டாரு! ஆனா பாருங்க....ஏதோ தான் மட்டும் ஜென்டில்மேன் போலவும், போலீஸ் மாமா தான் ரொம்ப டகால்டி பண்ணி, கொடைச்சல் கொடுத்ததாகவும் அந்த பதிவுல அளந்திருந்தாரு!

எனவே உண்மைய ஊருக்கும் ஒலகத்துக்கும் எடுத்துச் சொல்ல,
காவல்துறை என்னைய சிறப்புச் செய்தியாளரா அப்பாயிண்டு சேஸ்தானு!
நண்பருக்கும் போலீஸ் மாமாவுக்கும் நடந்த உரையாடல் இதோ படியுங்கள்!
(முன் குறிப்பு: இது சோனி மினி டிவிடியில் டேப்பும் செய்யப்பட்டுள்ளது! - பதிவின் இறுதியில் அந்தக் காட்சிய நீங்களே பாருங்க!)



ஆபிசர்: உங்கள் ட்ரைவிங் லைசன்சைக் காட்டுங்க!
நண்பர்: அதெல்லாம் இப்ப இல்லீங்க ஆபிசர். ஏற்கனவே மூணு தபா புடிச்சி வுட்டுட்டாங்க.
நாலாவது தபா அதைப் புடிங்கிக்குனாங்க ஆபிசர், பாவிப் பயலுங்க!.

ஆபிசர்: சரி, வண்டி ஓனர் பத்திரம் எடுங்க
நண்பர்: சாரிங்க ஆபிசர். வண்டி என்னுதல்ல, நேத்து தான் டிஸ்கோ பார் வாசல்ல திருடினேன்!

ஆபிசர்: வாட்? திருட்டுக் காரா?
நண்பர்: ஆமாங்க ஆபிசர். பாருங்க நான் எப்பவும் உண்மையே தான் பேஸ்வேன் ஆபிசர்

ஆபிசர்: காரின் உண்மையான ஓனர் யார் என்று தெரியுமா?
நண்பர்: தெரியுங்க ஆபிசர். இந்த ஹேண்ட்பேக்-ல அவிங்க அட்ரெஸ் இருக்கு ஆபிசர். எடுக்கட்டுங்களா?
ஆனா உள்ளார ஒரு சின்னக் கைத்துப்பாக்கி வச்ச்சிருக்கேன் ஆபீசர்!

(ஆபிசர் ஒரு ஐந்து அடி பின்னால் நகர்கிறார், ஒரு வித வெடவெடப்புடன்)
நண்பர்: அந்தத் துப்பாக்கியால தாங்க ஆபிசர், இந்தக் காருக்குச் சொந்தக்கார பொண்ணைச் சுட்டேன்;
பின்னாடி டிக்கியில், பொணத்த கூட போட்டிருக்கேனுங்க ஆபிசர்!

(ஆபிசருக்கு வெலவெலத்துப் போய்விடுகிறது! ஒரு அம்பது அடி பின்னால் நகர்ந்து கொண்டு, பெரிய ஆபிசரை வாக்கி டாக்கியில் கூப்படறாருங்கோ!
எங்கிருந்தோ வந்தான், போலீஸ் சாதி நான் என்றான்-ன்னு, திபுதிபு-ன்னு ஒரு நாலு ஆபிசர்கள் காரை புடை சூழ்ந்து கொள்கிறார்கள்...பெரிய ஆபிசர் காரை நோக்கி ஒஸ்தானு!...)



பெ.ஆபிசர்: ஆடாதே! அசையாதே!
அப்படியே உக்காருங்க மிஸ்டர்! லைசன்ஸ் இல்லை போல இருக்கே?
நண்பர்: ஐயோ! இதோ இருக்கு ஆபிசர்!
(பெ.ஆபிசர் பாக்குறாரு, லைசன்ஸ் பக்காவா இருக்கு)

பெ.ஆபிசர்: யாரு காருங்க இது?
நண்பர்: என் காரு தான் ஆபிசர்!
பாவா வீட்டுல ஜாவா படிச்சி,
சுயமா சிந்திச்சி, கூகுளில் code தேடாம.........
ஆபீசில் பதிவு எழுதாம.....பின்னூட்டம் போடாம, நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி, பொட்டி தட்டி, சம்பாரிச்சதுங்க ஆபிசர்! இந்தாப் பாருங்க டாக்குமெண்டு!
(பெ.ஆபிசர் பாக்குறாரு, டாக்குமெண்டு பக்காவா இருக்கு)

