Sunday, July 15, 2007

சரோஜ்ஜாஆஆஆ சாமான் நிக்காலாவ்

'சார் உங்கள எம்.டி கூப்பிடறார்னு' பியூன் வந்து சொன்னா நீங்க என்ன நெனைப்பீங்க?
ஏதோ ஆபீஸ் மேட்டர்னுதானே.அதான் இல்லை.

அவருடைய தங்கமணிக்கு சினிமா பாட்டுலேயோ இல்லை டி.வி புரோகிராம்லேயோ ஏதோ டவுட்டுன்னு அர்த்தம்.

இன்னைக்கு நேத்து இல்லீங்க.இந்த கம்பெனியில வேலைக்கு சேர்ந்த நாள் முதலா இதுதான் கூத்து.

எங்க எம்.டி. மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்துடுச்சின்னா அதுக்கு பலி கெடா நான்தேன்.
இப்படித்தான் ஒரு நாள் எம்.டி என்னையக் கூப்பிட்டு ,'மிஸ்டர் சரவணன் என் வொய்ப்புக்கு ஒரு சந்தேகம் நீங்கதான் தீர்த்து வைக்கனும்'னார்.

இவரு ஏதோபாண்டிய மன்னன் மாதிரியும் இவரு பட்டத்து ராணிக்கு வந்த சந்தேகத்தை தீர்க்க நான் என்ன தருமியா?

'சொல்லுங்க சார்'

'டோலாக்கு டோல் டப்பிம்மா...ன்னா என்ன?'

தெரியாதுன்னு சொல்லியிருந்தா இன்னைக்கு என் மண்டையில நாலு முடியாவது மிஞ்சியிருக்கும்.

பெரிய டுபுக்கு மாதிரி ஆராய்ச்சி பண்ணி எம்.டி மனைவி ஏத்துக்கிற மாதிரி அர்த்தம் கண்டு புடிச்சிச் சொல்லப் போக,

லக லக லக ன்னா என்ன?

நேத்து வந்த சிவாஜியில வர்ர

பலேலக்கா பல்லேலக்கா ன்னா என்ன

என்பது வரை ஆராய வேண்டியதாப் போயி இந்த 30 வயசுல மண்டை ஃபுட்பால் கிரவுண்டு மாதிரி ஆயிடுச்சி.

[இன்னம் கல்யாணம் வேற ஆகலைங்கானும்]

இதுக்கு ஒன்னும் எம்.டி பிரமோஷன் லாம் குடுக்கலை.ஆனா அவர் வீட்டுக்குப் போனா ஒரு வாய் காப்பி நிச்சயம் உண்டு.

முந்தா நாள் தான் பல்லேலக்கா ஆராய்ச்சி.

பேப்பர்ல பல்+லேக்கா பல்+அல்லேக்கா பல்+அல்+லேகா ன்னுஎழுதி எழுதிப் பாத்து ஏதோ கிராஸ்வேர்டு பஜுல் மாதிரி ஆராய ,

படிக்கிற காலத்துல தமிழ் இலக்கணத்தக் கூட இந்தளவுக்கு பதம் பிரிச்சி படிச்சதில்லை]

'உனக்குத் தேவையா இது' பக்கத்து சீட்காரன் அற்பமாகப் பார்க்க
ஒரு வழியா அர்த்தம் கண்டு புடிச்சிட்டேன்.

'பல்லை அலேக்காப் பேத்துடுவேன்னு' சூப்பர் ஸ்டார் ஸ்டைலா சொல்றாருன்னு விளக்கியதும் எம்.டி.யோட தங்கமணி மொகத்துல அத்தனை சந்தோஷம்.

சரி அடுத்த புது படமோ,பாடலோ வரும்வரை மண்டை தப்பிச்சதுன்னு பார்த்தா எம்.டி. கூப்பிட்டு அனுப்பறார்.

'சரவணா இந்த விஜய் டி.வி.ல கலக்கப் போவுது யாரு பாக்கறீயா?'

'சார் அது ஆரம்பிச்சு வருஷக் கணக்காயி இப்ப 20ந்தேதி கலக்கல் மன்னன் ஃபைனல்ஸ் இருக்கு.ஜெயிக்கிறவங்களுக்கு 5,00,000 ரூபாய் பரிசு சார்.'

