Tuesday, April 3, 2007

அடிச்சாங்கையா ஆப்பு!!!

வணக்கம்...வந்தனம்...சுஸ்வாங்கதம்....நமஸ்கார்....என்னயும் ஒரு மனுசனா மதிச்சு இங்க வந்து ஆப்பு வாங்க வெச்ச சங்கத்தின் சிங்கங்களோட பெருந்தன்மைய பத்தி நான் தனியா சொல்ல வேண்டியது இல்ல....நான் பாட்டுக்கு ஏதோ ஒரு ஓரத்துல ஒரு பிளாக் வெச்சிக்கிட்டு கொஞ்சமா ஆப்பு வாங்கிட்டு இருந்தேன்...இப்போ தோப்புல கொண்டு வந்து விட்டுட்டாங்க..

இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது...இந்த ஒரு வருசமா நம்மல எல்லாம் சிந்திக்கவே விடாம(உள்குத்து எல்லாம் இல்லீங்க) சிரிக்க வச்ச சிங்கங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!...உங்க சேவை பல பல வருடங்களுக்கு தொடர விருப்பத்துடன் வாழ்த்துக்கள்....

என்னடா இழுவ மேட்டருக்கு வாடானு சொல்றீங்களா...மேட்டர் இருந்து இருந்தா வந்துருக்கமாட்டேனா....

எனக்கு ஒரு சந்தேகம்....நமக்கு இந்த ஆணி புடுங்கற வேலை பாத்து ரொம்ப நொந்து போனா..விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க...ஆனா விவசாயம் பார்கறவங்க ரொம்ப நொந்து போனா கொஞ்ச நாளைக்கு இங்க வந்து ஆணி புடுங்க விடுவாங்களா....மாட்டாங்க ஏன் இந்த பாரபட்சம்...நாட்டின் முதுகுதண்டு விவசாயி(நம்ம விவ் மட்டும் இல்லங்க எல்லோரயும் தான் சொல்றேன்)...அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...என்னங்க சிரிக்கரீங்க...நல்லதா சொன்னா ஒருத்தருக்கும் புடிக்காதே....

இங்க ஒரு நாள் ஒரு லன்ச் பார்டிக்கு போனோம்...சாப்பிட்டு முடிச்ச உடனே எல்லோருக்கும் பீடா குடுத்தாங்க...அது வெத்தலை மத்த பீடா ஐய்டம் எல்லாம் போட்டு அரச்சு கல்கத்தா பான் னு pack பண்ணி இங்க விக்கறாங்க...அத பார்த்திட்டு வெள்ளைகாரர் ஒருவர் இது எப்படி பண்றாங்கனு கேட்டதுக்கு நம்ம ஆள் ஒருத்தர் சொன்னார்...கல்கத்தால இது குடிசை தொழில்...அங்க அங்க ஒரு 50 அல்லது 100 பேர வரிசையா உக்கார வெச்சு வெத்தலை,மத்த ஐட்டம் எல்லாம் குடுத்திட்டு போவாங்க...உக்காந்து இருக்கவங்க வாயில போட்டு மென்னு குடுக்கறத பின்னாடியே ஒரு ஆள் வந்து வாங்கி பேக் பண்ணுவாருனு...வெள்ளக்காரன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே....

நம்ம ஊர்ல ஹெல்மெட் போடனும்னு புது ரூல் போட்டு இருக்காங்க...அதுனால பல நன்மைகள் இருந்தாலும்...சில தீமைகளும் இருக்கதான் செய்யுது...நன்மைனா பாருங்க நான் சென்னைல இருந்த டைம்ல ரூல் இல்லனாலும் ஹெல்மெட் போட்டுதான் போவேன்...ஒரு நாள் பார்டிக்கு போய்டு லேட் நைட் திரும்பி வரும் போது போலீஸ் நிறுத்துனாங்க...நிறைய பேர நிறுத்தி வாய் ஊதிகாட்டுனு சொல்லிட்டு இருந்தாங்க...என்கிட்யும் கேள்வி கேட்டாங்க...உன் பேரு என்ன...லலாம்(சியாம்)...என்னாது....லலாம்(சியாம்)...யோவ் குடிச்சு இருக்கியா...கலாம் பேர வெச்சுட்டு இப்படி அவரு பேர கெடுக்கறயே...லங்க லென் வேலு லலாம் ல்ல லலாம் (இல்ல என் பேரு கலாம் இல்ல சியாம்)...என்ன சொல்றான் தெலுங்குல பேசரான் போல இருக்கு நமக்கு புரியல சரி போ...தீமைனு பாத்தா என்னதான் பைக்க எடுத்திட்டு படம் போட்டு காமிச்சாலும் அது நாம தான்னு பிகருங்களுக்கு தெரியாது...உங்களுக்கு தெரிஞ்ச நன்மை தீமை இருந்தாலும் சொல்லுங்க...

எப்படியோ ஒரு போஸ்ட் போட்டாச்சு...ஆராச்சி பண்ணாம அனுபவிங்க...சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...அதுவரை உங்கள் ஆப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் லலாம் ச்சே சியாம்...

183 comments:

  1. நாட்டாமை வந்துட்டோம் :-)

    ReplyDelete
  2. வ.வா.ச'வின் ஒரு வருஷ ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிச்சு வெச்சுருக்கும் நாட்டாமையின் தீர்ப்புக்கு ஒரு கோடி நன்றிகள்.

    ReplyDelete
  3. எனக்கு முன்னாடி யாருப்பா மொதல்ல வந்தது??? :( :)

    ReplyDelete
  4. //விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க//

    ஆனா நினைச்சுக்குவாங்க.. ஆணியே புடுங்க தெரியல..இவரெல்லாம்... he he he :))

    ReplyDelete
  5. G3 and viv க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...


    12B'கிட்டே மொதல்ல வந்து பாகர்டி பிரைஸ் வாங்கலாமின்னு வந்தா கெடுத்திட்டிங்களே??? :(

    ReplyDelete
  6. ஜி3, விவ், இராம், ஏஸ்,

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........!

    ReplyDelete
  7. வருக வருக என நாட்டாமையை வாழ்த்தி வரவேற்கிறோம்!

    ReplyDelete
  8. //J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ//

    இது தான் நாட்டாமை, உங்க திறமை.. ஓப்பனிங்கே தீர்ப்போட தான்யா ஆரம்பிக்குது..

    //நல்லதா சொன்னா ஒருத்தருக்கும் புடிக்காதே....//

    எங்கள் தானை தலைவன், நல்லதை சொல்லும் நாட்டாமை, பணம் கேட்டால், பிரியாணியே கொடுக்கும் வள்ளல், வாழ்க வளர்க வருக....

    ReplyDelete
  9. ஜி3, விவ், இராம், ஏஸ், சிபி

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........!

    ReplyDelete
  10. //உங்களுக்கு தெரிஞ்ச நன்மை தீமை இருந்தாலும் சொல்லுங்க...//

    அப்ப்டியே பிகருங்க முன்னாடி படம் போடும் போது, சில்லறை வாங்கினாலும், என் பேரு நாட்டாமைன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்.. :)) :))

    ReplyDelete
  11. naattaamai vaalga, valarga avarathu pugal..

    -- naattaamaiyin unmai visuvasi

    ReplyDelete
  12. நாட்டாமை.... தீர்ப்பை மாத்தி சொல்லு!!!!

    பைக்குல ஹெல்மெட் போட்டுட்டு படம் போட்டா புள்ளைங்களுக்கு தெரியாதா?! என்னா கதை இது? உம்ம மாதிரி படம் போடற ஆளுங்க எல்லாம் ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்கறப்பவே உம்ம ஆர்சி புக்கு மொதக்கொண்டு அலசி ஆராய்ஞ்சிருவாங்க! நீங்க என்னடான்னா இப்படி சொல்லறீங்க....

    அதுசரி! இந்த உண்மை தெரியாமலா நீங்க US ல போய் பைக்கு வாங்கி படம் போட்டுக்கிட்டு இருப்பீங்க?! :)

    ReplyDelete
  13. யப்பா ராசாக்களே.. மொத தடவ இந்த பக்கம் வந்தா எல்லாரும் இந்த மொற மொறைக்கறீங்க??