பெ.ஆபிசர்: இது யாரு கைப்பைங்க, மிஸ்டர்? துப்பாக்கி இருக்கு-ன்னு சொன்னீங்க போல இருக்கே?
நண்பர்: ஐயோடா சாமீ...என் தங்கமணி பை தாங்க ஆபிசர்...
அதுக்குள்ள துப்பாக்கியா? தொறந்து பாருங்க ஆபிசர்...
ஒரே கொண்டை ஊசி, ஒம்போது சீப்பு, நாலு மேக்கப் ஷேடு, நாப்பது லிப்ஸ்டிக்கு - இது தாங்க இருக்கு ஆபிசர்!
(பெ.ஆபிசர் தொறந்து பாக்குறாரு, சிரிக்கிறாரு - அவரு தங்கமணியை அவரு நினைச்சிக்கிட்டாரு போல!)

பெ.ஆபிசர்: சாரி மிஸ்டர், பாத்தா பால் வடியும் பால முகமா இருக்கீங்க...
If you dont mind...கொஞ்சம் டிக்கிய ஓப்பன் பண்ண முடியுமா?
(நண்பர் ஓப்பன் செய்ய,.....அய்யோ....
டிக்கியில் நாலு ஜட்டி, ரெண்டு டென்னிஸ் பாட், எப்போதோ தூக்கி வீசிய மாங்கொட்டை, ஒரு ஸ்டெப்னி தான் காட்சி கொடுத்தது!)

பெ.ஆபிசர்: எனக்கு ஒண்ணுமே புரியலையே!
இந்த ஆபிசர் உங்களிடம் லைசன்ஸ் இல்லை, திருட்டுக் கார், துப்பாக்கி இருக்கு, பொணம் டிக்கியில இருக்குன்னுல சொன்னாரு!
யோவ், ஈகிள் 402, ஸ்ட்ரைப் 303....என்னய்யா நடக்குது இங்க?

நண்பர்: அய்யோ, அப்படியா சொன்னாங்க ஆபிசர்? பகல் கனவு காணுறாங்களா? மிட் நைட் மசாலா ஏதாச்சும் பாத்த கலக்கமா?
நான் ஓவர் ஸ்பீடுல..100 மைல் பெர் ஹவர்ல போனதாக் கூடச் சொல்லி இருப்பாங்களே, ஆபிசர்? கலி காலம்டா ஆபிசர்!

பெ.ஆபிசர்: ஆமாம்...ஆமாம்...ஈகிள் 402 அப்பிடித் தான் சொன்னாரு!
நண்பர்: (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு) அதை எல்லாம் நீங்க நம்புறீங்களா ஆபிசர்?

பெ.ஆபிசர்: சேச்சே...ஏதுமறியாப் பச்சிளம் பாலகன் போல இருக்கீங்க! பால் மணம் மாறாச் சிறுவனைப் போல இருக்கும் உங்களைப் போயி.....
ஐ ஆம் வெரி சாரி மிஸ்டர் VCR!......நீங்கள் போகலாம்!
தொந்தரவுக்கு மன்னிக்கவும்! உங்கள் பயணம் இனிய பயணமாய் அமையட்டும்!
(பெ.ஆபிசர் திரும்பி, ஆபிசர்களை எல்லாம் ஒரு முறை முறைக்க....)


நண்பரின் கார் நியூயார்க்கை நோக்கிப் பறக்கிறது!...காருக்குள் சிடியில்...
அண்ணே அண்ணே...சிப்பாய் அண்ணே
நம்ப ஊரு, நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டுப் போச்சண்ணே!
அதச் சொன்னா வெக்கக் கேடு
அதச் சொல்லாட்டி மானக்கேடு...
அண்ணே அண்ணே...


நியூயார்க் நகரத்து டிஸ்கோ பார் வாசலில், (Cop)காப்புக்கே ஆப்படித்த கடமை வீரரை, ப.பா.சங்கத்தினர் ஒரு வித வெட்கத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர்.
நண்பர் நேரே டிஸ்கொத்தேவில் கலந்து ஐக்கியமாக, நமீதாவுடன், காதல் யானை வருகுது ரெமோ! இதோ!