'அதேதான் அதுல அடிக்கடி சரோஜா சாமான் நிக்காலாவ் னு சொல்றாங்கில்ல அது என்னன்னு தெரியனும்'

'இப்ப என்னா சார் புரோகிராமே முடியப் போவுது'

'இல்லப்பா நேத்திக்குத்தான் என் வொய்ப்புக்கு அந்த வார்த்தைங்க தெளிவா கேட்டுச்சாம்.உடனே சரவணன் கிட்ட கேளுங்கன்னு சொல்றா'

'என்ன கொடுமையிது சரவணா?'ன்னு வெளியில சொல்லாம
மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டே
'ஓகே சார்' என்றேன்.

ஆனா மத்த மேட்டரப் போல இது அவ்ளோ ஈஸியா இல்லை.சரியா அர்த்தம் வரல.
உதவிக்கு என் நணபனிடம் போனேன்.

'இதப் பாரு சரவணா இப்படில்லாம் கேட்டு நம்மள பேஜார் பண்ணாதே டாக்டர் 'செந்தமிழரசு' ன்னு ஒரு பண்டித்ர் அட்ரஸ் தர்ரேன் .அவர்கிட்ட கேளு'

'யாரு நம்ம 'நன்னன்' அய்யா மாதிரி தமிழ் பாடம் சொல்லித் தருவாரா?'

'இல்லப்பா சினிமாக்காரங்க செந்தமிழ்ல எழுதறத மொழி பெயர்க்க ன்னே லண்டன் போயி படிச்சிட்டு வந்து ,'இங்கு சகலவிதமான தமிழ்க் கடிகளுக்கும்[விஷக்கடிகள் இல்ல]
அர்த்தம் பார்த்து ஆராயப் படும் னு போர்டு போட்டிருக்கார்'.

'இதுக்கெல்லாமா டாக்டர் படிப்பு'

'என்ன நீயி இவ்வளோ வெளக்கெண்ணையா இருக்க. லண்டன் ரிட்டர்ன், டாக்டர் பட்டம்லாம் அவரா போட்டுக்கிட்டது '

ஒரு வழியா 'செந்தமிழரசு' கண்டு புடிச்சிப் போனபோது வாசலில்
திரைப் பாடல் ஆசிரியர்கள் பா.விஜய்யும்,கபிலனும் அமர்ந்திருந்தனர்.

'இவங்கள்ளாம் ஏன் இங்கேன்னு'கேட்டதும் டாக்டரின் உதவியாளன் [15 வயசு பையன்],
'ஏ.ஆர். ரஹ்மான் மியூஸிக்கு ஏத்த மாதிரி பாட்டு எழுதிட்டாங்களாம்.

ஆனாலும் அவிங்களுக்கே அர்த்தம் புரியலையாம்.அதான் டாக்டராண்டை வந்திருக்காங்க' என்றான்.

எங்க டேர்ன் வந்து உள்ளே போனோம்.

டைரக்டர் கம் நடிகர் மனோபாலா ரேஞ்சில் இருந்தார் டாக்டர்.

மேட்டரச் சொன்னதும் பேப்பரில் எழுதிப் பார்த்து சரோஜா சரோஜா என மந்திரம் போல் சொல்லிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கியபடியே,

'இதுக்கு எப்படியும் 10,15 நாள் ஆகும்.நிறைய ஆராய்ச்சி பண்ணனும்.
அத்தோட ஃபீஸும் கொஞ்சம் அதிகமாகும்' என்றார்.

20 ந்தேதிக்குள் சொல்லனும்னு எம்.டி. சொன்னதால இது சரி வராதுன்னு வெளியே கிளம்ப உதவிப் பையன்,

'சார் நம்ம வட சென்னைப் பக்கம் இத்தாம் மாதிரி நெற்ரிய்ய சொல்லிக்குவாங்க.நான் எங்க காசி அண்ணாத்தயக் கூட்டியாரேன்.ஒரு 200 ரூபா செலவாகும் ஓகேயா'என்றான்.

மறு நாள் அவனோடு காசியப் பாக்கப் போனோம்.

200 ரூபாயை வாங்கிக் கொண்டு இன்னா சார் இதுமட்டும்தானா வேற ஒன்னும் இல்லியான்னு தலையை சொறிய
பக்கத்துல இருந்த டாஸ்மாக்கில் விஷயமும் வாங்கிக் கிட்டான்.

'அது வந்து சார் இங்க நெரிய பேருக்கு சரோஜான்னு பேரு.
அவன் அவன் வேலைக்குப் போச்சொல்ல அடி சரோசா சாமான எடுத்துக்கிட்டு பொறப்படும்பான்.