    நாட்டாமை குடுக்கற பகார்டிய வெச்சு நான் என்ன பண்ண போறேன்?? நீங்களே எடுத்துக்கோங்க.. நமக்கு புளியோதரை மட்டும் போதும் :-)

    ReplyDelete
  14. //J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ//

    Naatamai, neenga sonna correct'a than irukkum... yena unga peru than lalyam aaaache :D

    ReplyDelete
  15. //G3 and viv க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

    //ஜி3, விவ், இராம், ஏஸ்,
    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........! //

    நாட்டாமை, சங்கத்து சிங்கங்களின் கர்ஜனை ரொம்ப பலமா பயமா இருக்கு.. எல்லாருக்கும் பக்கார்டி கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க.. நமக்கும் சேத்து தான்.. டீல்ல விட்டுட போறீங்க..

    ReplyDelete
  16. //நாட்டாமை வந்துட்டோம்//

    G3...வாங்க வாங்க :-)

    ReplyDelete
  17. naattaamai patham patta.........

    ...............
    ennavagum enna vagum????????????????????????????????

    ReplyDelete
  18. //ஒரு பிளாக் வெச்சிக்கிட்டு கொஞ்சமா ஆப்பு வாங்கிட்டு இருந்தேன்//

    ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.. கொஞ்சமாவா வாங்கினீங்க??

    ReplyDelete
  19. //வ.வா.ச'வின் ஒரு வருஷ ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிச்சு வெச்சுருக்கும் நாட்டாமையின் தீர்ப்புக்கு ஒரு கோடி நன்றிகள்//

    விவ்..நன்றி நன்றி...

    ஆனா இந்த கோடிக்கு வரி எல்லாம் கட்ட வேண்டியது இல்லதான :-)

    ReplyDelete
  20. naattaamai enna ennoma solrenga enakku onnum puriyla..

    neenga vara vara naattu makala pathiye sinthika aarambichuteeeenga..


    ama ingayum podi ya pathi ezhuthuveengala???????????????????

    ReplyDelete
  21. //உங்க சேவை பல பல வருடங்களுக்கு தொடர விருப்பத்துடன் வாழ்த்துக்கள்....//

    நானும் கும்பல்ல கூடிக்கறேன் :-)

    ReplyDelete
  22. //ஆனா நினைச்சுக்குவாங்க.. ஆணியே புடுங்க தெரியல..இவரெல்லாம்... he he he//

    இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் :-)

    ReplyDelete
  23. //G3 and viv க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//

    //ஜி3, விவ், இராம், ஏஸ்,

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........! //

    ராயல் & தள...உங்க கிட்ட இருந்து இந்த சத்தம் எதுக்கு வருது...தூக்கமா...விவ் கிட்ட இருந்து வந்தாலும் டிராக்டர் கியர் போடும் போது வருதுன்னு சொல்லலாம் :-)

    ReplyDelete
  24. //12B'கிட்டே மொதல்ல வந்து பாகர்டி பிரைஸ் வாங்கலாமின்னு வந்தா கெடுத்திட்டிங்களே//

    ராயலு...அவங்ககிட்ட சொல்லாதீங்க...நம்ம தனியா போய் பக்கார்டி அடிச்சிட்டு வந்துடலாம் :-)

    ReplyDelete
  25. //வருக வருக என நாட்டாமையை வாழ்த்தி வரவேற்கிறோம்! //

    ரொம்ப நன்றி தள...வாழ்த்தோட விட்டீங்களே :-)

    ReplyDelete
  26. நாட்டாமை! ஹெல்மெட்டால என்ன நன்மையா??????????????

    என்ன கேள்வி கேட்டுபுட்டீக?

    பைக்லெ பிகர ஒட்டிகிட்டு போகும் போது அதோட மூஞ்ச எதால மறைப்பாக?

    அதோட அப்பா, அம்மா, ஒன்னு விட்ட மாமங்கரன், ஒல கட்டினவன், சேல வாங்கி குடுத்தவன் ஒருத்தனுக்கும் தெரியாம OMR ரோட்டுலெ எப்படி போவாக?

    நல்லா கேக்கராங்கையா கேள்வி........

    ReplyDelete
  27. //ஜி3, விவ், இராம், ஏஸ், சிபி

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........!//

    கொத்ஸ் யூ டூ :-)

    ReplyDelete
  28. //எங்கள் தானை தலைவன், நல்லதை சொல்லும் நாட்டாமை, பணம் கேட்டால், பிரியாணியே கொடுக்கும் வள்ளல், வாழ்க வளர்க வருக.... //

    அட்றா அட்றா அட்றா சக்கை...ஆப்ப லாரி நிறையா அள்ளி போட்டுட்டு வந்து இருப்பீங்க போல :-)

    ReplyDelete
  29. //அப்ப்டியே பிகருங்க முன்னாடி படம் போடும் போது, சில்லறை வாங்கினாலும், என் பேரு நாட்டாமைன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்//

    வி.வி.சி....அது :-)

    ReplyDelete
  30. //அதுவரை உங்கள் ஆப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் லலாம் ச்சே சியாம்...//

    உங்களுக்கு இல்லாத ஆப்பா?? :P

    ReplyDelete
  31. //naattaamai vaalga, valarga avarathu pugal..

    -- naattaamaiyin unmai visuvasi //

    அனானி அண்ணே உங்க பாசத்துக்கு நான் அடிமை :-)

    ReplyDelete
  32. //நாட்டாமை.... தீர்ப்பை மாத்தி சொல்லு//

    ஹி...ஹி...அது தெரியாம தான நானும் அலைஞ்சுட்டு இருக்கேன் :-)

    ReplyDelete
  33. //பைக்குல ஹெல்மெட் போட்டுட்டு படம் போட்டா புள்ளைங்களுக்கு தெரியாதா?! என்னா கதை இது? உம்ம மாதிரி படம் போடற ஆளுங்க எல்லாம் ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்கறப்பவே உம்ம ஆர்சி புக்கு மொதக்கொண்டு அலசி ஆராய்ஞ்சிருவாங்க! நீங்க என்னடான்னா இப்படி சொல்லறீங்க....//

    டெக்குனாலஜி இம்புரூவ்டு சோ மச்சு...என்ன இளவஞ்சி சொல்றீங்க...நம்ம காலேஜ்ல எப்படி படம் போட்டாலும் வேலைக்கு ஆகாது...என்ன நான் சொல்றது :-)

    ReplyDelete
  34. //அதுசரி! இந்த உண்மை தெரியாமலா நீங்க US ல போய் பைக்கு வாங்கி படம் போட்டுக்கிட்டு இருப்பீங்க//

    அப்படியும் நம்ம நெலம அதேமாதிரிதான இருக்கு...எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேனும் :-)

    ReplyDelete
  35. //யப்பா ராசாக்களே.. மொத தடவ இந்த பக்கம் வந்தா எல்லாரும் இந்த மொற மொறைக்கறீங்க//

    அது எல்லாம் சிங்கங்களோட அன்பான உறுமல்...:-)

    ReplyDelete
  36. //naattaamai patham patta.........

    ...............
    ennavagum enna vagum???????????????????????????????? //

    அனானி, தெரியலீங்களே ராசா :-)

    ReplyDelete
  37. //நாட்டாமை குடுக்கற பகார்டிய வெச்சு நான் என்ன பண்ண போறேன்?? நீங்களே எடுத்துக்கோங்க//

    இம்புட்டு நல்லவங்களா நீங்க...புளியோதரை என்ன பிரியானிக்கே ஏற்பாடு பண்ணிடுவோம் :-)

    ReplyDelete
  38. //யப்பா ராசாக்களே.. மொத தடவ இந்த பக்கம் வந்தா எல்லாரும் இந்த மொற மொறைக்கறீங்க?? //


    அடடா என்ன இப்பிடி Feeling போடுறீங்க.... சங்கத்துக்கு முதன்முறையாக வந்து நம்ம எல்லாரையும் பெருமைபடுத்தின ஊஞ்சல் அடிற அக்காவுக்கு "ஓ" :)

    ஒரு டவுட்:- இவ்வோளோ நேரம் ஆடுறீங்களே? கயிறு அந்து விழுந்துறாதா??

    ReplyDelete
  39. //ரொம்ப நன்றி தள...வாழ்த்தோட விட்டீங்களே //

    வாழ்த்து முன்னாடி வரும்!