அன்பு அண்ணன் வீசீஆரை-ஐ, வீசி வரவேற்கத் (தக்காளி தான் வேறென்ன?) துடியாய்த் துடிக்கும் 23ஆம் வார்டின் அன்புத் தொண்டர்கள், படம் வரைந்து கட்-அவுட் வைத்த பாச உடன்பிறப்புக்கள்:
பாசமலர் மலேசிய மாரியாத்தா, மற்றும் மற்றும் கனவு நாயகன் DreamZZZ, மற்றும் cdk

போலீசுக்கே ஆப்படித்த Blogger VCRக்கு, "ஆப்பம்" வாங்கித் தருவோம் வாங்க.
டமிள் கூறும் பதிவர்களே, வந்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்து விட்டுப் போங்கள்! :-)







67 comments:

  1. அவ்வ்வ் அவரு நல்லவருன்னு நினைச்சேனே :((

    ReplyDelete
  2. //அன்பு அண்ணன் வீசீஆரை-ஐ, வீசி (தக்காளி தான் வேறென்ன?) வரவேற்கத் துடியாய்த் துடிக்கும்
    பாசமலர் மலேசிய மாரியாத்தா
    மற்றும் கனவு நாயகன்//

    எனக்கு முட்டை தான் அடிக்க பிடிக்கும்.ஓ அவரு சைவம் இல்லையா?சரி அழுகி போன தக்காளி,பீன்ஸ் ன்னு சைவமாக அடிக்கிறேன் :))

    ReplyDelete
  3. KRS சும்மா CVRயை ஒட்டு ஒட்டுன்னு ஒட்டிக்கிட்டு இருகீங்க ;-))

    அட்டகாசமான பதிவு ;-)

    ReplyDelete
  4. அவரு எல்லாம் முடிந்தவுடன் ஒன்னு சொல்லவாரு...நீங்க அதை மறந்துட்டிங்க போல


    எல்லாம் இறைவன் செயல் ;)

    ReplyDelete
  5. இதைப் படிச்சுட்டு, இவரு ரொம்ப நல்லவரு பாவம் ன்னு ஒருத்தராச்சும் சொல்லுவாங்க பாருங்க.ஹ்ம்ம்ம்ம் எப்படிதான் இவரு ஊரை இப்படி ஏமாத்துறாரோ...ஒரு வேலை அந்த பால் வடியும் முகம் செய்யும் வேலையா?

    ReplyDelete
  6. //துர்கா|thurgah said...
    எப்படிதான் இவரு ஊரை இப்படி ஏமாத்துறாரோ...ஒரு வேலை அந்த பால் வடியும் முகம் செய்யும் வேலையா?//

    என்னாது பால் வடியுதா? என்ன சிஸ்டர் சொல்றீங்க?
    பிள்ளையார் பால் குடிச்சா மாதிரி...
    VCR மூஞ்சில பால் வடியுதா?

    ஆகா...
    Fat Free Milk?
    2% Fat Milk?
    200% Fat Milk?
    எது? எது???

    ReplyDelete
  7. நாட்ல நல்லவனுக்கே காலம் இல்லை... இதை தான் கலிகாலம்னு சொல்லுவாங்க...

    ReplyDelete
  8. \துர்கா|thurgah said...
    இதைப் படிச்சுட்டு, இவரு ரொம்ப நல்லவரு பாவம் ன்னு ஒருத்தராச்சும் சொல்லுவாங்க பாருங்க.ஹ்ம்ம்ம்ம் எப்படிதான் இவரு ஊரை இப்படி ஏமாத்துறாரோ...ஒரு வேலை அந்த பால் வடியும் முகம் செய்யும் வேலையா? \\

    நான் போயி டீ குடிச்சிட்டு வரேன்....;)

    ReplyDelete
  9. நான் நல்லவனு சொன்னது அந்த போலிஸ் கான்ஸ்டபிலை...

    ReplyDelete
  10. நல்ல ஐடியாவா இருக்கே.

    வி.சீ.ஆரு. இம்புட்டு புத்திசாலியா :)

    ReplyDelete
  11. இடுகையை இன்னும் படிக்கலை இரவிசங்கர். இனிமே தான் படிக்கணும். ஆனா அந்த 'பிளானெட் கலாட்டா செம ரகளை' சில காட்சிகள் பார்த்தேன். உண்மையாலுமே செம ரகளை தான். :-)))))

    ReplyDelete
  12. ஆகா...கும்பல் கூடுதே...சூப்பர இருக்கும் போல இருக்கே ;-)

    ReplyDelete
  13. நல்ல காமெடிங்க RKS. Planet Galatta Super :)

    ReplyDelete
  14. \\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //துர்கா|thurgah said...
    எப்படிதான் இவரு ஊரை இப்படி ஏமாத்துறாரோ...ஒரு வேலை அந்த பால் வடியும் முகம் செய்யும் வேலையா?//

    என்னாது பால் வடியுதா? என்ன சிஸ்டர் சொல்றீங்க?
    பிள்ளையார் பால் குடிச்சா மாதிரி...
    VCR மூஞ்சில பால் வடியுதா?