'நிகல் ஆவோ'ன்னு சௌகார் பேட்டை சேட்டு சொல்லி கேட்டதில்ல.அதான் சார் பொறப்பட்டு வாம்மே ன்னு பொஞ்சாதிய அன்பாக் கூப்பிடுவான்.

அதான் விசய் டிவிலயும்,
'சரோசா ஆ சாமான் நிக்கலாவ் 'ன்னு கூப்பிடறா மாதிரி வச்சிட்டாங்க'

ஒருவழியா எம்.டி.யோட தங்கமணிக்கு விளக்கம் சொல்லிடலாம்.

ஆனா அடுத்து ஏதாவது சினிமா பாட்டோ டி.வி .சீரியலோ இப்படி புரியாத அர்த்தத்தில வந்தா
தயவு செஞ்சு அதன் அர்த்தத்தையும் கூடவே போடனும்னு வேண்டிக் கேட்டுக்கிறேன்.

பணம் செலவாறது கவலையில்லைங்க.இப்படி மண்டயப் பிச்சிக்க வச்சா இருக்கிற நாலு முடியும் போச்சின்னா அப்புறம் யார் நம்மளக் கட்டுவா?

என்ன சிவாஜி வந்த பிறகு 'மொட்டை பாஸு' க்குத்தான் பொண்ணுங்க மத்தியில கிராக்கியா?

ஓகே டன்.

எம்.டி வீட்டுக்குத்தான் போறேன்.அடுத்த ஆராய்ச்சிக்கு மேட்டர் இருக்கான்னு கேக்கத்தான். வந்து அப்பால உங்களப் பாக்குறேன்.பை.

43 comments:

  1. எங்க காலத்து விஷயம் ஒண்ணு இருக்கே ..

    ஜிஞ்ஜின்னாக்டி ..ஜிஞ்ஜின்னாக்டி

    .........?

    ReplyDelete
  2. இதுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்க ஒரு இலாகா போடப்போறாங்களாம்.

    அவங்க பதிவுகளும் போட்டு சொல்லுவாங்க.அப்ப நம்ம இவைகளைப் புரிஞ்சுசுப்போம்.

    தருமி சார், டிங்கிரி டிங்காலே விட்டுட்டீங்களே.))))

    ReplyDelete
  3. பல்லேலக்கா விளக்கம் சூப்பர் :-)))).

    //சரோஜா சாமான் நிக்காலாவ் //

    அது சரி... ஹிந்தி வசனத்தை எடுத்திட்டு தமிழ் அறிஞர்(?!)ட்ட போய் விளக்கம் கேக்கறீங்களே...

    முதல்வன் படத்துல சௌகார்பேட் சேட் பேசற மாதிரி வர்ற ஹிந்தி வசனத்த சென்னை 600028 படத்துல பாட்டுல பிரேம்ஜி (கங்கை அமரனோட பையன்) பாடியிருப்பாரு. அதத்தான் விஜய் டிவில 'ஊஸ்' பண்ணியிருக்காங்க.

    உங்களுக்கு நாகையார்தான் சரி :-))

    ReplyDelete
  4. வாங்க தருமி சார்.
    ஜிஞ்ஜின்னாக்டி ன்னா இன்ஜின்+இன்ஜின்+ ஆடிப் பாடி =ஜிஞின்னாக்டி சரியா?ஏன்னா இது டிரெய்ன்ல பாடும் பாட்டு.

    ReplyDelete
  5. அய்யே ஸ்ரீதர் வெங்கெட் என்னம்மோ பெர்சா கண்டு புடிச்ச மாதிரி பேஸ்ர்ரீங்க. இது ஹிந்தின்றதாலதான் நம்ம செந்தமிழ் அய்யாவால கண்டு புடிக்க முடியல.
    அப்பால சென்னை 600028 மேட்டர்லாம் நம்மள்கி தெர்யாது நைனா.இது நம்மள்கி அறிந்ஞ்ச ஹிந்தி புலமை வச்சி சொல்றான்.
    ஹரே சைத்தான் கி பச்சா புலி வந்தா இன்னா நம்கு பய்மா?நை நை புலி நம்மள் பாத்து தௌட்தா ஹை

    ReplyDelete
  6. பல்லேலக்கா ங்கறது ரஷ்யன் இன்ஸ்ட்ரூமென்ட் வாத்தியமாம்.