    ஆப்பு அப்புறமா வரும்!

    ReplyDelete
  40. //yena unga peru than lalyam aaaache :D
    //

    KK,
    லலாம்னு பேரு வெச்சுகிட்டு இது கூட இல்லனா எப்படி :-)

    ReplyDelete
  41. அடடா என்ன இப்பிடி Feeling போடுறீங்க.... சங்கத்துக்கு முதன்முறையாக வந்து நம்ம எல்லாரையும் பெருமைபடுத்தின ஊஞ்சல் அடிற அக்காவுக்கு "ஓ" :)

    ReplyDelete
  42. //இம்புட்டு நல்லவங்களா நீங்க...புளியோதரை என்ன பிரியானிக்கே ஏற்பாடு பண்ணிடுவோம் //

    ஆமா! ஆளுக்கு அஞ்சு பொட்டலம் பிரியாணியும், குவார்ட்டர்

    பிளேட் கிரில் சிக்கனும்.

    அத்தனையும் நாட்டாமை செலவுல!

    வலையுலக மஹா ஜனங்களே! எல்லாரும் வாங்க! இங்க நாட்டாமை விருந்து கொடுக்குறார்!

    ReplyDelete
  43. //ஒரு டவுட்:- இவ்வோளோ நேரம் ஆடுறீங்களே? கயிறு அந்து விழுந்துறாதா?? //

    அந்த கயிறு நம்ம நாட்டாமை மாதிரி.. சுப்பர் ஸ்ட்ராங் :D

    ReplyDelete
  44. //ராயலு...அவங்ககிட்ட சொல்லாதீங்க...நம்ம தனியா போய் பக்கார்டி அடிச்சிட்டு வந்துடலாம் :-) //

    பகார்டியில் பங்கில்லையெனில்
    பின்னூட்டமிட்டு பயனென்ன??

    நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க..

    ReplyDelete
  45. //சங்கத்துக்கு முதன்முறையாக வந்து நம்ம எல்லாரையும் பெருமைபடுத்தின ஊஞ்சல் அடிற அக்காவுக்கு "ஓ" :) //

    ஆஹா.. நன்றிங்கோ :-)

    ReplyDelete
  46. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்......

    தேவ் : "ஹல்லோ"

    சிபி: "தேவ், நான் சிபி பேசுறேன்"

    தேவ் : "சொல்லுங்க தள? யாராச்சும் மாட்டி இருக்காங்களா?"

    சிபி : "ஆமா தேவ், நாட்டாமைன்னு ஒருத்தர் கிடைச்சிருக்கார்"

    தேவ் : "அப்படியா! உடனே அவரை ஒரு மீன் பாடி வண்டில போட்டு இந்தப் பக்கம் அனுப்புங்க, நாங்க கவனிக்குறோம்"

    சிபி : "ஸாரி தேவ், அது முடியாது"

    தேவ் : "தள! என்ன சொல்றீங்க! அட்லாஸ்னா ஆப்பு அடிக்கணும்தானே! அதுதான நம்ம ரூல்ஸு"

    சிபி : "தெரியும் தேவ். ரொம்ப நாள் கழிச்சி இந்தப் பக்கம் வந்திருக்கேன், இன்னிக்கு கொஞ்ச நேரம் நான் கவனிக்குறேன். அதுக்கப்புறம வண்டில போடு அனுப்புறேன். சரியா"

    தேவ் : "அப்படியா! தள! கலக்குங்க! வேணும்ங்குற நேரம் எடுத்துக்குங்க! அப்பப்போ மூஞ்சில சோடா தெளிச்சி, தெளிஞ்சிடுச்சான்னு பார்த்துட்டு கண்டினியூ பண்ணுங்க"

    ReplyDelete
  47. தேவ் : "சிபி, ரொம்ப நேரம் தாங்குப் பிடிப்பாரா இந்த புது அட்லாஸ்?"

    சிபி : "பார்க்க ரொம்ப நல்லவரா தெரியறாரு! தாக்குப் பிடிப்பாருன்னுதான் நினைக்கிறென்"

    ReplyDelete
  48. //நாட்டாமை, சங்கத்து சிங்கங்களின் கர்ஜனை ரொம்ப பலமா பயமா இருக்கு.. எல்லாருக்கும் பக்கார்டி கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க.. நமக்கும் சேத்து தான்.. டீல்ல விட்டுட போறீங்க.. //

    சங்கத்து சிங்கங்களோட கர்ஜணை என்னைக்கு கம்மியா இருந்து இருக்கு...பக்கத்து எலைக்கு பாயாசம் கேக்கரீங்க நீங்களும் ஆட்டத்துல உண்டு :-)

    ReplyDelete
  49. //வலையுலக மஹா ஜனங்களே! எல்லாரும் வாங்க! இங்க நாட்டாமை விருந்து கொடுக்குறார்! //

    விருந்து கொடுத்து, ஆப்பு வாங்குகிறார்.. ஆகையினால்

    பெருங்கடலென பொங்கி வாரீர் !!
    பிரியாணிக்காக பாய்ந்து வாரீர் !!
    பகார்டிக்கு பதுங்கி வாரீர் !!
    சிக்கனுக்கு சீக்கிரம் வாரீர் !!
    ஆப்படிக்க ஆனந்தமாய் வாரீர் !!

    ReplyDelete
  50. //ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.. கொஞ்சமாவா வாங்கினீங்க??//

    நம்ம பெருமைய நம்மலே சொல்லிகிட்டா நல்லாவா இருக்கும் :-)

    ReplyDelete
  51. //neenga vara vara naattu makala pathiye sinthika aarambichuteeeenga.//

    அப்படியா சொல்றீங்க....என்றா பசுபதி இவுங்க இப்புடி சொல்றாங்க பாத்துட்டு சும்மா நிக்கற...நாட்டு மக்களுக்கு ரெண்டு குண்டு போடு....:-)


    //ama ingayum podi ya pathi ezhuthuveengala???????????????????//

    நீங்க விருப்பப்பட்டா போட்டுட்டா போச்சு :-)

    ReplyDelete
  52. //நாட்டாமை! ஹெல்மெட்டால என்ன நன்மையா??????????????//

    சத்யா நான் என்ன நன்மைனு கேக்கவே இல்லயே....நீங்களாதான் மாட்டிக்கிட்டீங்களா :-)


    //பைக்லெ பிகர ஒட்டிகிட்டு போகும் போது அதோட மூஞ்ச எதால மறைப்பாக?

    அதோட அப்பா, அம்மா, ஒன்னு விட்ட மாமங்கரன், ஒல கட்டினவன், சேல வாங்கி குடுத்தவன் ஒருத்தனுக்கும் தெரியாம OMR ரோட்டுலெ எப்படி போவாக?
    //

    பாருங்க உங்கள மாதிரி ரெண்டு அனுபவஸ்தங்க சொல்றது கேட்டு மக்கள் ஒழுங்கா ஹெல்மெட் போடுவாங்க :-)

    ReplyDelete
  53. //வாழ்த்து முன்னாடி வரும்!

    ஆப்பு அப்புறமா வரும்! //

    அதான பார்த்தேன் :-)

    ReplyDelete
  54. //பக்கத்து எலைக்கு பாயாசம் //

    எத்தினி நாளுக்குத்தான்
    பக்கத்து எலைக்கு பாயாசம்,
    எதுத்த எலைக்கு எலந்தப் பழம்,
    மூணாவது எலைக்கு முந்திரிப் பருப்பு
    ன்னு பேசிகிட்டிருப்பீங்க?

    ReplyDelete
  55. //அத்தனையும் நாட்டாமை செலவுல//

    தள ஒரு சின்ன திருத்தம்...அத்தனையும் நாட்டாம அக்கவுண்ட்ல...அப்புறமா அந்த அக்கவுண்ட் நோட்ட தூக்கி கினத்துல போட்டுறலாம் :-)

    ReplyDelete
  56. எங்க அத்தான் காதை தேடிகிட்டு இந்தப் பக்கமா வந்தாரா?

    ReplyDelete
  57. // "அப்படியா! தள! கலக்குங்க! வேணும்ங்குற நேரம் எடுத்துக்குங்க! அப்பப்போ மூஞ்சில சோடா தெளிச்சி, தெளிஞ்சிடுச்சான்னு பார்த்துட்டு கண்டினியூ பண்ணுங்க"

    தேவ் : "சிபி, ரொம்ப நேரம் தாங்குப் பிடிப்பாரா இந்த புது அட்லாஸ்?"