    ஆகா...
    Fat Free Milk?
    2% Fat Milk?
    200% Fat Milk?
    எது? எது??? \\\

    KRS....இந்த FAT MILKன்னு சொல்றிங்களே அப்படின்னா டமிள்ல இன்ன அர்த்தம் ;)

    ReplyDelete
  15. //KRS....இந்த FAT MILKன்னு சொல்றிங்களே அப்படின்னா டமிள்ல இன்ன அர்த்தம் ;)//

    கொழுப்பு புடிச்ச பால் :))
    actually விசிஆர் க்கு கொழுப்பு பிரச்சனை இருக்கு,ஆகவே fat milk nu thaan varum pola

    ReplyDelete
  16. அடப்பாவி முந்தா நேத்து என்னை விரட்டிட்டு வந்த. நேத்து மஞ்சுவை விரட்டி இருக்க. மறுபடி இந்த பக்கம் வா பேசிக்கறேன்.

    ReplyDelete
  17. கவிதா, மஞ்சு...

    வாத்தியாரே நீ என்னையே தோக்கடிச்சுடுவே போலிருக்கே

    ReplyDelete
  18. //KRS....இந்த FAT MILKன்னு சொல்றிங்களே அப்படின்னா டமிள்ல இன்ன அர்த்தம் ;)//

    fat = கொழுப்பு
    milk = பால்
    அப்படீன்னா...கொழுப்புப் பால்...கொழும்பால்...கொழுப்பால்...
    கொழுப்பால் பதிவு போடறவரு தானே VCR? :-)

    நான் ஏதுனா தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கவும்!
    கரெக்டு தான்னு நினைச்சிங்கனா...
    VCRக்கு எக்ஸ்ட்ரா "ஆப்பம்" வாங்கிக் கொடுங்க! :-))

    ReplyDelete
  19. \\கவிதா said...
    அடப்பாவி முந்தா நேத்து என்னை விரட்டிட்டு வந்த. நேத்து மஞ்சுவை விரட்டி இருக்க. மறுபடி இந்த பக்கம் வா பேசிக்கறேன். \\

    அடிபாவி...முந்தா நேத்து கவிதா..நேத்து நான்..இன்னிக்கு யாரு??

    ReplyDelete
  20. நிறுத்துங்கககககககககக!!!!!!!!!!

    முதல்ல இந்த குழந்தைக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மேல கன்டின்யூ பண்ணுங்க.

    ReplyDelete
  21. \kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //KRS....இந்த FAT MILKன்னு சொல்றிங்களே அப்படின்னா டமிள்ல இன்ன அர்த்தம் ;)//

    fat = கொழுப்பு
    milk = பால்
    அப்படீன்னா...கொழுப்புப் பால்...கொழும்பால்...கொழுப்பால்...
    கொழுப்பால் பதிவு போடறவரு தானே VCR? :-)

    நான் ஏதுனா தப்பா சொல்லியிருந்தா மன்னிக்கவும்!
    கரெக்டு தான்னு நினைச்சிங்கனா...
    VCRக்கு எக்ஸ்ட்ரா "ஆப்பம்" வாங்கிக் கொடுங்க! :-)) \\


    கரிக்கிட்ட சொன்ன வாத்தி....ஆனா அது "ஆப்பம்" இல்ல "ஆப்பு" எங்க சொல்லுங்க பார்ப்போம் "ஆப்பு"

    ReplyDelete
  22. // கோபிநாத் said...

    ஆகா...கும்பல் கூடுதே...சூப்பர இருக்கும் போல இருக்கே ;-) //

    இப்பொழுது ஒருத்தரையுமே காணோமே....

    ReplyDelete
  23. டேய்...யாருடா இந்த கேஆரெஸ்சு?
    எங்கள் அத்தான் VCR-இன் மேல் அபாண்டமாகப் பழி சுமத்தறீங்களா?
    நாங்க எறங்கி வந்தா என்னா நடக்கும் தெரியுமா?

    மொதல்ல, VCR எங்களோடு ஆசையா ஆடிய டிஸ்கோ படம் போடுங்கடா!
    வந்துட்டாங்க ஆல் தீஸ் நமீதா & சக்காளத்திகள்!