    ReplyDelete
  7. //ஹரே சைத்தான் கி பச்சா புலி வந்தா இன்னா நம்கு பய்மா?//

    ச்சும்மா நம்ம டீச்சரக்கான்னு கலாய்ச்சா... இப்படி திட்டறீங்களே... அவ்வ்வ்வ்வ்வ் :-(

    //அப்பால சென்னை 600028 மேட்டர்லாம் நம்மள்கி தெர்யாது நைனா.//

    இப்ப தெரிஞ்சிருச்சில்ல... டீச்சருக்கே பாடம் சொல்லிக் குடுத்த டீனேஜர்னு அல்லாரும் சொல்றாங்கப்பா :-))

    ('டீ'க்கு 'டீ' போட்டேன். மத்தபடி வயசெல்லாம் கேக்கப்பிடாது)

    //நை நை புலி நம்மள் பாத்து தௌட்தா ஹை//

    'நை நை' புலி எல்லாம் ஓடத்தான் செய்யும். இவரு 'ஹை ஹை' புலி. மத்தவங்கள ஓட வைப்பார். வெயிட்டீஸ் :-)))

    ReplyDelete
  8. ட்ரிய்யோ ட்ரிய்யோ டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
    இதுக்கெல்லாம் உங்க பாஸ் மனைவி அர்த்தம் தெரிந்து வைத்திருப்பார்களோ!!!
    ஆனானப்பட்ட 'சோ'வே அட்டைப்படத்திலே அதோட அர்த்தம் போட முழிச்சாராமே!

    ReplyDelete
  9. நன்றி வல்லியம்மா.

    அப்புறம் முத்து லஷ்மி இப்படி ஆப்பு வச்சி பொழப்பக் கெடுக்காதீங்க.

    ReplyDelete
  10. அரே சுல்தான் ஸாப் ஆவோ ஆவோ
    அதென்ன ஆனானப் பட்ட 'சோ'அவரு என்ன மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட் டா?
    ட்ரியோ ட்ரியோ ன்னா மூனு மூனு பேரா லைன்ல போங்கன்னு மாடுங்ககிட்ட மாட்டுக்காரா வேலன் சொல்றாரு.

    ReplyDelete
  11. kanmani,

    kalakittenga ponga.. ROFL

    Nice way to start the week..
    :)

    ReplyDelete
  12. sari ok,

    'டோலாக்கு டோல் டப்பிம்மா...'
    idhukku enna arththam ?

    ReplyDelete
  13. அக்கா,

    என்ன ரொம்ப நாள் கழிச்சி கலக்கல் பதிவா?

    அசத்துங்க!!

    ReplyDelete
  14. \\"சரோஜ்ஜாஆஆஆ சாமான் நிக்காலாவ்"\\

    சூப்பர் பதிவுக்கா ;))))

    ReplyDelete
  15. கககாகிகிகுகூ கககேகுகுகெகே

    ReplyDelete
  16. \\குட்டிபிசாசு said...
    அக்கா,

    என்ன ரொம்ப நாள் கழிச்சி கலக்கல் பதிவா?

    அசத்துங்க!!\\

    குட்டி உனக்கு குசும்பு அதிகம் ;)))

    ReplyDelete
  17. \\'பல்லை அலேக்காப் பேத்துடுவேன்னு' சூப்பர் ஸ்டார் ஸ்டைலா சொல்றாருன்னு விளக்கியதும் எம்.டி.யோட தங்கமணி மொகத்துல அத்தனை சந்தோஷம்.\\

    நல்ல தகவல்கள்........பாராட்டு!

    ReplyDelete
  18. \\என்ன கொடுமையிது சரவணா?'\\

    அக்கா முதல்ல இதுக்கு விளக்கத்தை சொல்லுங்க பார்ப்போம் ;)))

    ReplyDelete
  19. \\தருமி said...
    எங்க காலத்து விஷயம் ஒண்ணு இருக்கே ..

    ஜிஞ்ஜின்னாக்டி ..ஜிஞ்ஜின்னாக்டி

    .........?\\

    ஜி..ன்னா...நம்ம கவிஞர் ஜியா?

    ReplyDelete
  20. @ நக்கீரன்
    நன்றி நக்கீரன்

    @ப்பேட்டையன் சீசசுசூசெசே...பெபேபொபோ போய்யா

    ReplyDelete
  21. குட்டிபிசாசு நீ எப்பவுமே அக்கா கட்சிதான் தேங்க்யூ ம்மா

    ReplyDelete
  22. கோபி இந்த அபிஅப்பா எங்கே வந்து வ.வா.ச வுல ஒரு அட்டெண்டென்ஸ் போடச் சொல்லு.