    சிபி : "பார்க்க ரொம்ப நல்லவரா தெரியறாரு! தாக்குப் பிடிப்பாருன்னுதான் நினைக்கிறென்" //

    தங்கமனிகிட்ட தெனமும் வாங்கற அடியே தாக்கு புடிக்கறேன் இது எல்லாம் என்ன :-)

    ReplyDelete
  58. //பகார்டியில் பங்கில்லையெனில்
    பின்னூட்டமிட்டு பயனென்ன??

    நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.. //

    உங்களுக்கு பங்கு இல்லனு சொன்னது யாரு....கூட்டுங்க பஞ்சாயத்து ரோட்ட :-)

    ReplyDelete
  59. //நாட்டு மக்களுக்கு ரெண்டு குண்டு போடு//

    போட்டுடுவோம்! இன்னிக்கு காலைலதான் பருப்பு சாதம் சரி கட்டு கட்டினேன்!

    ReplyDelete
  60. //விஜய டி.ஆர் said...
    //பக்கத்து எலைக்கு பாயாசம் //

    எத்தினி நாளுக்குத்தான்
    பக்கத்து எலைக்கு பாயாசம்,
    எதுத்த எலைக்கு எலந்தப் பழம்,
    மூணாவது எலைக்கு முந்திரிப் பருப்பு
    ன்னு பேசிகிட்டிருப்பீங்க?
    //

    இதுக்குதான் உங்கள மாதிரி நாலு விசயம் தெரிஞ்சவங்க வேனும்னு சொல்றது...:-)

    ReplyDelete
  61. //பேச்சி said...
    எங்க அத்தான் காதை தேடிகிட்டு இந்தப் பக்கமா வந்தாரா?
    //

    அது என்னமோ எனக்கு தெரியலீங்க...எனக்கு காது செவிடு ஆகி ரெண்டு மணி நேரம் ஆச்சு :-)

    ReplyDelete
  62. //போட்டுடுவோம்! இன்னிக்கு காலைலதான் பருப்பு சாதம் சரி கட்டு கட்டினேன்! //

    ரெடியாதான் இருக்கீங்க போல இருக்கு :-)

    ReplyDelete
  63. எங்க மச்சான் இந்தப் பக்கம் வந்ததா கேள்விப்பட்டேன்!

    நாட்டாமை! நீங்களே பார்த்து ஒரு தீர்ப்பு சொல்லுங்க!

    காதுல போட்டுக்க கம்மல் கேட்டதுக்காக என் தங்கச்சி பேச்சியோட காதை வெட்டிப்புட்டாரு என் மச்சான் வெட்டிப்பயல்!

    ReplyDelete
  64. //காதுல போட்டுக்க கம்மல் கேட்டதுக்காக என் தங்கச்சி பேச்சியோட காதை வெட்டிப்புட்டாரு என் மச்சான் வெட்டிப்பயல்!
    //

    காதற்ற பேச்சியும் வாராது காண் கடை வழிக்கே!

    (கம்மல் விக்குற கடை அல்ல)

    ReplyDelete
  65. //முத்துக் கருப்பன் said...
    எங்க மச்சான் இந்தப் பக்கம் வந்ததா கேள்விப்பட்டேன்!

    நாட்டாமை! நீங்களே பார்த்து ஒரு தீர்ப்பு சொல்லுங்க!

    காதுல போட்டுக்க கம்மல் கேட்டதுக்காக என் தங்கச்சி பேச்சியோட காதை வெட்டிப்புட்டாரு என் மச்சான் வெட்டிப்பயல்!
    //

    ஏங்க கம்மல் காதுல போடுறதா சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவே இல்ல...

    புளியோதரைக்கு நாட்டமை ஆனவன் கிட்ட போயி தீர்ப்பு அது இதுனு சொல்லிட்டு இருக்கீங்களே :-)

    ReplyDelete
  66. //ஏங்க கம்மல் காதுல போடுறதா சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவே இல்ல...//

    பின்னே! கம்மல் என்ன கழுத்துலயா போடுவீங்க?

    ReplyDelete
  67. பகார்டி எல்லாம் வெளிநாட்டு சரக்கு!

    எனக்கு கள்ளுதான் வேணும்!

    ReplyDelete
  68. அடபாவிகளா.. First'தானே போச்சு, 50 போடலாமின்னு வந்த கொல்டி அடிச்சிட்டு போயிட்டானா?? :))

    ReplyDelete
  69. //பட்டிணத்தார் said...
    //காதுல போட்டுக்க கம்மல் கேட்டதுக்காக என் தங்கச்சி பேச்சியோட காதை வெட்டிப்புட்டாரு என் மச்சான் வெட்டிப்பயல்!
    //

    காதற்ற பேச்சியும் வாராது காண் கடை வழிக்கே!

    (கம்மல் விக்குற கடை அல்ல)
    //

    நமக்கு தெரிஞ்சது எல்லாம் டாஸ்மாக் கடைதானுங்கோ :-)

    ReplyDelete
  70. //கம்மல் யாவாரி said...
    //ஏங்க கம்மல் காதுல போடுறதா சொல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவே இல்ல...//

    பின்னே! கம்மல் என்ன கழுத்துலயா போடுவீங்க?
    //

    கலிகாலம் போட்டாலும் போடுவாய்ங்க :-)

    ReplyDelete
  71. //பகார்டி எல்லாம் வெளிநாட்டு சரக்கு!

    எனக்கு கள்ளுதான் வேணும்! //

    பனங்கள்ளா தென்னங்கள்ளானு கரெக்ட்டா சொல்லுங்க :-)

    ReplyDelete
  72. ஒரு குழந்தைகிட்டே 50 முட்டாய் வேணுமா? இல்லே 68 முட்டாய் வேணுமான்னு கேட்டா என்ன சொல்லும்!

    உங்ககிட்டே 50 ருபாய் வேணுமா? இல்லை 68 ரூபாய் வேணுமான்னு கேட்டா என்ன சொல்லுவீங்க?

    (50 ரூபாய்க்கு பீர்தான் கிடைக்கும். 68 ரூபாய்க்கு குவார்ட்டரே கிடைக்கும்)

    அப்ப 50 பெருசா, இல்லே 68 பெருசா?

    ReplyDelete
  73. //அடபாவிகளா.. First'தானே போச்சு, 50 போடலாமின்னு வந்த கொல்டி அடிச்சிட்டு போயிட்டானா?? :)) //

    வெட்டி நீங்க அம்மது அடிச்சதுக்கு உங்கள ராயலு ஸ்டேட்ட உட்டே தள்ளி வெச்சுட்டார் போல இருக்கு :-)

    ReplyDelete
  74. //அப்ப 50 பெருசா, இல்லே 68 பெருசா? //

    எது குடுத்தா கோட்டர் கிடைக்குமோ...சத்தியமா அதுதான் பெரிசு...:-)

    ReplyDelete
  75. padam soooooooper! :) ana sombu engappa? ;)

    figureku adaiyalam theriya avanga poto otti shirt potuka vendiyadhu thaan! idhukkaga ellam arasangam yosikka mudiyuma naats?? :)

    -porkodi

    ReplyDelete
  76. காலைல தான் வந்துட்டு போனேன் அதுக்குள்ள இத்தன கமெண்டா.. நாட்டாமை புகழ் அகில உலகமெல்லாம் எப்படி பரவுது பாருங்க

    ReplyDelete
  77. //எனக்கு முன்னாடி யாருப்பா மொதல்ல வந்தது??? :( :)//

    உங்களுக்கு முன் வந்த அனைவரும் முதலில் வந்தவர்கள் என்ற உண்மையை உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.

    ReplyDelete
  78. நாட்டாமை வாழ்த்துக்கள்.