    ReplyDelete
  24. ஏங்க அட்லாசு,

    100-க்கு மேலே போனா புடிச்சு உள்ளே போட்ருவாங்களே...108-ல் போயி காப்புக்கு ஆப்பு வேற வச்சுட்டு வந்த்டாரா? பெரிய ஆளுதான்..

    கடைசி வீடியோல வற தம்பிய, சிங்கப்பூர் தொலைக்காட்சில பாத்த மாதிரி இருக்கே?

    ReplyDelete
  25. //
    மொதல்ல, VCR எங்களோடு ஆசையா ஆடிய டிஸ்கோ படம் போடுங்கடா!
    வந்துட்டாங்க ஆல் தீஸ் நமீதா & சக்காளத்திகள்!//

    அவ்வ்வ் அண்ணா பாவம்.அவரு எத்தனை பேரு கூடதான் ஆட்டம் போடுவாரு?

    ReplyDelete
  26. //
    கடைசி வீடியோல வற தம்பிய, சிங்கப்பூர் தொலைக்காட்சில பாத்த மாதிரி இருக்கே?//

    ஆமா அவரு பெயர் வடிவழகன் :D
    ரொம்ப நல்ல நகைச்சுவை நடிகர்

    ReplyDelete
  27. இதி ஏமிரா கொடவ?

    பாகுந்தி போ:-)))))

    ReplyDelete
  28. என்னாங்க அநியாயம் இது? அவரு எவ்ளோ நல்லவரு.. அவரைப்போய்.. ச்சே.. இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்.

    (சி.வி.ஆர்.. இது மட்டும் தானே சொல்ல சொன்னீங்க?) :)

    ReplyDelete
  29. இந்த நகைச்சுவை முன்னமே படித்திருகிறேன், என்றால்லும் நீங்கள் எழுதியவிதம் (பதிவர்களை சேர்த்து தமிழில்) அருமை

    ReplyDelete
  30. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    வேலியே பயிரை மேய்ந்தால்??
    அண்ணனே இமேஜை கொய்தால்??
    போலி அனானி அழகிகள் பின்னூட்டங்களில் மொய்ந்தால்???
    இதையெல்லாம் பார்த்து என் மண்டை காய்ந்தால்!!
    .....
    .......

    நெஞ்சு பொறுக்குதில்லையேஏஏஏஏஏ....

    //கோபிநாத் said...

    அவரு எல்லாம் முடிந்தவுடன் ஒன்னு சொல்லவாரு...நீங்க அதை மறந்துட்டிங்க போல


    எல்லாம் இறைவன் செயல் ;)
    //

    இப்பவும் அதத்தான் சொல்லுறேன்!!
    நடக்கட்டும் நடக்கட்டும்!!! :-D

    ReplyDelete
  31. ஹாய் KRS,


    சூப்பரா கலக்குறீங்க ( கலாய்க்கறீங்க).... கலக்குங்க.....

    ReplyDelete
  32. ROFL! sari comedy kalaketeenga ponga!

    ReplyDelete
  33. அடப்பாவி, இப்படி ஒரு பழைய ஜோக்கை எடுத்து அண்ணன் DVD அவர்களை (பின்ன இன்னும் எவ்வளவு நாளைக்கு VCR அப்படின்னே சொல்லறது?) ஓட்டியதற்கு எங்கள் கண்டனங்கள். :)

    ReplyDelete
  34. அய்யய்யோ!! VCR என் கிட்ட வேற என்னமோ சொல்லி ஏமாத்திட்டாரே!! இருந்தாலும் அவரோட அபாரமான துப்பறியும் திறமையால உண்மையை வெளில கொண்டாந்த நம்ம KRS அண்ணனுக்கு "சிஐடி சங்கர்" னு பேர் வைக்கிறேன்! ஒகேவா பாஸ்?

    ReplyDelete
  35. சி வி ஆர் அண்ணா உங்க இமேஜ் total டேமேஜ்

    ReplyDelete
  36. நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பு!

    இங்கே நான் குறிப்பிட்டது பதிவர் VCR!
    நன்கு கவனிக்கவும் - VCR
    CVR அல்ல!