    என்ன கேட்டே?'என்ன கொடுமையிது சரவனா?

    இந்த அக்கா வவாசவுல பதிவு போட்றதும் அதை மக்கா படீக்கிறதும்தான்.

    ReplyDelete
  23. @அருன்
    'டோல்லாக்கு டோல் டப்பிமா

    டோ+லாக்கு டோ+டப்பி

    இரண்டு லாக் போட்ட இரண்டு டப்பி
    தட்ஸ் ஆல்

    ReplyDelete
  24. ஹி ஹி..கண்மணி கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  25. யாருல அது என் பொண்டாட்டியக் கூப்புடுது

    ReplyDelete
  26. kanmani!!
    first time commenting..
    super padivu..ippadi niraya comedy padivugal ethirparkiren

    ReplyDelete
  27. என்ன கொடுமையிது சரவணா?
    10 மாசமா தமிழ்மணத்துல குப்பைக் கொட்டுறேன்.இப்பத்தான் டுபுக்கு கண்ணுல பட்டுச்சாம்.அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. எல்லாத்துக்கும் பொருள் சும்மா பளிச்சுனு சொல்லுரிங்களே!! 'திராவிடம்' அப்படின்னா என்ன? சொல்லுங்க பார்ப்போம்.

    ReplyDelete
  29. எசகுபிசகா எதாவது சொன்னிங்கனா? சும்மா விடமாட்டேன்.

    ReplyDelete
  30. என்னோட அடுத்த போஸ்டு மேட்டருக்கு ஆகும்.

    ReplyDelete
  31. "அய்யகோ! கண்மணி அக்காவின் திராவிட எதிர்ப்பு"

    "கண்மணி டீச்சர் திராவிடத்துக்கு பொருள் கூறுவதா?"

    தலைப்பு எப்படி? எந்த தலைப்பு செலக்ட் பண்ணுங்க?

    ReplyDelete
  32. நீங்க மட்டறுப்பு போட்டு வச்சிட்டு, கும்மி அடிக்க சொன்னா எப்படி?

    ReplyDelete
  33. இந்த ஆட்டத்துக்கு நான் வரல சாமீ.

    ReplyDelete
  34. எச்சூச்மீ! மே ஐ கம் இன் சைடு த கும்மி?

    ReplyDelete
  35. நான் எப்படி விட்டேன் இந்த பதிவை? ஓ டீச்சர் இது வவாச பதிவா? அதான் விட்டு போச்சு! சரி படிச்சுட்டு வர்ரேன்!

    ReplyDelete
  36. இன்னும் ஆட்டமே தொடங்கல?

    ReplyDelete
  37. இப்பவே பயப்படுரீங்க?

    அச்சம் என்பது மடமையக்கா!!
    அஞ்சாமை திராவிட உடமையக்கா!!

    ReplyDelete
  38. அபி அப்பா பதிவு எப்படின்னு சொல்லாம கும்மியடிக்க வர்ரீங்க ஞாயமா

    ReplyDelete
  39. குட்டி பிசாசு அஞ்சுவது அஞ்சாமை பேதமை
    திரா [வகம்]+விடம்=திராவிடம்
    இது ரெண்டையும் எப்படி கேர் ஃபுல்லா கையாளனுமோ அப்படித்தான் திராவிடமும்.கொஞ்சம் ஏமாந்தா நம்மையே கவுத்துடும்.

    ReplyDelete
  40. //@ப்பேட்டையன் சீசசுசூசெசே...பெபேபொபோ போய்யா //

    அய்யோ.. என்னங்க இது போய்யான்னு திட்டிட்டீங்களே.... :((((((((

    "சிங்காரவேலன்" படத்து பாடலுக்கு அர்த்தம் கேட்டேங்க!!!

    கககாகிகிகுகூ கககேகுகுகெகே

    ReplyDelete
  41. பபேட்டையன் சாரி நீங்க திட்டைனீங்கன்னு நெனச்சேன்.
    கககிகிகுகுகூ கககிகககேகே ....தானே

    அட காக்காய்களே குயிலுகிட்ட கேட்டுப் பாரு நான் எப்படி பாடுறேன்னு ...கமல் சொல்றார்.

    ReplyDelete
  42. கககாகிகிகுகூ கககேகுகுகெகே

    //அட காக்காய்களே குயிலுகிட்ட கேட்டுப் பாரு நான் எப்படி பாடுறேன்னு ...கமல் சொல்றார். //

    சூப்பர்.. எதிர்பார்க்கவேயில்ல

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)