    எக்ஸ்ட்ராவா நாலு பேண்ட் போட்டுக்கோங்கோ. :))

    ReplyDelete
  79. இந்த கும்மிக்கு யாருமே என்னை அழைக்கவில்லை என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  80. //...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ/

    சே.. நாட்டாமைக்கு தான் என்ன ஒரு கம்யுனிச சிந்தனைப்பா

    ReplyDelete
  81. /தீமைனு பாத்தா என்னதான் பைக்க எடுத்திட்டு படம் போட்டு காமிச்சாலும் அது நாம தான்னு பிகருங்களுக்கு தெரியாது...//

    யோவ்.. உனகெல்லாம் இந்த சூரியன் FM ல வர்ர சின்னதம்பி பெரியதம்பி மாதிரி பூரிகட்டைலயே அடி கொடுக்கணும்.. அடங்க மாட்டேங்குறப்பா

    ReplyDelete
  82. //padam soooooooper! :) ana sombu engappa? ;)//

    சொம்ப வெச்சு சந்தனம் வாங்கிட்டேன்....

    //figureku adaiyalam theriya avanga poto otti shirt potuka vendiyadhu thaan! idhukkaga ellam arasangam yosikka mudiyuma naats?? :)//

    மக்களுக்கு தான அரசாங்கம்...அதுனால இனிமே அரசாங்க செலவுல போட்டோ போட்ட சட்டை வழங்க சொல்லனும் :-)

    ReplyDelete
  83. //காலைல தான் வந்துட்டு போனேன் அதுக்குள்ள இத்தன கமெண்டா.. //

    தல குறுகிய நேரத்துல நிறைய ஆப்பு வாங்க அனுகவும்...வ.வா.சங்கம்...சங்கம்..சங்கம் :-)

    ReplyDelete
  84. //நாட்டாமை வாழ்த்துக்கள்//

    வணக்கம் தம்பி....வாழ்த்துக்கு ரொம்ப நன்றி...

    //எக்ஸ்ட்ராவா நாலு பேண்ட் போட்டுக்கோங்கோ//

    ஹி...ஹி...அது இல்லாமயா :-)

    ReplyDelete
  85. //இந்த கும்மிக்கு யாருமே என்னை அழைக்கவில்லை என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்//

    அப்படியா சொல்றீங்க...இருங்க பஞ்சாயத்த கூட்டிடுவோம்...துடைப்பம் எல்லாம் அவங்க அவங்க செலவுல கொண்டுவந்துடனும் :-)

    ReplyDelete
  86. //சே.. நாட்டாமைக்கு தான் என்ன ஒரு கம்யுனிச சிந்தனைப்பா //

    தல இது விவசாய சிந்தனைனு இல்ல நினைச்சேன் :-)

    ReplyDelete
  87. //உனகெல்லாம் இந்த சூரியன் FM ல வர்ர சின்னதம்பி பெரியதம்பி மாதிரி பூரிகட்டைலயே அடி கொடுக்கணும்.. அடங்க மாட்டேங்குறப்பா //

    பூடிக்கட்டையா...புல்டோசர் கொண்டுவந்து இடிச்சாலும் தாங்கற அளவுக்கு இருக்கோம்ல :-)

    ReplyDelete
  88. //விருந்து கொடுத்து, ஆப்பு வாங்குகிறார்.. ஆகையினால்

    பெருங்கடலென பொங்கி வாரீர் !!
    பிரியாணிக்காக பாய்ந்து வாரீர் !!
    பகார்டிக்கு பதுங்கி வாரீர் !!
    சிக்கனுக்கு சீக்கிரம் வாரீர் !!
    ஆப்படிக்க ஆனந்தமாய் வாரீர் !!//

    ace,

    அது எல்லாம் சரிதான் போகும்போது கிட்னி இருக்காது...பரவால்லனா வாங்க :-)

    ReplyDelete
  89. //புல்டோசர் கொண்டுவந்து இடிச்சாலும் தாங்கற அளவுக்கு இருக்கோம்ல :-) //

    தலை, அந்த எலும்பு மனிதன்.. ச்சே.. இரும்பு மனிதன் நீங்க தானோ???

    ReplyDelete
  90. நாட்டமை நானும் வந்துட்டேன்.உங்க பதிவில் கண்டிப்பாக எங்கள் கும்மி கழகம் கும்மி அடிக்க வருவோம் :))))

    ReplyDelete
  91. இது என்ன கிர்ர்ர்ர்ர்ன்னு சத்தம் வருது....ஓ சங்கத்து சிங்களின் கர்ஜனையா?

    ReplyDelete
  92. நாட்ஸ் வந்தாச்சு இங்கயும் :)

    அங்க கலக்கினீங்க... இங்கன
    அசத்த போவது நீங்களா இருக்கனும்னு வாழ்த்திக்குறேன் :P

    ReplyDelete
  93. hello Naataamai...
    congrats !!! Atlas vaalibar aagiteenga :)
    aama...eppo paathalum ungalukku vivasaayam melaye kanna irukku..enna vishayam ? Enga..paavam vivasaayinga..avangalukku edhukku aani pudungara velai..kaathala village pakkam pona..ellam oru maratha suthi okandhukittu..tea kudichikitu (Panam kallu kooda kudipaangannu kelvi),beedi suruttu etc pudichikittu oor kadhai pesikittu enna oru relaxedaa irupaanga theriyuma :)
    Epdee.. temptingaa irukka ;-)

    ReplyDelete
  94. //அது எல்லாம் சரிதான் போகும்போது கிட்னி இருக்காது...பரவால்லனா வாங்க :-)
    //

    ஐயையோ நாட்டாமை என்னாதிது... எதுக்கு இம்புட்டு கொல வெறி.. எதோ நாமக்கல் சிபி சொன்னரேன்னு வழி மொழிஞ்சா இம்புட்டு கோவபடுறீக.. வாய மூட்றான்னா மூடிட்டு போறேன்.. ஏற்கனவே ஒரு கிட்னில தான் லைப் ஓடிட்டு இருக்கப்பு.. (இன்னொன்ன வித்து என்னிக்கோ கோட்டர் அடிச்சாச்சு..).. நீங்க பாட்டு, இருக்கற ஒன்னயும் உருவிட்டா நான் எங்க போறது.. ஆள விடுங்கப்பா சாமி.. இங்க கோட்டர் கேட்டா கிட்னி கொடுக்கனுமாமில்ல.. நல்லா இருக்குயா உங்க நியாயம்...

    ReplyDelete
  95. எத்தனை கமென்ட் வந்துதுன்னு தெரியலை.. 95ன்னு மேலே இருக்கு.. சங்கத்து சிங்கம் எதாவது வர்ரதுகுள்ள ஒரு 100 போட முடியுதான்னு பாப்போம்.. எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையாத் தான் இருக்கனும்டா.. சிங்கத்துக்கு சாப்பாடெல்லாம், கிட்னி பிரியாணி தான் போல... பொறி வச்சு நலலாத்தான்யா புடிக்கறாய்ங்க..

    ReplyDelete
  96. ஸ்ப்பபா..ல்ல்லாலாம் ஸ்யாம்.. ஐ யாம் தேவ்... நைஸ் மீட்டீங் யூ...

    தள... பய ஆலமரத்தடியில்ல கொஞ்சம் பவர் புல்லாத் தாங்குறான் அம்புட்டு ஆப்பையும்.. வேப்ப மரம் பக்கம் நம்ம ஆளுங்க ஜொள்ளு விட்டுகிட்டு நிக்காயங்க.. அங்கிட்டு பார்சல் பண்ணி அனுப்புங்க... அங்கேயும் தாங்குறானாப் பாப்போம்...

    இது வெறும் ஆரம்பம் திரும்ப வருவோம்....

    100ங்கோ

    ReplyDelete
  97. இதோ, மொய் வெச்சுட்டேன்
    101

    ReplyDelete
  98. நாட்டாமை! வணக்கமுங்கோ :)

    ReplyDelete
  99. //டெக்குனாலஜி இம்புரூவ்டு சோ மச்சு...என்ன இளவஞ்சி சொல்றீங்க...நம்ம காலேஜ்ல எப்படி படம் போட்டாலும் வேலைக்கு ஆகாது...என்ன நான் சொல்றது :-) //

    தப்பு... அது உம்ம காலேஜ்ல, பைக் ஒட்ட தெரியாம உங்க போடி பிரண்டு மாதிரி முதல் கியரல வச்சே 8 போட்டு கரெக்ட் பண்ணுறவன் பல பேர்....