    என அன்பு நெஞ்சம் CVRஐ டேமேஜ் செய்ய எனக்கே மனசு வருமா?
    இது VCR, VCR, VCRக்கே உரிய பதிவு -உண்மையை ஊருக்கே உரைக்க உரிய முறையில் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்! :-)

    ReplyDelete
  37. //இங்கே நான் குறிப்பிட்டது பதிவர் VCR!
    நன்கு கவனிக்கவும் - VCR
    CVR அல்ல!
    ///

    அண்ணாத்த!!!
    உங்க குறும்புக்கு ஒரு அளவே இல்லாம போயிடிச்சு!!
    பதிவு முழுக்க என் படங்கள் (மார்ஃப் செய்யப்பட்டவை) , அது தவிர பதிவுல என்னோட பதிவை வேற இணைச்சிட்டு VCR,VCP-னு கதை வேற விடறீங்க!!!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  38. //நண்பர்: ஐயோடா சாமீ...என் தங்கமணி பை தாங்க ஆபிசர்...//

    VCR-இன் தங்கமணி யாரு?
    யாரு அவங்க? யாரு அவங்க??


    இது எப்படி யாரு கண்ணுலயும் படாமப் போச்சுது?
    அன்புத் தங்கை துர்கா, நீங்க கூடவா இதப் பாக்கல?

    -ஆனந்தக் கண்ணீருடன்
    அன்பு அண்ணன் krs

    ReplyDelete
  39. //CVR said...
    //பதிவு முழுக்க என் படங்கள் (மார்ஃப் செய்யப்பட்டவை)//

    ஒருத்தரைப் போல உலகில் ஏழு பேர் இருப்பாங்களாமே? அவிங்கள ஃமார்ப் பண்ணாங்களோ என்னமோ?

    //அது தவிர பதிவுல என்னோட பதிவை வேற இணைச்சிட்டு//

    ஒருத்தரைப் போல உலகில் ஏழு பேர் பதிவு போடுவாங்களாமே? அதைத் தானே இணைச்சோம்!
    சரி தானே தங்கச்சி?

    ReplyDelete
  40. ஆகா! இவ்வளவு நடந்திருக்கா. இது தெரியாமப் போச்சே! வீசீயார்....இப்பிடி ஆப்பை வீசினார்னு ஒரு பதிவு வந்து சொன்னாத்தான் நமக்கு வெவரம் தெரியுது.

    ஆமா...இன்னோன்னு தெரியுமா ஒங்களுக்கு.......இந்தத் தகவல்களை நாந்தான் ஒங்கள்ளுக்குக் கொடுத்தேன்னு நெனச்சிக்கிட்டு நெதர்லாந்து பாவையர் கூட்டம் ஏன்னைய மெரட்டி விரட்டுறாங்க. கஷ்ட்டப்பட்டு தப்பிச்சி வீட்டுக்கு வந்துட்டேன். அண்ணன் வீசியார் எப்ப நெதர்லாந்துக்கு வந்தாருன்னுதான் எனக்குப் புரியலை!!!!!!!!!!!!

    ReplyDelete
  41. நீங்கள் டபுள் ஆக்ட் படம் எடுப்பது எப்படி என்று சொல்லும் போது காட்டிய படத்தில் போலிஸ்காரரை இணைத்த படமும் கதையும் அருமை.

    சகாதேவன்

    ReplyDelete
  42. வாவ் !!! கலக்கல் காமடி.

    ReplyDelete
  43. //கோபிநாத் said...
    அவரு எல்லாம் முடிந்தவுடன் ஒன்னு சொல்லவாரு...நீங்க அதை மறந்துட்டிங்க போல
    எல்லாம் இறைவன் செயல் ;)//

    கோபி, அதை நான் மறப்பேனா?
    துர்கா எல்லா தக்காளிகளையும் வீசி முடிச்ச பின்...
    கூடையில் வேற தக்காளி ஒன்னும் இல்லை என்பதைச் சரி பார்த்துட்டு, நானும் சொல்லலாம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு இருந்தேன்...
    எல்லாம் இறைவன் செயல் :-)

    ReplyDelete
  44. //வெட்டிப்பயல் said...
    நாட்ல நல்லவனுக்கே காலம் இல்லை... இதை தான் கலிகாலம்னு சொல்லுவாங்க...//

    // வெட்டிப்பயல் said...
    நான் நல்லவனு சொன்னது அந்த போலிஸ் கான்ஸ்டபிலை...//

    அதானே பார்த்தேன்!
    எங்க பாலாஜி வெட்டித் தங்கம்...ச்சே சொக்கத் தங்கம்!

    ReplyDelete
  45. //அரை பிளேடு said...
    நல்ல ஐடியாவா இருக்கே.
    வி.சீ.ஆரு. இம்புட்டு புத்திசாலியா :)//

    அட, என்னா இப்புடி கேட்டுப்புட்டீங்க? அவர் பிளேடை விட ஷார்ப்ப்பு! :-)

    ReplyDelete
  46. //ILA(a)இளா said...
    நல்ல காமெடிங்க RKS. Planet Galatta Super :)//

    ஆகா RKSஆ!
    என்ன கொடுமை இளா?

    ReplyDelete
  47. //கீதா சாம்பசிவம் said...
    Organic Milk vadiyuthu! :P//

    Organic Milk தான் விலை அதிகம் கீதாம்மா!

    ReplyDelete
  48. //குமரன் (Kumaran) said...
    ஆனா அந்த 'பிளானெட் கலாட்டா செம ரகளை' சில காட்சிகள் பார்த்தேன். உண்மையாலுமே செம ரகளை தான். :-)))))//

    குமரன்,
    அதுல வரவர் பேரு தான் VCR!
    அவரு செம ரகளை பார்ட்டி தான்! :-)

    ReplyDelete
  49. //கவிதா said...
    அடப்பாவி முந்தா நேத்து என்னை விரட்டிட்டு வந்த. நேத்து மஞ்சுவை விரட்டி இருக்க. மறுபடி இந்த பக்கம் வா பேசிக்கறேன்//

    பாவம் கவி நீங்க!


    //சிம்பு said...
    கவிதா, மஞ்சு...
    வாத்தியாரே நீ என்னையே தோக்கடிச்சுடுவே போலிருக்கே//

    டேய் சிம்பு
    நயன்தரா உன்னை விட்டுப் போனதுக்கு காரணமே VCR தாண்டா, வெண்ணை!

    ReplyDelete
  50. //தஞ்சாவூரான் said...
    ஏங்க அட்லாசு,
    100-க்கு மேலே போனா புடிச்சு உள்ளே போட்ருவாங்களே...108-ல் போயி காப்புக்கு ஆப்பு வேற வச்சுட்டு வந்த்டாரா? பெரிய ஆளுதான்..//

    108 தேங்கா ஓடச்சிடுவாராம் பரிகாரமா! அதான் ஆளு எஸ்கேப்பு.

    //கடைசி வீடியோல வற தம்பிய, சிங்கப்பூர் தொலைக்காட்சில பாத்த மாதிரி இருக்கே?//

    துர்கா சொல்லிட்டாங்களே!
    வடிவழகன்...செம ஜோக் பார்ட்டி! :-)

    ReplyDelete
  51. //துளசி கோபால் said...
    இதி ஏமிரா கொடவ?//

    என்ன டீச்சர் திட்டுறீங்க?

    //கப்பி பய said...
    :)))) //

    கப்பி ச்சிரிக்கறாரு
    டிச்சர் திட்டுறாங்க

    ReplyDelete
  52. //காயத்ரி said...
    என்னாங்க அநியாயம் இது? அவரு எவ்ளோ நல்லவரு.. அவரைப்போய்.. ச்சே.. இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்.
    (சி.வி.ஆர்.. இது மட்டும் தானே சொல்ல சொன்னீங்க?) :)//

    ஆகா
    VCR இப்படியும் செய்கிறாரா?
    காயத்ரி எவ்ளோ நல்லவங்க? அவிங்களையே இந்த VCR பொய் சொல்ல force பண்ணறாரே! :-(

    ReplyDelete
  53. //பத்மா அர்விந்த் said...
    இந்த நகைச்சுவை முன்னமே படித்திருகிறேன், என்றால்லும் நீங்கள் எழுதியவிதம் (பதிவர்களை சேர்த்து தமிழில்) அருமை//

    ஹிஹி...
    History repeats itself, Padma.
    அதான் எப்போ படிச்சத நம்ம VCRக்கு யூஸ் பண்ணிக்கிட்டேன்.

    ReplyDelete
  54. //Dreamzz said...
    ROFL! sari comedy kalaketeenga ponga!
    //

    //Dreamzz said...
    VCR yaaruppa?//

    அய்யா Dreamzzu
    படம் வரைஞ்சி பாகங்களை நீங்களே குறிச்சிட்டு,
    இப்ப பால் மணம் மாறாப் பாலகன் போல கேள்வி கேக்குறீங்களே!
    CVR மூஞ்சில வழியற Milk வாங்க்கிக் காய்ச்சிக் குடிச்சிட்டீங்களா என்ன?