    ReplyDelete
  100. //டெக்குனாலஜி இம்புரூவ்டு சோ மச்சு...என்ன இளவஞ்சி சொல்றீங்க...நம்ம காலேஜ்ல எப்படி படம் போட்டாலும் வேலைக்கு ஆகாது...என்ன நான் சொல்றது :-)
    //

    கவலைப்படாதே பங்கு, காலம் மாறும் உன் கோலமும் மாறும்... ஆனா முயற்சிய மட்டும் கைவிட்டு எங்க பெயர கெடுத்து விடாத....

    ReplyDelete
  101. //வாழ்த்து முன்னாடி வரும்!

    ஆப்பு அப்புறமா வரும்! //

    இது வீரனுக்கு அழகு.... :-)

    ReplyDelete
  102. //பார்க்க ரொம்ப நல்லவரா தெரியறாரு! தாக்குப் பிடிப்பாருன்னுதான் நினைக்கிறென்" //

    ஆமாம் தள இவரு ரொம்ப நல்லவர், எவ்வளவு வேண்டுமானும்லும் தாக்கு பிடிப்பார்.

    ReplyDelete
  103. //நாட்டாமை! வணக்கமுங்கோ :) //

    நாட்டாமை பாக்க எங்க தலயே நேரா வந்து விட்டார்..... ஆஹா.....

    ReplyDelete
  104. adra sakka...

    brother attendance...


    inga eppadi post poduradhu? sollikodunga brother...

    btw, inga post ellam poda mudiumaa?

    (orkut'a pathi onnumey theriaama'la inga vandhu serndhu iruken :)) )

    brother, fulla padichitu varen..

    ReplyDelete
  105. //அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ//...namakellam velai illama poidum annathe...nammala vida nalla pudungavaanga avanga :)

    ReplyDelete
  106. //என்னதான் பைக்க எடுத்திட்டு படம் போட்டு காமிச்சாலும் அது நாம தான்னு பிகருங்களுக்கு தெரியாது//.....bykenu onnum kandu pudichathe figures madakathaana...idhula helmet...total damage :(

    ReplyDelete
  107. paarthu romba steadya irukeenga...oru bacardi anupi vaikaren...theliva adutha post podunga :)

    ReplyDelete
  108. //அந்த எலும்பு மனிதன்.. ச்சே.. இரும்பு மனிதன் நீங்க தானோ//

    இரும்பு மனிதன் இல்ல...அடி வாங்கி வாங்கி இரும்பு ஆன மனிதன் :-)

    ReplyDelete
  109. //நாட்டமை நானும் வந்துட்டேன்.உங்க பதிவில் கண்டிப்பாக எங்கள் கும்மி கழகம் கும்மி அடிக்க வருவோம் //

    துர்கா, வாங்க வாங்க அதுக்குதான வெய்டிங் :-)

    ReplyDelete
  110. //இது என்ன கிர்ர்ர்ர்ர்ன்னு சத்தம் வருது....ஓ சங்கத்து சிங்களின் கர்ஜனையா//

    சிங்கங்க இருக்கற எடத்துல இது எல்லாம் சகஜம் :-)

    ReplyDelete
  111. //நாட்ஸ் வந்தாச்சு இங்கயும் :)

    அங்க கலக்கினீங்க... இங்கன
    அசத்த போவது நீங்களா இருக்கனும்னு வாழ்த்திக்குறேன் //

    அருண்,

    அதிகமா ஆன்லைன்ல டிவி பார்க்கறீங்க போல இருக்கு..:-)

    ReplyDelete
  112. //hello Naataamai...
    congrats !!! Atlas vaalibar aagiteenga :)
    aama...eppo paathalum ungalukku vivasaayam melaye kanna irukku..enna vishayam ? Enga..paavam vivasaayinga..avangalukku edhukku aani pudungara velai..kaathala village pakkam pona..ellam oru maratha suthi okandhukittu..tea kudichikitu (Panam kallu kooda kudipaangannu kelvi),beedi suruttu etc pudichikittu oor kadhai pesikittu enna oru relaxedaa irupaanga theriyuma :)
    Epdee.. temptingaa irukka ;-) //

    sree,

    வாங்க வாங்க....வாழ்த்துக்கு நன்றி....பாருங்க வியசாயம் பார்க்கரவங்க இவ்வளோ ஜாலியா இருந்தா யாருக்குதான் டெம்டிங் ஆகாது....:-)

    ReplyDelete
  113. //ஏற்கனவே ஒரு கிட்னில தான் லைப் ஓடிட்டு இருக்கப்பு.. (இன்னொன்ன வித்து என்னிக்கோ கோட்டர் அடிச்சாச்சு..)..//

    ace,
    ஓரு கிட்னி இன்னும் இருக்கா உங்ககிட்ட...அப்போ நீங்க விருந்துக்கு எலிஜிபில் தான் :-)

    ReplyDelete
  114. //நீங்க பாட்டு, இருக்கற ஒன்னயும் உருவிட்டா நான் எங்க போறது.. ஆள விடுங்கப்பா சாமி.. இங்க கோட்டர் கேட்டா கிட்னி கொடுக்கனுமாமில்ல.. நல்லா இருக்குயா உங்க நியாயம்//

    நாங்க எல்லாம் ரெண்டு கிட்னியும் இல்லாம எவ்வளவு நாளா இருக்கோம்...உங்களுக்கும் பழகிடும் :-)

    ReplyDelete
  115. //எத்தனை கமென்ட் வந்துதுன்னு தெரியலை.. 95ன்னு மேலே இருக்கு.. சங்கத்து சிங்கம் எதாவது வர்ரதுகுள்ள ஒரு 100 போட முடியுதான்னு பாப்போம்//

    பாதில விட்டுட்டீங்க....நம்ம சிங்கம் தேவு அடிச்சிட்டாரு....:-)

    ReplyDelete
  116. //சிங்கத்துக்கு சாப்பாடெல்லாம், கிட்னி பிரியாணி தான் போல... பொறி வச்சு நலலாத்தான்யா புடிக்கறாய்ங்க.. //

    எவ்வளவு நல்லவங்க பாருங்க...விருந்து குடுத்து அப்புறம் விருந்து ஆக்கறாங்க :-)

    ReplyDelete
  117. //வேப்ப மரம் பக்கம் நம்ம ஆளுங்க ஜொள்ளு விட்டுகிட்டு நிக்காயங்க.. அங்கிட்டு பார்சல் பண்ணி அனுப்புங்க... அங்கேயும் தாங்குறானாப் பாப்போம்...//

    தான்குறமோ இல்லயோ...தல ட்ரெயினிங்ல தாங்கறமாதிரியே நடிப்போம்ல....:-)

    //100ங்கோ //

    தெவு கபில்தேவு மாதிரி 100 அடிச்சுட்டீங்க....:-)

    ReplyDelete
  118. //இதோ, மொய் வெச்சுட்டேன்
    101 //

    ஆப்பு வெக்காம மொய் வெச்சதுக்கு நன்றிங்கோ :-)

    ReplyDelete
  119. //நாட்டாமை! வணக்கமுங்கோ :) //

    தல கும்புட்டுக்கறேனுங்கோ :-)

    ReplyDelete
  120. //உங்க போடி பிரண்டு மாதிரி முதல் கியரல வச்சே 8 போட்டு கரெக்ட் பண்ணுறவன் பல பேர்.... //

    பங்கு கரெக்ட் பண்றதுக்கு பல பேர் இருந்தாலும்...கரெக்ட் ஆகறதுக்கு பிகரு வேனுமே...நாங்க படிக்கும்போது அது தண்ணி இல்லா ச்சே பிகரு இல்லா காடு :-)

    ReplyDelete
  121. //கவலைப்படாதே பங்கு, காலம் மாறும் உன் கோலமும் மாறும்... ஆனா முயற்சிய மட்டும் கைவிட்டு எங்க பெயர கெடுத்து விடாத.... //

    இப்புடியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு என்ன உண்டு இல்லனு பாக்காம விட மாட்டீங்க போல இருக்கு :-)

    ReplyDelete
  122. //brother, fulla padichitu varen.. //

    gops,

    புல்லா படிச்சிட்டு வரேன்னு போனீங்க காணோம்...புல்லா அடிச்சிட்டு தூங்கிட்டீங்களா :-)

    ReplyDelete
  123. //என்னது கொஞ்சமாவா? ஒவ்வொரு பதிவுக்கும் டபுள் செஞ்சரி வாங்கிட்டு இங்கன வந்து இம்புட்டு பெருந்தன்மையா சொல்றீங்கண்ணே//

    சகோதரி,
    ஹி....ஹி....நம்ம வாங்குன ஆப்ப பத்தி நம்மலே பெருமை அடிச்சுக்க முடியுமா...:-)

    ReplyDelete
  124. //சரி விடுங்க நாட்டாமை நாம் சொல்லி இவனுங்க கேட்டுட்டா அப்புறம் பெரியாளாயிடுவோமில்ல அதான் பொறாமை//

    இருந்தாலும் இருக்கும் :-)

    ReplyDelete
  125. //நான் இந்த ரோசனையை அரசாங்கத்துல சொல்லி ஆராய சொல்றேன் நாட்டாமை//

    அத மொதல்ல பண்ணுங்க...நாலு பசங்களுக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பு இல்ல :-)

    ReplyDelete
  126. நாட்டாமை முதல் போஸ்ட்டே கல்க்கிட்டிங்க.

    உங்கள இந்த மாதிரி வேலை செய்ய வைக்கணும்னே அட்லாஸ் வாலிபராக்கியிருக்காங்க போல.. இந்த மாசம் முழுக்க ஒழுங்க ஹோம் ஒர்க் பண்ணுங்க :)

    ReplyDelete
  127. //விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க...//
    அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. பண்ணி பாத்தால்ல தெரியும்...

    //அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...//
    அதானே.. புடுங்கட்டுமே யார் வேண்டாம்னது..
    நாட்டாமை, இப்ப இருக்கற நிலமைய பாத்தா TCS ல try பண்ணினா, அவங்களும் உள்ள வரலாம்.

    ReplyDelete
  128. //லங்க லென் வேலு லலாம் ல்ல லலாம் //

    ROFTL...

    பின்னாடி தங்கமணிய உக்கார வச்சிட்டு போகும் போது இன்னொரு நன்மை இருக்கு. சொல்ல மறந்திட்டிங்களே?? அவங்க என்ன திட்டு திட்டினாலும் காதுல விழாது. ஜாலியா சைட் அடிச்சிட்டு போலாம்.

    ReplyDelete
  129. வாழ்த்துக்கள்..... :P

    men melum aani vanga.....

    ReplyDelete
  130. vaazththukkal naattaamai...

    summa aditchi aadunga... naan adutha vaarathula irunthu correctaa gummila kalanthukiren...
    ;))))

    ReplyDelete
  131. நான் அனானியா அப்பவே வந்துட்டேன். இருந்தாலும் இப்ப வந்து என் பேர சொல்லிட்டு போறேன்..

    ReplyDelete
  132. //first congrats annathe //

    ரொம்ப டாங்கீஸ் பரணி....:-)

    //namakellam velai illama poidum annathe...nammala vida nalla pudungavaanga avanga :) //

    அதுவும் சரிதான் :-)

    ReplyDelete
  133. //bykenu onnum kandu pudichathe figures madakathaana...idhula helmet...total damage :(
    //

    அதுபாருங்க நமக்கு தெரியரது அரசாங்கத்துக்கு தெரிய மாட்டேங்குது
    :-)

    ReplyDelete
  134. //paarthu romba steadya irukeenga...oru bacardi anupi vaikaren...theliva adutha post podunga//

    உங்க பாசமே பாசம்...இதுதான் ஊத்திவிட்டு ஊத்திவிட்டு அடிக்கறதா...
    :-)

    ReplyDelete
  135. //நாட்டாமை முதல் போஸ்ட்டே கல்க்கிட்டிங்க. //

    நன்றிங்க பிரியா...

    //உங்கள இந்த மாதிரி வேலை செய்ய வைக்கணும்னே அட்லாஸ் வாலிபராக்கியிருக்காங்க போல.. இந்த மாசம் முழுக்க ஒழுங்க ஹோம் ஒர்க் பண்ணுங்க//

    வேலை வைக்கனும்னு இல்லங்க...ஆப்பு வைக்கனும்னு :-)

    ReplyDelete
  136. //அதானே.. புடுங்கட்டுமே யார் வேண்டாம்னது..
    நாட்டாமை, இப்ப இருக்கற நிலமைய பாத்தா TCS ல try பண்ணினா, அவங்களும் உள்ள வரலாம்//

    அப்படியா சொல்றீங்க...நமக்கு தெரியாம போச்சே :-)

    ReplyDelete
  137. //பின்னாடி தங்கமணிய உக்கார வச்சிட்டு போகும் போது இன்னொரு நன்மை இருக்கு. சொல்ல மறந்திட்டிங்களே?? அவங்க என்ன திட்டு திட்டினாலும் காதுல விழாது. ஜாலியா சைட் அடிச்சிட்டு போலாம்//

    ஆகா ஆகா...இதுவும் சூப்பர் ஐடியா போங்க...:-)

    ReplyDelete
  138. //வாழ்த்துக்கள்..... :P

    men melum aani vanga..... //

    TP...நன்றி...நன்றி...:-)

    ReplyDelete
  139. //vaazththukkal naattaamai...

    summa aditchi aadunga... naan adutha vaarathula irunthu correctaa gummila kalanthukiren...///

    ஜி, இப்பத்தான் போய் இறங்கி இருக்கீங்க...நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க...:-)

    ReplyDelete
  140. //நான் அனானியா அப்பவே வந்துட்டேன். இருந்தாலும் இப்ப வந்து என் பேர சொல்லிட்டு போறேன்..//

    மணி, உடம்பு எப்படி இருக்கு....(நீங்க தான் உடம்பு சரி இல்லனு லீவ் போட்டு இருக்கீங்க அதுனால தான் கேட்டேன்...உள் குத்து எல்லாம் இல்ல) :-)

    ReplyDelete
  141. 150- ஆவது கமெண்ட்டு என்னோடதா???

    ReplyDelete
  142. Sangam na udanae,Meeting ,conference ellam irukkum nu ninaichaen naatamai..

    vavasangam aniversary kondattam nallavae poagudhu pola..
    Vazhththukal..

    Apuram post pathi onnumae sollalayenureengala.
    Vazhkkam pola unga styleaa irukku..

    ReplyDelete
  143. ஹாய் நாட்டாம,

    //ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ..//

    ஆமா..இதையே தான் நானும் கேக்கறேன்..எனக்கு கூட நொந்து போச்சு.ஜாலியா இருக்கனும்னு ஆசை...

    ReplyDelete
  144. ஹாய் நாட்டாம,

    //இங்க ஒரு நாள் ஒரு லன்ச் பார்டிக்கு போனோம்...//தப்பா எழுதிட்டீங்களோ? அதாவது பகார்டி பார்டினு இல்ல வரனும்?

    ReplyDelete
  145. ஹாய் நாட்டாம,

    //பூடிக்கட்டையா...புல்டோசர் கொண்டுவந்து இடிச்சாலும் தாங்கற அளவுக்கு இருக்கோம்ல :-)//

    நாட்டாம, புல்டோசர் தாங்கும் போது பூரிக்கட்ட எதுக்கு? ஸ்டையில மாத்துங்க...

    ReplyDelete
  146. //வணக்கம்...வந்தனம்...//

    unga nethila alli pooositeeenga sandhanam...

    //இப்போ தோப்புல கொண்டு வந்து விட்டுட்டாங்க..
    //

    neeenga thaaney vivasiaym, adhu idhu nu bacardi'a ulla uttu'kittu peela vuteeenga... :))

    ReplyDelete
  147. //இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது.//

    vaazhga sangam, valarga sangam...
    engalukku maasam oru pown la kodunga thangam...

    //இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது.//
    ingaium adhey, therichikiren..

    ReplyDelete
  148. //மாட்டாங்க ஏன் இந்த பாரபட்சம்...//

    பாரபட்சம் ellam onnum illai,

    kaanchi pona vaaika varupu ellam nadhi'a (nadhia'nu padicha naan phone potuven) paarthu aarudhal adaialam....

    aana nadhi'ey vathipochinaa ????

    ReplyDelete
  149. //இங்க ஒரு நாள் ஒரு லன்ச் பார்டிக்கு போனோம்..//

    brother enna koopdala paartheengala...