    ReplyDelete
  55. //Sumathi. said...
    ஹாய் KRS,
    சூப்பரா கலக்குறீங்க ( கலாய்க்கறீங்க).... கலக்குங்க.....//

    அச்சோ, கலாய்த்தல் என்றால் என்ன சுமதி? கலாவின் தல = கலாய்த்தல? :-)

    ReplyDelete
  56. //இலவசக்கொத்தனார் said...
    (பின்ன இன்னும் எவ்வளவு நாளைக்கு VCR அப்படின்னே சொல்லறது?) ஓட்டியதற்கு எங்கள் கண்டனங்கள். :) //

    VCR அண்ணனுக்கு DVD promotion கொடுத்து பதவி இறக்கிய கொத்தனாருக்கு எங்க பலமான கண்டனங்கள்.

    எங்க VCR டேப்புய்யா டேப்பு!
    என்னமா ஓடியாடி சுத்தும் VCR டேப்பு?
    அதுக்கு முன்னாடி DVD எல்லாம் நிக்க முடியுமா? குண்டுச் சட்டிக்குள்ள ஒரே மாதிரி தான் சுத்தத் தெரியும் DVDக்கு!

    ReplyDelete
  57. //cdk said...
    அய்யய்யோ!! VCR என் கிட்ட வேற என்னமோ சொல்லி ஏமாத்திட்டாரே!! இருந்தாலும் அவரோட அபாரமான துப்பறியும் திறமையால உண்மையை வெளில கொண்டாந்த நம்ம KRS அண்ணனுக்கு "சிஐடி சங்கர்" னு பேர் வைக்கிறேன்! ஒகேவா பாஸ்?//

    cdk, dank u dank u.
    ஐ ஆம் தி சிஐடி சங்கர்.
    இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள ஒரு தொப்பியும் வாங்கிக்கரேன்! :-)

    //cdk said...
    சி வி ஆர் அண்ணா உங்க இமேஜ் total டேமேஜ்//

    image or dmage?? :-)))

    ReplyDelete
  58. //G.Ragavan said...
    ஆமா...இன்னோன்னு தெரியுமா ஒங்களுக்கு.......இந்தத் தகவல்களை நாந்தான் ஒங்கள்ளுக்குக் கொடுத்தேன்னு நெனச்சிக்கிட்டு நெதர்லாந்து பாவையர் கூட்டம் ஏன்னைய மெரட்டி விரட்டுறாங்க.//

    ஐயோ...பாத்து இருங்க ஜிரா.
    பாவையரா இல்ல பாவியரா?
    VCR பாவைகளை ஏவி விடறாரோ?
    ஏதுமறியாப் ப்ச்சிளம் பாவைகள் VCR மாயையில் சிக்கிச் சீரழிய விடலாமா?

    அவிங்க எல்லாரையும் நீங்க தான் ஜிரா அரவணைச்சு காப்பாத்தணும் :-)

    ReplyDelete
  59. //சகாதேவன் said...
    நீங்கள் டபுள் ஆக்ட் படம் எடுப்பது எப்படி என்று சொல்லும் போது காட்டிய படத்தில் போலிஸ்காரரை இணைத்த படமும் கதையும் அருமை//

    எல்லாம் தினேஷ் செயல்!
    ச்ச்சே
    எல்லாம் இறைவன் செயல்!!

    நன்றி சகாதேவன்

    ReplyDelete
  60. //கோவி.கண்ணன் said...
    வாவ் !!! கலக்கல் காமடி.//

    நன்றி நட்சத்திரமே!

    ReplyDelete
  61. ஐ ஆம் தி சிஐடி சங்கர்.
    இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள ஒரு தொப்பியும் வாங்கிக்கரேன்! :-)

    கூலிங்கிளாஸ் அ மறந்துடாதீங்க!!!

    ReplyDelete
  62. //ஒருத்தரைப் போல உலகில் ஏழு பேர் பதிவு போடுவாங்களாமே? அதைத் தானே இணைச்சோம்!
    சரி தானே தங்கச்சி?///

    aama aama,cvr ungaluku over ninaipu vendam :P
    beside that CVR rombaaaaaa nallavar.Avarai eppadi damage pannurathu romba thappu.Long live CVR anna :P

    ReplyDelete
  63. //Dreamzz said...
    VCR yaaruppa?//

    dreamzz oda acting over acting :D
    even VCR cannot act like u dude

    ReplyDelete
  64. இவ்வளோ வெவரமா இருக்காங்க. உட்காந்து யோசிப்பாங்களோ?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)