    //வெள்ளக்காரன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே....//
    naamma oooru masal vadai'a pathi neenga edhum soneeengala illai a?

    ReplyDelete
  150. //நம்ம ஊர்ல ஹெல்மெட் போடனும்னு புது ரூல் போட்டு இருக்காங்க//

    yerkanavey figures ellam thupatta pottuginu, thuppiginu poguraanga..

    ippppa idhu verai'a.... ok ok ok

    enna onnu, helmet color'a vachi, ai idhu namma aal'nu kandu pudichikalam...

    ReplyDelete
  151. //யோவ் குடிச்சு இருக்கியா//
    neeenga kudipeeengala.... cha ketta naatamai :P..
    (porupaaana post la irrundha ippadi thaan bublic pub'a pathi facewash sorry pesa mudiaadhu..

    //கலாம் பேர வெச்சுட்டு இப்படி அவரு பேர கெடுக்கறயே//

    lol......

    ReplyDelete
  152. nanmai :-

    uruttu kattai'oda namma'la theduravangalukku, dimiki kodukalam

    theemai :-

    oruthan figure'u innorathan pick up pannitu pogumbodhu..appuram ungalukkey therium....

    ReplyDelete
  153. //முதுகுதண்டு விவசாயி(நம்ம விவ் மட்டும் இல்லங்க எல்லோரயும் தான் சொல்றேன்)...அவனுக்கு போர் அடிக்கும் போது ஒரு சேஞ்ச்சுக்கு...J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...//

    en client locationla oruthan unmaiye pathhu varusham vivasayam pannitu appuram aani pudunga vanthutaan..

    Namma oorula thaan innum ithellam accept pannika maatengaaraanga.

    ReplyDelete
  154. Naataamai ... oru pakkam ambi ungalukku aapu vachitu irukkaru. innoru pakkam sangathula vera vanthu maatikiteenga..

    evalavu aapu vachalum thaangikkereengale... neenga romba nallavaru... avvvvv..

    ReplyDelete
  155. atlas youth nottaamai.....vaazhga... :)

    enakku munnadi commentinavangalukku...."grrrrr" :))

    //கலாம் பேர வெச்சுட்டு இப்படி அவரு பேர கெடுக்கறயே//
    LOL...yaaruppa adhu kalaam....adhum namma lalaam'kku munaadi...???

    ReplyDelete
  156. and okkati varusam aana vavaa sangathukku vaazhthukkal... :)

    ReplyDelete
  157. ஏங்க நாட்ஸ், உடம்பு எப்படி கீது? ஒரே ரணகளம்னு கேள்விப்பட்டேனே? :)

    -கொடி.

    ReplyDelete
  158. Indha blog la irukkara ella posts mea soooper... adhulayum unga pugal paadirkaangalea adhu top!!!

    i've a doubt, "Bonda podaradhuna enna?" AmbiNa ungakita keatuka sonnanga.

    unmayileye syam eh vida lalam ghettha iruku!!!
    -Priya

    ReplyDelete
  159. seri, inga enna spl???
    April, Month of Fools ndradhalaya?
    (Thappa eduthukkadheenga, oru GK dhaan)

    ReplyDelete
  160. yennamo pongappa...
    itheaiyellam padichitu oreh aanadhak kaneerah varuthu!!!

    ReplyDelete
  161. என்னமோ விவசாயம், விவசாயங்கரீங்க post-க்கு post! ஏதாவது நெலம்-கிலம் வளைச்சு போட்டிருக்கீங்களா?!!

    ReplyDelete
  162. Karpanaikku alavey ila! :) Arasangam,satamnu pottu thakreenga ;)

    And i never knew abt this blog! :O How come?? :(

    ReplyDelete
  163. //வணக்கம்...வந்தனம்...சுஸ்வாங்கதம்....நமஸ்கார்....//
    adade naatamaiku ithana mozhi theriyuma.. naan etho tamil thaan theriyumnu illa ninaichen

    ReplyDelete
  164. //நான் பாட்டுக்கு ஏதோ ஒரு ஓரத்துல ஒரு பிளாக் வெச்சிக்கிட்டு கொஞ்சமா ஆப்பு வாங்கிட்டு இருந்தேன்...இப்போ தோப்புல கொண்டு வந்து விட்டுட்டாங்க..
    //
    ethanai naalaiku thaan orama irukarthu athu thaan thoppula kondu vanthu vitutom

    ReplyDelete
  165. //இந்த மாசம் சங்கம் ஒரு வருச நிறைவ கொண்டாடுது...இந்த ஒரு வருசமா நம்மல எல்லாம் சிந்திக்கவே விடாம(உள்குத்து எல்லாம் இல்லீங்க) சிரிக்க வச்ச சிங்கங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!...உங்க சேவை பல பல வருடங்களுக்கு தொடர விருப்பத்துடன் வாழ்த்துக்கள்....//
    sirika vachathu nala inga varom.. sinthika vacha varuvoma namma

    ReplyDelete
  166. //நமக்கு இந்த ஆணி புடுங்கற வேலை பாத்து ரொம்ப நொந்து போனா..விவசாயம் பாக்க போலாம் விவசாயம் பாக்கறவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க...ஆனா விவசாயம் பார்கறவங்க ரொம்ப நொந்து போனா கொஞ்ச நாளைக்கு இங்க வந்து ஆணி புடுங்க விடுவாங்களா//
    adu vera onnum illa naatamai.. avangala aani pudunga sonna sevuthayum sernthu pudungiduvaanga antha bayam thaan

    ReplyDelete
  167. //J2EE ஆணி, Oracle ஆணினு ரெண்டு புடுங்க விட்டா என்ன ஆகிடும் இப்போ...என்னங்க சிரிக்கரீங்க...நல்லதா சொன்னா ஒருத்தருக்கும் புடிக்காதே....//
    naatamai nallathu ellam en solreenga neenga.. unga kolgaiku ethiranathu ache

    ReplyDelete
  168. //எப்படியோ ஒரு போஸ்ட் போட்டாச்சு...ஆராச்சி பண்ணாம அனுபவிங்க...சரி நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...அதுவரை உங்கள் ஆப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் லலாம் ச்சே சியாம்...
    //
    arraichi pannalena eppadi aapu adikarthu naatamai

    ReplyDelete
  169. நாட்டாமை, இங்கயும் OB யா? மாசத்துக்கு ஒரு போஸ்ட் தானா? home work (போண்டா போடறது இல்ல) பண்ணுங்க நாட்டாமை

    ReplyDelete
  170. mmmmmmm, Happy Anniversary to Va.Vaa.Sa. from the Ultimate Thalaivi, one and only. Do not forget me. grrrrrrrrrr.........
    I saw Va.Vaa.Sa. name in Tirunelveli Junction compound wall. Who went there and posted it? Dubukku?

    ReplyDelete
  171. Nice post syam! Intha Bida saium vilakkam semaiya irunthuthu, but namba kolkathava patthi ivalo kevalama solirukkuka vendam avan:D

    Ungal eazhuthukkal thodara en vazthukkal:)

    ReplyDelete
  172. யோவ் நாட்டாமை தீர்ப்பை மாத்துய்யா........ [ஹி ஹி ஹி ]
    வாழ்த்துக்கள் சியாம்....தொடர்ந்து வாசிக்க நாங்க ஆயத்தமாகிட்டோம்

    ReplyDelete
  173. நாட்டாம என்னயிது


    பின்னுட்டத்தை படிச்சிட்டு வர்ரேன்

    ReplyDelete
  174. Iniya thamizh puthaandu vaazhthukkal!!!

    ReplyDelete
  175. ingayum late...atleast oru 200kula vanten :D

    ReplyDelete
  176. 186

    நாட்டாமைக் காரைய்யா, நாயம் செத்துப் போச்சு, தருமம் தோத்துப் போச்சு.

    சீக்கிரமா அந்த நசுங்குன சொம்பையும், நாத்தம் புடிச்ச கம்பளியையும் எடுத்துட்டு வாங்க... தீர்ப்பு சொல்ல...

    ReplyDelete
  177. Hi Lam,

    Kolkotta Paan romba superu Saamiyo.

    Appuram sollunga Lam - Neenga oru naalaikku vulla 24 hrs la, evvalavu neram Shyam and evvalavu neram Lam ?!

    May God Bless.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)